கர்ண மோட்சம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Karna moksha
அடுத்து ஒரு அருமையான நிகழ்ச்சி கர்ணன் பற்றியது...
கர்ணன் யார் என்றால், உங்களுடைய மனத்தில் நீங்களே உங்களுக்கென்று உருவாக்கி வைத்திருக்கிற தர்மம்தான் கர்ணன்.
நமக்கென்று ஒரு தர்மத்தை உருவாக்கி வைத்திருப்போம். பல பேர் இதுபோல சொல்வதுண்டு "எனக்கு குரு நம்பிக்கையெல்லாம் இல்லையப்பா. , நான் நல்லபடியாக இருப்பேன். என்னால் முடிந்த சேவை செய்வேன். ஜனங்களுக்கு நல்லது செய்வேன்..."
இந்த மாதிரியான சிக்கல்தான் கர்ணன். தர்மத்தில், சேவையில் சிக்கியிருப்பவர்கள்.
அர்ஜுனன் இங்குதான் மாட்டிக் கொண்டிருக்கிறார்.
யாா் யாரெல்லாம் இந்த மாதிரி சொல்லிக்கொண்டு இருக்கிறார்களோ, அவர்கள் தெரிந்து கொள்ளவேண்டியது, தாங்கள் எங்குச் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதே!
"இதோ பாரப்பா, நான் சாமியிடம் எல்லாம் செல்வதில்லை, குருவிடம் எல்லாம் செல்வதில்லை. ஞானியிடம் எல்லாம் போவது இல்லை. ஆனால் என்ன? எனக்கு நல்லது என்று தோன்றியதைச் செய்கிறேன்.
தங்களுக்கென்று ஒரு
ethicsவைத்துக்கொண்டு
அதை வாழ்வதோடு
இருப்பார்களே தவிர,
அதைத் தாண்டிய
சத்தியத்தைப் போய்ப்
பார்ப்பதில்லை
நிறைய சேவை செய்கிறேன். நான் நல்லபடியாக இருக்கிறேன்.
என்னைச் சுற்றி இருக்கிறவர்களை நன்றாக வைத்திருக்கிறேன்," என்று பேசும் தர்ம பிரபுக்கள், தர்மவான்கள், தர்மவாதிகள். இவர்கள் கர்ணன் நிலையில் மாட்டிக் கொண்டிருப்பவர்கள்?
தங்களுக்கென்று ஒரு நியதியை வைத்துக்கொண்டு, அதை வாழ்வதோடு இருப்பார்களே தவிர, அதைத் தாண்டிய சத்தியத்தைப் போய்ப் பார்ப்பதில்லை. அவர்கள்தான் கர்ணன் நிலையில் மாட்டிக் கொண்டு இருக்கிறவர்கள்.
ஒரு பெரிய லீலை செய்து, உங்களை அதிலிருந்து வெளியே கொண்டுவரப்பட வேண்டிய நிலைதான் கர்ணன் நிலை.
அதாவது, ஒரு சீடனை ஞானமடைய வைக்க, குரு என்னவெல்லாம் பாடுபடுகிறார் என்று, மஹாபாரதக் கதையின் இந்தப் பரிமாணங்களைக் கேட்பதனால் தெரிந்து கொள்ளலாம்.
இந்தமாதிரி தர்மத்தில் சிக்கி இருக்கிற பக்தர்களும் வருவார்கள். "நல்ல தான, தர்மம் எல்லாம் செய்கிறேன். நல்ல வேலைகள் செய்கிறேன். யாருக்கும் கெடுதி செய்வது இல்லை. யாருக்கும் கெட்டது செய்வது இல்லை."
ஆனால், இந்த ஞானகுரு, ஞானம் மாதிரியெல்லாம் தாங்கள் தேடி செல்வ தில்லை என்ற நிலையில் சிக்கி இருக்கிறவர்கள் எல்லாம் யார்?
கர்ணன் நிலையில் மாட்டிக் கொண்டு இருக்கிறவர்கள்தான்.
அப்போது, என்ன செய்தாக வேண்டும்?
அவர்களுடைய தர்மத்தால், அவர்களை ஒரு அளவுக்குமேல் அழைத்துக் கொண்டு போக முடியாது என்கிற சத்தியத்தை, அவர்களுக்குக் காட்ட வேண்டும், புகட்ட வேண்டும்.
இப்போது பரமாத்மாவே இறங்கி வந்து, ஒன்றுமில்லாதவர் கேட்பது போல கேட்டு, அவர்களின் தர்மத்தையெல்லாம் தாண்டிய சத்தியம் ஒன்று இருக்கிறது என்று, அவர்களுக்குக் காட்டுகிற லீலையை, கிருஷ்ண பரமாத்மா அங்குச் செய்தார்.
புத்தர் பிக்ஷை எடுக்க, தரைக்கு இறங்கி வருவது, அவரிடம் இல்லாததினால் அல்ல.
உங்களிடம் எது இல்லை என்பதைக் காட்டுவதற்காக அல்லது உங்களிடம் தேவையில்லாதது நிறைய இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக.
நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும், புத்தர் பிக்ஷை எடுக்க வருவது, உங்களிடம் ஒரு அளவுக்கு மேல் இல்லை என்பதை அளந்து காட்டுவதற்கே!
உங்களிடம் இருப்பதை வைத்தே, முழுத்திருப்தியோடு இருந்து விடாதீர்கள் என்பதற்காகத்தான்; அதையும் தாண்டிய பொக்கிஷங்களை அடைய வேண்டியவர் நீங்கள் என்பதற்காகத்தான். எதுவும் தேவைப்படாத குருமார்கள், தங்களின் சீடர்களிடமிருந்து பிக்ஷையை சில நேரங்களில் ஏற்றுக் கொள்வார்கள்.
அடைய வேண்டியதை அடையுங்கள் என்று உங்களுக்குக் காட்டுவதற்காகத்தான், புத்தர் பிக்ஷை பாத்திரம் எடுத்துக் கொண்டு வந்தார்.
கிருஷ்ணனும் அதையேதான் செய்தார். கர்ணனிடம் சென்று, “கர்ணா, உன் தர்மத்தை எல்லாம் எனக்குத் தானமாகக் கொடு,” என்று கேட்டார்.
எதனால்?
இதைத் தாண்டிய ஒன்று இருக்கிறது, இப்போது நீ அடைந்ததே எல்லாமென்று நினைத்து விடாதே என்பதை உணர்த்துவதற்காக.
இப்போது அந்தத் தர்மம், கர்ணனைச் சுற்றி இருக்கிற வரைக்கும், அடைய வேண்டியதைத் தாம் அடைந்து முடிந்து விட்டதாக நினைத்துக் கொண்டு இருப்பார்.
இந்த மாதிரி இருக்கிற பக்தர்கள்தான், அந்தத் தர்மம் என்ற கட்டுறு மனப்பாங்கில் சிக்கி இருக்கும் பக்தர்கள்.
