KAILASA Library/ஜீவன் முக்தி/உண்மையின் ரகசியம்Sign in
ஜீவன் முக்தி

உண்மையின் ரகசியம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

• உண்மை பற்றி.....

மற்றவரை நோகடித்து நாசம் செய்யவல்ல ஒரு கிராம் பொய்கூட கலக்காத உண்மை பேச்சு பொய்யை விட மோசமானது அது அநீதி. இது பொய் பேச போடப்படும் தூபம் அல்ல. நீதிநெறிகளால் அடுத்தவர்களை நெறிக்ககூடாது - என உணர்த்தும் ஒரு முயற்சி.

தேவையில்லாத சீர்வரிசை - கட்டுறு மனப்பாங்கு

Conditioning, an Unnecessary Property

பிறந்தவுடன் நீங்கள் பணக்காரனும் கிடையாது. ஏழையும் கிடையாது, படித்தவனும் கிடையாது, படிக்காதவனும் கிடையாது, புதிதாகப் பிறந்த ஒரு ஜீவன். அவ்வளவே!

ஆனால் சமுதாயம் என்ன செய்கிறது? உங்களைக் கட்டுப்படுத்த ஆரம்பிக்கிறது.

சமுதாயத்திற்கு தேவை என்ன? கிளார்க்குகளும், வேலையாட்களும்தான்.

அதற்காக, இப்போது அதைத் தயார் செய்கிற வேலையை, உங்களின் மேல் திணிக்க ஆரம்பிக்கிறது.

நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்... உங்களுடைய உணர்வைப் பற்றியோ, நீங்கள் அடையவேண்டிய உச்ச நிலையைப் பற்றியோ, சமுதாயத்திற்குக் கவலையே இல்லை. பாவம், அவர்களைக் குறைச் சொல்லிப் பயனில்லை. அவர்களுக்கும் அது தெரியாது.

உங்களின் அப்பாவோ, அம்மாவோ உங்களுக்குத் துரோகம் செய்ய வேண்டும் என்று வேண்டுமென்றே கட்டுப்படுத்துவதில்லை. உங்களுக்குள் பல கட்டுறு மனப்பாங்குகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கோடும அவர்கள் செயல்படவில்லை.

பாவம், அவர்களுக்கும் அந்தப் புத்திசாலித்தனம் இல்லை.

அவர்களும் என்ன செய்வார்கள்?

தங்களுக்கு என்ன கற்றுக் கொடுக்கப்பட்டதோ, அதைத்தான் உங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இதில் பரிதாபத்திற்குரிய விஷயம் என்னவென்றால், காலம் காலமாக, வழிவழியாக, அடுத்தடுத்த சந்ததிக்கு அளிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிற, தேவையில்லாத ஒரு சீர்வரிசைதான் இந்தக் கட்டுறு மனப்பாங்கு.

"என்னுடைய அம்மா, எனக்கு இதைத்தான் கற்றுக் கொடுத்தார்கள். எனக்கும் இதற்குமேல் வேறு ஒன்றும் தெரியாது. அதனால் அதையே என் குழந்தைகளுக்கும் கொடுத்துவிடலாம் என்று கொடுத்துக் கொண்டிருக்கிறேன்," என்று முடிவெடுப்பது. அவர்களை அறியாமலேயே அவர்கள் உங்களுக்குச் செய்துவிட்ட துரோகம் என்று இதைத்தான் சொல்கிறோம்.

உங்களுக்கு எந்தவித உபயோகத்தையும் தராமல் செய்யப்படுகிற ஒரே துரோகம்தான், கட்டுறு மனப்பாங்கு. சமுதாயத்திடமிருந்து பரிசாகவும், ஒழுக்கமாகவும், நீதிநெறியாகவும் பல்வேறு நல்ல, நல்ல பெயர்களிலிருந்து நீங்கள் பெற்றுக் கொண்ட கட்டுறுமனப்பாங்கு, எந்தவொரு வகையிலும் உங்களுக்கு தேவையில்லாத சீர்வரிசைதான்.

உங்களுக்கு எமன் கட்டிவிடும் பாசக்கயிறுதான்

கட்டுறு மனப்பாங்கு

Ema's death rope is your conditioning

கட்டுறுத்தப்படும் மனப்பாங்குதான் ஒரு ஜீவனுக்கு அளிக்கப்படும் மிகப் பெரிய துரோகம். இது உங்களின் ஜீவனையே ஒடுக்கிவிடும்.

