KAILASA Library/ஜீவன் முக்தி/வாழ்க்கையின் லட்சியம்Sign in
ஜீவன் முக்தி

வாழ்க்கையின் லட்சியம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

லட்சியம் என்ற வார்த்தையின் அர்த்தம் ஜீவன் முக்தியை நோக்கிப்பாய்தல்

இலட்சியம் = ஜீவன் முக்தி

  • இலட்சியங்கள் இலட்சங்களாக இருந்தால் இலட்சம் பிறவிகள் எடுக்க வேண்டியிருக்கும்.
  • ஜீவன் முக்திக்கு குறைவான எந்தவொரு இலட்சியமும் உங்களின் ஜீவனுக்குச் செய்யப்படும் அலட்சியம்
  • துரோகம் கொடுமை ஏமாற்றப்படுதல் வஞ்சிக்கப்படுதல் என்பதெல்லாம் இதுதான்...

பூமிக்கு
வந்த வேலை
எந்த வேலை
என்று மறந்து

சொந்த வேலை
வந்த வேலை
என்று திரிந்து
மாய்வதே!

  • பூமிக்கு வந்த வேலை, கடவுள் உங்களுக்கு தந்த வேலை, நிஜமாகவே உங்களின் சொந்த வேலை,

ஜீவன் முக்தராவதே! ஞானமடைவதே!

Nithyananda seated on an ornate chair

வாழ்க்கையின் லட்சியம்

❖ வாழ்க்கை - ஞானிகள் தந்த பரிசு

Life - A gift given by enlightened Masters

❖ உலக அமைதி அல்லது உலக அழிவு மட்டுமே தவிர்க்க முடியாத எதிர்காலம்

Global peace (or) Global suicide is the future

❖ நான்கு நிலைகளில் வாழ்க்கையும், விழிப்புணர்வும்

Four states of consciousness and Life

வாழ்க்கையின் லட்சியம்

இந்த உலகத்தில் 650 கோடி மக்கள் இருக்கிறார்கள். இவ்வளவு பேர் இருந்தும், அவர்கள் பூமிக்கு, கூட்டு விழிப்புணர்வுக்கு, அதாவது collective consciousness-க்கு என்ன செய்தார்கள் என்று பார்த்தோம் என்றால், ஒன்றுமில்லை.

0.1% அளவிற்கு அவர்கள் நேர்மறை கூட்டு விழிப்புணர்வை, collective positivity-ஐ அதிகப்படுத்தியிருந்தால் ஆச்சரியம்.

ஒரு கைப்பிடி அளவு ஞானிகள் மட்டுமே, மொத்த உலக வரலாற்றையும் அடுத்தடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். ஞானிகளே மொத்த உலக வரலாற்றையும் மாற்றி அமைக்கிறார்கள்.

ஆனால், இதுவரை பூமியில் தோன்றிய ஜீவன் முக்தர்களின் எண்ணிக்கையை எடுத்தால், அது 0.001% கூட கிடையாது .

அவர்கள் பூமியின், இயற்கை சீர்வளத்திற்காக, நேர்மறை கூட்டு விழிப்புணர்விற்காக, கலாச்சார முதிர்ச்சிக்காக, மனவள மேம்பாட்டிற்காக செய்ததுதான் 99.99% உலக வரலாற்றை உருவாக்கியிருக்கிறது. முழு விழிப்புணர்வுடன் கூடிய துரிய நிலையில் இருந்தவர்கள்தான் உலக வரலாற்றை உருவாக்கியிருக்கிறார்கள்.

விழிப்புணர்வின் நான்கு நிலைகள்

நான்காம் நிலையான இறுதி நிலையான. துரியத்தில் மொத்த பிரபஞ்சத்தையும் இயக்கும் சக்திபொங்குகிறது.

வாழ்க்கை - ஞானிகள் தந்த பரிசு

Life - A gift given by enlightened Masters

★காமசூத்திரத்தை எழுதிய வாத்ஸ்யாயனர்...

ஒரு சந்நியாஸி. ஒரு ஞானி.

★நாட்டியக் கலையை உருவாக்கிய பரத ரிஷி...

ஒரு ஞானி.

★யோகத்தை உலகுக்குக் தந்த பதஞ்சலி ...

ஒரு துறவி. ஒரு ஞானி.

★தியானத்தைப் பயன்பாட்டுக்கு எடுத்து வந்த புத்தர்...

ஒரு துறவி. ஒரு ஞானி.

★ஆயுர்வேத மருத்துவத்தை உலகுக்களித்த தன்வந்திரி...

ஒரு ஞான அனுபூதிமான்.

★கட்டிடக் கலையை (Architecture) உருவாக்கிய மயன்...

ஒரு ஞான அனுபூதிமான்.

