இலட்சிய தியானம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Meditation for goal
இந்தத் தியானத்தை ஆழ்ந்து உள்வாங்கிக் கொள்ளுங்கள்.
கண்களை மூடி, எந்தக் கட்டுறு மனப்பாங்கு வந்தாலும், எந்த எண்ணங்கள் வந்தாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல், மனத்தை நிலைபெறச் செய்யுங்கள்.
எந்தக் கட்டுறு மனப்பாங்கு மேலெழுந்தாலும், வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு மேலெழுந்தாலும், ஆச்சார்யார் கட்டுறு மனப்பாங்கு மேலெழுந்தாலும், எந்தக் கட்டுறு மனப்பாங்கு மேலே எழுந்தாலும், அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல், திடத்தன்மையினாலே லட்சியத்தையே எண்ணி, லட்சியத்தையே உணர்ந்து, உணர்வை ஒன்றாக்கினீர்களானால், லட்சியம் அடையப்பட்டு விடும்.
நித்யானந்த நிலை எனும் லட்சியம், மிக எளிதாக இதன்மூலம் அடையப்படுகிறது என்பதை உணர்ந்து, கண்களை மூடி, கபாலத்தின் மத்தியில் உணர்வை ஒன்றாக்கி, "நித்யானந்த நிலை மாத்திரமே வேண்டும்; வேறொன்றும் வேண்டியது இல்லை" என்று திடத்தன்மையோடு அமர்ந்திருந்தால், அந்தத் திடத்தன்மையினாலேயே லட்சியத்தை அடைந்து விடுவீர்கள்.
இந்த ஞானக் கருத்துகளாலும் தியானத்தாலும் அந்தத் திடத்தன்மை, நித்யானந்த நிலையை அடைந்து, நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தத்தில் கரைந்து, நித்யானந்தமாகிட ஆசீர்வதிக்கிறோம்.


ஞானத்தை வாழ்தல்
ஜீவன் முக்தி, எங்கோ இருக்கும் இலக்கு அல்ல. வாழ வாழ பொங்கும் தேன் அது.
வாழலாம் ஞானத்தையே!

- பால்வெளித் திரளில் பூமியை காப்பாற்றி வைக்க 650 கோடி ஜீவன்களும் ஜீவன் முக்தர்களாக வேண்டியதில்லை நீங்கள் ஜீவன் முக்தனானால் போதும்!
இல்லை
ஜீவன் முக்தனாக
முயற்சித்தாலே கூட போதும்!
- உங்களுக்கு... இரண்டே வாய்ப்புகள்தான்
- சிங்கம்
- நரி இரண்டே உணர்வுகள்தான்
- ஆனந்தம்
- துக்கம் இரண்டே வாழ்வுகள்தான் 1 .ஜீவன் முக்தியை வாழ்தல் 2.ஜீவன் முக்தியை வாழாதிருத்தல்
- ஜீவன் முக்தியை வாழ்ந்தால் ஆனந்த கர்ஜனை செய்யும் சிங்கமாவீர்கள்
இல்லாவிட்டால்
துக்கம் கதிர் வீசும்
நரியாயிருப்பதுதான்
எஞ்சிய வாய்ப்பு
- ஜீவன் முக்தியை வாழ ஆரம்பித்த வினாடியே நீங்கள் சிங்கக் குட்டிதான் குட்டி சூரியன்தான் .
- ஜீவன் முக்தி உதயம் நிகழ்ந்தால் போதும் உங்களுக்காக பூமி தன்னைக் காப்பாற்றிக் கொள்வாள்.
ஞான தீக்ஷை
வாழ்வின் இலட்சியத்திற்கு விழிப்படைவதே ஜீவன்முக்தி Awakening to the purpose of life is 'Living Englightenment'
இது சாத்தியம் என்பது சத்தியம். The truth is, It is possible
இப்போது மனிதனாயிருந்தாலும் ஞானத்தின் பிரதிபலிப்புதான் நீங்கள் Even though you are a man now, you are a reflection of super consciousness
அனுபவித்திராத அனுபவம் An Experience which I have never experienced
கடவுளோடு விளையாட முடியும் You can play with God
வார்த்தைகளால் விவரிக்க முடியாத பேரனுபவம் An Experience which cannot be explained with words
ஞான தீக்ஷை
அது முதன்முறையாக எனக்குள் நடந்த அனுபவம்.