பெற்றோரால் உருவாக்கப்படும் Parental Conditioningதான் முதலில் ஒருவரைப் பாதிக்கும் ஆழமான கட்டுறு மனப்பாங்கு. இதைத்தான் வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு என்று அழைக்கிறோம்.

அதன்பிறகு வருவது, சமுதாயத்தால் வரும் Social Conditioning. இதைத்தான் சமூக கட்டுறு மனப்பாங்கு என்றழைக்கிறோம்.

இப்படி ஒன்றன் மீது ஒன்றாக, அடுக்குடுக்காகப் பல்வேறுவிதமான கட்டுறு மனப்பான்மைகளை உருவாக்கிக் கொள்வதினால்தான் சத்தியத்தை, உள்ளதை உள்ளவாறு மனிதர்களால் நேரடியாகப் பார்க்க முடிவதில்லை.

லட்சியத்தை நம்மால் வாழ முடியாமல் போனதற்கும், அதை உணர முடியாமல் போனதற்கும் மூலகாரணம் இதுதான்.

இந்தக் கட்டுறு மனப்பான்மையில் மாட்டிக்கொண்டு நாம் என்கிற தெளிவே இல்லாமல் போய்விட்டதால்தான், இலட்சியத்தை பற்றிய தெளிவு ஒருவருக்குள் மலர்வதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

> கட்டுறுத்தப்படும்
> மனப்பாங்குதான்
> ஒரு ஜீவனுக்கு
> அளிக்கப்படும் மிகப்
> பெரிய துரோகம்.

நம்மீது போடப்பட்டுள்ள கட்டுக்களையே கட்டுறு மனப்பாங்கையே நாம் என்று நினைத்துக்கொண்டு வாழும் அவலம் உருவாகிவிட்டதால்தான், எங்கு, எப்படி நமக்குத் துரோகம் இழைக்கப்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்கவே முடிவதில்லை.

உடலின்மேல் போட்டுக் கொள்கிற உடையையே, ஒருவர் தாம் என்று நினைத்துக்கொண்டால் அது எவ்வளவு கேலி கூத்துக்குரிய விஷயம், அவ்வளவு கேலி கூத்துக்குரிய விஷயம். நாம் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கும் நம் கட்டுறு மனப்பாங்கு.

கொடுமையான ஒரு பழமொழி, ஆள்பாதி; ஆடை பாதி என்று. ஆடை எப்படிப் பாதியாக முடியும்?

கழற்றிப் போடுகிற ஆடையைப் பாதி என்று ஒருவர் நினைத்தார் என்றால், அவர் மீதி ஆள்கூட கிடையாது. மொத்தமுமே பாதிதான்.

ஆள்பாதி; ஆடை பாதி கிடையாது. இருப்பது மொத்தமும் ஒன்றுதான். அது ஆள் மட்டும்தான்.

ஆள் வேறு; ஆடை வேறு. ஆள்தான் நிஜம். ஆஸ்தான உணர்வுதான் சாஸ்வதம். ஆடைபோல இருக்கும் நம்முடைய கட்டுறு மனப்பாங்கு சாஸ்வதம் அல்ல.

ஆழ்ந்து பார்த்தீர்கள் என்றால், நீங்கள் இதைப் புரிந்து கொள்ள முடியும். பல்வேறு விதத்திலும், நரகத்திற்கு நீங்கள் ஆளாகிக் கொண்டிருப்பதற்குக் காரணமே, உங்களின் கட்டுறு மன அமைப்புதான்.

ஆரம்பத்தில், சில கட்டுறு மன அமைப்புகளை, சமூகத்தில் வாழ்வதற்காக, உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தர ஆரம்பிக்கிறார்கள்.

ஒரு தமிழர், ஆங்கிலேயர், கன்னடியர் என்று உங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால், வாழத் தேவையான அந்த மொழியைக் கற்றுக் கொண்டால் சமூகத்தில் வாழ முடியும். அந்தச் சமூகத்தில் எல்லாரோடும் சேர்ந்து எளிமையோடு வாழ முடியும்.

அதற்காக மொழி, மதம், நீதி, நெறி என்று கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறோம். நாளடைவில் அந்த அடிப்படை தேவைக்காக ஆரம்பிக்கப்பட்ட கற்றுக் கொள்ளுதல்கள்தான், நம் ஜீவனை துக்கத்திற்குள் ஆழ்த்தும் கட்டுறு மனப்பாங்காக உருவெடுத்து விடுகிறது.

