அண்டம் பிண்டாண்டமாகும் அறிவியல்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Science of Macrocosom becoming Microcosom

Primordial sound theraphy, Root sound technique, Om chanting என்ற பல்வேறு விதமான சிகிச்சை முறைகளாகவே, இன்று 'ஓம்' எனும் மந்திர உச்சாடனமானது, மக்கள் மத்தியில் பயன்பாட்டில் இருக்கிறது.
'ஓம்' எனும் மந்திரத்தை உச்சாடனம் செய்வதினால் ஏற்படும் உன்னதமான மாற்றம், உங்களுக்குள் அபரிமிதமான விழிப்புணர்வை அதிகரிக்கிறது என்று சொல்கிறார்கள்.
Om chanting awakens super consciuosness and rest full awareness... என்று அவர்கள் இப்போது சொல்வதைத்தான்... "ஓம் எனும் பிரணவத்தை எப்போதும் உச்சாடனம் செய்தால், உயர்ந்த உணர்வு நிலையிலேயே, ஆரோக்கிய நிலையிலேயே இருக்க முடியும்," என்று நம் ரிஷிகள் அப்போதே சொல்லியிருக் கிறார்கள்.
பூரண மந்திர உச்சாடனத்தில் இந்தப் பிரணவ மந்திரத்தைத்தான் முதல் பாகத்தில் உச்சரிப்போம். இது நம்முள் இருக்கும் பிரம்ம தத்துவத்தை விழிக்கச் செய்கிறது. எல்லா இடத்திலும் நிரம்பியிருக்கும் பிரம்ம உணர்வை, பிரம்ம அதிர்வை உங்களுக்குள் செறியூட்டும் சக்தி படைத்தது இந்த 'ஓம்' உச்சாடனம்.
புரஸ்சரணத்தால் பிரம்ம தத்துவமும் பிரபஞ்ச உணர்வும் உங்களுக்குள் உயிர்ப்பிக்கப் படுகிறது.
உன்னத மாற்றம் 2:
புரஸ்சரணத்தால் தேவி தத்துவமும் பிரபஞ்ச சக்தியும் உங்களுக்குள் உயிர்ப்பிக்கப்படுகிறது.
'ஹ்ரீம்' பீஜத்தை உச்சரிப்பதனால் நம்முடைய உடலுக்குள் இருக்கும் 3rd layer energy திறக்கப்படுகிறது.
தொண்டைக்குழியிலிருக்கும் விசுத்தி சக்கரத்தை இந்த 'ஹ்ரீம்' பீஜமானது திறக்கிறது.
சின்ன பரிசோதனை.
இப்போதே முயற்சி செய்து பார்க்கலாம்.
இருக்குமிடத்திலேயே நிமிர்ந்து அமர்ந்து, உங்களின் கவனம் முழுவதையும் தொண்டைக் குழியில் ஒன்றாக்கி, 'ஹ்ரீம்' எனும் பீஜத்தை ஆழமாக, சப்தமாக, நீளமாகத் தொடர்ந்து 11 நிமிடங்களுக்கு உச்சாடனம் செய்து பாருங்கள்.
11 நிமிடங்கள் 'ஹ்ரீம், ஹ்ரீம்' எனும் பீஜத்தை, தொடர்ந்து உச்சாடனம் செய்துவிட்டு, பிறகு 10 நிமிடங்கள் ஓய்வாகத் தொண்டைக்குழியில் கவனம் முழுவதையும் ஒன்றாக்கி அமர்ந்திருங்கள்.
எவ்வளவு பெரிய சக்திப்பெருக்கு உங்களுக்குள் ஏற்படுகிறது என்பதை அனுபவமாகப் பார்ப்பீர்கள்.
3 மணி நேர தூக்கம் தரும் புத்துணர்வை, இந்த 11 நிமிட உச்சாடனம் தந்துவிடும். அவ்வளவு சக்தி வாய்ந்தது.
உங்களுக்குள் இருக்கும் பிரபஞ்ச சக்தியைத்தான் 3rd layer energy என்கிறோம். இதைத்தான் பராசக்தி என்றும், தேவி தத்துவம் என்றும் சொல்கிறோம்.
புரஸ்சரணத்தில் பயன்படுத்தும் பூரண மூலமந்திரத்தின் இரண்டாவது பாகம் 'ஹ்ரீம்' எனும் மந்திர உச்சாடனம். இதை உச்சரிப்பதினாலேயே, பராசக்தியின் சக்திப் பெருக்கை உங்களுக்குள் உருவாக்க முடியும்.
