KAILASA Library/ஜீவன் முக்தி/இளைஞனின் ரகசியம்Sign in
ஜீவன் முக்தி

இளைஞனின் ரகசியம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

  • இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இந்தியாவின் தூண்களாக மாற வேண்டியவர்கள் உளுத்துப்போன மூங்கிலாக மாறிக் கொண்டிருக்கக் கூடாது.

  • அப்படியென்றால்?

இளஞ்சிங்கங்களே!

அறிவை மட்டும் வளர்ப்பது ஆபத்து. ஆற்றலையும் வளர்க்க வேண்டும். உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்ற தியானம் உங்கள் ஒவ்வொருவரின் தினசரி வாழ்விலும் நடைமுறையாக வேண்டும்.

எந்தப் பாதையில் சென்றாலும் இங்கேதான் வருகிறீர்கள்

Which ever path you may take, you are reaching here

என்ன செய்தாலும் எல்லையில்லா நிலையான ஞானமடைதல் என்ற ஆனந்த உணர்வை நோக்கித்தான் ஓடிக் கொண்டிருக்கிறீர்கள். வேறு தனியான ஒரு லட்சியம் என்ற ஒன்று பூமியில் இல்லை.

ஞானமடைதல் என்ற லட்சியத்தில்தான் நீங்கள் வாழ்கிறீர்கள். சிலநேரங்களில் ஞானமடைதல் என்ற வார்த்தையைத் தெரிந்து கொண்டு வாழ்பவர்கள் ஒரு குழுவாகவும். பல நேரங்களில், அந்த வார்த்தையைத் தெரிந்து கொள்ளாமல், பாதையைத் தெரிந்து கொள்ளாமல், சுற்றிச் சுற்றி அதை அடையும் முயற்சியில் ஏற்படும் தோல்வியை, சாதனை என்று சொல்லி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஒரு குழுவாகவும் இருக்கிறீர்கள்.

> ஞானமடைதல்
> மட்டும்தான் உங்களை
> முழுமையாக்கும் வரை
> உங்களுடனேயே
> இருக்கக்கூடிய சக்தி
> வாய்ந்த லட்சியமாகும்

மைசூர் ரோட்டில் நின்று கொண்டு, “பெங்களூர் எவ்வளவு தூரம்?” என்று கேட்டால், “இடதுபக்கம் போனால், 30 கிலோ மீட்டர், வலது பக்கமாகப் போனால் 30,000 கிலோ மீட்டர்,” என்று சொல்வார்கள்.

அந்த இரண்டு வழியுமே பெங்களூர் நோக்கித்தான் போகும்.

சில பேர் சரியான பாதையைத் தெரிந்து கொண்டு, சுருக்கமான பாதையில் நேராகச் செல்கிறார்கள். சில பேர் தெரியாமல் ஏதோவொரு நீண்ட பாதையில் சென்று கொண்டே இருப்பார்கள்.

எந்தப் பாதையை தேர்ந்தெடுத்தாலும் கடைசியில் வாழ்க்கையின் லட்சியமான ஞானமடைதலை நோக்கித்தான், ஜீவன் முக்தியை நோக்கித்தான் அவை இயங்குகின்றன. எந்தப் பாதையில் சென்றாலும், ஜீவன் முக்தியை நோக்கித்தான் வந்து கொண்டே இருக்கிறீர்கள்.

வேறு எந்த லட்சியமாக இருந்தாலும் அது உபயோகமில்லாததுதான்.

அது நிச்சயம் என்றாவது ஒரு நாள் கழன்று கொள்ளக் கூடிய லட்சியமாகும்.

> Consciousness என்பது உங்களைப்
> பற்றி நீங்கள் வைத்திருக்கிற
> உணர்வு, “நான் இருக்கி
> றேன்” என்று நீங்கள் உணர்கிறீர்கள்
> இல்லையா? அதுவே மிகப் பெரிய
> பரிசு, அதை வீணடித்துக்
> கொண்டேயிருக்கக் கூடாது.
> சரியாய்ப் பயன்படுத்த வேண்டும்

உங்களை விட்டு விலகிவிடக் கூடிய முழுமையடையாத லட்சியமாகும்.

