KAILASA Library/ஜீவன் முக்தி/ஆனந்த சங்கல்பம்Sign in
ஜீவன் முக்தி

ஆனந்த சங்கல்பம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஆனந்த சங்கல்பம் என்பது மகிழ்ச்சிக்கான உறுதி

சூஃபி ஞானி அப்துல்லாவிடமிருந்து இந்தத் தியானத்தின் ஒரு பகுதி பெறப்பட்டது.

தினமும் அதிகாலையில் எழுந்தவுடன், கண்களைத் திறக்கும் முன்பு, படுக்கையில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் அருகாமையில் மற்றவர்கள் இருப்பின், உங்களுக்கு உரக்க அழைக்கத் தயக்கமாக இருப்பின், உட்கார்ந்தபடி உங்களை உரக்க அழைப்பதாக உங்கள் மனத்தில் பாவனை செய்து கொள்ளுங்கள்.

உங்கள் பெயரைச் சொல்லி உங்களை அழையுங்கள். உங்களை நீங்களே அழைத்து, "இன்று நீ எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறாய்? மகிழ்ச்சியையா அல்லது துயரத்தையா?" என்று கேளுங்கள்.

சுபாவமாகவே, நீங்கள் காலையில் முதல் வேலையாகத் துயரத்தைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. எனவே உங்கள் மனம், "நான் மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுக்கப் போகி றேன் என்று சொல்லும்." உடனே நீங்கள் உங்களைக் கூப்பிட்டு, "சரி, மகிழ்ச்சியாய் இரு," என்று சொல்லிவிடுங்கள். அவ்வளவுதான்!

நாம் எப்போதுமே ஆனந்தமாய் இருக்கத் தேவையான சக்தி நம்மிடம் உள்ளது என்பதை உணருங்கள். இப்போது கண்களைத் திறந்து உங்களது உறுதிமொழியைக் கடைப்பிடியுங்கள்.

உங்கள் உறுதிப்பாட்டின் வலிமையினால் உங்களது மனத்தின் முழுப் போக்கையும் நீ ங்கள் மாற்றியமைத்திருப்பதை நீங்களே உணர்வீர்கள்.

ஆனந்தம் மலர்வதற்கான யுக்தி-3

தைலக்கிரியைய

நாம் தைலக்கிரியையை செய்யும்போது, எண்ணெய், எச்சில் மூலமாகவும் நாக்கின் மூலமாகவும் நமது உடலிருந்து கோழை, தொற்றுக்கள், நச்சுப்பொருட்கள் முதலியவற்றை வெளியேற்றுகிறது.

பல்தேய்க்கும் முன்பாகவும், சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் முன்பாகவும், ஒரு முழு மேஜைக்கரண்டி அளவு நல்லெண்ணெய் அல்லது சுத்திகரிக்கப்பட்ட சூரிய காந்தி எண்ணெய் ஆகிய இரண்டில் ஏதோ ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

தாடையைக் கடைவாய்ப் பற்களில் எண்ணெய் படும் வண்ணம்அசையுங்கள், வாய் முழுவதும் எண்ணெய் படும் வண்ணம் கொப்பளியுங்கள். பின்பு, லேசாகக் கடிக்கப்பட்ட பற்களிடையே இந்த எண்ணெயை 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொப்பளியுங்கள். கடைசியில், இந்த எண்ணெயைக் கழிவறையில் துப்பிவிட்டுப் பற்களை நன்றாகத் தேயுங்கள். தாவரங்கள் இருக்கும் இடத்தில் துப்புவது, தாவரங்களின் வளர்ச்சியை அழித்துவிடும். எனவே, தரையில் துப்ப வேண்டாம்.

கொப்பளித்த எண்ணெயை விழுங்காதீர்கள். அது உடலுக்கு நல்லதல்ல. ஒரு சொட்டு விடாமல் மீண்டும், மீண்டும் மூன்று முறையாவது தண்ணீரைவிட்டு கொப்பளித்து துப்பிவிடுங்கள்.

ஆனந்தம் மலர்வதற்கான யுக்தி-4