★மனோ தத்துவத்தை (Psychology) உருவாக்கியதோடு

மட்டுமல்லாமல், மனத்தைக் கடப்பதற்கான

விஞ்ஞானத்தையும் வடிவமைத்தவர்கள் ரிஷிகள், ஞானிகள்.

இப்படி ஓராயிரம் ஞானிகள், அவர்களின் வாழ்வையே தியாகம் செய்து கோர்த்துத் தந்த மாலையைத்தான் நாம் இன்று வாழ்க்கையாக அனுபவிக்கிறோம்.

ஒருவேளை இவர்கள் மட்டும் தோன்றாமல் போயிருந்தால்,நம்முடைய இன்றைய பல சொகுசுகள், மருத்துவ முறைகள், கட்டிடங்கள், கலைகள் இருந்திருக்கவே இருந்திருக்காது.

வாழ்க்கை எனும் பரிசை நமக்களித்த ஞானிகளுக்கு, நாம் ஜீவன் முக்தர்களாவதைத் தாண்டி வேறு எதை ஈடாகத் திரும்பத் தர முடியும்?

நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு கைமாறு, நாமும் அவர்கள் தொட்ட அதே துரிய நிலையைத் தொடுவது தான்; அதே ஜீவன் முக்த நிலையை வாழ்வது தான்.

உலக அமைதி அல்லது உலக அழிவு மட்டுமே தவிர்க்க முடியாத எதிர்காலம்

Global peace (or) Global suicide is the future

உடனடியாக ஓராயிரம் ஜீவன் முக்தர்களாவது உருவாகாவிட்டால், பூமிப் பந்து, சூரியக் குடும்பத்தில் சுற்றும். ஆனால், அதில் சுற்ற ஆட்கள் இருக்க மாட்டார்கள். இப்போது வேண்டுமானால் உங்கள் வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு நீங்கள் உயிரோடு சென்று, உயிரோடு திரும்பி வரலாம்.

இதே நிலைமை, அதாவது எதிர்மறை கூட்டு விழிப்புணர்வு (collective negativity) அதிகமாகிக் கொண்டே சென்றால், உங்கள் பிள்ளைகள் அலுவலகத்திற்குச் செல்ல ஆரம்பிக்கும்போது, உங்கள் வீடு இருக்கும், அவர்கள் செல்கிற அலுவலகமும் இருக்கும். ஆனால், மாலையில் அலுவலகத்திலிருந்து திரும்பி வருவதற்கு, காலையில் அலுவலகத்திற்கு சென்ற ரோடு இருக்காது.

> உங்களின் உடலை
> விட்ட பிறகு, புது
> உடல் எடுத்து
> உங்களின் பேரக்
> குழந்தைகளாகப்
> பிறக்கப் போவது
> நீங்கள்தான்.

தீவிரவாதம், தலைக்கு மேல் சென்று விட்டது. இதே நிலையில் சென்றால், 20, 30 வருடங்கள் கழித்து உங்களின் பேரக் குழந்தைகள் பிறக்கும் பூமி, 24 மணி நேர திகில் திரைப்படமாக இருக்கும்.

அதனால் பூமியைக் காப்பாற்ற, உடனடி தேவை, ஓராயிரம் ஜீவன் முக்தர்களாவது உடனடியாக பூமியின் மீது உலாவ வேண்டும்.

இன்னும் கொஞ்ச காலத்திற்குள் 10,000 ஜீவன் முக்தர்கள் உருவானால் மட்டுமே பூமியைக் காப்பாற்றுவது பற்றி யோசிக்கலாம்.

ஜீவன் முக்தியை அடைவதற்காக முயற்சி செய்பவர்கள் ஒரு 1,00,000 பேர், அதாவது ஜீவன் முக்தியை வாழ ஆரம்பித்தவர்கள் இருந்தால் கூட போதும். பூமியைக் காப்பாற்றி விடலாம்.

போர்க்கால அடிப்படையில் உங்களின் பேரக்குழந்தைகள், உங்களின் செல்ல வாரிசு கள், இந்தப் பூமியில் அவர்கள் நிம்மதியான வாழ்வை வாழ்வதற்கான இடத்தைக் காப்பாற்றி வைப்பது, நம் ஒவ்வொருவரின் தலைமேல் இருக்கும் பொறுப்பு.

உங்களின் செல்ல பேரக்குழந்தைகளாக செவ்வாய் கிரகத்திலிருந்து யாரோ வந்து பிறப்பார்கள் என்று நினைக்காதீர்கள். இன்னும் 40, 50 வருடம் கழித்து உங்களின் உடலை விட்ட பிறகு, புது உடல் எடுத்து உங்களின் பேரக் குழந்தைகளாக பிறக்கப் போவது, நீங்கள்தான்.

தாத்தா நட்டு வைத்த மாமரத்திலிருந்து பேரன் வந்து மாம்பழத்தைச் சாப்பிடுவார் என்பது பொய்.

