KAILASA Library/ஜீவன் முக்தி/அனுபவித்திராத அனுபவம்Sign in
ஜீவன் முக்தி

அனுபவித்திராத அனுபவம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

An Experience which I have never experienced

சின்னப் பறவைக்கும், பெரிய பறவைக்கும் உள்ள ஈர்ப்பைப் போல எனக்கும், அருணகிரியோகீஸ்வரருக்கும் இடையில் ஒரு ஈர்ப்பு இருந்தது. அது ஆழமான ஈர்ப்பு.

வீட்டில் எது
இருந்தாலும்
சாமியார்களுக்கு
போய்விடும்.

அதாவது வீட்டில் என்ன செய்தாலும் அதைக் கட்டிக்கொண்டு வந்து அவருக்குக் கொடுப்பேன்.

அந்தச் சன்யாசிக்குக் கொடுப்பதற்காக! வீட்டில் எனக்குப் பெரிய பட்டமே உண்டு. வீட்டில் என்ன இருந்தாலும் சாமியார்களுக்குப் போய்விடும்.

என் கையில் எதுவுமிருக்காது. வீட்டிலும் எது இருந்தாலும் சரி, அது பணமாக இருந்தாலும் சரி, துணியாக இருந்தாலும் சரி, வீட்டுச் சாமான்கள் எதுவாக இருந்தாலும் சரி, அனைத்தையும் எடுத்துக்கொண்டு போய்ச் சாமியார்களிடம் கொண்டு கொடுத்துவிடுவேன்.

அதிலும் இவர் என் உயிருக்கே நெருக்கமானவர். அதனால் வீட்டில் என்ன இருந்தாலும், அதை எடுத்துக்கொண்டு போய்விடுவேன். அவர் மிக அன்போடு நடந்து கொள்வார். என்ன சொல்வது? ‘மகான்’ என்ற வார்த்தையெல்லாம் அப்பொழுது எனக்குத் தெரியாது.

‘அவர் ஒரு சன்யாசி’,

‘ஒரு ஞானி’

அருணகிரியோகீஸ்வரர் பரமஹம்ஸரை அழைத்துச் சென்ற குகையின் நுழைவாயில்...

அவ்வளவுதான். அப்படித்தான் நினைத்துக்
கொண்டிருந்தேன். இப்படியே ஒரு ஆறு
மாதம் பழகிக்கொண்டு இருந்தோம். இந்த
உறவு வலுப்பட, வலுப்பட அவர் பல்வேறு
விதமான விஷயங்களைச் சொல்வார்.

வாழ்க்கையைப்பற்றி, அதைப்பற்றி,
இதைப்பற்றி என்று எல்லாவற்றைப் பற்றியும்
சொல்வார். அதை ஆழ்ந்து கேட்டுக்
கொண்டிருப்பேன்.

ஒரு நாள் அவர், “நான் இருக்கின்ற இடத்திற்கு வருகிறாயா?” என்று அழைத்தார்.

நான் அவரிடம். "அந்தக்
குகைக்குள்ளேதானே!" என்று
கேட்டேன். "இந்தக் குகை தானே சாமி ?
வருகிறேனே. போகலாமே..."என்று
சொன்னேன்.

அன்றைக்கு ஜனவரி 1 ம் தேதி.
எப்படி எனக்குத் தேதி ஞாபகம்
இருக்கிறதென்றால், அந்தக்
கோயிலைக் கழுவி விட்டார்கள்
என்றால், தரையிலே தண்ணீராக
தேங்கி இருக்கும்.

சீடர்களை பாறையில் உள் கிரிவலம் அழைத்துச் செல்லும் சாட்சி.

அன்று இரவெல்லாம் உட்கார்ந்து கழுவிவிட்டுக் கொண்டிருந்தோம். அந்தக் கோவில் காவல்காரருடன் நானும் சேர்ந்து கழுவி விட்டிருந்ததினாலே, இரவெல்லாம் ரொம்ப அலுப்பாக இருந்தது. அதனால் சன்யாசியின் இல்லத்திற்குள் சென்று கொஞ்ச நேரம் படுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். அவர் என்னை அந்தக் குகைக்குள் அழைத்துக் கொண்டு சென்றார்.

அந்தக் குகையினுள் நுழைந்த உடனேயே, உடலினுள் ஏதோ ஒருவித மாற்றம் தோன்றிய மாதிரி இருந்தது.

அதன் பிறகு திடீரென்று ஒரு கதவு திறந்தது. திறந்தால் அதற்குள் ஒரு மலைமாதிரி தெரிந்தது!

அதில் தடதடவென நடந்து மலைக்குள்ளேயே போய்விடலாம் என்பது மாதிரி இருந்தது.

நான் ரொம்ப சின்ன பையன். இந்தக் குகைக்குள்ளே மலைக்குப் போகிற வழி இருக்குமோ! என்று நினைத்தேன். ஏனென்றால், கோவிலுக்குள்ளே மலைக்குப் போகும் வழிகளும் நிறைய உண்டு.

என்னை அழைத்துக் கொண்டு குகைக்குள்ளே போனார். அங்கே போனால், பெரிய மலை இருந்தது. மலைக்கு மேலே ஒரு பெரிய ஆலமரம் இருந்தது.

ஆலமரத்திற்குக் கீழே சன்யாசிகள் கூட்டமாக அமர்ந்திருந்தார்கள். இவர் நேரே சென்று அவருடைய இடத்தில் உட்கார்ந்தார். அவர்கள் மத்தியில் உட்கார்ந்த பிறகுதான் தெரிந்தது, 'அவர்தான் குரு' என்று.