இந்த ஞானமடைதல் மட்டும்தான் உங்களை முழுமையாக்கும் வரை உங்களுடனேயே இருக்கக்கூடிய சக்தி வாய்ந்த லட்சியமாகும்.

அதுதான் உங்களுடனேயே இருக்கக் கூடிய குறிக்கோள்.

வேறு எந்த லட்சியத்தை முன்னிட்டு வாழ்ந்தீர்களானாலும், அது துக்கத்திற்கான ஆணிவேராகத்தான் முடியும்.

ஒன்றுமில்லை. மொத்தமாக எழுபது, எண்பது வருடம் மட்டுமே இந்த உடம்பிற்குள் நீ ங்கள் விளையாடப் போகிறீர்கள். அவ்வளவுதான். Consciouness என்பது உங்களைப் பற்றி நீங்கள் வைத்திருக்கிற உணர்வு. நான் இருக்கிறேன் என்று நீங்கள் உணர்கின்றீர்கள் இல்லையா? அதுவே மிகப் பெரிய பரிசு. அதை வீணடித்துக் கொண்டேயிருக்கக் கூடாது. சரியாய்ப் பயன்படுத்த வேண்டும்.

பிரபஞ்ச உணர்வைப் பிரதிபலிக்கும் கண்ணாடி நீங்கள்!

Your are the mirror, that reflects that cosmic consciousness

நீங்கள் விருப்பப்பட்டால், 'நான் இருக்கிறேன்' என்கிற உணர்வை, உயர்ந்த ஆனந்தத்திலேயே ரம்யமாக வைத்திருக்கவும் முடியும். இல்லையென்றால், துக்கத்திலே போட்டு, "இப்படி ஏன் நான் இருக்கிறேன்?" என்று சலித்துக் கொள்ளவும் முடியும். எப்படி வேண்டுமானாலும் ஒருவரால் உணர்வை மாற்றிக் கொள்ள முடிகிறது.

'நான் இருக்கிறேன்' என்கிற உணர்வை, எப்படி வேண்டுமானாலும், எந்த உணர்வில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளக்கூடிய சுதந்திரம் ஒவ்வொரு வருக்கும் இருக்கிறது.

இந்த உணர்வை பயன்படுத்தும் உரிமைகூட சராசரியாக ஒரு எழுபது, எண்பது வருடம்தான் உங்களுக்குக் கிடைக்கக் கூடியதாக இருக்கிறது.

நன்கு ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், வேறு எது கிடைத்து, அதை நீங்கள் வீணாக்கினாலும் பரவாயில்லை.

ஆனால், எந்தவிதமான உணர்வில் உங்களை வைத்துக் கொள்வதற்காக இந்த சு தந்திரமும், வாய்ப்பும் கிடைத்தது என்பதே தெரியாமல் அதை வீணாக்குவதுதான் இருப்பதிலேயே மிகப்பெரிய வீணடித்தல் ஆகும்.

ஆயிரக்கணக்கான கண்ணாடிகள் இருக்கின்றன. ஆனால் ஒரு சில கண்ணாடிகள்தான் அதிர்ஷ்டவசமாக, சூரியனைப் பிரதிபலிக்கிறவிதமாக, சரியான கோணத்தில் அமைந்து, சூரியனுடைய பிரதிபிம்பத்தைத் தனக்குள்ளே உள்வாங்குகிற விதத்தில் வைக்கப்பட்டிருக்கும்.

அதுபோல லட்சக்கணக்கான ஜீவராசிகள் இருக்கின்றன. ஆனால் எல்லா ஜீவராசி களுடைய உடலும், பிரபஞ்ச உணர்வை (Cosmic Consciousness) தனக்குள்ளே பிரதிபலிக்குற நிலையில் இல்லை.

