முக்தி, பக்திக்கு அடிப்படை!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Mukthi is basic eligibility for bakthi
சர்க்கரை, தேனில் கரைவது பக்தி. தேனில் கரைந்ததினாலேயே, அந்த சர்க்கரை தேனாகிவிடுவது முக்தி.
சர்க்கரை தானாக பல்வேறு இரசாயன மாற்றங்களைச் செய்து, தன்னையே அது உருக்கி, உருமாற்றி தேனாக மாறுவது யோகம். ஞானம் நீண்ட பிரயாணம்.
தனித்தனியாக இருக்கும் யோகம், பிராணாயாமம், தவம் என்ற பல வழிகளின் மூலமாக வெகு பிரயத்தனப்பட்டு பல சாதனைகளைப் படைக்கலாம்.
ஞானத்தினால் புத்தராகலாம். ஆனால், கிருஷ்ணராக முடியாது. மஹாவீரர் ஆகலாம். ஆனால், ராமகிருஷ்ணராக முடியாது.
யோகம், தவம் மூலமாக ஏழு சக்கரங்களைக் கடந்து, ஏழு சரீரங்களைக் கடந்த முக்தியை அடையலாம். இது புத்தனின் பாதை.
பக்தி என்ற ஒன்று பூப்பதினாலேயே ஏழு சரீரங்களைக் கடந்த நிர்வாண சரீரத்தில், நிர்விகல்ப நிலையை அனுபவிக்க முடியும். "Zero TPS"-யையும் ஏழு சக்கரங்களைக் கடந்த நிலையையும் நன்றாய்ப் பிழிந்த சாரத்தையும் அனுபவிக்க முடியும். இது கிருஷ்ணனின் பாதை.
எல்லாவற்றையும் கடந்து முக்தியடைய முடியும். இது ஞானம்!
நேரடியாக முக்தியில் கரைய முடியும். இது பக்தி!
ஜீவன் முக்தியைப் பக்தர்களுக்கு எளிதில் அனுபவமாக்க வெவ்வேறு அவதார புருஷர்கள், வெவ்வேறு வழிமுறைகளைக் கையாண்டிருக்கிறார்கள்.
இதில், கிருஷ்ணனின், ஞானத்தைத் தாண்டிய ரசவாதத்தை உங்களுக்குள் நிகழ நீ

ங்கள் அனுமதித்தால், எல்லாவற்றையும் கடந்து ஒன்றாய்ச் சங்கமிக்கும் நிலையை நேரடியாகத் தொடுவீர்கள்.
தனியாய்ப் போராடி வெல்வது சாத்தியம் என்பது உங்களின் நம்பிக்கை என்றால், புத்தனின் பாதையைத் தேர்வு செய்யலாம். தனியாய்ப் போராடுவதற்குப் போடும் முயற்சியை, முக்தியில் கரைவதற்கும், உருகுவதற்கும் போட்டால் உங்களுக்கான இனிய பாதை, கிருஷ்ணரின் பாதை!
தயவுசெய்து பெருமைக்காகச் சொல்ல முயற்சிக்கிறோம் என்று எண்ணிவிட வேண்டாம். புத்தனின் பாதை, கிருஷ்ணனின் பாதை இதைத் தாண்டிய பாதைகளையும் பார்த்திருக்கிறோம். இருப்பதிலேயே எளிய பாதை கிருஷ்ணனின் பாதைதான்.
ஞானத்தைத் தாண்டிய ரசத்தை ஒரு முறை அனுபவித்தால், கடவுளையே உங்களுக்குள் எளிதில் கண்டுகொள்வீர்கள்.
இது ஒருவரின் வாழ்வில் எப்போதாவதுதான் நிகழும். காரணம், ஒருவரின் வாழ்வில், ஒரு அவதார புருஷர் பூப்பது என்பது, பல நூறு பிறவிகளில் ஒருமுறைதான் நடக்கும்.
