KAILASA Library/ஜீவன் முக்தி/உள்ளார்ந்த ரகசியம்Sign in
ஜீவன் முக்தி

உள்ளார்ந்த ரகசியம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

எல்லா இரகசிய முடிச்சுகளையும் அவிழ்ப்பதே ஜீவன் முக்தி.

❖ கர்ம சக்கர இரகசியங்கள்

g]u Pº©zøu G›US® §øá

Puja that burns the sanchita karma

P© ÂøÚPøÍ G›US® ÂȨ¦nÖÄ

Awareness that burns the karmic actions

¤uõµ¨uzøu ÁõÕÇa öŒ#x E[PøÍz y#ø©£kzx® S¸ §øá

Guru Puja - that makes you live your prarabdha karma and purifies you

P©ÂøÚ¨ £vÄPøÍ G›US® EÒÁõ[S® ußø©The internalising quality that burns the impressions of karmic actions

£øÇ¯ Pº©¨ £vÄPøÍ G›US® ©ÖÁõúÄ

A new life devoid of old karmic impressions

கர்ம ஜனன இரகசியம்

Ákzu Ehø»z ÷uºÄ öŒ#Áx G¨£i?

How to choose the next body?

ÂȨ¦ aS ©µn®

Conscious death

ÂȨ¦ aS áÚÚ®

Conscious birth

செல்வத்தையே ஈர்க்கும் இரகசியம்

BÚµu® öŒÀÁzøu DºUS®

Bliss attracts wealth

ஜீவன் முக்தி

õÚº öŒ#uõÀ ©øÇÁ¸©õ? Will doing meditation bring rain?

£n vÁõø»Â ÷©õ ©õÚx Uvz vÁõÀ Energy-ruptcy is more dangerous than bankruptcy

öŒÀÁzøu DºUS® Sn[PÒ Qualities that attract wealth

உணர்ச்சிகளின் இரகசியம்

Q›Á»zvÀ PÊøu¨ ¦¼PÒ Hyenas while circumambulating the mountain

Eº°a]PÒ Gߣx
¯õ? uÁÓõ?
Emotions are right or wrong?

நெருக்கம் அதிகரிக்கும் இரகசியம்

Eº°a] öPõ¢uÀ¨ ¦PÒ Emotional turmoil

Eh¼ß µõŒõ¯Ú ©øØÓ[PÐUS® Eº°ÄUS® ÷|µi öuõhº Esk Chemical changes in the body have a direct relation to your consciousness

பகுத்தறிவைத் தாண்டிய இரகசியங்கள்

CøÁß J¸ CµP]¨ ö£õ¸ÍÀ» God is not a secret thing

£mhÔÄ Â»QUõÀ CøÁøÚ¨ £õºUP»õ® If the intellect gives away, you can see God

{á©õÚ ŒõuøÚ E¯º¢u Eº°Ä {ø»ø¯ AøhÁ÷u Real achievement is attaining the state of superconsciousness

தொழில் இரகசியம்

தொழில் இரகசியம்

□ தெரிந்துவிட்டால்
அன்றிலிருந்து
அவர்
தொழிலாளி அல்ல
முதலாளி.

□ தொழில் இரகசியம்
தெரியும் வரைதான்...
நீங்கள்
மனிதன்,
நான்
உங்களைப் படைத்த
கடவுள்!

□ என் தொழில் இரகசியம்
தெரிந்து கொள்வதை
நானே
ஊக்குவிக்கிறேன்.

நான் தேன்.
நீங்கள் சர்க்கரை பொம்மையாய்
பிறந்திருந்தாலும்
தைரியமாய்
என் தொழில் இரகசியம் அறிய
என்னை ஆராயலாம்.
"அப்படிச் செய்தால் ,
ஐய்யோ! கரைந்துவிடுவேனோ?"
என்று அஞ்ச அவசியமில்லை.

Nithyananda looking out of a car window

□ நீங்கள் கரைய கரைய
தேனாய்
நானாய்ப் பிறந்திருப்பீர்கள்.
ஜீவன் முக்தனாயிருப்பீர்கள்.

வாருங்கள்! எல்லாம் படைக்கலாம்.

இப்படிக்கு
இரகசியமாய் உங்களுள்
இருக்கும் இறைவன்!

உள்ளார்ந்த இரகசியம்

ஆசையின் இரகசியம்...!

Secret of desires

◆ நான் ஏன் பிறந்தேன் ?

ஆசைகளை அடைய.

◆ நான் ஏன் இரண்டுங்கெட்டானாய் வாழ்கிறேன் ? சில நேரம் வாழ விரும்புகிறேன், சில நேரம் வாழ்வையே வெறுக்கிறேன் ஏன் ?

இரண்டுக்கும் காரணம் ஒன்றுதான்.

◆ எது ?

ஆசைகள்.

◆ ஆசைகளா ?

ஆம்.

ஆசைகள் நிறைவேறும்போது வாழ்க்கையில் விருப்பங்கொள்வீர்கள்.

அவை நிறைவேறாதபோது வெறுப்பு கொள்வீர்கள்.

வாழ்வின் மூச்சு ஆசைகள்.

◆ பல நேரம் ஆசைகள் நிறைவேறிய பின்கூட திருப்தி வருவதில்லை. மாறாக ஆசைகளின் வீரியம்தான் அதிகமாகிறது. அதன் மீதான வெறிதான் கிளம்புகிறது. இது ஏன் ?

அப்படியென்றால்...

அவை ஆகாமிய ஆசைகள்.

◆ ஆகாமிய ஆசைகளென்றால் ?

இரண்டு பெரிய ஆசைகளுண்டு.

1.ஆகாமிய ஆசைகள்.

2.பிராரப்த ஆசைகள்.

◆ பிராரப்த ஆசைகளென்றால் ?

பிராரப்த ஆசைகள் என்றால், இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டும் என முடிவு செய்து நீங்கள் எடுத்து வந்த ஆசைகள்.

ஆகாமிய ஆசைகள் என்றால், இப்பிறவிக்கான ஆசைகளை அனுபவிக்கும்போது இந்தப் பிறவியில் புதிது புதிதாய் நமக்குள் நுழைந்து கொள்ளும் ஆசைகள்.

🔸இரண்டில் எது நல்லது? எது கெட்டது?

பிராரப்த ஆசைகள் நல்லது.

ஆகாமிய ஆசைகள் கெட்டது.

🔸ஆகாமிய ஆசைகள் கெட்டவையா?

ஆகாமிய ஆசைகள் மனம் சம்பந்தப்பட்டவை. மனத்தில் சொருகப்பட்டவை.

பிராரப்த ஆசைகள் உயிர் சம்பந்தப்பட்டவை. உயிரிலிருந்து வருபவை.

மனம்தான் மனிதனின் நோய்.

எனவேதான் ஆகாமிய ஆசைகள் திருப்தியைத் தருவதில்லை.

இப்படி எந்தெந்த ஆசைகள் உங்களுக்குள் வெறியை கிளப்புகின்றனவோ, அதிருப்தியை தருகின்றனவோ அவை ஆகாமிய ஆசைகள். புது ஆசைகள், புதிர் ஆசைகள்.

🔸பிராரப்த ஆசைகளை மட்டும் நல்ல ஆசைகள் என சொல்வதேன்?

உடலெடுக்கும் முன்பு உயிராய்த் திரிந்தபோது, உங்களோடு இருந்த ஆசைகளிலிருந்து வந்தவையே பிராரப்த ஆசைகள்.

அந்த ஆசைகள் நிறைவேறினால் உயிர் குளிரும். மனத்தின் சூடு தணியும். பிராரப்த ஆசைகள் தீர்ந்து போனால் முழுச் சுதந்திரமடைந்து விடுவீர்கள்.

பிறவிக் கடலிலிருந்து தப்பித்து விடுவீர்கள்.

🔸பிராரப்த ஆசைகளை அனுபவித்துத் தீர்த்துவிட்டால் முக்தியடைந்து விடுவேனா?

பிராரப்த ஆசைகளை அனுபவிக்கவே விடாத அளவுக்கு ஆகாமிய ஆசைகள் மனத்தில் அதிகமாகி விடுகின்றன.

அவற்றின் கொட்டத்தை நீங்கள் அகற்றாத வரை, பிராரப்த ஆசைகளைத் தொடக்கூட முடியாது.

🔸ஆகாமிய ஆசைகளை அகற்றுவது எப்படி?

அந்த ஆசைகளை அகற்றும் முறைதான் ‘நித்ய தியானம்’.

அகற்றும் கருவி ‘ஞானக் கருத்துகள்’.

🔸மனிதப் பிறவி பற்றிய ஆழமான இரகசியம் ஒன்றைச் சொல்லுங்கள்...

உபநிடத இரகசியம் ஒன்று...

"நீங்கள் பிறக்கவும் இல்லை

இறக்கவும் இல்லை"

✦அப்படியென்றால் முற்பிறவி, இப்பிறவி, மறுபிறவி என்பதெல்லாம்...

கடலில் எழும் அலைகள். அடுத்தடுத்து
பல தனித்தனி அலைகள் எழுந்தாலும் எந்த
அலையும் தனி அலை அல்ல.

