நித்ய யோகா
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
கனவுகளின் ஆழம் குறைந்தாலே, நிஜத்தை நெருங்கி விடுவீர்கள்
When the depth of dream reduces, you are close to reality
ஓரறிவு படைத்த தாவரங்களே சூரியனிடமிருந்து ச க்தியைக் கிரகித்துக் கொள்ளும்போது, ஏன் ஆறறிவு படைத்த மனிதர்களால் பெற முடியாது?

நித்ய யோகா, மனிதனாலும் தனக்குத் தேவைப்படும் சக்தியைச் சூரியனிடமிருந்து பெற முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தையும் விட மனிதனின் உடலானது ஐம்பூதங்களான நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் இவற்றின் கலவையாக அமைக்கப்பட்டுள்ளது.
நித்ய யோகா ஒரு அறிவியல்.
ஐம்புலன்களின் கலவையாக அமைக்கப்பட்டிருக்கும் உடலை, ஜீவன் முக்தியை வெளிப்படுத்தும் ஆரோக்கிய மிக்க உடலாக்குவது எப்படி, கனவுகளைத் தாண்டி, நிஜவாழ்வோடு வாழும் சக்தியை அதிகரிப்பது எப்படி என்பதை அனுபவமாக்கும் யோகம்தான் நித்ய யோகம்.
நித்ய சூர்ய நமஸ்கார பயிற்சி நேரடியாகச் சூரியனிடமிருந்து சக்தியை நமக்குள் உருவாக்கிக் கொள்வதற்கான புத்திசாதுர்யத்தை விழிப்படையச் செய்கிறது. நித்யயோகா அறிவியல் பூர்வமாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று.
நம்மிடையே இரண்டுவிதமான வாழ்க்கை முறை இருக்கிறது. அதில் ஒன்று. நம் கனவுவாழ்க்கையை வாழ நினைப்பது.
மற்றொன்று, வாழ்க்கையை நிஜத்தில் வாழ்வது.
இந்த இரண்டு வாழ்க்கையும் சந்தித்துக் கொள்வதைத்தான் யோகா என்று சொல்கி றோம்.
உங்கள் கனவு வாழ்க்கையையும், நிஜவாழ்க்கையையும் இணைப்பது எப்படி?
உங்களால் இரண்டு வாழ்க்கையையும் இணைக்க முடியும்.
உங்களின் எதிர்பார்ப்புகளையும், உங்கள் கனவு களின் ஆழத்தையும் குறைக்கும்போது, உங்களின் சக்தி வெளிப்பாடு அதிகமாகிறது. அப்போது கனவு தளமும், நிஜ தளமும் மிகவும் நெருங்கி வந்துவிடும்.
யோகா உங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து விழிப்படையச் செய்யும்.
ஓர் உணர்வோடு
எதிர்த்து மோதும்போது
ஒரு உணர்வை அடக்கி
வைக்கும்போது
அந்த உணர்வு சக்தி
பெற்றுவிடும்!
எது நிஜ வாழ்க்கையோ அதைத் தம் கனவு நிலைக்கு உயர்த்த நினைக்கும் மனிதர் பொருளியல்வாதி. அவர் தம் வாழ்க்கையில் காணும் கனவையெல்லாம் சாதிக்க நினைப்பவர்.
ஆனால், பிரச்சினை என்னவென்றால், அவருடைய கனவு என்பது நிலையானது அல்ல. சமநிலையிலும் அது இல்லை.
நீங்கள் உங்களின் கனவை நோக்கி வேலை செய்ய ஆரம்பித்தால், உங்களின் லட்சியமானது தொடர்ந்து மாறிக்கொண்டேதான் இருக்கும் . உங்கள் யோசனைகளும் தொடர்ந்து மாறிக் கொண்டேதான் இருக்கும்.
உங்களுக்குள் சக்தி வெளிப்பாட்டை அதிகரிப்பதின் மூலமாக நிஜ தளமானது கனவு தளத்தை நோக்கி, நெருங்கி வந்துவிடும். இப்படி இரண்டு தளங்களும் சந்தித்துக் கொள்வதையும் சங்கமித்துக் கொள்வதையும்தான் , நித்ய யோகா என்று சொல்கிறோம்.
