KAILASA Library/ஜீவன் முக்தி/சாஸ்திர சாஸ்திரம்Sign in
ஜீவன் முக்தி

சாஸ்திர சாஸ்திரம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Saastra Sastras

2. புதிது புதிதாய் பிரச்சனைகள் வருகிறது. உணர்வு நிலையை பாதிக்கிறது. சாஸ்திர சஸ்திரங்கள் அதற்கு வழிகாட்டுமா?

  • கோபால், சாலிகிராமம்.

சாஸ்திர சஸ்திரங்களைச் சேகரித்தால் போதும்.

சாஸ்திரம் என்றால் ஞானம்.

sஸ்திரம் என்றால் ஆயுதம்.

சாஸ்திரங்களைச் சஸ்திரங்களாக மாற்றி வைத்துகொள்வதைத்தான், சாஸ்திர சஸ்திரம் என்று சொல்வோம்.

ஒன்றுமில்லை, நீங்கள் ஒரு பெரிய இராணுவம் வைத்திருந்தீர்கள் என்றாலே பக்கத்து நாட்டுக்காரர் உங்களைச் சீண்டிப்பார்க்க மாட்டார். நீங்கள் அவரை அடிக்கக்கூட வேண்டியதில்லை. உங்கள் பலத்தைக் காண்பித்தால் போதும். அதேபோல், உங்களுக்குள்ளே ஒரு பெரிய சாஸ்திர சஸ்திர கிடங்கு இருக்கிறது என்று தெரிந்தால் என்ன ஆகும்?

நன்றாகத் தெரிந்துக்கொள்ளுங்கள்...

துக்கம் என்கின்ற அரக்கன் உங்களைத் தொடாது.

ஒவ்வொரு சத்தியங்களையும் உள்ளே வாங்கும் பொழுது, ஒவ்வொரு துக்கமும், ஒவ்வொரு பிரச்சினைகளுடைய முடிச்சும் அவிழ்ந்துவிடும். உணர்வு நிலையை உயர்த்திவிடும். இது ஞானிகளுடைய ஞானக்கருத்துகளைக் கேட்கும்போது மட்டுமே நடைபெறும்.

சாதாரண மனிதர்களுடைய வார்த்தைகள், அவர்கள் எந்த உணர்வு நிலையிலிருந்து வெளிப்படுத்துகிறார்களோ, அந்த உணர்வு நிலையைத்தான் நமக்குள்ளும் ஏற்படுத்தும். அந்த வார்த்தைகள் நம்முடைய உள்தளத்தை உயர்த்தாது, மாறாக உணர்வை உடைத்துவிடும். வெறுப்பு, ஏமாற்றம், கோபம் என்ற உணர்வுகளாக வெடிக்கும்.

உள்உலகத்தின் அஞ்ஞானத்தால் ஏற்படும் பிரச்சனைகள் நமது அமைதியை குலைக்கிறது.

உள்உலகத்தின் அஞ்ஞானத்தால் ஏற்படும் பிரச்சனைகள் நமது அமைதியை குலைக்கிறது diagram

விளைவு: அழிவு

குரோதம்

காமம்

கோபம்

வெறுப்பு

அணுகுண்டு

ஏமாற்றம்

உள் உலகம் (inner space)

சாதாரணமனிதனின்
வார்த்தைகள்
நம் உள் உலகத்தின்
அமைதியை குலைத்து
மன அழுத்தத்தையும்,
அமைதியின்மையும்
உண்டாகிறது.

சாஸ்த்திர சஸ்த்திரத்தை ஞான அஸ்த்திரமாக மாற்றுபவரே குரு.

சாஸ்த்திர சஸ்த்திரத்தை ஞான அஸ்த்திரமாக மாற்றுபவரே குரு diagram

விளைவு : ஆனந்தம்

ஞானக் கருத்துக்கள்
(சஸ்திரம்)
குரு போதனை (சாஸ்திரம்)

திருப்தி
நம்பிக்கை
உத்வேகம்
துணிவு
அர்ப்பணிப்பு
ஹாஸ்யம்
பக்தி

உள்உலகம் (inner space)

சாஸ்த்திரங்களை
(சத்தியங்களை)
சஸ்திரங்களாக (ஞான அஸ்த்திரமாக)
மாற்றித் தருபவரே குரு.

24 மணி நேரமும் உங்களுடனேயே இருக்கும் சத்தியங்கள்... உங்களின் உணர்வுநிலையை உயர்த்துவதே!

இன்னும் ஆழ்ந்து உணர வேண்டிய ஒரு விஷயம் இது. ஏன் சாஸ்திர சஸ்திரங்களை நாம் சேகரிக்க வேண்டும் என்பதைப்பற்றிப் பார்ப்போம். அதிக நேரம் உயர்ந்த உணர்வில் இருக்க ஆரம்பிக்கும்போது, நீங்கள் என்ன செயலை செய்தாலும், என்ன தொழிலைச் செய்ய ஆரம்பித்தாலும் மேம்படுவீர்கள்.இதற்கு மேல் என்னால் வாழ முடியாது என்னும் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றாலும்கூட, இந்த சாஸ்திர ச ஸ்திரங்கள் உங்களுடைய நடைமுறை வாழ்வில் நேரடியாகத் தீர்வுகளைத் தரும்.