மனித சரீரம்

மாத்திரம்தான்

பிரபஞ்ச உணர்வை,

தனக்குள்ளே 'நான்' என்கிற தனி உணர்வாக பிரதிபலிக்கிற சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. இந்தப் பிரதிபலிப்பு நமக்குள் நடப்பதுதான் மிகப்பெரிய பாக்கியம். மிகப்பெரிய கொடுப்பினை. மிக உயர்ந்த சாத்தியக்கூறு.

இது நடக்கிற காலகட்டமான, எழுபது எண்பது வருடத்தில், ஒருவேளை அந்தக் கண்ணாடி வெவ்வேறு திசைகள் நோக்கி திசை திரும்பிவிட்டால், பிம்பம் பிரதிபலிக்காமல் போய்விடும்.

கண்ணாடி உடைந்துவிட்டாலும் பிரதிபலிக்காமல் போய்விடும்.

எத்தனை காரணம் வேண்டுமானாலும், அந்தப் பிரதிபிம்பம் பிரதிபலிக்காமல் போவதற்கு இருக்கலாம்.

ஆனால், அந்தப் பிரதிபிம்பம் பிரதிபலிக்கிற அந்த நேரத்தை, வீணடிப்பதுதான் இருப்பதிலேயே மிகப்பெரிய கொடுமை.

கோடிக்கணக்கான ஜீவராசிகள் இருக்கின்றன. ஆனால், அவை எல்லாவற்றிற்கும் 'நான்' என்கிற 'தனி உணர்வு' இருப்பதில்லை. மனிதகுலத்திற்கு மிக அருகாமையில் இருப்பதாகச் சொல்லப்படும் குரங்குகளுக்குக் கூட அது இல்லை. மனிதர்களுக்கு மட்டுமே அது சாத்தியம்.

ஏனென்றால், மனிதன் என்கிற கண்ணாடி மட்டும்தான் பிரபஞ்ச உணர்வையே, இறைச க்தியையே பிரதிபலிக்கும் தன்மையைப் பெற்றிருக்கிறது. பிரபஞ்சம் எனும் சூரியனை நோக்கிச் சரியான திசையிலும் மனிதன் எனும் கண்ணாடி அமைக்கப்பட்டிருக்கிறது.

இதை உணர்ந்து கொள்வதற்கும், இறைச க்தியையே பிரதிபலிக்கும் ஜீவன் முக்தி ஜொலிப்பை வெளிப்படுத்துவதற்குமான மிகப்பெரிய சாத்தியக்கூறு மனிதனுடைய விழிப்புணர்வுக்குத் தான் உண்டு.

> மனிதன் என்கிற
> கண்ணாடி
> மட்டும்தான்
> பிரதிபலிக்கும்
> தன்மையைப்
> பெற்றிருக்கிறது.

மனித சரீரம் எடுத்ததே ஞானமடைவதற்குத்தான்

The purpose of choosing the humanbody is to get enlightened

நான் எப்போதுமே எதையும் வலியுறுத்திச் சொல்வதில்லை.

எதையும்

எப்போதுமே

வலியுறுத்த மாட்டோம்.

சில நேரங்களில் எனக்குத் தோன்றும், "ஐயோ! மனிதர்கள் இப்படி வீணாகப் போகிறார்களே, எவ்வளவு பெரிய வாய்ப்பு அவர்களுக்கு இருக்கிறது, இதை உணராது, வாழ்க்கையை வீணடிக்கிறார்களே!" என்று.

எதையோ நோக்கி, பூமிக்கு வந்தவர்கள் எதன் பின்னாடியோ சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

எல்லோரின் நடவடிக்கைகளையும் பார்த்தீர்களேயானால், இந்த உண்மை புரியவரும். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற் போல், வேறு யாரோ ஒருவருடைய அஹங்காரத்தைப் பூர்த்திசெய்வதற்காக மனிதர்கள் ஓடிக் கொண்டிருப்பார்கள்.