ஒருவரோடு தொடர்பு கொள்வதற்காக, ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதில் தவறே இல்லை. ஆனால், அந்த மொழியோடு ஏற்படுகிற பற்று, கட்டுறு மனப்பான்மையினால், தம்முடைய வாழ்க்கையே அதுதான் என்று நினைத்துக் கொண்டு, அதற்காக வாழ்க்கையையே துக்கமாக்கிக் கொள்கிறார்கள் பாருங்கள், அந்த மனநிலைதான் கொடுமையான துக்கம்.

நம்மைக் கட்டுப்படுத்தக் கூடிய தேவையற்ற கருத்துகளைக் கற்றுக் கொள்ளும்போது ஏற்படும் இதுபோன்ற கட்டுறு மனப்பாங்குகளைத்தான் ஒருவர் கண்டுபிடித்து, கண்டுபிடித்து உடைத்து எறிய வேண்டும்.

ஒரு மொழிக்காக இறந்தோர் மட்டும்
லட்சக்கணக்கானோர். ஒரு மதத்திற்காக
இறந்தோர் எண்ணிக்கைக்கு எல்லையே
இல்லை. அந்தக் கணக்கைச் சொல்லவே
முடியாது. ஒரு தேசத்திற்காக இறந்தோர்
கோடிக்கணக்கானவர்; அந்தக் கணக்கைக்
கணக்கிடவே முடியாது.

கட்டுறு மனப்பாங்கு மட்டும் மனித
குலத்தில் இல்லாமல் இருந்தால், மனித
குலத்தின் வாழ்க்கை வரலாறே வேறு
விதமாக எழுதப்பட்டிருக்கும். இத்தனை

> மனித குலத்தில் தீவிரவாதம்
> என்று ஆரம்பிப்பதே கட்டுறு
> அமைப்பால்தான். அதில் தான்
> தீவிரவாதமே ஆரம்பிக்கிறது.
> என் இனம். என்மதம். என் ஜாதி
> என் மொழி என்பதையெல்லாம்
> தாண்டி. என் கட்சி என்று
> படிப்படியாகக் கட்டுறு அமைப்பு
> கொடுமையாக வளர்ந்து
> கொண்டே செல்கிறது.

கோடி மரணங்கள் நிகழ்ந்திருக்காது.

மனித குலத்தில் தீவிரவாதம் என்று ஒன்று ஆரம்பிப்பதே, கட்டுறு மன அமைப்பால்தான். தீவிரவாதமே அதில்தான் ஆரம்பிக்கிறது.

என் இனம், என் மதம், என் ஜாதி, என் மொழி என்பதையெல்லாம் தாண்டி, என் கட்சி என்று படிப்படியாகக் கட்டுறு அமைப்பு கொடுமையாக வளர்ந்து கொண்டே செல்கிறது.

இந்தக் கட்டுறு மனப்பான்மையினால்தான், இந்த வாழ்க்கையில் இருக்கிற அத்தனைவிதமான கட்டுக்களும், துக்கமும் வந்து வாய்க்கிறது.

எமனுடைய பாசக்கயிறு கடைசி நேரத்தில்தான் உங்கள் மேல் வீசப்படுகிறது என்று நினைக்காதீர்கள்.

எப்போது கட்டுறு மனப்பாங்கு உங்களுக்குள் நடக்கத் துவங்கி விட்டதோ, கட்டுறு மனப்பாங்கு எப்போது ஆரம்பிக்கிறதோ, அப்போதே எமனுடைய பாசக் கயிறு உங்களைச் சுற்ற ஆரம்பித்து விட்டது.

காலனாலும் உங்களைக் கட்டுப்படுத்த முடியாது

Even Lord of death cannot control you

இராமகிருஷ்ணர் மிக அழகாக ஒரு கதையைச் சொல்வார். ஒரு குளத்தங்கரையில் ஒரு பிரம்step [?] பிரம்ம ராக்ஷஸன் உட்கார்ந்து இருந்ததாம். அதற்கு நீளமான ஒரு முடி இருக்குமாம்.

அது என்ன செய்யுமாம் யார் அங்குக் குளிக்க வந்தாலும், அந்த முடியின் ஒரு முனையை எடுத்து, குளிக்கிறவர்கள் காலில் அவர்களுக்கே தெரியாமல் சுற்றி விட்டு விடுமாம். அவர்கள் குளித்து முடித்துவிட்டு எங்கே போனாலும், வீட்டிற்கே போனாலும், அந்த முடியும் அதற்கேற்றாற்போல் நீளமாகிக் கொண்டே போகுமாம்.

இந்தப் பிரம்ம ராக்ஷஸனுக்கு எப்போது பசி எடுக்கிறதோ, அப்போது என்ன செய்யுமாம்? இந்த முடியைப் பிடித்து அப்படியே இழுக்க ஆரம்பிக்குமாம்.