புரஸ்சரணத்தால் தேவி தத்துவமும், பிரபஞ்ச சக்தியும் உங்களுக்குள் உயிர்ப்பிக்கப்படுகிறது.
உன்னத மாற்றம் 3:
புரஸ்சரணத்தால் குருதத்துவமும் ஞானசக்தியும் உங்களுக்குள் உயிர்ப்பிக்கப்படுகிறது.
நீங்கள் எப்படி நித்யானந்தம் என்ற நிலையை வழிபடுகிறீர்களோ, நானும் அந்த நிலையை, அதை விட ஆழ்ந்த பக்தியோடு வழிபடுகிறேன்.
ஒரே ஒரு சின்ன வித்யாசம்...
நீங்கள் நித்யானந்தம் எனும் அந்த நிலையான, எதனாலும் மாறாத, தெவிட்டாத ஞானப் பெருக்கின் உச்சமான, நித்யானந்த நிலையை அடைவதற்கு பிரார்த்திக்கிறீர்கள் . தியானம் செய்கிறீர்கள்.
அதாவது, நித்யானந்தத்தை அடைவதற்காக நீங்கள் பிரார்த்திக்கிறீர்கள். அந்த நிலையை அடைந்ததினால், நான் பிரார்த்திக்கிறேன்.
ராமகிருஷ்ணருடைய படத்திற்கு ஒரு முறை ராமகிருஷ்ணரே பூஜை செய்கிறார்.
அப்போது ஒருவர் கேட்கிறார். உங்களுடைய படத்திற்கு நாங்கள் பூஜை செய்தால் அது பக்தி. ஆனால், உங்களுடைய படத்திற்கு நீங்களே பூஜை செய்தால்....
ராமகிருஷ்ணர் மிக அழகாகத் தந்த பதிலின் சாரத்தைத் தருகிறோம்.
"என்னுடைய உடல் எப்படி உங்களுடைய உடல் அல்லவோ, அப்படித்தான் எனக்கும். இது என்னுடைய உடல் அல்ல.
இது எப்போதோ தேவிக்குச் சொந்தமாகிவிட்டது. இது தேவிக்குச் சொந்தமான உடல் . அதனால்தான் நானும் இதைப் பூஜிக்கிறேன்," என்று சொல்கிறார்.
ஞானமடையும்போது
மனிதன் இறக்கிறார்!
கடவுள் பிறக்கிறார்!
அதனால்தான் அவரே அவருடைய உடலைப் பூஜித்தார்.
அண்ணாமலை சுவாமிகள் ரமணரைப் பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்ட அருமையான சம்பவம் ஒன்று...
ஒரு முறை ரமண மகரிஷியும், அவருடைய பக்தர்களோடு சேர்ந்து கொண்டு 'ரமண ச த்குரு! ரமண சத்குரு! ரமண சத்குருராயனே' எனும் பாடலைப் பாடுகிறார்.
பக்தர்கள் ஆனந்தத்தோடு அந்தப் பெயரை உச்சாடனம் செய்ததைப்போல அவரும் ஆனந்தத்தோடு அந்தப் பெயரை உச்சாடனம் செய்ததைப் பார்த்த பக்தர் ஒருவர் ஆச்ச ர்யப்பட்டுக் கேட்கிறார்.
"பகவானே ! நாங்கள் ரமண சத்குருராயனே! என்று பாடுவது சரி. இது ஒரு ஆழமான தியானம், புரிகிறது.பலநூறு தியானங்களைச் செய்வதை விட இந்த ஒரு தியானம் செய்வதே போதுமானது.நீங்கள் இருக்கும் நிலைக்கு நாங்கள் வரவேண்டும். அதற்கு மிக எளிதான வழி குரு மந்திர உச்சாடனம் என்று பாகவதத்தில் படித்து உணர்ந்ததால், நாங்கள் உச்சரிக்கிறோம். எங்களுக்குள் மிக ஆழமான மாற்றங்களை இந்த உச்சாடனம் உருவாக்குவதால் நாங்கள் இதை செய்கிறோம்.