நித்ய யோகாவில் உள்ள நித்ய சூரிய நமஸ்காரம் எல்லாத் தரப்பட்ட மக்களுக்கும் உதவக்கூடியது.
சூரியனிடமிருக்கும் சக்தியை நமக்குள் உருவாக்கிக் கொள்வதற்கான புத்தி சாதுர்யத்தை விழிப்படையச் செய்யும் பயிற்சிதான் நித்ய சூரிய நமஸ்காரம்.
இயற்கையாகவே மனித உடலானது, தேவையான அளவு சக்தியை சூரியனிடமிருந்து பெற்றுக்கொள்ளும் புத்திசாதுர்யத்தைப் பெற்றிருக்கிறது.
பழங்கால ஆயுர்வேத அறிவியல் சொல்கிறது... "மனித உடல் ஒரு உன்னத மான மிகச் சிறந்த அமைப்பு. அது ஒரு வாழும் நினைவு வங்கி, பூமியில் வாழ்கிற மற்ற ஜீவன்களைப் பற்றிய அறிவை மிக அதிக அளவில் சேகரித்து வைத்திருக்கும் சேமிப்பு களஞ்சியம்."
நூற்றுக்கணக்கான வருடங்களாக, நம் சுதந்திரம் பறிக்கப்பட்டதாலும் சத்தியங்களை நாமே நிராகரித்து வருவதனாலும் நமது உடலின் இயற்கையான அறிவைப் பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
நம் ரிஷிமார்கள், 'மனிதர்களாகிய நாம் ஒவ்வொரு நிமிடமும் பிரபஞ்ச சக்தியால் நிரப்பப்படுகிறோம்' என்ற உண்மையை தாங்கள் உணர்ந்ததோடு மட்டுமல்லாமல், அனைவருக்கும் இந்த உண்மையை உணர்த்தியுள்ளனர்.
நம் உடலின் ஒவ்வொரு செல்லும் உட்புறமாகவும், வெளிப்புறமாகவும், சுற்றுப்புறச் சூழலினால் புத்துணர்ச்சி ஊட்டப்படுகிறது.
இந்திய கலாச்சாரப்படி நமது உடலமைப்பானது, இயற்கையிலேயே சக்தியை வழங்கும் புத்திசாலித்தனத்தையும் மற்றும் தகுதியையும் பெற்றிருக்கிற ஒரு மிக அற்புதமான இயந்திரம்.
நித்ய சூர்ய நமஸ்காரம், முற்றிலுமாக நம்மைச் சுற்றி உள்ள பிரபஞ்ச சக்தியை உடலுக்குத் தேவையான அளவு பெற்றுக் கொள்வதற்காகவே வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
அதிகாலையில் உதிக்கிற கதிரவனின் முதல் சூரியக்கதிர்கள், நம் முகத்தில் படுமாறு கிழக்கு நோக்கி நின்று, தகுந்த மூச்சுப் பயிற்சியையும் மற்றும் நித்ய சூர்ய நமஸ்கார மந்திரத்தையும் உச்சாடனம் செய்தால், நம் ஒவ்வொருவருடைய உடல் மற்றும் மனம் அடைகிற சக்திக்கு இணையாக இந்த உலகத்தில் எதுவுமே இருக்க முடியாது.
தினமும் காலையில் 12 முறை இந்தப் பயிற்சியை செய்தால், மிக அதிக அளவிலான ச

க்தியைப் பெறலாம்.
உடலின் எல்லாப் பகுதிகளும், ஒவ்வொரு உடல் உறுப்புகளும், ஒவ்வொரு ச க்தி மையங்களும் புத்துணர்வோடு செயல்படும் விதமாக நித்ய சூர்ய நமஸ்காரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நித்ய யோகா வகுப்பிலும் 6 முதல் 12 படிகள் கொண்ட நித்ய சூர்ய நமஸ்காரப் பயிற்சியையும் வழங்குகிறோம்.
எல்லா யோகாசனங்களைக் காட்டிலும் மிகச்சிறந்த ஆசனம் நித்ய சூர்ய நமஸ்காரம் ஒன்றேயாகும். ஏனெனில், அது முழு உடலையும் வளைத்து நீட்டி திடமாக மாற்றுகிறது.
