KAILASA Library/ஜீவன் முக்தி/புரஸ்சரணம்Sign in
ஜீவன் முக்தி

புரஸ்சரணம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Purascharana

'நீங்கள் கடவுள்!' என்பதற்கு குறைவாய் உங்களை நம்ப வைக்கும் எந்த ஒரு எண்ணமும் அகங்காரமே!

உங்களின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு, உங்களுக்குள்ளேயும் வெளியேயும் அபூர்ணத் தன்மையை, குறைகளை உருவாக்கும் சக்தியோட்ட குறைபாடுகள் சரி செய்யப்படவேண்டும் என்பதே. அண்டம், பிண்டமாகும். அறிவியல் புரிந்தாலே, கடவுள் சக்திதான் எல்லாமாகப் பரிணமிக்கிறது எனும் சத்தியம் புரிந்து விடும்.

பிரபஞ்ச உணர்வுதான், அதாவது பிரம்ம தத்துவம்தான், பிரபஞ்ச சக்தியாக வெளிப்பட்டது. (பார்க்க பக்கம் 576)

வலியும்,
எரிச்சலும்
அந்த இடத்தில்
அதிகரித்துக்
கொண்டே
போனது.

அந்தப் பிரபஞ்ச சக்தி, பராசக்தி அதாவது தேவி தத்துவம்தான் இந்த பிரபஞ்சத்தை இயக்குகிறது. அதுதான் காடு, மலை, மரம், மனிதன் என்ற எல்லாமாகவும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதுதான் பஞ்ச பூதமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

இவை எல்லாவற்றையும் மொத்தமாக இயக்கும் பிரபஞ்ச ஞான சக்தியைத்தான் குரு சக்தி, அதாவது குரு தத்துவம் என்கிறோம். இன்னும் இதை அழகாகப் புரிந்து கொள்வோம்.

நான் உங்களோடு பேச உதவும் இந்த மைக்கிற்குள் இருக்கும் விழிப்புணர்வும் (consciousness), உங்களுக்குள் இருக்கும் விழிப்புணர்வும் ஒன்றுதான். உங்களுக்குள்ளும் எனக்குள்ளும் இருக்கும் விழிப்புணர்வும் ஒன்றுதான். இந்த நிலையைத்தான் 'அத்வைதம்' என்ற வார்த்தை மூலமாக விளக்குகிறார்கள்.

ஆனால், நிச்சயம் இந்த மைக்கை விட, நீங்கள் அதிகமான சக்தியைப் பெற்று இருக்கிறீர்கள். உங்களைவிட ஒரு அவதாரப் புருஷர் அதிகமான சக்தியைப் பெற்று இருக்கிறார். இதைத்தான் 'த்வைதம்' என்ற வார்த்தை மூலமாக விளக்குகிறார்கள்.

த்வைதம், அத்வைதம் என்ற பெரிய பெரிய வார்த்தைகளைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் நேரடியாகப் பார்த்தோமென்றால், இந்த மொத்த பிரபஞ்சத்தில் இரண்டே இரண்டு அம்சங்கள்தான் இருக்கின்றன.

1. விழிப்புணர்வு (consciousness)

2. ஞானம் (intelligence)

மைக்கிற்குள் இருக்கும் விழிப்புணர்வுக்கும், உங்களுக்குள் இருக்கும் intelligence-க்கும் சம்பந்தமே கிடையாது. அதேபோல, ஒரு அவதார புருஷரின் உடலை இயக்கும் cosmic intelligence, ஒரு மனிதருக்குள் இருக்காது.

எல்லாப் பொருளுக்குள்ளும் இருக்கும் Awerness ஒன்றுதான் அதை உணரும் inteligence-தான் வேறு.

ஒரு மனிதன் தன்னுடைய விழிப்புணர்வையும், ஞானத்தன்மையையும் நேரடியாக இறைசக்தியோடு இணைத்துக் கொள்வதின் மூலமாக, அந்த அவதார சக்தியின் நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொள்ள முடியும். தன்னுள் பூரணத் தன்மையை மலர்த்திக் கொள்ள முடியும்.

இதற்கு நேரடியாக உதவும் நுட்பத்தைத்தான் புரஸ்சரணம் என்கிறோம்.

புரஸ்சரணம் என்பது பூரணத்துவ தியானம்.

நம்மைப் படைத்து, நம்மை இயக்கும் பிரபஞ்ச சக்தி முழுமையானது பூரணமானது. அந்தச் சக்தியின் ஓட்டம் நம்முள் பொங்கியோடுவது குறையும்போது ஏற்படும் முதல் குறை உணர்வுதான் 'மனிதன்' என்ற உணர்வு; அதற்குக் கீழும் குறையும் போதுதான் மனநோய்கள், உடல் நோய்கள் என்ற எல்லாமே பிறக்கின்றன. புரஸ்சரணம், அபூரணத்தை சரிசெய்து, பூரணத்தன்மையை உங்களுக்குள் மலர்த்தும் சக்தி படைத்தது.

புரஸ்சரணம் உங்களுக்குள் பல உன்னதமான மாற்றங்களையும் மங்களத் தன்மையையும் எடுத்து வருகிறது.

புரஸ்சரணத்தில் உபயோகிக்கப்படும் பூர்ண மூலமந்திரமானது, உங்களை நேரடியாகப் பிரபஞ்ச சக்தியோடு, இறை சக்தியோடு இணைத்து மகோன்னத மயமான மாற்றங்களை உங்களுக்குள் உருவாக்கும் சக்தி படைத்தது.

படிப்படியாக இந்த மூலமந்தரத்தை உச்சாடனம் செய்வதனால் ஏற்படும் மாற்றங்களைப் பார்ப்போம்.

உன்னத மாற்றம் 1:

புரஸ்சரணத்தால், பிரம்மத்தத்துவம்... பிரபஞ்ச சக்தி உங்களுக்குள் உயிர்ப்பிக்கப்படுகிறது.

Big bang theory-யில் இந்த மொத்த பிரபஞ்சத்தின் அடிப்படை அலகு என்ன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். உடலின் அடிப்படை அலகு, செல். பொருளின் அடிப்படை அலகு, அணு. அதே போல், 'பிரபஞ்சத்தின் அடிப்படை அலகு அதிர்வுகள். அது HUM என்ற நாதமாக இருக்கிறது' என்று Big bang theory-ல் விஞ்ஞானிகள் நிரூபிக்கிறார்கள்.

ஓம் எனும் நாதத்தை ஆங்கிலத்தில் சரியாக மொழிபெயர்த்தால், அது HUM என்றுதான் வருகிறது.

ஓம் எனும் பிரணவம், இந்த பிரபஞ்சம் முழுவதும் நிரம்பி இருக்கிறது என்று உபநிடதங்கள் சொல்லும்போது, ஏற்றுக் கொள்ளாதவர்கள் கூட, விஞ்ஞானம் சொல்லும்போது எளிதாய்ப் புரிந்து கொள்கிறார்கள்.

அதனால்தான் 'ஓம்' என்கிற மந்திரத்தை உச்சாடனம் செய்வதை அருமையான தியானமாக உலகளவில் இன்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.