அவர் சென்று உட்கார்ந்த தோரணையிலேயே எனக்கு, 'அவர்தான் குரு' என்பது தெளிவாகத் தெரிந்தது.

நன்கு புரிந்து கொள்ளுங்கள். இதே போன்ற அனுபவத்தை ரமண மகரிஷியும் சொல்கிறார்.

அவரும் இந்த ஆலமரத்தையும், அந்தக் குருவையும் பார்த்திருக்கிறார்.

அவர்தான் குரு என்று
தெரிந்தவுடனேயே
அவருடைய காலில்
விழுந்து கும்பிட்டேன்.
அந்த ஆலமரத்தின் கீழ்
அமர்ந்திருப்பவர்களைப்
பார்த்தால் அங்கு
எல்லோருமே காவி போட்டு
இருந்தார்கள்.

அதில் நான் மட்டும்தான்
காவியில்லாமல் வெள்ளை
ஆடையில் இருந்தேன்.

அப்போதெல்லாம் சிறுவர்கள் எல்லோரும் பள்ளிக்கு போகாவிட்டாலும், பெரும்பாலான நேரம் பள்ளிச்சீருடைதான் போட்டிருப்போம்.

பள்ளிக்குப் போகாத நாளில் கூட அதே உடைதான் அணிந்திருப்போம். வண்ணவண்ண நிறங்களில் எல்லாம் போடுவது கிடையாது.

அந்த சூழ்நிலையிலே நான் மட்டும்தான் காவி உடை போடாமல் பளிச்சென்று வெள்ளைச் சீருடையிலேயே நின்றிருந்தேன். எனக்கு எப்போதும், ‘நான் ஒரு சன்யாசி’ என்ற உணர்வு இருந்துகொண்டே இருக்கும். காரணம் தெரியாது.

அருணகிரியோகீஸ்வரர் என்னை அழைத்துச் சென்றிருந்தபோது நான் சாதாரண உடையிலிருந்தேன். என்னைத் தவிர அங்கிருந்தவர்கள் எல்லாருமே காவியில் இருந்தார்கள்.

உயர்ந்த தியான உணர்வில் குருவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே ‘இவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல’ என்பது, சந்தேகம் இல்லாமல் தெளிவாகப் புரிந்தது. அங்கிருந்த சூழலும், சூழ்நிலையும் நான் அதுவரை பார்த்திராதது. அனுபவித்திராதது.

அப்போது அவர்கள் தங்களுக்குள், ‘சன்யாசியல்லாத இந்தச் சின்ன பையன் யார்?’ என்று பேசிக் கொண்டார்கள். இதைக் கேட்டதும் சன்யாசிக்குக் குறைவாக அவர்கள் என்னை மதிப்பிடுவதாக எண்ணினேன்.

சிறுவயதினருக்கே உரிய சீற்றத்தோடு, “ம்ஹும்... நான் சன்யாசிதான், எனக்கு நீங்களே சன்யாசம் கொடுங்கள்,” என்று அருணகிரியோகீஸ்வரரிடம் கேட்டேன்.

அருணகிரியோகீஸ்வரர், “அப்பா! நீ சன்யாசி இல்லை என்று அவர்கள் சொல்லவில்லை. உனக்குக் காவி இல்லையா என்றுதான் பேசிக் கொள்கிறார்கள்,” என்று சொன்னார். சொல்லிவிட்டு அந்தச் சன்யாசி களைப் பார்த்தார்.

என்னை அருகில் அழைத்தார்.
அருகில் சென்றேன். அங்குப் புதிய
காவி இல்லை. உடனே தன் தோளில்
போட்டிருந்த காவியை அப்படியே
எடுத்து எனக்குப் போர்த்திவிட்டார்.

அப்போது என்ன நிகழ்ந்ததோ அதை அப்படியே சொல்கிறேன்.

அருணகிரியோகீஸ்வரர் பரமஹம்ஸ சிறுவனுக்கு அளித்த காவி.

அருணகிரியோகீஸ்வரர் பரமஹம்ஸ சிறுவனுக்கு அளித்த காவி.

சிறுவயது பிள்ளைக்கு மற்றவர்களுக்கு முன்னால் ஆடையில்லாமல் இருக்கவே முடியாது.

ஆனால், அருணகிரியோகீஸ்வரர் எனக்குக் காவியளித்தபோது அந்தக் காவியை அவர்கள் முன்னிலையிலேயே மாற்றிக் கொண்டேன். பிறகுதான் தெரிந்தது நமது பாரம்பரியத்தில் பூர்ண சன்யாஸ தீக்ஷை இவ்வாறுதான் நடக்கும் என்று.

நானும் பழைய துணியைக் கழற்றிவிட்டு, காவியை ஆனந்தமாய் அணிந்து கொண்டேன். ரொம்ப நேரம் ஆகிவிட்டது. மீண்டும் அழைத்துக் கொண்டு குகைக்கு வெளியே வந்து விட்டுவிட்டார்.

கடவுளோடு விளையாட முடியும்

You can play with God

இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள மாதாஜி விபுதானந்த தேவியை பார்க்கக் கிளம்பினேன். அவரை மாதாஜி குப்பம்மாள் என்றும் சிலர் சொல்வார்கள்.

மாதாஜி குப்பம்மாள் எனக்கு அப்போது குரு போன்று இருந்தார்கள். அவர்களிடம்தான் எல்லா விஷயங்களையும் போய்ப் பகிர்ந்து கொள்வேன்.

