KAILASA Library/ஜீவன் முக்தி/ஞானமடையாத குருவால், உங்களுக்கு ஞானத்திற்கான வழியைக் காட்ட முடியாதுSign in
ஜீவன் முக்தி

ஞானமடையாத குருவால், உங்களுக்கு ஞானத்திற்கான வழியைக் காட்ட முடியாது

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

The unelightened Master cannot be the way for enlightenment

கீதையில் 10ஆம் நாள் யுத்தம் முடிந்தது.

அதற்கு அடுத்து வருவது யார்?

துரோணாச்சாரியார்.

துரோணர் யாரென்றால், சின்ன வயதில் இருந்து உங்கள் வாழ்க்கையில் குருவாக இருந்தவர்கள்.

பெற்றோர்களைத் தவிர, உங்கள் வாழ்க்கையிலும், எல்லோருடைய வாழ்க்கையிலும் சில மரியாதைக்குரிய நபர்கள் சிலராவது இருந்திருப்பார்கள்.

ஆசிரியர்களில் கூட சிலபேர் முன் மாதிரியாக இருந்து இருப்பார்கள்.

ஞான சத்குருவை அடைகிற வரைக்கும், பல்வேறு தரமான குருமார்கள் உங்கள் வாழ்க்கையில் இருந்திருப்பார்கள்.

தீக்ஷா குரு, ஏதாவது ஒரு மந்திர உபதேசம் செய்து இருப்பார். இல்லை, எப்போதாவது நீ ங்கள் துக்கத்தில் இருக்கும்போது, சரியான அறிவுரை செய்து உங்களைத் துக்கத்திலிருந்து வெளியில் எடுத்துக் கொண்டு வந்திருப்பார்கள்.

அவர்கூட குருதான், துரோணர்தான். துரோணாச்சாரியார் இல்லாதவர்கள் இருக்கவே முடியாது.

நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்! சத்குரு, துரோணாச்சாரியார் கிடையாது.

துரோணாச்சாரியார் யார்? உங்கள் வாழ்க்கையில் எப்போதாவது ஒரு தாழ்வான நிலைக்கு வரும்போது, துக்கம் வரும்போது ஒரு அறிவுரை செய்து, உங்களை மேலே எடுத்துக்கொண்டு வந்து இருப்பார். ஏதாவது யோகம், பிராணாயாமம் ஏதாவது கற்றுக் கொடுத்திருப்பார். சில நேரத்தில் மூக்கைப் பிடி, நாக்கைப் பிடி என்று எதையாவது கற்றுக் கொடுத்திருப்பார்கள். அவர்கள் எல்லாம்தான் துரோணாச்சாரியார்கள்.

சில நேரத்தில், சின்ன வயதில் எப்போதாவது சில கருத்துகளைக் கொடுத்து, ஞானத்தை நோக்கிச் செல்வதற்கு ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தி இருப்பார்கள்.

ஏதாவது ஒரு விக்கிரகத்தை வழிபடச் சொல்லியிருப்பார்கள். இல்லை, ஏதாவது மந்திர தீக்ஷை கொடுத்திருப்பார்கள். இல்லை, ஏதாவது யோகம், பிராணாயாமம் என்று கற்றுக் கொடுத்திருப்பார்கள்.

இந்த மாதிரி ஏதாவது, இந்த துவக்கநிலை உத்வேகத்தைத் தருபவர்களாக இருந்திருப்பார்கள். அவர்களை எல்லாம் தான் துரோணாச்சாரியார்கள் என்று சொல்வது.

அவர்களே ஞானமடைந்து இருக்க மாட்டார்கள். அவர்களுக்குச் சில குறைகள் இருக்கும். ஆனால், உங்களுக்கு குருவாக, ஆச்சாரியாராக இருந்திருப்பார்கள். நல்ல உதவிகளைச் செய்திருப்பார்கள்.

உங்கள் வாழ்க்கையில் திரும்பிப் பார்த்தீர்கள் என்றால் தெரியும், அடுத்து வருகிற தடையாக, ஞான சத்குருவை அடைவதற்கு, ஞானம் அடைவதற்கு, அடுத்து வருகிற தடையாக அவர்கள்தான் இருப்பார்கள்.

