KAILASA Library/ஜீவன் முக்தி/10 வருடமாகத் தியானம் செய்கிறேன்...Sign in
ஜீவன் முக்தி

10 வருடமாகத் தியானம் செய்கிறேன்...

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

I am meditating for the past 10 years

15.பத்து வருடமாகத் தொடர்ந்து தியானம் செய்கிறேன். எனக்கு இன்னும் முக்தி சித்திக்கவில்லை, ஏன்?

  • பெரியசாமி, விழுப்புரம்

பெரியசாமி ஐயா ...

முதல் விஷயம், தியானம் என்ற பெயரில் நீங்கள் செய்தது தியானமா, இல்லை சாதாரண உடற்பயிற்சியா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இரண்டாவது, வெறும் தியானம் மாத்திரம் முக்தி தராது. தியானம் சக்தி தரும்.

தியானமும், வாழ்க்கை ஞானமும் சேர சேரத்தான் முக்தி சித்திக்கும்.

வாழ்க்கைப் பற்றிய ஞானம் என்பது வாழ்க்கையையும், உங்களையும் முழுமையாகப் புரிந்துகொள்வது.

சக்தியும், புரிந்துகொள்வதும் சேர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். பத்து வருடமாகத் தியானம் மாத்திரமே செய்தால் உடலில் கொஞ்சம் சக்தி அதிகமாகும். தொடர்ந்து ஞானப் புத்தகங்கள் மாத்திரம் படித்தால் வெறும் அறிவு மாத்திரம் அதிகமாகும்.

ஞானக் கருத்துகளும், தியான சக்தியும் சம விகிதத்தில் ஒன்று சேரும் போது மட்டுமே, அறிவு அனுபவமாகி, அனுபூதி நோக்கி அழைத்துச் செல்லப்படுவீர்கள். முக்தி சி த்திக்கும்.

நீங்கள் செய்யும் தியானம் என்பது, தியானம்தானா, இல்லை தியானம் என்ற பெயரில் வேறு ஏதாவது செய்து கொண்டு இருக்கிறீர்களா என்ற தெளிவுக்கு வாருங்கள்.குழப்பம் தீரும்.

இரண்டாவது, வாழும் ஞானி ஒருவரிடம் நேரடி தீக்ஷையும், ஞான உபதேசமும் பெற்றுக் கொள்ளுங்கள். பலனடைய ஆரம்பிப்பீர்கள்.

‘மேடைப் பேச்சு’ நினைத்தாலே பயமாயிருக்கிறது...

Just the thought of stage. talk scares me

16.மேடைப்பேச்சை பற்றி நினைத்தாலே கைகால்கள் நடுங்குகின்றன. மீறி செயல்பட முயற்சித்தால், தொண்டை கட்டிக்கொள்ளுகிறது. நா வறண்டுவிடுகிறது. தியானத்தால் சரி செய்ய முடியுமா?

  • யாதவ்,பெங்களூர்

சரி செய்ய முடியும். இதை பியர் ஆப் பர்பெக்ஷன் (Fear fo perfection) எனக் குறிப்பிடுவார்கள். எதைச் செய்தாலும் துல்லியமாகச் செய்தாகவேண்டும் என்ற எண்ணம் இருக்கும் வரை, எப்போதுமே எதையுமே கற்றக்கொள்ள முடியாது. எந்தத் துறையைச் சேர்ந்த வல்லுநராக இருந்தாலும் சரி, அவர் வல்லுநராகும் முன் பல தோல்விகளைச் சந்தித்திருப்பார். அசிங்கமாகவும், தவறுதலாகவும் முடிந்த தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்டவர்களே நிபுணர்களாகிறார்கள்.

முதல் முறையே நிபுணராக வேண்டும் என நினைப்பவர்கள் தோல்விகளைக்கூட சந்திக்காத துரதிர்ஷ்டசாலிகள். தோல்விகளைச் சந்திப்பது ஒருவகையில் அதிர்ஷ்டமே. கைகால் நடுக்கத்தையும், வாய் குளறுதலையும் பற்றித் தயங்காதீர்கள். அவற்றைச் சந்தியுங்கள். தோல்விகள் வந்தாலும் அவை அதிர்ஷ்டங்களே. தொடர்ந்து போராடுங்கள். ‘மேடைப் பேச்சு’ உடல் சம்பந்தப்பட்டதல்ல. அது மனம் சம்பந்தப்பட்டது.