உதாரணத்திற்கு, உங்கள் வாழ்க்கையைத் துக்கப்படுத்திய நிகழ்ச்சியால் தவித்துக் கொண்டிருக்கும்போது, அந்தத் துக்கத்தைப் போக்கும் ஒரு சத்தியத்தைத் தெரிந்து கொண்டாலோ அல்லது ஏற்கெனவே தெரிந்து வைத்த சத்தியம் மேலே வந்தாலோ எவ்வளவு இனிமையாக இருக்கும்.

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சத்தியத்தைத் தெரிந்து கொள்ளும் போது என்ன நினைக்கிறீர்கள்..., ‘அடடா, ஒரு 25 வருடம் முன்பு இதைக்கேட்டு உள்வாங்கியிருந்தேன் என்றால், வாழ்க்கையில் நடந்த எவ்வளவு துக்கங்களைக் குறைத்திருப்பேன்.’

பல துக்ககரமான, மோசமான நேரங்களில் இந்த சாஸ்திர சஸ்திரங்கள் ஊன்றுகோலாக இருக்கும். துக்கம் என்கின்ற அரக்கனை அழிக்கின்ற அஸ்திரமாக இருக்கும். 24 மணி நேரமும் உங்களுடனேயே இருக்கும். இந்தப் பிறவியில் மட்டுமல்ல, இனி வருகின்ற எல்லாப் பிறவிக்கும் இப்போது உள்வாங்கும் இந்தக் சத்தியங்களே ஞானக் கேடயங்கள்; சாஸ்திர சஸ்திரங்கள்.

இந்த சாஸ்திர சஸ்திரங்களுடைய சாரம், உங்களுடைய உணர்வு நிலையை உயர்த்துவதே! உங்களுடைய பலத்தை அதிகரிப்பதே! எனவே உங்களின் புதுப் பிரச்சனைகளுக்கும், பழைய பிரச்சனைகளுக்கும் சாஸ்திர சஸ்திரங்களே நேரடி தீர்வு

சக்தி குறைவிற்கு, வழி என்ன?

what is the way for reduced energy?

3. எனக்குச் சக்தி குறை இருப்பதாய்க் கருதுகிறேன். உடல் அடிக்கடி சோர்வு அடைந்து விடுகிறது. நான் என்ன செய்ய? -பாலகேசவ், கன்னியாகுமரி

கரண்ட் கட்டாகி படிக்கட்டில் இறங்கும் போது, கடைசிப் படி தாண்டிய பின்கூட இன்னோர் படி இருப்பதாக எண்ணி, காலை தரையில் வேகமாக வைத்து தடுமாறிய அனுபவம் ஞாபகத்திற்கு வருகிறதா?

இந்தத் தடுமாற்றம் படிக்கட்டால் வந்ததல்ல.

இது சாதாரண மனத்தடுமாற்றம்தான். நீங்கள் சுட்டிக் காட்டும் சக்திகுறைவு கூட நிஜமானதல்ல. நீங்கள் குறிப்பிட்டிருப்பதுகூட “எனக்குச் சக்திகுறை இருப்பதாகக் கருதுகிறேன்” என்றே குறிப்பிட்டிருக்கிறீர்கள். உடல் சோர்வு உங்களை விட்டு ஓடிப்போகும் அளவிற்கு, சுறுசுறுப்பை உங்களின் உள்ளே நுழைய அனுமதியுங்கள்.

மனத்தின் விருப்பப்படி நமக்கு வரும் மந்தத்தன்மையின்படி உடலை மந்தமாய்ச் சோம்பி உட்கார்ந்து இருக்கவிடாமல், ஏதாவது ஒரு வேலையை தொடர்ந்து செய்யுங்கள்.

அப்போதெல்லாம் விழிப்புணர்வை முழுமையாக எடுத்து வாருங்கள். “எனக்குச் சக்தி குறை இருப்பதாகக் கருதுகிறேன் என்று பேச இனி நேரமில்லை,” என்னுமளவுக்குச் ச க்தி பொங்க ஆரம்பிப்பதைக் காண்பீர்கள்.

பெண் மனம் ஆழமா?

Is the mind of woman deep?

4.பெண்களின் மனத்தைப் புரிந்து கொள்ளமுடியுமா?

-யோகேஸ்வர், சேலம்.

மனம் என்றாலே புரிந்து கொள்ளமுடியாது.

இதில் பெண்கள், ஆண்கள் என்று பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை. அப்படிப் பிரித்துப் பார்த்தாலும் பயன் எதுவுமில்லை.

ஆண்கள் மனத்தை மட்டும் புரிந்துகொள்ளமுடியுமா என்ன?

