நீங்கள்தான் அந்த அர்ஜுனன்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
You are that Arjuna
Unclutching மூலமாக எப்படி ஒரு மனிதன் ஞானமடைகிறான் என்பதைத்தான் நம்முடைய புராணங்கள் எல்லாமே மிகத் தெளிவாக வர்ணிக்கின்றன.
பாகவதம், புராணங்கள் இதில் வருகிற கதையில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடக்கிற யுத்தமெல்லாம் வேறு ஒன்றும் இல்லை. நம்முடைய மனத்திற்குள் கெட்ட எண்ணங்களுக்கும், நல்ல எண்ணங்களுக்கும் நடக்கிற சண்டைதான்.
மனம் சில நேரம் நம்பிக்கை பக்கம் இழுக்கிறது.
சில நேரத்தில் அவநம்பிக்கை பக்கம் இழுக்கிறது.
எல்லாவற்றையுமே நம்பத்தோன்றும். உயர்ந்த உணர்வு நிலையில் இருக்கும்போது, எல்லார் மேலேயும் எல்லாவற்றின்மீதும் நம்பிக்கை இருக்கும். வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்கான ஸ்திரமும், தைரியமும் இருக்கும்.
திடீரென்று சில நேரத்தில் பார்த்தால் எல்லாவற்றின்மீதும் நம்பிக்கை போய்விடும். எதன் மீதும் நம்பிக்கை இருக்காது. தன் மேலேயே நம்பிக்கை இருக்காது. வாழ்க்கையைச் சலிப்பாகிவிடும். எங்கே செல்வதென்றும் தெரியாது. என்ன செய்வதென்றும் தெரியாது.
சில நேரங்களில் முழுமையான அவநம்பிக்கை, சில நேரங்களில் முழுமையான நம்பிக்கை இருக்கும். உங்கள் உணர்வு உச்சத்தன்மையில் இருந்தால், எல்லார் மீதும் முழுமையான நம்பிக்கை இருக்கும்.
உங்கள் உணர்வு நீச்சத் தன்மையில், மந்தத் தன்மையில் இருந்தால், எல்லார்மீதும் முழுமையான அவநம்பிக்கைதான் இருக்கும்.
ஆத்திகன், நாத்திகன் என்பது ஒரு தனி மனிதன் கிடையாது.
எல்லா நேரத்திலும், எல்லோரும் ஆத்திகர்களாக இருக்க முடியாது.
எல்லா நேரத்திலும் எல்லோரும் நாத்திகர்களாக இருக்க முடியாது.
மனம், ஆனந்தமாகவும் சந்தோஷமாகவும் இருந்தால், எல்லார் மேலேயும் நம்பிக்கை இருக்கும்.
இதற்கெல்லாம் மன அமைப்புதான் காரணமே தவிர, அதுவே மனிதனைப் பற்றிய முடிவு அல்ல.
அனைத்து ஆத்திகர்களுமே, நாத்திகர்களுமே ஏதோ ஒரு நேரம் நம்பியே தீருவார்கள், அதில் சந்தேகமே இல்லை. நம்முடைய வாழ்க்கையே இந்த இரண்டிற்கும் இடையில்
நடக்கிற போராட்டம் தான், நம் மஹாபாரதம், இராமாயணம் மற்றும் புராணங்களின் சாரமே நல்ல எண்ணத்திற்கும், கெட்ட எண்ணத்திற்கும் நடுவில் நடக்கிற சண்டையில் நல்ல எண்ணங்கள் அடைகிற வெற்றியைப் பற்றியதுதான்!
உங்களுக்குள் நீங்கள் தேடி ஞானத்தை அடைகிற நிகழ்ச்சியைத்தான் எல்லாப் புராணங்களுமே விளக்குகின்றன.
வேதம், இந்தச் சத்தியத்தை நேரடியாகச் சொல்கிறது. புராணங்கள், கதையாக உருவகப்படுத்திச் சொல்கின்றன.
இந்தப் பகுதியில் நமது இதிகாசத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்த மஹாபாரத்தைப் பார்ப்போம். எப்படி மஹாபாரதம் ஒரு மனிதன் ஞானமடைகிற கதையைப் புராணமாக, மிக அழகாக, தெளிவாக உருவகப்படுத்திச் சொல்கிறது என்பதைப் பார்ப்போம். மஹாபாரதத்திலே வருகிற அர்ஜுனன்தான் ஜீவன். தனி ஜீவன்தான் அர்ஜுனன்.
வாழ்க்கை எனும் போர்க்களமே நீங்கள் ஞானமடைவதற்குத்தான்
Life is a battle field for enlightenment
ஞானத்தை நம் முன்னோர்கள் மிக அழகாக மகாபாரதக் கதையாகச் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
அது அருமையான ஒரு சத்தியம்.
இந்த வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு (parental conditions) எப்படி நம்மைத் துக்கத்திற்குள்ளாக்குகிறது? அதைத் தாண்டி, எப்படிப் போய் நாம் ஞானத்திற்குள்ளே மலர்வது? அதைத்தான் லக்ஷ்யே லக்ஷ்யமுத்தமம் என்று சொல்வோம்.
> 'நான்'என்று நீங்கள்
இருக்கிற இருப்பு
உணர்வுதான்
அர்ஜுனன்
லட்சியத்தின் உன்னதமான, அடையப்பட வேண்டிய இலக்கை எப்படி அடைவது என்கிற சத்தியத்தை, மிக அழகாக மஹாபாரதத்திலே, மஹாபாரதப் போராக நம்முடைய முன்னோர்கள் விளக்கி இருக்கிறார்கள். அதனுடைய சத்தியம் புரிந்தால்தான், மஹா பாரதப் போருடைய தாத்பரியம் புரியும்.
அர்ஜுனன்தான் ஜீவன்.
ஜீவன் என்றால், உங்களின் தனி இருப்பு உணர்வு. நான் என்று உங்களில் நீங்கள் இருக்கிற இருப்பு உணர்வுதான் அர்ஜுனன்.
கிருஷ்ணன்தான் ஞான சத்குரு.
கிருஷ்ணன்தான் ஆத்மா.
அவர்கள் இருவரும், ஜீவனும் ஆத்மாவும் ஏறி அமர்ந்திருக்கிற தேர்தான், இந்த உடல்.
இதற்கு உள்ளே ஜீவாத்மா மட்டுமல்ல, பரமாத்மாவும் உட்கார்ந்திருக்கிறார்.
ஜீவாத்மா அனாகதத்திலேயும், பரமாத்மா ஆனந்த கந்தத்திலேயும் உட்கார்ந்து இருக்கின்றன.
ஐந்து குதிரைகள்தான் உங்களுடைய ஐம்புலன்கள்.
இரண்டு சக்கரம்தான் சித்தமும், புத்தியும்.
மேலே இருக்கிற அந்த அனுமன் கொடிதான் அலைந்து கொண்டே இருக்கிற மனமாகச் சொல்லப்படுகிறது.
இந்தக் கடிவாளம்தான் எண்ணம்.
ஐந்து இந்திரியங்கள் குதிரைகள்.
பரமாத்மா தேரிலே அமர்ந்திருக்கிற கிருஷ்ணன். சத்குருநாதன் ஞான சத்குருநாதன்.
வாழ்க்கை என்கிற போர்க்களத்தில், ஞானமடைதல் என்கிற குறிக்கோளை நோக்கி போர் துவங்குகிறது.
இந்தப் போர் தார்மீகமாக இறைவனாலேயே துவங்கப்படும் போர். நீங்கள், அதாவது அர்ஜுனன் ஞானமடைய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக உருவாக்கப்பட்ட மஹாபாரத போர்க்களம்தான் உங்களின் வாழ்க்கை.
உங்களின் வாழ்க்கை, முடிவை நோக்கிச் செல்லவில்லை. ஒரு முடிவிலிருந்துதான் துவங்குகிறது
Your life does not move towards a goal, it starts from a goal
ஆரம்பிக்கும்பொழுதே மொத்த சத்தியத்தையும், புத்திசாலித்தனமாக ஞானகுரு, சீடனுக்குச் சொல்லிவிட்டார்.
அதுதான் கீதை.
வரைபடத்தைக் காண்பித்து விடுகிறார்.
வரைபடத்தைக் காட்டாமல் பயணம் செய்யச்சொல்லி, ஞானசத்குருமார்கள் சொல்வதே இல்லை. ஏனென்றால் உங்களுடைய தர்க்க அறிவிற்குப் புரிகிற அளவிற்காவது, அந்த வரைபடம் உங்களுக்குக் காட்டப்பட்டால் மட்டும்தான், நீங்கள் நிம்மதியாகத் தேரில் உட்கார்ந்து இருப்பீர்கள்.
ஞான
சத்குருவினுடைய
சக்தியை, சத்தியத்தை
சீடனுக்கு விளக்கினார்.
அதுதான் விஸ்வரூப
தரிசனம்.
தெய்வமே இறங்கி வந்து தேரோட்டியாகத் தேரை ஓட்டினாலும், அவரை திரும்பத் திரும்ப தொந்தரவு செய்துகொண்டே இல்லாமல் இருக்க வேண்டும் அல்லவா? அதற்காகத்தான் சீடர்களுக்கு ஞான சத்குருநாதர் நீங்கள் ஞானமடைவதற்கான சாத்தியகூற்றை முதலில் சொல்லிவிடுவார்.
ஒரு சின்ன உதாரணம், ரெயில் வண்டியில் ஏறி உட்கார்ந்து விட்டீர்கள். ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை, ஓட்டுநரைக் கூப்பிட்டுக் கூப்பிட்டு “சரியாகத்தான் சென்று கொண்டிருக்கிறாயா? செல்லும் ஊருக்குத்தான் சென்று கொண்டிருக்கிறோமா? டில்லி அந்தப் பக்கமாயிற்றே. வண்டி இந்தப் பக்கம் போகிற மாதிரி இருக்கிறதே!” என்று கேட்டுக்கொண்டே இருந்தால் என்ன ஆவார் ஓட்டுநர்?
ஒன்று, அவர் கீழேக் குதித்து விடுவார். இல்லை, உங்களைக் கீழேத் தள்ளிவிடுவார்!.