துரோணாச்சாரியாரை நீங்கள் பிடித்துக்கொண்டே இருந்தீர்கள் என்றால், கிருஷ்ணனைப் பிடிக்க முடியாது. சில நேரத்தில் கிருஷ்ணன் வழிகாட்டுவதைக் கேட்பதற்குக் கூட, சில துரோணாச்சாரியார்கள் விட மாட்டார்கள். அவர்களிடத்தில் வரும் ஆட்களின் எண்ணிக்கை குறைந்து போய் விடுமே என்ற பயம் எப்போதும் துரோணாச்சாரியார்களுக்கு உண்டு. ஆனால், கிருஷ்ணர் அதைப்பற்றியெல்லாம் கவலையேபடமாட்டார். தேடுதல் இருக்கிறவர்கள், தானாகவே துரோணரை விட்டு, கிருஷ்ணரிடம் வந்து விடுவார்கள்.

ஞானத்தை நோக்கி நீங்கள் போகிற தேடுதலில், துவக்கநிலை உத்வேகத்தைத் தருபவராக இருந்தவர்களே, சில நேரத்தில் ஞானகுருவை அடைவதற்குத் தடையாக இருப்பார்கள்.

ஒன்றும் இல்லை, ஒரு மொழியைக் கற்றுக் கொடுத்தவர், ஒரு தமிழ் ஆசிரியர், ஒரு சமஸ்கிருத ஆசிரியர் அவர்களெல்லாம் கூட, சில நல்ல கருத்துகளைச் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். சிலவற்றை சொல்லிக் கொடுத்ததனாலேயே, அவர்கள் ஞான ச த்குரு கிடையாது.

ஒரு மந்திர தீட்சை கற்றுக் கொடுத்திருப்பார்கள். ஒரு ஸ்ரீவித்யா பூஜை செய்வது எப்படி என்று கற்றுக் கொடுத்திருப்பார்கள். ஆனால், அவர்களெல்லாம் ஞான சத்குரு கிடையாது.

துரோணாச்சாரியார்கள், ஞான சத்குருவுக்குச் சமம் கிடையாது.

பாசத்தின் ரகசியம்

  • பாசத்தை ஏன் வேஷம் என்கிறீர்கள்? கடுகளவு கூட வெறுப்பு இல்லாத ஒரு உறவை உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா? முடியாது...... வெறுப்புகள் மனத்தின் ஒரு மூலையில் குடியிருக்க, மனத்தின் இன்னொரு மூலையில் பாசம் குடியிருப்பதாகச் சொன்னால்... அது எப்படி நிஜமாகும். துர்வாசனையும் நறுமணமும் ஒன்றாய்க் கலந்து கிடைக்கும் வாசனையானது எப்படி நல்ல வாசனையாக இருக்க முடியும்?

தற்காலிக உத்வேகத்தைத் தருபவரே துரோணாச்சாரியார்

Dronacharya who gives temporary inspiration

துரோணாச்சாரியாரை எப்படிச் சாகடிப்பது, எப்படித் தாண்டிச் செல்வது என்று கிருஷ்ணர் மிக அழகாகச் சொல்கிறார்.

கிருஷ்ணன் மிகப்பெரிய ஞானி. அதனால்தான் துரோணாச்சாரியார் எங்கு, எதில் பலமற்றவராக இருக்கிறார் என்று கண்டுபிடித்தார்.

ஒரு சீடனுக்குள் எப்படி பீஷ்மர் ஒளிந்திருக்கிறார், எப்படிப்பட்ட துரோணாச்சாரியரிடம் சீடன் சிக்கி இருக்கிறார் என்பதைப் பார்த்து, சீடனை அவனுடைய சிக்கல்களில் இருந்து விடுவிக்கும் ஞானசத்குருநாதரின் செயல் மிகவும் நுட்பமானது.

துரோணாச்சாரியாரின் பலவீனம் என்ன? அவருடைய மகனான அஸ்வத்தாமன் மேல் வைத்திருந்த ஆழ்ந்த பற்று.

ஞானமடையாத எல்லா ஆச்சாரியார்களுக்கும், இப்படி ஒரு பலவீனம் இருந்தே தீரும். அதில் சந்தேகமே இல்லை. ஆழ்ந்த பற்று இருக்கும்.

