செல்வத்தையே ஈர்க்கும் இரகசியம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஆனந்தம் செல்வத்தை ஈர்க்கும். இது ஒரு அற்புதமான தலைப்பு. இந்தத் தலைப்பை நான் சொல்லும் போதே சீடர் ஒருவர், கேட்டார்."செல்வம் ஆனந்தத்தை ஈர்க்கும் அது புரிகிறது, ஆனால் ஆனந்தம் எப்படிச் செல்வத்தை ஈர்க்கும்?
பொதுவாக ஆனந்தம் செல்வத்தைச் செலவுதானே செய்கிறது. செல்வத்தைச் செலவு செய்த பிறகுதானே ஆனந்தம் நமக்குக் கிடைக்கிறது. அப்போது எப்படி ஆனந்தம் செல்வத்தை ஈர்க்கும்?"
சீடர் கேட்ட கேள்வி, அவருக்குள் மட்டுமல்ல, அது ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்ற கேள்வி. செல்வம் ஆனந்தத்தை ஈர்க்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் ஆனந்தம் செல்வத்தை ஈர்க்கும் என்பது சற்று ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு சத்தியம். சற்று ஆழ்ந்து பார்த்தால் அது சத்யம் மட்டுமல்ல. அது சாத்யம் என்பதும் புரியவரும்.
நமக்குள் ஆழ்ந்துப் பார்த்தால் மட்டுமே நம்மால் உணர்ந்துக் கொள்ள இயலும்.
செல்வத்தை ஈர்க்கும் யுக்தி-1
ஆனந்தம் செல்வத்தை ஈர்க்கும்
Bliss attracts wealth
ஆனந்தம் செல்வத்தை ஈர்க்கும் என்பதை நேரடியாக, முறையாகப்புரிந்து கொள்வோமானால் ஆனந்தம் செல்வத்தை ஈர்க்கும்.
நமக்குள் ஆழ்ந்து பார்த்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடிகின்ற சத்தியம் இது. பதஞ்சலி முனிவர் இயற்றிய யோக சூத்திரத்திற்குச் சுவாமி விவேகானந்தர் உரை எழுதியுள்ளார். அதில், "நமது நாட்டில் இந்திய கலாச்சாரத்தில் மட்டும்தான் ஒருவர் எதையாவது செய்வதற்கு முன் செய்யும் முதல் வேலை, கண்களை மூடி அமர்ந்து தனக்குள் சில ச க்தி மாற்றங்களை முதலில் ஏற்படுத்திக்கொள்வது."
மற்ற நாடுகளில் எதையாவது சாதிக்க வேண்டும் என மனிதன் நினைத்தால், அவர் செய்கின்ற முதல்வேலை அதை சாதிப்பதற்கான தொழிலைத் தொடங்கி, அந்தத் துறையில் கல்வி கற்க ஆரம்பிப்பார். அந்தத் துறையில் ஏற்கெனவே அனுபவம் இருக்கின்ற முதியவர்களுடன் பழகத் தொடங்குவார்.
ஆனால் நமது நாட்டில் எந்தத் துறையில் முன்னேற வேண்டும் என்றாலும் முதலில் நாம் செய்கின்ற வேலை, கண்களை மூடி அமர்ந்து இறைவனைத் தியானித்தல், பூஜை செய்தல். எந்தத் துறையாக இருந்தாலும், எந்த வேலையாக இருந்தாலும், நாம் செய்கின்ற முதல் வேலை இதுதான்.
நடக்கும் சக்தி
மாற்றங்களை நாம்
தெளிவாக்கும்
பொழுதே,
சுற்றி இருக்கும்
இயற்கையின் சக்தி
மாற்றமும் தானாகவே
தெளிவாகிறது.
புதுமனை புகுவிழாவானாலும், இல்லறத்தில் நுழைவதாக இருந்தாலும் அல்லது புதிய வியாபாரத்தைத் துவங்குவதாக இருந்தாலும், எதைச் செய்தாலும் மக்கள் செய்யும் முதல் வேலை கண்களை மூடி அமர்ந்து தனக்குள் சில சக்தி மாற்றங்களை ஏற்படுத்துவதுதான்.
காலப்போக்கில்தான் அவை சடங்குகளாக மாறிவிட்டன. எந்தச் செயலை செய்வதற்கு முன்பும் நாம் செய்கின்ற முதன்மையான விஷயம், நன்றாக அமர்ந்து நமக்குள் ஒரு புதிய சக்தியை உருவாக்குவதுதான்.