ஞானப் பாதையில் செல்லும்போது, இந்தக்
புத்தர் பிக்ஷை எடுக்க,
தரைக்கு இறங்கி வருவது
அவரிடம் இல்லாததினால்
இல்லை. உங்களிடம்
இல்லை என்பதைக்
காட்டுவதற்காக!
கட்டுறு மனப்பாங்கே ஒரு தடையாக வந்து கொண்டே இருக்கும்.
"குருவாவது, கிருவாவது, அதெல்லாம் வேண்டாம் விடப்பா. நமக்கு நல்லதென்று தெரிந்ததைச் செய்யலாம். வாழலாம்," என்று ஒதுங்கி விடுவார்கள். இந்த நிலையைத்தான், "கர்ணன் அளவிலேயே சிக்கிக் கொள்கிறார்கள்," என்று சொல்வது.
அப்போது ஞான சத்குருவே இறங்கி வந்து, "அப்பா, நீ இருப்பது முழுமையான நிலை இல்லை," என்று காட்டுவது ஒன்றுதான் விடிவு.
நீங்கள் வைத்திருப்பதை வாங்கிக் கொண்டு, ஞான சத்குரு அடுத்த நிலைக்கு உங்களை எடுத்துக் கொண்டு போகிறார்.
உங்களைச் சுற்றி ஒரு பத்து கோடி ரூபாய் இருந்தால், எல்லாம் அடைந்து விட்டதாக நினைக்கிறீர்கள். அந்தப் பத்து கோடி ரூபாயை எடுத்துக்கொண்டு, உங்களைச் சுற்றி, உங்களைப் பார்க்க வைத்தால்தான், ஓஹோ, இப்போதுதான் எல்லாவற்றையும் அடைந்து விடவில்லை. நாம் அடைய வேண்டியது ஏதோ ஒன்று இருக்கிறது என்கிற தெளிவு உங்கள் உள் மனத்திற்கு வரும்.
அதனால்தான் கிருஷ்ணன், கர்ணனை காத்துக் கொண்டிருந்த தர்மத்தைத் தானமாக வாங்குகிறார்.
அந்தக் கதைதான் கர்ண மோட்சம்.
கர்ணனின் தர்மம்
கிருஷ்ணருக்கு முக்கியமில்லை.
தர்மத்தில் சிக்கியிருக்கும் கர்ணனின் போர் தர்மத்தை அழிப்பதே கிருஷ்ணரின் நோக்கம். அதனால்தான், ஞான சத்குருநாதர்கள் தங்களுக்கு வரும் எல்லாத் தானங்களையும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். தேர்வு செய்தே ஏற்றுக் கொள்வார்கள்.
தார்மீக கட்டுறு மனப்பாங்கும் தாண்டப்பட வேண்டும்
The dharmic conditioning called morality has to be overcome
அருமையான அடுத்த பகுதி...
தர்மம் என்கிற கட்டுறு மனப்பாங்குதான் கர்ணன்.
அதை எப்படி சாய்ப்பதென்றால்... "நாகாஸ்திரத்தை எய்து சாய்த்துவிடு," என்று சொன்னார் கிருஷ்ணர். அருமையான கதை இது. நாகாஸ்திரம் என்பது வேறு ஒன்றும்
> ஞான
> அனுபவங்களான
> குண்டலினி
> சக்திதான்
> நாகாஸ்திரம்.
இல்லை. உங்களுடைய தர்மத்தைத் தாண்டி உங்களுக்குள் ஏற்படுகிற ஞான அனுபவங்கள்.
சாதாரணமாக ஒரு மனிதர் நல்லவராக, முறையானபடி வாழ்ந்தால், அவர் ஒரு நல்ல மனிதராக வாழ்வார். ஆனால், ஞான அனுபவங்கள் அவருக்கு நடந்திராது.
ஞான அனுபவங்கள் நடப்பதுதான், ஒருவர் ஆன்மீகத்தில் வளர்கிறாரா, இல்லையா என்பதைக் காட்டும். அப்படியானால் அது எப்போதுதான் நடக்கும்? தர்மத்தை எல்லாம் தாண்டிப் போனால்தான், ஞானம் பற்ற ஆரம்பிக்கும். அந்த ஞான அனுபவங்களைத் தரும் குண்டலினி சக்திதான், நாகாஸ்திரம்.
கர்ணன், அந்தத் தர்மத்தைத் தாண்டி ஞானத்திற்குள் போக வேண்டும்.
கர்ணன் என்ற அந்தத் தார்மீக கட்டுறு மனப்பாங்கைத் தாண்டி, இந்த ஜீவாத்மா ஞானத்துக்குள் போயாக வேண்டும்.
தொடர்ந்து சீடன் செய்து கொண்டே இருக்கிற தர்மத்தைத் தடை போட்டு நிறுத்தியதுதான், கர்ணனுடைய தேர் சிக்கி, நின்று போய்விடுகிறது என்று சொல்வது, விளக்குவது.
தொடர்ந்து யாராவது 10 மணி நேரம் தானம் செய்து கொண்டே இருந்தால், அல்லது அடிக்கடி தானம் செய்து கொண்டிருந்தால் அவர்களேகூட கர்ணனாக மாறிவிட முடியும்.
"எனக்கு ஞானகுருவெல்லாம் வேண்டாம். தானம் செய்கிறேன். எனக்கு அது போதும் அப்பா."
இப்படி இருப்பவர்களுக்கு என்ன செய்ய வேண்டும்?
அவர்களுக்குச் செய்ய வேண்டிய முதல் வேலை என்னவென்றால், செய்கிற அந்த 10 மணி நேர தானத்தைச் செய்யவிடாமல், இடையூறு செய்ய வேண்டும்.
கர்ணனுக்கு அதைத்தான் செய்தார் கிருஷ்ணன்.
தர்மமாகச் சுழன்று கொண்டிருக்கிற சக்கரத்தைத் தடைபோட்டு நிறுத்துவது சீடனுக்காக குரு உருவாக்கும் நுட்பம்.
கர்ணனுக்கு இருக்கிற ஏவலாளிக்கு சல்லியன் என்று பெயர். இது போன்ற கர்ணத்தன்மையிலே மாட்டிய நிலைமையில் இருக்கிறவர்களுக்கு, சிலர் உதவியாளர்கள் மாதிரி இருப்பார்கள்.
சரியாக, அந்தத் தர்மம் நடப்பதற்கு ஒரு கணக்காளர் இருப்பார். பொருளாளராக ஒருவர் இருப்பார்.
அவரைக் கர்ணனிடம் இருந்து பிரிக்க வேண்டும். அப்படிப் பிரித்துதான், கர்ணன் மீது மிக ஆழமாக ஆதிக்கம் செலுத்திய தர்மம் எனும் கட்டுறு மனப்பாங்கிலிருந்து அவரைக் கிருஷ்ணர் மீட்டெடுத்தார். கர்ணனுக்கு ஞானம் அளிக்கவேண்டும் என்பதற்காகக் கிருஷ்ண பரமாத்மா மிகப்பெரிய வேலையை இங்கு செய்து முடித்திருக்கிறார்.
