ஞானக் கலை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஜீவன் முக்தியை வாழும் ஞானக் கலை The art of Living Enlightenment
மனம் என்ற ஒன்றே உங்களுக்கு இல்லை You don't have something called a mind
துன்பத்தண்டு, இன்பத்தண்டு இரண்டும் மாயங்களே Joy shaft, pain shaft - both are illusions
சும்மாயிரு சொல்லற! - நேரடியாக மனத்தை அணுகுங்கள் Just be! Encounter the mind directly
தொடர்ந்து உள்ளே பாருங்கள் - எதிர்காலத்தை மாற்றியமைத்து விடலாம் Look in continously. The future can be redesigned
எண்ணங்களைக் கோர்த்துப் பார்ப்பதை நிறுத்துங்கள் Stop connecting the thoughts
❖
ஒவ்வொரு எண்ணத்தையும் தனித்தனியாக எதிர்கொள்ளுங்கள் Encounter each thought individually
❖
ஆழ்ந்த பொறுமை ஆழமான நிர்விகல்பத்தை உருவாக்கும் Deep patience will create a deep Nirvikalpa state
மொத்தச் சாரத்தையும் சொல்லும் சூத்திரம் The technique that gives the total Essence
ஜீவன் முக்தியை வாழ்வதற்கான நேரடியான தீர்வு
The direct solution to live Jeevan Mukti ❖ மரண பயத்தை எளிதில் போக்கலாம் The fear of death canbe easily overcome ❖ மரணபயம் போக்கும் தியானம் A Meditation that dissolves the fear of death ❖ விட்டு விடுங்கள்... பரமஹம்ஸர்களாவீர்கள் Leave it ... You will become Paramahamsas! ❖
❖
ஞானக் கலை
- நித்ய நிர்விகல்ப நிலை
ஜீவன் முக்தியை வாழும் ஞானக் கலை
The art of Living Enlightenment
இதுவரை நாம் பார்த்த பல யுக்திகளின் மூலமாக உங்களுக்குள் நிகழ்ந்த இனிய மாற்றங்களையெல்லாம் தாண்டிய நிலைக்கு இந்த ஒரு கலை எடுத்துச் சென்றுவிடும். அதைத்தான் நித்ய நிர்விகல்பநிலை என்கிறோம். நேரடியாக எந்தவொரு தனி மனிதரையும் ஜீவன் முக்தியை வாழ வைக்கும் வாழ்வியல் கலை இது.
இது போதும்
இது ஒன்று போதும்
இதுவரை நீங்கள் படித்த எல்லாவற்றின் சாரத்தையும், அதைத் தாண்டிய நிலையையும் உங்களுக்குள் இது அனுபவமாக்கிவிடும்.
அது Be Unclutched! ஜீவன் முக்தியை வாழும் ஞானக்கலை; இதை எந்த மொழியிலும் மொழிபெயர்க்க முடியாது! காரணம், பூமிக்குத் தரப்பட்ட புதுப் பரிசு இது. Be Unclutched! இது வார்த்தையல்ல, மகாவாக்கியம்! உன்னதத்தை உள்ளுக்குள் ஊறவைக்கும் அமிர்தம். பிரபஞ்ச சக்தி மானுடலோகத்திற்குத் தந்த பிரசாதம்!
அன்கிளட்சிங் என்றால் என்ன?
இந்த வார்த்தையே மந்திர சக்தி பெற்றது.
மந்திரம்போல் இந்த வார்த்தையை, இந்த
வார்த்தையின் சத்தியத்தை உணர்வதின்
மூலமாகவே, நித்ய நிர்விகல்ப நிலை, ஜீவன்
முக்த நிலை நம்முள் நிகழ்வதைக் காணலாம்.
ஜீவன் முக்தியை வாழலாம்.
> Be Unclutched!
>
> இது வார்த்தையல்ல.
> மகாவாக்கியம்.
> உன்னதத்தை உள்ளுக்குள்
> ஊறவைக்கும்
> அமிர்தம். பிரபஞ்ச சக்தி
> மானுடலோகத்திற்குத் தந்த
> பிரசாதம்.
மனம் என்ற ஒன்றே உங்களுக்கு இல்லை
You don't have something called a mind
கோர்த்துப் கோர்த்துப்பார்த்து வருகின்ற எண்ணங்களை, தானாகவே காரணம் இல்லாமல் பொங்குகிற எண்ணங்களைக் Pain shaft, joy shaft என்று பிரித்துப் பார்க்கும்பொழுதுதான், உங்கள் மனத்தையே நீங்கள் உருவாக்குகிறீர்கள்.

மனமே அப்போதுதான் உருவாகிறது. நீங்கள் ஆச்சரியமாகக் கேட்கலாம்... மனத்தை அப்போதுதான் உருவாக்குகிறோம் என்றால், அதுவரை எங்களுக்கு மனமே இல்லையா?
ஆம்! எண்ணங்களைக் கோர்த்துப் பார்க்கும்வரை, உங்களிடம் மனம் என்ற ஒன்றே இல்லை. கோர்த்தல் எனும் மாயச் செயலால் உருவாகும் நிழல் உருவத்தைத்தான், மனம் என்கிறீர்கள்.
அதுவரைக்கும் மனம் இல்லை
அதற்குப்பிறகும் மனம் இல்லை
எப்போதெல்லாம் எண்ணங்களைக் கோர்த்துப் பார்க்கிறீர்களோ, அப்போது மட்டும்தான் மனம் எனும் நிழல் தண்டு (Shaft) உருவாகிறது. நிழலை பார்த்த குழந்தை அதைப் பேய் என்று நம்புவதைப் போல உங்களின் ஜீவன் மனத்தைப் பார்த்து பயந்து போயிருக்கிறது.
நிஜத்தில் உங்களின் மனம் என்பது ஒன்றுமில்லாத ஒன்று. மனம் என்பது ஒரு சம்பந்தா சம்பந்தமில்லாத, பொருத்தமற்ற, ஒழுங்கற்ற எண்ணங்களின் கூட்டுத் தொகை.
எண்ணங்களைக் கோர்த்தால் மனம் இருப்பதாய்த் தெரியும். அதை நிறுத்த ஆரம்பிக்கும் வினாடியே அப்படி ஒன்று இல்லை என்று தெரியும்.
ஒரு சின்ன ஐந்து நிமிட சோதனை:
இப்பொழுதே அதைச் செய்து பார்க்கலாம். ஒரு பேப்பரில், என்னென்னவெல்லாம் தொடர்ந்து வருகிறதோ, அதை எழுதிக் கொண்டே இருங்கள். எழுதிப்பார்க்கவில்லையென்றாலும், அதை உட்கார்ந்து கவனித்துப் பார்த்தீர்களானாலும் போதுமானது.
உங்களையே அறியாமல் சிரிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். நமக்குள் என்ன நடக்கிறது! ஒரு ஐந்து நிமிடம், உங்களுக்குள் ஓடுகின்ற எண்ணங்களை எழுதிப்பார்த்து, படித்துப் பார்த்தீர்களென்றால் தெரியும். ஒரு பெரிய பைத்தியக்காரச் சண்டையே உள்ளே நடந்துகொண்டு இருக்கிறது என்று.
துன்பத்தண்டு, இன்பத்தண்டு இரண்டும் மாயங்களே!
Joy shaft, pain shaft - both are illusions

| மகிழ்ச்சி எண்ணம் | துக்க எண்ணம் |
|---|---|
| JOY THOUGHT | PAIN THOUGHT |
எண்ணத் தண்டு (Thought shaft)
ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாதத் தனித்தனியான எண்ணங்கள் INDEPENDENT THOUGHTS - NO LINK - NO SHAFT
| நமக்கு எழும் எல்லா எண்ணங்களும் (துக்கம் எண்ணம், மகிழ்ச்சி எண்ணம்) ஒன்றோடு ஒன்று | | :--- | | தொடர்பில்லாதத் தனித்தனியான எண்ணங்களே. |

தனக்குள், தன்னால் அமர முடியாமைதான் நரகம்.
உலகத்தில் இருக்கின்ற எல்லோருக்கும் நாம் நேரத்தை ஒதுக்குவோம், நேரத்தை வழங்கிவிடுவோம். ஆனால் நாம் நமக்காக நேரத்தை ஒதுக்குவதே இல்லை. துக்கத்தை எல்லாம் கோர்த்துப் பார்க்கும் மனம் ஓடிக்கொண்டே இருக்கிறது. அது, இல்லாத ஒரு தண்டை உருவாக்கிக் கொண்டே, இருக்கிறது.
இதைத்தான் (pain shaft) துன்பத் தண்டு என்று சொல்கிறோம்.
தன்னையும் அறியாமல் துன்பத் தண்டிலிருந்து துக்கமயமாகத் தொடர்ந்து, எண்ணங்கள் வந்துகொண்டே இருக்கிறது.
அதைத் தொடர்பு செய்து, தொடர்பு செய்து கடந்த காலத்தோடு ஒப்பிட்டுக்கொண்டே இருக்கும்.
நமக்குள்ளே பொங்குகின்ற வேதனை, அளவிற்கு மீறி இருப்பதனால்தான், நாம் நமக்குள்ளே உட்கார்வதற்குப் பயப்படுகிறோம். வேறு யாருடனாவது உட்கார்ந்துகொண்டே இருப்போம்.
மற்றவர்களுடைய துணையை மேம்படுத்திக் கொண்டு இருப்போமே தவிர, நம்மோடு இருக்கவே மாட்டோம். காரணம், கோர்த்துக் கொள்கின்ற மன அமைப்பு. இதிலிருந்து விடுபடுத்திக் கொள்வதுதான் நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்.