இன்னொரு முக்கியமான உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். அடுத்தவர்களுடைய மனத்தைப் புரிந்துகொள்ள துடிப்பவர்கள் எல்லோருமே, தங்களுடைய மனத்தை புரிந்து கொள்ளமுடியாமல் தவிப்பவர்கள் தான்.

இல்லாவிட்டால் தலைக்கு மேல் ஆயிரம் வேலையிருக்கும்போது, பெண்கள் மனத்தை புரிந்துகொள்ள முடியுமா, முடியாதா என்ற பட்டிமன்றம் நடத்துவார்களா? கவிதைகள் கதைப்பார்களா? தேவையற்ற விவாதங்களில் இருந்து விடுபடுங்கள். அதுவே போதுமானது.

சங்கரரின் சீடர்கள் குடித்தார்களா?

Did Shankara`s disciples drink?

5. சங்கரரைப் பார்த்த சீடர்களும் ஒருமுறை கள் குடித்தார்களாமே?, இது குருவே சீடர்களுக்குச் செய்யும் துரோகம் இல்லையா?

  • பாலக்குமார், தனுஷ்கோடி

உங்களுக்கு அந்த நிகழ்ச்சிப்பற்றிப் பாதிதான் தெரிந்திருக்கிறது என்பது உங்கள் கேள்வியிலேயே தெரிகிறது.

ஆதி சங்கரர் ஒரு முறை பாதயாத்திரை சென்று கொண்டிருந்தார். அவருக்குத் திடீரென்று தாகம் எடுத்தது. அவர் எல்லாம் கடந்த ஞானி. அவர் உடல் உணர்வே இல்லாத ஞானி.

அவருடைய உடலுக்குத்தான் தாகம் எடுத்தது. சுற்றிலும் பார்த்தார். அங்குக் 'கள்' இறக்கும் ஒரு தோப்பு இருந்தது. அங்கு ஒருசிலர் அப்போது தங்கள் பானையில் கள்ளை இறக்கிக் கொண்டிருந்தார்கள்.

சங்கரர் "அப்பா! தாகமாக இருக்கிறது.. ஏதாவது, இருந்தால் கொடுங்கள்," என்று கேட்டார். அதற்கு அவர்கள் "சாமி! 'கள்' மட்டும்தான் இருக்கிறது," என்று சொன்னார்கள்.

அதற்கு அவர், "அதனால் என்னப்பா தாகத்திற்கு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை," என்று சொல்லி, தம் தாகம் தீர அவர்கள் கொடுத்த ஒரு பானை 'கள்'ளையும் குடித்துவிட்டார்.

இவர் கள்ளைக் குடித்த உடனே, நம்மில் பல பேருக்குத் தோன்றுவதைப் போலவே அவருடைய சீடர்களுக்கும் தோன்றியது.

"ஆஹா! சங்கரரே கள் குடித்தார். நமக்கு என்ன? நாமும் குடிக்கலாம்," என்று எல்லோரும் குடிக்க ஆரம்பித்தார்கள். ஆனால், சங்கரர் ஒரு பானை கள் குடித்தும் தடுமாறாமல், மனம் மாறாமல் தெளிவாக நடந்து சென்றார்.

ஆனால் சீடர்கள் குடித்த பிறகு, தடுமாற ஆரம்பித்தார்கள். முறை தவறி நடக்க ஆரம்பித்தார்கள்.

சங்கரர் அவர்களுக்கு அறிவுரை சொல்லவில்லை. சிரித்துக் கொண்டே நடந்தார். கொஞ்ச தூரம் நடந்ததும் மாலைபொழுது வந்தது.

மீண்டும் சங்கரருக்குத் தாகம் எடுத்தது.

அந்த இடத்தைச் சுற்றி நோக்கினார்.

அங்கு ஒரு கொல்லர் இரும்பு உலைக்களம் வைத்திருந்தார். அங்கு அவர் இரும்பை உருக்கிக் கொண்டு இருந்தார்.

சங்கரர் அவர் பக்கத்தில் சென்றார். "அப்பா! தாகமாக இருக்கிறது," என்று சொன்னார்.

அதற்கு அந்தக் கொல்லர், "இரும்பை உருக்கிக் வைத்திருக்கும் இரும்பின் ரசம்தான் என்னிடம் இருக்கிறது....தண்ணீர் இல்லை," என்று சொன்னார்..

உடனே சங்கரர், இரும்பை உருக்கி வைத்திருந்த பாத்திரத்தை எடுத்து, காய்ச்சிய இரும்பைத் தண்ணீர்போல் குடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இதைப் பார்த்த சீடர்கள் திகைத்தார்கள். இப்போது அவர்களால் அதை செய்ய முடியாது. சங்கரர் குடித்தார் நாங்களும் குடித்தோம் என்ற அவர்களின் வாதம் உடைந்தது. தலைகவிழ்ந்து, நிஜம் புரிந்து, உண்மையை உணர்ந்து நின்றார்கள்.

ஞானி சொல்வதைச் செய்யுங்கள், செய்வதைச் செய்யாதீர்கள்.