கேள்வி - பதில்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
★ என் ஜாதகத்தில் எனக்கு பிரம்மச்சரியம்தான் வாழ்க்கை என்றிருக்கிறது. அதிலிருந்து 2 வருடங்களாக சன்யாசத்திற்காகத் தீவிரப் பயிற்சி செய்கிறேன். ஆனாலும், மனம் கட்டுப்படவில்லை. இப்போது நான் எந்த வாழ்க்கையை தேர்ந்தெடுப்பது? சன்யாசமா, சம்சாரமா?
உடலைக் கட்டுப்படுத்துவதனால் பிரம்மச்சரியம் நடக்குமா?
என்றால் நடக்காது.
உடலை மாற்றுவதனால் நடக்காது. உணர்வை உயர்த்துவதினால் நடக்கும்.
உணர்வை உயர்த்துவதினால் மட்டும்தான் பிரம்மச்சரியம் நடக்கும். இந்த உண்மை புரிந்தது என்றால், உடலைக் கட்டுப்படுத்த முயற்சி செய்ய மாட்டீர்கள். உணர்வை உயர்த்த முயற்சி செய்வீர்கள்.
ஆன்மீக சாதகர்கள் மத்தியில் இருக்கிற மிகப்பெரிய குழப்பம், சன்யாஸமா, சம்சாரமா என்பதுதான்!
இந்தக் கேள்விக்கு ஒரே தீர்வு என்னவென்றால், நம்முடைய பயோமெமரியை (Bio memory) ஆழ்ந்து ஆராய வேண்டும். பயோ மெமரி என்றால், நம்முடைய பிராரப்தம்.
இந்தக் கேள்விகளுக்கு நேரடியான தீர்வு, எந்தக் கர்மங்களால் இந்த உடலை உருவாக்கி இருக்கிறோம் என்பதைப் பொறுத்தது. இது ஆழ்ந்து தெரிந்து கொள்ள வேண்டிய ச த்தியம் இது.
உங்களுக்குள்ளே இரண்டு விஷயங்கள் இருக்கிறது.
முதல் விஷயம்:
நீங்கள் எடுத்துக்கொண்டு வந்த கர்மங்கள்.
இரண்டாவது விஷயம்:
அதை வாழுகிற உங்களுடைய மனம். உங்களின் தனி மனித விழிப்புணர்வு (Individual consciousness).
உங்கள் தனிப்பட்ட மனம், தனி உணர்வு, நீங்கள் கொண்டு வந்து இருக்கிற பிராரப்தத்தைவிட பலம் வாய்ந்ததாக இருந்தால், பிரம்மச்சரியம்தான் வாழ்க்கை.
அப்போது உங்களுக்கு அது போன்ற இனிமையான சொர்க்கம் வேறு எதுவும் கிடையாது.
நீங்கள் எடுத்து வந்திருக்கும் பிராரப்தம், உங்களுடைய தனி உணர்வை விட ஆழமாக, பலம் வாய்ந்ததாக இருக்குமானால்... உங்களுக்கு சம்சாரம் தான் வாழ்க்கை. சம்சார பிராரப்தம் என்றால், வேறு ஒன்றுமில்லை. நீங்கள் எடுத்த பிரம்மச்சரிய தீக்ஷையின்படி, மனம் வேறு எந்தப் பக்கமும் அசையாமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் பொழுதே, சம்சார பிராரப்தம் எழுந்திருந்து “ஏ! சும்மா இரு, நான் இருக்கிறேன் பார்,” என்று தன் இருப்பைக் காட்டும். பிராரப்தத்தின் பலம், உங்கள் தனி உணர்வின் பலத்தைவிட அதிகமாக இருக்குமானால் சம்சாரம்தான் வழி.
சன்யாசமா, சம்சாரமா என்று மிகப்பெரிய குழப்பம் ஏன் வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
தன்னால் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கும் தெளிவு இல்லாதபோதெல்லாம், இந்த குழப்பம் எழும்.
எந்த வாழ்க்கை வேண்டும் என்கிற தெளிவு, இரண்டு வாழ்க்கையைப் பற்றியும் தெரியும்போதுதான் பிறக்கும். முதலில் பிரம்மச்சரிய வாழ்க்கையைப் பார்த்தோமென்றால், அதிலிருக்கும் சுதந்திரமும் ஆனந்தமும் பிரம்மச்சரிய வாழ்க்கைக்குள் நுழையலாம் எனும் உத்வேகத்தைத் தரும்.