இது மாதிரி எந்த ஆன்மீக அனுபவம் நடந்தாலும், வாழ்க்கையில் எது நடந்தாலும் அவரிடம்தான் சொல்வேன்.

அவரை மாதாஜி விபுதானந்த தேவி என்றுதான் நாங்கள் பேசிக் கொள்வோம். அவருடைய சன்யாஸ தீக்ஷா நாமம் அதுதான்.

இந்த நிகழ்ச்சியைச் சொல்வதற்காக மாதாஜியை நேராகச் சென்று பார்க்கப் போனேன். விபுதானந்த தேவியை நேரில் பார்த்தேன்.

மாதாஜி என்னைப் பார்த்ததும், "இது என்ன காவி உடை?" என்றார்.

உடனே நான், "அம்மா, ஒரு சன்யாசி எனக்கு இதைக் கொடுத்தார்," என்றேன்.

மாதாஜி, "எந்த சன்யாசி உனக்குக் காவி கொடுத்தார். சன்யாசி உனக்குக் காவி கொடுத்தார் என்றால், நீ அவருடைய சிஷ்யனாகி விட்டதாய் அர்த்தமாகிவிடுமே! நீ அவருடைய சீடனாகி விட்டாயே.நீ எப்படிச் சன்யாசம் வாங்கலாம்?" என்று அந்த மாதாஜி 'ஓ' வென்று சத்தம் போட்டார்கள்!

எனக்கு அப்பொழுதுதான் 'ஷாக்' அடித்த மாதிரி இருந்தது.

ஒன்றுமே புரியவில்லை. "என்னடா இது? சன்யாசம் கொடுத்ததாக சொல்றாங்க. இந்த அம்மாவிடம் ஏன்தான் வந்து சொன்னோமோ?" என்று நினைத்தேன்.

ஏனென்றால் இந்த மாதாஜி என்னைப் பாராட்டுவார்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால், ஏன் இப்படி இதை ஒரு பெரிய பிரச்சினையாக எடுத்துக் கொள்கிறார்கள் என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

உடனே அந்த மாதாஜி, "எந்த சன்யாசி என்று சொல்லு, எனக்கு அவரைக் காட்டு," என்றார்.

நான், "அதற்கென்ன, வாங்க காட்டுகிறேன்," என்று சொல்லி நேரே அந்தக் குகைக்கு அருகில் அழைத்துச் சென்றேன்.

மாதாஜியை அழைத்து வந்து, எந்த குகைக்குள்ளிருந்து அவர் தினமும் வந்து போவாரோ, அதே குகைக்கு முன்னே எப்போதும் கூப்பிடுவதுபோல், "சாமி, சாமி," என்று கூப்பிட்டேன். வழக்கமாக அங்கு நின்று அவரைக் கூப்பிட்டாலே வெளியே வந்து விடுவார்.

விபுதானந்த தேவி வந்த உடனேயே, "சாமி, வெளியில் வாங்க. விபுதானந்த தேவி வந்திருக்காங்க. உங்களைப் பார்க்கணும்னு சொல்றாங்க," என்று கூப்பிட்டேன்.

ஒரு தரம் கூப்பிட்டேன் வரவில்லை.
இரண்டாவது தரம் கூப்பிட்டேன்
அப்போதும் வரவில்லை.

விபுதானந்த தேவி மாதாஜிக்கு "நான்
எங்கிருந்தோ காவித் துணியை திருடிக்
கொண்டு வந்துவிட்டேன்," என்று பயம்.

மாதாஜி விபுதானந்த தேவி

அந்த அம்மா என் பாட்டியின் உறவினர், அதிலும் பாட்டியினுடைய தோழி.

மாதாஜி உடனே, “டேய் எந்த சன்யாசி உனக்குக் காவி கொடுத்தாரா அல்லது எங்கேயாவது திருடிட்டு வந்து பொய் சொல்றியா?” என்று சொல்லி என்னை அடிக்க ஆரம்பித்துவிட்டார்.

நான் சொன்னேன், “இல்லை இங்குதான் அந்தச் சன்யாசி இருந்தார். அவர்தான் வந்து கொடுத்தார்,” என்று சொன்னேன்.

உடனே மாதாஜி, “எங்கிருந்து வந்தாங்க?” என்று கேட்டார்.

நான் அந்தக் குகையைக் காண்பித்து, “இங்கே இருந்துதான் வந்தாங்க,” என்று சொன்னேன்.

உடனே மாதாஜி, “ஒ! இந்தக் குகையா? வா,” என்று குகையில் கை வைத்துத் தள்ளினார். அப்பொழுதுதான் தெரிந்தது, அது குகையே கிடையாது! அது ஒரு சமாதி என்று.

எனக்கு ஷாக் ஆகிவிட்டது!

ஏனென்றால் அதுவரை நான் சொன்னதெல்லாம் பொய் சொன்ன மாதிரி ஆகிவிட்டது அல்லவா!

குகையே இல்லை என்கின்றபோது அந்தக் குகையிலிருந்து எப்படிச் சன்யாசி வெளியே வரமுடியும்? எப்படிக் காவி கொடுக்கமுடியும்? ஆனால், இது அத்தனையும் நடந்திருக்கிறது.

மாதாஜிக்கும் பயங்கர ஷாக் ! எனக்கும் ஷாக் !

