KAILASA Library/ஜீவன் முக்தி/நிஜமான சாதனை உயர்ந்த உணர்வு நிலையை அடைவதேSign in
ஜீவன் முக்தி

நிஜமான சாதனை உயர்ந்த உணர்வு நிலையை அடைவதே

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Real achievement is attaining the state of superconsciousness

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், அந்தம்மாவின் மொத்த சொத்துமே ஐம்பதாயிரம் ரூபாய்க்கும் குறைவு.

என்ன பெரிய அந்தஸ்த்தில் வாழ்ந்தார்கள் என்று கேட்டால் அவர்களின் அந்தஸ்த்தில் குறைவுதான்.

ஆனால் அவர்கள் நிலைப்பாடு மிக உயர்ந்தது. அந்தஸ்த்திற்கும் (status), நிலைக்கும் (state) இருக்கிற மிகப் பெரிய வித்தியாசம் பற்றிப் புரிந்துகொள்ளுங்கள்.

அவர்களிடம் அந்தஸ்து என்று ஒன்றுமே கிடையாது. மொத்தச் சொத்துமே ஒரு பசுமாடு, ஒரு குடிசை. அவ்வளவுதான்.

என்றாவது ஒருநாள் அந்தப் பசுமாடும் இறந்துவிட்டால், வாழ்க்கையே முடிந்து போயிற்று. வேறு ஒன்றும் கிடையாது. துணைக்கும் யாரும் கிடையாது.

ஆனால் அவர்கள் வாழ்ந்த நிலை, வாழ்ந்த ஆனந்த நிலை, ஆனந்த பூரிப்பு, ஆனந்த வாழ்க்கை, சொல்லொணாத பூரிப்பு அளவிட முடியாதது.

அவர்கள் அந்தஸ்த்தில் ஒன்றுமில்லாமல் இருந்தாலும், அவர்கள் வாழ்ந்த நிலை ஒப்பிடமுடியாதது.

நன்கு ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள். அந்த அம்மா பெரிய அந்தஸ்தின் உச்சத்தில் வாழவில்லை என்றாலும், பெரிய நிலைப்பாட்டில் வாழ்ந்துவந்தார்கள்.

நிஜமான சாதனை என்னவெனில் உச்சமான நிலையில் வாழ்வதுதான்.

அதற்காக இப்போது, நான் உங்களை எல்லாம் “உங்களின் செல்வத்தை துறந்து விடுங்கள்,” என்று சொல்லவில்லை. “செல்வத்தை வைத்திருப்பது தவறு, அந்த அம்மாவைப்போல் ஒரு குடிசையில் ஒரே ஒரு பசுமாடு வைத்துக்கொண்டு வாழ ஆரம்பித்து விடுங்கள்,” என்றும் சொல்லவில்லை.

“ஆனால் அந்த அம்மா வாழ்ந்த அந்த உயர்ந்த நிலையில் நிச்சயம் வாழுங்கள்” என்று சொல்ல வருகிறேன்.

நீங்கள் அந்தஸ்த்தில் எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால் அந்த அம்மாவைப் போன்று உயர்ந்த உணர்வு நிலையில் வாழ்ந்தீர்கள் என்றால் வாழ்க்கையிலே நிஜமான சாதனையை அடைவீர்கள்.

உள்ளார்ந்த இரகசியத்தை உணர்வீர்கள்.

பல உள்ளார்ந்த இரகசியங்களை யதார்த்தமாக உணரும் ஆற்றலை பெறுவீர்கள்.

அந்தரங்கம்

கேள்வி - பதில்

Portrait

[?]

அந்தத் தவறு மன்னிக்கப்படுமா?

will that mistake be forgiven?

1. என் வயது 32. இளம் வயதில் செய்த ஒரு தவறு, என்னை இன்றளவும் வாட்டிக் கொண்டிருக்கிறது. பாவியான என்னைக் கடவுள் மன்னிப்பாரா?-ரோகிணி சென்னை.

கடவுள் மன்னிப்பது

ஒருபுறம் இருக்கட்டும்.

உங்களை நீங்கள் மன்னித்துவிட்டீர்களா?

நீங்கள் உங்களை மன்னிக்காதவரை, கடவுளே உங்களை மன்னித்தாலும், அதனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.

செய்த தவறை விட, அந்தத் தவறையே மீண்டும் மீண்டும் மனத்தில் நினைத்துக் கொண்டிருப்பதுதான் பெரிய தவறு.

ஒவ்வொரு முறையும்

நீங்கள் அந்தத் தவற்றை மனத்தில் Replay செய்யும்போது,

அதே தவறை மீண்டும் ஒருமுறை செய்வீர்கள். ‘‘கடவுள் மன்னிப்பாரா? என சாக்குப் போக்குச் சொல்லி பழைய தவறை அசைபோட்டு சுகம் காணும் மனச்செயலுக்கு, இன்றே முற்றுப்புள்ளி வையுங்கள்.

முதலில் உங்களை மன்னியுங்கள்

கடவுள் உங்களை ஏற்கெனவே மன்னித்துவிட்டார்.