விடுபடுவதற்கான சில முக்கியமான சத்தியங்கள்.
சத்தியம் 1:
இன்பத்தை நீட்டிக்கவும், துன்பத்தைக் குறைக்கவும் நீங்கள் செய்யும் முயற்சிகளின் தொகுப்புதான் மொத்த மனித வாழ்வு.
சத்தியம் 2:
இன்பத்தை நீட்டிக்கவோ, துன்பத்தைக் குறைக்கவோ யாராலும் முடியாது! எவ்வளவு முயன்றாலும் அது இன்னும் ஆழமான துக்கத்திற்கே இழுத்துச் செல்லும்.

துன்பத் தண்டை குறைக்கவும் முடியாது. இன்பத்தண்டை நீட்டிக்கவும் முடியாது. ஏனென்றால் தண்டு என்ற ஒன்றே இல்லை. ஒவ்வொன்றும் தனித்தனியான எண்ணங்களே...
சத்தியம் 3:
ஒவ்வொரு நொடியிலும், ஒன்று எதையோ நீட்டிக்க முயற்சிக்கிறீர்கள். இல்லை, எதையோ குறைக்க முயற்சிக்கிறீர்கள். நீட்டிக்கவோ, குறைக்கவோ செலவிடும் செயலை மட்டும் நிறுத்தினால் போதும். ஒவ்வொரு நொடியிலும் இதற்காகவே வீணாகும் சக்தியும், புத்தியும் மிச்சமாகிவிடும்.
இப்படி ஒவ்வொரு நொடியிலும் சக்தி பொங்க, புத்தி பொங்க வாழ்பவர் ஜீவன் முக்தர். துன்பத்தண்டு, இன்பத் தண்டு என்ற இரண்டு மாயங்களுக்குள்ளும் சிக்கித் தவிப்பவர் மனிதர்.
நிர்விகல்பத்திற்கான முதல் நுட்பம்-1
“சும்மாயிரு சொல்லற!” - நேரடியாக மனத்தை அணுகுங்கள்
Just be! Encounter the mind directly
சில நேரங்களில் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த இன்பமயமான, சந்தோஷமான நிமிடங்களைக் கோர்த்துக் கொண்டு ஒரு (Shaft-ஐ) இன்பத்தண்டை உருவாக்கிக்கொள்வார்கள். மனத்தில் இன்பத் தண்டையோ, துன்பத் தண்டையோ உருவாக்கிக் கொண்டே இருப்போம். ஆனால், நிஜ வாழ்வு இன்பமயமானதும் அல்ல; துன்பமயமானதும் அல்ல. அது ஆனந்தமயமானது.
நம் வாழ்க்கையில் நாம் எல்லோரும் செய்யும் இந்த ஒரு முயற்சி தொடர் தோல்வியிலேயே முடிவடைகிறது.
தொடர்ந்து துக்கத்தைக் குறைக்கவும், இன்பத்தை நீட்டிக்கவும் செய்யும் முயற்சியிலிருந்து விடுபடாதவரை சுதந்திரம் இல்லை. இந்த இரண்டை சுற்றிச் சுற்றியே இயங்கும் வாழ்க்கைச் சூழலிருந்து விடுபட ஒரே வழி கோர்த்துப் பார்க்கும் எண்ணங்களில் இருந்து விடுபடுவதுதான்.
அருணகிரிநாதர் மிக அழகாகச் சொல்கிறார்... "சும்மா இரு," என்று சொல்கிறார்.
உங்களுக்குள்ளேயே, உங்களால் சும்மா இருக்க முடிந்ததென்றால், அதுதான் மொத்த ஆன்மீக வாழ்க்கையினுடைய சாரம்.
ஆனால், நமக்குள் நம்மால் உட்காரமுடிவதே இல்லை.
சற்றுமுன் முயற்சித்துப் பார்த்தீர்கள். 'என்னதான் நடக்கிறது பார்க்கலாமே' என்று ஐந்தே ஐந்து நிமிடம்தான் உட்கார்ந்தீர்கள். ஆனால், அவ்வளவு நேரம் இல்லாத இடுப்பு வலி அப்போதுதான் வந்திருக்கும்.
அவ்வளவு நேரம் இல்லாத கால் வலி அப்போதுதான்வரும். அவ்வளவு நேரம் இல்லாத அலைக்கழிக்கின்ற எண்ணங்கள், அப்போதுதான் வரும்.
இல்லாத எல்லா எண்ணங்களும் வரும். அமைதியாக இருப்பதைத்தவிர, நம்முடைய மனம் ஓடி ஓடியே பழகிவிட்டது.
ஒரு சின்ன சோதனையை இப்போதே செய்யலாம்.
இந்த நுட்பத்தை பயிற்சி செய்து பாருங்கள். என்ன எண்ணம் வந்தாலும் கோர்த்துப் பார்க்காமல் இருங்கள்.
உதாரணத்திற்கு... கண்ணை மூடிய உடனேயே முதலில் என்ன எண்ணம் வரும்? 'போரடிக்குதப்பா! எவ்வளவு நேரம் சும்மா உட்கார்ந்திருப்பது?' என்று வரும்.
பத்து வருடத்திற்கு முன்பு நீங்கள் போரடிக்கிறது என்று உணர்ந்த உணர்வு வேறு. எட்டு வருடத்திற்கு முன்பு உணர்ந்த உணர்வு வேறு. இப்போது வந்திருக்கின்ற உணர்வு வேறு.
ஆனால், இப்போது வந்திருக்கின்ற உணர்வை அப்போது வந்திருந்த உணர்வோடு பார்ப்பீர்கள். அதனால்தான் சலிப்பு வருகிறது. உங்களின் சலிப்பு, இந்த ஒரு நிகழ்வின் சலிப்பல்ல.
பத்துவருட சலிப்புகளின் தொகுப்புதான், பெரிய சலிப்பாக சட்டென வந்து விடுகிறது.
உங்கள் கடந்த காலத்தைப் பற்றி நீங்கள் எப்படிச் சிந்திக்கிறீர்களோ, அந்த அறிவை மாற்றுங்கள். அவற்றிலிருந்து உங்களை விடுபடுத்திக் கொள்ளுங்கள். உங்கள் கடந்த காலத்தைப்பற்றிச் சிந்தனை அறிவு மாறினால் மட்டும்தான், எதிர்காலம் மாற்றி அமைக்கப்படுவதற்கான வழி பிறக்கும்.
உங்களுடைய வாழ்க்கையைப் பாத்தீர்களென்றால், ஒரு மிகப் பெரிய pain shaft ஆகத்தான் மதிப்பிட்டு இருப்பீர்கள். இப்பொழுது உங்களுடைய மனது பார்த்ததைப் பார்த்திருக்கலாம், ஒரு ஐந்து நிமிடம் உட்காருவதற்குள்ளே உடலில் எத்தனை ஆட்டம் ஆடுகிறது என்று.
தொடர்ந்து உள்ளே பாருங்கள் - எதிர்காலத்தை மாற்றியமைத்து விடலாம்
Look in continously. The future can be redesigned
ஒரு மனிதனுக்கு மிகப் பெரிய இழப்பு என்னவென்றால், தனக்குள் ஒரு ஐந்து நிமிடம், அமைதியாக உட்கார முடியாமல் இருப்பதுதான். நீங்கள் உங்களுடைய வாழ்க்கையைப் பாருங்கள், நீங்கள் உங்களோடு உட்காருவது என்கின்ற பழக்கமே இல்லாமல் போய்விட்டது.
ஏதாவது ஓய்வு வந்ததென்றால், உடனே வீட்டில் போய் படுக்கையில் சாய்கிறீர்கள். படுக்கையில் விழுந்த உடனே, முதலில் செய்கின்ற வேலை என்னவென்றால், ரிமோட்டைத் தட்டுவது. அந்த ரிமோட்டைத் தேடி எடுத்துக்கொண்டுதான் படுக்கையிலேயே உட்காருகிறோம்.
> என்ன நடந்தாலும்
> சரி, கோர்த்துப்
> பார்க்காமல்
> முழுமையாக
> ஏற்றுக்கொள்ளும்
> தன்மையோடு
> இருங்கள்.
ஒருவேளை கரண்ட் இல்லாமல் தொலைக்காட்சி பார்க்க முடியவில்லையென்றால், என்ன செய்வோம்..? பழைய செய்தித் தாள்களை எடுத்து வைத்துக்கொண்டு, முதல் வரியிலிருந்து கடைசி வரிவரை, அதையே புரட்டிப் பார்த்துக் கொண்டிருப்போம். எடிட்டர் கூட அப்படிப் படித்து இருக்க மாட்டார்கள்.. அப்படிப் படிப்போம்; கோர்த்துப் பார்ப்போம்.
கோர்த்துப் பார்ப்பதை விட்டுவிட்டு எந்த எண்ணம் வந்தாலும், கடந்த கால அனுபவத்தோடு கோர்த்துப் பார்க்காமல், அப்படியே தளர்வாகப் பாருங்கள்.
போரடிக்குதா?
சரி அடிக்கட்டும்.
வேறு என்ன செய்ய முடியும்?"
‘இப்போது இப்படித்தான் இருக்கும்’ என்று எந்த எண்ணம் வந்தாலும் கோர்த்துப் பார்க்காமல் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் தன்மையோடு இருங்கள். என்ன நடந்தாலும் சரி. நன்கு ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள். இப்பொழுது உங்களுக்குள்ளே வலி இருந்தாலும், ஒருவித மந்தத்தன்மை இருந்தாலும், வேறு ஏதாவது துக்கம் இருந்தாலும், என்ன இருந்தாலும் சரி, உங்களுடைய உடல்ரீதியான, மனரீதியான பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் சரி.