நித்ய சூர்ய நமஸ்காரம், 'ஆசனங்களின் ராஜா'வாகத் திகழ்கிறது.
| 1 | இரு கால்களையும் ஒன்றாக சேர்த்து சமநிலைக்காக சிறிதளவு விரித்து நின்று கொள்ளுங்கள். கைகளை நமஸ்கரிக்கும் நிலையில் மார்பிற்கு முன் வைத்துக்கொள்ளுங்கள். சூர்ய நமஸ்காரம் செய்யும்போது கண்களைத் திறந்தே வைக்கலாம். | 2 | மூச்சை நன்கு உள்ளிழுத்துக்கொண்டே, இரு கைகளையும் உயர்த்தி, மெதுவாகப் பின்புறமாக உடலை எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு வளைக்கவும். | | 3 | பின் மெதுவாக மூச்சை வெளிவிட்டுக்கொண்டே, முன்புறமாக குனிந்து உள்ளங்கைகள் தரையில் படுமாறும், நெற்றிப்பகுதி முட்டியைத் தொடுமாறும் குனியவும். | 4 | பின் அதே நிலையில் நின்றுகொண்டே, மெதுவாக மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே வலதுகாலைப் பின்புறம் நோக்கி நீட்டி இதயப்பகுதியின் மையப் பகுதியையும் முகத்தையும் மேல்நோக்கி உயர்த்தவும். | | 5 | இடது காலையும் பின்நோக்கி நீட்டி, முதுகு, கழுத்து மற்றும் தலை மூன்றும் நேர்க்கோட்டில் இருக்குமாறு, கைகள் தோள்பட்டைக்கு நேர் கீழே இருக்குமாறு வைத்துக்கொள்ளவும். | 5 | மெதுவாக மூச்சை உள்ளிழுத்துக்கொண்டு இடுப்புப்பகுதியை மேலே உயர்த்தி பர்வதாசனம் போல் செய்யவும். |
| 6 | அஷ்டாங்க யோகாவைப் போல் முட்டிப்பகுதி, மார்புப்பகுதி, நாடிப் பகுதி தரையில் படுமாறு இருக்கவும். பின்பு இடுப்புப் பகுதியை மட்டும் சற்று மேலே உயர்த்தவும். | 7 | மெதுவாக மூச்சை உள்ளிழுத்துக்கொண்டு, உள்ளங்கையால் தரையைத் தள்ளியவாறு, மார்புப்பகுதியை மேலே உயர்த்தி, கைமுட்டியை 90 டிகிரி கோணத்திலும் மற்றும் புஜங்காசனத்தில் இருப்பது போலவும் செய்யவும். |
|---|---|---|---|
| 8 | கைகளால் தரையைத் தள்ளியவாறு, இடுப்புப்பகுதியை மேலே உயர்த்தி மற்றும் அர்த்தோமுக ஆசனம் போல் மூச்சை மெதுவாக வெளியேற்றிக்கொண்டே கைவிரல்களை நன்கு விரித்த நிலையில் வைத்திருங்கள். | 9 | மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே, மேல்நோக்கிப் பார்த்தவாறே வலது காலை முன்னே கொண்டுவந்து கைகளுடன் சேர்த்து வைக்கவும். |
| 10 | பின்பு இடது காலை மீண்டும் முன்னோக்கி வைத்து, கால்கள் கைகளை ஒட்டி இருக்குமாறும், நெற்றிப்பகுதி முட்டிப்பகுதியைத் தொடுமாறும் குனிந்த நிலையில் நிற்கவும். | 11 | மூச்சை உள்இழுத்துக்கொண்டே எழுந்து பின்புறமாக உடலின் முதுகுப்பகுதியை ஒரு ஆர்ச் போன்று வளைக்கவும். |
| 12 | மெதுவாக மூச்சை வெளியேற்றிக்கொண்டே கைகளை மார்புப்பகுதிக்கு முன் கொண்டுவந்து நமஸ்கரிக்கும் நிலையில் நிற்கவும். |
இதுபோல் அடுத்த காலுக்கும் பன்னிரண்டு படிகளையும் செய்யுங்கள். இது ஒரு சுற்று ஆகும். இதுபோன்று பன்னிரண்டு சுற்றுகள் செய்து முடித்தபின் சவாசனத்தில் (தரையில் கை, கால்களைத் தளர்வாக விரித்து நிமிர்ந்து படுத்தல்) 10 நிமிடம் தளர்வாக (Relax) இருங்கள்.