உங்களின் அஹங்காரத்தைப் பூர்த்தி செய்வதற்காக ஓடினால் கூட பரவாயில்லை. வேறு யாரோ ஒருவருடைய அஹங்காரத்தைப் பூர்த்தி செய்வதற்காக, வேறு யாரோ ஒருவருடைய விருப்பு வெறுப்புகளைப் பூர்த்தி செய்வதற்காக ஓடிக் கொண்டிருப்பதுதான் பரிதாபத்திற்குரியது.

நம்முடைய வாழ்க்கையே அப்படித்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது

எதற்காக ஓடுகிறோம்?

ஏன் ஓடுகிறோம்?

என்ன செய்கிறோம்?

என்று நமக்கே தெரிவதில்லை. இவை எல்லாவற்றையும் விட, நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது... பிரபஞ்ச விழிப்புணர்வைப் பிரதிபலிக்கிற மிகப் பெரிய சாத்தியக்கூறான, மனித சரீரத்தை நீங்கள் தேர்வு செய்து அடைந்திருக்கிறீர்கள்.

இதற்கு அடுத்ததாக, இந்த வாழ்க்கையை, சரீரத்தை தேர்ந்தெடுத்ததற்கான மிகப் பெரிய லட்சியம் என்னவென்றால், உங்களுடைய பிரதிபலிப்பின் மூலத்தோடு இணைவதுதான்.

அந்த மூலத்தோடு கலத்தல், ஆதிமூலத்தோடு கரைதல். அதைத்தான் ஞானமடைதல் என்று சொல்கிறோம். எதனுடைய பிரதிபலிப்பாக நான் என்கிற உணர்வு, உங்களுக்குள் இயங்குகிறதோ, அ hisதனில கரைதல

உள்ளுக்குள் கரைந்து, ‘அது எங்கிருந்து பொங்குகிறது? எங்கிருந்து வருகிறது?’ என்று ஆழ்ந்து உற்று நோக்கி, அதற்குள்ளே கரைவதுதான் வாழ்க்கையின் லட்சியம். அதைப் பார்த்து விட்டீர்களானால், எதற்காக இந்தக் கண்ணாடியை உருவாக்கினீர்களோ, எதற்காக அந்தப் பிரதிபிம்பம் உருவாகியதோ, அந்த லட்சியத்தை அடைந்து விட்டீர்கள்.

லட்சியத்தை அடைந்தபின், கண்ணாடியை உடைத்தால் தவறில்லை.

ஆனால், அதை அடையாமல் கண்ணாடி உடைக்கப்பட்டால், அதுதான் மிகப் பெரிய இழப்பு.

ஞானமடையாது உங்களின் சரீரம் கெட்டுப் போனால், அதைவிட பெரிய இழப்பு வேறு எதுவும் இல்லை. இதுதான் கொடுமையான இழப்பு.

உடலெடுக்கும் முன்பே நீங்கள் செய்த பிரார்த்தனை

The prayer you did even before your birth

திருவண்ணாமலையில் வாழ்ந்த இடைக்காட்டுச் சித்தர், அருமையாகப் பாடுகிறார்...

“நந்தவனத்தில் ஓர் ஆண்டி -அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி -அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”

என்று பாடலைப் பாடியிருக்கிறார்.

இடைக்காடர் என்ற பெயருக்கு, காடுகளின் இடையிலே வாழ்ந்தவர் என்று பொருள். அவர் ஒரு பெரிய ஞானி.

அவர் பாடியது மிகவும் அர்த்தம் பொதிந்தது. நந்தவனத்தில் ஓர் ஆண்டி என்று துவங்குகிறார்.

இந்த உலகத்தில் நம்மைத்தான், நம் ஜீவனைத்தான், நந்தவனத்தில் ஓர் ஆண்டி என்று சொல்கிறார். பிறக்கும் முன்பே நீங்கள் செய்த பிரார்த்தனையால்தான் இப்போது இந்த உடலை எடுத்து வந்திருப்பதாகச் சொல்கிறார்.