உதாரணத்திற்கு...
முட்டி வலி என்றால், இப்போது வலி இருக்கும் இடத்தில் என்ன நடக்கிறது என்று
ஆழ்ந்து பாருங்கள். நேற்று இருந்த மூட்டிவலி வேறு, நேற்று முன் தினம் இருந்த முட்டி வலி வேறு, அதற்கு முன்பு இருந்த முட்டி வலி வேறு. இதெல்லாம் தனித்தனியான அனுபவங்கள். அதைக் கோர்த்துப் பார்த்து இப்பொழுது இருக்கின்ற முட்டி வலிதான் அது என்று நினைக்காதீர்கள்.
இப்போது முட்டியில் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.
நேற்று முன்தினம்
இருந்த மூட்டிவலி
வேறு, அதற்கு முன்பு
இருந்த மூட்டிவலி
வேறு. இதெல்லாம்
தனித்தனியான
அனுபவங்கள்.
ஒரு சின்னக் குழந்தைக்கு ஒரு ரோஜாப்பூ கிடைத்தால் எப்படிப் பார்க்கும், புதிதாக மலர்ந்து பார்க்கும். அதுபோல் புதுமையோடு பாருங்கள். வலி இருக்கின்ற இடத்தைப் பாருங்கள். உடல் வலியாக இருந்தாலும், மனவலியாக இருந்தாலும், புதிதாகப் பாருங்கள்.
அந்த எண்ணத்தைக் கோர்த்துப் பார்க்காமல் “என்ன நடக்கிறது?” என்று உற்றுப் பாருங்கள்.
ஒரு சின்ன நுட்பம்.
இது ஒரு அருமையான நுட்பம்.
இப்போதே, ஒரு ஐந்து நிமிடம் உட்கார்ந்து பாருங்கள். மனத்திற்குள்ளே எந்த எண்ணம் வந்தாலும், வலியோ, வேதனையோ, துக்கமோ, சந்தோஷமோ, சாந்தமோ என்ன வந்தாலும், ‘என்னதான் நடக்கிறது?’ என்று அமைதியாகப் பாருங்கள்.
கண்களை மூடி நிமிர்ந்து அமருங்கள்!
எவ்வளவு நேரம் முடிகின்றதோ, அவ்வளவுநேரம் முயன்று பாருங்கள்....
இந்தச் சிறிய செயலைத் தொடர்ந்து செய்வதினாலேயே, அந்த அசுர மனத்தை எளிதில் மாய்த்து விடலாம். ஜீவன் முக்தியைத் தொட்டு விடலாம். எண்ணங்களைக் கோர்த்துப் பார்க்காமல் வாழ்வதுதான், ஜீவன் முக்த நிலை.
நிர்விகல்பத்திற்கான முதல் நுட்பம்-3
எண்ணங்களைக் கோர்த்துப் பார்ப்பதை நிறுத்துங்கள்
Stop connecting the thoughts
ஆரோக்கியத்தைத்திறக்கும் சாவி! ஆழ்ந்து இந்தத்தியானத்தைப் புரிந்துகொள்ளுங்கள். அன்கிளட்ச் என்பது என்ன என்று ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்.
வருகின்ற எல்லா எண்ணத்தையுமே சாட்சியாகப் பார்த்தல். எண்ணங்கள் பொங்கப் பொங்க, அதைத் தொடர்பு செய்து, தொடர்பு செய்து முக்கியத்துவம் கொடுக்காமல், அன்கிளட்ச் செய்துகொண்டு ஓய்வாக இருப்பது.
ஒரு அருமையான வழி.
எண்ணம் பொங்கும்போதே, வரும் பொழுதே "அன்கிளட்ச்," என்று சொல்லுங்கள். "அன்கிளட்ச் செய்கிறேன்," என்று சொல்லுங்கள்,
இல்லை 'அன்கிளட்ச்' என்ற வார்த்தையை மட்டும் பிரயோகியுங்கள்.
உடனே எண்ணம் இல்லாமல் இரண்டு வினாடி அமைதியாக இருப்பீர்கள்.
அந்த இரண்டு வினாடிகளுக்குப் பிறகு ஒரு எண்ணம் வரும், 'அட! எண்ணம் இல்லாமல் இருக்கிறதே!' என்கின்ற எண்ணமும் வரும். அதிலிருந்தும் அன்கிளட்ச் செய்யுங்கள்.
திரும்பவும் இரண்டு, மூன்று வினாடிகள் அமைதியாக இருப்பீர்கள். அதன்பிறகு மீண்டும் ஏதாவது எண்ணம் வரும். மீண்டும் அன்கிளட்ச் செய்கிறேன் என்று சொல்லுங்கள், தொடர்ந்து உங்களுக்குள் அன்கிளட்ச் செய்கிறேன் என்கின்ற எண்ணத்தை உருவாக்கினாலே போதுமானது.
"அன்கிளட்ச் செய்கிறேன் என்று மனத்திற்குள் சொல்வதும் இன்னொரு எண்ணம் தானே?" என்று நீங்கள் கேட்கலாம்.
அன்கிளட்ச் செய்கிறேன் என்ற எண்ணம் தானாகவே அழிந்துவிடும்.
கிராமங்களில் பிணத்தை எரிக்கும்போது பார்த்தீர்களென்றால், ஒரு கோலை வைத்து பிணத்தைத் தட்டித் தட்டிவிட்டு எரிப்பார்கள்.
பிணம் சுடு தடி என்று சொல்வார்கள்.
பிணம் எரிந்து முடிந்த உடனே அந்தக் கோலையும் நெருப்பிலேயே போட்டு விடுவார்கள். அதுபோன்றே அன்கிளட்ச் என்கின்ற எண்ணம் எல்லா எண்ணங்களையும் எரிக்கின்ற கோல் மாதிரி, மற்ற எல்லா எண்ணமும் எரிந்தபிறகு, அந்த நெருப்பிலேயே இந்த எண்ணமும் எரிந்து போய்விடும். அழிந்துபோகும்.
அதனால் எந்த எண்ணம் ஏற்பட்டாலும் அன்கிளட்ச் செய்து கொண்டே இருங்கள். அன்கிளட்ச் செய்கிறேன் என்ற நினைவை வைத்துக் கொண்டு இருந்தாலும் போதும். திடீரென்று நீங்களே அந்த எண்ணத்திற்கு வலிமை இல்லாமல் போய்விடுவதைக் காண்பீர்கள்.
எந்த எண்ணம் தோன்றினாலும் அன்கிளட்ச் செய்வது, துக்கமாக இருந்தாலும் சரி, சு கமாக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் சரி அன்கிளட்ச் செய்வது.
இந்தச் சிறிய எளிமையான முறையை நடைமுறைப்படுத்தி பார்க்கும் பொழுதுதான் இதனுடைய பலன் தெரியும்.
ஒருவர் என்னிடம் கேட்டார், "மிக எளிமையான நுட்பமாக இருக்கிறதே இதைக் கண்டுபிடிப்பதற்காகவா நீங்கள் இருபது வருடம் ஆராய்ச்சி செய்தீர்கள்?"
நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், சாவி சி
ன்னதாகத்தான் இருக்கும். அதைப் போட்டுத்
திறந்தீர்களென்றால்தான் தெரியும், எவ்வளவு
பெரிய பொக்கிஷம் இருக்கும் கதவுகளைத்
திறக்கிறது என்று!
பொக்கிஷம் இருக்கும் கதவுகளைத் திறப்பதற்கு முன்பு, சாவியை எடை போடுபவன் முட்டாள். இப்போது உங்களுக்குக் கொடுத்திருக்கின்ற தியான முறை சாவி மாதிரி. இதை உங்களுக்குள்ளே உபயோகம் செய்தீர்களானால்தான் தெரியும், அது நம்முடைய ஆனந்த பொக்கிஷத்தையே திறக்கிறது.
> எந்த எண்ணம்
> பொங்கினாலும், கோர்த்துக்
> கோர்த்துப் பார்க்காமல்,
> அமைதியோடு கவனியுங்கள்.
> அர்த்தம் கொடுத்துக்
> கொண்டிருக்காமல்,
> அமைதியோடு அதைப்
> பாருங்கள்
எந்த எண்ணம் பொங்கினாலும், கோர்த்துக் கோர்த்துப்பார்க்காமல், அமைதியோடு கவனியுங்கள். அர்த்தம் கொடுத்துக் கொண்டிருக்காமல், அமைதியோடு அதைப் பாருங்கள். அந்தச் சப்தம் எங்கிருந்து வருகிறது? அதாவது எண்ணங்கள் எங்கிருந்து உருவாகிறது? என்ன நடக்கிறது? என்று அமைதியோடு பாருங்கள். அதுதான் இந்த அன்கிளட்ச் நுட்பத்தின், நிர்விகல்ப கலையின் சாரம். இந்த ஞானக்கலையை இன்னும் சுருங்கச் சொல்ல வேண்டுமானால்... எண்ணங்கள் உங்களின் உங்களுக்குள்ளே உருவாக்கும் சப்தங்களை, மாற்றங்களை, தாக்கங்களை மட்டும் பாருங்கள்.