நான் எங்கிருந்தோ காவியைத் திருடிக்கொண்டு வந்திருக்கிறேன் என்று அந்த மாதாஜி தெளிவாக முடிவெடுத்து விட்டார்கள். அதை மறைப்பதற்காகத்தான் இந்த மாதிரி “ச ன்யாசி வந்தார், கொடுத்தார்,” என்று பொய் சொல்வதாகவே விபுதானந்த தேவி முடிவு செய்துவிட்டார்கள்.

‘திருடிவிட்டு அதை மறைப்பதற்குப் பொய்யும் சொல்கிறான்’ என்று நினைத்து, கோபத்தில் மாதாஜி அங்கேயே ‘பளிச், பளிச்’ என்று நான்கு அறை கொடுத்தார்கள்.

நான் என்ன சொன்னாலும் அதை விபுதானந்த தேவி ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

“நீ எங்கிருந்தோ திருடியிருக்கிறாய். எங்கிருந்து எடுத்தாய்?” என்று ரொம்பக் கடுமையாக கேட்டார். ஒருவருக்கு ஒருவர் மீது சந்தேகம் வந்துவிட்டால், அதை மாற்றுவது அவ்வளவு லேசுப்பட்ட காரியமில்லை.

என்ன சொன்னாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாதபோது நாம் என்ன சொன்னாலும் அது மேலும் மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தும்.

ராமகிருஷ்ண பரமஹம்ஸர், சீடர்களின் சந்தேகங்களுக்கு எப்போதும் பொறுமையாகப் பதிலளித்துக் கொண்டே வருவார். சீடர்களின் சந்தேகங்களும் மறைந்து கொண்டே வரும். ஆனால், அந்தப் பதிலைப் பொருட்படுத்தாத சிலர் விதண்டாவாதமாகக் கேட்கும் கேள்விகளுக்கு என்ன செய்வாராம், ஒன்றும் பேசாமல் சாந்தமாக அவர்களுடைய கையைப் பிடித்துக் கொள்வாராம்.

அதுவரை பேசிக் கொண்டே இருந்தவர்கள், அமைதியாவது மட்டுமல்லாமல் அவர்களுக்குள் அந்தக் கேள்வி மீண்டும் எழவே எழாது. சக்தி பாய்ந்ததும், கேள்விகள் கரைந்து விட்டிருக்கும். விபூதானந்த தேவியின் சந்தேகம் அதிகமாகிக் கொண்டே வந்தது. ‘பளீ’ரென்று அடித்த பிறகு மேலும் மேலும் விளக்கம் அளிப்பதை நிறுத்தினேன்.

அப்போது அவரிடம் சொன்னேன்

"பாட்டி... உன் மேல் சத்தியம்!

என் மேல் சத்தியம்!

நம்மை ஆளும் இந்த அண்ணாமலையார் மீது சத்தியம்!

அவர்தான் வந்தார்.

அவர்தான் இந்தக் காவியை போர்த்திவிட்டார்," என்று விபூதானந்த தேவியின் தலை மீது, என் கையால் அடித்துச் சத்தியம் செய்தேன்.

பின் அவரது கையிலும் சத்தியம் செய்தேன்.

சத்தியத்தைச் செய்து விட்டு விபூதானந்த தேவியின் கண்களைப் பார்த்தேன். கரகர வென்று கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.

அருணகிரியோகீஸ்வரர் சன்யாசம் அளித்த பிறகு எனக்குள் என்ன அனுபவம் பொங்கிக் கொண்டிருந்ததோ, அதே அனுபவம் அவருக்குள்ளும் நிகழ்ந்தது. சக்தி பாய்ந்ததும் அவருக்குள் இருந்த சந்தேகம் கரைந்து விட்டது.

உடனே மாதாஜி கேட்டார்கள், "டேய், உண்மையாகவா சொல்ற? அவர் எப்படிடா இருந்தார்?" என்று கேட்டார்.

நான் சொன்னேன், "30, 35 வயது இருக்கலாம். நீளமான முடி இருந்தது, விபூதி வைத்திருந்தார். குங்குமம் வைத்திருந்தார். கண்கள் பளபளவென மிளிர்ந்தன. உடம்பில் ருத்ராக்ஷம் போட்டிருந்தார்," என்று அவரைப் பற்றி விளக்கினேன்.

உடனே மாதாஜி, "பேர் ஏதாவது சொன்னாராடா? எத்தனை நாட்களாக அவரை பார்க்கிறாய்?" என்று கேட்டார்கள்.

"ஒரு ஏழெட்டு மாதமாக கூட இருக்கலாம். நான்

> "அருணகிரியோகீஸ்வரரே
> உனக்குச் சன்யாசம்
> கொடுத்திருக்கிறார்."
> என்று பூரித்துப் போனார்.

வந்து கூப்பிடும் போதெல்லாம் வெளியே வருவார். இரண்டு பேரும் உட்கார்ந்து பேசுவோம்,” என்றேன்.

‘‘சரி, பெயர் ஏதாவது சொன்னாராட?” என்று கேட்டார்.

நான் சொன்னேன், “ஆமாம் பெயர் சொன்னார்.”

‘‘என்ன பெயர் சொன்னார்?’’என்றார்.

உடனே நான், ''அருணகிரியோகீஸ்வரர்,” என்றேன்.

நான் பெயரைச் சொன்ன உடனேயே, அந்தம்மா பளிச்சென்று என் காலில் விழுந்து கும்பிட்டார்கள்.... நன்றியுணர்வோடு என் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்கள்.

‘‘அருணகிரியோகீஸ்வரரே உனக்குச் சன்யாசம் கொடுத்திருக்கிறார்,” என்று பூரித்துப் போனார். அதிலிருந்து அவர் என்னைச் சிறுவனாகப் பார்க்கும் பார்வை மாறியது.

