தியான சத்சங்கங்கள் ஏன்?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Why dhyana Satsangs?
6. ஏன் ஊர் ஊராகச் சென்று தியான சத்சங்கங்கள் நடத்துகிறீர்கள்?
- கருணா, மலேசியா
விவேகானந்தர் ஒரு இடத்தில் மிக அழகாக விளக்குகிறார். "மனிதனை நல்லவனாக இரு, ஆன்மீகவாதியாக மாறு. நல்ல விஷயங்களைக் கடைபிடி என்று சொல்வது மிகப் பெரிய தவறு," என்று அவர் சொல்கிறார்.
"அதெப்படி மிகப்பெரிய தவறாகலாம்?" என்று நீங்கள் நினைக்கலாம்.
விவேகானந்தர் விளக்குகிறார்.
"மனிதனை நல்லவனாக மட்டும் இரு,
சத்தியத்தோடு இரு,
ஆன்மீகவாதியாக இரு,
என்று சொல்வது மிகவும் எளிது.
ஆனால், எப்படி நல்லவனாக இருப்பது என்று கற்றுக்கொடுப்பதுதான் கடினம்"
பொதுவாகவே, நாம் எல்லோரும் "கோபத்தை அடக்குங்கள், அன்போடு இருங்கள்..., ஆன்மீகத்தோடு வாழுங்கள்.." என்கின்ற வார்த்தைகளை மீண்டும், மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். ஆனால், நடைமுறையில் அது சாத்தியமானதுபோல் தெரிவதே இல்லை.
மீண்டும், மீண்டும் இந்த வார்த்தைகளைக் கேட்டாலும், அந்த வார்த்தைகள் நடைமுறையில் ஏன் சாத்தியம் ஆகாமலே இருந்து கொண்டிருக்கின்றன?
காரணம், நாம் கேட்கின்ற வார்த்தைகள் வெறும் மூளை அளவில் மட்டுமே பாதிக்கின்றன. அவை வெறும் அறிவு அளவிற்கு மட்டுமே செல்கின்றன. அவை ஆழ்ந்து நமக்குள் செல்வது இல்லை. ஆழ்ந்து நமக்குள் படிவது இல்லை. வெறும் வார்த்தைகளை உள்வாங்கும் பொழுது, அவை நம் மூளையை மட்டும்தான் தொடுகின்றன. உணர்வைத் தொடுவது இல்லை.
அந்த வார்த்தைகள், உணர்வைத் தொட்டு, அனுபவமாக மாற்றுவதற்கான யுக்தி, அதற்கான முறையை அறிவிப்பதுதான் தியான சத்சங்கம்.
தியான சத்சங்கம், ஒரு சாதாரணமான சொற்பொழிவு அல்ல. பொதுவாக, நாம் ஒரு சொற்பொழிவிற்குச் சென்றுவிட்டு வெளியே வரும்போது, ஏற்கெனவே நம் தலையில் இருந்த செய்திகளையும், சுமைகளையும்விட, அதிகமான சுமைகளுடன் வெளியே வருவோம்.
பேச்சாளரின் வார்த்தைகளைக் கேட்டுவிட்டு வருவதால்... ஏற்கெனவே, தலையில் இருக்கும் சுமையோடு, இன்னும் சிறிது சுமையையும் சேர்த்துக் கொண்டு வெளியே வருவோம்.
சொற்பொழிவு என்பது, உங்கள் தலைச்சுமையை, ஒரு விதத்தில் தலைக்கனத்தை அதிகரிக்கும் ஒரு நிகழ்ச்சி. தியான சத்சங்கம் என்பது, உங்கள் தலையில் இருக்கும் சுமையை இறக்கி வைக்கும் ஒரு நிகழ்ச்சி. இது உங்கள் தலையில் இருக்கும் கனத்தை இறக்கிவைக்கும் நிகழ்ச்சி.
உங்கள் தலைக்குள், மேலும் மேலும் வார்த்தைகளைத் திணிப்பதற்காகச் சத்சங்கம் நடத்தப்படவில்லை. உங்களுக்குள் இருக்கும் வார்த்தைகளைக் குறைத்து, உங்களுக்குள் இருக்கும் வார்த்தைகளை அனுபவமாக, அனுபூதியாக மாற்றுவதற்குத்தான் இந்தச் சத்ச ங்கங்களை நடத்துகிறோம்.
பொதுவாகவே, நாம் எல்லோரும் அனுபவத்தை நோக்கிப் பயணிப்பதாகவும், ஆன்மீக அனுபவம் நமக்கு வேண்டும் என்றும், நமக்கு நாமே ஒரு தவறான கற்பனையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
நிஜ வாழ்க்கையில் நாம் ஆன்மீகத்தையும், ஆன்மீக அனுபவத்தையும் ஏற்றுக் கொள்வதே இல்லை. மேலோட்டமாக, ஆன்மீகம் சம்பந்தம் இல்லாத எந்தச் செயலை வேண்டுமானாலும் நாம் ஆன்மீகத்தின் பெயரால் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம்.
