KAILASA Library/ஜீவன் முக்தி/நித்ய சூர்ய நமஸ்காரம்Sign in
ஜீவன் முக்தி

நித்ய சூர்ய நமஸ்காரம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

யோகத்தைப் புரிந்து கொள்ளும் விதத்தில், மனித குலத்திற்குப் பரிசாக அளிக்கப்பட்ட நித்திய யோகத்தின் ஒரு அங்கமே நித்ய சூரிய நமஸ்காரம். பதஞ்சலி முனிவரால் கற்பிக்கப்பட்ட சூத்திரங்களின் மூலம் இன்றைய நவீன மனவியலுக்குத் தகுந்தவாறு வழங்கப்பட்டிருப்பதே நித்ய யோகத்தின் தனிச் சிறப்பாகும்.

தினம் அரை மணிநேரம் ஒதுக்குவது உங்களுடைய உடல், மன ஆரோக்கியத்தை நேரடியாக அதிகரிக்கும்.

ஆனந்தம் மலர்வதற்கான யுக்தி-5

சக்தி தாரணை

(பிரபஞ்ச சக்தியை உள்வாங்குதல்)

இந்த உத்தி, தந்திர சாஸ்திரத்தில் உள்ள குலார்வன தந்திரம் என்ற பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது.

பிரபஞ்ச சக்தியுடன் ஒத்திசைவு கொள்ள இது ஒரு அழகிய உத்தியாகும். சக்தி தாரணையின் முக்கியத்துவம் என்னவென்றால், உங்களை இந்தத் தியானம், மனம் கடந்த நிலை என்ற துரிய நிலையின் நுழை வாயிலுக்குள் அழைத்துச் செல்லும்.