எல்லையில்லா சுதந்திரத்தால் வேறு ஒருவருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை; ஒருவருக்கும் கட்டுப் பட வேண்டிய அவசியம் இல்லை என்ற விடுதலை உணர்வு, சுதந்திர உணர்வு பிறக்கும். சுதந்திர உணர்வால் பிரச்சினை பிறப்பதில்லை.
திருமண வாழ்க்கையைப் பார்த்தீர்களானால், இரண்டு பேருமே நல்லவர்கள். கணவன் மனைவி இரண்டுபேருமே, நல்லவர்களாக இருப்பார்கள்.
தனித்தனியாக இருக்கும்போது மண்ணும் நல்லது, நீரும் நல்லது. குடிப்பதற்கு ரொம்ப நல்லது.
ஆகாயத்தில் இருந்து பொழிகிற நீர், தூய்மையான மழை நீர். மண்ணும் மிக நல்லது. விளைப்பொருட்களை, பல பொருட்களை விளைவிக்கிறது. ஆனால் இது இரண்டு சேரும் பொழுது சேறாக மாறிவிடும்.
அதுபோல்தான், தனித்தனியாக இருக்கும் இரண்டு பேரும் தங்கள் சுதந்திரத்தை விட்டுவிட்டுச் சேரும் பொழுது பிரச்சனை துவங்குகிறது.
தனி மனிதர்களாக இருக்கும் பொழுது, இருவருக்குமே பெரிய சுதந்திரம் இருக்கிறது.
இந்தச் சுதந்திரத்தை அனுபவிப்பதற்காகவே பலருக்கும் பிரம்மச்சரிய வாழ்க்கையைப் பார்த்து, உள்ளுக்குள் ஒரு ஆசை எழுகிறது, ஒரு பொறாமை எழுகிறது.
உண்மையை உள்ளவாறு சொல்ல வேண்டுமென்றால்... திருமணமாகி, ஐந்து வருடங்கள் வாழ்ந்திருந்தீர்களென்றால் போதும். உங்களுக்கு இந்த உண்மை சட்டென புரிந்துவிடும் எப்பேர்ப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து இருந்தாலும்...
> இருபத்தியொரு நாட்கள்
> உங்களுடைய உடலும்,
> உணர்வும், உணர்வும்
> இன்னொரு உடலைத்
> தேடாத, நிலைக்கு
> எடுத்துக்கொண்டு போகிற
> பயிற்சியைத்தான்,
> பூர்ணாபிஷேகம் என்று
> சொல்கிறோம்,
'கொஞ்சம் யோசித்துத்தான் இருந்திருக்கலாம்போலிருக்கிறது. கொஞ்சம் தவறிவிட்டது. பெரிய ரிஸ்க் எடுத்து விட்டோம்,' என்று தம் சுதந்திரத்தை இழந்துவிட்டதாக எப்பொழுதாவது எண்ணத் தோன்றும்.
பலர் தங்கள் நிலையை வெளியில் சொல்ல
முடியவில்லை என்றாலும் இப்படித்தான்
வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அவர்கள் வாழ்க்கையில் அடைந்திருக்கும்
பொருளுக்கும், அதற்காக இழந்த பொருளுக்கும்
இடையே மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது.
'ஐந்து ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளைக் கொடுத்து, ஐம்பது பைசா மதிப்புள்ள பொருளை வாங்கி இருக்கிறோமோ?' என்று திடீரென்று உதித்த உதயம் போன்று, சிலருக்குப் பல நேரங்களில் தோன்றும். இப்படி ஒரு குழு இருக்கிறார்கள்.
இன்னொரு குழு, பிரம்மச்சரியம் விரதம் எடுத்துவிட்டு, அதனோடு போராடிக் கொண்டிருக்கிறது. அவர்கள் போராடிக் கொண்டிருக்கிற கூத்தைப் பார்த்தீர்கள் என்றால், அவர்களுக்கு இல்லற வாழ்க்கை அக்கரைப் பச்சை மாதிரி தெரியும்.
இக்கரைக்கு அக்கரை பச்சையாகவே தெரியும்.