கிருஷ்ணன் என்ன செய்தார்? அந்த மகன் இறந்துவிட்டதாக ஒரு செய்தியைக் கொடுத்தார். அந்தச் செய்தியைக் கேட்ட உடனே துரோணாச்சாரியர் என்ன செய்தார்? மன ரீதியாக சோர்வடைந்து துக்கத்தில் விழுந்து விட்டார்.

முதலில் உங்களுக்கே உத்வேகத்தைத் தருபவராக இருந்தவர், இப்போது சோர்ந்துவிட்டார். இப்போது, அவராலேயே அவரை 24 மணி நேரமும் உத்வேகத்தோடு வைத்துக் கொள்ள முடியாது. இதுதான் துரோணாச்சாரியருக்கும், ஞானசத்குருநாதருக்கும் இடையில் இருக்கும் பெரிய வேறுபாடு.

ஒரு துக்கம், சங்கடம் வருகிற மாதிரி செய்தி கொடுக்கப்பட்டதும், துரோணாச்சாரியார் நிஜமாகத் தடுமாறி துக்கம் தாளாமல் சோர்ந்து விடுகிறார்.

அவர் துக்கமாக இருந்த அந்த நேரத்தில், "இவரை அழித்துவிடு, முடித்துவிடு," என்று, பரமாத்வாகிய கிருஷ்ணர், சீடனாகிய அர்ஜுனனுக்கு, ஜீவாத்மாவுக்கு உபதேசம் செய்தார்.

அதை மிகவும் நுட்பமாகப் பார்த்துச் செய்ய வேண்டும். அவரையே உலுக்கப் போகும் அவருக்கு மிகச் சரியான ஆள் ஒருவர்தான் அந்தச் செய்தியை எடுத்துப் போக வேண்டும்.

செய்தியை யாரை விட்டுச் சொல்வது?

தர்மன்தான் மிகச்சரியான ஆள்.

தர்மனை விட்டுத்தான், "அஸ்வத்தாமா ஹதா குஞ்சனஹ," என்று சொல்ல வைத்தார். அதாவது, "அஸ்வத்தாமன் இறந்து விட்டான்..."

அது ஒரு அருமையான கதை. அஸ்வத்தாமன் என்கிற யானையை, பீமனை விட்டுச் சாகடிக்கச் சொல்லி, அந்தச் செய்தியை தர்மனை விட்டு சொல்லச் செய்தார்.

தர்மப்படி, தார்மீகப்படி அதர்மத்தை ஒழித்து, தர்மத்தை நிலைநாட்ட கிருஷ்ணர் - ஞான சத்குருநாதர் செய்த ஒவ்வொரு செயலும் மிகவும் நுட்பமானவை.

அஸ்வத்தாமன் மீது இருந்த பற்றை பயன்படுத்தி, அர்ஜுனனைக் கிருஷ்ணர் முன்னேற வைத்தது போல, உங்களின் பலவீனங்களையே பலமாக மாற்றுவதற்கான யுக்திகளை, குருநாதர் நமக்கே தருவதற்கு, நம்மைத் திறந்து வைத்தாலே போதும், குரு சக்தி, குருவின் யுக்திகள் நம்மை முன்னேறிச் செல்ல வைக்கும்.

இங்கு "இறந்தது அஸ்வத்தாமன் என்கிற யானை,"என்று தர்மராஜா சோல்லும்போது, "என்கிற யானை," என்ற வார்த்தைகளை தர்மர் உச்சரிக்கும்போது கிருஷ்ணன் ச ங்கெடுத்து ஊதினார்.

"இறந்தது அஸ்வத்தாமன்," என்ற செய்தி மட்டுமே துரோணரின் காதுகளில் விழுந்தது. அது இறந்தது தன் மகன் என்ற செய்தியாக துரோணாச்சாரியரை இடித்தது.

சூழ்நிலையே துரோணாச்சாரியாரை பலமிழக்கச் செய்து, துரோணாச்சாரியாரை மன ரீதியாகத் துக்கத்தில் ஆழ்த்திவிட்டு...

கிருஷ்ணன் அர்ஜுனனை நோக்கி, "அர்ஜுனா முடித்துவிடு," என்று சொல்ல, அவன் முடித்தான்.