இழுத்த உடனே, மனிதர்கள் என்ன ஆவார்கள்? இழுத்த இளுப்பிற்கு அந்த மனிதர் வருவார். அப்போது அந்த மனிதனை அது சாப்பிட்டுவிடுமாம்.

இராமகிருஷ்ணர் இந்த உதாரணத்தை எதற்குச் சொல்கிறாரென்றால், ஒரேயொரு முறை நீங்கள் சென்று, ஒரு ஞான சத்குருவைப் பார்த்து விட்டீர்கள் என்றாலே, அவருடைய ஒரு முடியைக் காலில் கட்டிவிட்டு விடுவாராம்.

கட்டிவிட்டால், நான்கு வருடம் கழிந்தது என்றாலும், எப்போது சத்குருநாதனிடமிருந்து தீக்ஷை பெறுவதற்கான நேரம் வந்துவிட்டதோ, அப்போது ஏதோ ஒரு காரணத்துக்காக அது உங்களைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்துவிடுமாம்.

அது வயிற்றுவலியா, வாய் வலியா, தலை வலியா, என்ன வலியோ? காரணம் தெரியாது.

ஏதோ ஒரு காரணத்திற்கு என்ன செய்யும்? திரும்ப சத்குருநாதனை நோக்கி அது இழுத்து வந்துவிடும்.

அதுதான் அந்த முடியினுடைய சக்தி. அதைத்தான் குரு கடாக்ஷம் என்பார்கள். இந்தக் கதையை இராமகிருஷ்ணர் மிக அழகாகச் சொல்வார்.

காலனும் என்ன செய்கிறான், இந்தக் கட்டுறு மனப்பாங்கு எப்போது நம்முள் உருவாகிறதோ, அப்போதே, அந்த வினாடியே அவனுடைய முடியை உங்களின் கழுத்தில் கட்டி விட்டுவிடுகிறான். உங்களின் உடலில் கட்டி விடுகிறான். இந்தப் பாசக் கயிறுதான் கட்டுறு மனப்பாங்கு.

காலன் வருகிற அந்த எருமை மாடுதான் மெதுவாக உருவாகிற கட்டுறு மனப்பாங்கு.

கட்டுறு மனப்பாங்கை ஒருவர் ஆரம்பித்த அன்றைக்கே, அவரின் மரணம் ஆரம்பித்துவிட்டது.

குழந்தை பிறந்த உடனேயே, “அம்மா சொல்லு, அப்பா சொல்லு,” என்று சொன்ன உடனேயே, என்ன ஆகிறது? பாசக்கயிறு கட்ட ஆரம்பித்தாகி விட்டது. கட்டுறு மனப்பாங்கு ஆரம்பித்து விட்டது.

அப்படியென்றால், அன்றைக்கே எமன் என்ன செய்கிறார்? நம்மை தூக்கிக் கொண்டு செல்வதற்கு. அவருடைய இடத்தில் இருந்து கிளம்பிவிட்டார், எமன் நடந்து வருவதற்கு நம்மை அழைத்துச் செல்வதற்கு ஆகிற காலம்தான், நாம் வாழும் அந்த எழுபது வருடம்.

கட்டுறு மனப்பாங்கு உச்சத்தை அடையும்போது அது மரணமாகிறது.

கட்டுறு மனப்பாங்கு உச்சத்தை அடைவதுதான் மரணம் என்ற நிகழ்வாகிறது.

ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள், மெதுமெதுவாக, மெதுமெதுவாக எமனுடைய கயிறு, உங்கள் உடலில் சுற்றிக்கொண்டே தான் இருக்கிறது.

ஆனால், சில ஜீவன்கள் மட்டும் மிக அழகாக கட்டுறு மன அமைப்பிலிருந்து விடுதலையாகிச் செல்கிறார்கள்.

அவர்கள் யார்?

கட்டுறு மனப்பாங்கின் போக்கைப் பற்றித் தெரிந்து கொண்டதினாலேயே, தங்களை அதிலிருந்து விடுபடுத்திக் கொள்ளும் சக்தி பெற்றவர்கள்.

குருவின் முடியால் குரு கடாக்ஷத்தால் சுற்றப்பட்டவர்கள் அவர்கள். அவர்கள்தான் சுதந்திரத்தை நோக்கிச் சென்று கொண்டே இருக்கிறார்கள். அதனால், அவர்களின் வாழ்வும், சுதந்திரத்தை நோக்கிச் சென்று கொண்டேயிருக்கிறது. மற்றொரு குழு எமனை நோக்கிச் சென்று கொண்டேயிருக்கிறது.