பிரம்மச்சரியம் எடுத்துவிட்டு, இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்று குழம்புபவர்களும் இருக்கிறார்கள். சம்ஸார வாழ்க்கையை வாழ்ந்து விட்டு, அதேபோல் குழம்புபவர்களும் இருக்கிறார்கள்.
இதில் யார் தவறு செய்கிறார்கள்? இது பெரிய குழப்பமாகவே இருக்கிறதே!
இதில் எது சரி என்று எப்படித் தெரிந்து கொள்வது என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு.
என்ன முடிவு எடுப்பது, எப்படி முடிவு எடுப்பது என்ற சந்தேகத்திற்கு எளிமையான தீர்வு இது.
உட்கார்ந்து உங்களுக்குள்ளே, நீங்களே பாருங்கள். தீர்வு பிறக்கும்.
நீங்கள் எடுத்து வந்த பிராரப்தம், உங்கள் தனி உணர்வை விட பலமானதாக இருந்தால், பிராரப்தம் கழியட்டும் என்று விட்டுவிடுவதுதான் நல்லது.
ஆனால், உங்களின் தனி உணர்வு, உங்கள் பிராரப்தத்தை விட பலம் வாய்ந்ததாக ஆகிவிடுமானால், அப்போது கவலையேபட வேண்டாம், தைரியமாக பிரம்மச்சரிய வாழ்க்கைக்குள்ளே நுழையலாம்.
ஒரு இருபத்தொரு நாட்களாவது, கனவிலும் மனம் இன்னொரு துணையைத் தேடாமல், உங்களுக்குள்ளேயே திருப்தியோடு இருக்க முடியுமானால், அப்பொழுது உங்களுடைய

தனி உணர்வு பிராரப்தத்தை விட பலம் வாய்ந்தது என்று தெரிந்து கொள்ளலாம்.
அப்பொழுது பிரம்மச்சரிய வாழ்க்கைக்கு நீங்கள் முழுமையான தகுதியுடையவர்.
உடலாலும், உணர்வாலும் இருபத்தியொரு நாட்கள் மட்டும் இன்னொரு துணையைத் தேடாமல், ஒரு மனிதனால் இருக்க முடியுமானால், அவர் பிரம்மச்சரிய வாழ்க்கைக்குள்ளே நுழையலாம்.
அப்போது உங்களால் உடலாலும் பிரம்மச்சரிய உணர்வோடு இருக்க முடியும். மனத்தாலும் அதே உணர்வோடு இருக்க முடியும். கனவிலும் அதே உணர்வோடு இருக்க முடியும்.
இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம், உடலால் இன்னொரு துணையைத் தேடாமல், தன்னைத் தானே அடக்கிவிட முடியும். ஆனால், யாராலும் கனவை அடக்க முடியாது.
இருபத்தியொரு நாட்கள், உடலும், உணர்வும் அதுபோன்று தனி உணர்வோடு, அமைதியாக தனக்குள்ளேயே இல்லை என்றால், அப்பொழுது உங்களுடைய பிராரப்தம், உங்கள் தனி உணர்வை விட பலம் வாய்ந்தது என்று அர்த்தம்.
அப்பொழுது நீங்கள் கிரஹஸ்த வாழ்க்கைக்குள் சென்று பிராரப்தத்தைத் தேய்ப்பதன் மூலமாக, உங்களை மெது மெதுவாகச் சூட்சுமமாக மாற்றிக் கொள்வதன் மூலமாகத்தான், அந்தப் பிரம்மச்சரியம் எனும் மிக உயர்ந்த நிலைக்குள்ளே உங்களால் நிறைய முடியும், கலக்க முடியும்.
இதைக்கண்டு பிடிப்பதற்காக செய்யப்படும் நுட்பம் பூர்ணாபிஷேகம். இதை யார் வேண்டுமானாலும், முயற்சி செய்து பார்க்கலாம்.
இருபத்தியொரு நாட்கள் உங்களுடைய உடலும், உணர்வும் இன்னொரு உடலைத் தேடாத நிலைக்கு எடுத்துக் கொண்டு போகிற பயிற்சியைத்தான் பூர்ணாபிஷேகம் என்று சொல்கிறோம்.
இதே பயிற்சியை ஒன்பது மாதங்களும் செய்யலாம்.