தாத்தா என்ற உடலிலிருந்து மாமரத்தை நட்டு வைத்து, பேரன் என்ற உடலில் வந்து நீங்கள்தான் மாம்பழத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

வாழ்வின் இலட்சியம்
நோக்கி திரும்பி
வினாடியிலிருந்து
கடவுள்தான் உங்களின்
பார்ட்னர்.

மீண்டும் நாம் இந்தப் பூமிக்கு வரும்போது, பூமி பூமியாக இருப்பதற்கான எல்லா நடவடிக்கைகளையும் இப்பொழுதே செய்துவிட்டால் தப்பித்தோம்.

இல்லையென்றால் தொலைந்தோம். Either global peace or global suicide is the future தயவு செய்து உங்களை மிரட்டுகிறேன் என்று நினைத்து விடாதீர்கள்.

கல்யாண வீட்டுப் பந்தலில் அணுகுண்டு இருக்கிறது என்ற செய்தியைத் தெரிந்த ஒருவர், தன்னையும் மற்றவர்களையும் காப்பாற்றிக் கொள்ள இன்னொரு நல்ல எண்ணமுடையவரிடம் பகிர்ந்து கொள்ளும் செய்திதான் இது.

நீங்கள் ஜீவன் முக்தராவது, உங்கள் வாழ்வின் இலட்சியம்.

ஜீவன் முக்தராவது எங்கள் வாழ்வின் இலட்சியம்.

நீங்கள் ஜீவன் முக்தராவது இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும், பிரபஞ்ச சக்தியின் லட்சியம்.

எப்படி யோசித்துப் பார்த்தாலும், இதைத்தாண்டி, எளிமையான, சத்தியமான, நேரடியான தீர்வு இந்தப் பிரபஞ்சத்தில் வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

மனம் கடந்த நிலையில், துரிய நிலையில் ஜீவன் முக்த நிலையில், வாழும் பத்தாயிரம் கடவுள்களைப் பிரபஞ்ச சக்தி யாசகமாய் கேட்கிறது.

நீங்கள் அதில் ஒருவராவது, கரும்பு தின்ன கூலி அல்ல. கரும்பை சாப்பிட்டதற்காக கரும்பு தொழிற்சாலைக்கே முதலாளியாகும் கதை போன்றது.

லட்சியத்தை நோக்கி மொத்த வாழ்வையும் திருப்புங்கள். திருப்புவதற்கு முன், நீங்கள் யாரோடு வேண்டுமானாலும் பார்ட்னராக இருக்கலாம். ஆனால், வாழ்வின் இலட்சியம் நோக்கி திரும்பிய வினாடியில் இருந்து, கடவுள்தான், உங்களின் பார்ட்னர்.

வீறு கொண்டு எழுங்கள்!

மார் தட்டி நிமிர்ந்து நிற்போம்!

ஜீவன் முக்தியை வாழ்வதற்கு நம் பூமியைக் காப்பாற்றுவதற்கு...

நான்கு நிலைகளில் வாழ்க்கையும், விழிப்புணர்வும்

Four states of conciousness and Life

நாம் வாழுகிற வாழ்க்கை, இந்த நான்கு நிலையில் எதுவாக இருக்கிறது என்று பார்ப்போம்.

75 வருட வாழ்நாளில்,
25 வருடத்தையாவது
தூங்கியே
கழிக்கிறோம்.

இந்தப் பூமியில் வாழும் 99% மக்கள் இரண்டாவது நிலையான ஸ்வப்ன நிலையில்தான் இருக்கிறார்கள்.

ஏதாவது பெரிய சாதனை புரிபவர்கள் மட்டும், அதாவது 1% மனிதர்கள் மட்டும், முதல் நிலையான ஜாக்ரத் நிலையில் அதிக நேரம் இருக்கிறார்கள்.

மற்ற எல்லா மனிதர்களும், மூன்றாம் நிலையான ஸுஷுப்தி நிலையில், அதாவது தூக்க நிலையில், தங்கள் வாழ்வில் மூன்றில் ஒரு பகுதியைச் செலவு செய்கிறார்கள். (24 மணி நேரத்தில், 8 மணி நேரம் தூங்குகிறோம் இல்லையா! அதாவது 75 வருட வாழ்நாளில், 25 வருடத்தையாவது தூங்கியே கழிக்கிறோம்.)

நான்காவது நிலையான மிக உயர்ந்த நிலையான துரிய நிலையில் மனிதர்கள் வாழ்வதே இல்லை.

அப்படி ஒரே ஒரு முறை அந்தத் துரியத்தைத் தொட்டவர்கள். அதற்குப்பிறகு மனிதர்களாகவே வாழ்வது இல்லை. கடவுளாகி விடுகிறார்கள்!

நான்காவது நிலையான துரியத்தில் வாழ்வதற்குதான் ஆளே இல்லை.

ஜாக்ரத் என்றால் என்ன?

ஸ்வப்னம் என்றால் என்ன?