நன்கு புரிந்து கொள்ளுங்கள். அப்போது அந்த அம்மாவை பொறுத்தளவிற்கு, அவர் எனது குரு. அவர் என் காலிலே விழுந்து கும்பிட்டார் களென்றால்... அவர்கள் கையை பிடித்ததும் அவர்களுக்குள்ளும் அந்த ஆழ்ந்த அனுபவம் அந்த வினாடி நிகழ்ந்ததால்தான்!

விபுதானந்த தேவி தாரை, தாரையாகக் கண்ணீர்விட்டு அழ ஆரம்பித்து விட்டார்கள். அதுவரைக்கும் நான்தான் அழுது கொண்டு இருந்தேன்.

இப்போது சூழ்நிலை மாறி, மாதாஜி அழ ஆரம்பித்து விட்டார்கள்.

நான் புரியாமல் கேட்டேன், “ஏன்? ஏன்? ஏன் நீங்க அழறீங்க?’’

மாதாஜி, “உனக்குத் தெரியாதடா. நாங்கள் யாரைப் பார்ப்பதற்காக, யுக யுகமாகத் தவமிருக்கிறோமோ, காலங்காலமாகத் தவம் செய்கிறோமோ,

அவருடைய சமாதிக்குள்ளிருந்து அவரே வந்து உனக்கு தரிசனம் கொடுத்திருக்கிறார். அவரைப் பார்த்தது மட்டுமில்லாமல், அவரோடு விளையாடியும் இருக்கிறாய். அவரோடு பேசியிருக்கிறாய், பழகியிருக்கிறாய்,” என்று சொன்னார்.

அவர் சொன்னபிறகுதான் எனக்குத் தெரிந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சமாதி அடைந்த அருணகிரியோகீஸ்வரர் என்பவர் ஈஸ்வரருடைய அவதாரமாவார் என்று.

அருணகிரியோகீஸ்வரர் சமாதியடைந்து, 2000 வருடங்களுக்குமேல் ஆகி விட்டது அருணகிரி யோகேஸ்வரர் சமாதியின் மேல்தான் திருவண்ணாமலையில் ஆலயம் கட்டப்பட்டுள்ளது என்று அப்போதுதான் தெரிந்துகொண்டேன்.

வார்த்தைகளால் விவரிக்க முடியாத பேரனுபவம்

An Experience which cannot be explained with words

தரிசனம் கொடுத்தது அருணகிரியோகீஸ்வரர்தான் என்பதை அப்போதுதான் தெரிந்து கொண்டேன். இதோடு கதை முடியவில்லை, இப்போதுதான் கதையே ஆரம்பிக்கப் போகிறது.

மாதாஜி விபுதானந்த தேவிக்குத் தாங்காத வியப்பு! ஆச்சரியம்! ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும், என்னால் ஓரளவிற்குத்தான் பொய்சொல்லமுடியும் என்று! அதற்கு அடையாளமாய் ஒரு துணிவேறு சாட்சியாக இருக்கிறது.

அதற்குப்பிறகு விபுதானந்த மாதாஜி உடனே போய்விட்டார்கள்.

ஆனால், எனக்கு என்ன கவலையென்றால், நான் இத்தனை நாட்களாகப் பார்த்துக் கொண்டிருந்த நபர் அன்று வராமல் போய்விட்டாரே என்று.

> என்னைப்
> பொறுத்த மட்டில்,
> அருணகிரியோகீஸ்வரர்
> ஒரு
> சன்யாசி. தினந்தோறும்
> நான் பார்த்துக் பழகிக்
> கொண்டு இருந்த
> ஒருவர்.

இவ்வளவு நாளாக, கூப்பிட்ட உடனேயே வருவார். இந்த மாதாஜி வந்ததினால்தான் வரவில்லை என்று நினைத்தேன். ஒருவேளை, நாம் இந்த இரகசியத்தை வெளியே சொல்லியிருக்கக் கூடாதோ? விபுதானந்த தேவியிடம் நான் சொன்னதினால்தான் கோபித்துக் கொண்டு வெளியே வராமல் இருக்கிறாரோ?!

ஏனென்றால் என்னைப் பொறுத்தமட்டில், அருணகிரி யோகிஸ்வரர் ஒரு சன்யாசி. தினந்தோறும் நான் பார்த்துக் பழகிக் கொண்டு இருந்த ஒருவர்! விபுதானந்த தேவியைப் பொறுத்த மட்டில் அவர் எப்போதோ இறந்து போனவர்! இப்போது வந்து தரிசனம் கொடுத்து இருக்கிறார். ஒரு ஜீவசமாதி அடைந்த ஞானி வந்து தரிசனம் கொடுத்திருக்கிறார். அவ்வளவுதான்.

ஆனால், என்னைப் பொறுத்த மட்டில் அவர் வராமல் இருப்பது மிகப் பெரிய இழப்பு. அதுவும் ரொம்ப நாளாகப் பழகிய ஒரு ஆழ்ந்த ஈர்ப்புடைய தோழரை, ஒரு நண்பரை இழந்தால் எப்படி இருக்கும்? அதை விட ஆழமான இழப்பாக எனக்கு இருந்தது.

பக்தி ஸ்புரண தியான முகாமில் கலந்து கொண்டிருந்தீர்களென்றால், அதில் மஹாபாவத்தைப் பற்றி கேட்டிருப்பீர்கள். அதாவது ஐந்து பாவங்களையும் தாண்டி, தாமே அதுவாக உணர்வது மஹாபாவம்.