ஆழமாக உள்நோக்கிப் பார்த்தீர்களானால்
புரியும். உங்கள் வாழ்க்கையில் நடந்து
கொண்டிருக்கும் சம்பவங்களோடு ஒப்பிட்டுப்
பார்த்தால் எல்லாம் தெளிவாகப் புரியும்.
பணத்தை நிறைய செலவு செய்து, செய்கிற
தர்மத்தினாலேயே சுகமாக இருந்தீர்கள்
என்றால், நீங்கள் கர்ணன் என்ற அளவிலேயே
மாட்டிக் கொண்டு இருக்கிறீர்கள்.
> "ஞான அனுபவங்களைக்
> காட்டித்தான், தர்மத்தைத்
> தாண்டி ஒரு மனிதனை
> எடுத்துக் கொண்டு வர
> முடியும்."
>
> -கிருஷ்ணர்.
இல்லை, சில மணி நேரங்கள் தியானம் செய்வதனாலேயே ஏற்படுகிற சுகத்தினாலே, திருப்தியாக இருந்தீர்கள் என்றால், அப்போதும் நீங்கள் கர்ணனில்தான் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள். தொடர்ந்து செய்கிற உள்ளுலக சாதனையிலோ அல்லது வெளியுலக சாதனையிலோ திருப்தி ஏற்படுவதாயிருந்தால் கிருஷ்ணன் அந்தச் சாதனையை உடைப்பார். அந்தச் சாதனைகளைத் தொடர்ந்து செய்ய முடியாமல் செய்து விடுவார்.
ஒருவேளை, தர்மத்தினால் ஏற்படுகிற திருப்தி, உங்களுக்கு இருந்தால் என்ன செய்வார்? தர்மத்திற்காக செய்கிற எல்லா விஷயத்தையும் உடைத்து விடுவார்.
உங்களுக்கு ஏவலாளியாகிய சல்லியனைக் காணாமல் போகச் செய்து விடுவார்.
சல்லியன் ஓடிவிட்டான். அடுத்து தொடர்ந்து தர்மம் செய்வது தடைப்பட்டு விட்டது.
அதுதான், அந்தத் தேரைப் பூமி மீது அழுத்தி, மேற்கொண்டு நகர முடியாமல் நிற்கச் செய்வது. கர்ணன் உதவிக்கு ஆளின்றி மேற்கொண்டு தேரையும் முன்னோக்கிச் செலுத்த முடியாமல் தனித்து நின்றான்.
அதைத் தூக்கி நிறுத்துவதற்காக, கர்ணன் படாத பாடுபட்டுக் கொண்டிருந்தான்.
அப்போது கிருஷ்ண பரமாத்மா சொன்னார், உன்னுடைய ஞான அனுபவங்களை அவன் மீது எய்வாயாக. ஞான அனுபவங்களைக் காட்டித்தான், தர்மத்தைத் தாண்டி ஒரு மனிதனை எடுத்துக் கொண்டு வர முடியும்.
பெரும்பாலான நல்ல மக்களை பார்த்தீர்கள் என்றால், அவர்கள் தர்மத்தில்தான் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். கர்ணன் நிலையில்தான் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
நல்ல பெரிய, பெரிய கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வார்கள். கோயிலுக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பார்கள். ஆனால் ஞானகுருவிடம் போகமாட்டார்கள். இவர்கள் கொடுப்பார்கள்; ஆனால், பெறமாட்டார்கள். தானம் கொடுப்பார்கள்; ஆனால், ஞானம் பெற மாட்டார்கள்.
என்ன செய்வார்கள்? கோவிலைக் கட்டி கும்பாபிஷேகம் செய்வார்கள்.
தியானம் செய்வார்கள்.
ஜெபம் செய்வார்கள். எப்போது பார்த்தாலும் நமசிவாயம் சொல்வார்கள். தீக்ஷை எடுத்துக் கொள்வார்கள். ஆனால், இவர்கள் அனைவரும் எந்த அளவில்தான் வந்துதான் நின்றுகொண்டு இருக்கிறார்கள்? கர்ணனில் வந்து சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். அங்கே என்ன நடக்க வேண்டும் என்றால், அவரின் அலுவலக அதிகாரி ஓடிப்போக வேண்டும்.
இதற்கெல்லாம் துணையாக இருக்கிற அதிகாரிகள் ஓடிப்போக வேண்டும். அவர்கள் செய்துகொண்டு இருக்கிற சாதனைகள் தடைப்பட வேண்டும்.
இது நடந்ததென்றால், அவர்களின் கர்ணன் தடுமாறிப் போவான். அவர்களின் தார்மீக கட்டுறு மனப்பாங்கு ஆடிப்போகும்.
அப்போதுதான், அந்த ஞான அனுபவங்களைப் பற்றி அவர்களுக்குச் சொல்லப்பட வேண்டும். அப்போது என்ன ஆகும்? இதுவரைக்கும் நாம் செய்து கொண்டிருக்கும் தர்மம் போதாது, அதிலேயே வாழ்க்கை முடிந்து போகவில்லை. ஞானகுரு வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வார்கள்; கட்டுறு மனப்பாங்கைத் தாண்டி வெளியேறுவதற்காக குருவைத் தேடி வருவார்கள்.
கர்ணனில் சிக்கியவர்களைத்தான், தர்மப் பிரபுக்கள் என்று சொல்லலாம். தர்மப் பிரபுக்கள் எல்லாமே கர்ணனில் மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
கர்ணனை அடித்து வீழ்த்தியபின் என்னவாயிற்று? அடுத்து இருந்த மிகப் பெரிய பாறை, மாபெரும் ஞானத்தடை உடைந்தது. லட்சியம் தெளிந்தது.
அர்ஜுனன் தார்மீக கட்டுறு மனப்பாங்கையும் அழித்து முடித்து விட்டான்.
அதற்கு அடுத்து முக்கியமான எதிரி, முக்கியமான போட்டி சகுனி
நல்லவரின் ரகசியம்
- யார் யோக்கியமானவர்? நீங்கள் அயோக்கியத்தனம் எனச் சொல்லும் குணங்களை, அவரிடம் நீங்கள் கண்டுபிடிக்காதவரை... அவர் யோக்கியர்!
- யார் அயோக்கியர்? ஒருவரின் யோக்யமான நல்ல குணங்களை அவரிடம் நீங்கள் கண்டுபிடிக்காத வரை... அவர் அயோக்கியர்!
உங்களுடனே இருக்கும் சகுனிதான் உங்களுடைய பட்டறிவு
The intellect that remains with you is what Sakuni
சகுனி யார் என்றால், உங்களை அறியாமலேயே, எல்லோர் மேலேயும், சந்தேகம் வரவழைத்து, தன்மேல் மட்டும் சந்தேகமே வராமல் பார்த்துக் கொள்கிற பட்டறிவுதான் சகுனி.