அடுத்து, நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி என்று சொல்கிறார். நாலாறு என்றால் பத்து மாதம். பத்து மாதம் பிரம்மாவை வேண்டி, கொண்டு வந்தான் ஒரு தோண்டி - இந்த உடலைத்தான் அவர் தோண்டி என்கிறார்.

‘வேண்டி வேண்டி’

நாம் எடுத்து வந்த இந்த உடலை எதற்காக
உபயோகப்படுத்த வேண்டுமோ, அதற்காக
உபயோகம் செய்யாமல், வெறுமனே பணம்,
புகழ், வெளியுலக ஆடம்பரங்களிலேயே
உடலை வீணடிப்பதைத்தான் ‘கூத்தாடிக்
கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி’ என்று
சொல்கிறார்.

> ஞானமடையாது உங்கள் சரீரம்
> கெட்டுப் போனால். அதைவிட
> பெரிய இழப்பு
> வேறு எதுவும் இல்லை.
> இதுதான் கொடுமையான
> இழப்பு.

மிகப் பெரிய இழப்பு என்பது, எடுத்து வந்த உடலை, எடுத்து வந்த காரணத்திற்காகப் பயன்படுத்தாமல், போட்டு உடைப்பதுதான் மிகப் பெரிய இழப்பு.

அடுத்து, வாழ்க்கையின் லட்சியமான ‘ஞானமடைதல்’ எப்படிப் படிப்படியாக நடக்கிறதென்றும்; அந்த வழியில் எங்கெல்லாம் நின்றுவிடுகிறோம்; எங்கெல்லாம் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து விடுகிறோம் என்பதைப் பார்ப்போம்.

எழுமின்! விழிமின்! இலட்சியத்தைத் தொட்டுவிட்டீர்

Arise! Awake! The goal is Reached

ஒவ்வொரு வினாடியும் மக்கள்தொகை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

உலகில்

எத்தனை கோடி பேர் இருந்தாலும்,

அத்தனை பேருடைய லட்சியமும்

ஞானமடைதல்தான்.

நீங்கள் எப்படித் தவறான திசையில் போகிறீர்கள் என்பதையும் அல்லது ஞானமடைதல் என்ற லட்சியத்தை தேடியே போனாலும், எங்கெங்கு நின்று போகிறீர்கள் என்பதையும் புரிந்துகொண்டாலே போதும். லட்சியம் தெளிவாக இருந்தாலே போதும். அதை நோக்கி நீங்கள் சென்று கொண்டேயிருப்பீர்கள்.

மிக அழகாக விவேகானந்தர் சொல்கிறார், “எழுமின், விழிமின், குறிக்கோளை

அடையும்வரை நில்லாது செயல்படுங்கள்.

எழுமின், விழிமின், உய்மின் "

Arise, Awake, Stop not till the goal is reached

எழுமின்!

விழிமின்!

உய்மின்!

அதாவது இந்த இலட்சியத்தை அடையும் வரை எக்காரணம் முன்னிட்டும் ஓயாதீர்.

நீங்கள் அவ்வளவு கூட கஷ்டப்பட வேண்டியதில்லை. என்பதுதான் உங்களுக்காக என் அனுபவத்திலிருந்து பகிர விரும்பும் செய்தி, என் இதயத்திலிருந்து பகிர்ந்து கொள்கி றேன்...

"எழுமின், விழிமின்.''

எழுந்தீர்களானாலும் சரி,

விழித்தீர்களானாலும் சரி,

அதுவே போதுமானது.

உடனடியாகக் குறிக்கோளைச் சார்ந்துவிட்டீர்கள்.

"Arise,

Awake,

Stop

The goal is reached"

எழுமின், விழிமின், இலட்சியத்தைத் தொட்டுவிட்டீர்.

விவேகானந்தர் சொல்கிறார் "Stop not till the goal is reached"என்று என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன். "விழித்தீர்களானால் போதும், எழுந்தீர்களானால் போதும். இலட்சியத்தை அடைந்திருப்பீர்கள்.''