பரமாத்மா, ஞான அனுபூதி பெற்ற ஞான சத்குருநாதர் அந்த மாதிரி மர்மங்களை எல்லாம் உங்களுக்கு வைப்பதில்லை.
தர்க்க ரீதியாக உங்களுக்குப் புரிகிற மாதிரி, உங்களின் பட்டறிவிற்குத் தேவையான தெளிவைக் கொடுத்து விடுகிறார்.
அதைத்தான் கிருஷ்ணன் முதலில் அங்குச் செய்தார். ஆரம்பிக்கும்பொழுதே அதைச் செய்தார்.
அதற்குத்தான் தீக்ஷை என்று பெயர்.
அர்ஜுனனுக்கு, ஞானசத்குரு நாதனாகிய கிருஷ்ணன் அளித்த தீக்ஷைதான், பகவத்கீதை.
ஞானத்தை அடைவதற்கான பாதையை, பட்டறிவோடு கொடுத்தது மட்டும் இல்லை, தம்மால் அர்ஜுனனுக்கு ஞானத்தை அளிக்கமுடியும் என்பதற்கு நிரூபண மாக முதல் அனுபவத்தையும் காட்டிவிட்டார்.
விஸ்வரூப தரிசனம் என்பது வேறு ஒன்றும் இல்லை. ஞான சத்குருவினுடைய சக்தியை, சத்தியத்தைச் சீடனுக்குப் புரியும் பாஷையில் விளக்கினார். அனுபவம் ஆக்கினார் அதுதான் ‘விஸ்வரூப தரிசனம்’.
எப்போதாவது, இங்கு குரு முன்னால் உட்கார்ந்து, மலைத்துப்போய், ‘என்னடா, என்னுடைய உணர்வை எல்லாம் தாண்டிய ஏதோ ஒன்று இங்கு நடந்துகொண்டு இருக்கிறதே’ என்று கண்களில் தாரை தாரையாய் நீர் வார்த்து, மலைத்துப் போய், அசந்து போய், உங்களின் தோள் வலிமை இழந்து விழுந்ததுண்டு என்றால், விஸ்வரூப தரிசனம், உங்களின் வாழ்க்கையில் ஒருமுறையாவது நடந்திருக்கிறது. என்று அர்த்தம்
அதுதான் விஸ்வரூப தரிசனம்.
மலைத்துப்போய்! "சாதாரண மனுஷன் மாதிரிதானே கிருஷ்ணன், என் ஞான குருநாதன் என் முன்னால் உட்கார்ந்திருக்கிறார்.
நம்மை மாதிரியே அசைகிற எலும்பும், தசையும், உடலுமாகத்தானே இவருக்கும் இருக்கிறது.
என்ன நடந்தது என்னுள், என்ன நடக்கிறது," என்று மலைத்துப் போய், தோள் சரிந்து ஆனந்தத்தில் கரைந்து, விழுந்த நேரம்தான், விஸ்வரூப தரிசனம்.
எப்போதாவது ஞான சத்குருவின் முன்னால் அமர்ந்திருக்கும்போது அது நடந்திருந்தால், அந்த விஸ்வரூப தரிசனத்தின் அனுபவம் உங்களுக்குள் நடந்திருக்கிறது என்று அர்த்தம்.
அர்ஜுனனுடைய தர்க்க அறிவை உருத்தெரியாமல் குலைத்து விட்டது விஸ்வரூப தரிச னம்.
அதாவது கிருஷ்ணனாலே, அர்ஜுனனுக்கு உணர்வாக, ஞான அனுபவமாக மாற்றப்படுகிறது.
அர்ஜுனனுக்கு, லட்சியத்தை நோக்கிய பாதையிலே வாழ முடியும்; செல்ல முடியும் என்கிற தைரியமே அப்போதுதான் வருகிறது.
அது வரையிலும் ஞானப் பாதையிலே போவதற்கான தைரியமே இல்லை.
இங்கே வருகிற பிரம்மச்சாரிகள் சிலர் ஆஸ்ரமத்திலிருந்து பரிவிராஜகம செல்கிறேன் என்று சொல்லிவிட்டு ஓடிப்போய் விடுவார்கள்.
இது எப்படிப்பட்ட செயல் என்றால்... சோம்பேறித்தனத்தினாலேயே மந்தமாகிவிட்ட தங்களின் செயல்பட முடியாத தன்மையை நியாயப்படுத்துவதற்காக, அவர்களே எடுத்துக்கொள்கிற தேவையற்ற முடிவுகளுக்கெல்லாம் ஆன்மீக ரசம் பூசுவது.
எனக்கு முதல் ஞான அனுபவம் கிடைத்த பிறகு பரிவிராஜகம் சென்றேன். நான் பரிவிராஜகம் சென்றதின் காரணம் வேறு.
மேலும், அப்போது ஆயிரம் சாவிகள் என் முன்னே இருந்தது. அதனால் சரியான சாவியைத் தேர்வு செய்வதற்கு எனக்கு அவ்வளவு காலமானது. நான்தான் இப்போது சரியான சாவியை வைத்துக்கொண்டு உங்களுக்காகக் காத்திருக்கின்றேனே.
நேரடியாக "இதை, இதைச் செய்தால் போதும் என்று சொல்வதை சிரத்தையோடு செய்யுங்கள். அது போதும்," என்று பிரம்மச்சாரிகளிடம் சொல்வதுண்டு.
சோம்பேறித்தனம் இல்லாத, அகங்காரம் இல்லாத, யார் ஒருவராலும் நேரடியாகக் குருநாதர் சொல்வதைக் கேட்க முடியும்.
குருவின் வார்த்தைகளை நேரடியாக உபயோகப்படுத்திப் பார்க்க முடியாத

சோம்பேறிகள்தான்,
குரு
சொல்லாத,
போதிக்காத நுட்பங்களில் தங்களின்
நேரத்தை வீணடிப்பார்கள்.
புத்திசாலிகள், உண்மையான சீடர்கள்,
குருவின் வார்த்தைகளை நேரடியாக
அணுகுவார்கள். என்று தெளிவாக எடுத்துச்
சொன்ன பின்பும், சில சோம்பேறிகள்
செய்யும் தேவையற்ற வேலைதான், குரு
சொல்லாமல், குருவின் அருள் பெறாமல்
தானாகவே பரிவிராஜகம் செல்வது,
தேவையற்ற தியான நுட்பங்களைப்
பரிசோதிப்பது என்று சொல்கிறோம்.
போலி தியான நுட்பங்களிலே வாழ்க்கையைக் கழிப்பதுதான் போலித்தனம்.
கடவுளாக மாறுவதற்கான சரியான நுட்பத்தைக் கடைப்பிடிக்காமல், போலியான நுட்பங்களைக் கடைப்பிடித்துக் கொண்டு இருப்பவர்கள்தான், போலிச் சாமியார்கள். அவ்வளவுதான். வேறு ஒன்றும் இல்லை.
நுட்பம் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருப்பவர்கள்; சரியான தியான நுட்பம் தெரியாமல் தடுமாறிக் கொண்டு இருப்பவர்கள்; கிருஷ்ணனைச் சந்திக்காமல் தடுமாறும் அர்ஜுனர்கள் ஆவார்கள்.
ஒருவேளை, அர்ஜுனன் அப்போது அரசனாய் இருப்பதற்குப் பதிலாக, சாமியாராகப் போயிருந்தார் என்றால், போலிச் சாமியாராக ஆகி இருப்பார்.
கிருஷ்ணன் மாதிரி ஒரு ஞான சத்குரு, அவரின் வாழ்வில் கிடைத்ததினால் தப்பித்தார்.
விஸ்வரூப தரிசனத்திற்கு பின்புதான் அர்ஜுனனுக்கு அந்தத் தைரியமே வந்தது. செல்லுகிற பாதையும் தெளிந்து, செலுத்துபவனுக்குச் சக்தி இருக்கிறது என்ற தெளிவும் வந்ததினால், சித்தம் தெளிந்த அர்ஜுனன், வில்லை சீர்தூக்கி நிறுத்தி, போரைத் துவங்கினார்.
அவரின் ஆன்ம ஞானப் பயணம் ஆரம்பமானது.
உலகத்தின் மிக நீண்ட காவியம்...
உங்கள் வாழ்க்கைதான்
The longest epic in this world is your life

அருமையான கதை பாரதக்
கதை. மஹாபாரதம் முழுக்கவுமே
பார்த்தீர்கள் என்றால், ஞானத்தை
வெளிப்படுத்துகிற சத்தியம்.
இதுவரையிலும், உலகத்தில்
எழுதப்பட்டிருக்கிற
காப்பியங்களிலேயே மிக நீண்ட
காவியம் மஹாபாரதம்தான். அதை
இன்னமும் யாரும் தாண்ட
முடியவில்லை.
ஒரு லட்சம் ஸ்லோகங்கள்.
அந்த சமஸ்கிருத அமைப்பைப் பார்த்தால் தெளிவாகத் தெரிகிறது,
ஒரே ஒரு மகான் எழுதியதுதான் என்று.
அதைவிட நீளமான புத்தகம் இன்னும் எழுதப்படவில்லை. அப்படியொரு காவியம் இன்னும் எழுதப்படவில்லை. அவ்வளவு பெரிய மகத்தான நூல். அருமையான நூல்.
தீக்ஷை கொடுத்த தைரியத்தினாலே, அர்ஜுனன் ஞானத்தை நோக்கிய, ஞானப் பாதையை நோக்கி, லட்சியத்தை நோக்கிக் கிளம்புகிறார்.
தைரியமாகக் கிளம்புகிறார்.
முதல் பத்து நாள் போரும் பீஷ்மரை எதிர்த்து நடைபெறுகிறது. அதுதான் மஹாபாரதம். அதுதான் உங்கள் வாழ்க்கை. என்று இப்போது நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பது.
நிஜத்தை சொல்ல வேண்டுமானால், உலகத்தின் மிக நீண்ட காவியம் வரலாற்று ரீதியாக இருக்கும் மஹாபாரதம் அல்ல. ஜென்ம ஜென்மமாக, தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கும் உங்களின் வாழ்க்கைதான்.