தியானத்தின் மூலமாகவோ, பிராணாயாமத்தின் மூலமாகவோ, பிரார்த்தனை மூலமாகவோ புதிய சக்தியை உருவாக்குகிறோம்.
"தனக்குள் ஏற்படுகின்ற சக்தி மாற்றம் வெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் பாதிக்கும் என்பது தெரிந்ததால்தான், இந்திய நாட்டின் கலாச்சாரத்தில் முதல் வேலையாக எதைச் செய்யத் துவங்கும் முன்பும் தங்களுக்குள் சக்தி மாற்றத்தைத் உருவாக்குகிறார்கள்," என விவேகானந்தர் சொல்கிறார்.
செல்வத்தை ஈர்க்கும் யுக்தி-2
தியானம் செய்தால் மழைவருமா?
Bliss attracts wealth
ஒரு அழகான ஜென் ஞானியின் கதை.
ஒருநாட்டில் நீண்ட காலமாக மழை பெய்யவில்லை. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேல் மழை பெய்யாத ஒரு இடம். அப்போது பக்கத்து நாட்டில் வசிக்கின்ற ஒரு ஜென் ஞானியைப் பற்றிய செய்தி அந்த நாட்டிற்குள் பரவியது.
அந்த ஞானி இங்கு வந்தால் மழை பொழியும் என்கின்ற கருத்து பரவியது.
மக்கள் எல்லோரும் அரசரிடம் சென்று பக்கத்து நாட்டில் இருக்கும் ஞானியை அழைத்துவர வேண்டினர்.
அரசரும் பக்கத்து நாட்டிற்குச் சென்று ஞானியை அழைத்தார். ஞானியும் அழைப்பை
ஏற்று வர ஒப்புக்கொண்டார். ஞானி அந்த ஊருக்குள் வந்து ஒரு அரைமணி நேரம் தியானம் செய்தார். தியானம் செய்து முடிந்தவுடன் மழை பொழிய ஆரம்பித்தது.
மழை ஊரையே நிரப்பியது. நன்றி வெள்ளத்தில் மக்கள் அந்த ஞானியை சூழ்ந்து கொண்டு எப்படி மழையை வரவழைத்தீர்கள்? என்ன மந்திரம் செய்தீர்கள்? என்ன மாயம் செய்தீர்கள்? உங்களால் எப்படி மழையை வரவழைக்க முடிந்தது? இயற்கையையே ஆளும் கடவுளா நீங்கள்?'' என்றெல்லாம் கேட்க துவங்கினார்கள்.
ஞானி மிக அழகாகச் சொன்னார்.
"இயற்கையை
ஆளும் கடவுள்
நான் அல்ல.
மழையை வரவழைக்கவோ, செல்ல வைக்கவோ எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்த விஷயம் ஒன்றே ஒன்று மட்டும்தான். எனக்குள் நடக்கும் சக்தி ஓட்டத்தை என்னால் சமச்சீராக்க முடியும்.
எனக்குள் நடக்கும் சக்தி ஓட்டத்தை என்னால் முழுமையாக்க முடியும். நான் இயற்கையை கட்டுப்படுத்தும் கடவுள் அல்ல. எனக்குள் நடக்கும் சக்தி மாற்றங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் ஞானி.
எனக்குள் நடக்கும் சக்தி மாற்றங்களை நான் தெளிவாக்கும் போதே சுற்றி இருக்கும் இயற்கையின் சக்தி மாற்றமும் தானாகவே தெளிவாகிறது," என்று பதில் சொன்னார். நாம் ஒரு தனித்தீவு அல்ல. நமக்குள் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் நேரடியாகப் பிரபஞ்சத்தைப் பாதிக்கிறது. நேரடியாகப் பிரபஞ்சத்தில் மாற்றத்தை உண்டாக்குகிறது.
அதனால்தான் அந்த ஜென் ஞானி தமக்குள் இருக்கும் சக்தியை சமச்சீராக்கும் பொழுது, இயற்கையான இந்தப் பிரபஞ்ச சக்தியும் சமச்சீராகி இயற்கையிலேயே இந்த வானம் பொழியத் துவங்குகிறது. ஆகாயம் பூமியை வாழ்த்தத் துவங்கிவிட்டது.