எமனை நோக்கிச் செல்வது

ஒரு குழு.

சிவனை நோக்கிச் செல்வது

ஒரு குழு.

அவ்வளவுதான்.

இந்த இரண்டுதான். வேறு ஒன்றும் கிடையாது.

அந்தக் கயிறு சுற்றிக்கொண்டே இருந்ததென்றால், எமனுடைய பாசக்கயிறு சுற்றிக் கொண்டே இருக்கும்.

கட்டுறு மனப்பாங்கு எப்போது
உருவாகிறதோ, அப்போதே
அந்த வினாடியே காலன்
அவனுடைய முடியை
உங்களின் கழுத்தில் கட்டி
விட்டு விடுகிறான். இந்த
'பாசக் கயிறுதான்' கட்டுறு
மனப்பாங்கு.

கட்டுறு மனப்பாங்கு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருந்ததென்றால், பாச க்கயிறு உங்களின் வாழ்வைச் சுருக்கி கொண்டேயிருக்கும். கட்டுறு மனப்பாங்கில் இருந்து வெளியில் வரும்போது, ஒவ்வொரு நாளுமே, ஏதோ ஒருவித கட்டுறு மனப்பாங்கு உங்களை விட்டு அகலும். கட்டுறு மனப்பான்மையானது தொடர்ந்து அழியும். அப்படி நீங்கள் வாழ, வாழ சிவனை நோக்கிப் பிரயாணம் செய்கிறீர்கள்.

சிவனை நோக்கியா?

எமனை நோக்கியா?

என்று நீங்கள்தான் முடிவு செய்தாக வேண்டும்.

எமன், சிவன் இரண்டு பேருமே பார்த்தீர்கள் என்றால், மாட்டின் மேல்தான் வருவார்கள். இரண்டு வாகனமுமே மெதுவாகத்தான் போகும்.

ஈஸ்வரனும் என்ன செய்கிறார்? நந்தி மேல்தான் வருகிறார்.

எமனும் என்ன செய்கிறார்? எருமை மாட்டின் மேல்தான் வருகிறார்.

உங்களின் உடலைப் பாசக்கயிறு சுற்றிக்கொண்டு இருந்தால், ஒவ்வொரு நாளும் எமனை நோக்கிப் போக வேண்டும்.

சிவனுடைய ஞானச்சடை சுற்றியிருந்தால் ஒவ்வொரு நாளும் சுதந்திரம் பெற்றுக் கொண்டே போவீர்கள். கட்டுறு மனப்பாங்கிலிருந்து வெளியில் போய்க் கொண்டே இருப்பீர்கள்.

அதற்கப்புறம், காலனாலும் உங்களைக் கட்டுப்படுத்த முடியாது.

என்றாவது ஒருநாள் நீங்கள்

சிரஞ்சீவியாகியேதீர வேண்டும் Atone day, you have to attain the kingdom

அருமையான கதை, மார்க்கண்டேயனுடைய கதை. அது ஒரு பெரிய சத்தியத்தை உள்ளடக்கிய கதை. கட்டுறு மனப்பாங்கு, ஞானமடைவது ஆகிய இந்த இரண்டு ச த்தியத்தையும், மிக அழகாக மார்க்கண்டேயனுடைய கதை விளக்கும்.

இறைவா எங்களுக்கு ஞானக் குழந்தையாகப் பிறக்க வேண்டும்.மார்க்கண்டேயனுடைய தாய், தந்தையர்கள் பெரிய ரிஷிகள். அவர்களுக்குக் குழந்தை வேண்டும் என்று இறைவனை நோக்கி தவம் இருந்தார்கள்.
அந்தக் காலத்தில், குழந்தைகள் தவத்தின் மூலமாகப் பிறந்தார்கள்.
இந்தக் காலத்தில், அவத்தின் மூலமாகப் பிறக்கிறார்கள்.

இரண்டேவிதமான பிறப்புதான். ஒன்று தவத்தின் மூலமாகப் பிறப்பது; மற்றொன்று அவத்தின் மூலமாகப் பிறப்பது.

தவத்தில் பிறப்பது அல்லது அவத்தில் பிறப்பது. தவத்தில் பிறந்தால், உலகிற்கே பெரிய நன்கொடையாக இருக்கும். அவத்தில் பிறந்தால், உலகம் மாதிரியே இருக்கும். அவ்வளவுதான், வேறு ஒன்றும் இல்லை. அந்த ரிஷிகள் பெரிய தவம் செய்தனர். தவத்திற்குப் பிறகு ஈஸ்வரன் உதயமாகிக் கேட்டார்.