நம்முடைய வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு
Our parental conditioning
நன்றாக ஆழ்ந்து பாருங்கள், மஹாபாரதக் கதை புரிந்திருந்தால் தெரியும். பீஷ்மர்தான் அந்த மொத்த வம்சத்திற்கும் பிதாமகன்.
முதலில் உங்களுக்குள்ளும் பீஷ்மர்தான் தலையெடுப்பார்.
தாத்தா சொன்னார்,
பாட்டி சொன்னார்,
அப்பா சொன்னார்
என்ற வார்த்தைகளால், கருத்துகளால் கட்டுப்படுவதுதான் வளர்ப்பு கட்டுறு மானப்பாங்கு.
அதுதான் ஜீவன் முக்தி பாதையில் முதலில் வரும் தடை .
அதுதான் மிகப் பெரிய பாகம்.
அதனால்தான் 18 நாள் மஹாபாரத யுத்தத்தில் 10 நாட்கள் பீஷ்மரோடேயே சண்டை போட வேண்டியதாகப் போயிற்று.
அதற்கு அர்த்தம் என்னவென்றால், உங்கள் வாழ்க்கையில் ஞானத்தை நோக்கிய பாதையை நீங்கள் கடப்பதற்கு 18 நாள் ஆகுமென்றால், நீங்கள் 10 நாள் உங்களின் வளர்ப்பு கட்டுறு மனப்பாங்குடன் சண்டை போட வேண்டியிருக்கும் என்பதே.
வலிமையான ஒரு கட்டுறுத்தப்பட்ட மனப்பாங்கு, இந்த வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு.
பெற்றோராலே ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள், கட்டுறுத்தல்கள்தான் கொடுமையான இந்த வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு.
மொழி, இனம், மதம், ஜாதி, சம்பந்தப்பட்ட இந்த எல்லாக் கட்டுறு மனப்பாங்குகளுமே வளர்ப்பு கட்டுறு மனப்பாங்குதான்.
உங்களின் பீஷ்மர் இதனால் செய்யப்பட்டதுதான்.
அதனால்தான் பீஷ்மரை எதிர்த்து 10 நாட்கள் சண்டை நடக்கிறது.
வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கை அழிக்க வேண்டும். ஆனந்த கந்தத்தில் இருந்து பரமாத்மா எப்போது உங்களை வழி நடத்த ஆரம்பித்தாரோ, அதற்கப்புறம் முதலில் அழிவது வளர்ப்பு கட்டுறு மனப்பாங்காகத்தான் இருக்கும்.
கிருஷ்ணன்,

உடலாகிய ரதத்தில்,
ஐந்து இந்திரியங்களான
குதிரைகளைப் பூட்டி,
சித்தமும், புத்தியுமாகிய தேர்ச் சக்கரங்களைப் பூட்டி,
சஞ்சரித்துக் கொண்டே இருக்கிற
மனமாகிய அனுமன் கொடியை
ஏற்றி, எண்ணங்கள் என்கிற
அருமையான
கயிற்றினைப் பூட்டி,
யுக்தி எனும் சாட்டையால்,
ஜீவாத்மா எனும் அர்ஜுனனை,
வழி நடத்தினார்.
தேர் உருண்டு ஓடியது. முதலில் வருகிற எதிரி பீஷ்மர் வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு. 10 நாள் சண்டை நடந்தது. பத்து நாள் சண்டைக்குப் பிறகு எப்படி பீஷ்மர் அழிந்தார் என்று பாருங்கள். பீஷ்மரைக் கடைசிவரை நேரடியாகச் சாகடிக்க முடியவில்லை நேரடியாகச் சாகடிக்கவும் முடியாது.
வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கை நேரடியாக எதிர்த்துப் போராடி, அழித்துச் சண்டையிடவே முடியாது.
ஏனென்றால், உங்களையே உருவாக்கிய சக்தியாயிற்றே அது!
எப்படி அதை அழிக்க முடியும்?
எந்தச் சக்தி முன்னால் அந்த வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு வேலை செய்யாதென்று நாம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.
அதைத்தான் கிருஷ்ணன் செய்தார். யார் முன்னால் பீஷ்மர் சண்டையிட மாட்டார் என்று கண்டுபிடித்தார் கிருஷ்ணன்.
யார் முன்னால்?
சிகண்டி முன்னால் பீஷ்மர் சண்டையிடமாட்டார்.
சிகண்டி ஒரு அலி. அவர் முன்னால் பீஷ்மர் வில்லெடுக்க மாட்டார். அவர் பலவீனமாகிவிடுவார் என்று தெரிந்து, சரியாக கிருஷ்ணபரமாத்மா என்ன செய்தார், சிகண்டியை அழைத்து வந்து முன்னே நிறுத்தினார்.
நாம் என்ன செய்ய வேண்டும்? வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு எந்த மன அமைப்பின் முன் வேலை செய்யாதென்று நாமே கண்டுபிடிக்க வேண்டும்.
அப்படிக் கண்டுபிடித்து, அந்த மன அமைப்பை, நம் கட்டுறு மனப்பாங்கின் முன்னால் நிறுத்த வேண்டும்.
அலியைக் கொல்லுவதில்லையென்று பீஷ்மர் விரதமெடுத்திருந்தார்.
பிரார்த்தனை ஒரு பெரிய
விஷயம். பிரார்த்தனைதான்
சிகண்டி பிரார்த்தனை
என்கிற மனப்பாங்கை
முன்னால் வைத்தீர்கள்
என்றால் வளர்ப்புறு
கட்டுறு மனப்பாங்கு
உங்கள் மேல் வேலை
செய்யாது
அதேப்போல், வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கும் சில தன்மைகளைப் பெற்றிருக்கிறது. அது சில நேரத்தில் என்ன செய்யும்?
"சே, இது சின்ன விஷயம்பா. இதனுடனா போய்ச் சண்டையிடுவது?" என்று தன்னுடைய அகங்காரத்தால் சில விஷயங்களோடு மோதாது.
உங்களின் வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கே, வாழ்வில் அதையே ஸ்தம்பிக்க வைக்கும் நிகழ்வுகளைச் சந்திக்கும்போது, உங்களின் மனத்தில் தன்னைக் காப்பாற்றி கொள்வதாக நினைத்த அது உருவாக்கும் வார்த்தைகள்தான்,
"சே! இது சின்ன விஷயம்பா, இதிலெல்லாம் நம் நேரத்தை செலவு செய்யலாமா? பேசாமல் அதற்கு சும்மாவே இருந்துவிடுவோம்."
உங்களின் வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கையே, உங்களின் அகங்காரத்தையே செயல் இழக்கச் செய்யும் சக்தியைதான்; யுக்தியைதான் சிகண்டி என்கிறோம்.
உங்களுடைய முன்னோர், பெரியோர்களைப் பார்த்தீர்கள் என்றால் கூட, இவன் சின்ன பையன்பா, இவனுடனா சண்டை போடுவது என்று சில இடத்தில் சண்டை போடாமல் விட்டுவிடுவார்கள்.
அதை உபயோகப்படுத்திதான் வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கை உடைக்க முடியும். இல்லையென்றால் முடியாது.
அதைத்தான் கிருஷ்ணர் மிக அழகாகச் செய்தார். சிகண்டியை முன் நிறுத்தினார். சி கண்டி அலி என்பதால், பீஷ்மருக்கு "தாம் ஒரு ஆண் மகன்அலியோடு சென்று சண்டை போடுவதா?'என்ற எண்ணம் வந்தது.
தாம் ஆண் மகன் என்ற ஒரு கர்வம் பீஷ்மருக்கு உண்டு, இதுபோன்ற கர்வங்களைத்தான் அகங்காரம் என்று சொல்கிறோம்.
அதனால்தான், அலியை முன் நிறுத்திய உடனே, பீஷ்மர் அம்புகள் எய்வதை நிறுத்தி விட்டார்.
உடனடியாகக் கிருஷ்ணன் சொன்னார், "அர்ஜுனா, முடித்து விடு."
அப்போதுதான் வேக வேகமாக அர்ஜுனன் அம்புகளை எய்து, பீஷ்மரைக் கீழேச் சாய்த்து விட்டார்.
வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு, நீங்கள் ஞானம் அடைகிற வரைக்கும் சாகவே சாகாது. வேண்டுமானால் படுத்திருக்கும்.
பீஷ்மரைப் பார்த்தீர்கள் என்றால், வீழ்ந்து கிடந்தார். ஆனால், சாகவில்லை. இந்த வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு மட்டும், ஞானம் அடைகிற வரைக்கும் அழியாது.
என்ன செய்யும்? களத்தில் இறங்கி சண்டைக்கு வராமல் ஒரு ஓரமாக படுத்துக் கிடக்கும். அதைத்தான் செய்ய முடியும். ஆனால், அதைச் சாகடிக்க முடியாது.
அதனால் தான் அம்புபட்ட பீஷ்மர் அம்புப் படுக்கையிலே விழுந்து கிடந்தார்.
ஆனால், சாகவில்லை.
என்ன? இதற்கு மேல் எழுந்து வந்து போர் செய்ய மாட்டார். அந்த மாதிரி தனிமனித முயற்சியால், கட்டுறு மனப்பாங்கை தள்ளாடும் சூழ்நிலைக்கு வேண்டுமானால் தள்ளலாம்.
தள்ளாட வைப்பதனாலேயே சாகடிக்க முடியாது. அதுதான் அம்புப் படுக்கையிலே பீஷ்மர் விழுந்து கிடந்தார் என்று சொல்வது.
வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கை ஒரு ஓரமாக ஒதுக்கிக் கீழே தள்ளிவிட முடியும்.
எப்போது அந்தக் கட்டுறு மனப்பாங்கு வலுவிழக்கும் என்றால்... நீங்கள் கரைந்து உங்களின் கண்ணில் தாரை தாரையாகத் தண்ணீர் வரும்போதுதான் அது வலுவிழக்கும். உருகுதலுக்கு முன்பாக வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கால் ஆழமாக வேகமாக வேலை செய்ய இயலாது.