சகுனி, மற்ற எல்லோர் மீதும் துரியோதனனுக்கு சந்தேகம் வர வைத்து விட்டான்.
துரியோதனன் மனத்தில் எல்லோர் மேலும் சந்தேகம் வரவைத்து, எல்லோரையும் நம்ப விடாமல் செய்து விட்டான்.
ஆனால், இவன் மீது மட்டும் சந்தேகம் வராமல் பார்த்துக் கொண்டான்.
முதல் குற்றவாளி யார்?
சகுனிதான்.
துரியோதனனை அழிப்பதற்காகவே, துரியோதனன் கூடவே உட்கார்ந்து கொண்டு, ஆனால் தன்னைத் தவிர, மற்ற எல்லோருமே துரியோதனனை அழிப்பதற்காகத்தான் இருக்கிறார்கள் என்பது போல, துரியோதனனுக்குப் புரிய வைத்து, துரியோதனனுடைய மனத்திலே மாயையை ஏற்படுத்தியவன் சகுனி.
நம்முடைய தர்க்க அறிவு அப்படித்தான்.
நம்மை அழிப்பதற்காகவே, நம்முடன் உட்கார்ந்து கொண்டு, ஆனால் அதைத் தவிர, மற்ற எல்லாவற்றையும் சந்தேகப்படுகிற மாதிரி பார்த்துக் கொண்டு, அதைச் சந்தேகப்படாமலே இருக்க வைக்கிற அந்தப் பகுத்தறிவுக்குத்தான் சகுனி என்று பெயர்.
அடுத்து சகுனியோடு யுத்தம்.
சகுனியை எப்படி அழிப்பது?
நேர்கொண்டு அப்படியே அழிப்பது. அவ்வளவுதான்.
வேறு வழியே கிடையாது.
அதைத்தான் கிருஷ்ணர் செய்தார்.
தர்க்க அறிவை மட்டும் ஒன்றும் செய்ய முடியாது. புறந்தள்ளுவது மூலமாகவே அதை அழித்து விட முடியும்.
> உங்களை அறியாமலேயே
> எல்லோர் மேலேயும்
> சந்தேகம் வரவழைத்து,
> தன்மேல் மட்டும்
> சந்தேகமே வராமல்
> பார்த்துக் கொள்கிற
> பட்டறிவு தான் சகுனி
சீடரின் பட்டறிவு எனும் சகுனியிடம் இருந்து அவரைக் காப்பாற்றுவதற்குதான் குருவே தவம் செய்தாக வேண்டும்.
சீ! சும்மா உட்கார் என்றால் பட்டறிவு அழிந்து போய்விடும். அதனால்தான் என்ன செய்தார்? மிக எளிமையாகச் சகுனியை கிருஷ்ணர் அழித்து விட்டார்.
மஹாபாரதத்திலும் சரி, உங்களின் வாழ்விலும் சரி பட்டறிவை அழிப்பது சுலபம்தான்.
ஆனால், அதற்கு உங்களைத் தயார் செய்வதற்கு ஞான சத்குருநாதன் பெரிய தவம் செய்தாக வேண்டும்.
படிப்படியாக உங்களுக்கான நுட்பங்களை தந்து, நம்பிக்கை தந்து, குருபக்தி ஆழமாக உங்களுக்குள் பொங்கும்வரை காத்திருந்து சகுனியை அழிக்க வேண்டும்.
அகங்காரத்தைத் தனியாக அழிக்க முடியாது
The Ego cannot to be destroyed alone
கடைசியாக வருவதுதான் துரியோதனன். நம்முடைய அகங்காரம். இது மிக முக்கியமான காட்சி. அந்த இடத்தில் ஜீவாத்மாவால் கூட அகங்காரத்தை அழிக்க முடியாது. அங்கே மற்றொரு துணை வேண்டும்.
அஹங்காரத்தை ஜீவாத்மாவினுடைய ரஜோ குண பலம்தான் தேவைப்படுகிறது. துரியோதனனை அழிக்க உதவும் ஜீவாத்மாவினுடைய ரஜோ குண பலம்தான் பீமன். ஆகவே பீமனை அழைத்துக் கொண்டு வரச்சொன்னார்.
அந்த அகங்காரம் என்ன செய்கிறது?
குளத்திற்குக் கீழே சென்று மறைந்து கொண்டு இருக்கிறது.
துரியோதனன் குளத்திற்குக் கீழ் சென்றுதான் மறைந்திருக்கிறான்.
உங்களால் நேரடியாக, உங்களின் அகங்காரத்தைக் கண்டுபிடித்து அதை அழிக்க முடியாது.
அது என்ன செய்யும்? உங்களுக்குள்ளேயிருக்கும் சித்தம் என்கிற குளத்துக்குள்ளே மறைந்து கிடக்கும்.
சித்தம் என்றால் உங்களுடைய எண்ணங்கள். அதுதான் சித்தம். பொங்கிக் கொண்டே இருக்கிற எண்ணங்கள்.
அதனுடைய ஒரு மூலையில் அகங்காரம் என்கிற துரியோதனன் மறைந்து கிடப்பான். அதை வெறுமனே அர்ஜுனனால்
உங்களால்
நேரடியாக,
அகங்காரத்தைக்
கண்டுபிடித்து
அழிக்க முடியாது.
வெளியே எடுக்க முடியாது.
அர்ஜுனனுடைய ரஜோ குணமாகிய பீமனை அழைத்து வருகிறார். ஜீவாத்மாவால் மட்டும் முடியாது. ஜீவாத்மாவுடைய பலமான அதாவது புத்தி, தீ (dhee) என்கிற பலம் வேண்டும்.
ஜீவாத்மா செய்த எல்லாத் தவத்தினுடைய சாரம்தான் பீமன்.
புத்தி என்கிற பலம். 'தீ' (dhee என்று உச்சரிக்கவும்) என்கிற பலம்.
அதை எடுத்துக் கொண்டு வரச்சொன்னார். அதோடு பீமன் வந்து இறங்கினார்.
அப்போது கிருஷ்ணர் சொன்னார், “துரியோதனனை வெளியே அழை.”
பீமன் கூப்பிட, துரியோதனன் வெளியே வந்தான். அகங்காரம் வெளியே வந்தது, சி த்தத்தை விட்டு.
சித்தம் என்கிற குளத்தை வற்றச் செய்தால், துரியோதனன் என்ற அகங்காரம் வெளியில் தெரியும்.
அப்படியென்றால் என்ன அர்த்தம்?
எண்ணங்கள் இல்லாமல் செய்ய வேண்டும்.
எண்ணங்கள் இல்லாமல் செய்தால் அகங்காரம் வெளியில் தெரியும்.
அகங்காரம் வெளியில் தெரிந்த உடனே, அதற்கு மிகப் பெரிய கோபம் வந்துவிடும்.