அதேபோல் எந்தத் தனி மனிதரும் தனி அல்ல.

இறைசக்தியின் அலைகளே. அலை எழும்பும். பிறக்காது.

பிறக்காது என்பதால் இறப்பும் இல்லை.

இது இரண்டும் இல்லாத நிலையில்
இருப்பதால்தான் ‘உங்களின் ஜீவன் ஏற்கெனவே
முக்தியடைந்த ஜீவன்’ என இப்புத்தகத்தின்
முதல் அகவிதையில் குறிப்பிட்டிருந்தோம்.

Swamiji holding a book while speaking into a microphone

கர்ம சக்கர இரகசியங்கள்

Secrets of karmic cycle

✦ ஏன் ஒரே வீட்டில் பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒன்று புத்திசாலியாகவும், இன்னொன்று மண்டாகவும் இருக்கிறது?

✦ ஏன் சிலருக்கு மட்டும் அதிஷ்டம் கொட்டுகிறது?

✦ ஏன் சிலர் கை வைக்கும் காரியம் மட்டும் விளங்குவதில்லை?

✦ ஏன் சிலருக்கு மாத்திரம் எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதபோதுகூட பெரிய, பெரிய நோய்கள் வருகின்றன?

இந்த எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில் ‘கர்மா’, ‘சம்ஸ்காரங்கள்’ என்பதே. திருப்தி அடையாத ஆசைகளும், முழுமையாக அனுபவிக்கப்படாத அனுபவங்களும் சேர்ந்ததுதான் ‘கர்மா’ அல்லது ‘கர்மவினை’ என்று அழைக்கப்படுகிறது.

ஆசை நிராசையால் உந்தப்பட்டு, நிராசையிலேயே முடிவதால்தான் மீண்டும் மீண்டும் ஆசை உருவாகிறது. கர்மச்சக்கரம் தொடர்கிறது.

கர்மவினைகள் பற்றியும், கர்மச் சக்கரம் பற்றியும் இப்போது பார்ப்போம்

மூன்று வகையான கர்மவினைகள் :

1. சஞ்சித கர்மம்: (Sanchita Karma)

> ஆசை நிராசையால்
> உந்தப்பட்டு
> நிராசையிலேயே
> முடிவதால்தான்
> மீண்டும் மீண்டும்
> ஆசை உருவாகிறது.

பரம்பரை பரம்பரையாக உங்கள் மூதாதையர்கள் சேமித்து வைத்த கோடிக் கணக்கான பணத்தைப் பார்த்து....

“இல்லை! இது எனக்கு வேண்டாம்.

நான் இப்பொழுது எவ்வளவு சம்பாதித்திருக்கிறேனோ அதுமட்டும்தான் எனக்குச் சொந்தம். அது மட்டும்தான் என்னுடையது. மற்ற எல்லாவற்றையும் ஊர் மக்களுக்குத் தானமாக கொடுத்து விடுங்கள்,” என்று பணத்தைப் பொருட்படுத்தாமல் இருப்பவர்கள் யாராவது இருக்கிறார்களா?

நிச்சயம் பணத்தை, “வேண்டாம்!” என்று சொல்லமாட்டோம் தானே?

அதை மிகவும் பத்திரமாக எங்கு வைத்திருப்போம்? வங்கியின் சேமிப்புப் பகுதியில் வரவு வைத்திருப்போம்.

அதுபோல் முதன்முதலாக இப்பூமியில் ஒரு செல் உயிரினமாகத் தோன்றியது முதற்கொண்டு அடுத்தடுத்து எடுத்த எல்லாப் பிறவிகளிலும் நீ ங்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைத்த கர்மவினைகளின் தொகுப்பும், பரம்பரை சொத்து போன்று உங்களுடன் ஒவ்வொரு ஜென்மத்திலும் வருகிறது. அதைத்தான் சஞ்சித கர்மம் என்று சொல்வோம்.

விழிப்புணர்வின்றி நாம்
வாழ்க்கையைச் செலவு
செய்யும்போதெல்லாம்
கர்மச்சுமை அதிகரிக்கத்
துவங்கிவிடும்.

ஊதாரித்தனமாகப் பணத்தைச் செலவு செய்தால் பணம் செலவாகிவிடும்.

ஆனால் விழிப்புணர்வின்றி நாம் வாழ்க்கையைச் செலவு செய்யும் போதெல்லாம் கர்ம வினைகள் வரவாகி வந்து சேரும். கர்மச்சுமை அதிகரிக்கத் துவங்கிவிடும்.

2. பிராரப்த கர்மம்: (Prarabdha karma)

உங்களுடைய பெயரில் எவ்வளவு பணம் வங்கியில் இருக்கிறது என்று உங்களாலேயே கணக்கு வைத்துக்கொள்ள முடியாத அளவு பெருஞ்செல்வம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

அப்பொழுது 'ஒரு அருமையான சுற்றுலாப் பயணத்திற்குச் சென்றுவரலாம்' என்று முடிவெடுக்கிறீர்கள்.

ஒரு பூங்காவிற்குச் செல்ல வேண்டுமானால் வங்கியில் இருக்கும் மொத்தப் பணத்தையுமா எடுத்துக் கொண்டு போகப்போகிறோம், தேவையான அளவு பணத்தை நாமே தேர்வு செய்து எடுத்துச் செல்கிறோமல்லவா?...

எப்படிச் சுற்றுலாவிற்கு மொத்தச் சேமிப்பிலிருக்கும் பணத்திலிருந்து தேவையானதை மட்டும் எடுத்துச்செல்வோமோ, அதே போன்று ஒவ்வொரு பிறவியை எடுக்கும் பொழுதும் எல்லாப்பிறவிகளிலும் சேர்த்த கர்மவினைகளின் மொத்தத் தொகுப்பாய் இருக்கும் சஞ்சித கர்ம வினைகளிலிருந்து தேவையான அளவு கர்மத்தை நாமே சுயமாகத் தேர்வு செய்து எடுத்து வருகிறோம்.

இவ்வாறு பிறக்கும்பொழுது சுயமாக நாமே தேர்ந்தெடுத்துவரும் கர்மவினைகளுக்குப் பிராரப்த கர்மம் என்று பெயர்.

3. ஆகாமிய கர்மம்: Agamya karma

உங்களின் கணக்கிட முடியாத பணம், சஞ்சித கர்மவினையாக ஒப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது.

நாம் எப்போதும் பணத்தைச் சம்பாதிக்கவே பார்ப்போம். ஆனால் கர்மங்களைப் பொறுத்தமட்டில் கர்மங்கள் செலவு செய்யப்படவேண்டும்.

கோடிக்கணக்கான சஞ்சித கர்மவினைகளிலிருந்து ஒரு நூறு கர்மவினைகளை மட்டும் எடுத்துக் கொண்டு பிறந்தோமானால், பிறக்கும்போது எடுத்துவந்த பிராரப்த கர்மத்தின் எண்ணிக்கை 100. அப்படியென்றால் இப்பிறவியில் செலவு செய்யப்பட வேண்டிய கர்மவினைகளின் எண்ணிக்கை 100.

உதாரணத்திற்கு...

'நிம்மதியுடன் வாழ்ந்து அனுபவித்து விட்டுவர வேண்டும்' என்றுதான் ஒரு சு ற்றுலாவிற்குச் செல்கிறீர்கள். ஆனால் அங்குச் சென்றதும் அங்கிருக்கும் சூழலைப் பார்த்த பின், வந்த வேலையை மறந்துவிட்டு...

அங்கு நின்றுகொண்டிருக்கும் கார்களின் கண்ணாடிகளைத் துடைத்துக் கொடுத்து பத்து ரூபாய், இருபது ரூபாய் என்று சம்பாதிக்கத்துவங்கினால் என்னவாகும்?

முதலில், சுற்றுலாவை அனுபவித்த திருப்தி கிடைக்காது.

அடுத்ததாக, செலவழிக்க எடுத்தவந்த பணம் குறையுமா? அதிகரிக்குமா?

அதிகரிக்குமல்லவா...

நம்முடைய நிம்மதிக்காகச் சுற்றுலாவிற்கு வந்து, வந்த நோக்கத்தை மறந்து பணத்தைச் செலவு செய்யாமல் புதிதாகப் பணத்தைச் சேர்த்தோமென்றால் என்ன ஆகும்? அதேதான் இந்தப் பூமியில், நம் வாழ்க்கை எனும் சுற்றுலாவும் நடக்கிறது.

பிறக்கும்பொழுது எடுத்துவந்த கர்மவினைகளைச் செலவு செய்யாமல், உங்களுடைய சொந்த ஆசைகளை வாழாமல், உங்களுடைய பிராரப்தத்தை வாழாமல் சமுதாயத்தைப் பார்த்தும், சுற்றத்தாரைப் பார்த்தும், உற்றாரைப் பார்த்தும் மற்றவர்களுடைய ஆசைகளையும் சேர்த்துக் கொண்டு, அவர்களுடைய வாழ்க்கையையும் சேர்த்து வாழத்துவங்குகிறீர்கள். இப்படிச் சேர்த்துக்கொண்டே போகும் கர்மவினைகளைத்தான் ஆகாமிய கர்மங்கள் என்று சொல்கிறோம்.