அந்த மகாபாவத் தொடர்பு அவருக்கும், எனக்கும் இருந்தது. ரொம்ப ஆழமான தொடர்பு. ஒரு ஏழெட்டு மாதத்திற்குள் ரொம்ப ஆழமாக உருவாகிவிட்டது.

அதாவது பள்ளி விடுமுறை விட்ட மே மாதத்திலிருந்து, ஜனவரி மாதம் வரை.

அப்படியென்றால் எட்டு மாதத்தில் அந்த ஆழமான தொடர்பு மலர்ந்திருந்தது.

"சாமி, சாமி,'என்று கூப்பிட்டாலும்,
அழுதாலும், சத்தமிட்டாலும் வரமாட்டேன்
என்கிறார். இதுநாள்வரைக்கும் கூப்பிட்டால்
உடனே வருவார். இப்போது குப்பம்மாவை
அழைத்துவந்து கூப்பிட்டால் வரவே
இல்லை. அதனால் அந்த அம்மா வீட்டிற்குத்
திரும்பியவுடன் துக்கம் தாளாமல் நான்
'ஓ' வென்று அழ ஆரம்பித்து விட்டேன்.
எதையோ இழந்த ஒரு துக்கம் என்னை
வாட்டியது.

பக்தி ஸ்புரண தியான
முகாமில் கலந்து
கொண்டிருந்தீர்களென்றால்,
அதில் மஹாபாவத்தைப் பற்றி
கேட்டிருப்பீர்கள். அதாவது
ஐந்து பாவங்களையும் தாண்டி,
தாமே அதுவாக உணர்வது
மஹாபாவம்.

நன்கு ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள், துக்கம் என்றால் சாதாரண துக்கம் இல்லை.

பாகவதத்தில் ஒரு கதை வருகிறது.

ஒரு கோபிகைக்குக் கிருஷ்ணருடைய புல்லாங்குழல் கீதம் வனத்திலிருந்து கேட்கிறது. கேட்டவுடனேயே வீட்டிலிருந்து கிருஷ்ணரைப் பார்ப்பதற்காக ஓடுகிறார். வீட்டின் நுழைவாயிலில் மாமியாரும் நாத்தனாரும் உட்கார்ந்திருக்கின்றனர்.

அவர்கள் இருவரும், "எங்கே போகிறாய்?" என்று கேட்கின்றனர்.

இவளால் இவர்களை மீறி ஓடவும் முடியவில்லை. ஆனால் அவர்கள் தடுப்பதினால் போகாமலும் இருக்க முடியவில்லை. வீட்டின் நுழைவாசலை விட்டம் என்பார்கள்.

அந்த நிலைப்படியை பிடித்துக்கொண்டு அப்படியே நிற்கிறாள்.

இந்தக் கதை ரொம்ப அழகான கதை... நிலைப் படியைப் பிடித்துக் கொண்டு அப்படியே நிற்கிறாள்.

கிருஷ்ணருடைய கானத்தைக் கேட்பதனால், அந்த இனிமையான புல்லாங் குழலோசையைக் கேட்டவுடனேயே உடலில் ஏற்படுகின்ற ஆனந்தம், கிருஷ்ணனுடன் வாழ்ந்த அந்த நினைவுகள் மேலெழுந்து அதில் ஏற்படுகின்ற ஆனந்தத்திலே அவள் சொர்க்கத்தின் உச்சியைச் சில வினாடிகளில் தொட்டு விடுகிறாள். அவளுடைய நல்ல கருமங்கள் எல்லாம் அந்தச் சொர்க்க அனுபவத்தில் எரிந்து போய்விட்டதாம்.

அன்பு அதிகமானாலே
அவருடைய அன்பை
இழந்திடுவோமோ
என்கிற பயம்
இருந்துகொண்டே
இருக்கும்.

போகவிடாமல் மாமியாரும், நாத்தனாரும் தடுப்பதினால், போக முடியவில்லை என்ற மாளாத துக்கத்தினால், நரகத்தின் உச்சியை சில வினாடிகளில் பார்த்துவிடுகிறாள். அவளின் எல்லாவித கெட்ட கருமங்களும் இந்த நரக வேதனையில் எரிந்து போய்விட்டதாம்.

சுகப்பிரம்மம் மிக அழகாக இதைச் சொல்கிறார், "இது மாதிரி நல்ல கருமமும், கெட்ட கருமமும் சேர்ந்து எரிந்து போனதினால், அந்த இடத்திலேயே அவள் ஞானமடைந்து கீழே விழுந்தாள்."

நானும் அதே சூழ்நிலையில்தான் அன்று இருந்தேன்.

அதே மனநிலையில்தான் உருகித் துடித்துக்கொண்டு இருந்தேன். அங்கே அந்த அருணகிரியோகீஸ்வரரைப் பார்த்து, அந்த யோகியோடு ஒன்பது மாதம், அந்த ஏழெட்டு மாதங்கள் வாழ்ந்த அந்த நினைவு அலைகள் பொங்குவதினால் ஏற்படுகிற ஆனந்தம் ஒருபக்கம்.

அதாவது, உங்கள் உயிருக்கே ஒருவன் தோழனாகக் கிடைத்தால் எப்படி இருக்குமோ, அந்த மாதிரி இருந்தது.

உயிருக்கே ஒரு நண்பன் கிடைத்தால் எப்படி இருக்குமோ, அந்த ஆனந்தம், அவரை நினைப்பதினாலே பொங்குகின்ற ஆனந்தம் ஒரு பக்கம்!