ஸுஷுப்தி என்றால் என்ன?

துரியம்என்றால் என்ன?

இப்போது ஆழ்ந்து பார்ப்போம்.

நீங்கள் மனதால் இந்த இரண்டு விதமான நிலையில் இருக்கிறீர்கள். தினசரி வாழ்க்கையிலேயே இந்த இரண்டு நிலைகளையும் அனுபவிப்பீர்கள்.

மனத்தின் இரண்டு நிலைகள்:

நிலை 1: எண்ணங்கள் உள்ள நிலை

விழித்துக்கொண்டிருக்கிற போது எல்லாருக்குமே எண்ணம் இருக்கிறது. உடல் இயங்கினாலும், இயங்காவிட்டாலும் கூட எண்ணங்கள் இருந்துகொண்டே இருக்கும் நிலை. இது எண்ணங்கள் உள்ள நிலை.

நிலை 2: எண்ணங்களற்ற நிலை

ஆழ்ந்த தூக்கத்தில் எண்ணங்கள் இருப்பதில்லை.

இது எண்ணங்களற்ற நிலை.

அதேபோன்று நீங்கள் உணர்வாலும் இரண்டுவிதமான நிலையில் இருக்கிறீர்கள்.

உணர்வின் இரண்டு நிலைகள்

நிலை 1: நான் என்கிற விழிப்புணர்வு இருக்கிற நிலை.

நிலை 2: நான் என்கிற விழிப்புணர்வற்ற நிலை.

ஆக மொத்தம் இரண்டு விதமான மனநிலைகளிலும், இரண்டு விதமான உணர்வு நிலையிலும் இருப்பீர்கள்.

நான் என்ற விழிப்பு நிலை

இந்தப் புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கும் எல்லாருக்குமே, நான் என்ற விழிப்பு நிச்சயமாக இருக்கும். இல்லையென்றாலும் ‘நான்’ என்கிற உணர்வு எல்லாருக்குமே இருக்கிறது. இருப்பதனால்தான் உடலை உங்களால் அசைக்க முடிகிறது. அது இருப்பதால்தான், புத்தகத்தை எடுக்க முடிகிறது. படிக்க முடிகிறது. பக்கங்களைப் புரட்ட முடிகிறது.

இது, ‘நான்’ என்கிற விழிப்புணர்வு இருக்கிற நிலை. இது முதலாவது உணர்வு நிலை.

நான் என்ற விழிப்புணர்வற்ற நிலை

இரவு ஆழ்ந்த தூக்கத்தில் உங்களிடம் ‘நான்’ என்கிற விழிப்புணர்வு இருக்கிறதா?

இல்லை. தூக்கத்தில் நான் என்பது உணர்வாக இருக்காது.

அதுதான் விழிப்புணர்வு இல்லாத நிலை.

இது இரண்டாவது உணர்வுநிலை.

இரண்டு உணர்வு நிலையும், இரண்டு
மன நிலையும் ஒன்றோடொன்று
சந்திக்கும்போது, இந்த நான்கு நிலைகளை
உருவாக்குகிறது.

விழிப்புணர்வின் நான்கு நிலைகள்
பற்றிய வரைபடத்தைத் பாருங்கள். இதை
ஆழமாகப் புரிந்து கொண்டோமானால்,
மனம் எப்படி வேலை செய்கிறது

> துரிய நிலையில் மனிதர்கள்
> வாழ்வதே இல்லை. ஒரே ஒரு
> முறை அந்தத் துரியத்தைத்
> தொட்டவர்கள்.
> அதற்குப்பிறகு
> மனிதர்களாகவே
> வாழ்வதில்லை. கடவுளாகி
> விடுகிறார்கள்!

என்பதைத் தெரிந்து கொள்ளமுடியும். அதன்பின் உணர்வை எப்படி இன்னும் முழுமையாக உபயோகப்படுத்திக்கொள்வது என்பதையும் அறியமுடியும்.

ஜாக்ரத் - நினைவு நிலை (Waking state)

நான் என்கிற விழிப்புணர்வும் இருந்து, எண்ண ஓட்டமும் இருக்குமானால் அதை நனவு நிலை என்று சொல்வோம். இதை சமஸ்க்ருதத்தில் ஜாக்ரத் என்று சொல்வார்கள்.

இப்போது நாம் எல்லோரும் இருக்கிற நிலை அல்லது பெரும்பாலானவர்கள் இருக்கிற நிலை என்று சொல்லலாம்.

ஸ்வப்னம் - கனவு நிலை (Dream State)

எண்ணங்கள் இருக்கும். ஆனால், நான் என்கிற விழிப்புணர்வு இருக்காது. அதுதான் கனவுநிலை.

இதை சமஸ்க்ருதத்தில் ஸ்வப்னம் என்று சொல்வார்கள்.

கனவில் வரும் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியாது.