பிரார்த்தனை ஒரு பெரிய விஷயம். உருகிக் கரையும் பிரார்த்தனைதான் சிகண்டி. பிரார்த்தனை என்கிற மனப்பாங்கை முன்னால் வைத்தீர்கள் என்றால், வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு உங்கள் மேல் வேலை செய்யாது.
சடங்குகளின் ரகசியம்
- கணவன் இறந்தபிறகும், குங்குமமும் பூவும் வைத்துக் கொள்ளலாமா?
பூவும், பொட்டும் புருஷனா கொடுத்தார்?! அவையெல்லாம் அம்மா கொடுத்தது. அம்மா ஆசையாய்க் கொடுத்ததை எந்த ஒரு காரணத்திற்காகவும் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை.
என்னுடைய பீஷ்மரை வென்ற சுவையான சம்பவம்...
The sweet incident that destroyed my Bheesma
என்னுடைய 14வது வயதில்தான் சிகண்டியை முன் நிறுத்தி பீஷ்மரோடு சண்டை செய்தேன். அதாவது, வீட்டை விட்டு வெளியே செல்வதென்று முடிவு செய்தபோது, அப்போதுதான் இந்த பீஷ்ம பிதாமகர், எல்லாக் கட்டுறு மனப்பாங்கும் மொத்தமாக வந்து நின்றது.
கட்டுறு மனப்பாங்கு என்றால் என்ன?
சமூகம் நம்மேல் வைத்திருக்கிற கட்டுறுத்தும் மனப்பாங்கு.
நல்ல வேளையாக, ஏற்கனவே எப்படியோ அர்ஜுனனுக்கு, பீஷ்மர் மேல் வைத்திருந்த மரியாதை போய்விட்டது. திரௌபதியைத் துச்சாதனன் வஸ்திராபரணம் செய்தபோது, பீஷ்மர் சும்மா இருந்ததனால், அப்போதே அந்த மரியாதை போய்விட்டது.
உங்களுக்கும், உங்களுடைய வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கின் மீதான மரியாதை போயிருந்தால்தான், பீஷ்மரைச் சாகடிக்க முடியும். பீஷ்மரைக் கீழே தள்ள முடியும்.
எனக்கும் சின்ன வயதிலேயே என் பீஷ்மர் மேல் இருந்த மரியாதை போய்விட்டது. வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு மீது, சமூக அமைப்பு மீது இருந்த மரியாதை போய்விட்டது.
எப்படியென்றால், பத்து அல்லது பன்னிரெண்டு வயது இருக்கும்போது, வயதான பாட்டி ஒருவர் இறந்து விட்டார்.
103 வயது வரை வாழ்ந்தவர்.
பல சத்யங்களைப் புரியவைக்கும் சம்பவம் இது. அந்தம்மா பெரிய சொத்தோடு வாழ்ந்த பெண்மணி. துரதிர்ஷ்டவசமாக, வாரிசு இல்லாத சொத்து.
உங்களுக்குத்தான் வாரிசு இல்லாத சொத்து என்றால் தெரியுமே! எத்தனை பேர் அதற்காக அடித்துக் கொள்வார்கள் என்று!
103 வயது வரை அந்தம்மா வாழ்ந்தபோது, யாருமே அந்தம்மாவைப் பார்த்துக் கொள்ளவில்லை.
ஆனால், அவர் இறந்த போது நடந்த கூத்தைப் பார்த்திருக்க வேண்டுமே.
நான், நேராகப் பார்த்தேன். அதனால்தான் தெளிவாகச் சொல்கிறேன். இது ஒரு அருமையான நிகழ்ச்சி. என்னுடைய வாழ்வில் என்னுடைய பீஷ்மரின் மேல் இருந்த மரியாதையைப் போக்க வைத்த நிகழ்ச்சி.

அதாவது துரியோதனனுடைய சபையிலே, துச்சாதனன் திரௌபதியைத் துகிலுரியும்போது, தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தர்மத்தை விட்டுச் சும்மா இருந்தார் பீஷ்மர்.
இந்தப் பாட்டி இறந்தபோது நடந்த நிகழ்ச்சியைப் பார்த்த உடனேயே, பல தாத்தாக்கள் சொல்லிக் கொடுத்த தர்மம், தர்மத்தின்படிதான் வாழ வேண்டும் என்ற எல்லாக் கருத்துகளின் மேல் இருந்த மரியாதையும் போய்விட்டது.
அதாவது, தர்மம் என்று அவர்கள் எதைப் போதித்தார்களோ. அதன் மீதிருந்த மரியாதைதான் போய்விட்டது. இன்னும் சொல்ல வேண்டுமானால், அதற்கப்புறம்தான் நிஜ தர்மமே எனக்குப் புலப்பட ஆரம்பித்தது.
ஏனென்றால், தம்முடைய உயிருக்காகத் தர்மத்தையே அடகு வைக்கத் துணிந்தவர்கள் இவர்கள் என்பது அப்போது எனக்குப் புரிந்தது. இவர்கள் சொல்லிக் கொடுத்த தர்மத்தின் மேல், அதன்பின் எப்படி மரியாதை இருக்கும்?
வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு மேல் இருக்கும் மரியாதை... எப்போது அவர்களே அவர்கள் சொல்லிக் கொடுத்த வாழ்வை கடைப்பிடிக்கவில்லையென்று தெரிகிறதோ, அப்போதே அது அழிந்துவிடும். தானாகவே சாய்ந்துவிடும்.
அவர்களே அதைக் கடைப்பிடிக்கவில்லை என்று தெரிந்த உடனே என்ன ஆகும்? அதன்மீதுள்ள மரியாதை போய்விடும். அதுதான் என் வாழ்க்கையில் நடந்தது. அந்த வயதான பாட்டி இறந்து போய்விட்டார்கள்.
அந்தம்மா ஒரு பெரிய கஞ்சம்.
நான் என் கண் முன்னாலேயே பார்த்தேன்... 103 வயதான அந்தம்மா இறந்த பிறகு, பிணத்தை எடுத்துவிட்டு, அவர் பக்கத்திலேயே வைத்திருந்த பெட்டியை வெளியே எடுத்தார்கள். நம்பவே மாட்டீர்கள்! பெட்டி நிறைய வெள்ளிக் காசுகளும், நகைகளும் சேர்த்து வைத்திருந்தார்கள். எல்லாம் அந்தக் காலத்து வெள்ளிக் காசுகளும், சொக்கத் தங்கமும்.
அவர் உயிரோடிருக்கும்போது புகையிலை வேண்டுமென்றால், என்னைக் கூப்பிட்டு ,"போய், மூலக்கடையில் புகையிலை வாங்கிக் கொண்டு வா," என்று சொல்வார்.
எல்லாத் தெரு முனையிலேயும் ஒரு செட்டியார் கடை வைத்திருப்பார் இல்லையா?
அதுபோல் அங்கிருந்த மூலக்கடையில் "புகையிலை வாங்கிக் கொண்டு வா," என்று என்னை அனுப்பி வைப்பார்.
நீங்கள் அமெரிக்காவில் எங்குப் போனீர்கள் என்றாலும், ஒரு மெக்டோனால்ட் இருக்கும். நம் நாட்டில் எந்தக் கிராமத்திற்குப் போனீர்கள் என்றாலும், ஒரு செட்டியார் கடை இருக்கும். அப்போதே இதற்கென்று ஒரு சமூகம். இதற்கென்று ஒரு வேலை. இதற்கென்று ஒரு தொழில் என்று முடிவு செய்து விட்டார்கள் பாருங்கள்.
அப்போதே முடிவு செய்து ஒரு அமைப்பை ஏற்படுத்தி நிர்ணயம் செய்து விட்டார்கள். சில ஆட்களுக்கு இது புரியாமல் ஜாதி, வெறி, அப்படி இப்படியென்று சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ஜாதி, என்பது வெறியாக மாறக்கூடாதே தவிர அந்தச் சமூக அமைப்பைப் பார்த்தீர்கள் என்றால், எல்லாம் ஆழ்ந்த காரண காரியத்தோடுதான் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
இதற்கெல்லாம் காரணமான, கட்டுறு மனப்பாங்கை மாற்றுவதற்குப் பதிலாக, சமூக நலத்துக்காக முன்னோர்கள் ஆராய்ந்து உருவாக்கிய சமூக அமைப்பையே உடைத்துத் தூக்கிப் போடுவதுதான் பெரிய பிரச்சனை.
எது எப்படியிருந்தாலும், எல்லாச் செட்டியார் மூலக்கடையிலும் புகையிலை வைத்திருப்பார்கள்.
பாட்டி கேட்கும் புகையிலையை வாங்குவதற்காக நான் பாட்டியிடம், "காசு கொடும்மா," என்று கேட்பேன். அதற்கு, "உங்க அப்பாவிடம் வாங்கிக் கொண்டு போ," என்று சொல்வார்.
சரியென்று அப்பாவிடம் காசு வாங்கி, புகையிலை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, மீதமுள்ள காசுக்கு ஏதாவது மிட்டாய் வாங்கி சாப்பிட்டுக் கொள்வேன். அவ்வளவுதான். போய் வாங்கி வந்து தருவதற்குக் கூலி.
இந்தப் பாட்டிக்கும் எனக்கும் இடையில் இருந்த உறவு இவ்வளவுதான் என்றாலும், அவரின் மரணத்தை மற்றவர்கள் அணுகியதை பார்த்ததினாலேயே, என்னுடைய பீஷ்மரை வெல்லும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.
நீங்கள் எப்படிப்பட்ட வாழ்வை இன்று வாழ்ந்து கொண்டிருந்தாலும் சரி, உங்களுடைய பீஷ்மரை வெல்லாதவரை, நம்மைச் சுற்றி விடுதலை இருந்தால்கூட, அதை அனுபவிக்க முடியாது. பீஷ்மரை வெல்வதென்பது, தேடுதல் உடைய ஒவ்வொருவருக்கும் அடிப்படையானது. சரி, என்னுடைய பீஷ்மரை வென்ற சுவையான அனுபவத்தைத் தொடரலாம்...
> பீஷ்மரை வெல்லாதவரை,
> நம்மைச் சுற்றி விடுதலை
> இருந்தால்கூட, அதை
> அனுபவிக்க முடியாது. பீஷ்மரை
> வெல்வதென்பது, தேடுதல்
> உடைய ஒவ்வொருவருக்கும்
> அடிப்படையானது.