விழிப்புணர்வின்றி வாழ்க்கையை வாழ்வது என்பது செலவு செய்ய வேண்டிய இடத்தில் புதிதாய் வேலை செய்து மேலும் பணம் சம்பாதிப்பது போன்றது. புதிதாய் கர்மவினைகளைச் சேகரிக்கத் துவங்குவது மேலும் மேலும் வாழ்வைக் கடினமாக்குகிறது.

இவ்வாறு புதிது புதிதாகச் சேர்க்கப்பட்டுக் கொண்டேயிருக்கும் கர்மவினைகளுக்கு ஆகாமிய கர்மங்கள் என்று பெயர்.

ஜீவன் முக்தி சின்னம்

விழிப்புணர்வின்றி அறியாமையில்

வாழும் வாழ்க்கை முறை Life that is lived in ignorance, without awareness

(ஒவ்வொரு பிறவியிலும் கொண்டு வரப்பட்ட சஞ்சித கர்மச்சுமை கொஞ்சம்கூட குறையாததால் சஞ்சித கர்மம் மலைபோல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது).

Diagram showing the cycle of karma: Sanchita Karma accumulating birth after birth, Birth, Prarabdha Karma, Living unconsciously, Collect Agamya Karma during lifetime, Vicious cycle continues

பிராரப்த கர்மத்தோடு மனிதன் பிறக்கிறார்.

வாழும்போது ஆகாமிய கர்மத்தை சேகரிக்கத் துவங்குகிறார்

சஞ்சித கர்மம் பெட்டி பெட்டியாக இருக்கிறது. அதில் தனக்குப் பிடித்த, தனக்குத் தேவையான, எந்தக் கர்மத்தை வாழ வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அந்தக் கர்மத்தையே பிறக்கும்போது தேர்ந்தெடுக்கிறார். இரண்டு பெட்டி பிராரப்த கர்மத்தை எடுத்துக்கொண்டு பிறந்த மனிதர், விழிப்புணர்வின்றி, அறியாமையில் வாழ்க்கையை வாழ்ந்ததால், புதிதாக இரண்டு பெட்டி ஆகாமிய கர்ம வினைகளைச் சேகரித்துக்கொள்கிறார்.

இதனால்தான் கர்மச்சக்கரம் நிறைவடையாமல் மேலும், மேலும் தொடர்ந்துகொண்டே செல்கிறது. கர்மச் சுமையை சேர்க்கச் சேர்க்க, கர்மச்சக்கரம் நீண்டுக்கொண்டே செல்கிறது.

கர்மச்சுமை கொஞ்சம்கூட குறையாமல் அதிகரித்துக்கொண்டே செல்லும் விழிப்புணர்வopenற்ற வாழ்க்கை முறையே இதற்குக் காரணமாக இருக்கிறது.

ஞானத் தன்மையில் வாழும் வாழ்க்கை

Living a jeevan Muktha life

(ஒவ்வொரு பிறவியிலும் கொண்டு வரப்பட்ட பிராரப்த கர்மவினைகள் முழுமையாகத் தீர்க்கப்படுவதால் சஞ்சித கர்மச்சுமை படிப்படியாகக் குறைகிறது.)

Living a jeevan Muktha life

இப்பிறவிக்காகக்
கர்மச்சக்கரம்
துண்டிக்கப்படுகிறது.
மலைபோன்று
ஏஞ்சியிருக்கும்
சஞ்சித கர்மத்தை
அடுத்தடுத்த
ஜென்மத்தில்
குறைப்பதற்கு
முயற்சி செய்கிறார்.

ஞான குருவிடமிருந்து தீக்ஷை பெறுகிறார்.

ஜீவன் முக்த நிலையில்
வாழ்கிறார்
பிராரப்த கர்மவினைகளோடு
மனிதன் பிறக்கிறார்.
பிராரப்த கர்மாவினையின் தாக்கம்
மாறுகிறது. மேற்கொண்டு புதிதாக ஆகாமிய
கர்மத்தைச் சேர்ப்பதும் நின்று விடுகிறது.

இரண்டு பெட்டி பிராரப்த கர்மவினையோடு பிறந்த ஒரு மனிதன், ஞான குருவைச் சந்தித்து தீக்ஷை பெற்று வாழ்க்கையை வாழத்துவங்கும் பொழுது இரண்டு விஷயங்கள் நடைபெறுகின்றன.

1.அந்தப் பிறவியில் எடுத்து வந்த பிராரப்த கர்மத்தின் சுமையையும், தாக்கத்தையும் எரித்துவிடுகிறார்.

2.மேற்கொண்டு புதிதாக ஆகாமிய கர்மத்தைச் சேர்க்காமல் தப்பித்து விடுகிறார்.

இதில் அம்மனிதர் இப்பிறவியில் எடுத்து வந்த கர்மங்களை மட்டும்தான் முற்றிலும் எரித்துள்ளார். சஞ்சித கர்மத்தில் ஒரு துளியைத்தான் கரைத்துள்ளார். இதேபோல் ஞானப் பாதையில் வாழ்ந்து ஒவ்வொரு ஜென்மத்திலும் கொஞ்சம் கொஞ்சமாகக் கர்மங்களைக்

குறைக்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறார். அப்படி வாழும்போது ஒரு நடைமுறை சி க்கல் எழும். அதேபோன்று தீக்ஷையைப் பெற ஒரு ஞான குருவைச் சந்திக்க வேண்டும். எல்லாப்பிறவியிலும் எந்த ஆகாமிய கர்மங்களையும் சேர்க்காமல், எடுத்துவந்த பிராரப்த கர்மத்தை மட்டும் செலவழித்தால்தான் மலைபோல் குவிந்திருக்கும் சஞ்சித கர்மத்தைக் குறைப்பதற்கு வழியிருக்கிறது.

இல்லையென்றால் சஞ்சித கர்மச்சுமை குறையாது. ஆகாமிய சுமையைச் சேர்த்துக்கொண்டு செல்லும் சூழ்நிலையைக் கட்டுபடுத்தவேண்டிய கட்டாயமும், கவலையாக வந்து சேரும்.

குருவின் கருணையால் குருவின் சாந்நித்யத்தில் ஜீவன் முக்தர்களாக வாழும் வாழ்க்கை முறை

Living Enlightement with the grace of Enlightment master

(சஞ்சித கர்மங்கள் குருவின் அருளால் முற்றிலும் அழிக்கப்பட்டு விடும். இவர்கள்வாழும்போதே வாழ்ந்து ஜீவன் முக்தர்களாகும் பேறு பெறுகிறார்கள்.)

Diagram showing the cycle of Karma broken by the grace of an Enlightened Master

ஜென்மஜென்மமாக ஒருவர் எவ்வளவு கர்மச் சுமைகளைச் சேர்த்து வைத்திருந்தாலும், அந்தக் கர்மவினைகளெல்லாம் வாழ்கின்ற ஞான குருவின் அருள் பெற்றதும், சூரியனைக் கண்டதும் பனி கரைந்து உருகி தன்னால் விலகுவது போன்று மறைந்து விடும்.

கர்மச்சக்கரத்திலிருந்து விடுபட சனாதன தர்மம் வழங்கும் தீர்வுகள்...

சஞ்சித கர்மத்தை எரிக்கும் பூஜை

Puja that burns the sanchita karma

கர்மங்கள் சூட்சுமமானவை அவற்றை மிகவும் சூட்சுமமான ஒரு ஆயுதத்தையோ, நுட்பத்தையோ கொண்டுதான் அழிக்க முடியும்.

| நம்மைவிட உயர்ந்த அலைவரிசையில் இருக்கும் சக்தியோடு டியூன் செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட நுட்பம் பூஜை. | பூஜை என்பது உள்ளுலக விஞ்ஞானிகளான மெய்ஞானிகள் கண்டுபிடித்த சூட்சுமமான ஆயுதங்கள். ஞானிகள் வடிவமைத்த சடங்குகள் நிறைந்த பூஜை முறைகளால் கர்மவினைகளிலிருந்து விடுபடலாம்.... பூஜை என்பது மீண்டும், மீண்டும் நாம் நம்மைவிட உயர்ந்த சக்தியோடு இணைத்துக் கொள்வதற்காக வடிவமைக்கப் பட்ட |

வாழ்வியல் தியானம்.

பூஜையின்போது நாம் நம்முடைய பக்கத்து வீட்டுக்காரரிடமோ, எதிர்வீட்டுக்காரரிடமோ வேண்டிக்கொள்வதில்லை.

உயர்ந்த சக்தியோடு தொடர்புக் கொள்கிறோம்.

உயர்ந்த அலைவரிசையில் உள்ள இறைவனோடு தொடர்புகொள்கிறோம்.

நம்மைவிட உயர்ந்த அலை வரிசையில் இருக்கும் சக்தியோடு, டியூன் செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட நுட்பம் பூஜை.

நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நன்றியுணர்வுடன் இறைவனை நினைத்துப் பூஜை செய்வதன் மூலம் உங்களுடைய சஞ்சித கர்மவினைப்பலன்களை எளிதாக எரித்து விட முடியும்.