அதே எண்ணங்கள் உங்களுக்குள்ளே அர்த்தங்களையோ, வேறு எண்ணங்களையோ, ஏக்கங்களையோ உருவாக்குமளவுக்கு அதற்கு ஒத்துழைப்பு தராதீர்கள்.
அதைத்தான் ரத்தினச் சுருக்கமாக... சப்தத்தைப் பாருங்கள். அர்த்தத்தைப் பார்க்காதீர்கள். பரவசத்திலேயே இருப்பீர்கள் என்று சொல்வோம்.
நிர்விகல்பத்திற்கான முதல் நுட்பம்-4
ஒவ்வொரு எண்ணத்தையும் தனித்தனியாக எதிர்கொள்ளுங்கள்
Encounter each thought individually
பத்து ஆண்டுகளுக்கு முன்பு தலையில் வந்த வலியும், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த வலியும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த வலியும், நேற்று வந்த வலியும் தனித்தனியான அனுபவங்கள். ஆனால், நாம் எப்போது எனக்குப் பன்னிரெண்டு வருடமாகத் தலைவலி இருக்கிறது என்று மனத்தில் நினைத்து விடுகிறோமோ, அப்போதே என்ன ஆகிவிடுகிறது?
அது மனத்தில் ஒரு பூதாகரமான துக்கமாக மாறிவிடுகிறது. நம்மால் ஜெயிக்க முடியாத துக்கமாக ஆகிவிடுகிறது.
ஒவ்வொரு எண்ணத்தையும் தனித்தனியாக எதிர்கொள்ளுங்கள். ஜீவன் முக்தியை வாழும் ஜீவன் முக்தர்களாவீர்கள்.
> இந்த ஒரு யூனிட்
> உணர்வால் ஒரு
> யூனிட் துக்கத்தை
> அழித்துவிட
> முடியும்.
இந்த வினாடி மட்டும் உங்களுடைய உடல் எப்படி இருக்கிறது என்பதைப் பாருங்கள்.
உங்களுடைய மனம் எப்படி இருக்கிறது என்று நேரடியாகப் பாருங்கள். தனித்தனியாகப் பார்த்தீர்களானால், வாழ்க்கை துக்கமாகவே இருக்காது. ஏதோ ஒரு துக்கமோ, வலியோ வந்தாலும் கூட, இந்த வினாடி உங்களுக்குள் இருக்கின்ற உணர்வின் மூலமாக, இந்த வினாடி வருகின்ற துக்கத்தை அழிக்க முடியும்.
இந்த வினாடி உங்களுக்குள்ளே உள்ள உணர்வு ஒரு யூனிட் என்றால், உங்களுக்கு வருகின்ற துக்கமும் ஒரு யூனிட்டாகத்தான் இருக்க முடியும்.
இந்த ஒரு யூனிட் உணர்வால், ஒரு யூனிட் துக்கத்தை அழித்துவிட முடியும். ஆனால், நீங்கள் கடந்த கால துக்கம் மொத்தத்தையும் எடுத்துவந்து, ஒரு இருபது யூனிட்டை எடுத்து வந்து, உங்களுடைய ஒரு யூனிட் உணர்விற்கு முன்பு நிறுத்தினீர்கள் என்றால் என்னாகும்?
வேறு வழியில்லாமல், உங்களைத் துக்கம் ஜெயித்து விடுகிறது.
ஒரு போர்வீரனைக் கொண்டு, இருபது போர்வீரர்களை அழிக்கமுடியாது. ஒரு வீரனைக் கொண்டு, ஒரு வீரனைத்தான் அழிக்க முடியும்.
அழகான ஜென் கதை....

ஒரு கோட்டைக்குள்ளே அரசன் ஒருவன்
தனியாக மாட்டிக்கொண்டான். கோட்டைக்கு
வெளியே சுற்றிலும் எதிரிகள், எதிரி
நாட்டு போர்வீரர்கள் ஒரு லட்சம் பேர்
காத்துக்கொண்டிருக்கிறார்கள். இவன் தன்
இராஜகுருவை நினைத்து வழிபடுகிறான்,
"குருவே வழிகாட்டுங்கள். நான் எப்படித்
தப்பிப்பேன்?" என்று.
அந்தக் குரு, ஒரு அசரீரியாகச் சொல்கிறார்,
"கவலைப்படாதே. கோட்டை வாசலை
திறந்துவை. ஒவ்வொரு போர்வீரராக
உள்ளே வரட்டும். ஒருவன் மட்டும் உள்ளே
வருகின்ற மாதிரி வாசல் கதவை திறந்து வை.
ஒவ்வொருத்தராக வர வர வெட்டி அழித்துக்கொண்டே இரு.” இந்த எளிமையான நுட்பத்தைச் செய்து, அரசன் ஜெயித்தே விட்டான்.
அதே மாதிரிதான் நம் மனமும். நீங்கள் தனியாக உங்களுடைய உடம்பிற்குள் மாட்டிக்கொண்டு இருக்கிறீர்கள். வெளியில் ஒரு இலட்சம் போர்வீரர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு இலட்சம் துக்ககரமான எண்ணங்கள் காத்துக்கொண்டு இருக்கின்றன.
ஒவ்வொரு
எண்ணமாக
உங்களை
விடுபடுத்திக்
கொள்ளுங்கள்.
எதிரியை
பலவீனப்படுத்துதல்.
மிகப் பெரிய மனம் உங்களை அழிப்பதற்காகக் காத்துக்கொண்டு இருக்கிறது. தப்பிப்பதற்கான ஒரே வழி, அதையும் ஏற்கெனவே யோசித்து யோசித்துக் கடவுளே வழியும் கண்டுபிடித்து இருக்கிறார்.
உங்களுடைய மனமெனும் கோட்டைக் கதவானது, ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு எண்ணம் மட்டும் வருகின்ற மாதிரிதான் இருக்கிறது. நன்றாக யோசித்துப் பாருங்கள், உங்களுக்கு ஒரு வினாடியில் ஒரு எண்ணத்திற்கு மேல் வரமுடியுமா? முடியாது. ஒரு எண்ணம் போனபிறகுதான், இன்னொரு எண்ணம் வரமுடியும். அந்த எண்ணம் போனபிறகுதான், மூன்றாவது எண்ணம் வரமுடியும்.
ஒவ்வொரு எண்ணமாக அழியுங்கள். ஒவ்வொரு எண்ணமாகத் unclutch செய்து உங்களை மனத்திடமிருந்து விடுபடுத்திக்கொள்ளுங்கள். மனம் எனும் எதிரியைப் பலவீனப்படுத்துங்கள். ஒவ்வொரு எண்ணமாக எதிர்கொண்டால், எதிரி பலமிழப்பான். அசுரனாய்த் தெரியும் மனம் வலுவிழந்து, பலமிழந்துவிடும்.
நிர்விகல்பத்திற்கான முதல் நுட்பம்-5
ஆழ்ந்த பொறுமை, ஆழமான நிர்விகல்பத்தை உருவாக்கும்
Deep patience will create a deep Nirvikalpa state
இது ஒரு சின்னச் சோதனை:
எவ்வளவு நேரம் முடிகின்றதோ அவ்வளவு நேரம் கண்களை மூடி வெறுமனே வேறு எந்தத் தியானமும் செய்யாமல் உங்களோடு நீங்களே அமர்ந்திருங்கள்...
நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் சிறிய சோதனை இது.
தொடர்ந்து அமருங்கள். முடிந்தளவு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அமருங்கள். 21 நிமிடங்களுக்குப் பிறகு (பரமஹம்ஸர் அங்குத் தியானம் செய்த மக்களோடு தொடர்கிறார்...)
கண்களைத் திறக்கலாம்... சிலரால் ஐந்து நிமிடத்திற்கு மேலே உட்கார முடியவில்லை பாருங்கள்.
எத்தனை பேரால் வெற்றிகரமாக, சாட்சியாகப் பார்க்கமுடிந்ததோ, நீங்கள் எல்லோரும் உங்களுக்குள் ஆழ்ந்த அமைதி இருப்பதை உணர்வீர்கள். பார்க்க முடியாமல் தடுமாறுகிறவர்கள், குறைந்தபட்சம் உங்களுக்குள் இருக்கின்ற ஓய்வற்ற தன்மையையாவது உணர்ந்து இருப்பீர்கள்.
இதுதான் விடுபடுத்திக் கொள்ளுதல் Unlclutching என்கிறோம்.
நன்றாக ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள். இரண்டு, மூன்று சத்தியங்களை இப்போது பார்க்கப் போகிறோம்.
முதல் சத்தியம்: எல்லாத் துக்கத்திற்கும் மனமே காரணம், உடல் வலி உட்பட எல்லாவற்றிற்கும் மனமே காரணம்.
இரண்டாவது சத்தியம்: மனத்திலிருந்து உங்களை விடுபடுத்திக் கொள்வதுதான் வாழ்க்கையின் இலட்சியம்.
மூன்றாவது சத்தியம்: அதற்கான ஒரே வழி விடுபடுத்திக் கொள்ளுதல் அதாவது சாட்சியாகத் தள்ளி நின்று பார்த்தல்.
அதற்கான ஒரு அருமையான ஆழமான தியானத்திற்குள் நுழைவோம். இந்தத் தியானத்திற்கு 'நித்ய தியானம்' என்று பெயர்.
மொத்தச் சாரத்தையும் சொல்லும் சூத்திரம்
The technique that gives the total Essence
20 வருட ஆராய்ச்சியின் சாரம்
நித்ய தியானம்தான் என்னுடைய ஆன்மீக ஆராய்ச்சியினுடைய சாரம்.