மரணத்திற்குப் பின்னால் மற்றொரு நாடகம்
Behind the screen of Death, another drama
அந்தப் பாட்டி இறந்த செய்தியைக் கேட்டு, இறுதிச் சடங்குக்காக ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள்.
அந்தப் பாட்டி செத்துப் போய்விட்டார் என்று தெரிந்தபோது யாருமே சத்தம் போட்டு அழவில்லை. அங்குச் சுற்றி இருந்த உறவினர்களில் ஒருவருமே குய்யோ... முய்யோ... என்று ஒப்பாரி வைத்து அழவில்லை! ஏன் அவர்கள் அழவில்லை? என்று ஆச்சரியப்பட்டு கொண்டிருந்தேன்.
அப்போது முதலில் இவர்கள் செய்த வேலை என்னவென்றால்... அவர்கள் வரும்போது அணிந்திருந்த நகைகளையும், விலையுயர்ந்த புடவைகளையும் மாற்றுவதற்காகச் சென்று விட்டார்கள். கூட்டுக்குடும்பம் என்பதாலே, ஆளுக்கு ஒவ்வொரு அறை இருக்கும். எல்லோரும் அவரவர் அறைக்குச் சென்று, நகைகள், புடவைகள் எல்லாம் மாற்றிக் கொண்டு வந்தார்கள்.
என்ன செய்கிறார்கள் இவர்கள் என்று பார்த்து கொண்டே இருந்தேன். விலை அதிகமான நகைகளை எல்லாம் மாற்றிவிட்டு, விலை அதிகமாக இருக்கிற புடவைக்குப் பதிலாக, சாதாரண மலிவு விலை புடவையைக் கட்டிக் கொண்டு வந்தார்கள்.வந்ததும் ஒ... வென்று அழ ஆரம்பித்தார்கள்.
எனக்கு ஆச்சர்யம் தாளவில்லை.
எனக்கோ, 'என்னடா இது, அழுகையென்றால் அந்தத் துக்கச் செய்தியைக் கேட்ட உடனேதானே வர வேண்டும்! போய் துணி மாற்றிவிட்டு வருகிற அரைமணி நேரம் அழுகை வராமல் இருக்க முடியுமா?' என்று யோசனை வந்தது. அவர்கள் ஏன் இப்படிப் செய்கிறார்கள் என்று எனக்கு முதலில் புரியவில்லை.
உட்கார்ந்து கொண்டு, "ஒ... பாட்டி விட்டுட்டுப் போயிட்டியே," என்று அழுதார்கள்.
ஒரு இரண்டு நிமிடம் கழித்து மூக்கைத் துடைத்துக் கொண்டு, அவர்களுக்குள் "மாமியார் நல்லா இருக்காளா?
என்னைக்கு வந்தாய்?
சரியாகப் போய் விட்டதா?
ஏய்! போய் காபி எடுத்துக்கொண்டு வரச் சொல்லுடா," என்று இப்படிச் சகஜமாகப் பேசியபடி உட்கார்ந்திருந்தார்கள்.
எனக்கு மேலும் குழப்பம்... முன்பு அழவில்லை. அப்புறம் திடீரென அழுதார்கள். இப்போது சாதாரணமாக விசாரிக்க ஆரம்பித்து விட்டார்களே! எனக்கு இன்னும்
ஆச்சரியத்தைத் தந்த விஷயம் இதுதான்...
சும்மாவேதான் உட்கார்ந்திருப்பார்கள். திடீரென்று யாராவது ஒரு சொந்தக்காரர் வெளியூரிலிருந்து வந்தார் என்றால், உடனே, "மாமா!! இப்படி நம்மையெல்லாம் விட்டுட்டுப் போயிட்டாங்களே," என்று அழுகையைப் புது உற்சாகத்தோடு ஆரம்பிப்பார்கள்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஆழமான துக்கம் இருந்தால் தொடர்ந்து அழ வேண்டும். இல்லையென்றால், அழாமல் சும்மா இருக்க வேண்டும்.
யாராவது ஒருவர் வந்தார்கள் என்றால் அவர்கள் வந்த உடனே ஓ...வென்று ஆரம்பிப்பது... இந்தச் செயல் எனக்கு முற்றிலும் குழப்பமாயிருந்தது. அழுகிறவர்கள், என்ன செய்வார்கள்? அருகேயிருக்கும் அந்தத் துண்டை எடுத்து முகத்தை மூடி மூடி அழுவார்கள்.
அப்போது நிஜமாகவே இப்படித்தான் எனக்குத் தோன்றியது 'உண்மையிலேயே பொங்கும் சிரிப்பைத்தான் இப்படி மூடிக் கொள்கிறார்களோ! அவர்கள் சிரித்து, யாராவது அதைப் பார்த்து, அங்கு அசிங்கமாகி விடக் கூடாதே என்பதற்காகத்தான் துண்டை வைத்து மூடிக்கொள்கிறார்களோ' என்றுதான் தோன்றியது.
கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்கள், எத்தனை இடத்தில், சாவு வீட்டுக்குப் போன உடனே, ஒன்று உங்களுக்குச் சிரிப்பு வந்திருக்கும் அல்லது அழுகையே வந்திருக்காது. முகத்தை அழுவதுபோல வைத்துக் கொள்ளாவிட்டால் மற்றவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்று முகத்தைத் துக்கமாக வைத்துக் கொள்ள முயற்சித்திருப்பீர்கள். ஒன்று சிரிப்பை அடக்குவதற்கோ இல்லை துக்கமாக நடிப்பதற்கோ முகத்தைத் துணியால் மூடியிருப்பீர்கள்.
உண்மைதானே! நன்றாக யோசித்துப் பாருங்கள்.
நானே பார்த்தேன்., 'ஓ! இதனால்தான் துண்டை வைத்து மூடிக் கொள்கிறார்களா?' என்றுயோசித்தேன்.
பிறகு, அடுத்து நடந்த ஒவ்வொரு கூத்தும், எனக்கு ஆச்சரியத்தை அதிகப்படுத்தியது. ஒவ்வொரு கூத்தையும் தொடர்ந்து பார்த்தால்... மரணம் எனும் மேடைக்குப் பின்னால் நடக்கும் இன்னொரு பெரிய நாடகம் எனக்கு நன்றாய்த் தெரிந்தது.
முதல் ரவுண்ட் அழுது முடித்துவிட்டு, பக்கத்தில் இருப்பவர்களிடம் சகஜமாக, "இது என்ன ஆயிற்று? அது என்ன ஆயிற்று? குழந்தை நன்றாக இருக்கிறதா? பேத்தி நன்றாக இருக்கிறதா?" என்று விசாரிக்க ஆரம்பிப்பார்கள்.
இன்னும் கொஞ்ச நேரத்தில், இரண்டு நிமிடத்தில் என்ன செய்வார்கள்? புழக்கடை பக்கம் சென்று காபி, டிபன் எல்லாம் சாப்பிட்டு விட்டு வந்து விடுவார்கள்.
அங்கே எல்லாம் தயாராக இருக்கும்!
பின்னால் சென்று என்ன செய்கிறார்கள்? நன்றாக சாப்பிட்டு விட்டு வந்து, வாயைத் துடைத்துக் கொண்டு என்ன செய்கிறார்கள், அடுத்த ரவுண்டு ஒப்பாரிக்கு ரெடியாகி விடுகிறார்கள்.
நிஜமாகவே உருகி அழும் ஓரிருவரை தவிர்த்து, மற்ற எல்லாருமே இந்த வேலையைக் கமுக்கமாய்ச் செய்துவிட்டு வருவதைப் பார்த்தேன்.
"பாட்டி! இப்படி விட்டு விட்டுப் போய் விட்டாயே," என்று அடுத்த ரவுண்டு வந்து அழுபவர்களிடம் இப்படி கேட்டால் என்ன என்றுகூட தோன்றியது...
"அப்படியே கூப்பிட்டிருந்தால்... கூடவே போய் இருந்திருப்பீர்களா? என்ன!"
தமிழில் ஒரு அழகான கதை உண்டு.
இப்படித்தான் தம் கணவர் இறந்துவிட்டதால் அந்தப் பிணத்தை நடுவில் போட்டுவிட்டு அந்த வீட்டுக்காரம்மா, "அக்கா போயிட்டாரே... அக்கா போயிட்டாரே," என்று ஒப்பாரி வைத்து அழுது கொண்டு இருந்தார்களாம்.
அப்போது எதிர் வீட்டுக்காரப் பெண்கள் இரண்டு மூன்று பேர் உள்ளே வந்தார்களாம்.
அவர்கள் அழுது கொண்டிருக்கும் பொழுதே, ஒரு பெண்ணின் கண்ணுக்கு தோட்டத்து ஓரமாக, தோட்டத்துப் பின் பக்கமாக இருந்த பாகற்காய் தெரிந்ததாம். அதனால் அந்தப் பெண்மணி, "பந்தலிலே பாவக்காய்... பந்தலிலே பாவக்காய்...," என்று ராகத்தோடு சொல்லி அழுதாளாம்.
பக்கத்தில் இருந்த மற்றொரு பெண்மணி, "போகையிலே பார்த்துக்கலாம், போகையிலே பார்த்துக்கலாம்...," என்று அதே ஒப்பாரி ராகத்தில் அழுதாளாம்.
அந்த வீட்டுக்காரம்மா அதாவது, யாருடைய கணவன் இறந்து போனானோ, அந்த வீட்டுக்காரம்மாவும் அதே ராகத்தில், "விதைக்கு நான் வைச்சிருக்கேன், விதைக்கு நான் வைச்சிருக்கேன்...," என்று ஒப்பாரி வைத்தாளாம்.
நாம் அழுவது எல்லாமே பார்த்தீர்கள் என்றால், இப்படித்தான்.
ஏதோ நம்முடைய பழைய துக்கங்களை நினைத்து, வேறு வழியில்லாமல் அழும் அழுகைகள்தான்.
பொதுவாக ஜனங்களுக்கு அழுவதற்கு என்று தனிஇடம் கிடையாது.