ஒவ்வொரு நாளும் உங்களுக்குத் தேவை இருந்தாலும் அல்லது தேவையே இல்லாதபோதும், பூஜை செய்யும்போதெல்லாம் உங்களை உயர்த்திய தீக்ஷைகளை நினைவில் மேலெடுத்து வருவீர்கள். சாஸ்திர சஸ்தரங்களுக்கும், ஞானக் கருத்துக்களுக்கும் கர்மங்களைச் செயலிழக்கச் செய்யும் சக்தியுண்டு.

உங்களுடைய உணர்வை உயர்த்தினால், கர்மவினைகள் தங்களுடைய சக்தியை இழந்துவிடும். செயலிழந்து போய்விடும்.

அப்போது நீங்கள் பிறக்கும்போது உங்களுடன் எடுத்துவந்த எண்ணப்பதிவுகள் (பிராரப்த கர்மங்கள்) செயலிழந்து போகும். மேம்பட்ட உணர்வால் மேற்கொண்டு புதிய எண்ணப்பதிவுகள் (ஆகாமிய கGeneral) சேகரிப்பதும் நின்றுபோகும்.

ஜீவன் முக்தி லோகோ

எண்ணப்பதிவுகள் சேகரிப்பது நின்றவுடன்
தற்போது உள்ள வினைப் பலன்கள்
உங்கள் மீது செலுத்தும் ஆதிக்கமும்,
குறையும்.

மேலும், மேலும் உயர்ந்து, மேலும்
மேலும் உயர்ந்த உணர்விலிருந்து பூஜை
செய்வது, உங்களை மீண்டும் மீண்டும்,
மேம்பட்ட நிலைக்கு எடுத்து வரும்.
கர்மவினைப்பிடியிலிருந்து கழற்றி விடும்.

> ஒவ்வொரு நாளும்
> உங்களுக்குத் தேவை
> இருந்தாலும் அல்லது
> தேவையே இல்லாதபோதும்.
> பூஜை செய்யும்போதெல்லாம்
> உங்களை உயர்த்திய
> தீக்ஷைகளை நினைவில்
> மேலெடுத்து வருவீர்கள்.

எனவே, நாம் ஒவ்வொருவரும் ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டியது பூஜை என்பது வெறும் சடங்கல்ல. அது ஒரு உள்ளுலக ஆயுதக் கிடங்கு. முறையாய், முழுமையாய் உணர்ந்து செய்யும் பட்சத்தில் சஞ்சித கர்மங்களையே எரிக்கும் சக்தி பெற்றவை பூஜைகள் என்பது புரியவரும்.

கர்மச் சக்கரத்திலிருந்து விடுபடும் யுக்தி-2

கர்ம வினைகளை எரிக்கும் விழிப்புணர்வு

Awareness that burns the karmic actions

விழிப்புணர்வு என்பது ஏதோ ஒரு ஆன்மீகக் குணம் என்று மேம்போக்காய்ப் பார்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல. அதற்குக் கர்மச் சக்கரத்தையே நிறுத்தும் சக்தியுண்டு.

விழிப்புணர்வைக் கொஞ்சம் கொண்டு வந்தால்போதும். கர்மச்சக்கரத்தை நிறுத்தி விடலாம். கஷ்டங்களை நிறுத்திவிடலாம்.

கர்மவினைகள், வாழ்க்கையின் போக்கைத் தீர்மானிக்கும், வாழ்க்கையையே தீர்மானிக்காது.

விழிப்புணர்வை ஒருவருக்குள் ஏற்படுத்தும் ஓர் எளிய முறைதான் தியானம். இதை அனுபவமாக்கும் ஏழு தியானங்களை தரும் தியானமுகாமைத்தான் ஆனந்த ஸ்பூரணம் என்று அழைக்கிறோம்.

பலர் இப்படி என்னிடம் கேட்பதுண்டு, “எது ஆன்மீகம், எது விழிப்புணர்வு என்று சொல்வதற்கு இரண்டு நிமிடங்கள்போதுமே எதற்காக இந்த ஆனந்த ஸ்பூரண தியான முகாமை (ASP) இரண்டு நாட்கள் நடத்துகிறீர்கள்?”

அப்போது அவர்களிடம் சொல்லும் பதில் இதுதான்: “எது

> விழிப்புணர்வைக்
> கொஞ்சம் கொண்டு
> வந்தால்போதும்
> கர்மச்சக்கரத்தை
> நிறுத்திவிடலாம்
> கஷ்டங்களை
> நிறுத்திவிடலாம்.

விழிப்புணர்வு, எது ஆன்மீகம் என்று சொல்வதற்கு இரண்டு நிமிடங்கள் போதும். எது எதுவெல்லாம் தியானமல்ல, எது எதுவெல்லாம் ஆன்மீகமல்ல என்று சொல்வதற்குத்தான் இரண்டு நாட்கள் தேவை."

இப்படி அந்தந்த காலத்து மக்களுக்கு ஏற்றாற்போல் தியானத்தையும், ஆன்மீகச் செய்திகளையும் மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்காகத்தான் ஞானிகள் இவ்வுலகிற்கு தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

விழிப்புணர்வை நம்முள் சேர்ப்பதாலேயே கர்மச் சக்கரத்தை நிறுத்தி விடலாம் என இவர்கள் சொல்வது ஆச்சரியமானதாக இருக்கலாம்.

ஆச்சரியமாக இருந்தாலும், அது சாத்தியம்தான் என வாழையடி வாழையாக வரும் ஞானிகள் நிரூபிக்கிறார்கள்.

செய்யும் செயல்களிலெல்லாம் விழிப்புணர்வைச் சேர்ப்பதே கர்ம வினைகளை எரித்து விடும் அபாரமான சக்தி பெற்றது.

ஆகாமிய கர்மங்கள் மேலும் மேலும் நம்முள் சேராமல் காக்கும் சக்தி விழிப்புணர்வுக்கு உண்டு.

எனவே, விழிப்புணர்வை ஒருவருக்குள் பெருக்கிக் கொள்வது என்பது ஆன்மீகத் தேவையல்ல. அது அடிப்படை தேவை.

கர்மச் சக்கரத்திலிருந்து விடுபடும் யுக்தி-3

பிராரப்தத்தை வாழச் செய்து உங்களை தூய்மைபடுத்தும் குரு பூஜை

Guru Puja - that makes you live your prarabdha karma and purifies you

குரு பூஜையில் வரும் மானஸ பூஜை என்பது மந்திரங்களை மனத்திற்குள் எழுப்பி மானஸீகமாய் செய்யும் ஒரு பூஜை என்று நினைத்து கொண்டிருப்பீர்கள்.

ஆனால், அது உங்களுக்குள் உள்ள ஆழமான உணர்வுகளை மேலெடுத்து வரும் தியானம்.

நீங்கள் உங்களுக்குள்ளேயே சக்தியை எழுப்பும் நுட்பம்தான் குருபூஜை.

உள்ளுக்குள் பக்திப் பெருக்கு ஏற்படும்போது, உங்களுடைய மனத்தில் எழும் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் தானாகவே சுத்தமாக ஆரம்பிக்கும்.

பக்தி பொங்க ஒருவர் செய்யும் செயல்கள் மேலும் மேலும் கர்மவினைப் பலன்களை ஈர்க்காத நிலைக்கு அவரை எடுத்துச் செல்லும்.

ஜீவன் முக்தி

இதை எளிமையாகத் தரும் குருபூஜை ஒரு அருமையான தியான நுட்பம்.

தேவையில்லாத எண்ணங்கள், பேச்சுக்கள், செயல்கள் யாவுமே உங்களை விட்டுப்போய், குருவின் கருணை மிகவும் எளிதாக உங்களுக்குள் இறங்க உதவும்.

பொதுவாக மந்திரங்களை பொது மக்களுக்குக் கற்று தருவதைப் பலர் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால், அதே தவறை நானும் செய்ய விரும்பவில்லை.

பூஜை, மந்திர உச்சாடணம் என்பது எல்லாம் மிகவும் சக்தி வாய்ந்த உள்ளுலக ஆயுதங்கள். ஒருவரின் வாழ்வையே புதுப்பிக்க வல்ல சக்தி பெற்றவை அவை.

அதனால்தான் விருப்பப்படும் யார் வேண்டுமானாலும் மூன்றே நாட்களில் பூஜை, மந்திரம் ஹோமம் ஆகியவற்றை முறைப்படி கற்றுக் கொண்டு செய்வதற்கான GMA எனும் பயிற்சி முகாமை வடிவமைத்திருக்கிறோம்.

இந்தப் பயிற்சி முகாமை முதலில் வடிவமைத்தபோது, ஏகப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பியது. இன்னொரு விஷயம் இந்த GMA பயிற்சி முதல் முதலில் 30 நாட்கள் கொண்ட பயிற்சியாகத்தான் இருந்தது.