என்னுடைய வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஆழமான அனுபவம் என்றால், இதுதான்.
ஒரு பத்து வயது இருக்கும். அப்போது நடந்த ஆன்ம ரீதியான அனுபவத்தை சாதாரணமாக, தர்க்கரீதியான விளக்கம் அளிக்க முடியாது. ரொம்ப ஆழமான அனுபவம் என்பதினாலே, இந்தக் கதையை முதலில் புரிந்து கொண்டீர்கள் ஆனால், அதன் பிறகு நாம் தொடர்ந்து உள்ளே போகலாம்.
> ஆழமான சத்தியங்களை
> ஆழ்ந்து உள்வாங்குவதே
> பல வழிகளில் உணர்வுக்
> கதவுகளை
> திறக்கும்.
ஒரு சின்ன கதை
ஒரு இளவரசன் ஊதாரித்தனமாக இருந்ததினாலே, அரசர் அவரை நாடு கடத்தி விடுகிறார். இளவரசன் வேறு நாட்டிற்குச் சென்று வீதிவீதியாக அலைந்து பிச்சை எடுத்துச் சாப்பிடுகிறார். 'தான் ஒரு காலத்தில் இளவரசனாக வாழ்ந்தவன்' என்ற ஒரு நினைப்பையே விட்டுவிட்டு, அதை முற்றிலும் மறந்து பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டிருந்தார்.
அந்த அரசருக்கு வயதாகி விட்டது. அடுத்து சாக வேண்டிய நேரமும் எட்டிக்கொண்டிருந்தது. அப்போது அரசவையில் இருந்த மந்திரிகள் எல்லோரும் சேர்ந்து, "அரசே உங்களுக்கோ வயதாகிவிட்டது. சாக வேண்டிய தருணம் வந்து விட்டது. இந்த நாட்டை அடுத்து ஆட்சி செய்ய, இன்னொரு அரசன் வர வேண்டும். நீங்கள் இருக்கும் போதே இளவரசனுக்குப் பட்டம் கட்டியாக வேண்டும்," என்றார்கள்.
அதற்கு அந்த அரசர் "இல்லையில்லை. அவனைக் கூப்பிடக் கூடாது. அவன் போனவன் போனவன்தான்," என்று சொல்கிறார். ஆனால் அவர்கள் ஒத்துக்கொள்ளவே இல்லை.
"இல்லை, வேறு வழியே இல்லை. அரசே! எங்களுக்கு ஒரு அரசன் வேண்டும். அதனால் இளவரசனை அழைத்துக்கொண்டு வந்தே ஆகவேண்டும்," என்று அடம் பிடிக்கிறார்கள்.
இறுதியில் அரசரும் ஒப்புக்கொள்கிறார். அமைச்சர்கள் தேர், யானை என்று படைகளைத் திரட்டிக் கொண்டு ஊர், ஊராகச் சென்று தேடுகிறார்கள். பக்கத்து நாட்டிற்குச் சென்று தேடுகிறார்கள். காட்டிற்குள் தேடுகிறார்கள். இளவரசன் எங்கு இருக்கிறார் என்று விடாமல் தேடுகிறார்கள். அப்போது ஓர் இடத்தில், ஒரு கடைக்கு எதிரில் ஒரு பிச்சைக்காரர் நின்று கொண்டிருக்கிறார். அவரைப் பார்த்த உடனேயே, அவர் நம் இளவரசர்தான்' என்று மந்திரி கண்டுபிடித்துவிட்டார்.
அவரிடம் சென்று, "இளவரசே! என்னைத் தெரிகிறதா? உங்களை அரசர் மீண்டும் அழைத்து வந்து அரசராக்கச் சொன்னார்," என்று சொல்லி காலில் விழுந்தார்.
பயிற்சி கொடுத்து
அவதார
புருஷர்களை
உருவாக்க
முடியாது.