தங்கள் எண்ணங்களைக் கனவிலும் கட்டுப்படுத்த இயலாத மக்கள், தங்களுடைய கனவில் எதிர்மறையாக எண்ணுவதும் கூட எதிர்மறை கூட்டு விழிப்புணர்வை (collective negativity) அதிகரிக்கும்.

ஸுஷுப்தி - ஆழ் தூக்க நிலை (Deep Sleep)

அடுத்தது, நான் என்கிற உணர்வும் இல்லாமல், எண்ணங்களும் இல்லாமல் இருக்கும் நிலை, ஆழ்ந்த தூக்க நிலை.

இதை சமஸ்க்ருதத்தில் ஸுஷுப்தி என்று சொல்வார்கள்.

அடுத்து ஒரு முக்கியமான கருத்து... இதை ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்.

எண்ணங்களுடைய அலைவரிசை (Frequency), நான் என்கிற விழிப்புணர்வின் அலைவரிசையைவிட (Frequency) அதிகமாக இருந்ததென்றால், உங்களால் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியாது.

இப்பொழுது இருக்கிற நனவு நிலையில், "நான் ஏன் இதைப் பார்க்க வேண்டும்? படிக்க வேண்டும்? எழுந்து போகலாமே" என்ற எண்ணம் வந்ததென்றால், உங்களால் அதைக் கட்டுப்படுத்த முடியும்.

"இல்லை, இல்லை. நான் இப்பொழுது உட்கார்ந்துதான் இருக்கப் போகிறேன்," என்று முடிவெடுத்தும் செயல்படுத்த முடியும். எண்ணங்களைக் கட்டுப்படுத்தி உங்களால் உட்கார முடிகிறதென்றாலே, நான் என்கிற உணர்வும், எண்ணங்களும் இருக்கிற முதல் நிலையில் இருக்கிறீர்கள்.

நனவு நிலையில் இருக்கிறீர்கள். ஆனால் கனவில், உங்களுடைய எண்ணத்தை உங்களாலேயே கட்டுப்படுத்த முடிகிறதா?.

முடியவில்லையே.

அப்போது நான் என்கிற விழிப்புணர்வு இல்லாமலும், எண்ணங்களும் இருக்கிற இரண்டாம் நிலையான கனவு நிலையில் இருக்கின்றீர்கள்.

கனவில்,
உங்களுடைய
எண்ணத்தை
உங்களாலேயே
கட்டுப்படுத்த
முடிகிறதா?

ஒருவேளை, கனவில் வரும் எண்ணங்களை உங்களால் கட்டுப்படுத்த முடிந்ததென்றால், நமக்கே தெரியும், நாம் என்னமாதிரி கனவுகளைக் காண்போம் என்று?...

இந்த உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். நம்முடைய கனவுகள் நம் கட்டுப்பாட்டில் இல்லை, நான் என்கிற விழிப்புணர்வு கனவில் இல்லை. நான் என்கிற விழிப்புணர்வு இல்லாமல், எண்ணங்கள் மட்டும் இயங்கிக் கொண்டிருக்கிற நிலையே கனவு நிலை (ஸ்வப்னம்).

நான் என்கிற விழிப்புணர்வும் இருந்து, எண்ணங்களும் இருக்கிற நிலை நனவு நிலை (ஜாக்ரத்).

ஜாக்ரத் நிலையில் அதிகம் வாழ்பவர்களின் எண்ணிக்கை வெறும் ஒரு சதவிகிதம்தான். மற்றவர்களெல்லாம் கண்களை திறந்து இருந்தாலும், ஜாக்ரத் என்ற நிலையில் இருப்பதாகச் சொன்னாலும், அவர்கள் கண்களைத் திறந்து கனவு காண்பவர்களாகவே இருக்கிறார்கள். ஸ்வப்ன நிலையிலேயே இருக்கிறார்கள்.

நான் என்கிற விழிப்புணர்வும் இல்லாமல், எண்ணமும் இல்லாமல் உள்ள நிலை ‘ஆழ்ந்த தூக்கம்’ (ஸுஷுப்தி)

சமாதி நிலை - துரியம் (Samadhi)

இது தான் புதியது. மற்ற மூன்றையும் நாம் எல்லோருமே அனுபவித்து இருப்போம். மற்ற மூன்று நிலைகளையும், நாம் நம் தினசரி வாழ்க்கையில் சந்திக்கிறோம்.

Swami standing next to a chart showing Various States of Consciousness

இந்த மூன்று நிலைகளுக்குள்தான், நம்
வாழ்க்கையின் ஓட்டம் ஓடிக்கொண்டே
இருக்கிறது. சிலபேர் நனவு நிலையில்
நிறைய நேரம் இருப்பார்கள்.
சிலபேர் கனவு நிலையில் நிறைய
நேரம் இருப்பார்கள். யார், எதில்
வேண்டுமானாலும், எவ்வளவு நேரம்
வேண்டுமானாலும் இருப்பார்கள்.