ஒன்பது மாதங்கள் உங்கள் பிராரப்தத்தின் வேகத்தை அழிப்பது, பிராரப்தத்தின் வேகத்தைக் கரைப்பதுதான் பூர்ணாபிஷேகம். இந்த முயற்சி உங்களின் கேள்விக்குப் பதிலைத்தரும்.
✦ ஞானத்திற்கு, பிரம்மச்சரியம்தான் தீர்வு என்று ராமகிருஷ்ணர் சொல்கிறார். ஓஷோவோ சத்தியமாக இல்லை என்று சொல்கிறார். அவர்கள் சொல்லும் பாதையில் எது என் பாதை என்று எப்படித் தெரிந்துகொள்வது?
இன்றைய காலக்கட்டத்தில் ஆன்மீக சாதகர்கள் மத்தியிலே இருக்கும் பெரிய குழப்பம்...
ஓஷோவிற்கும் இராமகிருஷ்ணருக்கும் நடுவில் இருக்கும் பெரிய குழப்பம். ராமகிருஷ்ண பரமஹம்ஸருடைய அமுத மொழிகளில் வார்த்தைக்கு வார்த்தை காமினி காஞ்சனத்தியாகம். என்று சொல்கிறார்.
ஓஷோவோ, "பிரம்directory|மச்சரியமே சாத்தியம் இல்லை," என்கிறார். எவ்வளவு வேண்டுமானாலும் முயற்சி செய்து பார்த்துக்கொள், பிரம்மச்சரியம் சாத்தியமே இல்லை என்கிறார்.
உண்மையில், பிரம்மச்சர்யம் நம்மைக் கடவுள் நிலைக்கு உயர்த்திவிடும். பிரம்மச்ச ர்யம் என்பது வாழும் வாழ்க்கைமுறை, அது ஒரு வாழும் நிலை. உங்கள் உடலையும் உணர்வையும் எப்படி அமைத்திருக்கிறீர்கள் என்பதை பொறுத்து முடிவாகும். அதை நிர்ணயிப்பது பிராரப்தம்.
பிராரப்தம் என்றால், இந்த உடலை அமைக்கும் பொழுதே எடுத்து வரும் கர்ம வினைகள். குறிப்பிட்ட அளவு காமம், குறிப்பிட்ட அளவு கோபம், குறிப்பிட்ட அளவு பயம் இதெல்லாம் கலந்துதான் இந்த உடலை அமைக்கிறீர்கள்.
அப்படி எதையுமே கலக்காமல், உடலை அமைத்தவர்களைத்தான், 'சுத்த சத்வ சரீர அவதார புருஷர்கள்' என்று சொல்வோம்.
ஆனால், சாதாரண மனிதர்கள் என்ன செய்கிறார்கள்?
கொஞ்சம் காமம்,கொஞ்சம் பயம், கொஞ்சம் கவலை, கொஞ்சம் கவனத்தேவை, கொஞ்சம் பொறாமை, கொஞ்சம் அகங்காரம், கொஞ்சம் அதிருப்தி என்ற இந்த ஏழு உணர்வுகளையும் கலந்துதான் உடலைச் செய்வார்கள்.
அப்பொழுதுதான் அவர்களுடைய உடல் ஓடும். அதிருப்தி இருந்தால்தான், எதையாவது ஒன்றை செய்துகொண்டே இருக்க முடியும். காமம் இருந்தால்தான், இன்னொரு உடலைத் தேடி நாடும். பயம் இருந்தால்தான் தன்னை காத்துக் கொள்ளும். கவலை இருந்தால்தான், தயங்காமல் ஓடிக்கொண்டே இருக்கும், எதையாவது திட்டம் தீட்டும். அன்புத் தேவை இருந்தால்தான், மற்றவர்களுடன் இணைந்து வாழும்.
இந்த மாதிரி குணங்கள் இருந்தால்தான், சமுதாயத்தில் வாழ முடியும் என்பதனால்தான், இதையெல்லாம் சேர்த்து, சேர்த்துதான் உடலை அமைப்பீர்கள்.
எந்தப் பிராரப்தத்தாலே உடலை அமைத்தீர்கள், காமத்தை அள்ளி வைத்தீர்களா இல்லை கிள்ளி வைத்தீர்களா என்பதை நீங்கள்தான் கண்டுபிடித்தாக வேண்டும்.