சின்ன வயதில் இருந்தே ஆன்மீக விஷயங்களை ஆராய்ச்சி செய்துகொண்டு இருந்தோம். பல ஆண்டுகளாக நான் ஆராய்ச்சி செய்ததின் சாரம், அதாவது பத்து வயதில் துவங்கிய அந்த ஆராய்ச்சி, இருபத்திரண்டு வயதில் ஞானமடையும்வரை பன்னிரெண்டு ஆண்டுகள் நடந்தது.
அதன் பிறகு, அடுத்த மூன்று ஆண்டுகள் அதை மற்றவர்களுக்குச் சொல்வதற்கான சூத்திரத்தை வகுப்பதற்காக ஆராய்ச்சி செய்தேன்.
அதன்பிறகு ஐந்து வருடமாகப் பலரோடு இந்தச் சூத்திரத்தை நடைமுறை ஆராய்ச்சி செய்து பார்த்திருக்கிறோம்.
முதலில் செய்த பன்னிரெண்டு வருடம், அதன்பிறகு செய்த மூன்று வருடம், அதன் பிறகு ஐந்து வருடம். மொத்தம் இருபது ஆண்டுகள் என்னுடைய ஆன்மீக ஆராய்ச்சியினுடைய பலன் இந்த ‘நித்ய தியானம்’. அந்தச் சாரத்தை ஆழ்ந்து உள்வாங்கிக் கொள்ளுங்கள். உடலும், மனமும் முழுமையாக உங்களுக்குள் மலரும்.
நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள் அறுபது சதவிகித இந்தியர்கள், தங்களுடைய உடல், முழு வளர்ச்சி அடைவதற்கு முன்பே இறந்துவிடுகிறார்கள். தங்களுடைய உடல் முழு வளர்ச்சி அடைவதற்கே அவல்கள் அனுமதிப்பதில்லை. நம்முடைய உடல் முழு வளர்ச்சி அடையாமல் இருப்பதற்குக் காரணம் மனத்தினுடைய தலையீட்டால்தான்.
மனம், உடலை வைத்து அழுத்தும் பொழுது, உடல் முழுமையாக இயங்கு வதற்கான சாத்தியக்கூறு இல்லாமல் போய்விடுகிறது. உங்கள் உடலும் மனமும் மலர்வதற்கான ஒரு அருமையான தியான நுட்பம் நித்ய தியானம்.
முதல் படி: (கால அளவு: 7 நிமிடம்)

முதல் ஏழு நிமிடங்கள் : வஜ்ராசன நிலையில் அமர்ந்து கண்களை மூடியும், உங்கள் கைகளை இடுப்பின் மேல் வைத்தும், சீரற்ற முறையில் சுவாசிக்க வேண்டும்.
ஆழமாகவும், ஒழுங்கற்ற முறையிலும், மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட வேண்டும். உங்களுடைய முழுக்கவனமும் சுவாசத்திலேயே குவியச் செய்யுங்கள். உங்களுடைய இருப்பே சுவாசமாக மாற வேண்டும்.
இந்த ஆழமான சீரற்ற சுவாசமுறை உங்கள் தசைகளில் உள்ள இறுக்கத்தையும், சம்ஸ்காரங்களையும் விடுபடுத்தி, வெளியேற்ற ஆரம்பித்து விடும்.
வெளியேற்றி சுத்தப்படுத்த ஆரம்பித்துவிடும்.வலிகள், சந்தோஷங்கள், குற்ற உணர்ச்சி கள், நம்பிக்கைகள், மன உளைச்சல்கள், உணர்ச்சிகள் ஆகியவற்றினால் நம்முடைய சுவாசத்தின் தரம் முழுவதுமாக மாறிவிடுகிறது.
இப்பொழுது இந்த அமைப்பை நீங்கள் உலுக்க வேண்டுமானால்,ஏற்கெனவே பல வருடங்களாக உணர்ச்சிகளால் அழுத்தப்பட்ட மன அமைப்பில், சக்தியால் குழப்பங்களைப் புகுத்த வேண்டும்.
இந்த சீரற்ற சுவாசமுறை பழைய சம்ஸ்காரங்களை எரித்துவிடும்.
இது ஒரு மரத்தில் உள்ள இறந்த இலைகளை உலுக்குவது போன்றதாகும். எல்லா இறந்த இலைகளும் கீழே விழுந்துவிடும். இதேபோல் இந்தச் சுவாசமுறை உங்களின் அமுக்கப்பட்ட மன அமைப்பை மாற்றிவிடும்.
இரண்டாம் படி: (கால அளவு: 7 நிமிடம்)
இரண்டாவது ஏழு நிமிடங்கள் :

இந்த இரண்டாவது பகுதியில் வஜ்ராசன நிலையில் அமர்ந்து, கைகளில் சின் முத்திரை உருவாக்கி, உங்கள் முட்டிப் பகுதியில் வைக்க வேண்டும். பின் கண்களை மூடியவாறே உங்களால் எவ்வளவு நீளமாக முடியுமோ அவ்வளவு நீளமாக, எவ்வளவு ஆழமாக முடியுமோ அவ்வளவு ஆழமாக, எவ்வளவு சப்தமாக முடியுமோ அவ்வளவு சப்தமாக.. 'ம்ம்....ம்...' மஹாமந்திர நாதத்தை உச்சாடனம் செய்ய வேண்டும்.
உங்களுடைய முழு விழிப்புணர்வையும் உச்சாடனத்தில் குவியுங்கள். உச்சாடனமாகவே மாறுங்கள். இது உங்களின் உள் எண்ண ஓட்டத்தைக் (Inner Chatting) குறைக்கும்.
மூன்றாவது படி: (கால அளவு: 7 நிமிடம்)
இந்த மூன்றாவது படியில் நீங்கள் வஜ்ராசன நிலையில் அல்லது விரும்பினால் பத்மாச னத்தில் அமரலாம்.
இப்பொழுது உங்களது விழிப்புணர்வை ஒவ்வொரு சக்கரத்திற்கும், மூலாதாரத்திலிருந்து சஹஸ்ராரம்வரை செலுத்த வேண்டும்.
நோய்களின் வேர்களே, நமது மனம்தான். நோய்கள் உருவாகுவதற்குக் காரணமாக இருக்கும் நம் உடலுக்கும், மனத்துக்கும் இடையே உள்ள இணைப்பு பற்றி நமக்குப் புரிவதில்லை. ஒரு சக்தி மையம் அடைபடும்போது, அந்த மையத்திற்கு அருகில் உள்ள உடலின் பகுதிகளும் பாதிப்படைகின்றன.
ஒளியால் இருள் மறைவது போன்று எதிர்மறை உணர்ச்சிகள் விழிப்புணர்வு என்னும் ஒளியை ஏற்றியதும் தானாகவே மறைந்து விடும்.

விழிப்புணர்வை வெள்ளம்போல் நீங்கள் செலுத்தும்போது, எதிர்மறைகள் அழிந்து விடும்.
நீங்கள் விழிப்புணர்வை ஒவ்வொரு சக்தி மையத்திலும் செலுத்தும்போது அந்தச் சக்திமையமாகவே நீங்கள் மாறிவிடுவீர்கள்.
ஜீவ சக்தி மையமாக மாறும்வரை, அதை முழுவதுமாக உணருங்கள். இந்தப் படியின் இறுதியில் நீங்கள் சக்தியடைந்தவராகவும், இலேசானவராகவும் மாறிவிடுவீர்கள்.
நான்காம் படி: (கால அளவு: 7 நிமிடம்)
இந்த நான்காவது படியில், உங்களுடைய எண்ணங்கள் ஒன்றுக் கொன்று இணைக்கப்படாதவை என்ற புரிந்துகொள்ளுதலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
இயல்பாகவே சாட்சியாகப் பார்க்கும் விழிப்புணர்வு உங்களுக்குள் நிகழத்துவங்கும். இந்தப் புரிதலோடு அமைதியாக அமர்ந்து அடுத்த ஏழு நிமிடங்களில் எண்ணங்களை இணைக்காத நிலையை அனுபவித்து சுத்தமான ஜீவனின் நிலையையும், ஆனந்தத்தையும் பெறுங்கள்.

ஐந்தாம் படி: (கால அளவு: 7 நிமிடம்)
அமைதியாக அமர்ந்து, ஆனந்தமயமான உணர்வில் ஒலிக்கப்படும் மந்திரங்களைக் கவனியுங்கள்.

பிரபஞ்சத்துடன் இணைக்கப் பட்ட தாக உணருங்கள். உங்கள் ஜீவனுள் மந்திரங்களின் அதிர்வுகளை உணருங்கள்.
மந்திரங்கள் நேர்மறை அதிர்வுகளைப் பெற்றிருப்பதால், அது உங்கள் ஜீவனில் ஊடுருவி ஆனந்தத்தைக் கொடுக்கும்.
இந்தத் தியானத்தைத் தினமும் ஒருமுறையாவது செய்தால், உங்கள் ஜீவனின் புதிய பரிமாணத்தை அனுபவிக்கத் தொடங்குவீர்கள்.
இந்த நுட்பம் உங்கள் உடலையும், மனத்தையும், முழு விழிப்புணர்வு நிலையையும், ஆனந்தத்தையும் அனுபவிக்கத் தயார் செய்யும்.