துரோணாச்சாரியார் போன்ற குருக்கள், உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பொழுது, அவர்களிடமிருந்து விடுவித்து உங்களை வெளியில் எடுக்க மிகவும் நுட்பமாக ஏதாவது ஒரு பெரிய வேலை செய்துதான் மீட்டெடுக்க வேண்டும்.

பீஷ்மரிடம் இருந்து உங்களை எடுப்பது கூட கொஞ்சம் எளிதுதான். ஆனால், துரோணாச்சாரியாரிடம் இருந்து உங்களை எடுப்பதுதான் பெரும்பாடு.

அது நிஜமாகவே பெரும்பாடுதான்.

கீதையில் கடைசியாக இந்த
துரோணாச்சாரியாரிடமிருந்தும் அர்ஜுனனை
வெளியே எடுத்து விடுகிறார்.

தர்மனை, "அஸ்வத்தாமா ஹதா குஞ்சரஹ," என்று சொல்லச் சொல்லி, துரோணாச்சாரியரை துக்கத்தில் போட்டு, அவரே, அவரைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத சூழ்நிலைக்குத் தள்ளி, அர்ஜுனனை விட்டு, அம்பு எய்யச்

> துரோணாச்சாரியாரை
> நீங்கள் பிடித்துக்கொண்டே
> இருந்தீர்கள் என்றால்,
> கிருஷ்ணனைப்
> பிடிக்க முடியாது. சில
> நேரத்தில் கிருஷ்ணன்
> வழிகாட்டுவதைக்
> கேட்கக் கூட சில
> துரோணாச்சாரியார்கள் விட
> மாட்டார்கள்

சொல்லி அழித்து விடுகிறார்கள்.

அதை அர்ஜுனன் செய்து முடித்து விட்டான். வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கும், ஆச்சார்யார் கட்டுறு மனப்பாங்கும் முடிந்தது. இரண்டு தடைகள் தாண்டப்பட்டுவிட்டது.

கற்றுக் கொடுத்தவர், கற்றுக் கொடுத்ததைவிட, அதிகமாகக் கற்றுக் கொடுத்ததினால் வந்த கட்டுறு மனப்பாங்கு,

சமஸ்கிருதம் கற்றுக் கொடுப்பவர், சமஸ்கிருதம் மட்டும் கற்றுக் கொடுக்க வேண்டும். சமஸ்கிருத வெறியைக் கற்றுக் கொடுக்கக் கூடாது.

தமிழ் கற்றுக் கொடுப்பவர், தமிழை மட்டும் கற்றுக் கொடுக்க வேண்டும். வாழ்க்கையை எப்படி வாழ்வதென்று கற்றுக் கொடுக்கக் கூடாது.

ஏனென்றால், அவர் ஞானம் அடைந்திருந்தால் மட்டும்தான், வாழ்க்கையை வாழ்வது பற்றியெல்லாம் கற்றுக் கொடுக்கலாம். இல்லாவிட்டால் சும்மா இருப்பதே அவருக்குப் புண்ணியம். பல கர்மங்கள் அவருக்குச் சேராமல் இருக்கும்.

அவரே ஞானம் அடையாமல் வாழ்க்கையை எப்படி வாழ்வதென்று கற்றுக் கொடுத்தால், என்ன ஆகும்?

சில நேரத்தில் அது வம்பாகப் போய்விடும். அந்தக் கட்டுறு மனப்பாங்கை அழித்தால்தான், துரோணாச்சாரியாரைத் தாண்டிச் சென்றால்தான், அடுத்த படிக்கு செல்வீர்கள். இல்லாவிட்டால், உங்களின் அர்ஜுனன், பாதி வழியிலேயே சிக்கி நின்று விடுவார்.

முதலில் உங்களின் வாழ்வில் யார் துரோணாச்சாரியார்? யார் ஞான சத்குரு? என்பதைக் கண்டறிய வேண்டும்.

அடுத்து துரோணாரைத் தாண்டி, ஞான சத்குருவின் வழிகாட்டுதலோடு, வெற்றி நோக்கி முன்னேற வேண்டும்.