சில நேரத்தில் காமத்தைக் கிள்ளி வைத்து உடலைச் செய்திருப்பீர்கள். சில நேரத்தில் அள்ளி வைத்தும் உடலைச் செய்திருப்பீர்கள்.
எப்படி உங்கள் உடலைச் செய்திருக்கின்றீர்கள் என்று கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால், பிரம்மச்சரியமா, சன்யாசமா என்பதை இன்னொருவர் சொல்ல வேண்டியதில்லை, நீ ங்களே முடிவு செய்யலாம்.
ஆழமாகப் பார்த்தால் புத்திசாலித்தனத்தோடு தைத்ரியரேஜஸை, ஊர்த்துவரேஜஸாக மாற்ற முடிவெடுக்கும் ஒவ்வொருவராலும் அது முடியும்.
சக்தியை மேல் நோக்கி திருப்புவதை
தீக்ஷையின் உதவியோடு நிச்சயம்
சாத்தியமாக்கலாம்.
தனி மனிதனாய்ச் செய்வதற்கு அச
காய சாதனையாகத் தெரியும் உணர்வு
மலர்ச்சியை, தீக்ஷையின் உதவியோடு
நிச்சயம் சாத்தியமாக்கலாம்.
ராமகிருஷ்ணரின் சாத்யம் என்பது, தீக்ஷையின் கோணத்திலிருந்து விளக்கப் படும் சத்யம். ஓஷோவின் சாத்யமே இல்லை என்பது, தனி மனித முயற்சியின் கோணத்திலிருந்து விளக்கப்படும் சத்யம். தீக்ஷையையும், தனிமனித முயற்சியையும் ஒன்றாய்ச் சேர்க்கும் போது, பிரபஞ்ச சக்தியின் பொங்கும் பிரவாகமாக, பிரம்மச்சரிய நிலையில் வாழ்வது என்பது எல்லோருக்கும் சாத்தியமான சத்தியம்.
> 'பிராரப்தம் என்றால், இந்த உடலை
> அமைக்கும் பொழுதே எடுத்து
> வரும் கர்ம வினைகள். குறிப்பிட்ட
> அளவு காமம், குறிப்பிட்ட அளவு
> கோபம், குறிப்பிட்ட அளவு பயம்
> இதெல்லாம் கலந்துதான் இந்த
> உடலை அமைக்கிறீர்கள். அப்படி
> எதையுமே கலக்காமல், உடலை
> அமைத்தவர்களைத்தான்,
> 'சுத்த சத்வ சரீர அவதார புருஷர்கள்'
> என்று சொல்வோம்.
- திருமணத்திற்குப் பிறகு... ஏன்தான் திருமணம் செய்துகொண்டோம் என்றிருக்கிறது. வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது. குழப்பமாக இருக்கிறது. இதனால் குடும்பத்திலும் பிரச்சினை புதிது புதிதாக வெடித்துக் கொண்டே இருக்கிறது என்ன செய்வது?
சன்யாசியாகப் போக வேண்டிய ஒரு மனிதர், தெரியாத்தனமாகச் சம்சாரியாக போனார் என்றால், அதற்குப் பிறகு அவர் அவருக்கே செய்கிற கொடுமைகளும், அவருடைய மனைவிக்கு செய்கிற கொடுமைகளும் கொஞ்சம் நஞ்சமாக இருக்காது.
காரணம் என்னவென்றால், இந்த மனிதருக்கு அந்த வாழ்க்கை மேல் அவ்வளவு ஒரு ஆழமான திருப்தி இருக்காது. அப்போது அவர் என்ன செய்வார்?
'எதற்குத்தான் இவள் என் பிராணனை வாங்குகிறாள்? எதற்குதான் என்னை இந்தப் பாடுபடுத்துகிறாளோ?' என்று வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயமுமே கசக்கும்.
அதே போல் சம்சாரியாகப் போக வேண்டிய ஆழமான பிராரப்தம் உடைய ஆள், திடீரென்று ஒருநாள் ஆஸ்ரமத்திற்கு வந்து பார்த்து, இவ்வளவு சன்யாஸிகள் ஆனந்தமாக இருப்பதைப் பார்த்து, பிரம்மச்சரிய வாழ்க்கை மேல் ஆசை வந்து, சம்சார ஆசையை துறந்து இந்த வாழ்க்கைக்குள்ளே நுழைந்து விட்டார்கள் என்றால்..!!!'