• ஆழமாகச் சுவாசித்தல்
• மகாமந்திர உச்சாடனம் செய்தல்
• சக்கரங்களின் மீது விழிப்புணர்வைச் செலுத்துதல்
• எண்ணங்களைக் கோர்த்துப் பார்க்காமை
• பிரபஞ்சத்தோடு கரைதல் ஆழ்ந்த பிரார்த்தனை உணர்வோடு, ஜீவன் முக்தன் நிலையில் வாழவேண்டும் என்று இந்தப் பிரபஞ்ச சக்தியை, இறை சக்தியை ஆழ்ந்து தியானியுங்கள்.
இந்த ஐந்து படிகளும் சேர்ந்ததுதான் நித்ய தியானம்.
மொத்த ஆன்மீகத்தின் சாரத்தையும், இந்த நித்ய தியானத்தில் வகுத்து கொடுத்து விட்டோம்.
ஜீவன் முக்தியை வாழ்வதற்கான நேரடியான தீர்வு-
-அன்கிளச்சிங்
The direct solution to live Jeevan Mukti
Unclutching பற்றி இன்னொரு ஆழமான சத்தியம்.
ஒவ்வொரு எண்ணம் வரும் பொழுதும், இன்னொரு எண்ணம் உடனடியாக வருகிறது. சில முக்கியமான சத்தியங்களைப் புரிந்துகொள்ளுங்கள்.
ஒவ்வொரு எண்ணத்திற்கு அடுத்தும் இன்னொரு எண்ணம் வருகிறது. புதிதாக வருகின்ற எண்ணம், பழைய எண்ணத்தை ஒதுக்கி விடுகிறது. உடனே, புதிய எண்ணம் வந்து, இந்த எண்ணத்தை ஒதுக்கி விடுகிறது. எண்ணங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன, சென்றுகொண்டே இருக்கின்றன.
ஆழமாக நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம், புது எண்ணம் வந்து, பழைய எண்ணத்தை நகர்த்துகிறது என்றால் என்ன அர்த்தம்? புது எண்ணம், பழைய எண்ணத்தைவிட வலிமையானது. இப்பொழுது இன்னொரு எண்ணம் வந்து இந்த எண்ணத்தையும் நகர்த்துகிறது என்றால், அந்த எண்ணம் இதை விட வலிமையானது. அது தானே உண்மை?
எண்ண ஓட்டங்களைப் பற்றி இரண்டு மூன்று இரகசியங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.
முதல் சத்தியம்:
ஒரு விநாடியில் ஒரு எண்ணம் மட்டும்தான் வரமுடியும்
இரண்டாவது சத்தியம்:
வருகின்ற புது எண்ணம், பழைய எண்ணத்தை நகர்த்திவிடுகிறது.
மூன்றாவது சத்தியம்:
ஒரு எண்ணம், எழுந்து பழைய எண்ணத்தை நகர்த்தினீர்களென்றால், அந்த புது எண்ணம், பழைய எண்ணத்தைவிட வலிமை வாய்ந்தது.
இப்போது யாராவது, என்னை நகர்த்தி விட்டு, இந்த இடத்தில் உட்காருகிறார்கள் என்றால், என்னை விட வலிமை வாய்ந்தவர்கள் என்று அர்த்தம். எந்த ஒரு புது எண்ணமுமே, பழைய எண்ணத்தை ஒதுக்கி விடுகிறது. மரண பயம் என்ற பெரிய எண்ணத்தைகூட, அடுத்து வரும் சின்ன எண்ணம் ஒதுக்கிவிடும்.
ஒரு முறை மரண பயத்தை ஒதுக்கத் தெரிந்துகொண்டு விட்டால், மீண்டும் மீண்டும் வரக்கூடிய எந்தவொரு எண்ணத்தையும் ஒதுக்குவது பெரிய வேலை அல்ல.
மரண பயத்தை எளிதில் போக்கலாம்
The fear of death canbe easily overcome
என்ன செய்தாலும் இந்த எண்ணங்கள் ஓய்வதே இல்லையே, அதுவும் “சில சமயங்களில் எண்ணங்கள் என்னைக் கசக்கி விடுகின்றன. முக்கியமாகச் சொல்ல வேண்டுமானால், மரண பயம் என்னுள் பயத்தைக் கிளப்பிவிடும். இந்த எண்ணங்கள் வந்தால், என்னுடைய நிம்மதி அத்தோடு பறிபோய்விடுகிறது. அன்றைய தினம் அவஸ்தையில்தான் முடிகிறது.
இதிலிருந்து எனக்கு விமோச்சனம் உண்டா?” என்ற கேள்வியை நித்ய தியான முகாமில் ஒரு IT மாணவர் கேட்டிருந்தார்.
அப்போது அவருக்குச் சொன்ன பதில் “நீங்கள் நினைப்பது போல உங்களின் மரண பயத்திற்கு உங்களின் மீது எந்த விதமான ஆதிக்கமும் இல்லை.
கல்லை நீங்கள் கையில் எடுக்கும்வரை உங்களைக் கடிப்பதற்கும் தயாராயிருக்கும் நாயானது, கல்லை நீங்கள் கையில் எடுத்த மாத்திரத்தில் அங்கேயிருந்து ஓடிவிடும். உங்களின் பயமும் அப்படித்தான் கவனத்தைக் கையிலெடுங்கள், அதுவும் ஓடிவிடும். அன்கிளட்சிங் என்ற நுட்பத்தைக் கையில் எடுத்த மாத்திரத்தில் எப்பேர்ப்பட்ட எண்ணமாக இருந்தாலும், அது ஓடிவிடும்.
ஒருவேளை கல்லை கையிலெடுக்காமல் இருந்திருந்தால், அந்த நாய் உங்களைக் கடித்துவிடலாம். கடிக்குமளவிற்கு வல்லமையோடு இருப்பதாக தெரியும் நாயையே, ஒரு சிறு கல்லால் ஓட்டிவிட முடியும்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். அதேபோலத்தான் உங்களின் பயமும். எண்ணங்களைக் கோர்த்துப் பார்ப்பதிலிருந்து உங்களை விடுவிக்கும் நுட்பத்தை, நீங்கள் கையிலெடுத்த மாத்திரத்தில் அது அங்கேயிருந்து ஓடிவிடும். அதற்குமேல் அது உங்களின் மேல் ஆதிக்கம் செலுத்தாது.”
இப்போது பலரின் வாழ்வில் நேரிடையாக உதவப்போகும் முக்கியமான உள்ளுலக அறிவியலைப் (Inner World Science) பார்ப்போம்.
மரண பயம் போக்கும் தியானம்
A Meditation that dissolves the fear of death
எந்த ஒரு உணர்விலும் உங்களால் தொடர்ந்து இருக்க முடியாது உயிரையே உலுக்கக்கூடிய மரண பய உணர்வாக இருந்தாலும் கூட, அதனாலும் தொடர்ந்து வெகு நேரம் உங்களுடைய உள்ளுலகில் தாக்குப் பிடிக்க முடியாது.
இந்த ஒரு உதாரணத்தை ஆராய்ந்து பாருங்கள். மேல் சொன்ன உண்மை ஆழமாய்ப் புரிய வரும்... தம் மிக நெருங்கிய உறவினரை இழந்த ஆழ்ந்த துக்கத்தில் குமுறி அழும் அதே நபர்தான், தம் துக்கத்தையும் மீறி, அந்த உறவினரின் இறுதி சடங்குகளைப் பற்றி யோசித்தாக வேண்டும்.
அப்படியென்றால்... இறுதி சடங்குகளைப் பற்றி அவர் சிந்திக்கும் அந்த நொடிகளிலெல்லாம் துக்க உணர்விலிருந்து வெளிவந்துதான் சிந்தித்திருக்க முடியும்;
துக்கத்தின் உச்சியில் இருக்கும்போது வேறு வேலையைப் பற்றிச் சிந்திக்க முடியாது.
அதேபோல் இறுதி சடங்குகளைப் பற்றிச் சிந்திக்கும்போது, துக்கத்திலிருந்து கீழ் இறங்கி சகஜமாகச் சிந்திக்க வேண்டும்.
துக்கமாயிக்கும்போது சகஜமாயிருக்க முடியாது. சகஜமாயிருக்கும்போது துக்கமாயிருக்க முடியாது. அடுத்தடுத்து முற்றிலும் வெவ்வேறான உணர்வுகளைக் கொண்டு இரண்டு எண்ணங்கள் வரமுடிகிறது என்றாலே... அவரால் ஒரே வினாடியில் துக்கத்தைத் துறந்து சகஜமாக முடிகிறது. மீண்டும் சகஜத்தன்மையைத் துறந்து அவரை துக்கத்தில் அவரால் ஆழ்த்திக் கொள்ள முடிகிறது.
நிஜத்தில் என்ன நடக்கிறதென்று ஆழமாகப் பார்த்தால்... துக்கமும் இறுதி சடங்கு பற்றிய தெளிவான முடிவுகளும் மாறி மாறி, ஒன்றொடொன்று எந்தவித தொடர்புமில்லாமல் மேலெழுந்து அடங்குகின்றன என்பது புரியவரும்.
சூழ்நிலை காரணமாகவோ, வேறு ஏதேனும் காரணமாகவோ, துக்கம் எனும் உணர்விற்குள் அவரால் ஆழ்ந்து மூழ்க முடிகிறது.
மிக ஆழமான துக்கம்கூட தெளிவான இன்னொரு முடிவால் எளிதில் மாற்றப்படக் கூடியதே.
நம்மை உலுக்கிக் கொண்டிருக்கும் நெருங்கியவரின் மரணம் எனும் துக்கத்தைக் கூட, அடுத்து வரும் ‘இறுதி சடங்குகளைப் பார்க்க வேண்டுமே’ எனும் சிறு எண்ணமானது மாற்றிவிடும் சக்தி பெற்றது எனும் உண்மையைப் புரிந்து கொண்டால் பெரிய தெளிவு பிறந்துவிடும்.