தனிமனிதனாய்க் கடுந்தவம் செய்து, பிரபஞ்ச சக்தியோடு எங்களை இணைத்துக் கொள்ள முடியும் அல்லது ஏற்கனவே பிரபஞ்ச சக்தியோடு தம்மை இணைத்துக் கொண்ட குரு சக்தியோடு, பிரபஞ்ச சக்தியோடு எங்களை இணைத்துக் கொள்ள முடியும்.
இதையெல்லாம் எங்களுக்குச் சொல்லிப் புரிய வைத்ததே நீங்கள்தான்.
நாங்கள் பிரார்த்திக்கலாம் அது சரி. அது புரிகிறது. ஆனால் நீங்களும் அதையே பிரார்த்திக்கிறீர்களே அதுதான் எங்களுக்குப் புரியவில்லை!'' என்று கேட்டதற்கு, மிக அழகாக ரமண மகரிஷி இந்தப் பதிலளித்தாராம்,
"அப்பனே ரமணன் எனும் சக்தியை, ஏன் இந்த ஆறடி உடலுக்குள் அடைத்துப் பார்க்கிறீர்? எல்லாவற்றையும் இயக்கும் குரு சக்திதான், இந்த உடலையும் இயக்குகிறது.
நீங்கள் கூட என்னை வழிபடுவது, என்னுள் குடியிருக்கும் தெய்வ சக்தியால்தானே! அந்தத் தெய்வ சக்திதான் ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தியாக தம்மை வெளிப்படுத்திக்கொண்ட நாளிலிருந்து, இன்று வரை அந்தந்த காலத்திற்கு உதவும் அவதார புருஷர்களாக இறங்கி வந்துகொண்டே இருக்கிறது.
நானும், என்னுள் குடியிருக்கும் அந்தச் சக்தியை, எப்போதும் வழிபட்டுக் கொண்டே இருக்கிறேன்.
இறை சக்தியை எப்பொழுதாவது வழிபட்டால் அவன் மனிதன்.''
இறை சக்தியை எப்போதும் வழிபட்டுக் கொண்டிருந்தால் அவன் ஞானி!
ரமணராய் உங்களுக்கு வந்து உதவி கொண்டிருக்கும் அந்தச் சக்தியை, ஏனப்பா இந்த ஆறடி சரீரத்திற்குள் அடைத்துப் பார்க்கிறீர்கள்?
அந்தச் சக்தி எங்குமல்லவா பரவி இருக்கிறது!
நீங்கள் பக்தியோடு பிரார்த்திக்கிறீர்கள்.
நான் நன்றியோடு பிரார்த்திக்கிறேன்,'' என்று ரமண மகரிஷி மிக அழகாகச் சொன்னாராம்.
நிஜத்தில் குரு சக்தியோடு நம்மை இணைத்துக் கொள்வதால், குருவுக்கு நேரடியாக எந்த பலனும் இல்லை.
சொல்லப் போனால் அவருக்கு அதனால் இன்னும் கொஞ்சம் வேலை அதிகமாகிவிடும்.
நீங்கள் ஒரு புது ஊருக்குச் செல்ல வேண்டுமானால், ஏற்கெனவே சென்றவரிடம் வழிகேட்டு அவரின் உதவியோடு அங்குச் செல்வீர்கள்.
அதேபோல, ஏற்கெனவே இறைசக்தியோடு இணைத்து இறைசக்தியின் ஸ்வரூபமாக வாழும் சத்குருநாதரின் உதவியை பயன்படுத்திக் கொண்டு, ஏற்கெனவே அனுபவம் பெற்ற அவரின் ஞானத்தை பயன்படுத்திக் கொள்வதுதான் குருபக்தி.
நித்யானந்தம் எனும் மந்திரத்தை உணர்வுப்பூர்வமாகச் சொல்லும்போது நேரடியாக குருசக்தியோடு உங்களை இணைத்துக் கொள்கிறீர்கள். நேரடியாகப் பிரபஞ்ச ச க்தியோடு உங்களை இணைத்துக் கொள்கிறீர்கள்.
புரஸ்சரணத்தால் குருசக்தியும் ஞான சக்தியும் உங்களுக்குள் உயிர்ப்பிக்கப்படுகிறது.
உன்னத மாற்றம் 4:
புரஸ்சரணத்தால் ஆன்ம தத்துவமும் ஆனந்த சக்தியும் உங்களுக்குள் உயிர்ப்பிக்கப்படுகிறது.