பல எதிர்ப்புகளைக் கடந்து, இந்தப் பயிற்சியை எல்லோரும் பெறும் வகையில் பல ஆராய்ச்சிகளை செய்து, வெறும் மூன்றே நாட்களில் கற்றுக் கொள்ளக்கூடிய பயிற்சியாக வடிவமைத்திருக்கிறோம்.

குருபூஜையை விஞ்ஞானப்பூர்வமாக நீங்கள் கற்றுக் கொள்ளும்போது, உங்களுக்குள் இருக்கும் ஆன்ம சக்தியை விழிக்கச்செய்து, பிராரப்தத்தை வாழ்வதற்கான சக்தியை அதிகரித்துக் கொள்கிறீர்கள்.

பிராரப்த கர்ம வினைகளைத் தானே வாழ்வது ஒருவகை. குருசக்தியின் உதவியோடு பிராரப்தத்தை வாழ்ந்து, அதைக் கடந்து, தூய்மைப்படுத்துவது இன்னொரு வகை. ச னாதன தர்மப்படி, குருபூஜை, பிராரப்த கர்மத்தை தூய்மை செய்யும் ஒரு அற்புதமான தியானம்.

கர்மச் சக்கரத்திலிருந்து விடுபடும் யுக்தி-4

கர்மவினைப் பதிவுகளை எரிக்கும் உள்வாங்கும் தன்மை

The internalising quality that burns the impressions of karmic actions

சூரியனுடைய கதிர்கள் பிலிம் சுருள் மீது நேரடியாகப் பட்டுவிட்டால் என்ன நிகழும்? பிலிம் சுருளில் பதிவான காட்சிகள் எல்லாம் அழிக்கப்பட்டுவிடும்.

படச்சுருளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தால் போதும், அதில் ஏற்கெனவே பதிவாகியிருக்கும் காட்சி எத்தகைய கொடூரமானதாக இருந்தாலும் அழிந்துவிடும். அதேபோல் நம் ஜீவன் என்னும் படச்சுருளில் பதிந்திருக்கும் கர்மவினை என்னும்

பதிவுகள் எப்படிப்பட்டவையாக இருந்தாலும்சரி, விழிப்புணர்வு எனும் ஞானஒளிக்கு முன்பு திறந்துவைத்தாலே போதும், அவை அழிந்துவிடும். படச்சுருளை சூரிய வெளிச்ச த்திற்கு முன்பு வைப்பதுபோல், ஒரு குறிப்பிட்ட நேரம்வரை விழிப்புணர்வு எனும் ஞானஒளிக்கு முன்பு மனச்சுருளை திறந்துவைக்க முடியும்.

இருளுக்குள் சுருண்டிருக்கும் படச்சுருள் முதலில் சூரியனைப் பார்த்துத் தயங்கும், பயப்படும்.

"ஐய்யோ, என்னையே அழித்து விடுவார்களோ?!" என்று எதிர்க்கும்.

தன்னைத் திறந்தால் அழியப்போவது தான் அல்ல, தன்னுள் பதிவாகியிருக்கும் காட்சி தான் என்று தெளிந்ததும் எப்படி முழுமையாகத் தன்னைத் திறக்கிறதோ... அதுபோல், விழிப்புணர்வின் பிரவாகமாக வாழும் குருசக்தியின் முன் உங்களைத் திறந்து வைக்கும்போது, அழியப்போவது நீங்கள் அல்ல, உங்களுக்குள் பதிந்திருக்கும் கர்மப்பதிவுகள்தான் என்று தெளிந்ததும், உங்களை முழுமையாகத் திறந்து வைப்பீர்கள். உங்களை நீங்களே திறப்பதற்கு உதவுபவரே ஞானகுரு.

> குரு சக்திக்கு
> முன்பு கர்மவினைப்
> பதிவுகளைத்
> திறந்தால் போதும்,
> மீதியை குருசக்தி
> பார்த்துக் கொள்ளும்.

உங்களுக்காகவே, சீடர்களுக்காகவே பூமியில் பூத்திருக்கும் ஞானகுருநாதரின் கருணையும், சக்தியும் உங்களுக்குள் ஆழமாக இறங்கி ரசவாதம் செய்வதற்கு உங்களின் இதயத்தைத் திறந்து வைத்தாலே போதுமானது.

விழிப்புணர்வின் வெளிப்பாடாக இருக்கும் குருவிடம் தன்னைத் திறக்கும் தன்மையே போதும்.

எப்படிச் சூரிய ஒளியை அனுமதிக்கும் படச்சுருளில் படப்பதிவுகள் அழிகின்றதோ, அதுபோல் விழிப்புணர்வுக்கு முன்பு, குரு சக்திக்கு முன்பு கர்மவினைப் பதிவுகளைத் திறந்தால் போதும் மீதியை குருசக்தி பார்த்துக் கொள்ளும்.

எவ்வளவு தூரம் ஆழமாகத் திறந்து வைக்கிறீர்களோ, அவ்வளவு ஆழம் குரு சக்தியால் உங்களை ஊடுருவ முடியும்.

நன்றாக தெரிந்து கொள்ளுங்கள், நீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் குரு உங்களை நோக்கி பத்து அடி எடுத்து வைப்பார். குருசக்தியை உள்வாங்குவதற்கு உங்களைத் திறந்து வைக்கும் நுட்பமே போதுமானது.

பழைய கர்மப் பதிவுகளை எரிக்கும் மறுவாழ்வு

A new life devoid of old karmic impressions

கர்மவினைப் பலன்களை நீக்குவதற்கான வழியாக உங்களுக்கு மிக எளிமையான, ஒரு நுட்பமான முறையை அளிக்கிறோம்.

இந்த நிமிடத்திலிருந்து உங்களுடைய வாழ்க்கையில் நடந்த அனைத்து நிகழ்ச்சி களையும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

இந்த நேரத்திலிருந்து உங்களுடைய குழந்தைப்பருவம் வரை பின்னோக்கிச் சென்று எவையெல்லாம் உங்களுக்கு நினைவிலிருக்கிறதோ அவற்றை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். உங்களால் நினைவுபடுத்திப் பார்க்கமுடியாத நிகழ்ச்சிகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். காரணம், அது உங்களுடைய ஆழ்மனத்தைத் தொடவில்லை. அதனால்தான் இந்த நிகழ்ச்சிகளில் எதுவும் உங்கள் நினைவில் நிலைத்து நிற்கவில்லை.

எவ்வாறு சூரியன்
உதிக்கும்போது இருட்டு
தானாகவே மறைந்து
போய்விடுகிறதோ அவ்வாறே
குருவின் சாந்நித்யத்தில்
உங்களுடைய
கர்மவினைப்பலன்களும்
எரிந்து போய்விடும்.

இந்தத் தியான நுட்பமுறையை
ஆழமாகச் செய்து பாருங்கள். ஒவ்வொரு
சம்பவத்தையும் எடுத்து ஆழமாக
வாழுங்கள். மீண்டும் முழுமையாக
வாழுங்கள்.

அதனால்தான் Re-living is relieving என்று
சொல்வோம். மீண்டும் வாழ்வது என்பது
வாழ்க்கையிலிருந்து விடுபடுவதற் கான
ஒரு அழகிய அபூர்வமான வழியாகும்.

ஒரு குருவின் நேரடி வழிநடத்துதலில் இந்தத் தியானத்தைச் செய்யும்போது அதனால் நம் வாழ்வையே உலுக்கிக் கொண்டிருக்கும் பழைய கர்மப் பதிவுகளைக்கூட எரித்துவிட முடியும்.

அதுபோல் நித்யானந்த ஸ்பூரண நிகழ்ச்சியானது, ஒருவரது கர்மவினைப் பலன்களைத் தீர்த்துக்கொள்வதற்கான வழிமுறைகள் மீது கவனம் செலுத்துகின்ற தியான முகாமாகும்.

இந்தத் தியான நுட்பமுறையானது ஒரு ஞானியின் முன்னிலையில் நடக்கின்ற ஞானக்குளியல் ஆகும்.

இந்த ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள்.

ஞானிகள், குருமார்கள் கர்மவினைப் பலன்கள் அற்றவர்கள். அவர்களுக்குச் சாதிக்க வேண்டியது ஒன்றுமில்லை. அடைய வேண்டியது ஒன்றுமில்லை.

அப்படியென்றால் அவர்கள் ஏன் உடலெடுக்கிறார்கள்? காரணம் மனித சமுதாயத்தின் மேலுள்ள கருணையினாலும், அன்பினாலும் மட்டுமே அப்படிச் செய்கிறார்கள்.

அவர்கள் மேலும் பல உயிர்களைப் பிறப்பிலிருந்தும் இறப்பிலிருந்தும் விடுவிப்பதற்காகவும், கர்மவினைகளின் பிடியில் இருந்து விடுவிப்பதற்காகவும்தான் மனிதப்பிறவி எடுக்கிறார்கள்.

மீண்டும்
வாழ்வது என்பது
வாழ்க்கையிலிருந்து
விடுபடுவதற்கான ஒரு
அழகிய அபூர்வமான
வழியாகும்.

அது இன்னொரு உண்மையை இங்கு ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டும். குரு உங்களுடைய கர்மவினைப் பலன்களில் எப்போதும் தலையிடுவதில்லை.