எந்தவொரு வாழ்க்கை சூழலிலிருந்தும், எவ்வளவு பெரிய எண்ணத்திடமிருந்தும் உங்களால் உங்களை எளிதில் விடுவித்துக் கொள்ள முடியும் என்று புரிந்து கொள்ளுதலாலேயே, நித்ய நிர்விகல்ப நிலைக்குள் உங்களால் செல்ல முடியும்.
அன்கிளட்சிங் பற்றிய ஆழமான
புரிந்து கொள்ளுதலுக்குள் செல்ல
முடியும்.
அதேபோலத்தான் உங்களின் மரண
பயமும். மரண பயத்திற்கு நீங்கள்தான்
முக்கியத்துவம் தருகிறீர்கள்.
இந்தச் சத்தியத்தை ஆழமாகப் புரிந்து
கொண்டாலே எந்தச் சூழலிலும்
பாதிக்கப்படாத உணர்வு நிலைக்குச்
செல்ல முடியும்.
> Unclutch
> செய்வதால் வாழ்க்கையைத்
> துறக்கமாட்டீர்கள். நன்றாகப்
> புரிந்துகொள்ளுங்கள். என்னுடைய
> அனுபவத்திலிருந்து
> சொல்கிறேன். உங்களுடைய
> உடல்நலம், மனநலம், பொருளாதார
> வளம், குடும்ப உறவுகள் நான்குமே
> உயர்ந்து விடும்.
எதிலிருந்தும் உங்களால் வெளியே வந்துவிட முடியும். உதாரணத்திற்குப் பயப்படும்போதெல்லாம் பயப்படுவதை தொடராமல், வேறு ஏதாவது வேலையை செய்ய ஆரம்பியுங்கள். பயம் ஓடிப்போகும்.
பயம் மட்டுமல்ல, எந்த உணர்ச்சி கொந்தளிப்பிலிருந்தும் உங்களால், உங்களையே விடுவித்துக்கொள்ள முடியும்.
வாழ்வில் எது நடந்தாலும், எந்தப் பயம் வந்தாலும், அதை இனிக் கையாளும் கலையைக் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். வாழ்வில் பிரயோகித்துப் பாருங்கள், மரண பயத்தைக்கூட எளிதில் கடந்து வந்துவிடுவீர்கள். இதற்கு இன்னும் நேரடியாக உதவும் நுட்பம் நித்யதியானம்.
தினந்தோறும், ஒரே ஒருமுறையாவது நித்ய தியானம் செய்யுங்கள்.
முடிந்தால் C.D யை உபயோகப்படுத்துங்கள். அதுதான் நல்லது. இந்தத் தியானம் சூட்சமமான படிகளைக் கொண்டதால், ஞாபகம் வைத்துச் செய்வது தேவையில்லாத சிரமம்.
நாள் முழுவதும் கவலை இல்லாமல், துக்கம் இல்லாமல் Unclutched ஆகவே இருங்கள். இது நடைமுறையில் நீங்கள் அனுபவித்துப் பார்த்தீர்கள் என்றால்தான், உங்களுக்கு இதனுடைய மகிமை புரியும்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கிறேன். உங்களுடைய உடல்நலம், மனநலம், பொருளாதார வளம், குடும்ப உறவுகள் நான்குமே உயர்ந்துவிடும். ஏனென்றால், உங்களுடைய சக்தி முழுவதும் துக்கத்திலேயே விரயமாவது தடுக்கப்பட்டாலே, உங்கள் சக்தி மேலெழும்பத் துவங்கிவிடும்.
"வேறு ஒரு எண்ணத்தை ஏற்படுத்துவதன் மூலமாக, நம் பயம் அச்சத்திலிருந்து விடுபடுவது எல்லாம் சரி, அதற்கு இரண்டு தரம் தண்ணீர் குடிக்கலாம். அதன்பிறகு என்ன செய்யலாம்?" என்று கேட்டார்கள்.
"unclutched ஆக இருங்கள்?" என சொன்னோம். unclutched என்கின்ற ஒரு எண்ணம், எப்பேர்ப்பட்ட எண்ணத்தையும் மாற்றக்கூடிய வலிமை வாய்ந்தது.
அடுத்தது, நமக்கெல்லாம் வருகின்ற பெரிய கேள்வி, "நான் unclutched ஆகவே இருந்தேன் என்றால், என் குடும்பத்தை யார் பார்த்துக்கொள்வது. யார் சம்பாதிப்பது?" என்பதுதான்.
நன்றாக ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள். மனம் இல்லாமல் நீங்கள் வாழமுடியும். ஏனென்றால், உங்களுடைய மனம் தொண்ணூறு சதவிகிதம், துக்கத்தை உருவாக்குகின்ற களமாகத்தான் இருக்கிறது, நீங்கள் வாழ்வதற்கு, நீங்கள் நினைக்கின்ற மாதிரி, உங்கள் மனம் தேவை இல்லை.
அதாவது, மனம் இல்லாமல் வாழ முடியாது என்று உங்களின் மனம் உங்களைப் பயமுறுத்தி வைத்திருக்கிறது.
ஒரு சின்ன உதாரணம்:
உங்களுடைய மேலாளர், நீங்கள் இல்லாமல் வேலை நடக்காது என்று உங்களைச் சமாதானம் செய்துவிட்டால், அவரை எப்படி நீங்கள் மிரட்டுவீர்களோ,.. நீங்கள் இல்லாமல் வேலை நடக்காது என்று அவர் நம்பிவிட்டாரென்றால்,.. அவர் என்ன ஆவார்? அவர் அவ்வளவுதான். அவரை எப்படி எப்படி எல்லாம் முடியுமோ, அப்படி எல்லாம் மிரட்டுவீர்கள்.
அதே மாதிரிதான் உங்களுடைய மனமும். இன்னொருவர் வந்து, அவரை நகர்த்தி விட்டு உட்கார்ந்தால், அவரைவிட, மூன்றாமவர் வலிமை வாய்ந்தவர். அதுதான் ச த்தியம். இந்த இரண்டு, மூன்று சத்தியங்களை ஆழமாகப் புரிந்துகொண்டீர்கள் என்றால், பல விஷயங்கள், பல துக்கங்கள், பல பயங்கள் கரைந்து விடும்.
உங்களின் மனம் இல்லாமல் உங்களின் வாழ்க்கை நடக்காது என்று, உங்களை அந்த மனமே சமாதானப்படுத்தி விட்டது.
அதனால் என்ன செய்கிறது? உங்களை எப்படி எப்படி எல்லாம் முடியுமோ, அவ்வாறெல்லாம் மிரட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால், உங்களின் தினசரி வாழ்க்கையை நடத்துவதற்கு, உங்களின் வாழ்க்கையை முழுமையாக நடத்துவதற்கு, உங்களுக்கு, உங்களுடைய மனம் தேவை இல்லை.
மனம் கடந்த நிலையில் இருந்தே மனிதன் தம்முடைய வாழ்க்கையை நடத்தமுடியும். இது ஒரு மிக வித்தியாசமான சத்தியம். நம்புவதற்குக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.
ஒரு பதினொரு நாள் மட்டும் முயற்சி செய்து பாருங்கள். இன்றிலிருந்து பதினொரு நாட்கள் எதற்காகவும் கவலைப்படாமல், எதற்காகவும் சிந்திக்காமல் வாழ்க்கையை அப்படியே நடத்திப் பாருங்கள்.
பதினொரு நாட்களில் உலகம்
அழிந்துபோகுமா? இல்லையே, செத்துப்
போய் விடப்போகிறோமா? கட்டாயமாக
மாட்டோம்.
பதினொரு நாள் தியானம் செய்து
செத்துப்போகப்போகிறோம் என்றால்,
உயிரோடு இருந்து மட்டும் என்ன
செய்யப்போகிறோம்? சீக்கிரம் போவதே
நல்லது. இந்தப் பதினொரு நாட்கள் மட்டும்
முயற்சி செய்து பாருங்கள்.
> உங்களின் தினசரி
> வாழ்க்கையை நடத்துவதற்கு,
> உங்களின் வாழ்க்கையை
> முழுமையாக நடத்துவதற்கு
> உங்களுக்கு உங்களுடைய
> மனம் தேவை இல்லை.
உடல்நலம், மனநலம், பொருளாதார வளம் குடும்ப உறவுகள் நான்குமே உயர்ந்த நிலைக்கு வந்துவிடுகிறது. இதிலே வேறு ஒரு மாயமும் இல்லை; மந்திரமும் இல்லை; உங்களின் உணர்வு உயர்ந்தால், நீங்கள் உயர்கிறீர்கள்.
ஆனால், நம் மனத்தைப் பிடித்துக் கொண்டே வாழ்ந்து வாழ்ந்து பழகிப்போனதால், மனத்தை விடுவதற்கு, துக்கமும், பயமும் விடாது. ஆனால், நிஜம் அப்படியல்ல, நீங்கள் விட்ட நிமிடமே, துக்கமும்; பயமும் உங்களை விட்டு விடும். நீங்கள் விடாதவரை, அவை உங்களை உடும்பு பிடியாய்ப் பிடித்திருப்பதுபோல தோன்றும்.
தொடர்ந்து unclutched செய்துகொண்டேயிருந்தால் உடும்பாயிருக்கும் மனமே மறைந்து அமைதியாகும். மனம் அமைதியானால், மனத்தால் ஏற்படுத்தப்படும் பாதிப்பு சரியாகும்.