இந்த நான்காவது நிலை, நாம் யாரும் பார்த்திராத, சாதாரண மனிதர்கள் அனுபவித்திராத நிலை. இதில் மட்டும்தான், 'நான்' என்கிற விழிப்பு மட்டும் இருக்கும். ஆனால், எண்ணங்கள் இருக்காது.

இதைத்தான் தியான நிலை என்று சொல்கிறோம்.

ஆனந்தநிலை, நித்யானந்த நிலை என்ற பெயரிலும் சொல்லலாம். கடவுள் நிலை, புத்தநிலை, சிவநிலை, ஞானநிலை, கிருஷ்ணநிலை என்று எந்தப் பெயரிட்டு வேண்டுமானாலும் சொல்லலாம். இந்த நிலையில் இருக்கும் ஒருவரை, பூமியில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் பூமியும் கொண்டாடும்; ஆனந்தக் கூத்தாடும். அவர்களின் பாதம் தன்மீது பட வேண்டும் என்பதற்காகவே அது உற்சாகமாய்ச் சுற்றும். இந்த நிலையை உணர்வதற்கான நுட்பத்தைத்தான் தியானம் என்று சொல்கி றோம்.

'நான் என்கிற விழிப்புணர்வு இருக்கும். ஆனால் எண்ணங்கள் இருக்காது'... என்பது சாதாரணமாகவும், மிக சின்ன விஷயமாகவும் தோன்றலாம்.

'இது எப்படி அவ்வளவு உயர்ந்த நிலையாக இருக்க முடியும்?' என்று மனம் சந்தேகிக்கும்.

ஒரு சின்ன உதாரணம் மூலமாக ஜாக்ரத் என்று அழைக்கப்படும் முதல் நிலைக்கும், துரியம் எனும் நான்காம் நிலைக்கும் இருக்கும் மிகப் பெரிய வித்தியாசத்தை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

நீரும், மண்ணும் தனித்தனியாய் இருக்கும்வரை இரண்டுமே தூய்மையானவை... இரண்டும் ஒன்றான நிமிடமே நீரும், மண்ணும் சேறாகி விடும்.

இதுதான் மனிதர்கள் ருசிக்கும் சாதாரணமான ஜாக்ரத் நிலை. முதல் நிலை. ஆனால், துரிய நிலை என்பது, நீரோடு மண் கலக்காத நிலை. நீர் மட்டும் தனியாய் இருந்தால், அது அமிர்தம்.

அதேபோல்தான் விழிப்புணர்வு மட்டும் தனியாய் இருந்தால், அது அமிர்தம்.

அது ஆனந்தம் பொங்கும் தெய்வ நிலை; அது துரிய நிலை; ஜீவன் முக்த நிலை.

விழிப்புணர்வோடு எண்ணங்கள் சேரும் பொழுதுதான் சொர்க்க உணர்வில் வாழவேண்டிய மனிதன், நரக உணர்வில் மாட்டிக்கொள்கிற சேறாய் மாறி விடுகிறான். கலங்கி இருக்கும் நீரில் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்தால், கலங்கிய நீர் தெளிந்த நீராகிவிடும்.

அதேபோலத்தான், எண்ணங்கள் எனும் மண்ணை, அமிர்தமான விழிப்புணர்வு எனும்

நீரில் இருந்து பிரித்து விட்டால், உங்களுக்குள்ளும் அந்த அமிர்த நிலையை, ஆரோக்கிய நிலையை, துரிய நிலையை, ஜீவன் முக்த நிலையை உருவாக்கிவிட முடியும்.

இதை உருவாக்கச் சேர்க்கப்படும் சுண்ணாம்புதான் நித்ய தியானம். ஒரு நாளில் குறைந்தது மூன்று மணிநேரமாவது உங்களுடைய உணவு, உடை, காலை கடன்களுக்காகச் செலவிடுகின்றீர்கள்.

இதோடு ஒரு அரைமணி நேரம் மட்டும் ஜீவன் முக்தியை வாழ்வதற்குச் சேர்த்தால், வாழ்வின் இலட்சியப் பயணம் ஆரம்பித்து விடும்.

இதைத் தொடர்ந்து செய்யச் செய்ய, உங்கள் வாழ்வின் லட்சியம் தன்னால் ஆழமாகும், நீளமாகும். இந்த மனித உடலில் மட்டும் பலமுறை இந்தப் பூமிக்கு வந்திருக்கின்றீர்கள். இதுவரை பொறுமையாக இருந்த பூமி, "எத்தனை முறை மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து வருவாய்?" என்று கேட்டால் என்ன சொல்வீர்கள், திடீரென , " உனக்கு இங்கு இடமில்லை," என்று சொல்லி விட்டால்... என்ன ஆகும்.