சூரியன் உதிக்கும்போது, எவ்வாறு இருளானது தானாகவே மறைந்து போய்விடுகிறதோ, அவ்வாறே குருவின் சாந்நித்யத்தில் உங்களுடைய கர்மவினைப்பலன்களும் எரிந்து போய்விடும்.

கர்மவினைப்பலன் இருளைப் போன்றது. எதிர்மறை இருப்பு (Negative Existence) போன்றதாகும். கர்மவினைப் பலனுக்கு நேர்மறையான இருப்பு நிலை

(Positive Existence) இல்லை.

ஒரு மைக்கை கையில் எடுத்து, அதைத் தூரமாக வைப்பது அல்லது எறிவதைப்போல கர்மவினைப் பலனை அவ்வளவு எளிதாக நம்மால் தூக்கி வெளியே எறிய முடியாது.

எவ்வாறு வெளிச்சம் இல்லாத நிலை இருள் என்று சொல்லப்படுகின்றதோ அதைப்போலவே நமக்குள் உள்ளொளி இல்லாத நிலை, உள்ளுலக இருள் அதாவது கர்மவினைப்பலன்தான் அறியாமை எனப்படுகிறது. இது சக்தி இல்லாத நிலையே!

உங்களுக்குள் அனுபவமாக மாறிய தீக்ஷைகளையும், மாற்றங்களையும், தெளிவினையும் நினைவில் கொள்வதாலும், புரிந்துகொண்டதின்படி அதை நடைமுறை வாழ்க்கையாக வாழ்வதானாலும் எந்த ஒரு கர்மவினைப் பலனையும் ஒருவரால் எரித்து அழித்துவிட முடியும்.

உங்கள் வாழ்க்கையாக அது மாறுமானால் வாழ்வே ஆனந்தமயமாகும்.

1. மேலும் மேலும் கர்மவினைகளைச் சேர்க்கரிக்கமலிருக்க என்ன செய்ய வேண்டும்?

கர்மவினைகளைப் பற்றித் தெளிவாகப் புரிந்துகொள்வதனாலும், விழிப்புணர்வைக் கொண்டுவருவதாலுமே அதை அகற்றி விடலாம். விழிப்புணர்வோடு முடிவெடுப்பதனால் வாழ்வதானால் கர்மவினை பலன்களை விழிப்புணர்வு இல்லாத எண்ணங்களாலும், மேலும் மேலும் சேரும் கர்மங்களைப் பேச்சினாலும், செயலாலும் சேர்த்துக் கொள்ளமாட்டோம்.

2. வேதக் கால திருமணங்களுக்கும், சாதாரண திருமணங்களுக்கும் என்ன வித்யாசம்?

ஜீவன் முக்தி

கர்மவினைப்பலன்களைச் சேர்க்காது, கர்மவினைப்பலன்களைத் தீர்க்கும் வாழ்க்கையை வாழ்வது ஒவ்வொருவருக்கும் அவசியமானது.

சாதாரணமான திருமணங்களில், ஆண், காம உணர்விலிருந்தும்; பெண், பய உணர்விலிருந்தும் இயங்குகிறார்கள்.

ஆண், பெண்ணின் பயந்த சுபாவத்தை உபயோகப்படுத்திக் கொள்கிறான்; பெண், ஆணின் ஆசையை உபயோகித்துக் கொள்கிறாள்.

இதனால் கர்மவினைப்பலன்களைச் சேகரிக்கும் வாழ்க்கையைத்தான் வாழ்வார்கள். கர்மங்களைச் சேகரிக்கும் இந்தச் சாதாரண திருமணங்கள் ஆகாமியத்தைத்தான் அதிகரித்து விடுகின்றன.

ஆனால் ஞானிகள் வடிவமைத்த சப்தபதி விரத திருமண நிகழ்ச்சிகளில் எடுத்துக் கொள்ளும் சத்தியப்பிரமாணம் அவர்கள் இருவரும் அவரவரது வினைப் பலன்களைத் தீர்ப்பதில் முனைந்துசெயல் படுவதாகவும், ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்வதில்லை என்றும், வினைப் பலன்களை மேன்மேலும் நாங்கள் சேர்த்துக் கொள்ளமாட்டோம் என்றும், கர்மங்களை எரிக்கும் விழிப்புணர்வு மிக்க வாழ்வியல் உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டு துவங்கப்படும் வாழ்க்கை.

இந்த உயர்ந்த வாழ்க்கை முறையால்தான் ஆகாமிய கர்மங்களைச் சேர்க்காத வாழ்வை வாழ வைக்க முடியும். வேதக்கால திருமண முறை ஒருவரின் பிராரப்தத்தை வாழ வைத்து ஜீவன் முக்தியைச் சீக்கிரம் ஒருவர் உணர்ந்து கொள்ள வைப்பதாக இருந்தது.

ஆனால் சாதாரண திருமணங்களில் பிராரப்தத்தை வாழ்வதற்கான வழிகூட அழிந்துவிட்டதுதான் கொடுமை. அதோடு நில்லாமல் ஆகாமியத்தைப் போட்டிபோட்டுக் கொண்டு ஒருவருக்கொருவர் அதிகரித்துக் கொள்ளும் நிலைக்கு போனதால்தான் திருமணம் என்பதே தேவையற்ற ஒன்றுதான் என்று இன்றைய சமுதாயம் கருதக்கூடிய நிலையில் திருமணம் இருக்கிறது.

“நம் திருமண வாழ்க்கையைவிட ஆன்மீக வாழ்க்கையையே மேம்பட்ட ஒன்றாகக் கருதி வாழ்வோம், அதற்காக ஒன்றிணைந்து செயல்படுவோம்,” என்றும் அக்னி சாட்சியாக வேதக்காலத்தில் சத்தியப்ரமாணம் எடுத்துக்கொள்வார்கள். இவர்களால்தான் கர்மவினைப் பலன்களைத் தீர்க்கும் வாழ்க்கையை வாழமுடியும்.

அப்படி முறையாகத் திருமண வாழ்விற்குள்
ஒருவர் நுழையாவிட்டால்தான் எந்தத்
திருமணம் ஜீவன் முக்திக்கு ஒரு பாலமாக
இருக்க வேண்டுமோ அதுவே அன்றாட
வாழ்வை அதிருப்தி, சண்டை நிறைந்த

> உங்களுக்குள் அனுபவமாக
> மாறிய தீக்ஷைகளையும்,
> மாற்றங்களையும்,
> தெளிவினையும்
> நினைவில் கொள்வதாலும்,
> புரிந்துகொண்டதின்படி அதை
> நடைமுறை வாழ்க்கையாக
> வாழ்வதானாலும் எந்த ஒரு
> கர்மவினைப் பலனையும்
> ஒருவரால் எரித்து அழித்துவிட
> முடியும்.

ஒன்றாக மாற்றிவிடுகிறது. வேதக்காலத் திருமணம் மனிதனுக்கு உதவும் தியானம். சாதாரண திருமணம் அப்படியில்லை. பல நேரங்களில் அதற்கு நேர்மாறாககூட முடிந்துவிடுகிறது.

3. நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து கர்மவினைகளைக் கடந்து வாழ்வதற்காகத் தியான தீக்ஷையைப் பெற முடியுமா?

இருக்குமிடத்திலேயே தீக்ஷையைப் பெற்று நேர்மறை சக்தியைப் பூமியில் அதிகரிப்பதுதான் வீட்டுக்கும், நாட்டுக்கும் செய்யும் பெரிய சேவை.

இந்தப் பூமிக்கோளின் வாழ்க்கைச் சங்கிலியிலிருந்து விடுபட்டு இருக்கும் பல கோடிக்கணக்கான மனிதர்களில் நீங்களும் ஒருவராகுங்கள்.

அன்றாடம் செய்யக்கூடிய நித்ய தியான நுட்பமுறை, மொத்த மனித சமுதாயமும் தினமும் தியானிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த தியானமுறை ஆகும்.

www.nithyananda.org என்ற இணையதளத்தின் மூலமாகப் பதிவு செய்து கொண்டுகூட இதற்கான தீக்ஷையைப் பெறலாம்.

நித்ய தியான சூத்திரம் ஒரு பூரணமான தியான முறை. முழு மனித உயிரினை உணர்வளவில் உயர்ந்த நிலைக்கு மாற்றுவதற்காகவும், ஆன்ம அனுபவமாகிய இறுதி நிலையான ஜீவன் முக்த அனுபவம் மனிதருள் நிகழ்வதற்கும் தயார் செய்யும் நுட்பமாக நித்ய தியானம் இயங்குகிறது. இந்தத் தியான நுட்ப முறையின் ஒவ்வொரு பகுதியும் மீதியுள்ள பகுதிகளுக்கு உறுதுணையாக விளங்கி தனிமனிதனின் மனத்தெளிவை உயர்த்த உதவுகிறது.

இந்தத் தியான நுட்பமுறை
பேரானந்தமயமான வாழ்வு வாழ்வதற்கான
பயிற்சி. இந்தத் தியான நுட்பமுறையானது
கர்மவினைச் சுமைகளில் இருந்து உங்களை
விடுவித்து நிலையான பேரானந்த
நிலைக்குள் கொண்டு செல்கிறது.

