ஜீவன் முக்தி
உருவ வழிபாட்டின் ரகசியம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
- தெய்வ விக்கிரகங்கள்? இறைவனின் செல்போன்கள்.
- செல்போன்களா? ஒரு செல்போன் மூலமாக உங்களின் நண்பரோடு பேசலாம். ஒரு தெய்வ விக்கிரகத்தின் மூலமாக உங்களின் தெய்வத்தோடு பேசலாம்.
- உருவ வழிபாட்டை ஆதரிக்கிறீர்களா? உண்மை ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். இந்தியாவில் உருவ வழிபாடே கிடையாது. உருவத்தின் மூலமாக வழிபடுவது மட்டுமே இருக்கிறது. ரிஷி பரம்பரையினால் கண்டுபிடிக்கப்பட்ட தியான முறைகளில் இதுவும் ஒன்று.
- அதெப்படி தியானமாகும்? "ஏ கல்லே வரம்கொடு," என வெங்கடாசலபதியிடம் யாரும் வேண்டுவதில்லை. அங்கிருக்கும் உருவத்தின் மூலமாக வெங்கடாசலபதி எனும் கடவுளோடுதான் பேசுகிறோம்.
