KAILASA Library/ஜீவன் முக்தி/நான் ரொம்ப பிஸியானவன்Sign in
ஜீவன் முக்தி

நான் ரொம்ப பிஸியானவன்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

I am a very busy person

12. நான் ரொம்ப பிஸியானவன். எனக்குத் தியானம் செய்ய நேரமிருப்பதேயில்லை. என்ன செய்வது?

  • இரகுபதி, காரைக்குடி

“தியானம் செய்ய எனக்கு நேரமில்லை," என்று சொல்லாதீர்கள்.

“தியானம் செய்ய எனக்கு விருப்பமில்லை," என்று சொல்லுங்கள்.

காலைக்கடன்களையும், உணவையும் "நான் பிஸியாக இருக்கிறேன்," எனச் சொல்லித் தவிர்த்து விடுவீர்களா என்ன? ஒரு நாள் தவிர்த்தாலும் அடுத்த நாள் தொடர்வீர்கள்தானே.?

தியானம் செய்ய எனக்கு நேரமில்லை எனச் சொல்லித் தவிர்ப்பது, தியானம் எவ்வளவு மகத்துவம் பெற்றது, அது எவ்வளவு பலன்களைத் தரக்கூடியது என்ற உண்மைகள் தெரியவில்லை என்று பொருள்.

தியானத்தின் அவசியம் ஆழப் புரியாததால், 'தியானம் செய்ய வேண்டும்' என்ற விருப்பம் இன்னும் உங்களுக்குள் அரும்பவே இல்லை.

விருப்பம் மலராததால்தான், ஒரு நாளுக்கு வெறும் அரைமணி நேரம் கூட தியானத்திற்காக ஒதுக்குவது எப்படி என யோசிக்காமல், சாக்குபோக்குச் சொல்லித் தட்டிக்கழிக்க வைக்கிறது மனம்.

தியானம் செய்ய, விருப்பத்தை அரும்பச் செய்யுங்கள். இல்லை, தியானம் செய்ய எனக்கு விருப்பமில்லை எனச் சொல்லுங்கள். இரண்டும் சரியே. தியானம் செய்ய நேரமில்லை என்று தயவு செய்து சொல்லாதீர்கள்.

அந்த மூன்று நாட்களில் தியானம் செய்வது

Meditating in those three days

13. பெண்கள் அந்த மூன்று நாட்களில் சடங்காச்சாரியங்களில் ஈடுபடக்கூடாதாம்! தியானமெல்லாம் புனிதமான விஷயமாம்! நான் மண்டாக இருப்பதால் எனக்கு எதை, எப்பொழுது செய்ய வேண்டுமென்று தெரியவில்லையாம்! நான் தியானம் செய்வது தவறா? விளக்கம் வேண்டும்.

  • தேவி, தென்காசி.

தியானம் செய்வதற்கு நல்ல நாள், கெட்ட நாள் பார்க்க வேண்டிய அவசியமில்லை. நல்ல நேரம், கெட்ட நேரம், தீட்டு என்று எதுவுமே பார்க்க வேண்டிய அவசியமில்லை.

24 மணி நேரத்தில், எந்த நேரத்தில் தியானம் செய்தாலும் நல்லதே.. எல்லா நேரத்திலும் தியானம் சக்தி ஓட்டத்தை உங்களுக்குள் அதிகரிக்கவே செய்யும். மாதத்தின் 30 நாட்களில் எந்த நாளில் தியானம் செய்தாலும் நல்லதே.. எல்லா நாட்களிலும் தியானம், சக்தி ஓட்டத்தை நிச்சயம் அதிகரிக்கும்.

பெண்களுக்கு இயற்கையாக உடல் சுத்திகரிப்பு நடைபெறும் அந்த 3 நாட்களிலும் தியானம் செய்யலாம். சரியாகச் சொல்ல வேண்டுமானால் அந்த நாட்களில்தான் தியானம் மிக மிக அவசியம்.

காரணம் மனமும், உடலும் சக்தியிழந்து சக்திக் குறைவால் கஷ்டப்படும் அந்த நேரத்தில் தியானம் தரும் சக்தி ஓட்டம் நிச்சயம் வரப்பிரசாதமே. தியானம் எந்த வகையிலும் புனிதமற்ற செயலாக முடியாது.

பழங்காலத்தில் பெண்கள் சில நாட்களாவது, ஓய்வாக இருக்கட்டும் என்று வீட்டார் கொடுமையிலிருந்து பெண்களை காப்பாற்றுவதற்காகப் பெரியவர்கள் வகுத்த திட்டம்தான் தீட்டு, வீட்டை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும் என்பது போன்ற பழக்கமெல்லாம். ஒரு நல்ல விஷயத்திற்காக அந்தக் காலத்தில் உருவாக்கிய சில பழக்கங்களுக்கு இந்தக் காலத்தில் முக்கியத்துவம் கொடுப்பது புத்திசாலித்தனம் அல்ல.

நீங்கள் தியானம் செய்வது தவறல்ல. அந்த நேரத்தில்தான் தியானம் நிச்சயம் தேவை. நன்றாகச் செய்யலாம், செய்ய வேண்டும்.

தியான சிகிச்சையாளரும் அதே சக்தி

படைத்தவரா...? Does the healer also carry the same energy?