"என்ன மாதிரி குழந்தை உங்களுக்கு வேண்டும்?"

உடனே அவர் சொன்னார்.

"இறைவா, எங்களுக்கு ஞானக்குழந்தைதான் பிறக்க வேண்டும்.

அப்போது ஈஸ்வரன் சொல்கிறார், "அப்பா!, உலகத்திற்கு ஏற்ற மாதிரி நிறைய பொருள்வளம், புத்திசாலித்தனம் இவையெல்லாம் இருந்து, வெளியுலகம் சம்பந்தமான குழந்தை வேண்டும் என்றால், அந்தக் குழந்தை 100 ஆண்டு ஆயுளோடு இருக்கும். அந்த மாதிரி கொடுக்கிறேன். அதாவது, ஆசை, அச்சத்தாலே இயங்குகிற குழந்தை. அந்த மாதிரி குழந்தை என்றால் 100 வயது ஆயுள் கொடுத்துவிடலாம்.

ஆசை, அச்சத்தாலே இயங்குகிற மாதிரி குழந்தை வேண்டுமா?

இல்லை, உத்வேகத்தோடு ஞானத்திலே இயங்குகிற குழந்தை வேண்டுமா?"

ஞானத்தினாலே இயங்குகிற குழந்தை, அதிக நாள் உடலில் இருக்காது. ஏனென்றால், உடலில் இயங்குவதற்கான காரணம் இல்லையே.

அந்த மாதிரி குழந்தையாகக் கொடுத்தேனென்றால். 16 வயதுவரை இருக்கும். அந்த மாதிரி கொடுக்கட்டுமா?" என்று கேட்டார்.

அந்த ரிஷி, ஒரு விநாடி யோசித்துவிட்டு, "16 வயது இருந்தாலும் பரவாயில்லை. ஞானத்தால் இயங்குகிற குழந்தை வேண்டும் என்று," சொன்னார்.

ஒரு குழந்தையின் உயிர் மனித உடம்பிற்குள் நுழையும்போதே, அந்தச் சக்தி மனித உடம்பிற்குள் நுழையும் பொழுதே எந்தச் சக்கரத்திற்குள் நுழைகிறதோ அந்த உணர்வாலேயே வாழ்க்கை முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும்.

ஸ்வாதிஷ்டானத்தின் வழியாக நுழைந்தால், என்ன செய்யும்? அந்தக் குழந்தை அச்ச த்தாலேயே ஓடிக்கொண்டிருக்கும்.

உடலெடுக்கும் ஜீவன் எந்தச் சக்கரத்தின் மூலமாக உடலிற்குள்ளே நுழைகிறது என்பதைப் பொறுத்து, அதன் வாழ்க்கை நிர்ணயிக்கப்படும்.

மணிபூரகத்தில் நுழைந்தால் என்ன ஆகும்? கவலையிலேயே, மந்தத் தன்மையிலேயே ஓடிக்கொண்டிருக்கும். ஈஸ்வரன் ரிஷியிடம் கேட்டார், "எந்த மாதிரி குழந்தை வேண்டும்?.''

ரிஷி கேட்டார், "ஆனந்த கந்தத்திற்குள் நுழைகிற குழந்தைதான் வேண்டும்."

"ஆனந்த கந்தத்திற்குள்ளே குழந்தை நுழைந்தால், அந்தக் குழந்தை உத்வேகத்திலேயே இயங்கும். ஆனால், வாழும் காலம் நீண்ட நாளாக இருக்காது. மிக நீளமாக இருக்காது. 16 வயதுவரைதான் இருக்கும்," என்று ஈஸ்வரன் சொன்னார்.

ரிஷி சொன்னார், "பரவாயில்லை, ஞானத்தின் உத்வேகத்திலே இயங்குகிற குழந்தைதான் வேண்டும், ஆனந்த கந்தத்தில் மலர்ந்த குழந்தைதான் வேண்டும். 16 வயது வாழ்ந்தால்கூடப் போதும்," என்று ஆணித்தரமாக ரிஷி சொன்னார்.

"சிவனை நோக்கிப் போகிற குழந்தை போதும். எமனை நோக்கிப் போகிற குழந்தை வேண்டாம்," என்று சொல்லிவிடுகிறார்.

அதேபோல ஈஸ்வரனும், "சரி," என்று வரம் அளித்து விட்டார். குழந்தையும் பிறந்தது.