துரோணாச்சாரியாரால் ஆனந்தத்தை அளிக்க முடியாது

தர்மர், யானை என்ற வார்த்தையைச் சொல்லும் போது மட்டும், மிகச்சரியாக சங்கு ஊதி கிருஷ்ணன் அதை மறைத்து விடுகிறார். அந்தச் சத்தத்தினால் துரோணச்சாரியார் காதில் "அஸ்வத்தாமன் இறந்து விட்டான்" என்று செய்தி மட்டும் கேட்டது. இந்தச் செய்தியைக் கேட்டதும் உடனே துரோணர் துக்கத்தில் விழுந்தார்.

உங்கள் வாழ்க்கையையும் பார்த்தீர்கள் என்றால், உங்களுக்கு வழிகாட்டிய துரோணச்சாரியார்கள்கூட, தங்களுடைய வாழ்க்கையில் முழுமை அடையாதவர்களாக இருக்கிறார்கள்.

அவர்கள் சொன்ன கருத்து வாழ்க்கைக்குச் சரியாகும்; ஆனால் ஞானத்திற்குச் சரியாகாது.

எப்படிச் சம்பாதிப்பதென்று வேண்டுமென்றால், அவர் சொல்வதை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

படுக்கையை வாங்கக் கற்றுக் கொடுக்க முடியுமே தவிர, அவர்களால் உங்களுக்கு தூக்கத்தை வாங்கக் கற்றுக் கொடுக்க முடியாது.

பணத்தை வளர்க்கக் கற்றுக் கொடுக்க முடியுமே தவிர, அவர்களால் உங்களுக்கு ஆனந்தத்தை அளிக்க முடியாது.

ஆனந்தத்தை அளிக்க சத்குரு ஒருவரால் மட்டும்தான் முடியும்; ஞான குருவால் மட்டும்தான் முடியும்.

அதனால்தான் கிருஷ்ணன் சொன்னார், "அவரையும் தாண்டிச் செல்." இந்தத் தெளிவு பிறந்தவுடன் அர்ஜுனன் ஆச்சாரியரையும் தாண்டிச் சென்றார்.

துரோணரும் வீழ்ந்தார்.

கடவுள் கொடுத்தாலும், எடுத்தாலும் அது கொடுப்பினையே

If God gives or takes it is a gift

நம் எல்லோருக்குள்ளேயும் தர்மத்திற்காகவாவது பணம் சேர்க்க வேண்டும்; தர்மத்திற்காகவாவது சொத்து சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது; தர்மம் செய்ய வேண்டும் என்று இருப்பது கூட கட்டுறு மனப்பான்மை தான்

தர்மம் செய்வதாகினும், முழுமையான ஞானமடைவதற்கு அதுவுமே ஒரு தடைதான். அதனால் தான் கிருஷ்ணன் அர்ஜுனனிடம் சொன்னார்.

"கர்ணனையும் தாண்டிச் செல்.''

அந்த மன அமைப்பையும் தாண்டிச் செல். "தர்மம் என்ற மன அமைப்பையும் தாண்டிச் செல்" என்கிறான். கிருஷ்ணனே போய் நேரடியாக கர்ணனிடம் தானம் கேட்டு விட்டார், "உன் புண்ணியத்தை எல்லாம் எனக்குத் தானமாகக் கொடு" என்று.

ஒவ்வொரு ஜீவனிடத்திலும், குருநாதன் அவர்களுடைய புண்ணியத்தையெல்லாம் தானமாக வாங்கிக்கொண்டார். ஒரு சூழலில் புண்ணியத்தையெல்லாம் குருநாதர் எடுத்து விடுவார். 'பாவத்தையெல்லாம் குருநாதர் எடுத்துவிடுவாரென்று நினைத்தோம். புண்ணியத்தையும் எடுத்து விடுவாரா சாமி?' என்று நீங்கள் நினைக்கலாம்.

புண்ணியம் ஞானத்திற்குத் தடையாக இருந்தால், அதையும் குருநாதர் எடுத்து விடுவார். சில நேரம், பணம் உங்கள் ஞானத்திற்குத் தடையாக இருந்தால், பணத்தை எடுத்துவிடுவார்.

ஒரு அழகான கதை.

ஒரு கிராமத்தில், ஒரு பாட்டி, ஒரு பசுமாட்டை மட்டுமே தன்னுடைய சொத்தாக வைத்திருந்தார். தினம்தோறும் பால் கறந்து,தயிராக மாற்றி, விற்று வருகிற பணத்தில், கிருஷ்ணனையே தியானித்து, கிருஷ்ணனையே பூஜை செய்து, கிருஷ்ணனையே நினைத்து வாழ்ந்து கொண்டு இருந்தார்.