உண்மையைச் சொல்லவேண்டுமானால், தமக்குள் ஒரு பெரிய மாற்றத்தை எடுத்துவரும் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு யாரும் தயாராக இல்லை. தம்மை மாற்றிக்கொள்ள இயலாத தைரியமின்மையே, ஆன்மீகத்தைப் பார்த்ததும் பயமாக வெளிப்படுகிறது.
ஓஷோவின் சாயல் உங்களிடம்...
Osho's Slant in you
7. உங்கள் சொற்பொழிவுகள் அனைத்திலும் ஓஷோவின் சாயல் இருக்கிறது? உண்மையில் உங்களுக்குள் ஓஷோவின் சாயல் உள்ளதா?
- பிரேமா மகிமா, டெல்லி
ஓஷோவின் சாயல் எனக்குள் இல்லை. உங்களுக்குள் இருக்கிறது.
இந்தக் கேள்வியை கேட்பவர்களுக்குள் இருக்கிறது.
நீங்கள் ஏற்கெனவே நிறைய ஓஷோவின் புத்தகங்களைப் படித்திருந்தீர்கள் என்றால், என் கருத்துகளைக் கேட்கும் போது அது ஓஷோவுடையது போல இருக்கும்.
நீங்கள் ஏற்கெனவே ராமகிருஷ்ணருடைய புத்தகங்களைப் படித்திருந்தீர்கள் என்றால், ராமகிருஷ்ணருடைய சாயல் இருக்கும். ராமகிருஷ்ணருடைய பதில்களையே திரும்பச் சொல்வதுபோல் இருக்கும்.
ஏற்கெனவே ரமண மகரிஷியின் கருத்துகளை உள்வாங்கியிருந்தீர்கள் என்றால், ரமண மகரிஷியின் கருத்துகள் மாதிரி இருக்கும். நீங்கள் ஏற்கெனவே கிருஷ்ணரை ஆழ்ந்து தியானம் செய்து பூஜை செய்திருந்தீர்கள் என்றால், கிருஷ்ணருடைய சாயலையே என்னிடமிருந்து பார்ப்பீர்கள்.
ஏற்கெனவே ஈஸ்வரனுடைய சாரத்தை உள்வாங்கியிருந்தீர்கள் என்றால், ஈஸ்வரனைப் பார்ப்பதுபோல் பார்ப்பீர்கள்.
ஏற்கெனவே ஏசுவின் கருத்துகளை ஆழ்ந்து உள்வாங்கி இருந்தால், ஏசுநாதர் கருத்தைபோல் தோன்றும்.
நன்றாக ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். யாருடைய சாயலை நீங்கள் உள்வாங்கினீர்களோ, அவர்களுடைய சாயல்போல் தோன்றும். ரொம்ப அழகாக கிருஷ்ணர் கீதையில் சொல்கிறார். எந்தப் பாவத்தில் நோக்குககுகிறீர்களோ, அதே பாவத்தில் உங்களுக்கு முன் நான் தோன்றுவேன். எந்தச் சாயலில் நீங்கள் பார்க்கிறீர்களோ, அதே சாயலில் நான் தோன்றுவேன்.
எனக்குள் ராமகிருஷ்ணரின் சாயலோ, ரமணரின் சாயலோ, ஓஷோவின் சாயலோ இல்லை.
அவர்களுடைய சாரம் இருக்கிறது. அவர்களுடைய சாரத்தை உணர்ந்திருக்கிறேன்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். அவர்களுடைய சாயல் உங்களுக்குள் இருப்பதால், அந்தச் சாயலை எனக்குள் பார்ப்பீர்கள்.எனக்குள் அவர்களின் சாயல் இல்லை. சாரம் இருக்கிறது. அதனால் யாருடைய சாயலிலும் நான் இல்லை. அவர்களின் சாரமாக இருக்கிறேன்.
நான் தியானம் சொல்லித் தரலாமா?
Can I teach meditation?
8. நான் நித்ய தியானத்தை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கலாமா?
- தாஸ், சீர்காழி
கற்றுத் தருவதற்கு அனுமதி தருவதோடல்லாமல், கற்றுக் கொடுங்கள் என்று ஊக்குவிக்கிறோம்.
தியானத்தை மற்றவர்களுக்கும் சொல்லித் தரும் கலையைக் கற்றுக் கொண்டவர்களைத்தான் ‘ஆச்சாரியார்கள்’ என்று அழைப்போம்.
தியானங்களை மற்றவர்களுக்குச் சொல்லித்தரும் அளவிற்கு உங்களை தயார்படுத்தும் இந்த 10 நாள் ஆச்சாரியார் பயிற்சி முகாமை முற்றிலும் இலவசமாகவே பொதுமக்களுக்குத் தருகிறோம்.
முறையாக ஆச்சாரியார் பயிற்சி எடுத்தபின்பு நித்யதியானம் எனும் ஒரு தியானம் மட்டுமல்ல, இன்னும் உடல், மன ஆரோக்கியத்திற்கும், ஜீவன் முக்திக்கும் தேவையான நேரடியாக உதவும் தியானங்களையும், வாழ்வியல் தீர்வுகளையும் கற்றுக் கொள்ளலாம்; கற்றுக் கொடுக்கலாம்.