அந்த மந்திரி, பிச்சைக்காரரின் காலில் விழுந்து காலைத் தொட்டதுதான் தாமதம், "அய்யா! தருமம் செய்யுங்கள்," என்று கேட்டுக்கொண்டிருந்த பிச்சைக்காரன், "எங்கே என் ரதம் வந்துவிட்டதா?" என்று கேட்டார்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், அந்த வினாடிவரை பிச்சைக்காரனாக இருந்தவன், உடனே அரசராக மாறிவிட்டார். தம்முடைய சுயநிலையைத் திரும்பப் பெற்றுவிட்டார்.
அந்த வினாடியே, அவருடைய உடல்மொழி (body language) முற்றிலும் மாறிவிட்டது. அதன்பிறகு அவரை அரசராக மாற்றுவதற்கு ஏதாவது பயிற்சி கொடுக்க வேண்டுமா என்ன?
அதுபோல் என்னுடைய வாழ்க்கையில், ஒரு வினாடி பொழுதில், 'நான் ஒரு அவதாரம்' என்று உணர்ந்தேன்.
அதை அன்று அந்த அவதார புருஷர் நிகழ்த்திவிட்ட கணங்களை நினைத்தால், இப்போதுகூட என் உடலே இனிக்கிறது! முதலில் 'அவதாரம்' என்பதை நன்கு ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். அதாவது, மற்றவர்களை விட வித்தியாசமானவன் என்பதை உணர்ந்தேன்.
ஒரு வினாடிப் பொழுதிலேயே அதை உணர்ந்தேன். இனி சொல்லப் போகும் ஆழமான சத்யங்களை ஆழ்ந்து உள்வாங்குவதே பல வழிகளில் உங்களுடைய உணர்வுக் கதவுகளைத் திறக்கும்.
முதல் விஷயம்... பயிற்சிக் கொடுத்து அவதார புருஷர்களை உருவாக்க முடியாது.
நீங்கள் நினைக்கலாம், "இவருக்கு முதலில் பேச்சுத்திறமை வந்திருக்கும். அதன்பிறகு எழுதுகின்ற திறமை வந்திருக்கும். அதன் பிறகு நிறைய திறமை தெரிய வந்திருக்கும். இப்படி படிப்படியாக வளர்ந்திருப்பார்" என்று.
அவதார புருஷராவதற்குப் பயிற்சி கிடையாது.
அந்தப் பிச்சைக்காரனுக்கு இளவரவசராக ஆவதற்கு யாரும் பயிற்சியளிக்கவில்லை. தாம் ஒரு இளவரசன் என்பதை உணர்ந்த உடனேயே, அந்தப் பிச்சைக்காரத் தன்மை மறைந்து விட்டது.
இந்தக் கதை ரொம்ப அழகான கதை. அணிந்திருப்பது பிச்சைக்கார உடையாக இருந்தாலும், "எங்கே என் தேர்? தேர் தயாராக உள்ளதா?"அவர் கேட்ட விதத்தில் பிச்சைக்காரத் தன்மை மறைந்து விட்டது. அதுபோல் இன்னும் ஆழமான பரிமாணத்தில், 'நான் ஒரு அவதாரம்' என்று உணர்ந்த உடனேயே, 'நான் ஒரு மனிதன்' என்ற எண்ணம் அழிந்து விட்டது.
இந்தக் கதையை நன்கு ஆழமாகக் கேளுங்கள். Unclutching நிகழ்ந்த பொழுதில்தான், "நான் ஒரு அவதாரம், அதாவது வேறு ஒரு காரணத்திற்காக மனித உடல் எடுத்திருக்கின்ற ஒரு சக்தி," என்பதை உணர்ந்தேன்.
பயிற்சி கொடுத்து அவதார புருஷர்களை உருவாக்க முடியாது
அதற்காக நீங்கள் எல்லோரும் சாதாரணமானவர்கள் என்று சொல்லவில்லை.
நீங்கள் எல்லோரும் 'கடவுள் சக்தி'தான். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. எந்த வினாடி பொழுதில் நீங்களொரு அவதாரம் என்று உணர்கிறீர்களோ.., அதைத்தான், 'ஞானமடைதல்' என்று சொல்கிறோம். அதைத்தான் முழுமை அடைதல் என்று சொல்கிறோம்.