கர்மவினைச் சுமைகளில்
இருந்து உங்களை
விடுவித்து நிலையான
பேரானந்த நிலைக்குள்
கொண்டு செல்கிறது.
தினமும் தியானிப்பதற்காக
வடிவமைக்கப்பட்ட மிகவும்
சக்திவாய்ந்த தியான
முறை ஆகும்.

கர்ம ஜனன இரகசியம்

“எந்த உயிரும்
முக்தி அடையாதவரை
அடுத்த உடலை
மூன்று க்ஷணங்களுக்குள்
எடுத்தாக வேண்டும்”

  • வேத இரகசியம்.

மூன்று க்ஷணங்கள் என்பதற்குள் ஆழ்ந்த தத்வார்த்தமான பொருள் உள்ளது.

ஒரு எண்ணத்திற்கும் இன்னொரு எண்ணத்திற்கும் இடைப்பட்ட காலம்தான் ‘ஒரு க்ஷணம்’ என்றழைக்கப்படுகிறது.

1. க்ஷணம் =இரண்டு எண்ணங்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளி

அடுத்த உடலைத் தேர்வு செய்வது எப்படி?

How to choose the next body?

மூன்றே மூன்று க்ஷணங்கள்தான் உடலில்லாமல் எந்த உயிராலும் தாக்குப் பிடிக்க முடியும். அதற்குள் உயிர் அடுத்த உடலை எடுத்தே ஆக வேண்டும்.

சுவாசத்தை நாம் தடுத்து நிறுத்தினால், எவ்வாறு மூச்சிற்காக நாம் ஏங்கித் தவிப்போமோ.... அதுபோன்று நம் உயிர் அப்போது உடலுக்காக ஏங்கித் தவித்து படாதபாடுபடும்.

நம்முடைய விழிப்புணர்வு மிகவும் குறுகியதாக இருந்தால், குறைந்த நேரத்திற்குள் ஏனோதானோ என்று கிடைக்கும் உடலைத் தேர்ந்தெடுத்துவிடுவோம்.

அது கழுதையோ, குதிரையோ, பிச்சைக்காரனோ அல்லது பணக்காரனோ என்று எதைப் பற்றிய விழிப்புணர்வுமில்லாமல் நுழைந்து கொண்டு பிறப்பெடுத்துக்கொள்ளும்.

இது நம் சுய முடிவல்ல. வேறு வழியின்றி, மாற்றுவழியின்றி எடுக்கப்படும் முடிவாகும்.

அதனால் நாம் மீண்டும் மீண்டும் சம்சார சாகரத்தில் சிக்கி, மீண்டும் ஒரே மாதிரியான கஷ்டங்களையே அனுபவித்து வருகிறோம்.

ஒருவர் Conscious death அடையாதவரை, பிறப்பெடுத்தல் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.

ஒவ்வொருவரின் விழிப்புணர்விற்கு ஏற்பத்தான் க்ஷணத்தை முடிவு செய்யும் ஆற்றல் இருக்கும். விழிப்புணர்வு குறையக் குறைய க்ஷணத்தின் நீளம் குறையும்.

உடலை விட்டு உயிர் பிரிந்தவுடன் மூன்று க்ஷணங்கள்தான் யோசிக்க முடியும். அதற்குள் ஏதோ ஒரு முடிவெடுத்தாக வேண்டும். முடிவெடுத்த உடனேயே, உயிர் அடுத்த உடலுக்குள் நுழைந்துவிடும்.

நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள் ...

உடலை விட்ட உடனே அப்போதுவரை வாழ்ந்த வாழ்க்கை, உங்கள் முன் ஒரு சினிமா படம்போல் தெரியும். மரணத்திற்குப் பிறகு உங்கள் மொத்த வாழ்வையும் ஒரு குறுகிய திரைப்படம்போல் பார்ப்பீர்கள்.

சாதாரண மூன்று மணி நேர சினிமாவை பார்த்தோமென்றால் அதில் ஒரு சில காட்சி களை மட்டும் மறக்கவே முடியாத அளவிற்கு முத்தாய்ப்பாக இருக்கும்.

அதற்குக் காரணம் அது உங்கள் உணர்வைத் தொட்டிருப்பதால், உங்களுக்குப் பிடித்திருப்பதால்தான்.

அதுபோல் உங்களுடைய 80 வருட வாழ்விலும், ஒரு சில காட்சிகள் மட்டும், மறக்கவே முடியாத அளவிற்கு உங்களை ஆழமாய்த் தொட்டிருக்கும்.

உங்களின் உணர்வில் சொருகியிருக்கும் பலவற்றிலிருந்து மூன்றே மூன்று காட்சிகள் சம்பவங்கள், நிகழ்ச்சிகள் மட்டும் மரணத்தின்போது உங்கள் முன்னால் நிற்கும்.

எப்படி ஒரு நிமிடத்திற்கு மேல் உங்களால் மூச்சை நிறுத்த முடியாதோ காற்று இல்லாமல் வாழ முடியாதோ அதேபோல் மூன்று க்ஷணங்களுக்கு மேல் சாதாரண ஜீவன்களால் உடல் இல்லாமல் வாழ முடியாது.

எனவே, அந்த மூன்று காட்சிகளும், மூன்று ஆழமான எண்ணங்களாக ஒரு படச்சுருள்போல் உங்களின் மொத்த வாழ்வும் ஓடிக் கொண்டிருக்கும்போது, மூன்று சம்ஸ்காரங்களாக எழுந்து நிற்கும். இவையனைத்தும் மூன்று க்ஷணங்களுக்குள் முடிந்துவிடும்.

பிறப்பின் சூட்சுமத்தைப் புரிந்து கொள்ளுங்கள்

உடலை விட்டவுடன் அந்த உயிருக்கு முன்னால் மூன்று நினைவுப்பதிவுகள் எழும். உங்களுடைய மொத்தச் சஞ்சித கர்மத்திலிருந்து (AS) ஒரு எண்ணமும், இந்தப் பிறவியைத் தேர்ந்தெடுக்க காரணமாயிருந்த பிராரப்த கர்மங்களிலிருந்து (AP)ஒரு எண்ணமும், இந்தப் பிறவியில் புதிதாய்ச் சேகரித்த ஆகாமிய கர்மங்களிலிருந்து

கர்ம ஜனன இரகசியம் வரைபடம்

(AA) ஒரு எண்ணமும், ஆக மொத்தம் மூன்று எண்ணங்களாக மூன்று கர்மவினைப் பதிவுகளாக அவை எழுந்து நிற்கும்.

இந்த மூன்று வலிமையான எண்ணங்கள் சேர்ந்துதான் அடுத்த உடலை நிர்ணயிக்கின்றன.

A என்ற நபர் உடலைவிட்ட பின் B என்ற நபராக மாறுவதற்கான விதை, பிராரப்தம் இப்படித்தான் உருவாகிறது. மிகப்பெரிய வேதாந்த இரகசியத்தை உள்வாங்கி கொண்டிருக்கிறீர்கள். இதுவரை விளக்கப்படாத சத்தியங்கள் இவை.

ஒரு சின்ன உதாரணம்...

1.இப்போது உங்களுடைய மொத்தச் சஞ்சித கர்ம தொகுப்பிலேயே, 'நான் அழகாக இருக்க வேண்டும்' என்ற மிக வலிமையான எண்ணம், ஆழமாகி இருப்பதாக வைத்துக் கொள்வோம்...

உங்களுடைய மொத்தச் சஞ்சித கர்ம வினையிலிருந்து= நான் அழகாக நீங்கள் தேர்ந்தெடுப்பது (AS) இருக்கவேண்டும்

2. இந்த உடலை எடுக்க காரணமாயிருந்த பிராரப்த கர்ம வினைகளில், 'நான் பணக்காரராக இருக்க வேண்டும்' என்பது ஆழமான எண்ணமாக இருந்து அது நிறைவேறாமல் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்...

உங்களுடைய பிராரப்த கர்ம வினையிலிருந்து =நான் பணக்காரராக

தேர்ந்தெடுப்பது (AP)இருக்க வேண்டும்

3. உடலெடுத்த பின் புதிதாய்ச் சேர்த்த ஆகாமிய கர்ம வினையில் ‘நான் அமெரிக்காவில் பிறக்க வேண்டும்’ என்பது ஆழமாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

உங்களுடைய ஆகாமிய கர்ம வினையிலிருந்து = நான் அமெரிக்காவில்

நீங்கள் தேர்ந்தெடுப்பது (AA)பிறக்க வேண்டும்

இந்த மூன்று எண்ணங்களில், எது இன்னும் ஆழமாக வலிமையாக இருக்கின்றதோ, அது அடுத்த உடலின் முதல் ஆசை விதையாகிறது, அதற்கேற்ற மன அமைப்பை அது உருவாக்கிக் கொள்கிறது.