'அவருக்குத்துரோகம் செய்து விட்டோமோ, நினைத்ததற்கு எதிராக நடந்துவிட்டோமோ? அதனால்தான் எவ்வளவு கூப்பிட்டாலும் அதன் பிறகு வரவே மாட்டேன்கிறாரோ?' என்கிற துக்கம் மறு பக்கம்.

அன்பு அதிகமானாலே அவருடைய அன்பை இழந்திடுவோமோ என்கிற பயம் இருந்துகொண்டே இருக்கும். இந்தப் பயம் ஒரு பக்கம், ஆனந்தம் ஒரு பக்கம்.

அதனாலேயே என் நல்ல கருமங்கள் எல்லாம் எரிந்து போய்விட்டது.

அவரோடு அந்த ஒன்பது மாதம் வாழ்ந்தது, அந்த நினைவெல்லாம் நினைத்து நினைத்துப் பொங்குவதினாலே ஏற்பட்ட அந்த ஆனந்தத்தில் என்னிடமிருந்த நல்ல கருமங்களெல்லாம் எரிந்துவிட்டன.

இன்னொரு பக்கம் 'அவர் வராமலேயே போய்விடுவாரோ' என்ற துக்கத்தில் உடலைச் சமைப்பதற்காக எடுத்துவந்த கெட்ட கருமங்கள் எல்லாம் எரிந்து விட்டன.

எப்படி அந்தக் கோபிகை இரண்டிற்குமிடையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாளோ, அது போன்றே நானும் இரண்டிற்குமிடையில் உழன்று கொண்டு இருந்தேன். இந்த இரண்டிற்கும் இடையில் அலையாடிக் கொண்டிருந்தேன்.

இறுதியில் இரவு 10 மணி இருக்கும்.

மணி பத்தாகிவிட்டது. பத்தாகிவிட்டால் கோவில் நடை மூடுவதற்குள் எல்லோரும் சேர்ந்து பிரகாரத்தை சுத்தம் செய்வார்கள்.

அந்தக் கோவில் பாதுகாவலர்கள், பக்தர்கள் எல்லோரையும் வெளியில் அனுப்பிவிட்டு சுத்தம்

'அவர் வராமலேயே
போய்விடுவாரோ' என்ற
துக்கத்தில் உடலைச்
சமைப்பதற்காக
எடுத்துவந்த கெட்ட
கருமங்கள் எல்லாம்
எரிந்து விட்டன..

செய்து கொண்டு இருக்கின்றனர். அந்தக்
காவல்காரர் எனக்கு மிகவும் நெருங்கிய
நண்பர். அதனால் என்னை மட்டும்
அனுப்பவில்லை.

ஏனென்றால், நான் அவர்களுக்குச் சு த்தம் செய்வதற்கு பைப் பிடித்தாக வேண்டும், அதனால் நான் மட்டும் அங்கு உட்கார்ந்திருந்தேன். கொஞ்ச நேரம் கழித்து கோவில் நடை சாத்துகின்ற நேரம் வந்தது. இறுதியில் பள்ளியறை வைத்து நடை சாத்துகின்ற நேரம் வந்ததும் அங்கிருந்த காவல்காரர் சொன்னார், "ஏம்பா! நடைசாத்துறாங்க. பள்ளியறை எல்லாம் வெச்சுட்டாங்க. கோவிலுக்குள்ளே சென்று தரிசனம் செய்துவிட்டு வந்திடேன்."

நானோ இங்கு அழுது கொண்டு இருக்கிறேன். அதுவும் துக்கம் தாளாமல் அழுது கொண்டே இருக்கிறேன்.

"உள்ளே சென்று தரிசனம் செய்துவிட்டு வந்திடலாமில்லையா, கோவில் மூடப்போறாங்க," என்று சொன்ன உடனே எழுந்து வேகவேகமாக ஓடினேன்.

இந்த சாமி இவ்வளவு கூப்பிட்டும் வரவில்லையே என்ற துக்கம் தொண்டையை அடைத்தது. இருந்தாலும், உணர்வில்லாமல் ஓடினேன். என் கண்களில் தாரை தாரையாக, தன்னால் நீர் கொட்டிக் கொண்டிருந்தது. அதைத் துடைக்க வேண்டும் என்ற எண்ணம் கூட அப்போது எழவில்லை.

கனமான இதயத்தோடு இதை விட ஒரு பெரிய துக்கம் இருக்காது என்ற நிலையில் உடல் தன்னால் கோயிலுக்குள் நுழைந்தது.

பள்ளியறை பூஜை நேரமாதலால் பூசாரிகள் எல்லோரும் வெளியே சென்று இருந்தார்கள். அப்போதெல்லாம் 24 மணி நேரமும் அங்கேயே இருக்க மாட்டார்கள். மேலும், நான் அங்குதான் பெரும்பாலும் இருப்பேன் என்பதால் அங்கிருந்தவர்களும் என்னைப் பெரிதாக பொருட்படுத்தவில்லை.

நேராக உள்பிரகாரத்திற்குச் சென்றேன். என் உள்ளமெல்லாம், "சாமி! சாமி! சாமி!" என்றே துடித்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அங்கு வேறு யாருமே இல்லை. நேராகக் கர்ப்ப கிரகத்திற்குள்ளும் ஓடினேன்.

எப்பவும் கும்பிடுவது போல, கைகளைக் கூப்பி சாமியைக் கும்பிடுவதற்குக் கண்களை மூடும் தறுவாயில்தான் சட்டென்று உரைத்தது. இங்கு ஏற்கெனவே யாரோ இருக்கிறார்கள்!