அவரையும், அவரைச் சுற்றி இருக்கிற சமூகத்தையும் அவர் படுத்துகிற பாடு இருக்கு பாருங்கள்... இந்தக் கொடுமையும் தாங்காது. பாவம், அவர் திருட்டுத்தனமாக எல்லா வேலையையும் செய்ய வேண்டி இருக்கும். அந்த முடிவால் தன் மேல் தனக்கே இருக்கிற மரியாதை குறைந்துகொண்டே வரும்.
நான் எப்போதுமே இதைத்தான் சொல்வேன். என்னுடைய பிரம்மச்சாரிகளிடம் அப்பா, தெளிவாக முடிவு எடுத்து, பிரம்மச்சரியமா, கிரஹஸ்தமா என்று முடிவு செய்யுங்கள். ஏனென்றால், என்னுடன் இருக்க வேண்டும் என்ற ஆசையினால் முடிவெடுக்காதீர்கள். இது ஆஸ்ரம வாழ்க்கை, வாழ்க்கையில் சந்திக்கும் சராசரி கஷ்டங்கள் இங்கு இருக்காது. ரொம்ப சுகபோக வாழ்க்கை, வெளியில் இருக்கிறார் போன்று நிறைய கஷ்டம் இருக்காது.
இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? கேஸ் விலை ஏறினால் என்ன? டெலிபோன் பில் ஏறினால் என்ன? பெட்ரால் விலை ஏறினால் என்ன? பெட்ரோல் ஊற்றுகிற வண்டியின் விலையே ஏறினால்தான் என்ன? என்ற கவலைகளே இல்லாத வாழ்க்கை.
வெளியுலகக் கஷ்டங்களே இல்லாத வாழ்க்கை. இந்த வாழ்க்கைக்காக, சன்யாஸ விரதம் எடுத்தால் என்ன செய்ய வேண்டி இருக்கும்?
வெளியுலக கஷ்டங்களின்றி வாழ்ந்தாலும், அவர்களுடன் அவர்களே கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்பார்கள். அவர்களுக்குள்ளேயே அவர்கள் போட்டுக் கொள்ளுகிற ச ண்டையால், ரகசியமாக, திருட்டுத்தனமாக, அவர்களுடைய தேவையைப் பூர்த்திச் செய்ய மனம் திட்டமிடத் துவங்கும். அப்பொழுது என்னவாகும்? தம் மேலேயே நம்பிக்கையும், மரியாதையும் இருக்காது. அதுதான் இருப்பதிலேயே கொடுமையான நரகம்.
கொடுமையான நரகம் என்னவென்றால், தாம் எடுத்த வாழ்க்கையின் மீது, தனக்கு நம்பிக்கை இல்லாமல் வாழ்வதுதான். தாம் எடுத்த வாழ்க்கை, தமக்கு முழுமை அளிக்கும் என்கிற தெளிவு இல்லாமல் வாழ்வதுதான் மிகப்பெரிய கொடுமை.
அதனால்தான் நான், யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் பிரம்மச்சரியம் கொடுப்பதே இல்லை. பூர்ணாபிஷேக விரதத்திலே வாழ வைத்து, அவர்களே அவர்களைப் பார்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு கொடுக்கிறேன். அவர்களின் பிராரப்தத்தைத் தெரிந்து கொண்டு, அவர்களுக்குத் தேவையான வாழ்க்கையை அவர்களே தேர்ந்தெடுக்கத் தேவையான தெளிவையும் தருகிறேன்.
திருமணத்திற்கு பின், ஏன்தான் திருமணம்
செய்து கொண்டோமோ? என யோசிப்பதும்,
சன்நியாஸத்திற்கு பின் ஏன்தான் சன்யாஸம்
எடுத்துக் கொண்டோமோ என யோசிப்பதும்
மிகவும் கொடுமையான சம்பவங்கள்.
திருமணமாக வேண்டியவர் சன்யாசியாகக் கூடாது;
பிரபஞ்ச சக்தியின்
பொங்கும் பிரவாகமாக,
பிரம்மச்சரிய நிலையில்
வாழ்வது என்பது
எல்லோருக்கும்
சாத்தியமான சத்தியம்.