எதைச் செய்தாலும், பேசினாலும், 'நான், எனது' என்று மட்டுமே எல்லோரும் செயல்படுகிறார்கள்.
Attitude of I and mine strengthens your ego.
புரஸ்சரணத்தின் நான்காவது பாகமான 'நமஹ' எனும் மந்திரம் உங்களின் ஆன்ம தத்துவத்தை விழிப்படைய வைக்கிறது.
'நமஹ' என்றால் 'நான் இல்லை' என்றர்த்தம்.
ஒவ்வொரு முறையும் இந்த 'நமஹ' எனும் மந்திரத்தை உச்சரிக்க, உச்சரிக்க உங்களின் அகங்காரம் வலுவிழந்து கொண்டே இருக்கும்.
'நான், நான்' என நம் உயிரையே குடித்துக் கொண்டிருக்கும் நஞ்சு நம்மை விட்டு அகல ஆரம்பிக்கும்.
'நமஹ, நமஹ'
‘நான் அல்ல, நான் அல்ல’ என்று பக்திப்பூர்வமாகச் சொல்லச் சொல்ல, இதுவரை நீ ங்கள் பார்த்த மூன்று தத்துவங்கள் உங்களுக்குள் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கும். அந்தச் சக்தியாகவே நீங்கள் மாற ஆரம்பிப்பீர்கள்.
நான்காவது பகுதியை உச்சாடனம் செய்யச் செய்ய துக்க சக்தி மறைந்து ஆனந்த சக்தி பொங்க ஆரம்பித்து விடும்.
புரஸ்சரணத்தால் ஆன்ம தத்துவமும் ஆனந்த சக்தியும் உங்களுக்குள் உயிர்ப்பிக்கப்படுகிறது.
பூரணத் தியானம்
பிரம்actionம தத்துவம்
தேவி தத்துவம்
குரு தத்துவம்
ஆத்ம தத்துவம்
இந்த நான்கு தத்துவங்களையும் உங்களுக்குள் உயிர்ப்பிக்கும் மந்திரம்தான் பூரண மூலமந்திரம். இந்தப் பூரண மூல மந்திரத்தைத்தான் பூரணத் தியானம் என்றழைக்கி றோம்.
ஓம் - பிரம்ம தத்துவம்
ஹ்ரீம் - தேவி தத்துவம்
நித்யானந்தாய - குரு தத்துவம்
நமஹ - ஆத்ம தத்துவம்
இந்த நான்கு மந்திரங்களைப் பக்திப்பூர்வமான பிரார்த்தனை உணர்வோடு உச்சாடனம் செய்பவர் யாராக இருந்தாலும், அவருக்குள் இந்த நான்கு தத்துவங்களும் விழிப்படைய ஆரம்பிக்கும்
‘ஓம் ஹ்ரீம் நித்யானந்தாய நமஹ’ எனும் மந்திரத்தை தொடர்ந்து 21 நிமிடத்திற்குப் பக்திப்பூர்வமான பிரார்த்தனை உணர்வோடு உச்சாடனம் செய்வது புரஸ்சரணம்.
இது மிகவும் சக்தி வாய்ந்த தியானம்.
பல தெய்வ தரிசனங்களையும், ஆன்மீக அனுபவங்களையும் அற்புதங்களையும் உங்களுக்குத் தரவல்ல தியானம்.
நான்கு தத்துவங்களையும் ஒன்றாய் இது உயிர்ப்பிப்பதனாலும், நேரடியாக குருசக்தி உடலில் இருக்கும்போது, இந்த மந்திரங்களை உச்சரிப்பதனாலும்... அற்புதங்கள் உங்களுக்கு நிகழ்வது மட்டுமல்லாமல், அற்புதங்களை நிகழ்த்தும் பலவிதமான ச க்திகளும் உங்களுக்குக் கிடைக்க ஆரம்பிக்கும். ஆனால், இதையெல்லாம் தாண்டிய அற்புதம் ... இந்த மனத்தையே மாயமாக்கும் அஜபாஜெப நிலைக்கு, மனம் கடந்த பக்தி நிலைக்கு இந்தத் தியானம் உங்களை எடுத்துச் செல்லும். எனவே, எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆழமாக, இந்தத் தியானத்தில் மூழ்குங்கள். மீதம் நடக்க வேண்டிய அனைத்தையும் நான்கு தத்துவங்களும் பார்த்துக் கொள்ளும்.