சக்தி தாரணை
Sakthi dharana
பலன்கள்:
1: புத்துணர்ச்சி அதிகம் பெற்றவர்களாக உணர்வீர்கள்.
2: உடலின் சூட்சுமான சக்கரங்களைச் சக்தியூட்டும் சக்தி தாரணை தியானம்.
இந்தத் தியானத்தைப் பற்றி : சொல்லுக்கடங்காத அழகிய தியானம் இது.
இதைத் தியானம் என்பதை விட, ஒரு பிரார்த்தனை எனலாம்.
பிரபஞ்ச சக்திகள் அனைத்தினோடும், உங்களைத் தொடர்பு கொள்ளச் செய்வது இந்தத் தியானம்.
இதை இரவு வேளையில் உறங்கப் போகுமுன் பயிற்சி செய்வதுதான் சிறந்தது.
பகலில் செய்வதானால், செய்த பிறகு பதினைந்து நிமிட ஓய்வு வேண்டும். அந்த ஓய்வுப்பொழுதில்தான் தியானத்தில் பெற்ற சக்தி ஒன்று திரளும். இல்லாவிட்டால், பல மணி நேரம் பிரமை பிடித்த மாதிரி ஆகிவிடும்!
செயல்முறைக்கான குறிப்புகள் :
குளிர்ச்சியான, காற்றோட்டமுள்ள, இருண்ட அறை ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
நீங்கள் விரும்பினால் வெளியிலும் செய்யலாம்.
தரையில் மண்டியிடுங்கள். உறுத்தலாகத் தோன்றினால் பாயைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
முழங்காலிட்டு நிமிர்ந்து கைகளை வானை நோக்கி உயர்த்தவும்.
முகத்தை வானை நோக்கிப் பார்த்தபடி வைத்துக் கொண்டு, சற்று காத்திருக்கவும்.
விரைவில் இயற்கையின் சக்தி உங்களுக்குள் பாய்வதை உணரலாம். அதைக் தடுக்காமல் அப்படியே இருக்க வேண்டும்.
இயற்கை சக்தி உங்களுக்குள் பாயட்டும்.
கைகளில் ஒரு நடுக்கம் தோன்றும். மெல்ல, மெல்ல உங்கள் உடல் முழுவதுமே நடுங்கும். அப்போது உங்களுக்குள் பிரவேசிக்கும் சக்தியோடு இணைந்து உடல் முன்னும் பின்னும் அசையும். அவற்றையெல்லாம் அனுமதியுங்கள்.
நீங்கள் மிதப்பதாக உணர்வீர்கள். உடலே இல்லாததைப் போல் உணர் வீர்கள்.
நீங்கள் முற்றிலும், இனி நிரம்ப முடியாத
அளவுக்குச் சக்தியால் நிறைந்து விட்டதாகத்
தோன்றும்போது, குனிந்து தரையை
முத்தமிடுங்கள். உங்கள் உள்ளங்கைகளைப்
பூமியின் மேல் பதியுங்கள். உங்கள்
அன்பையெல்லாம் பூமிக்கு வழங்குங்கள்!
உங்கள் உதடுகள் வழியாகவும், கைகள்
வழியாகவும், அன்பு, பூமி நோக்கிப் பாய்வதை
உணருங்கள்.
பிரபஞ்ச சக்திகள்
அனைத்தினோடும்,
உங்களைத் தொடர்பு
கொள்ளச் செய்வது இந்தத்
தியானம். இதை இரவு
வேளையில் உறங்கப்
போகுமுன் பயிற்சி
செய்வதுதான் சிறந்தது.
தெய்வீக சக்தியைப் பூமிக்கு வழங்கும் ஒரு கருவியாக மாறி விடுங்கள். இதை ஏழு முறை தொடர்ந்து செய்யுங்கள்.