வாழ்வின் இலட்சியத்திற்கு விழிப்படைவதே ஜீவன்முக்தி
Awakening to the purpose of life is 'Living Enlightenment
நீங்கள் இப்பொழுது பிறப்பின் காரணத்தைப் பற்றிய விழிப்புணர்வில்லா மல் இருக்கிறீர்கள். நீங்கள் பிறப்பெடுத்ததன் காரணத்திற்கான விழிப்பைப் பெற்றீர்களானால் நீங்களும் அவதாரம்தான்.
நீங்கள் பிறப்பெடுத்தன் காரணத்திற்கான விழிப்பைப் பெற்றீர்களானால் நீங்களும் அவதாரம்தான்.
என்னுடைய சிறப்புகளைச் சொல்லும் போதே, உங்களுக்குள்ளும் அது நிகழ்வதற்கான சாத்தியம் உள்ளது என்பதனால்தான், இந்தச் சம்பவத்தையே சொல்கிறேன்.
"இரண்டு கைகளையுடைய ஒருவர் ஞானமடைந்தார்," என்று சொன்னால், இரண்டு கைகளையுடைய அனைவரும் நிச்சயம் ஞானம் அடையலாம் என்பதுதான் சத்தியம். அந்த லட்சியத்திற்கு விழிப்படைவதே ஜீவன் முக்தி.
இது சாத்தியம் என்பது சத்தியம்.
The truth is, It is possible
ஒருவர், “நான் இறைவன் என்று உணர்ந்திருக்கிறேன்,” என்று சொல்லும் பொழுது என்ன அர்த்தம் என்றால், ‘நான் உணர்ந்திருக்கிறேன்’ என்ற பெருமையல்ல. ‘நீங்களும் உணர முடியும்’ என்ற சாத்தியத்தைச் சொல்கிறோம்.
என் பெருமையைச் சொல்வதற்காக இதை எழுதவில்லை. சாத்தியக் கூற்றைச் சொல்வதற்காக எழுதுகிறோம்.
உங்கள் எல்லோருக்குள்ளும்கூட, இது நடப்பதற்கான சாத்தியம் இருக்கிறது என்று சொல்வதற்காகத்தான் எழுதுகிறோம்.
இப்போது மனிதனாயிருந்தாலும் ஞானத்தின் பிரதிபலிப்புதான் நீங்கள்
Even though you are a man now, you are a reflection of super consciousness
ஒரு பத்து வயது இருக்கும். சிறு வயதிலிருந்தே அண்ணாமலையார் கோவிலுக்குத் தினமும் சென்று சேவை செய்வோம். சேவை செய்வதென்றால் அங்குத் தரையைக் கூட்டிச் சுத்தம் செய்வது, தரையைக் கழுவி விடுவதற்காக பைப் பிடிப்பது என இப்படி ஏதேனும் ஒரு காரணத்தை உருவாக்கியாவது தொடர்ந்து கோவிலுக்குச் சென்று சேவை செய்வோம். பள்ளி மாணவர்கள் போன்று விளையாடிக்கொண்டிருந்த காலம் அது.
இப்போதுதான்..... கதைக்குள்ளே நுழைகி றோம்.
இதைச் சொல்லிய பிறகுதான் பிறப்பையே சொல்லியிருக்க வேண்டும்.
இந்தக் கதை புரிந்தால்தான் பிறப்பின் இரகசியமே புரியும்.
பிறப்பை இன்னும் விரிவாகச்
சொல்லவேண்டும் என்று நினைத்தேன்.
ஆனால், இந்தக் கதை புரிந்தால்தான்

அருணகிரியோகீஸ்வரர் மண்டபம் ஜீவ சமாதி அமைந்திருக்கும் இடம்.
அந்தக் கதை புரியும். அதனால்தான் பலவிதங்களில் எனக்கு நிகழ்ந்த அனுபவத்தை உங்களுக்குப் புரிய வைக்க முயற்சி க்கிறேன்.
அதுதான் இறுதியான நாடகம் (Ultimate Drama).
“நான்
அருணகிரியோகீஸ்வரர்.
நான் இங்கேதான்
இருக்கிறேன்.”