14. ஞானிகள் தொட்டால் நோய்கள் குணமடையும் என்ற உண்மை எல்லோரும் அறிந்ததே. ஆனால், நீங்கள் தீக்ஷை கொடுத்த சாதாரண மனிதர்களும் தியான சிகிச்சையாளராக மாறியபின், நோய்களைக் குணப்படுத்துகிறார்களே! அதை நானே கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். இது எப்படிச் சாதாரண மனிதர்களுக்கும் சாத்தியம் ஆகிறது?

  • பத்மாவதி, சேலம்.

ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள், திருமதி பத்மாவதி.

ஞானிகள் நோய்களைக் குணப்படுத்துவதில்லை. குணப்படுத்துவதற்காக தனி மாயாஜாலங்கள் எதுவும் செய்வதில்லை.

ஞானிகள் தொடும் போது நோய்கள் குணமாகிறது.

இந்த இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

ஞானிகளின் ஆனந்த நிலையில் இருந்து வெளிப்படும் ஆனந்த சக்தி மனிதர்களுக்குள் பாயும் போது, சக்திக் குறைபாடுகள் சரியாகி நோய்கள் குணமாகிறது.

அற்புதங்கள் நிகழ்த்தப்படக் கூடாது.

அற்புதங்கள் நிகழ வேண்டும்.

தானாக நிகழ்ந்தால் அது அற்புதம். நிகழ்த்தப்பட்டால் அது மாயாஜாலம்.

நோய்கள் ஞானிகளால் குணப்படுத்தப்படுகிறது என்பதை விட, குணமாகிறது என்பதுதான் உண்மை.

NSP, BSP தியான முகாம்களில் கலந்து கொண்ட பிறகு, மக்களுக்கு ஆனந்த சேவை செய்யும் துடிப்பு கொண்டவர்களுக்கு - தியானபீடத்தில் ஆனந்த தியான சிகிச்சைக்கான தீக்ஷை இலவசமாக அளிக்கப்படுகிறது

தீக்ஷை பெற்றவர்களுக்கு, அவர்களுக்கு உள்ளே ஆனந்த சக்தியோடு நேரடியாகத் தொடர்பு கொள்வதற்கான சூட்சும சக்தி திறக்கப்படும். சக்தி நிரம்பியிருக்கும்.

ஆனந்த கந்த சக்கரத்திலிருந்து, ஆனந்த சக்தியைப் பெற, தியானம் ஒன்று கற்றுத் தரப்படுகிறது. ஞானத்திற்குச் சுலபமாக அழைத்துச் செல்லும் தியானங்களில் இதுவும் ஒன்று. தீக்ஷை பெற்றவர்கள், ஆனந்த கந்த தியானத்தில் மட்டுமே ஈடுபடுவார்கள்.

சில நிமிட தியானத்திற்குப் பிறகு, அவர்களின் உள்ளிருந்து பொங்கும் ஆனந்த சக்தி, அதாவது தியான சக்தி, அவர்களை முழுவதுமாக நிரப்பிய பின், அது மிகுந்து பொங்கி வெளிப்பட ஆரம்பிக்கும்.

நீங்களே சுயமாக அனுபவித்து உணரும் வரை, இதைத் புரிந்து கொள்ள கொஞ்சம் கடினமாக இருக்கும்.

அவர்களை நிரப்பிய பின், தொடர்ந்து வழிந்து வெளிப்படும் தியான சக்திதான் - நோயாளியின் மீது சிகிச்சையாக அளிக்கப்படுகிறது.

இந்தச் சக்தி, சக்கரங்கள் (Energy Centres) மூலமாக நோயாளிக்குள் செல்கிறது.

காற்று கீழிருந்து மேலே செல்ல முயற்சிக்கும்,

தண்ணீர் தாழ்வான பகுதி நோக்கி பரவ முயற்சிக்கும்,

மின்சாரம் பாய்வதற்கு தோதான இடம் நோக்கி பாய முயற்சிக்கும், தியான சக்தி (ஆனந்த சக்தி), சக்தி குறைபாடு (Low energy) இருக்கும் இடம் நோக்கி நிரம்ப முயற்சிக்கும்.

சக்திக்கென்று தனி ஞானம் உண்டு. தேவைப்படும் இடத்திற்குத் தானே சென்று சேரும்.

காற்று, தண்ணீர், மின்சாரம்போல் சக்தி செயல்பாட்டையும், அறிவியல்பூர்வமாக விளக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

தியான சிகிச்சையாளர்கள், அவர்களின் ஞானப் பாதையில் முன்னேற செய்யும் தியானத்தின் ஒரு அருமையான பக்க விளைவுதான் நோய் குணமாகுதல்.

நோய்கள் குணப்படுத்தப்படுவதில்லை; குணமாகிறது. எனவேதான், இது அற்புதமாய்த் தெரிகிறது.

இந்த அற்புதம் உங்கள் மூலமாக நிகழ்ந்து நீங்களே அனுபவப்படாத வரை, உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கத்தான் செய்யும். ஆனால், இது ஆச்சரியப்படும் அளவுக்கு மாயாஜாலம் அல்ல, இது ஒரு தியான வெளிப்பாடு அவ்வளவே. யார் வேண்டுமானாலும் தியான சிகிச்சைக்கான தீக்ஷையைப் பெற்று தியான சிகிச்சையை தர முடியும்.