வேறு என்ன செய்வது?
அதனால்தான், பார்த்தீர்கள் என்றால், வேறு எந்த நிகழ்ச்சியை விடவும் சாவுக்கு மட்டும் கும்பல் தாங்காது.
"அட! போய் ஒரு அரைமணி நேரம் அழுதுவிட்டு வரலாமப்பா!" என்று, அழுது அழுது துக்கத்திலிருந்து ஒரு தெளிவிற்கு வருகிறார்கள்!. அதற்காகத்தான் சாவுக்கு மட்டும் எங்கிருந்தாலும் கும்பல் கும்பலாய்ச் சேர்ந்து விடுவார்கள்.
எங்கிருந்துதான் அந்தக் கும்பல் வருமென்றே
தெரியாது. கொஞ்ச நேரம் போய் அழுதுவிட்டு
வருவதற்காகவே சேர்ந்து விடுவது.
நாம் அழுவது மொத்தமுமே “பந்தலிலே பாகற்காய், பந்தலிலே பாகற்காய்
போகையில பார்த்துக்கலாம், போகையில பார்த்துக்கலாம்” என்பதின் வெவ்வேறு தரங்களே! வெவ்வேறு ராகங்களே!
> நாம் அழுவது எல்லாமே
> பார்த்தீர்கள் என்றால்
> இப்படித்தான்.
> ஏதோ நம்முடைய பழைய
> துக்கங்களை நினைத்து.
> வேறு வழியில்லாமல் அழும்
> அழுகைகள்தான்
செத்த பிணத்தின் சொத்தை, சாகப் போகும் பிணங்கள் பங்கிடுதல்
The living corpses dividing the dead corpse's wealth
நன்கு ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், மரணத்தின் பின் நடக்கும் நாடகத்தை பார்க்கும்போது ஒரு பன்னிரெண்டு வயதுப் பையனின் உணர்வில் என்னனென்ன மாற்றங்கள் வரும்?!
அடுத்து வருவதுதான் முக்கியமான நிகழ்ச்சி. பெரிய கொடுமை என்ன வென்றால், பிணம் நடுக்கூடத்தில் இருக்கிறது. பிணமாக அந்தப் பாட்டி ஒரு வீட்டில் இருக்க, ஆசாரியை அழைத்து வந்து பாட்டியினுடைய நகையைப் பாகம் பிரித்தார்கள். இதைச் சொல்லக் கூடாதென்றுதான் நினைத்தேன். ஆனால், பரவாயில்லை பதிவாகட்டும். வரலாற்றில் பதிவாகட்டும் என்றுதான் சொல்கிறேன்.
அப்போது நகையை இவர்கள் எல்லாம் சேர்ந்து பிரிக்க, எனக்குப் பக் என்றது.
இந்தப் பாட்டியினுடைய நகைப் பெட்டியைப் பார்த்த உடனே, எனக்கு வந்த முதல் எண்ணம் என்னவென்றால், "ஆஹா, இந்தக் கிழவி மட்டும் இவ்வளவு பணத்தை இந்தப் பெட்டிக்குள் வைத்திருக்குமென்று தெரிந்திருந்தால், மொத்தத்தையும் எடுத்து மூலக்கடை செட்டியாரிடம் கொடுத்து, காலம் முழுக்க இந்தக் கிழவிக்கும் புகையிலை வாங்கிக் கொடுத்து, நானும் மிட்டாய் வாங்கித் தின்றிருப்பேனே!"
பாட்டி எப்போது பார்த்தாலும் "உன் அப்பாவிடம் போய் பணம் கேள்" என்றால்,
அவர் 10 பைசாதான் கொடுப்பார். அந்த
10 பைசாவில், 8 பைசாவிற்கு புகையிலை
வாங்குவேன். அப்போதெல்லாம் பைசாவிற்கு
மதிப்பு உண்டு.
8 பைசாவிற்கு புகையிலை, 2 பைசாவுக்கு மிட்டாய். சரி கதைக்கு வருவோம்.
நான், ‘என்னடா இந்தக் கிழவி இவ்வளவு பணத்தையும் விட்டு விட்டு வீணாகப் போய்விட்டதே’ என்று நினைத்தேன். பிறகு, அந்தப் பணத்தையெல்லாம் பங்கிடும்போது பார்த்தேன். அந்த வைர நகையையெல்லாம் பிரிக்க வேண்டுமில்லையா? ஆசாரி பாகம் போட ஆரம்பித்தார்.
கூட்டுக் குடும்பம் என்பதனால், அத்தனை பேரும் குடும்பத்தோடு வந்திருந்தார்கள். எனக்குப் பளிச்சென்று தோன்றிய முதல் விஷயம், ‘ஆஹா, இந்தக் கிழவி ஒன்றையும் அனுபவிக்காமல் படுக்கைக்குக் கீழே வைத்துவிட்டுப் போய்விட்டது.
இரண்டாவது விஷயம், இந்தப் பைத்தியக்காரர்கள் இப்போது பாகம் போட்டுக் கொள்கிறார்கள். இவர்கள் மட்டும் என்ன செய்யப் போகிறார்கள்?. அட இவர்களும் அதை அப்படியேதான் வைத்துவிட்டுப் போகப் போகிறார்கள்.
சரி சரி, செத்த பிணத்தின் நகைகளைச் சாகப் போகும் பிணங்கள் பாகம் இட்டுக் கொண்டிருக்கின்றன’ என்று உணர்ந்ததும், அது நிகழ்ந்தது. என்னுடைய பீஷ்மர் சாய்ந்தது. வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு அடியோடு சாய்ந்தது. சமுதாயத்தோடு கட்டப்பட்டிருந்த கட்டு அவிழ்ந்தது.
அப்போது என்ன நிகழ்ந்தது என்று ஆழ்ந்து பார்த்தால்... அதுவரை மொத்தச் சமூகத்தின் மேல் எனக்கு இருந்த மதிப்பு, என்னை வளர்த்த சமுதாய அமைப்பின் மேல் இருந்த மொத்த மரியாதை, எல்லாமே வீணாகப் போய்விட்டது.
அதுவரையில் மாமா என்றால் மாமா, சித்தப்பா என்றால் சித்தப்பா, அப்பா என்றால் அப்பா, தாத்தா என்றால் தாத்தா, பாட்டி என்றால் பாட்டி, அவர்கள் வகிக்கிற எல்லா மதிப்பு மரியாதைகளும், அவர்களின் எல்லா உறவுநிலைகளும், பொறுப்புகளும், ஆகிய எல்லாமே சத்தியம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதுதான் உலகம், அதெல்லாமே நிஜம், நிரந்தரம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
எதை நிஜம், எந்தச் சமூகத்தை சாஸ்வதம், நிரந்தரம் என்று நம்பிக் கொண்டிருந்தேனோ, அந்த எல்லாமே, அவர்கள் பிணத்தை வைத்துக் கொண்டே சொத்தைப் பங்கிடும்போதே உடைந்து தூள் தூளானது.
அந்த விளைவு என்னுடைய வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு வீழ்ந்தது. இதுதான் உலகம் என்ற என்னுடைய பீஷ்மர், இவ்வளவு தான் உலகமா! என்ற வெளிப்பாடாக மலர்ந்தது. புத்திசாலித்தனமாக உதித்தது.

பார்வையாளனாக இருந்து பார்த்தால் போதும்
Being a seer and witnesser is enough
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். இதைப் புரிந்து கொண்டீர்களானால் போதும், கட்டுறு மனப்பாங்கு எப்படி உங்களுக்குள்ளே இருக்கிறது. அதை எப்படி நீங்களே உலுக்கலாமென்று தெரிந்து கொள்வீர்கள்.
திரௌபதியின் சேலையைத் துகிலுரியும்போது, அதை பீஷ்மர் பார்த்துக் கொண்டு சும்மா உட்கார்ந்து இருக்கிற வரைக்கும், அர்ஜுனனின் மனத்தில் பீஷ்மர் ஹீரோவாக இருந்திருப்பார்.
அந்த நிகழ்ச்சிக்குப் பின்னால் பீஷ்மர் மட்டும் இல்லை, துரோணர் மட்டும் இல்லை, எல்லோருமே ஜீரோதான். யாருமே ஹீரோ இல்லை என்று அர்ஜுனனுக்கு உறைத்திருக்கும்.
பார்வையாளனாக இருந்து
பார்க்கும் போது பல
விஷயங்கள் தெளிவாகப்
புரியும் இந்த
சமூகத்தினுடைய
போலித்தனம்
ஏமாற்றுத்தனம்
தெளிவாக தெரியும்
அர்ஜுனனுக்கு அன்று உறைத்த மாதிரியே, எனக்கும் அப்போது உறைத்தது.
அடப்பாவிகளா! பிணத்தை எடுப்பதற்குள் பணத்தை எடுக்கிறீர்களே! இதைத் தாண்டி அப்போது எனக்கு இருந்த ஒரே கஷ்டம் இதுதான்... “இதற்கு மேல் மிட்டாய் வாங்க வருமானம் நமக்கு இல்லாமல் போய்விட்டதே!” என்ற சின்ன ஆதங்கம் மட்டும்தான்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்னடா இந்தப் பாட்டி பணம் இருந்தும் சாப்பிடாமல், நகையிருந்தும் உபயோகம் செய்யாமல், இப்படி விட்டுவிட்டுப் போய்விட்டதே! சொத்தை எடுத்துக் கொண்ட பைத்தியக்காரர்களும் அதேபோன்ற செயலில் மாட்டிக் கொள்வதாகத்தான் தெரிகிறது.
இவர்களுக்கு ஒன்றும் பணம் இல்லாமல் இல்லை.
ஆனாலும், இதைப் போய்ப் பங்கிடுகிறார்களே! இப்போது இப்படியெல்லாம் முதலில் யோசிக்க முடியுமா? இதில் எங்கோ இடிக்கிறதே!
அப்படியானால் இவர்கள் காண்பிக்கிற துக்கம், பொய்!
அதாவது, முதன்முறையாக இந்தச் சமூகத்தை பார்வையாளனாக இருந்து பார்த்தேன்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், பார்வையாளனாக இருந்து பார்க்கும்போது, பல விஷயங்கள் தெளிவாகப் புரியும்.