பெரிய, பெரிய மனிதர்கள் கூட, அவர்களின் அகங்காரம் வெளியே தெரியும்படி செய்தலையோ அல்லது அவர்களின் அகங்காரத்தைத் தொட்டுவிட்டாலோ அவர்கள் நிலைதடுமாறி விடுவார்கள். கோபம் மூக்கை பொத்துக் கொண்டு வரும் என்பார்களே, அது இப்போதுதான் நடக்கும்.
யாராலும், யாருடைய அகங்காரத்தையும் அழிக்கவே முடியாது. ஞான சத்குருவின் உதவி பெற்றுதான், அதை எளிதில் அழிக்க முடியும்.
வெறுமனே ஒருவரின் அகங்காரம் தொடப்பட்டால், அதிகபட்சமாக தாங்கள் தாக்கப்பட்டதாக உணர்வார்கள். சீற்றமடைவார்கள்.
“என்னுடைய தவத்தையா கலைத்தாய்,”
என்று துரியோதனனுக்குக் கோபம் வந்தது
போலத்தான் அவர்களுக்கும் வரும்.
துரியோதனனுக்கு மஹா கோபம் வந்து
விடுகிறது, “என்னுடைய தவத்தையா
கலைத்தாய்?” என்று வேகமாய்க் குதிக்க
அகங்காரத்தை நேரடியாக
அழிக்க முடியாது.
அதனால்தான் கிருஷ்ணர்
மிகவும் ஆழமாக ஒரு
நுட்பத்தைக் கொடுத்தார்.
அதுதான் கடைசியாகக்
கொடுக்கப்படுகிற
ஆனந்த கந்த தீக்ஷை
ஆரம்பித்துவிட்டான். குதிக்கும் அகங்காரத்தை ஒன்றும் செய்யமுடியாது.
அகங்காரத்தை எங்கு அடித்தும் சாகடிக்க முடியாது. ஏனென்றால் எங்கே அடித்தாலும் அது பலமாக இருக்கும்.
ஒரே ஒரு இடத்தில் அடித்தால் மட்டும்தான் அது விழும். அந்த ரகசியமான இடத்தை ஞான சத்குருவால்தான் சொல்ல முடியும். அதனால்தான் எந்தத் தொடையில் அடிக்க வேண்டும் என்று தட்டித் தட்டிக் காண்பிக்கிறார்.
கிருஷ்ணன் என்ன செய்தார்? தொடையைத் தட்டித் தட்டிக் காண்பித்து, "இங்கே அடி, இங்கே அடி," என்று சொல்கிறார்.
எந்த இடத்தில் அடித்தால் அகங்காரம் கீழே விழும் என்று, ஞான சத்குருநாதனுக்குத்தான் தெரியும். "உன்னுடைய தவம் முழுமையும் ஒன்றாக்கி அந்த இடத்தில் அடி," என்று சொல்கிறார்.
அகங்காரத்தை எந்த இடத்தில் அடித்தீர்களென்றாலும் அழிக்க முடியாது. அது ஸ்திரமானது.
உங்களைவிட ஸ்திரமான அகங்காரத்திற்குக்கூட, பலவீனமான இடம் ஒன்று உங்களுக்குள் இருக்கிறது.
நான் யார்? என்று கேட்பதுதான் ஆயுதம்.
நான் யார்? என்கிற கேள்விதான் பலவீனமான இடமான தொடையிலே அறையப்பட்ட கதாயுதம் மாதிரி.
வலது தொடையிலே அறையப்பட்ட கதாயுதம்.
நான் யார்? என்று கேட்கிற அந்தக் கேள்விதான், கதாயுதம்.
கூர்மையான, ஆழமான தவம்தான் பீமன்.
அகங்காரம்தான் துரியோதனன். துரியோதனன் என்ற அகங்காரத்தை நீங்கள் எந்த விதத்திலும் அழிக்க முடியாது.
எப்படியாவது ஒரு விதத்தில் சுற்றி வந்து அது நின்றுவிடும்.
எப்படியாவது ஒரு விதத்தில், வேறு வழியில், மீண்டும் மீண்டும் அது வந்து விடும்.
பீஷ்மராக வந்ததும், இந்தத் துரியோதனனுடைய பிரதிநிதிதான்.
சகுனியும், துரியோதனனுடைய பிரதிநிதிதான்.
எல்லோருமே துரியோதனனுடைய பிரதிநிதிகள்தான்.
ஆனால், அவர்கள் அத்தனை பேரையும் அழித்து முடித்தாலும், அகங்காரத்தை நேரடியாக அழிக்க முடியாது.
அதனால் தான் கிருஷ்ணர் மிகவும் அழகாக ஒரு நுட்பத்தைக் கொடுத்தார்.
எங்கே அடிக்க வேண்டும் என்று சொன்னார்.
அதுதான் கடைசியாக ஒரு சீடனுக்கு கொடுக்கப்படுகிற 'ஆனந்த கந்த தீக்ஷை'. எங்கே குத்த வேண்டும் என்று சரியாகச் சொன்னார்.
கதாயுதத்தை எங்கே குத்த வேண்டும் என்று சரியாகச் சொன்ன உடனே, பீமன் தொடையிலே அடிக்கிறான். துரியோதனனின் கதை முடிகிறது.
அகங்காரமானது "நான் யார்?" என்று கேட்க, அந்த ஒரே அடியினாலேயே,
'தான் யார்?' என்று தெரியாததனால்,
தனக்கு ஒரு இருப்பு இல்லாததினால்,
அகங்காரம் என்ற துரியோதனன் அழிந்து, ஜீவாத்மாவாகிய அர்ஜுனன், பரமாத்மா ஆகிய கிருஷ்ணனை அடைந்து ஞான நிலையிலே மலருகிறான். மஹாபாரதம் அருமையான ஞான காவியம் எந்தெந்த நிலைகளில் நீங்கள் மாட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என விளக்கும் காவியம்.
ஞானத்தைத் தொட தர்ம மனப்பான்மையும் தாண்டப்பட வேண்டும்
சாதாரணமாகக் கர்ணனை அழிக்க முடியாது. வீட்டை வேண்டுமானாலும் விட்டுவிட்டு வந்துவிடுவார்கள். பலநேரம் நம்ம பிரம்மச்சாரிகள், வீட்டை விட்டு வந்து விடுவார்கள். அவர்களுடைய படிப்பு அதையெல்லாம்கூடத் தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால், இந்தத் தர்ம சிந்தனை இருக்கிறது பாருங்கள், அதை விட்டுவிடுவது தான் அவர்களுக்குக் கஷ்டம் அதைத் தாண்டுவதுதான் ரொம்ப கஷ்டம். அதைத் தாண்டுவதற்கு ஒரே வழி என்னவென்றால், அந்த நாகாஸ்திரம்தான் நாம் சொல்கிற ஞான சந்நியாசம். ஞானத்தைத் தவிர வேறு ஒன்றுமே தேவையில்லையென்று ஸ்திரமாகி எடுக்கும் தெளிந்த முடிவு. அந்த வைராக்கியம். அதுதான் ‘நாகாஸ்திரம்.’ "தர்மம்கூட வேண்டாம். ஞானம் மட்டும்தான் வேண்டும்" என்கிற வைராக்கியத்தைத்தான் 'நாகாஸ்திரம்' என்று சொல்கிறோம். தர்மத்தைத் தாண்டி, ஞானத்தை நோக்கி செல்வதற்கான வழியைத்தான் கிருஷ்ணன், "கர்ணனையும் தாண்டி வா," என்று அர்ஜுனனுக்குக் காட்டினார்.