லட்சியத்தைப் பற்றிய தெளிவு இருக்குமானால், அந்தத் தெளிவினாலேயே நீங்கள் லட்சியத்தை அடைந்து விடுவீர்கள். இலட்சியத்தைப் பற்றிய தெளிவு உங்களுக்குள் பிறக்க பிறக்கவே... லட்சியத்தை அடைந்து கொண்டு இருக்கிறீர்கள். லட்சியத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

"இலட்சியத்தை அடைவது இவ்வளவு சுலபமா! பின்பு ஏன் பல பேராலும் இந்த லட்சியத்தை அடைய முடிவதில்லை?"

> லட்சியத்தை பற்றிய
> தெளிவு பிறந்தாலே
> ஜீவன்முக்தி தன்னால்
> பொங்கி வெளிப்பட
> ஆரம்பித்துவிடும்.

என்று நீங்கள் கேட்கலாம்.

காரணம், லட்சியம் என்ன என்கிற தெளிவு ஒருமுறைகூட யாருக்குள்ளும் எழுவதேயில்லை. அதில்தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது.

லட்சியம் பற்றிய தெளிவோடு இருப்பவர்களுக்கு எளிமையான தியான முறைகளே போதுமானது.

நீங்கள் வாழ்வின் லட்சியம் பற்றிய தெளிவுடையவராய் இருந்தால், கண்களை மூடி உணர்வை ஒன்றாக்கினீர்களானாலே போதும். உடனடியாக லட்சியத்தை நோக்கி நீங்கள் மலர ஆரம்பித்து விடுவீர்கள். லட்சியம் நோக்கிக் கரைய ஆரம்பித்து விடுவீர்கள்.

லட்சியம் என்னவென்று நம்முடைய உணர்வுக்குள்ளே இருக்கும் தெளிவாக அது இருந்தால், நம்முடைய உணர்வு ஒன்றுபடுகிற நேரங்களில் எல்லாம், அந்த லட்சியத்தை நோக்கியே நம் உணர்வு பொங்கிக் கொண்டிருக்கும்.

லட்சியத்தைப் பற்றிய தெளிவும்,

அதை நோக்கியே

பொருந்தியிருக்கிற உணர்வும்தான்

ஜீவன்முக்தி என்று சொல்கிறோம்.

தெளிந்த லட்சியம்.

அதை நோக்கி ஒன்றாகி இருக்கிற உணர்வு.

அதுதான் ஜீவன்முக்தி என்று சொல்கிறோம்.

அது நிகழ்ந்தாலே, அடைய வேண்டியதை அடைந்து விட்டீர்கள். இனி தனியாய் அடைவதற்கு என்று வேறு எதுவுமில்லை.

எல்லாவற்றையும் சுருக்கி ஒரு வரியில்
சொல்ல வேண்டுமானால், லட்சியத்தைப்
பற்றிய தெளிவு நமக்கு வரவேண்டியதுதான்
முக்கியம்.

லட்சியத்தைப் பற்றிய தெளிவு பிறந்தாலே,
ஜீவன் முக்தி தன்னால் பொங்கி வெளிப்பட
ஆரம்பித்துவிடும்.

லட்சியத்தைப் பற்றி தெளிவு இருக்குமானால், நீங்கள் லட்சியத்தை அடைந்து விட்டீர்கள்.
சுவாமி நித்யானந்தர் சொற்பொழிவு

எழுமின்! விழிமின்! தொட்டுவிட்டீர்...

  • பரமஹம்ஸ நித்யானந்தர்

லட்சியத்தைக் கவிழ்த்த கட்டுறு மனப்பாங்கு

Conditioning, the culprit of the aimless life

ஏன் நமக்கெல்லாம் லட்சியத்தைப் பற்றிய தெளிவு இல்லாமல் போனது?

காரணம், கட்டுறு மனப்பாங்கு. அதாவது, Conditioning

இதுதான் உலகம்.

இதுதான் வாழ்க்கை.

இவ்வளவுதான் முடியும்.