அப்படிப் பார்த்ததனால் இந்தச் சமூகத்தினுடைய பல போலித்தனங்கள், ஏமாற்றுத்தனங்கள் எனக்குத் தெரிந்தது.
அவர்களுடைய போலித்தன்மை, எனக்கு முதல் தடவையாக அப்போதுதான் உறைத்தது.
யாராவது பொது மக்கள் வரும்போது உட்கார்ந்து அழுகிறார்கள், ஆனால், வந்தவர்கள் வெளியில் சென்ற உடனே, கண்ணைத் துடைத்துக் கொண்டு, வீட்டு அறைக்குள் வந்து, நகையைப் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். என்ன நாடகம் இது? என்று பார்த்தேன்.
பாட்டி உயிரோடு இருந்தபோதுகூட இவர்களுடைய விருப்பம், பாட்டியை விட நகையின் மேல்தான் அதிகம் இருந்தது. ஆனால், அந்தப் பாட்டியோ மகா கெட்டிக்காரி.
எப்பேர்ப்பட்ட விஷயமாக இருந்தாலும், அந்தப் பெட்டியை மட்டும் திறக்காது! அதன் மேலேயே படுத்துக் கிடக்கும். அது அப்பேர்ப்பட்ட கிழவி.
இதெல்லாம் ஒரு பார்வையாளனாக இருந்து பார்த்தபோதுதான் புரிந்தது.
அந்தக் கிழவியின் சாமர்த்தியம் வீணாகப் போய்விட்டது. நகைப் பெட்டியை அடைகாத்த கோழி போல பாதுகாத்தே வைத்திருந்த பாட்டி செத்துப் போய்விட்டது!
ஆனால், இந்தப் பைத்தியக்கார மனிதர்களுக்கு, அதைப் பங்கு போடு வதினால் என்ன வரப்போகிறது? இவர்களுடைய சாமர்த்தியமும், என்ன ஆகப்போகிறது? இந்தச் சாமர்த்தியமும் ஒரு நாள் வீணாகத்தான் போகப் போகிறது.
இவர்களும், அதையேதான் செய்யப்போகிறார்கள் என்று புரிந்ததும்... அந்த நகையை அவர்கள் பங்கிடுவதைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்து விட்டேன். என்னால் கட்டுப்படுத்த முடியாததால் வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்துவிட்டேன்.
சிரிப்பதைப் பார்த்து திடீரென்று அங்கிருந்த உறவினர் ஒருவர் கோபத்தோடு பேசி னார்... “ஏய்! வாயை மூடு, சிரிக்காதே! அழு!” என்றார்.
நான் முயற்சித்துப் பார்த்தேன் எனக்கு அழுகை வரவில்லை.
அப்போது எனக்குள் ஒரே ஒரு சின்ன கஷ்டம்தான் இருந்தது, "மிட்டாய் போய்விட்டதே!" என்று.
அதுவும் கொஞ்சநேரம் கழித்துப் போய்விட்டது. ஒருவரின் மரணம், "மிட்டாய் போய்விட்டதே!" என்ற துக்கத்தை மட்டும்தான் ஏற்படுத்தியது.
அப்போது, 'இவர்களுக்குத்தான் அது கூட இல்லையே... கிழவி போய்விட்டது. அடித்தது லாட்டரி என்பது போலத்தான், இவர்களின் செயல் இருக்கிறது' என்று எனக்குத் தோன்றியது!
இப்படி யோசித்து கொண்டிருந்த போது... மேலும் மேலும், இவர்கள் குனிந்து, குனிந்து அழுவதைப் பார்த்து இரண்டாவது முறையாக அடக்க முடியாத சிரிப்பு எனக்கு வந்து விட்டது.
இரண்டாம் தரம் சிரித்த உடனே
அருகேயிருந்தவர் பளார்! பளார்! என்று
கன்னத்தில் ரெண்டு வைத்தார். “அழுடா,
எல்லோரும் அழுதுகொண்டு இருக்கிறார்கள்!
அழுடா, ” என்று சொன்னார்.
அப்போதே எனக்கு ஸ்திரத் தன்மையும், தைரியமும் அதிகம்.
என்னை அடித்த கையைப் பிடித்துக் கொண்டேன்.
> அவர்களுடைய
> விருப்பம், பாட்டியை
> விட நகையின் மேல்தான்
> அதிகம் இருந்தது.
> அந்தப் பாட்டியோ மகா
> கெட்டிக்காரி.
கையை பிடித்துக் கொண்டே, “இதற்குமேல் ஒரு அடி அடித்தீர்கள் என்றால், வருகிறவர்கள் எல்லோரிடமும் நீங்கள் இங்கே செய்தது எல்லாவற்றையும் சொல்லிடுவேன். உள்ளே, நீங்க, அவர், அந்தம்மா எல்லாம் நகைக்கு எப்படிச் சண்டை போட்டுக்கொண்டீர்கள்! இதை எல்லோரிடமும் சொல்லிவிடுவேன்,” என்று மிரட்டினேன்.
அங்கே இருந்த எல்லாப் பெண்களும் சேர்ந்தே நகைகளைப் பாகம் போட்டார்கள், மூன்று வடம் செயின் ஒன்று இருந்தது. அதை ஒவ்வொரு வடமாக துண்டித்து, அதன் முகப்பை தனியாகத் துண்டித்து பாகம் போட்டார்கள்.
இன்னமும் தெளிவாக இதெல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கிறது. வைர முகப்பு, பவழ மாலைகள், அதையெல்லாம் துண்டித்து, துண்டித்து பாகம் பிரித்தார்கள்.
உனக்கு இது, எனக்கு அது என்று பெரிய பேரமே, அந்த இடத்தில் நடந்தது.
வருபவர்களிடமெல்லாம், “நீங்கள் செய்ததையெல்லாம் சொல்லி விடுவேன்,” என்று என் தற்காப்புகாகத்தான் அவரை மிரட்டினேன்.
உடனே மற்றொரு சொந்தக்காரர் அங்கே வந்துவிட்டார். “உனக்குத்தான் தெரியும் இல்லையா, இவன் வாய் பெரிய வாயென்று. ஏண்டா, சும்மா இருந்து தொலையேன்டா, ஏண்டா இவனை அடிக்கிறாய்? வருபவர்களிடம் எல்லாம் போய் சொல்லிவிட்டான் என்றால், அசிங்கமடா,” என்று சொல்லி விட்டு, அந்த இரண்டு சொந்தக்காரர்களும் சேர்ந்து ஒரு அறையில் என்னை விட்டுப் பூட்டி வைத்து விட்டார்கள்இ அதுவும் பாட்டி ஏற்கனவே இருந்த அதே அறையில்!
வருபவரிடம் நான் எதுவும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காகவும், வெளியில் இருந்தால் நான் பெரிய தொந்தரவு என்பதற்காகவும் என்னைப் பூட்டி வைத்து விட்டார்கள்.
எல்லா ஜனங்களும் வந்துவிட்டுப் போகும் வரைக்கும் இவனை “உள்ளே விட்டுப் பூட்டுடா,” என்று உள்ளே விட்டுப் பூட்டிவிட்டார்கள்.
உண்மையில் புத்தருக்கு ஒரு போதி மரம் தந்த மாற்றம் போல
அந்த அறையில் எனக்குள்ளும் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்தது.
அப்போதுதான் மொத்தச் சமுதாயத்தின்
மேலும், எனக்கு இருந்த மதிப்பு அப்படியே
இடிந்து விழுந்தது.
கிராபிக்ஸில் காண்பிக்க வேண்டுமென்றால்,
அந்தக் காட்சியை அப்படித்தான்
காட்டவேண்டும்.
> ஆழ்ந்து பார்த்ததால் வளர்ப்புறு
> கட்டுறு மனப்பாங்கு
> ஒழிந்தது. இது எல்லாமே
> ஒரு போலித்தனம்தான்
> என்று புரிந்தது. இது சத்தியம்
> கிடையாது. நிரந்தரம்
> கிடையாது. வாழ்க்கைக்கு ஒரு
> உபயோகம் அவ்வளவுதான்
> என்பது புரியும்
சமூகம் என்கிற பெரியசுவர் ஒன்று அப்படியே இடிந்து கீழே விழுந்தது. அதில் உறவினர்கள், நண்பர்கள் அப்பா, அண்ணன், தம்பி, மாமா, பாட்டி, அம்மா இந்த எல்லா உறவுகளும் தனித்தனியாய் நொறுங்கி விழுந்தன. எல்லார் மேலேயும் இருந்த மரியாதை எனும் கோட்டைச் சுவர், மனக்கோட்டைச் சுவர் சுத்தமாக இடிந்து நொறுங்கி விழுந்தது.
வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு அன்றோடு ஒழிந்தது. வாழ்வு என்ற எல்லாமே ஒரு போலித்தனம்தான் என்று தெளிவாகப் புரிந்தது.
இந்த வாழ்க்கை சத்தியம் கிடையாது. இந்த மனிதர்கள் நிரந்தரம் கிடையாது. வாழ்க்கைக்கு உள்ள உபயோகமே, இவ்வளவுதான் என்பது மிக ஆழமான கோணத்தில் புரிந்தது.
உறவுகள் என்பது நிரந்தரம் கிடையாது. உறவுகளின் உபயோகமும் இவ்வளவுதான். தேவைப்படும்போது, உபயோகப்படுவதாலேதான் உறவுகளே உயிரோடிருக்கின்றனவே தவிர, அவை நிரந்தரம் கிடையாது. அவை உணர்வு சம்பந்தப்பட்டவை கிடையாது. அவை சாஸ்வதம் அல்ல என்று தெளிவாகப் புரிந்தது.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், என்னுடைய 10வது நாள் சண்டை, அன்றைக்குத்தான் முடிந்தது. 10-வது நாள் சண்டை அன்றைக்குத்தான், என்னுள் சிகண்டியை முன் நிறுத்தினேன். என் பீஷ்மரை வென்றேன்.
அதற்கப்புறம் சமுதாயம் என்ற பூட்டிலிருந்து வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு எனும் விலங்கிலிருந்து பூரணமாக விடுவிக்கப்பட்டுவிட்டேன்.