அதே ஊரில் உள்ள ஒரு பெரிய பணக்காரர், அந்த ஊரில் இருக்கிற கிருஷ்ணன் கோயிலுக்கு வந்து, "கிருஷ்ணா! எனக்கு எப்படியாவது ஒரு 10 கோடி ரூபாய் செல்வம் கிடைக்க அருள் செய்ய வேண்டும்," என்று மூன்று நாள் வந்து பிரார்த்தனை செய்தார்.

மூன்று நாள் வந்து பிராத்தனை செய்த உடனேயே, அவருக்கு அந்தச் செல்வம் கிடைத்துவிட்டது.

ஆனால், இந்த ஏழைப்பாட்டி, "கிருஷ்ணா! எப்படியாவது இரண்டு பசு சேர்ந்து கிடைத்ததென்றால், உன்னுடைய கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் ஏதாவது செலவு செய்வேன் இல்லையா?” என்று மிக ஆழ்ந்து பிரார்த்தனை செய்தார்.

மூன்று நாள் பிரார்த்தனைக்குப் பிறகு, இருந்த ஒரு பசுவும் செத்துப் போய்விட்டது.

இந்தக் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்த லட்சுமி, “இது என்னைய்யா அட்டூழியம்? ஏற்கனவே பணம் வைத்துள்ளவனுக்கு, மேலும் 10 கோடி ரூபாய் சேர்த்துக் கிடைத்தது.

ஆனால், அந்தப் பாட்டி, ஒரு பசுமாட்டை மட்டும் வைத்துக்கொண்டு, உன்னையே கதியென்று நினைத்துக் கொண்டு இருந்தார். அந்தப் பசுமாடும் செத்துப் போய்விட்டது. இந்த லீலையின் காரணம் என்ன? என்று பகவானிடம் கேட்டார்.”

மிக அழகான கதை. மிகவும் ஆழமான சத்தியம் கிருஷ்ணர் சொல்கிறார். “அந்த ஊர் பணக்காரனாக இருந்தவர், எந்த ஜென்மத்திலும் என்னை வந்து அடைய மாட்டார்.”

“அவருக்கு ஏற்கனவே, பல பந்தங்கள் இருக்கிறது. ஒரு கோடி ரூபாய் கொடுத்தால், அது மற்றொரு பந்தம். அதனால் வாங்கிக் கொண்டு போகட்டும்.

ஆனால், அந்த ஏழைப்பெண் என்னை அடைவதற்கு அவருக்கு ஒரே ஒரு பந்தம்தான் இருந்தது. அந்தப் பசு மட்டும்தான். அதை எடுத்துவிட்டால் என்னை அடைந்து விடுவார். அதனால் அந்தப் புண்ணியத்தையும் எடுத்துவிட்டேன்,” என்று சொன்னார்.

கிருஷ்ணன், கர்ணனிடம் இருந்து புண்ணியத்தை வாங்கியது, கர்ணனை ஞானமடையச் செய்வதற்காக!

சில நேரத்தில் குறுகிக் கொண்டே போனால், உங்களுக்கு இருக்கிற சொத்து கொஞ்சம் குறைந்தாலும், குறைந்துவிடும்.

சில நேரத்தில், உங்களுடைய தர்மங்கள் எடுக்கப்பட்டாலும் எடுக்கப்படும்.

தர்மங்கள் எடுக்கப்படும் காரணங்கள் நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். தர்மங்களை எடுப்பது, அதை தாண்டிய மோட்சத்தை உங்களுக்கு அளிப்பதற்காகத்தான்.

மோட்சத்தை அளிப்பதற்காக, தர்மம் எடுக்கப்பட்டாலும் அதில் தவறில்லை.

இதைத்தான் கிருஷ்ணன் மிகவும் அழகாகச் சொன்னார். “அர்ஜுனா, கர்ணனை தாண்டிச் செல்.” மிக முக்கியமான விஷயம், தர்மத்தை அழிப்பதற்கு மிக வலிமையான அஸ்திரம் வேண்டும். கர்ணனை அழிப்பதற்கு நாகாஸ்திரம் வேண்டும்.