உங்கள் வெற்றி ஏற்கனவே திட்டமிடப்பட்டு விட்டது
Your success has already been determined
ஞான சத்குருநாதனின் ஒவ்வொரு வார்த்தைகளையும், சரியாய் செயல்படுத்திய அர்ஜுனன் ஞானத்திற்குள்ளே மூழ்கினான்.
குரு வாக்கியத்தை வேதவாக்கியமாக ஏற்று செயல்படுத்திய உயர்ந்த சீடன் அர்ஜுனன்.
ஞானத்துக்குள்ளே நிறைந்தான்.
இதேபோல் உங்களின் வெற்றி, ஏற்கனவே திட்டமிடப்பட்டு விட்டது.
நம்முடைய வாழ்க்கையினுடைய லட்சியத்தை நோக்கி நாம் செல்லும் பொழுது, இந்த வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு பீஷ்மர் வருவார்.
ஆச்சாரியார் எனும் கட்டுறு மனப்பாங்காகிய துரோணர் வருவார்.
> ஒரு டாக்டர் பட்டம்
> வாங்கியதனால் ஒரு
> பட்ட படிப்பில் சான்றிதழ்
> வாங்கியதனால்
> எதையோ அடைந்து
> விட்டதாக
> நினைக்காதீர்கள்.
யோகம், தற்காலிக உத்வேகம் தரும் கருத்துகளை போதிப்பவர்களால் ஏற்படுகிற கட்டுறு மனப்பாங்குதான், துரோணாச்சாரியார்.
நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள், துரோணர் வாழ்க்கை நடத்தத் தேவை. ஆனால், வாழ்க்கையே துரோணர் கிடையாது.
வாழ்க்கை நடத்துவதற்குப் பள்ளி, கல்லூரிகளில் வாங்குகிற பட்டம் வேண்டும். யோகம் தேவை. தான தர்மம் தேவை. தியானம்கூட தேவை. ஆனால், அவையெல்லாமே ஞானத்தைத் தந்துவிடாது.
ஞான சத்குருநாதனிடமிருந்து பெறும் தீக்ஷை, யாராயிருந்தாலும் பெற வேண்டிய ஒன்று. குண்டலினி சக்தியை விழிக்கச் செய்யும் குரு தீக்ஷை பெறவேண்டும். வெறும் தான தர்மத்திலும், யோகத்திலும் சிக்கி நின்று விடக்கூடாது.
இதைத்தான் மிக அழகாகப் பதினெட்டு யோகங்களின் மூலமாக, கிருஷ்ண பரமாத்மா எடுத்துரைக்கிறார். ஒவ்வொரு நிலையும் தாண்டப்பட வேண்டியதே என்பதைத்தான் பதினெட்டு முறை யோகம், யோகம் என்ற வார்த்தையை பயன்படுத்தி விளக்குகிறார். வாழ்க்கையில் யோகம், தர்மம் சேர்க்கலாம். ஆனால், அவையே வாழ்க்கையாகிவிடாது.
வாழ்க்கையினுடைய இறுதி, அது கிடையாது.
ஒரு டாக்டர் பட்டம் வாங்கியதனால், ஒரு பட்டப் படிப்பில் சான்றிதழ் வாங்கியதனால், எதையோ அடைந்து விட்டதாக நினைக்காதீர்கள். அதுகூட துரோணாச்சாரியார்தான்.
அதைத் தாண்டிப் போயாக வேண்டும். அதற்கு
மேல் கர்ணன் வருவான். அதையும் தாண்ட
வேண்டும். இந்தக் கதையைப் பார்த்தீர்கள்
என்றால், உங்களின் வாழ்க்கையை அப்படியே
சொல்லும்.
ஒரு 25 வயது வரைக்கும் வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு.
பிறகு அந்த வேலை செய்வதற்குத் தேவையான துரோணாச்சாரியார் என்ற கட்டுறு மனப்பாங்கு. பல்கலைக்கழகம், பள்ளி, கல்லூரிகளின் கட்டுறு மனப்பாங்கு ஒரு 34, 40 வயதுவரை வரும்.

அதன் பிறகு குடும்பமாகி, பணம் எல்லாம் வந்த பிறகு, உங்களுக்கென்று ஒரு தர்மத்தை வைத்துக் கொண்டு அதன்படி எல்லாம் ஓடுவது.
அதென்ன?
கர்ணன் எனும் கட்டுறு மனப்பாங்கு. அதன் பிறகு, ஒரு 65 வயதுக்குப் பிறகு, எல்லோரையும் சந்தேகப்படும், ஆனால் தன் தர்க்க அறிவை மட்டும் சந்தேகப்படாத சகுனி புத்தி.
அப்படியே பாருங்கள், நம்முடைய வாழ்க்கையில் நடந்து கொண்டே வருகிறது.
அதற்குப் பிறகு நான் யார் தெரியுமா? என்கிற மாளாத அகங்காரம்! 80 வயதுக்கு மேல் வருவது.
உடல் தளர்ந்தாலும், உள்ளம் தளராத அகங்காரம்.
நான் போய் ஒரு ஞான சத்குருவிடம் செல்வதா? நான் போய் ஒரு குருவிடம் செல்வதா?
நான் போய் உட்காருவதா என்ற மாளாத அகங்காரம்.
லட்சியம் ஞானம்தான்,
கிருஷ்ணன்தான், இறுதியான
ஞானசத்குருநாதன் என்று
ஜீவாத்மாவுக்குப் புரிந்து
ஜீவன்மா தேரில் உட்கார்ந்து
இருந்தாலே போதும்
ஞானத்தை அடைந்துவிடும்.
இந்த மாதிரி படிப்படியாகப் படிப்படியாக எல்லாவற்றையும் கடந்து, அடையப்பட வேண்டிய லட்சியம்தான், ஞானம்தான் கிருஷ்ணன். கிருஷ்ணன்தான், இறுதியான ஞான சத்குருநாதன் என்று ஜீவாத்மாவுக்குப் புரிந்து, அது தேரில் அமைதியாக உட்கார்ந்து இருந்தாலேகூட போதும். ஞானத்தை அடைந்து விடலாம்.