கிருஷ்ணர் எப்போதாவதுதான் அவதரிப்பார். அப்படி அவர் அவதரிக்கும் பல
பக்தியில்
கரைந்ததனாலேயே
முக்தியிலும்
கரைந்திருக்கும்
கொண்டாட்டம்
மிகுந்த முக்தியை
தாண்டிய பக்தி
நிலை.

கொண்டாட்டம் மிக்க, பரவசம் மிக்க பக்தி அனுபவம். ராசலீலை
நேரங்களில், அவர் இருக்கும் இடத்தில் பிறப்பதற்கே வாய்ப்பு கிடைக்காது.
அப்படியே அவர் பிறந்த காலத்திலேயே பிறந்திருந்தால்கூட, அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். இதையெல்லாம் தாண்டி அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால்கூட அவரைப் பற்றிச் சிந்திக்கும் அகங்காரமற்ற புத்திசாலித்தனம் வேண்டுமே!
இதெல்லாம் கிடைத்தால்கூட ஞானத்தைத் தாண்டிய ரசத்தை அனுபவிக்கும் அளவிற்கு, அவர் நமக்கு உதவுவதற்கு, நாம் அனுமதிக்குமளவுக்கு, வாழ்க்கை அமைய வேண்டுமே!
ஒருவருக்குள் பக்தி மட்டும் பூத்துவிட்டால் போதும், அவர் இருக்கும் இடத்திலேயே ராசலீலை அடைவார். அவர் இருக்கும் இடத்தைத் தேடி, கடவுளே ஓடி வருவார். காரணம், ஒரு இலட்சம் ஞானிகள் கிடைப்பார்கள், இது எளிது. ஆனால் ஒரு ராதை, ஒரு ராமகிருஷ்ணர், ஒரு மீரா, ஒரு ரமணர் கிடைப்பது அரிது.
இந்த அரிய நிலையை, பக்தியை உங்களுக்குள் பூக்க வைப்பதின் மூலமாக ராசலீலை அனுபவத்தை உங்களாலும் அடைய முடியும் என்பதே நான் பகிர விரும்பும் செய்தி.
உங்கள் வாழ்க்கையே கிருஷ்ணன், நீங்கள் கோபிகை
Your life is Krishna, you areThe Gopika
கோபியர்களுக்கும், கிருஷ்ணருக்கும் நடுவிலே இருக்கும் உறவு, நிறைவால் மலர்ந்தது. கிருஷ்ணருக்கு, கோபியர்களிடமிருந்து உடல் சுகம் தேவையில்லை.
கோபியர்களுக்கும், கிருஷ்ணரிடமிருந்து பாதுகாப்போ, பணமோ தேவையில்லை. கோபிகைகளுக்கு ஞானமே தேவையாக இருந்தது. அந்த தேவையை, ஏற்கெனவே கிருஷ்ணன் கொடுத்துவிட்டான். அங்கு அதை மீறிய தேவை என்ற ஒன்றே இல்லை.
அங்குப் பெற்றுக் கொள்வதற்கு ஒன்றுமே இல்லை. தேவை ஒன்றும் இல்லாததினால், எதுவும் கேட்கப்படாததனால், வாழ்க்கை நிறைவால் பொங்கி வழிந்தது, பூரணத்துவத்தால் பொங்கி வழிவதாக இருந்தது.
அதைத்தான் ஞானத்தைத் தாண்டிய ரசம் என்று சொல்கிறோம்.
உயர்ந்த உணர்வுக்குள் கரைந்ததனால் நிகழும் ஞானத்தைத் தாண்டிய ராச லீலையில்தான் இது நடக்கும்.
கிருஷ்ணனுக்கும், கோபிகைகளுக்கும் அந்த ஞானம் இருந்தது. அந்த உணர்வு அனுபவம் இருந்தது. அவர்கள் ஞானத்தை அடைந்து, அதைத் தாண்டிய லீலை செய்து கொண்டிருந்தார்கள்.