Unclutched செய்வதால் பொங்குகின்ற ஆனந்தம், ஆனந்தசக்தியை ஈர்க்கும். ஆனந்த ச க்தி நேராகப் பிரபஞ்ச சக்தியுடன் இணைந்துவிடும். ஆரோக்கியம் நிரந்தரமாகும்.
விட்டு விடுங்கள்... பரமஹம்ஸர்களாவீர்கள்!
Leave it... You will become Paramahamsas!
ஒரு சின்ன உதாரணம், சின்ன கதை:
வட இந்தியாவில் வேட்டைக்காரர்கள் பறவைகளைப் பிடிப்பதை நான் பார்த்து இருக்கிறேன். மதுரா, ஆக்ரா இந்தப் பக்கம் எல்லாம் காட்டில் ஒரு சின்ன குச்சியைக் கட்டித் தொங்க விட்டு விடுவார்கள். குச்சியைக் கட்டி இரண்டு மரக்கிளைகளுக்கு நடுவில் தொங்க விட்டு விடுவார்கள்.
'இதில் எப்படி? பறவையைப்
பிடிக்க முடியும் என்று?' நீங்கள்
நினைக்கலாம். குச்சி தொங்கிக்கொண்டு
இருக்கும்பொழுது, பறவை
ஒரு பக்கமாக வந்து உட்காரும்.
உட்கார்ந்தால் பறவையைவிட லேசான
குச்சி என்னவாகும்? பளிச்சென்று
தலைகீழாகத் திரும்பிவிடும். இப்போது
பறவை தலைகீழாகத் தொங்கிக்கொண்டு
இருக்கும்.

நன்றாக ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள். இந்தக் கயிற்றை இப்படிக் கட்டி விட்டுவிடுவார்கள். பறவை வந்து ஒரு பக்கமாக வந்து அமரும்.
உட்கார்ந்த உடனேயே, குச்சி தலைகீழாகத் திரும்பிவிடும்.
பறவையினுடைய கனத்தினால் தலை கீழாகத் தொங்கித் திரும்பிவிடும். பறவையும் தலைகீழாகப் பிடித்துக் கொண்டு இருக்கும். இப்படியே அந்தப் பறவை ஒரு மணிநேரமோ, இரண்டு மணி நேரமோ தொங்கிக் கொண்டே இருக்கும்.
அந்தப் பைத்தியக்காரப் பறவைக்குத் தெரியாது, குச்சியைவிட்டால் பறந்து போய்விடலாம் என்று.
எப்படி அந்த மூடப்பறவை, அந்தக் கோலை விட்டால் பறந்துவிடலாம் என்று தெரியாமல் பிடித்துக்கொண்டே, தொங்கிக் கொண்டிருக்கிறதோ, அதே மாதிரிதான் நாமும், நம்முடைய மனத்தை விட்டால், பரமஹம்ஸர்களாக மாறிவிடலாம் என்று தெரியாமல் மனத்தை பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டே இருக்கிறோம்.
மூடப்பறவை கோலைப்பிடித்து தொங்கிக்கொண்டிருப்பது போல, நாமும், நம் மனத்தைப் பிடித்துக்கொண்டு தொங்கிக் கொண்டே இருக்கிறோம். அந்தப் பறவை, கோலை, பாதுகாப்பு என்று நினைத்து தொங்குகிறது. ஆனால், வேடன் வந்து இந்தப்பறவை எதைப் பாதுகாப்பு என்று நினைத்ததோ, அதையே பிடித்து இழுத்து விடுகிறான். எடுத்து கூண்டுக்குள் போட்டுவிடுகிறான்.

அதே மாதிரிதான் நாமும்,
நம் மனத்தைப் பிடித்துத்
தொங்கிக்கொண்டு
இருந்தோமென்றால், ஒருநாள்
எமன் வருவான். வந்து அந்த
மனத்திலிருந்தும் நம்மை
மரணம் மூலமாகப் பிடித்து
இழுத்து, அதையும் எடுத்துவிடுவான். நம்மை எடுத்து துக்கம் என்கின்ற கூட்டிற்குள்ளே அடைத்து விடுவான்.
அதனால், வேடன் வருவதற்கு முன் அந்தப்பறவை பறக்க வேண்டும். எமன் வருவதற்கு முன், நீங்கள் மனத்தை விடவேண்டும்.
ஏற்கனவே ஒரு பறவை, அந்த மாதிரி பிடித்ததிலிருந்து, கீழே விட்டுவிட்டு, கீழே விட்டதனால், தரையில் விழுந்து அடிபடாமல் பறந்த ஒரு பறவை, இந்த மாதிரி பரமஹம்ஸமாக வந்திருக்கிறது.
மரம் சொல்லுகிறது, “விதை வெடித்தால்தான், நான் வெளியில் வர முடியும்.''
விதை சொல்லுகிறது, “நீ வெளியில் வந்தபிறகு நான் வெடிக்கிறேன், ஏனென்றால், வெடித்தபிறகு நீ வெளியில் வரவில்லை யென்றால், நான் இறந்து போய் விட்டால் என்னாவது?!''
இரண்டிற்கும் நடுவில், இந்த மாதிரி தொங்கிக் கொண்டு இருக்கிற பறவையிடம் வந்து, “அப்பா, உன்னைப்போல்தான் நானும் நினைத்தேன். கையை விட்டால் கீழே விழுந்து அடிபட்டு விடுவோம் என்று நினைத்துக்கொண்டு விடாமலேயே இருந்தேன். ஆனால், எப்படியோ கையை விட்டுவிட்டேன். விட்டபிறகுதான் எனக்குத் தெரிந்தது, என்னால் பறக்க முடியும் என்று, நீயும் விட்டுவிடப்பா,'' என்று சொல்வதுதான் ‘தீக்ஷை’.
ஏற்கனவே தொங்கிக்கொண்டிருந்த ஒரு பறவை, “அப்பா, நான் விட்டதனால் எனக்கு அடிபடவில்லை, பரமஹம்ஸமாகப் பறந்து விட்டேன். நீயும் உன் மனத்தை விட்டுவிடு. உன் மனத்தை விடுவதனால், எந்த அடியும் படாது, எந்த வலியும் வராது, ஆனந்தமாகப் பரமஹம்ஸமாகத்தான் மாறுவாய்,'' என்று நம்பிக்கையைக் கொடுக்கிறது, ஏற்கெனவே பறந்த ஒரு பறவை, வலையில் சிக்கிப் பறந்த பறவை வலையில் மாட்டிக் கொண்டிருக்கின்ற இன்னொரு பறவைக்குப் போய், அறிவுரை செய்து தைரியத்தைக் கொடுப்பதுதான், இப்போது நாம் செய்கின்ற நித்ய தியான தீக்ஷை. இது குருவிற்கும், சீடனுக்கும் இருக்கின்ற உறவு.

ஏற்கனவே, மனம் என்ற ஒன்றைப் பற்றிக்கொண்டு வாழ்ந்ததனாலும், இப்போது அதை விட்டு விட்டு ஆனந்தமாக வாழ்வதனாலும், உங்களுக்கும் உரைக்கிறேன். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். மனத்தை விடுவதனால், ஆனந்தத்தில்தான் வாழ்வீர்கள், துக்கம் வராது.
ஒரு விதை வெடிப்பதற்கு முன்பு, “நாம் வெடித்தால் மரமாக மாறுவோமோ? மாறமாட்டோமோ?'' என்ற பயம் அதற்கு வரும்.
விதை மரத்திடம், ''மரமே, நீ வெளியில் வா, அதன்பிறகு நான் வெடிக்கிறேன்,'' என்று சொல்லும். ஆனால் மரமோ விதையிடம், "நீ வெடித்தால்தான் நான் வெளியே வரமுடியும்," என்று சொல்லும்.
ஏற்கனவே விதையாக இருந்து விருட்சமாக மாறிய மரம் அங்கே வந்து, "அப்பா,

விதையே! கவலைப்படாதே! வெடிக்கும் முன் நானும் உன்னைப் மாதிரிதான் இருந்தேன். ஆனால், வெடித்த உடனே, மரமாகத்தான் மாறி இருக்கிறேன். அழிந்து போகவில்லை.
நீயும் வெடி, மரமாகத்தான் மாறுவாய்,'' என்று அந்த விதைக்குத் தன்னம் பிக்கையைக் கொடுப்பதுதான் 'தீக்ஷை'.
அதனால் குச்சியைப் பற்றிக் கொண்டு, மனத்தைப் பற்றிக் கொண்டு, தொங்கிக் கொண்டிருக்கின்ற நீங்கள் எல்லோரும், கவலைப்படாமல், மனத்தை விடுங்கள். விடுபடுத்திக் கொள்ளுங்கள்.
"BE UNCLUTCHED"
விடுபடுத்திக் கொள்வதனால், நீங்கள் ஒரு நாளும் கீழே விழமாட்டீர்கள். மண்டை உடையாது. துக்கம் வராது, பறப்பீர்கள்.
'பரமஹம்ஸ'ர்களாக மாறுவீர்கள்.
இதை ஆழ்ந்து புரிந்துகொண்டு, இந்தச் சத்தியத்தை உள்வாங்கி, மனம் என்கின்ற குச்சி யைப் பிடித்துக் கொண்டு இருப்பதை விட்டுவிட்டு, "பரமஹம்ஸர்களாக மாறுவீர்களாக," என்று ஆசீர்வதித்து முடிக்கிறோம்.