ஒரு அரைமணி நேரம்
மட்டும் ஜீவன் முக்தியை
வாழ்வதற்குச் சேர்த்தால்,
வாழ்வின் இலட்சியப்
பயணம்
ஆரம்பித்துவிடும்.

தெரிந்து கொள்ளுங்கள்... நமக்கு இயற்கை நேரடியாகச் சொல்லும் ரெட் சிக்னல், பூமி நமக்கு விடுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ்தான் இயற்கை சீற்றங்கள், சுனாமி, குலோபல் வார்மிங் (global warming) இதெல்லாம்.

ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் குடும்பத்தில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால், அது எப்படி மொத்தக் குடும்பத்தினரின் மனநிலையைப் பாதிக்குமோ, அதேபோல் உங்களுடைய துக்கம், இந்தப் பிரபஞ்ச குடும்பத்தையும் பாதிக்கும். பிரபஞ்ச உணர்வைச் சமச்சீரற்றதாக்கும்.

குடும்பத்தின் மேன்மைக்காக, அதன் உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்பெடுத்தால்தான் குடும்பம் வாழையடி வாழையாகத் தழைக்கும்.

அதுபோல் இந்தப் பிரபஞ்சக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணமுடையவர்கள் அனைவரிடமும் நான் பகிர்ந்து கொள்ளும் செய்தி இது.

உங்களையும், உங்கள் குடும்பத்தையும், இந்தப் பூமியையும் காப்பாற்றுவதற்கு உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரையும் ஜீவன் முக்தர்கள் ஆக்குங்கள்.

வாழ்க்கையின் லட்சியம் ஞானமடைதல்

எந்தப் பாதையில் சென்றாலும் இங்கேதான் வருகிறீர்கள் Which ever path you may take you are reaching here

பிரபஞ்ச உணர்வை பிரதிபலிக்கும் கண்ணாடி நீங்கள்! You are the mirror, that reflects the cosmic consciousness

மனித சரீரம் எடுத்ததே ஞானமடைவதற்குத்தான் The purpose of choosing the humanbody is to get enlightened

உடலெடுக்கும் முன்பே நீங்கள் செய்த பிரார்த்தனை The prayer you did even before your birth

எழுமின்! விழிமின்! இலட்சியத்தைத் தொட்டுவிட்டீர் Arise! Awake! The goal is Reached

லட்சியத்தைக் கவிழ்த்த கட்டுறு மனப்பாங்கு Conditioning, the culprit of the aimless life

தேவையில்லாத சீர்வரிசை கட்டுறு மனப்பாங்கு Conditioning, an Unnecessary Property

உங்களுக்கு எமன் கட்டிவிடும் பாசக்கயிறுதான் கட்டுறு மனப்பாங்கு Ema's death rope is your conditioning

காலனாலும் உங்களைக் கட்டுப்படுத்த முடியாது Even Lord of death cannot control you

என்றாவது ஒருநாள் நீங்கள் சிரஞ்சீவியாகியே தீர வேண்டும் At one day, you have to attain the kingdom

வாழ்க்கை எனும் போர்க்களமே நீங்கள் ஞானமடைவதற்குத்தான் Life is a battle field for enlightenment

உங்களின் வாழ்க்கை முடிவை நோக்கிச் செல்லவில்லை. ஒரு முடிவிலிருந்துதான் துவங்குகிறது Your life does not move towards a goal, it starts from a goal

உலகத்தின் மிக நீண்ட காவியம்... உங்கள் வாழ்க்கைதான் The longest epic in this world, is your life

நம்முடைய வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு Our parantal conditioning

என்னுடைய பீஷ்மரை வென்ற சுவையான அனுபவம்... The sweet incident that destroyed my Bheesma

மரணத்திற்குப் பின்னால் மற்றொரு நாடகம் Behind the screen of Death another drama

செத்த பிணத்தின் சொத்தை, சாகப் போகும் பிணங்கள் பங்கிடுதல் The living corpses dividing the dead corpse's wealth

பார்வையாளனாக இருந்து பார்த்தால் போதும் Beeing a seer and witnesser is enough

வளர்ப்புக் கூட்டிலிருந்து விடுபடுத்தும் சத்தியம்தான் சிகண்டி Sikandi the truth which liberates you from your growth shell the truth

ஞானமடையாத குருவால், உங்களுக்கு ஞானத்திற்கு வழிகாட்ட முடியாது The unenlightened master cannot be show the way for enlightenment

தற்காலிக உத்வேகத்தைத் தருபவரே துரோணாச்சாரியார் Dronacharya, who gives temporary inspiration

கர்ண மோட்சம் Karna moksha

தார்மீக கட்டுறு மனப்பாங்கும் தாண்டப்பட வேண்டும் The dharmic conditioning called morality has to be overcome

உங்களுடனே இருக்கும் சகுனிதான் உங்களுடைய பட்டறிவு The intellect that remains with you is what is sakuni