சன்யாசியாக வேண்டியவர் திருமணம் செய்துகொள்ள கூடாது.
இதையெல்லாம் தாண்டி... அடையலாமா, வேண்டாமா என்ற உங்களின் சுயமுடிவுதான் நீங்கள் எடுக்கும் முடிவு, அது ஒன்றே திருமணமாக இருந்தாலும், துறவறமாக இருந்தாலும் அதை முழுமையாய் வாழ்ந்து தாண்ட வைக்கும். குண்டலினி சக்தி உடல் முழுவதும் பாயாவிட்டால், உருத்துப்போன மூங்கிலாய்த்தான் வாழ்வு இருக்கும்.
நடைபிணமாய்த்தான் வாழ்வு இருக்கும். நடக்கக் கூடிய அளவுக்கு சக்தி படைத்தவர் யாராயிருந்தாலும், அவரால் தம்முள் இருக்கும் குண்டலினி சக்தியை எழுப்ப முடியும். தேவதை உடலுக்குள் புகுந்து கொண்டால் எப்படியிருக்குமோ, அதைவிட ஆனந்தமான நிலையை ஒவ்வொரு நிமிடமும் வாழமுடியும். விதியை நிச்சயம் வெல்ல முடியும்.
★நான் இதுவரை, பல சன்யாஸிகளையும் பிரம்மச்சாரிகளையும் கண்டிருக்கிறேன். அதில் பெரும்பாலானோர் சிரிப்பின்றி இருக்கிறார்கள். ஆனால், உங்களுடைய பிரம்மச்சாரிகள், சிரித்தபடி ஆனந்தமாக இருக்கிறார்களே, இந்த வித்தியாசத்தின் காரணம் என்ன?
இந்தக் கேள்வி எப்படி இருக்கிறது என்றால், "நான் பல தோட்டம் சுற்றி இருக்கிறேன், வெறும் தரிசாகவும், முள் மரங்களாகவும்தான் வளர்ந்துகிடக்கிறது, உங்கள் தோட்டத்தில் மட்டும், இவ்வளவு மலர்கள் மலர்ந்து இருக்கிறதே காரணம் என்ன?" என்று கேட்பது போல் உள்ளது.
காரணம் தோட்டக்காரர்.
தோட்டம் அமைக்கும் நுட்பம் தெரிந்த தோட்டக்காரர். அதுதான் வேறு ஒன்றுமில்லை.
அவர்களுக்குப் பிரம்மச்சரியத்திற்கான நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.
பிரம்மச்சரியம் என்பது அருமையான தியான நுட்பம்.
செடிகளுக்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தினால், தானாகவே மலரும்.
தானாகவே மலரச் செய்யலாம்.
பூவை எப்படி மலரச் செய்வதென்று, நான்கைந்து பேர் அடித்துக்கொண்டு, மாய்ந்துகொண்டு இருந்தால்... "அவன் தோட்டத்தில் மட்டும் பூத்து இருக்கிறதே, நம் தோட்டத்திலே, பூ ஏன் பூக்கவில்லை?" என்று பரபரவென்று தரையைத் தோண்டிக் கொண்டிருந்தால் நடக்குமா ?
அது நடக்காது.
அதற்கான சூழலை உருவாக்க வேண்டும்.
வெறும் காவி போட்டாலோ, விபூதி பூசினாலோ, பிரம்மச்சரியம் வந்து விடாது. அதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும்.
அதற்கான நுட்பம் உருவாக்கப்பட வேண்டும்.
அதாவது, அவர்களுக்குத் தேவை என்ன என்று, அவர்களுக்குப் புரிகிற மொழியில் சொல்லப்பட வேண்டும்.
அதனுடைய லாப நஷ்டங்களை அவர்களே புரிந்து பார்க்கிற சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். ரொம்ப அழகாக, விவேகானந்தர் சொல்வார்,
‘Freedom is the basic condition for any Growth’
சுதந்திரம்தான் எந்த வளர்ச்சிக்குமான அடிப்படையான ஒரு தேவை. என்னுடைய பிரம்மச்சாரிகளுக்கு, நான் கொடுத்திருக்கிற மிகப்பெரும் சுதந்திரம், எப்பொழுது வேண்டுமானாலும், பிரம்மச்சரியத்தைக் கீழே போட்டுவிட்டு கல்யாணம் செய்து கொள்ளலாம். அந்த சுதந்திரத்தினால்தான், அவர்களால் பிரம்மச்சரியத்தில் மலர முடிகிறது.