ஒவ்வொரு முறையும் ஏழு சக்தி சக்கரங்களில் ஒன்று, சக்தி ஏறப்பெறும்.
ஏழுமுறைக்கு மேல் அதிகம் செய்தால், சக்தி அதிகரித்து, நிம்மதியின்மை ஏற்பட்டு விடும்.
ஏழுமுறைக்குக் குறைவாகச் செய்ய வேண்டாம். சக்திச் சுற்று முழுமை பெறாமலே நின்று விடும். எனவே, ஏழு முறை தொடர்ந்து செய்யுங்கள்.
சக்தி தாரணை என்னும் வழிபாடு முடிந்தவுடன், அந்த வழிபாட்டு நிலையிலேயே உறங்கி விடுங்கள்.
அந்தச் சக்திக்குள் மூழ்கி, அதற்குள்ளேயே உறங்கி விடுங்கள். நீங்கள் கண் விழிக்கும்போது, புத்துணர்ச்சியோடு அதிகம் சக்தி பெற்றவர்களாக உணர்வீர்கள்.
தியான சிகிச்சை ஒரு விஞ்ஞானப்பூர்வமான சேவை
மக்களின் துன்பத்திற்குக் குணமளிக்கும் தியான சிகிச்சை செய்வது என்பது ஒரு மிகப்பெரிய சேவை.
யார் வேண்டுமானாலும் உணவு, உடை, வெளிப்பொருட்களைத் தர இயலும். ஆனால், எல்லோராலும் மற்றவர்களைக் குணப்படுத்த இயலுமா? முடியாது.
இந்த வார்த்தைகள் எல்லாம் உண்மையைத் தவிர வேறெதுவும் கிடையாது.
மின்சார சக்திக்குத் தனியாக எந்தவொரு அறிவாற்றலும் கிடையாது.
ஆனால், நீங்கள் அதில் பல்பை இணைத்தவுடன் வெளிச்சம் தரும். நீங்கள் அதில் கையை வைத்தால், கையை வைத்தவுடன் மின்சார தாக்குதலையும் தரும்.அதுபோல், இந்தத் தியான சிகிச்சையானது, நோயாளிக்குள் ஆரோக்கியத்தையும், கையை வைத்து தியான சிகிச்சையைச் செய்பவருக்குள் ஜீவன் முக்த தாக்குதலையும் ஏற்படுத்தும் ஒரு விஞ்ஞானபூர்வமான சேவை.
தன்னிச்சையாக இயங்கும் சக்தி
The naturally working energy
சக்தியை நாம் எப்பொழுதும் மின்சார சக்தியோடு ஒப்பிடுகிறோம். ஆனால், இந்தக் குணமளிக்கும் சக்தி அப்படியல்ல. இந்தச் சக்தி என்றுமே தவறு செய்யாது. ஏனென்றால், அந்தச் சக்திக்கு அதனுடைய சொந்த செயலாற்றும் அறிவாற்றல் உண்டு.
அதிக இரத்த அழுத்தமோ,
குறைந்த இரத்த அழுத்தமோ
இரண்டுக்குமே ஒரேவிதமான குணமளிக்கும் சக்திதான் பொங்குகிறது.
உடலைக் குணப்படுத்த உதவி செய்கிற இந்தச் சக்தி, தன்னிச்சையாக இயங்கும் ஆற்றல் படைத்த ஆன்ம சக்தி. அது ஒரு ஞான சக்தி.
தியான சிகிச்சையை ரகசியமாய் வைத்திருக்க நான்
விரும்பவில்லை I don`t want to keep spiritual healing as a secret
மக்கள் என்னிடம் சொல்வதுண்டு. "உங்களைச் சந்தித்தபின் நாங்கள் முழுமையாகக் குணமளிக்கப்பட்டோமா, எங்கள் தொழில், வர்த்தகம் நல்ல நிலையில் உள்ளதா என்பது பற்றியெல்லாம் நாங்கள் பெரியதாக நினைப்பதேயில்லை. உங்களைச் சந்தித்தபின், நாங்கள் மிக மகிழ்ச்சியாய் இருக்கிறோம்! அது உண்மை," என்று சொல்கிறார்கள்.