இப்போது புதிதாய் உருவாயிருக்கும் மூன்று எண்ணங்களின் தொகுப்பைத்தான் புது உடலுக்கான பிராரப்தம் (Bh) என்கிறோம். இந்தப் பிராரப்தம்தான் தனக்கேற்ற உடலை தேர்ந்தெடுக்கிறது. இந்த மூன்று எண்ணங்களை வைத்துத்தான் ஒரு ஜீவன் தன் அடுத்த உடலை நிர்ணயிக்கிறது.

விழிப்பு மிகு மரணம்

Conscious death

மனங்கடந்த, எண்ணங்களற்ற நிலையில் இருக்கும் ஒருவருக்குத்தான் க்ஷணத்தையே முடிவு செய்யும் ஆற்றல் இருக்கும்.

இல்லாவிட்டால் பிறப்பும் இறப்பும் கோமாவிலேயே நிகழ்ந்துகொண் டிருக்கும். பொதுவாக விழிப்புணர்வு குறைந்தவர்களுக்கு க்ஷணம் மிக குறுகியதாக இருப்பதால், உயிர் உடலை விட்ட உடனே உடனடியாகத் தன்னை வேறு ஒரு உடலுக்குள் நுழைத்துக் கொள்ளும்.

அதனால் தான் ஒரு நொடிக்குள் நான்கைந்து குழந்தைகள் பிறந்து கொண்டே இருக்கிறார்கள்.

ஆனால் ஞானிகள், தங்கள் மரணத்தையே விழிப்பு மிகு மரணமாகத் தேவைப்படும்போது, தேவைப்படும் நேரத்தில் நிகழ்த்துவார்கள். அதேபோல் தேர்ந்தெடுத்து அவதரிப்பார்கள்.

ஞானமடைந்தபின், மனங்கடந்த நிலையில் இருப்பதால், எண்ணங்களே அவர்களிடம் இருக்காது.

உலகில் சில நல்ல காரியங்களை செய்ய மட்டும் நூலளவு மனத்தை ஞானிகள் அனுமதிப்பார்கள். அப்போது எண்ணங்கள் என்பதும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் க்ஷணம் என்பது அவர்களுக்கு வருடக் கணக்கில் இருக்கும். அந்தக் காலகட்டத்தையும் அவர்கள் நிர்ணயிக்க முடியும்.

மனிதர்களுக்கு ஒரு க்ஷணம் என்பது ஒரு நொடியாக இருக்கலாம். ஞானிகளுக்கு ஒரு க்ஷணம் என்பது 100 வருடங்களாகவோ 1000 வருடங்களாகவோ, அவர்களின் முடிவுப்படி அமையும்.

அப்போதுதான் மிகச் சரியாக அடுத்த பிறவியைப் பற்றித் திட்டமிட முடியும்.

எப்போது பிறக்கலாம், எந்த இடத்தில் பிறக்கலாம், எந்தப் பெற்றோரைத் தேர்ந்தெடுக்கலாம், எந்தச் சூழ்நிலையில் எந்த இடத்தில் பிறக்கலாம் என்று மொத்த வாழ்க்கையையும் ஆற அமர வடிவமைத்துப் பிறப்பார்கள்.

உட்கார்ந்திருக்கும் காரைவிட்டு விட்டு மிக எளிதாக வெளியே வருவதுபோல, உடலை விட்டுவிட்டு, மிக எளிதாக வரும் அளவிற்குச் சம்ஸ்காரங்கள் மற்றும் அவற்றின் பிடிப்புகள் இல்லாமல், உயர்ந்த விழிப்புணர்வு நிலையிலேயே, மிகவும் இயல்பாக நடைபெறும் ஒரு ஜீவன்முக்தரின் மரணத்தைத்தான் Conscious death என்கிறோம்.

விழிப்பு மிகு ஜனனம்

Conscious birth

யாராவது உங்களிடம், “இப்போது நீங்கள் இந்த உடலை எடுத்த காட்சியை நினைத்துப் பாருங்கள்,” என்று சொன்னால் உங்களால் சொல்லமுடியாது. காரணம் அது நினைவிலிருக்காது.

ஏனென்றால் சாதாரண பிறப்பில் ஒரு உயிர் அதன் தாயினுடைய கர்ப்பத்தினுள்ளே நுழையும்போது, பழைய நினைவெல்லாம் துண்டிக்கப்பட்டுவிடும். ஆனால் எனக்கு அது நடக்கவில்லை விழிப்புடன் பிறக்கும்போது, வலியோ, வேதனையோ, மறுப்போ எதுவும் இல்லாமல் பிறப்பு நிகழ்ந்திருக்கிறது.

தூக்கத்திலிருந்து அப்படியே எழுந்து வெளியே வந்தால், கனவெல்லாம் துண்டிக்கப் பட்டுவிடுகிறதா? இல்லையே!

விழிப்புடன்
பிறக்கும்போது
வலியோ
வேதனையோ
மறுப்போ எதுவும்
இருக்காது.

முதல்நாள் நடந்ததெல்லாம் துண்டிக்கப்பட்டுவிடுகிறதா? இல்லையே! அதே மாதிரி நினைவு மறக்காமல், எந்தவிதமான மறதியும் ஏற்படாமல், கோமா நிலைக்குச் செல்லாமல் முழுவிழிப்புணர்வுடன் அனைத்தும் நிகழ்ந்தது.

இப்படி முழுவிழிப்புணர்வோடு, எப்படி ஒரு காருக்குள் நீங்கள் நுழைவீர் களோ, அப்படி உங்களால் தேர்வு செய்யப் பட்ட ஒரு உடலுக்குள் நுழைவதுதான் Conscious birth, விழிப்புமிகு

ஜனனம்.

என்னுடைய ஜனனத்தை விழிப்புணர்வோடு படிப்படியாகப் பார்த்தேன்

என்னுடைய அம்மாவின் நினைவின்படி, அன்று ஜனவரி மாதம் 1ம் தேதி, வருடம் 1978 வருடம் பிறந்தேன்.

திருவண்ணாமலையில், எப்போதுமே வருடப்பிறப்பிற்குக் கோவிலுக்குச் செல்வார்கள். அண்ணாமலையாரை தரிசிக்க கோவிலுக்குச் சென்று அங்கிருந்து பிரசாதம் வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பார்கள்.

அந்தப் பிரசாதத்தைச் சாப்பிட்டவுடனேயே அம்மாவுக்குப் பிரசவலி ஏற்பட்டு இருக்கிறது.

அண்ணாமலை கோயில் பிரசாதம் உள்ளே சென்றவுடனேயே பிரசவவலி ஏற்பட்டிருக்கிறது.

அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஒரு வலியும் இல்லாமல், எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஒரு அரை மணி நேரத்திற்குள் பிறந்தேன் என்று அம்மா சொல்வார்கள். அவர்கள் சொன்ன உண்மை இது.

அம்மாவின் கருத்துப்படி ஏறத்தாழ இரவு 12.32 மணியளவில் பிறந்தேன் என்று சொல்கிறார்கள்.

இதில் ஒரு முக்கியமான விஷயம்.

என்னுடைய கணக்குப் படி அன்று இரவு 11.45 மணியளவில் உடலுக்குள் நுழைந்தேன்.

ஆனால் குழந்தையாகப் பிறந்த நேரம் 12.32 மணி.

இந்த உடலுக்குள் சக்தியாகச் சென்று, சமநிலையடைந்து, சம நிலை சரியாகி வெளியே வருவதற்கு, நாற்பத்தி ஏழு நிமிடங்கள் ஆகியிருக்கிறது.

நன்கு புரிந்து கொள்ளுங்கள். தூங்கி எழுந்தது போன்றதுதான் இந்த விழிப்புமிகு ஜனனமும்.

ஜனனத்தின்போது மூன்று காட்சியையும் பார்த்தேன்.

முதல் காட்சி :

இருளை இருள் கவ்வியமாதிரியான உலகம் தெரிந்தது.

இரண்டாவது காட்சி:

திருவண்ணாமலையையும் இந்த தீபத்தையும் பார்த்தேன். அது தெரிந்த நேரம், இரவு 11.45 மணி.

மூன்றாவது காட்சி :

திருவண்ணாமலை தீபத்தைப் பார்த்த வினாடியில்தான் உடலுக்குள் நுழைந்திருக்கிறேன். இப்போதிருக்கும் உலகிற்குள் நுழைந்து விட்டேன்.

பின் குழந்தையாகி பிரசவம் நடந்தபோது இவர்கள் பார்த்த நேரம் 12.32.மணி. ஏறத்தாழ 47 நிமிடங்கள் இடைவேளை.

அப்படியென்றால் பிறப்பதற்குமுன் ஒரு க்ஷணம் முழுவதும் மனம் அமைதியாக இருந்திருக்கிறது.

47 நிமிடங்களுக்கு மனம் சாந்தமாக இருந்திருக்கிறது. அடுத்த எண்ணம் வராமல் சாந்தமாக இருந்திருக்கிறது.

இந்த உடல்தான் நம் உடல் என்று தேர்வு செய்து, நம் விருப்பப்படி வாழ்வை வடிவமைப்பதுதான் Conscious birth என்று சொல்கிறோம். இது எல்லோருக்கும் சாத்தியமான ஒன்றுதான்.

திருவண்ணாமலை மலைத்தோற்றம்