அந்த ஜென் ஞானி இன்னும் ஆழமாக விளக்குகிறார்.
"இந்த இடத்தில் வந்து அமர்ந்தவுடன் என் மனத்திற்குள் ஏற்பட்ட எண்ணங் களையும் எண்ண ஓட்டங்களையும் அமைதியாக்கி, ஆழ்ந்த அமைதிக்குள் எடுத்துச்சென்று உடலுக்கும் எனக்கும் நடுவில் ஒரு இனிமையான, அன்பான, ஆனந்தமான ஒரு தொடர்பை ஏற்படுத்தினேன்.
அவ்வாறு ஏற்படுத்திய அந்த இனிமையான உணர்வு, ஆனந்தமான உணர்வு, உடலில் மட்டும் உடலோடு மட்டும் நின்று விடாமல் இந்தப் பிரபஞ்சத்தில் உலகத்திற்குள்ளும் பாய்ந்து இந்த இயற்கையையும் சமச்சீராக்கியது," என்றார்.
உணர்வுகளைச் சக்தியோட்டத்தை மாற்றுவதால் மழை வர வைப்பது மட்டுமல்ல, நாட்டை வளமாக்குவது மட்டுமல்ல உங்களையே வளமாக்குவது சாத்தியம்.

பணத் திவாலைவிட மோசமானது சக்தித் திவால்
Energy-ruptcy is more dangerous than bank ruptcy
எண்ணங்கள் பணத்திற்குச் சமம். உங்களுடைய மனோ சக்தி பணத்திற்குச் சமம்.
எப்படிப் பணத்தை அனாவசியமாக, ஊதாரித்தனமாகச் செலவு செய்தால் பணரீதியாகத் திவால் ஆகிறோமோ, அதே மாதிரி நம்முடைய சக்தியை ஊதாரித் தனமாகச் செலவு செய்தால் சக்தி ரீதியாகத் திவால் ஆகிவிடுவீர்கள்.
பண ரீதியான திவால் எப்படி வாழ்க்கையில் நடக்கின்றதோ அதுபோலவேதான் சக்தி ரீதியான திவால் (energyrupcy) நடக்கிறது.
சக்திரீதியான திவால், பண ரீதியான திவாலை விட மோசமானது.
பணம் திவாலானால், முதலுக்குத்தான் மோசம்.
சக்தித் திவாலானால், உங்களுக்கே மோசம்.
சக்தித் திவாலாகிக் கொண்டிருக்கும் ஒருவரால் பணத்தை ஈர்க்க முடியாது.
யாராவது உங்களுக்கு 1000 ரூபாய் பெறுமானமுள்ள வேலை செய்தால் ஆயிரம் ரூபாய் அவருக்குச் சம்பளமாய்க் கொடுப்போம். புத்திசாலியாக இருந்தால் 900 ரூபாய் சம்பளமாகக் கொடுப்போம். உண்மையிலேயே சரியான சம்பளம் அளிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் 1000 ரூபாய் சம்பளம் கொடுப்போம்.
இது நம்முடைய மனப் பழக்கம். ஆனால் அதே மனிதர் 1000 ரூபாய் பெறுமானமுள்ள ஒரு தவறை செய்துவிட்டாரானால் எந்த அளவிற்குக் கோபத்தை அவர்மேல் கொட்டுவோம். 10000 ரூபாய் பெறுமானமுள்ள கோபத்தையாவது அவர்மேல் கொட்டுவோம். அவர்மேல் விழுந்து என்னென்ன முடியுமோ அத்துணையையும் செய்துவிடுவோம்.
எப்படி 1000 ரூபாய் வேலை செய்தவருக்கு 10000 ரூபாய் பணம் கொடுத்தால் நீங்கள் திவால் ஆகுவீர்களோ, அதே மாதிரி 1000 ரூபாய் தவறு செய்தவருக்கு 10000 ரூபாய் கோபத்தைப் பொழிந்தீர்களானால் சக்தி ரீதியாகத் திவால் ஆகிவிடுவீர்கள்.
உங்களுக்குள் இருக்கின்ற கோபம், காமம், ஆவேசம், எல்லாமே சக்தி. அதை முறையாக உபயோகித்தோமானால் வாழ்க்கையிலே பொருள் வளமோ, சுகமோ அடைந்து இனிமையாக வாழ்க்கையை நடத்தலாம்.