ஒரு நாள் என்ன ஆனது, ரொம்பத் தீவிரமாக, எப்படியாவது கடவுள் தரிசனம் கிடைக்க வேண்டும் என்ற சிந்தனை தீவிரமாக எழுந்தது. அப்பொழுதே ஒரு ஆழமான தேடுதலும், ஏக்கமும் இருந்ததினாலே, கோயிலுக்குப் பின்புறம் இருக்கின்ற அண்ணாமலையார் சந்நிதிக்குப் பின்புறம் அமர்ந்து இதையே சிந்தனை செய்து கொண்டிருந்தேன்.
அங்கே ஒரு சின்ன குகைமாதிரி இருந்தது. அந்தக் குகைக்குள்ளிருந்து திடீரென்று ஒருவர் வெளிவந்தார். ஒரு 30 வயது மதிக்கத்தக்க ஒரு சன்யாசி அவர்.
தகதகவென்று பொன்மேனி, பொன்னிறம், கண் அவ்வளவு பளபள வென்று பார்ப்பதற்கே அவ்வளவு அருமையாக இருந்தார். இடுப்பில் ஒரு காவி. தோளில் ஒரு காவி. கையிலும் கழுத்திலும் ருத்ராக்ஷம். நீண்ட விரிந்த கூந்தலோடு வந்தார்.
அவர் வந்த உடனே நான் கேட்டேன், "சாமி, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? நீங்கள் யார்?" அவர் சொன்னார், "நான் அருணகிரியோகீஸ்வரர். நான் இங்கேதான் இருக்கிே றன்."
'அது ஒரு குகை. அதன் உள்ளே ஒரு வழி இருக்கும். அந்தக் கதவை திறந்தவுடனே குகை மாதிரி போகும், அதிலிருந்துதான் வருகிறார்' என்று நான் நினைத்தேன்.

அருணகிரியோகீஸ்வரர் பரமஹம்ஸருடன் அமர்ந்து பேசிய இடம்.
ஏனென்றால் திருவண்ணாமலையில்
எங்குப் பார்த்தாலும் நிறைய குகைகள்
இருக்கும். அந்த மாதிரி, இங்கும்
இருக்கும்போலிருக்கிறது.
அதுபோல் ஒரு குகையில்தான்
இவரும் இருக்கிறார் என்று
நினைத்தேன்.
என்னருகில் வந்து உட்கார்ந்தார்.
வெகு நாட்கள் பழகிய மிக நெருங்கிய
உறவினர் போன்ற நெருக்கத்தை
உணர்ந்தேன்.
ரொம்ப நேரம் இருவரும் பேசிக்
கொண்டு இருந்தோம். அதன் பிறகு
குகைக்குள் போய்விட்டார்.
அதன் பிறகு நான் எப்போது அந்தப் பக்கமாக வந்து, "சாமி, சாமி," என்று கூப்பிட்டாலும், உடனே வெளியில் வந்துவிடுவார்.
உட்கார்ந்து என்னோடு ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருப்பார். நிறைய ருத்ராக்ஷம் கொடுப்பார்.
சில நேரத்தில் சாப்பாடும் கொடுப்பார்.
சில நேரத்தில் நான் சாப்பாடு எடுத்து வந்து அவருக்குக் கொடுப்பேன். கூப்பிட்ட உடன் வருவார்; சாப்பிடுவார்; பேசுவார்; போய்விடுவார். இது மாதிரி ஒரு ஆறுமாத காலம் சென்றிருக்கும். இந்தப் பழக்கம் இப்படியே சென்று கொண்டிருந்தது.
பள்ளி விடுமுறை, மே மாதத்தில் வரும். அப்போது ஆரம்பித்த பழக்கம். விடுமுறை தினத்தில் காலையில் எழுந்த உடனேயே அங்குச் சென்று விடுவேன்.
அவர்பாட்டுக்கு என்னோடு வந்து உட்கார்ந்திருப்பார், பேசிக்கொண்டிருப்பார். நெருங்கிய தோழர்கள் மாதிரி ஆகிவிட்டோம். இந்த ஈர்ப்பு ரொம்ப ஆழமான ஈர்ப்பாகிவிட்டது.
இந்தக் கதையை ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்.
உபநிடதத்தில் ஒரு அருமையான கதை இருக்கிறது.