ஆனந்த கந்தத்தில் நுழைந்து பிறந்ததால், பிறந்த அந்த விநாடியில் இருந்தே கட்டுறு மனப்பாங்கால் மார்க்கண்டேயன் ஆட்படவில்லை.

சிவனை நோக்கிப் போக வேண்டிய குழந்தை என்பதால், தவத்தால் பிறந்தது என்பதால் ஆரம்பத்தில் இருந்தே தியானம் செய்ய ஆரம்பித்து விட்டது. வேறு ஒன்றும் அந்தக் குழந்தைக்குத் தேவைப்படவேயில்லை.

அந்தக் காலத்தில்
குழந்தைகள் தவத்தின்
மூலமாகப் பிறந்தார்கள்.
இந்தக் காலத்தில்
அவத்தின் மூலமாகப்
பிறக்கிறார்கள்.

> ஆனந்த
> கந்தத்திற்குள்
> நுழைகிற குழந்தை
> உத்வேகத்திலேயே
> இயங்கும்

பதினாறாவது வயது ஆகும் பொழுது, மார்க்கண்டேயன் தம் அப்பாவிடம் சென்று, "காட்டிற்குச் சென்று தவம் செய்கிறேன்," என்று கேட்டார். அப்பாவும், "சரி போய்ச்செய்," என்றார்.

காட்டிற்குச் சென்று உட்கார்ந்து குழந்தை தவம் செய்யத் துவங்கியது. எப்போதுமே எமன் முயற்சி செய்து பார்ப்பார்.

தம்முடைய கட்டிற்குள்ளே வராமல் இருக்கிற எந்த ஜீவனையும் விடமாட்டார். தம்முடைய கட்டிற்குள்ளே கொண்டுவர முயற்சி செய்து பார்ப்பார். அந்த முயற்சி செய்து பார்ப்பதற்காக எமன் வந்தார். வழக்கம்போல் அவருடைய பாசக்கயிறான கட்டுறு மனப்பாங்கைப் போட்டுச் சுற்ற முயற்சி செய்தார். மார்க்கண்டேயன் கட்டுறு மனப்பாங்கால், கட்டுப்படாத உயர்ந்த உணர்வு நிலையில் இருந்தார்.

கட்டுப்படாத அந்த உணர்வு நிலையைத்தான், சிவலிங்கத்தை அணைத்துக் கொள்ளுதல் என்று வர்ணிக்கிறார்கள். வெறும் ஒரு லிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டால், எமன் நம்மை விட்டு விட்டுப் போய் விடுவாரா? என்ன?

நம் திருவண்ணாமலை ஆசிரமத்தில் கூட ஆயிரம் லிங்கங்கள் ஒரே இடத்தில் இருக்கிறது.

எல்லோரும் போய் ஒவ்வொன்றையும் கட்டிப்பிடித்துக் கொள்ளுங்கள். எமன் விட்டுவிடுகிறாரா என்று பார்ப்போம்!

'லிங்கத்தை அணைத்துக் கொள்ளுதல்' என்பது, சிவத்தன்மையை அணைத்துக் கொள்ளுதல்.

ஒரு வேளை லிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டால்போதும், எமன் உங்களுருகே வரமாட்டாரென்றால், எல்லா மருத்துவமனைகளிலும் என்ன செய்வார்கள்?

எல்லாப் படுக்கைகளின் பக்கத்திலேயேயும் ஒவ்வொரு லிங்கத்தை செய்து வைத்து விடுவார்கள்!

லிங்கம் வைத்து விட்டு என்ன செய்வார்கள்? ICU-வில் நேரம் ஆகிவிட்டது என்ற உடனேயே, "அதைக் கட்டிப் பிடித்துக் கொள்ளப்பா," என்பார்கள். தலையணையையேகூட லிங்கமாகச் செய்து வைத்திருப்பார்கள்.

லிங்கத்தை அணைத்துக் கொள்ளுதல் என்பது, அதுவல்ல. அது சிவத்தன்மையை அணைத்துக் கொள்ளுதல். சிவத்தன்மையோடு இருத்தல். சி வத்தன்மையை அணைத்துக் கொண்டு சிவத்தன்மையோடு இருந்தார் மார்க்கண்டேயர் என்பதுதான் அந்தக் கதையின் ஆழமான தாத்பரியம்.

ஆனால், அதையும் தாண்டி எமன் முயற்சி செய்தார். சிவத்தன்மையில் இருந்து கீழே இழுத்து, அந்த ஜீவனை வெளியே எடுப்பதற்கு... இதுதான் ஞானப் பரிசோதனை என்கிறோம். ஆனால், அந்தச் சிவத்தன்மையை மார்க்கண்டேயன் விடவே இல்லை.