இந்த மொத்த மஹாபாரதத்தையும் பார்த்தீர்கள் என்றால், அர்ஜுனன் தனிப்பட்ட முறையில் செய்தது வேறு ஒன்றுமே இல்லை.
தேரை ஓட்டுகிறவர் சொன்னதை, சொல்வதை ஒழுங்காகக் கேட்டது. அவ்வளவுதான், அர்ஜுனன் செய்தது.
அர்ஜுனனின் வெற்றிக்கான இந்தக் குணத்தை உள்வாங்கினாலே, உங்களின் வெற்றி நிர்ணயிக்கப்பட்டுவிட்டது.
ஞானத்திற்கான திட்டம்
Strategy planning for enlightenment
அதாவது திட்டம் செய்வது. திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான எல்லா நபர்களையும், பொருட்களையும் எடுத்து வருவது. இது எல்லாவற்றையும் பார்த்தீர்கள் என்றால், இந்த எல்லாவற்றையும், மொத்த வேலையையுமே கிருஷ்ணன் செய்துவிட்டார்.
Strategy Plan செய்வது, திட்டமிடுவதற்கு தேவையான எல்லாப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு வருவது, இது எல்லாவற்றையுமே மிக அருமையாகக் கிருஷ்ணனே செய்து விடுகிறார்.
செய்ய வேண்டியது எல்லாம் கிருஷ்ணன் சொல்வதைக் கேட்டு, அர்ஜுனன் செயல்பட வேண்டியது.
அவ்வளவுதான், இப்போது ஜீவாத்மாவாகிய சீடன் செய்ய வேண்டியது எல்லாம், பரமாத்மாவான ஞானசத்குரு சொல்வதைக் கேட்டுச் செய்ய வேண்டியது அவ்வளவுதான்.
திட்டமிடுவதையும், திட்டம் நடத்துவதற்கான நபர்கள் மற்றும் பொருட்களைக் கொண்டு வருவதையும், கிருஷ்ண பரமாத்மாவான, ஞான சத்குரு தாமே நடத்தி விட்டார்.
செய்ய வேண்டியது எல்லாம், அந்தத் தேரில் உட்கார்ந்து கொண்டு, பரமாத்மா சொல்வதைச் செய்வது.
சொல்வதைச் செய்கிற ஒரே காரணத்தாலேயே, கடைசி வரைக்கும் கூடவே இருக்கிற ஒரே காரணத்தினாலேயே லட்சியத்தை அடைந்து விடுகிறான் அர்ஜுனன்.
நாமும் அப்படித்தான் நம் வாழ்க்கையில் பார்த்தீர்கள் என்றால், எடுத்த உடனே, அர்ஜுனனுக்கு, அந்த கீதையைக் கேட்பதற்கு முன்னால் வருகிற சந்தேகத்தைப்போல, வாழ்க்கையைப் பற்றிய பெரிய, பெரிய சந்தேகங்கள் வரும்.
அப்போது நீங்கள் எடுத்துக் கொள்கிற நித்ய தியான தீக்ஷைதான், பகவத் கீதை. உங்களுக்கு கீதை அளிக்கப்பட்டு விடுகிறது.
கிருஷ்ணர் என்ன செய்தார்?
தீக்ஷை கொடுத்து விட்டார்.
அதன் பிறகு அவர் அந்தz unclutching என்ற நுட்பத்தைச் செய்யச் செய்ய என்ன ஆகும்? வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு மேல் வரும்.
பீஷ்மரை, unclutching செய்ய வேண்டும்.
அவரை அழிக்க வேண்டும்.
அதற்கு என்ன வழி?
சிகண்டியை முன்பு நிறுத்தி, யாரைக் கண்டு அவர் நடுங்கிப் போவாரோ, அவரை முன்னால் நிறுத்தி, அவரை அழிப்பது.
அடுத்து ஆச்சாரியார்கள். ஆச்சாரியார்கள் என்ற கட்டுறு மனப்பாங்கு. துரோணாச்சாரியார் வருவார், அவரையும் unclutching செய்ய வேண்டும். அவருடைய பலவீனம் என்னவென்று பார்த்து, எந்த இடத்தில் அது உபயோகமாகாது என்று தெரிந்ததென்றால், அவர் மேல் இருந்த மரியாதை எனும் பற்று போய் unclutching நடந்து விடும்.
அதற்கடுத்து கர்ணன். நம்முடைய தர்மம். அதையும் தாண்டவேண்டும். அதைத்தான் கிருஷ்ணன் சொல்கிறார்.
ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ /
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச: // 18-66
சிலநேரம் நீங்கள் கடைப்பிடிக்கிற தர்மம் கூட, குருவிடம் சரணாகதி ஆவதற்குத் தடையாக மாறிவிடும்.
தர்மத்தை வைத்து அகங்காரத்தைப் பிடித்தீர்களானால், சரணாகதியாவதற்கு அதுவே தடையாக மாறிவிடும்.
அதனால்தான், கிருஷ்ணர் சொல்கிறார், எல்லாத் தர்மங்களையும் என்னுடைய காலடியில் சமர்ப்பித்து விட்டு என்னையே சரணடைவாயாக. உன்னை நான் கடைத்தேற்றுகிறேன்,'' என்கிறார்.
தர்மத்தையும்
கீழே போடுகிற சரணாகதிதான்,
இறுதி நிலை சரணாகதி.
இது சாதாரணமாக நடக்காது. மாபெரும் புத்திசாலித்தனம் அதற்கு வேண்டும். அந்தச் சரணாகதிக்கு, அதுதான் அடுத்த நிலை.
அதையும் தாண்டி ஸ்திரமாக இருந்தால்தான், அகங்காரமே நேரடியாகச் சண்டைக்கு வரும்.
துரியோதனனே நேரே வருவான்.
அப்போது எந்த இடத்தில் unclutching செய்ய வேண்டும் என்று, சரியான நுட்பத்தைக் கொடுத்து அதாவது ஆனந்த கந்த தீக்ஷையைக் கொடுத்து, சீடனுக்குச் சுதந்திரமளிப்பதுதான்; தட்டிக் காட்டுதல்தான் ஞானத்தை நோக்கி வேகமாக முன்னேற உந்தித்தள்ளும் குரு கிருபை.
எந்த இடத்தில் அடிக்க வேண்டுமென்று, தட்டிக் காட்டுதல்தான் கிருஷ்ண பரமாத்மாவுடைய வேலை.
தவம் என்கிற பீமனுடைய பலத்தாலே, ஆனந்த கந்த தீக்ஷை மூலமாக, சரியாகத் தொடையில் அடித்து unclutching செய்யும்போது, நம்முடைய தவம் அகங்காரத்தை அழித்து, சிவத்திலேயே மறைகிறது.
சிவத்திலேயே கரைகிறது;
சிவத்திலேயே நிறைகிறது.
அப்பொழுது பொங்குகிற அந்த ஆனந்தம்தான் நித்யானந்தம், ஜீவன்முக்தி என்று சொல்கிறோம்.