வளர்ப்புக் கூட்டிலிருந்து விடுபடுத்தும் சத்தியம்தான் சிகண்டி
Sikandi is the truth which liberates you from your growth shell
அந்த அறைக்குள் நடந்தது என்னவென்றால்...
ஒரு
ஆழமான பிரார்த்தனை
எனக்குள்ளே நடந்தது.
"இவ்வளவு போலித்தனமாக எல்லாம் இருக்கிறதென்றால், அப்போது சத்தியம்தான் என்ன?" என்று கலக்கமாகப் பொங்கி, என்னுடைய வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கின் முன் வந்த துக்கம்தான் அலியாகிய சிகண்டி! அந்த சிகண்டி முன்னால் வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கான பீஷ்மரால் இயங்க முடியாது.
அந்தத் துக்கத்தைப் பார்த்து வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு என்ன நினைக்கும்? பீஷ்மர் என்ன நினைப்பார்?
"ஏ!... இது சின்ன விஷயமடா," என்று நினைப்பார்.
ஆழ்ந்து பார்த்தால்
ஸ்திரத்தன்மை
மீது ஆழமான
சந்தேகம் வரும்
ஸ்திரமில்லாத்
தன்மை புரியும்.
அந்தத் துக்கம்தான் பீஷ்மரை அழிப்பதற்கான ஒரே வழி. சில நேரத்தில் இந்த மொத்த வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கின் மீதும், சமுதாயத்தின் மேலும் இருக்கிற மரியாதை இடிந்து விழும். அப்போது பொங்குகிற துக்கமும் மதிப்பில்லாத் தன்மையும்..., மரியாதை போய்விடுகிறது, பார்த்தீர்களா? அதைத்தான் சிகண்டி என்று சொல்கிறோம்.
அப்போதுதான், பீஷ்மரை ஜெயிக்கும் தருணம் நமக்கு கிடைக்கிறது. ஒவ்வொரு துக்கமும், நம்முடைய பீஷ்மரை வெல்வதற்காக இறைவன் அனுப்பும் சிகண்டி!
என்னுடைய பன்னிரெண்டு வயதில், என்னுள் நடக்கும் மஹாபாரதத்தின் பத்துநாள் யுத்தம் முடிந்து, சிகண்டி முன் வந்தான்.
சிகண்டி மேலெழுந்தான்.
பீஷ்மர் சாய்ந்தார்.
பீஷ்மர் சாய்ந்த உடனேயே, சமூகத்தில் இருந்தாலும், சமூகத்தின் மேல் எந்தவிதப் பற்றுதலும் இல்லை. இது பெரிய விடுதலை.
அதற்குப் பிறகு, உறவினர்களைப் பார்த்தால் அவர்கள் உறவினர்களாகத் தெரியவில்லை.
மாமாவைப் பார்க்கும் போது அவர், ‘மாமா!’ என்று தோன்றவில்லை. சித்தப்பாவைப் பார்க்கும்போது, அவர் ‘சித்தப்பா!’ என்று தோன்றவில்லை. அப்பாவைப் பார்க்கும்போது, அவர் ‘அப்பா!’ என்று தோன்றவில்லை. அம்மாவை பார்க்கும்போது, அவர் ‘அம்மா!’ என்று தோன்றவில்லை.
எல்லோரும் ஒரு கதாபாத்திர விளையாட்டுதான் விளையாடுகிறார்கள். எப்போது வேண்டுமானாலும், இவர்கள் இல்லாமல் போய்விடுவார்கள் என்பது தெளிவாகப் புரிந்தது. சமூகத்தினுடைய ஸ்திரத்தன்மை மீது ஆழமான சந்தேகம் வந்தது. அதனுடைய ஸ்திரமில்லாத் தன்மை புரிந்தது.
‘நமக்கென்று யாரும் கிடையாது’ என்கிற தெளிந்த தெளிவுதான், சிகண்டி என்று சொல்வது.
இந்தத் தெளிவு பிறப்பதுதான் பத்தாவது நாள் போர். அன்றைக்கு நடப்பதுதான் பீஷ்மருக்கு நடந்த நிகழ்ச்சி.
இந்தத் தெளிவுக்குள் வராத மனிதர்கள்தான், அப்பாவித்தனமாக உலக வாழ்வில், உறவுகளிடம் சிக்கிக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கென்று சில மனிதர்கள், உறவுகள் இருப்பதாகவும், அவர்கள்தான் சாஸ்வதம், அவர்கள்தான் உலகம் என்று நம்பிக் கொண்டிருப்பார்கள்.
இந்த நம்பிக்கைதான் பீஷ்மரின் வலிமை. பீஷ்மர் வலிமை இழக்காத வரை, உங்களுக்குள் சிகண்டி வராதவரை, உங்களின் மஹாபாரதம் 9ஆவது நாளிலேயே நின்றுவிடும்.
பலரின் மனிதவாழ்வு எனும் மிக உயர்ந்த காவியம், மிகவும் பரிதாபத்திற்குரிய நிலையில் ஒன்பதாவது நாளிலேயே நின்று விடும்போதுதான், அவர்களின் வாழ்வு அவர்களுக்குக் கேள்விக்குறியாகி விடுகிறது.
இந்த ஜீவன் ஞானக் கருத்துக்களாகிய அம்புகளால் துளைக்கப்படும் போதுதான், பீஷ்மர் விழும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கிறது. உங்களின் வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கின் மேல் இருக்கிற மரியாதை போகிறபோது, உங்களுக்கு வருகிற அந்தத் துக்கமும், தேடுதலும் தெளிவும்தான் சிகண்டி.
சிகண்டியை முன்நிறுத்தினோம் என்றால், இயற்கையாக நம்முடைய பீஷ்மர் வேலை செய்யாது. கட்டுறு மனப்பாங்கு வேலை செய்யாது.
அப்போது, நாம் அந்த ஞானக் கருத்துக்கள் என்கிற அம்புகளை தொடர்ந்து எய்தோமானால், பீஷ்மர் கீழே சாய்ந்து விடுவார். இதற்கு மேல் எழுந்திருக்கவே முடியாத மாதிரி அது படுத்து விடும்.
ஞான சத்குரு நாதரை மீண்டும் மீண்டும் பார்ப்பதும், அவரின் சத்சங்கங்களில் அடிக்கடி கலந்து கொள்வதும் முக்கியம் என்று சொல்வது இதனால்தான்.
ஞான சத்குருநாதரால்தான் உங்களின் பீஷ்மரை நேரடியாக அழிப்பதற்கான அம்புகளைத் தர முடியும்.
கட்டுறு மனப்பாங்கை அழிக்கவேண்டாம்; துறந்தால் போதும்
வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கை (Parental conditioning) எப்படி அழிக்க வேண்டும்? நேரடியாகச் சண்டை போட்டு, அதை அழிக்க வேண்டுமா?
அதை நேரடியாக ஒன்றும் செய்ய முடியாது. கட்டுப்பட்டுச் செல்கிற மாதிரி இருக்க வேண்டும். ஆனால், கட்டுப்படக் கூடாது. அதாவது துறந்து விடுதல், அது மூலமாகத்தான் வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கை அழிக்க முடியும். நேரடியாகச் சண்டை போட்டு, அதை அழிக்க முடியாது.
எவ்வளவு சண்டை போட்டாலும் உங்களுக்குள்ளே அது இருந்து கொண்டே இருக்கும்.
ஏனென்றால், அது உங்களுடைய பாகமாக மாறிவிட்டது. உங்களுடைய பாகமாக மாறிவிட்டதினால் நேரடியாக அதை அழிக்க முடியாது. துறத்தலின் மூலமாக மட்டும்தான் அதை அழிக்க முடியும்.
அதனால்தான் ஞானமடைய வேண்டுமானால், இந்து மதமாக இருந்தாலும், கிருஸ்துவ மதமாக இருந்தாலும், இஸ்லாமிய மதமாக இருந்தாலும், எந்த மதமாக இருந்தாலும், ஞானமடைய வேண்டுமானால், துறவு என்பது ஒரு அடிப்படையான விரதமாகச் சொல்லப்படுகிறது.
வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு என்பதிலிருந்து தன்னை உடைத்துக் கொண்டு வெளியிலே வரவேண்டும். முதல் பத்து நாள் போருக்குப் பிறகு, அர்ஜுனன், பீஷ்மரிடமிருந்து உடைத்துக் கொண்டு வெளியிலே வந்தான். அப்படியென்றால் என்ன அர்த்தம், வீட்டைத் துறந்து விட்டான். வளர்ப்புறு கட்டுறு மனப்பான்மையை அழித்துவிட்டான் அழித்துவிட்டு, அதைத் தாண்டி வந்துதான், பீஷ்மரை எதிர்த்தான்.
வளர்ப்புறு கட்டுறு மனப்பான்மையை என்ன செய்தாலும், அழிக்க முடியாது. அதனால்தான் பீஷ்மர் இறக்கவில்லை, அம்புப்படுக்கையில் கீழே விழுந்து கிடந்தார். அவரை இயங்கவிடாமல் சாய்க்கத்ததான் முடியுமே தவிர, அழிக்க முடியாது.
வளர்ப்புறு கட்டுறுமனப்பாங்கு, ஞானம் அடைகிற வரை இருக்கும். ஆனால் என்ன, அது நம்மை எதிர்க்காதவாறு சாய்த்துவிட முடியும். நாம் ஞானமடைகிற பாதையிலே நம்மை எதிர்க்காதவாறு ஓரம் கட்டிவிட முடியுமே தவிர, அழிக்க முடியாது. அதைத்தான் இந்தக் கதை அழகாகக் சொல்கிறது.
பீஷ்மர் 10ஆம் நாள் அம்புப் படுக்கையிலே விழுந்தார். ஆனால், சாகவில்லை. வளர்ப்புறு கட்டுறுமனப்பாங்கு அழியாது. இயங்காமல் அம்பு படுக்கையிலே விழுந்து இருக்கும். அது நாம் ஞானமடைகிற பாதையிலே தடையாக வராது. எதிர்ப்பாக இருக்காது.