நான் 100 சதவிகித மக்களுக்கும் உலகியல் பொருள் வசதிகளைத் தருவதில் வேண்டுமானால் வெற்றி பெறாமல் இருக்கலாம். முழு உடல்நலம் தரும் விதத்திலும் வெற்றி பெறாமல் இருக்கலாம்.
ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். நான் எந்த ஒரு தனி மனிதருக்கும் மகிழ்ச்சியைத் தர தவறவில்லை, ஆனந்தத்தை அவர்களுக்குத் தர தவறவில்லை.
"எல்லோருக்கும் தியானம் கற்றுக் கொடுங்கள். ஆனால், அவர்களுக்கு ஆன்மீக குணமளிக்கும் தீக்ஷை தர வேண்டாம். மக்கள் உங்களிடமே சி கிச்சை பெற வரட்டும்," என்று ஒருவர் என்னிடம் சொன்னார்.
அவர் சொன்னதன் நோக்கம், அவ்வாறு செய்தால் ஆசிரமம் பொருளாதார ரீதியில் வளரும் என்ற மறைமுக எண்ணத்தில் ஆகும். ஆனால், நான் பவ்யமாக மறுத்து தலையாட்டிவிட்டு,
ஒன்று மட்டும்
நிச்சயம் நான்
எந்த ஒரு தனி
மனிதருக்கும்
மகிழ்ச்சியைத் தர
தவறவில்லை.
திரும்பி வந்தேன்.
நான் உடலைவிட்டுப் போனபிறகு, இந்தக் குணமளிக்கும் சேவை, பூமியிலிருந்து காணாமல் போய்விடக் கூடாது.
நான் இந்தப் பூமி கிரகத்திலிருந்து போனபிறகு, இந்தக் குணமளிக்கும் சேவை, என்னுடன் மறைந்து போக நான் விரும்பவில்லை.
அது நன்றாக வேரூன்றியதாக இருக்கட்டும். பலகாலமாக நாம் இதனை ரகசியமாகவே வைத்திருக்கிறோம்.
சித்தர்களுடைய விஞ்ஞானம் எங்கே போயிற்று?
வேதகாலத்தில் திறந்த இதய சிகிச்சை (open heart surgery) நடந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
மூளை அறுவை சிகிச்சைகளும், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளும் அப்போதே நடந்திருக்கின்றன என்பதற்கான சான்றுகள் இருக்கின்றன.
ரம்பைக்கும், மேனகைக்கும் (சுவர்க்க லோக அழகிகள்) பிளாஸ்டிக் சர்ஜரி நடந்திருக்கலாம். எப்படியோ, அந்த விஞ்ஞானம் எல்லாம் எங்கே போயிற்று?
அவை அனைத்தையும் ரகசியமாகவே வைத்திருந்ததால்தான், மறைந்து விட்டது.
நான் அதே தவற்றை மறுபடியும் செய்யவிரும்பவில்லை. நான் இந்தச் சத்தியத்தை, ஞானத்தை என்னிடமே வைத்துக் கொண்டால் எனக்குப் பெயரும், புகழும் கிடைக்கும்.
ஆனால், மக்களுக்குச் சேவை கிடைக்காது. இதை நானே வைத்துக் கொண்டால், அது ஒரு இடத்தில் நிலையாக்கப்பட்டு, உலகம் முழுவதிலிருந்தும் மக்கள் என்னைத்தேடி வருவார்கள். பணமும் குவியும். மேலும், நமக்கு ஒரு பெரிய தியான மண்டபம் அமையும். ஆனால், மக்களுக்கு செய்யும் உண்மையான சேவை செய்ய இயலாது.
நான் மட்டும் இந்தக் குணமளிக்கும் சேவையைச் செய்தால், கொஞ்சம் பேரைத்தான் சென்றடைய முடியும்.
இதுவே என்னுடைய எல்லாத் தியான சிகிச்சையாளர்களும் தியான சிகிச்சை செய்தால், எவ்வளவு கோடிக்கணக்கான மக்கள் குணமளிக்கப்படுவார்கள்!