அப்படியில்லாமல் முறை தவறி தேவையில்லாத இடங்களில் பொழிவது, வீணடிப்பது என்று செய்ய ஆரம்பித்தோமானால், இயற்கையிலேயே உங்களின் சக்தித் திவால் ஆகிவிடும். அப்புறம் செலவு செய்வதற்குச் சக்தி இருக்காது. இயற்கையாகப் பணம் திவாலாவதுபோல் சக்தியும் திவாலாகிவிடும்.
இந்தச் சக்தித் திவாலை சரி செய்ய முடியும். உள்ளுலக செல்வத்தை அதிகரிப்பதால் மட்டுமே வெளியுலக செல்வத்தை அதிகரிக்க முடியும்.
நம்முடைய எண்ண ஓட்டங்களும், மன ஓட்டங்களும் தெளிந்த ஒரு பாதையை நோக்கிச் செல்லும்போது இந்த ஆன்மீகக் கருத்துகளை, வாழ்வியல் தீர்விற்கான கருத்துகளை உள்வாங்கும்போது சக்தி விரயம் ஆவது தவிர்க்கப்படுகிறது.
பலமுறை நம் பக்தர்கள் மீண்டும், மீண்டும் வந்து சொல்வதுண்டு, "உண்மையிலேயே தியானம் செய்ய ஆரம்பித்த பிறகு 6 மாதத்தில் என்னுடைய வியாபாரம் மிகப்பெரிய வளர்ச்சிக்குவந்து விட்டது. இது என்ன மந்திரம்? இது என்ன மாயத்தினால் இப்படி இது நடக்கிறது?"
எந்த மந்திரமும் மாயையும் இல்லை. உங்களுக்குள்ளே தெளிவு வரும்பொழுது செல்வத்தை ஈர்ப்பதற்கும், அனுபவிப்பதற்கும் என்னென்ன குணங்கள் வேண்டுமோ அத்துணையும் உங்களுக்குள் வளரத் துவங்குகிறது.
உள்ளுலக செல்வம் அதிகரிக்கும்போது நடக்கும் முதல் விஷயம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் செல்வத்தை ஈர்க்கவும் அனுபவிக்கவும் உடலும், மனமும் தயாராகிறது.
இரண்டாவது உங்களுக்குள் உருவாகின்ற ஆனந்த சக்தி. அது படர்க்கையிலும், தன்மையிலும், முன்னிலையிலும் எதிரொலிக்கும் பொழுது, உங்களின் உடலும், மனமும் தயாராகிறது.
படர்க்கையில் அது பரவும் பொழுது உங்கள் வாழ்க்கையில் எதுவெல்லாம் வேண்டுமென்று நினைக்கிறீர்களோ, அதே மாதிரியான நிகழ்ச்சிகளையும் அதற்கு ஏற்றார்போல் நபர்களையும் உங்களை நோக்கி ஈர்க்கும். இதைதான் ஆனந்தம் செல்வத்தை ஈர்க்கும் என்று சொல்கிறோம்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் வங்கியில் பணத்தைச் சேமித்து வைப்பதுபோல மனத்தில், உணர்வில் சக்தியைச் சேமிக்க வேண்டும். ஆனந்தத்தை உள்ளுலக செல்வத்தை ஏதாவது ஒரு வகையில் அதிகரித்தால், வெளியுலக செல்வம் தன்னால் ஈர்க்கப்படும் .
இது ஏதோ ஒரு கருத்து என்று நினைத்து விட்டுவிடாதீர்கள். என் வாழ்க்கையில் நான் கண்ட அனுபவம் ...
ஆனந்தம் செல்வத்தை ஈர்க்கும். உங்களின் துக்கம்தான் நஷ்டத்தை ஈர்க்கும்.
துக்கத்தை, ஆனந்தமாக்கினாலே செல்வத்தை அது ஈர்க்கும்.
எனவேதான் சொல்வோம், பணத்தைக்கூட இழக்கலாம், ஆனால் ஆனந்தத்தை எக்காரணம் முன்னிட்டும் இழக்கக்கூடாது.
செல்வத்தை ஈர்க்கும் குணங்கள்
Qualities that attract wealth
இந்த ஆனந்த சக்தி செல்வத்தை உருவாக்கக்கூடிய உடல் நிலையையும், மனநிலையையும் ஏற்படுத்தும்.