அகங்காரத்தைத் தனியாக அழிக்க முடியாது The Ego cannot to be destroyed alone

உங்களின் வெற்றி ஏற்கனவே திட்டமிடப்பட்டு விட்டது Your success has already been determined

ஞானத்திற்கான திட்டம் Strategy planning for enlightenment

இலட்சிய தியானம் Lacshya Dhyanam

வாழ்க்கையின் லட்சியம் ஞானமடைதல்

இந்தக் கட்டுரையின் தலைப்பு, ‘வாழ்வின் லட்சியம் ஞானமடைதல்’. முதலில் இதன் தலைப்பை, ‘வாழ்வின் மிக உயர்ந்த லட்சியம் ஞானமடைதல்’ என்று கொடுத்திருந்தோம்.

அதில் கூட ஒரு வார்த்தை அதிகமாக இணைந்து விட்டது. ‘உயர்ந்த’ என்ற வார்த்தையே தேவையில்லை.

“வாழ்க்கையின் லட்சியமே ஞானமடைதல்தான்.”

எத்தனை லட்சியங்கள் நம்மால் உணரப்பட்டாலும், அது ஞானமடைதல் என்ற லட்சியத்தின் வேறு வேறு பெயர்கள்தான்.

அதிகப் பணம் வேண்டும் என்று நினைப்போம், அதிக உறவுகள் வேண்டும் என்றெல்லாம் நினைப்போம். இவை எல்லாவற்றையும் பார்த்தீர்கள் என்றால், உங்களுடைய எல்லையை விரித்துக் கொள்வதற்கான முயற்சியே தவிர வேறொன்றுமில்லை.

பணம்தான் லட்சியம் என்று நினைக்கிறவர்கள் கூட, அறிந்தோ அறியாமலோ, ஞானத்தைத்தான் தேடுகிறார்கள்.

அதாவது, பணம் அதிகமாக இருந்ததென்றால், உங்களின் வாழ்க்கையில் விரும்பியதைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் அதிகமாகும். எந்தக் கஷ்டம் வேண்டுமோ, அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு, பணம் அதிகமாகும்போது உண்டு. பணம் அதிகமாக இல்லாவிட்டால் அந்த வாய்ப்பு கிடையாது. வருகிற கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியது தான்.

இந்தக் காரில் சென்று கஷ்டத்தோடு இருக்கலாமா இல்லை, அந்தக் காரில் சென்று கஷ்டத்தோடு இருக்கலாமா என்று என்ன வேண்டுமோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

எத்தனை
லட்சியங்கள் நம்மால்
உணரப்பட்டாலும் அது
ஞானமடைதல் என்ற
லட்சியத்தின் வேறு
வேறு பெயர்கள்தான்.

இந்த வாழ்க்கையில் பணம், புகழ் இந்த இரண்டு மட்டும்தான் பெரும்பாலானவர்களின் குறிக்கோளாகவும், லட்சியமாகவும் இருக்கிறது.

பேர், புகழ் சேர்ப்பதாலும், அதிகமான உறவுகளைச் சேர்ப்பதாலும், என்ன அனுபவத்தைப் பெறப் போவதாக நினைக்கிறீர்களோ, அதை ஆழ்ந்து பார்த்தீர்கள் என்றால், அவை எல்லாவற்றையுமே ஞானத்தை அடைந்தால் மட்டுமே ஒருவரால் அடைய முடியும். அனுபவிக்க முடியும்.

இப்போது பணம் வந்தால், உங்களுடைய எல்லை விரிவடையும் என்று நினைக்கிறீர்கள்.

உறவுகள் அதிகமாக இருந்தால், உங்களுடைய எல்லை விரியும் என்று நினைக்கிறீர்கள்.

எதுவாகயிருந்தாலும், உங்கள் வாழ்கையின் லட்சியமானது உங்களை விரிவுபடுத்திக் கொள்ளும் முயற்சியாகவே இருக்கிறது.

எல்லையில்லா, வரம்பில்லா உச்சநிலையை அடையத்தான் எங்கெங்கோ, தேடுகிறீர்கள்.

ஆனால், அதெல்லாம் அங்கே கிடைக்காது. அதாவது, எதையெல்லாம் உங்களின் வாழ்வினுடைய இலட்சியமாகக் கொண்டு தேடுகின்றீர்களோ அங்கே அது கிடைக்காது. ஜீவன் முக்தியடைந்தால் மட்டுமே உங்களுக்கு அது கிடைக்கும் என்பது ஏனோ பலருக்கும் தெரிவதே இல்லை.

இந்த மாயம்தான் வாழ்வு எனும் விளையாட்டை சுவாரஸ்யமாக்கி விடுகிறது. சரியான பொருளை தவறான கடைகளில் தேடுவதிலேயே காலம் கழிந்து விடுகிறது.

இது புத்திசாலிகள் செய்யும் செயல் அல்ல.