அதனால்தான், நாங்கள் இரவு பகலாக, ஓயாமல் உலகம் முழுவதும் சென்று, மக்களுக்குப் பயிற்றுவித்து 20,000 தியான சிகிச்சையாளர்களை இதுவரை உருவாக்கியிருக்கிறோம்.
இந்த 20,000 பேருமே இந்தத் தியான சிகிச்சையை அதாவது Nithya spiritual healing எனும் இந்தத் தியான சிகிச்சையை முற்றிலும் இலவசமாகவே தருகிறார்கள்.
இதற்கென்று பயிற்சி பெற்ற சேவையாளர்கள் பல இடங்களுக்கு, பல கிராமங்களுக்கு இந்தத் தியான சிகிச்சையைத் தருவதற்காக, தங்களின் செலவில் சென்று, தினம் மக்களுக்குத் தியான சிகிச்சை தந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை ஆனந்தத்தோடு
இங்குப் பகிர்ந்து கொள்கிறோம்.
ஆயிரம் மக்களுக்கு, ஒரு தியான சிகிச்சையாளர் தோன்ற வேண்டும் என்று விரும்புகி றோம். ஒவ்வொரு ஊருக்கும் 1000 சிகிச்சையாளர் இருக்க வேண்டும் என்று விரும்புகி றோம்.
தியான சிகிச்சையும் தியான மருத்துவத்தையும் எல்லோரும் எளிதில் பெற்றுக் கொள்ளும் வகையில், ஒரு பல்கலைக்கழகம் இவற்றை ஒரு பட்டயப் படிப்பாகவும் வழங்கிக்கொண்டிருக்கிறது.
தியான பீடம் ஆரம்பித்து ஆறேழு வருடங்கள் தாண்டிய நிலையில், பல வேலைகளுக்கு நடுவில், இவ்வளவு துரிதமாக இந்தத் தியான சிகிச்சையை பட்டயப் படிப்பாக (Diploma) மாற்றியது, என்னுடைய தனிப்பட்ட சாதனை என்று எப்போதும் சொல்ல மாட்டேன்.
நாம் எழுந்து நிற்கும்போது, நமக்காக ஓடிவந்து உதவும் இறைசக்தியின் அசகாய சாதனைகள்தான் இவை என்பதைத்தான் சொல்ல விரும்புகிறேன்.
FIMT ( Formal Membership in Medical Therapy) என்றழைக்கப்படும் தியான மருத்துவத்திற்கான இந்தப் பட்டப்படிப்பானது, ஆர்வமுடைய பட்டதாரிகள் கலந்து கொண்டு பயன்பெறும் படிப்பு.
அனைத்து தரப்பட்ட மக்களும் இந்தத் தியான சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக, 12 ஆயிரம் தியான சிகிச்சையாளர்களின் மூலமாக உலகம் முழுவதும் எங்களால் முடிந்த இடங்களிலெல்லாம், இந்தத் தியான சிகிச்சையை இலவசமாக வழங்கும்

தியான சிகிச்சை மையங்களை உருவாக்கி சேவை செய்து கொண்டிருக்கிறோம்.
புள்ளி விவரப்படி ஒரு நாளைக்கு குறைந்தது, 25,000 மக்கள் உலகம் முழுவதும் இந்தத் தியான சிகிச்சையை இலவசமாகவே பெறுகிறார்கள்.
தியானம் ஒரு மருந்தாக
நமது உடலுக்குள்ளே ஐந்து அடுக்குகள் இருக்கின்றன. அந்த ஐந்து அடுக்குகளை ஐந்து கோசங்கள் என்று சொல்லுவார்கள்
| ஐந்து அடுக்குகள் | ஐந்து கோசங்கள் | ஐந்து பெட்டகங்கள் |
|---|---|---|
| முதல் அடுக்கு | அன்னமய கோசம் | திடப் பெட்டகம் |
| இரண்டாம் அடுக்கு | பிராணமய கோசம் | சக்திப் பெட்டகம் |
| மூன்றாம் அடுக்கு | மனோமய கோசம் | குழப்பப் பெட்டகம் |
| நான்காம் அடுக்கு | விஞ்ஞானமய கோசம் | புதிர்ப் பெட்டகம் |
| ஐந்தாம் அடுக்கு | ஆனந்தமய கோசம் | ஆனந்தப் பெட்டகம் |
கோசம் என்றால் அடுக்கு.