ஒரு மரத்தில் இரண்டு கிளிகள் இருந்ததாம். அதில் ஒரு கிளி மேல்கிளையில் அமைதியாக உட்கார்ந்திருந்ததாம். கீழ்கிளையில் உள்ள சிறிய கிளி, கீழே உள்ள கிளைகளில் உள்ள பழங்களைக் கொறித்துச் சாப்பிடுமாம்.
திடீரென்று பழங்களில் ஒன்று கசப்பாக இருந்துவிட்டால், உடனே அந்தக் கிளி நினைக்குமாம், 'அய்யய்யோ!, இந்த மாதிரி இனிப்பு, கசப்பு என்று பழங்களை சாப்பிட்டுக் கஷ்டப்படுவதைக் காட்டிலும் அந்த மேல் கிளையில் சாந்தமாக அமர்ந்திருக்கும் அந்தக் கிளியைப் போன்றே அமர்ந்திருக்கலாம்' என்று நினைக்குமாம்.
அந்தச் சாந்தமாக, ஆனந்தமயமாக, ஒளிமயமாக இருக்கின்ற அந்தப் பறவையைப் பார்த்து, அதை நோக்கிச் செல்ல ஆரம்பிக்குமாம்.

அந்தச் சமயத்தில் மீண்டும் ஒரு பழத்தைச் சாப்பிட ஆரம்பிக்குமாம். இனிப்பான பழங்களைச் சாப்பிடுகின்றவரைதான் அது ஜாலியாக, சந்தோஷமாக இருக்குமாம். அது மேலே இருக்கிற பறவையைப் பற்றி நினைக்கவே நினைக்காதாம்.
கசப்பான பழத்தைச் சாப்பிட்டவுடன், 'அய்யய்யோ! வாழ்க்கையே இப்படித்தான்' என்று நினைக்குமாம்.
கசப்பான பழத்தைச் சாப்பிட்ட உடனேயே மேலே உள்ள பறவையைப் பற்றி நினைக்குமாம். இல்லையென்றால் மேலே இருக்கின்ற பறவையைப் பற்றி நினைக்காது.
நாம்கூட நம் வீட்டில் கஷ்டம் வந்தால்தான் கடவுளை நினைக்கிறோம். வீட்டில் கஷ்டம் வந்தால், உடனே, 'சாமி மாதிரியே ஆயிடலாம்பா' என்று நினைக்க வேண்டியது. வீட்டிலே சந்தோஷமாக இருந்தால் நினைத்துப் பார்ப்பதுகூட கிடையாது. அதுதான் மனம்.
அது மாதிரியே, அந்தக் கசப்புப் பழத்தைச் சாப்பிட்ட உடனேயே மேலே போகலாம் என்று நினைக்கும். இது மாதிரி அந்தச் சின்ன பறவை விளையாடி விளையாடி இறுதியில் ஒரு நாள் பொறுமையாக மேலிருக்கும் பெரிய பறவையிடம் வந்தடைந்து விட்டதாம்.
அந்தப் பெரிய பறவைக்கு அருகே வர வர, மிக அருகில் வந்த பிறகுதான்
அந்தச் சின்ன பறவைக்குத் தெரிந்ததாம்.... "தான் அந்தப் பெரிய பறவையினுடைய ஒளியிலே கரைந்து கொண்டு இருக்கிறோம்'' என்று! அருகில் வந்த உடனே, திடீரென்று அந்தப் சின்னப் பறவை இதை புரிந்துகொண்டதாம்.
'நாம் தனியான ஒரு சின்னப் பறவையே கிடையாது. அந்தப் பெரிய பறவையினுடைய நிழல்தான் தன்னை தனி ஒன்றாக நினைத்துக் கொண்டிருக்கிறது' என்று சிறிய பறவைக்குப் புரிந்ததாம்.
நன்கு புரிந்து கொள்ளுங்கள்.
நீங்களும் உலகத்திலே
பல்வேறு துக்கங்களுடனும்,
கஷ்டங்களுடனும் போராடி,
கசப்பைச் சுவைத்து, அந்தப்
பறவையைப் போல தாவித்
தாவி மேல் கிளைக்கு
வரும்பொழுதுதான் புரியும், 'நீ
ங்கள் தனியான ஜீவனல்ல.
ஞானியினுடைய பிரதிபலிப்புதான்
நீங்கள்' என்பது புரியும்.