இதைத்தான் ஸ்திரத்தன்மை என்கிறோ
ம். அவ்வளவு ஸ்திரத்தன்மையோடு
இருக்கும்போது, உங்களுக்குள்
பொங்கும் குண்டர்னி
சக்தி அனுபவம்தான் சிவதரிசனம்.

அதாவது வெடித்து, வெளிப்பட்டு,
அந்தக் கட்டுறு மன அமைப்பைப்
பயன்படுத்த வந்த சக்தியையே, சிவன்
எரித்து விட்டார். Conditioned mind
is destroyed by kundalini. அதுதான்
காலனை அழித்தல் என்று சொல்வது.
உங்களாலும் இது முடியும்.

சிவத்தன்மை, மார்க்கண்டேயனுக்கு
உள்ளே இருந்து வெளிப் பட்டு,
எமனையே எட்டி உதைத்தது.

சிவத்தன்மையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

கட்டுறு மனப்பாங்குக்குள் அதை எடுத்துவர முடியவில்லை. பிறகு, அந்தச் சிவத்தன்மையின் சக்தியினால் மார்க்கண்டேயர் சிரஞ்சீவியாக மாறிவிடுகிறார். சிரஞ்சீவி என்றாலே எப்போதும் இருப்பது. அதுதான் நிரந்தரமான ஆனந்தம். நித்ய ஆனந்தம் ஜீவன் முக்தி என்கிறோ ம்.

நம் எல்லோர் வாழ்க்கையிலுமே இது நடக்கும். அந்தச் சிவத்தன்மைக்கான முயற்சி நடக்கும்.

எப்போதாவது ஒரு நாள் நாமும் சிரஞ்சீவியாக ஆகியே தீரவேண்டும்.

காலனின் பாசக் கயிற்றினுடைய கட்டிலே இருந்து, நம்மை விடுவித்துக் கொண்டே தீர வேண்டும்.

சிவத்தன்மை நமக்குள்ளே மலர்ந்தே தீர வேண்டும்.

சிவத்தன்மையை நாம் அணைத்தே தீர வேண்டும்.

சிவத்தன்மை அந்தக் காலனை அழித்தே தீர வேண்டும்.

அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை. நடந்தே ஆக வேண்டும்.

வைத்ய சரோவரில் இருக்கும் ஆனந்த வைத்ய லிங்கம்

வைத்ய சரோவரம் -

Healing Pond

வைத்ய சரோவரில் இருக்கும் ஆனந்த வைத்ய லிங்கம்

அதை எவ்வளவு சீக்கிரமாக நடத்திக்
கொள்கிறீர்கள் என்பது, உங்கள் சுதந்திரம்.
அவ்வளவுதான்.

லட்சியத்தைத் தெளிவாக்கிக்
கொண்டு, உங்களை நோக்கித்
திருப்புவீர்களேயானால், இன்றிலிருந்தே
செயல்படுத்த முடியும். இல்லையென்றால்,
கொஞ்சநாள் கழித்து நடக்கும். ஆனால்,
நடந்தே ஆக வேண்டும். அதில் ஒன்றும்
சந்தேகமே இல்லை.

> எப்போதாவது ஒரு நாள் நாமும்
> சிரஞ்சீவியாக ஆகியே தீர
> வேண்டும். காலனின் பாசக்
> கயிற்றினுடைய கட்டில் இருந்து,
> நம்மை விடுவித்துக் கொண்டே
> தீர வேண்டும்.

லட்சியம் பற்றி இன்னும் ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்.

எப்படி எப்படியெல்லாம் உங்களுடைய கட்டுறு மனப்பாங்கு உங்களுடைய வாழ்க்கையில் வரும்? எப்படியெல்லாம் அதைத் தாண்டிப்போய் ஞானத்தை அடைவது? இந்த ரகசியங்களை புரிந்துகொண்டால் எல்லாவிதமான தடைகளையும் தகர்க்கும் நுட்பம் தெரிந்துவிடும்.

சன்யாசியின் ரகசியம்

  • ஒரு சந்நியாசி நடனமாடலாமா? சந்நியாசி நடனமாடாவிட்டால் யார் நடனமாட முடியுமாம்! பிக்கல் பிடுங்கல்கள் இல்லை. ஆடுகிறார். முடிந்தால் நீங்களும் ஆடுங்கள்.
  • ஞானி? அவரால்தான் ஆனந்த நடனமாட முடியும். ஒரு சாதாரண மனிதனுக்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கின்றன என ஒரு பட்டியல் போடுங்கள்.