செல்வத்தை உருவாக்குவது மட்டுமில்லை, அதைப் பாதுகாத்து வைப்பதும் அவசியம் .
பொதுவாகவே செல்வம் இல்லாதபொழுது வறுமை என்கின்ற பிரச்சினையையும், அது வந்த பின்பு காப்பாற்ற வேண்டுமே என்ற பயத்தையும் கொடுத்துக்கொண்டே இருக்கும்.
செல்வத்தைச் சரியாக கையாளத் தெரியவில்லை என்றால், பக்குவம் இல்லையென்றால் வருவதற்கு முன் ஆசையையும், வந்த பின்பு அச்சத்தையும் கொடுக்கும்.
வருவதற்கு முன்பு ஆசை, "வேண்டுமே வேண்டுமே," என்றும், வந்துவிட்டதென்றால், "ஐயோ காப்பாற்ற வேண்டுமே," என்ற அச்சமும் ஏற்படும்.
> செல்வத்தை
> உருவாக்குவது
> மட்டுமல்ல
> அதைப் பாதுகாத்து
> வைப்பதும்
> அவசியம்.
செல்வத்தை ஈர்ப்பதற்கு மட்டுமல்ல அதைக் காப்பதற்கும், அனுபவிப்பதற்கும் ஆனந்தம் தேவை. ஆனந்தமயமான மன அமைப்பு தேவை.
செல்வத்தை ஈர்க்கும் இரகசியத்தை ஐந்து சூத்திரங்களாக வழங்குகிறோம். நம்முடைய எண்ணங்களுக்கு மிகப் பெரிய சக்தியுண்டு. அதற்கு நம்மையும், நம்மை சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் மாற்றும் சக்தியுண்டு.
தன்மை (உங்களையும்), முன்னிலை (உங்கள் முன் இருப்பதையும்), படர்க்கையையும் (உங்களை சுற்றியிருக்கும் உலகத்தையும்) என மூன்று நிலைகளையும் மாற்றும் ஆற்றல் உடையது. உங்களின் எண்ணங்கள்.
முதலாவது : நம்முடைய எதிர்மறை எண்ணங்கள் எல்லாவற்றையுமே பாதிக்கிறது.
இரண்டாவது : நம்முடைய எண்ணங்களும், நம்பிக்கைகளும் நேர்மையானதாக இருந்தால், தன்மை, முன்னிலை, படர்க்கை மூன்றுமே இனிமையானதாகவும், செல்வத்தை ஈர்க்கவும், காக்கவும் செய்கின்ற சக்தியோடு மலர்கின்றன.
மூன்றாவது : நம்முடைய நம்பிக்கைகளும் எண்ண அமைப்பும், எதிர்மறையானதாக இருக்குமானால் தன்மை, முன்னிலை, படர்க்கை என்கின்ற மூன்று நிலைகளிலும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி இயற்கைச் சீற்றங்களுக்கும் அவையே காரணமாகி விடுகின்றன.
நான்காவது : நம்முடைய எண்ண ஓட்டத்திற்குத் தகுந்தாற்போன்ற வேதனை
தரக்கூடிய அல்லது ஆனந்தத்தைத்
தரக்கூடிய நபர்களையும், நிகழ்ச்சிகளையும்
நாம் ஈர்க்கிறோம்.
ஐந்தாவது: தியானம் நம்முடைய எண்ண
ஒட்டத்தையும், மன ஒட்டத்தையும் மாற்றி
ஆனந்தத்தை உருவாக்கி, ஆனந்தமான
சூழ்நிலைகளை நம்முடைய வாழ்க்கையில்
ஈர்த்துக் கொண்டே இருக்கும்.
ஜீவன் முக்தராக வாழ்வதும், அதற்காக உழைப்பதுமே உங்களின் உழைப்பால் மட்டுமே நீங்கள் தொடுவதைத் தாண்டிய செல்வ நிலைக்கு உங்களை அழைத்துச் செல்லும்.
> செல்வத்தை ஈர்க்கும்
> இரகசியத்தையும் ஐந்து
> சூத்திரங்களான வழங்குகிறோம்
> நம்முடைய எண்ணங்களுக்கு
> மிகப் பெரிய சக்தியுண்டு
> அதற்கு நம்மையும்
> நம்மைச் சுற்றியிருக்கும்
> எல்லாவற்றையும் மாற்றும்
> சக்தியுண்டு.