யாராக இருக்கும்? என்று பார்ப்பதற்குக் கண்களைத் திறந்து பார்த்தேன். திகைத்து நின் றேன். புல்லரித்துப் போனேன். நரம்பெல்லாம் உருகிப் போனது... அங்கு லிங்கத்தின்

மீது அமர்ந்து என்னைப் பார்த்து அருணகிரியோகீஸ்வரர் சிரித்துக் கொண்டிருந்தார்.!

அவரைப் பார்த்ததும் இழந்ததைப் பெற்ற ஆனந்தம் பொங்கியது.

"சாமீ... இங்கயா இருக்கிறீங்க! நான் உங்களை எங்கெங்கெல்லாம் தேடிக்கொண்டிருக்கி றேன்," என்று சப்தமாகச் சொல்லிக் கொண்டே ... "சாமீ," என்று பெருங்குரல் எடுத்துக் கதறியபடியே உள்ளே ஓடினேன். உயிருக்கும் உயிரான உயிரைப் பிரிந்த சோகம் போக்க கைகளை நீட்டி அவரைத் தொட்டேன்.

அதற்குள் அவரும் தன் கைகளை என் மீது வைத்தார்.

என் கைகளும் அவருடைய கைகளும் இருவரின் உடலையும் ஒரே நேரத்தில் தொட்டுக் கொண்டன. அந்த வினாடியில்தான் unclutching எனும் மஹா பேரனுபவம் என்னுள் நிகழ்ந்தது.

அதை வார்த்தைகளால் என்னால் விவரிக்க முடியவில்லை. வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். நான் அவருக்குள் நான் இருப்பதையும்; அவர் எனக்குள் இருப்பதையும் அனுபவமாக உணர்ந்தேன்.

அன்றிலிருந்து நான் வேறு; அவர் வேறு என்ற பேதம் இல்லாமல் பொங்கிக் கொண்டே இருக்கின்ற அந்த அனுபவம்தான் இன்றுவரை உடலை இயக்கிக் கொண்டு இருக்கிறது.

அந்தச் சக்திதான் இந்த எல்லா வேலைகளையும், எல்லா அற்புதங்களையும், எல்லாச் சாதனைகளையும் செய்து கொண்டிருக்கிறது.

எப்படி அந்தச் சிறிய பறவை, பெரிய பறவையோடு ஒன்றி மலர்ந்ததோ....

எப்படி நல்ல கருமமும், கெட்ட கருமமும்
தீர்ந்ததினால் அந்தக் கோபிகை, ஞானம்
அடைந்தாளோ, அதே மாதிரி, அந்த வினாடி,
'அவர் வேறல்ல. நான் வேறல்ல' என்று
மிகத்தெளிவான அனுபவம் மலர்ந்தது.

birds perched on a branch

முக்கிய குறிப்பு:

'பெரிய ஆலமரம் ஒன்று திருவண்ணாமலையின் தெற்குப் பாகத்தில் இருக்கிறது. தெற்குச் சாரலிலேதான் அருணகிரியோகீஸ்வரருடைய இடம் இருக்கிறது' என்பதை ரமணமகரிஷியும் உறுதி செய்கிறார்.

இதேபோன்று என்னுள் பக்தியையும், சிரத்தையையும் மலர்த்திய நிகழ்ச்சி ஒன்றையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். சிலருக்கு இதெல்லாம் வெறும் மூடநம்பிக்கையாக, கட்டுக்கதைகளாகக் கூட இருக்கலாம்.

இவர்களைப் பார்த்தீர்களென்றால், அவர்கள் வாழ்க்கையில் நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்ச்சி யையும் குறைக்கூறிக் கொண்டு இருப்பார்கள், எதற்கெடுத்தாலும் தர்க்க ரீதியாகவே பார்ப்பார்கள், புரிந்துகொள்வார்கள், அவர்கள் தங்கள் வாழ்க்கையை ஒவ்வொரு வினாடியும் தவறவிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்,

தங்களுக்குள் இருக்கும் ஆனந்தத்தை உள்ளுக்குள் தேடாமல் வீணடித்துக் கொண்டிருப்பவர்கள். வரலாற்று ரீதியாகவும், அனுபவ ரீதியாகவும் உண்மையான இந்தச் சம்பவத்தை உணர்வு பொங்க ஒருவர் கேட்பதனாலேயே அவரின் நினைவில் ஓடுவதனாலேயே அந்த நிலையை அடைந்துவிட முடியும்.

தெய்வ ரகசியம்

• தெய்வங்கள் மனித உருவில் இருப்பது ஏன்? மனித உருவங்கள் தெய்வ உருவங்கள் என்பதை உணர்த்துவதற்காகத்தான்.

• உருவ வழிபாடு பற்றிய உங்களின் கருத்து? அருமையான துவக்கம். ஆனால் முடிவல்ல. விவேகானந்தர் சொல்கிறார், "தேவாலயத்தில் பிறப்பது தவறில்லை. ஆனால் தேவாலயத்திலேயே இறக்கக் கூடாது"

• அப்படியென்றால் எது முடிவு? கடவுளாக மாறுவதே இறுதி இலக்கு.

• அதுதான் இலக்கு என்றால்? நீங்கள் ஒரு கடவுளா? நான் கடவுள் என்பதை நிரூபிப்பதற்காக வரவில்லை. நீங்கள் கடவுள் என்பதை நிரூபிப்பதற்காகவே வந்திருக்கிறேன்.