நம் உடலின் ஐந்தடுக்குகளை அடுக்கடுக்காக விளக்கி, ஒவ்வொரு அடுக்கின் சிறந்த மருத்துவ முறைகளையும் சுட்டிக்காட்டி நோய்க்கான காரணம் மற்றும் மருத்துவம் பற்றிய ரகசியங்களை இந்தப் பகுதி விளக்குகிறது.
Mind- Body - Medicine என்றழைக்கப்படும் மருந்தில்லா மாற்று மருத்துவ முறைக்கான ஆராய்ச்சிகள் யந்திரகதியில் மேலை நாடுகளில் கூட நடந்து கொண்டிருக்கின்றன.
திட உடலையும் தாண்டி, நமக்குத் தெரிந்த மனத்தையும் தாண்டி, நம் உள்ளே ஏதோ ஒரு ஆச்சரியம் இருக்கிறது என்று தேட ஆரம்பித்திருக்கிறார்கள்.
உடல், மனம் தாண்டி நம்முள் இருக்கும் இறை சக்தியைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
மருத்துவர்கள் மத்தியில் மிகச் சிறந்த வாசகம் ஒன்று உண்டு.
Doctor Stitches;
God Heals.
அதாவது, மருத்துவர் தைக்கிறார்; கடவுள் குணமாக்குகிறார். மருத்துவரால் அதிகபட்சம் அறுக்க முடியும்; தைக்க முடியும். ஆனால், குணமாக்குவது என்பது, இயற்கை ச க்தியால், கடவுளால் மட்டும்தான் முடியும்.
கடவுள் என்பது என்ன ?
எங்கும் நிறைந்திருக்கும் தூய சக்திதான் கடவுள் . கடவுள், நாம் நினைப்பது போல் ஒரு தனி ஆளோ, தனி அம்சமோ மட்டும் அல்ல.
இந்தக் கடவுள் சக்தி, இறைசக்தி, பராசக்தி என்பது அடுக்கடுக்காக நம் உடலுக்குள் இருக்கிறது. அது ஒவ்வொரு அடுக்கிலும் வடிகட்டி, வடிகட்டி வெளியில் வருகிறது. உள்ளே ஆழமான மையத்தில் இருக்கிற ஆனந்தமய கோசத்தில் ஏராளமாக அந்த இறைசக்தி ஊற்றுப்போல பொங்கி வழிந்து கொண்டிருக்கும். அடுத்து விஞ்ஞானமய கோசத்திற்கு வரும் பொழுது கொஞ்சம் குறையும். அப்படி ஒவ்வொரு அடுக்கிலும் கொஞ்சம் கொஞ்சம் குறைந்து கொண்டே வரும். அதைத்தான் சக்தி பெட்டகங்கள் என்று சொல்கிறோம். அந்தப் பெட்டகங்களில் குறிப்பிட்ட கோசங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு குறிப்பிட்ட மருத்துவ முறைகள் உண்டு.
1. அன்னமய கோசத்துக்கான மருத்துவ முறை அலோபதி :
2.பிராணமயம கோசத்துக்கான மருத்துவ முறை யோகாசனம் ப்ராணாயாமம்.
3.மனோமய கோசத்துக்கான மருத்துவ முறை ஹோமியோபதி
4.விஞ்ஞானமய கோசத்துக்கான மருத்துவ முறை ஆயுர்வேதம்
5.ஆனந்தமய கோசத்திற்கான மருத்துவமுறை ஆனந்த ஹீலிங் அதாவது தியான சி கிச்சை.

(The Healing touch of Guru, or the
Healing Energy of Divine through
meditation)
ஒவ்வொரு மருத்துவத் துறைக்கும் ஒரு கோசத்தில் மிக ஆழமாக ஆழ்ந்து வேலை செய்யும் சக்தியுண்டு. சரியாக தேர்வு செய்து மருத்துவம் அளிக்கப்படும்பொழுது, சி றந்த பலன்களை மனித குலத்திற்குத் தரமுடியும். இவற்றை ஆழமாக ஆராய்ந்ததின் விளைவாக பிறந்ததே தியான சிகிச்சை.