எனக்கு இது பிடிக்கும்.

இதெல்லாம் எனக்குப் பிடிக்காது.

இவர் என் எதிரி.

இவர் என் ஆதரவாளர்.

எனக்கு இவ்வளவு தெரியும்.

இதெல்லாம் எனக்குத் தெரியாது.

உங்களின் அப்பாவோ,
அம்மாவோ உங்களுக்குத்
துரோகம் செய்ய
வேண்டும் என்று
வேண்டுமென்றே
கட்டுப்படுத்துவதில்லை.

என்று விதவிதமான முறையில் உங்களின் கட்டுக்கடங்காத சக்தியைக் கட்டுப்படுத்தும் மனக்கருத்துகளை, சமுதாயம் உங்களின் மீது திணித்த கருத்துகளைத்தான் கட்டுறு மனப்பாங்கு என்ற ஒரு வார்த்தையால் குறிப்பிடுகிறோம். இந்தக் கட்டுறு மனப்பாங்குதான் நம்முடைய லட்சியத்தை நாம் தெரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல் வாழ்வதற்கான காரணம்.

இந்தக் கட்டுறு மனப்பாங்கு என்ற வார்த்தையை ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.

பிறக்கும்போது நீங்கள் தமிழரோ, தெலுங்கரோ, மலையாளியோ, கன்னடியரோ ஆங்கிலேயரோ அல்ல.. பிறக்கும்போது, இந்தப் பூவுலகிற்கு வந்த ஒரு புது விருந்தாளி நீங்கள்..

சொர்க்கமாக கடவுள் படைத்த பூமியில், இங்கு நம்பி பிறக்கும் ஜீவன்களை இப்போது இந்தக் காலத்தில் அசிங்கம் செய்கிற மாதிரி, அவமானம் செய்கிற மாதிரி, மற்றொரு உலகத்தை இந்த பிரபஞ்சத்தில் நான் பார்க்கவில்லை...

தவறிப் போய் இந்த உலகிற்கு மனிதர்களாக வந்துவிட்டார்கள் என்பதற்காக, அந்தக் குழந்தைகளை என்ன பாடுபடுத்துகிறார்கள்?

நீங்கள் பிறக்கும்போது ஒரு ஜீவன்.

ஆனந்தமான வாழ்க்கையை வாழ்வதற்காக, துள்ளித் திரிவதற்காக, பறந்து ரசிப்பதற்காக,

பூமிக்கு வந்த ஒரு பரமஹம்ஸம் நீங்கள்.

ஏதோ ஒரு காரணத்தால், பூமியருகே வந்தது மட்டும் இல்லாமல், பூமிக்கும் வந்துவிட்டீர்கள்; பிறந்துவிட்டீர்கள். அங்குதான் பிரச்சினையே...

பிறந்த உடன், பொறி வைத்துப் பிடிப்பதற்கு நிறையப் பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்...

பிறந்த உடனேயே,

முதலில் தேசத்தாலும்,

அப்புறம் மொழியாலும்,

அடுத்து இனத்தாலும்,

இதையெல்லாம் தாண்டி மதத்தாலும் உங்களின் பிஞ்சு மனத்தை அப்போதே தள்ளிவிட்டார்கள் கட்டுறுத்தும் மனப்பாங்குக்குள்ளே! சமுதாயம் உங்களை அடைக்கிறது... சிறை வைக்கிறது.

கட்டுறு மனப்பாங்கு, கட்டுறு மன அமைப்பைத்தான் ஆங்கிலத்தில் Conditioning என்று சொல்கிறேன்.

மக்களை நன்கு ஆராய்ந்து பார்த்ததில் அவர்களின் லட்சியத்தில் இருந்து அவர்களைக் கவிழ்த்தது எது? எது அவர்களை மாயைகளிலும், இயலாமைகளிலும் ஆழ்த்தியது? என்று ஆராய்ந்தால் அது கட்டுறு மனப்பாங்கு எனும் கள்ளன் என்ற பதில்தான்.