இது மொத்தத்திலும் நடந்தது என்னவென்றால், சத்குருதான் லட்சியம் என்று அர்ஜுனனுக்கு இருந்த தெளிவு.
ஆரம்பத்தில் தீக்ஷையில், பகவத் கீதையில் என்ன சொன்னாரோ, அதைத்தான் அந்த 18 நாள் யுத்தத்திலேயும் கிருஷ்ணன் நடத்திக் காண்பித்தார்.
தீக்ஷையில், உங்களுக்கு என்ன சொல்லப்படுகிறதோ, நித்ய தியான தீக்ஷையில் unclutching என்று அதைத்தான், உங்களின் ஞானப்பாதை முழுவதும், உங்களுடைய அந்த ஞான சாதனை என்கிற, மிகப்பெரிய மஹாபாரத யுத்தத்தில் நடத்திக் காட்டுகி றோம்.
அருமையான கதை.
7 கோடி பாண்டவர்கள் ஒரு பக்கமும், 11
கோடி கெளரவர்கள் இன்னொரு பக்கமும் ச
ண்டை புரிகிறார்கள்.
11 அக்குரோணி கௌரவர்கள்,
> நம்முடைய தவம்
> அகங்காரத்தை அழித்து
> சிவத்திலேயே மறைகிறது.
> சிவத்திலேயே நிறைகிறது.
> அப்பொழுது பொங்குகிற
> அந்த ஆனந்தம்தான்
> நித்யானந்தம். ஜீவன் முக்தி
> என்று சொல்கிறோம்.
7 அக்குரோணி பாண்டவர்கள். அதாவது நல்ல எண்ணங்கள் எல்லாம் பாண்டவர் சேனை; கெட்ட எண்ணங்கள் எல்லாம் கௌரவர் சேனை.
ஆனால், இரண்டு எண்ணமுமே ஒன்றை மாற்றி ஒன்று அடித்துக் கொண்டு செத்தாக வேண்டும்.
அப்போதுதான் unclutching நடக்கும்.
இரண்டு எண்ணமுமே அங்கே இருக்கக் கூடாது. நல்லதும் இருக்கக் கூடாது; கெட்டதும் இருக்கக் கூடாது.
அதுதான் அங்கே சண்டையாக நடந்தது. அதுதான் இங்கேயும் நடக்கும் சண்டை.
இந்த எல்லா எண்ணங்களும் அழிந்து, இறுதியாக தான் மட்டுமேயாக நிறைந்திருக்கிற தனிப் பரம்பொருள், சுத்த சிவ மோனம்தான் கிருஷ்ணன் என்கிற சத்குரு, ஞான ச த்குருநாதர்.
கிருஷ்ணன் பிறந்ததற்கான காரணமே, இந்த மொத்தமும் அழிய வேண்டும் என்பதற்காகத்தான்;
சம்ஸார மாயை அழிய வேண்டும் என்பதற்காகத்தான்.
ஞானசத்குருவினுடைய அவதாரத்திற்குக் காரணமே இந்த ஜீவன், தன்னுடைய சம்ஸார மாயையிலிருந்து விடுபட்டு, ஞானம் என்கிற பரநிலையை அடைவதற்காகத்தான்.
அந்த லட்சியம் மாறாமல் இருந்தோமானால் போதும். லட்சியத்தை நாம் உணருவோம்.
ஈஸ்வரன் மிகவும் அழகாக லட்சியத்தைப் பற்றிச் சொல்கிறார், கபாலத்தின் நடுவே உன் மனத்தை நிலைபெறச் செய்து, உங்கள் லட்சியம் என்ன என்பதை மட்டும் உணர்ந்து கொண்டே இருந்தீர்களானால், அந்த திடத் தன்மையினாலேயே, எல்லாக் கட்டுறு மனப்பாங்கும் அழிந்து போய், அந்த லட்சியத்தை அடைவீர்கள்.
லட்சியம், உங்களுக்குள்ளே மலரும்.
அப்போது அந்த அகங்காரம் அழிந்து, துரியோதனன் அழிந்து, நித்யானந்த நிலை உங்களுக்குள் மலரும்.
அகங்காரத்திடமிருந்து உங்களைக் காப்பாற்றுவதே தீக்ஷை
விவேகானந்தர் மிக அழகாகச் சொல்லுவார். ஞானமடைவதற்கு தேவையானது மிகப்பெரிய தீரம். யானையைக் கொல்வது, வெளியிலே இருக்கிற மனிதனைக் கொல்வது கூட தீரமில்லை. கோழைதான் மனிதனை சாகடித்துக் கொண்டே இருப்பான்.
நீ என்னைச் சாகடிப்பதற்கு முன்னால், நான் உன்னைச் சாகடித்துவிடுகிறேன் என்பதுதான் கோழைத்தனம். அது ஒன்றும் பெரிய வீரத்தன்மை கிடையாது. தீரத்தன்மை கிடையாது. அது கோழைத்தனம்தான். தன்னுடைய மனத்தை அழிப்பதுதான் தீரத்தன்மை. தன்னுடைய அகங்காரத்தை அழிப்பதுதான், தீரத்தன்மை.
அதற்குவேண்டிய தீரத்தன்மைதான் பீமன் என்று சொல்கிறோம். பீமன் அனுப்பப்படுகிறான். அர்ஜுனனுடைய பிரதிநிதியாக பீமன் போருக்கு போனான். பீமனுக்குக்கூட துரியோதனை எங்கு அடிக்க வேண்டுமென்று தெரியாது.
சரியாக எந்த இடத்தில் unclutching செய்தால் அகங்காரம் அழியும் என்று கிருஷ்ணனுக்குத்தான் தெரியும். அதனால் மிகச்சரியாக துரியோதனின் பலவீனத்தை பீமனுக்குச் சுட்டிக் காண்பித்தார்; தம்முடைய தொடையில் தட்டிச் சுட்டிக் காண்பித்தார். எங்கிருந்து unclutching செய்ய வேண்டும் என்று குருநாதர் அளிக்கும் தீக்ஷை, அது கடைசியாகச் செய்ய வேண்டிய தியான நுட்பம். அது என்னவென்று குருவுக்குத்தான் தெரியும். பீமனும் துரியோதனனும் ச ண்டையிடும்போது, தம்முடைய தொடையில் தட்டிக் காண்பிப்பதுதான், நம் தனி ஜீவனும், அகங்காரமும் ஒன்றையொன்று சண்டையிட்டுக் கொள்ளும்பொழுது குரு அளிக்கிற unclutching தீக்ஷை, நிர்விகல்ப சமாதி தீக்ஷை.
இந்த இடத்தில் அகங்காரத்தை அடி என்று குரு சொல்லித் தருகிற தீக்ஷைதான், பீமனை நோக்கி தொடையில் தட்டிக் காண்பித்த சமிக்ஞை (Signal).