கிருஷ்ணன் எதைச் செய்கிறானோ, அதையே தானும் செய்து கொண்டிருந்த சிசுபாலனுக்கோ, இதில் எதுவும் இல்லை. அவனுடைய நிலை ஞானத்தைத் தாண்டிய நிலை கிடையாது.
சிசுபாலனுக்கு, அந்தத் தாசிகளிடமிருந்து உடல் சுகம் தேவைப்பட்டது. அந்தத் தாசி களுக்கும் சிசுபாலனிடமிருந்து பணமும் பாதுகாப்பும் தேவைப்பட்டது.அவனுடைய தேவை வேறாக இருந்ததனால்தான், அவனுடைய செயலை பக்தி என்றும், ஞானம் என்றும் சொல்ல முடியாது.
நன்கு ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், கிருஷ்ணன் என்ற தனிநபர் மட்டும் கிருஷ்ணன் அல்ல, இந்த வாழ்க்கையே கிருஷ்ணன்தான், நீங்கள் எல்லோரும் கிருஷ்ணனை சுற்றி வாழ்ந்தவர்கள் மட்டும் அல்ல. கோபியர்கள் அல்ல கோபிகைகள்.
எப்போதெல்லாம் இந்த வாழ்க்கையோடு நீங்களும் பொங்கி வழிகிறீர்களோ, அப்போது ஞானத்தைத் தாண்டிய ரசம் மலர்ந்து விடும். உங்களுக்குள்ளும் ராச லீலை நடக்கும்.
இல்லையென்றால், நீங்கள் வாழ்க்கையோடு, சிசுபாலனின் தரமில்லாத ஒழுக்கங் கெட்ட பெண்களைப் போலத்தான், தரங்கெட்ட வாழ்வு தரத்தைத்தான் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். வாழ்க்கையோடு நீங்கள் சிசு பாலனின் கீழ்தர உறவுவைத்து வாழ வேண்டுமா இல்லையென்றால், கிருஷ்ணருக்கும் கோபியருக்கும் இருந்த உன்னத உறவை வைத்து வாழ வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.
வாழ்க்கையே கிருஷ்ணன். நீங்களே கோபிகை. அதனோடு ஒன்றி வாழ்ந்தால் நீங்கள் கோபிகைகள். இல்லையென்றால், சிசுபாலனோடு வாழ்ந்த வாழ்வைத்தான் நீங்கள் வாழ்கிறீர்கள். ஞானத்தைத் தாண்டிய ரசத்தை நிகழ்த்துவதே, பூமி எனும் கிரகத்தைப் படைத்ததின் நோக்கம். இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் பல கிரகங்களில் பூமியை நீங்கள் தேர்வு செய்து வந்து பிறந்ததின் காரணமே, அந்த ரசத்தை அனுபவிக்கத்தான்.
வம்பின் ரகசியம்
•வம்பளப்பவர்களை என்ன செய்வது?
ஆவலோடு விளையாடுங்கள்.
•கோபப்பட்டால்?
சிரியுங்கள்.
•இன்னும் கொஞ்சம் கோபமாகி அடிக்க வந்தால்?
அங்கிருந்து ஓடிவிடுங்கள்.
•இது என்ன வம்பில் போய் முடியும் போலிருக்கிறதே?
இதுவரை சொன்னது... வம்பல்ல. கிருஷ்ணரை மற்றவர்கள் வம்பிழுக்கும் போது அவர் செய்தலீலை.
•கேட்க அருமையாக இருக்கிறது செய்ய முடியுமா?
‘செய்ய முடியுமா?’ என்று பெரிய மனித தோரணையில் கேட்காமல் ‘செய்து பார்த்தால் என்ன?’ என்று குழந்தையின் குதூகலத்தோடு செய்து பாருங்கள். வெற்றி காண்பீர்கள். வம்புகூட விளையாட்டாகும்.