சன்யாஸம் எடுத்தபிறகு திருமணம் செய்துகொள்ள முடியாது. அதனால்தான் அவர்கள் ஐந்து வருடமாவது தங்களுக்குள் ஆழ்ந்து பார்க்க சுதந்திரம் தந்து, அதற்குப் பிறகு ச ன்யாஸ பயிற்சியைத் துவங்குவோம்.
முதல் விஷயம் சுதந்திரமான உணர்வு.
வேறு எந்தக் காரணத்திற்காகவும் பிரம்மச்சரியம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற உணர்வுத்தெளிவு பிறக்க வேண்டும்.
அழுத்தப்படாத ஒரு சுதந்திரம் இருக்கும் பொழுது, அந்த விரதத்தை எடுத்துக்கொள்கிற தெளிவே, அதைக் காப்பாற்றுகிற சிரத்தையாக மாறிவிடும்.
அதிர்ஷ்டவசமாக என்னுடைய சன்யாஸிகள், ஞானத்துக்கு சன்யாஸம் போனவர்கள்; பீடத்துக்கு சன்யாஸம் போனவர்கள் அல்ல.
நான் எப்போதும் சொல்லுவதுண்டு. யாருக்காவது, இந்தப் பிரம்மச்சரியம் பற்றி ஏதாவது பிரச்சினை வந்தால், முதலில், நான் கேட்கும் கேள்வி இதுதான்... “அப்பா, திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால், அருமையாகச் செய்துகொள். அதற்காக வெளியில் போக வேண்டும் என்கிற அவசியம்கூட இல்லை, வேறு எந்தக் காரணத்திற்காகவும், பிரம்மச்சரிய விரதம் எடுக்கக்கூடாது. பிரம்மச்சரிய விரதம் எதற்காக எடுக்கவேண்டும் என்றால் இயல்பாக, ‘இது நன்றாகத் தானே இருக்கிறது. இப்படியே இருக்கலாம்’ என்ற இயல்பான முடிவாக இருக்கவேண்டும், அவ்வளவுதான்.
இரண்டாவது முறை பிரம்மச்சரியத்தைப் பற்றி யோசித்தால் கூட, அவருக்குப் பிரம்மச்சரியத்திற்கான தகுதி கிடையாது. அவருக்கு அந்த விரதம் தேவையில்லை. ஏனென்றால் இது ரிஸ்க் எடுக்கிற விஷயம் இல்லை.
என்னுடன் இருக்கவேண்டும் என்ற காரணத்திற்காகக்கூட பிரம்மச்சரியம் எடுக்கக்கூடாது. உனக்கே, அது பிடித்து இருந்தால் எடுத்துக்கொள். பிரம்மச்சரியம் எடுக்காவிட்டால், என்னை விட்டு போய்விட வேண்டுமோ என்று பயப்படத் தேவையில்லை.
ஆனால், விரதத்தை எடுத்தால் கடைப்பிடிக்க வேண்டும்,” என்று அவர்களின் சுதந்திர உணர்வு சற்றும் பாதிக்கப்படாமல் சொல்வதுண்டு.
உள்ளுலகிலும், வெளி உலகிலும், முழுமையாய்ச் சுதந்திரமாய் அவர்களை வளர்ப்பதினால்தான், அவ்வளவு ஆனந்தமாக இருக்கிறார்கள். இல்லாவிட்டால் இந்தக்காலத்தில் பிரம்மச்சாரிகளாகவும், பிரம்மச்சாரிணிகளாகவும் 13 மருத்துவர்கள், 40 என்ஜினியர்கள், 50 க்கும் மேற்பட்ட பட்டப் படிப்பு படித்தவர்கள் என 120 பேர் ஒரே இடத்தில் பிரம்மச்சரியம் எனும் வாழ்வை கொண்டாடிக்கொண்டு ஆனந்தமாக இருக்க முடியுமா?
எதையோ இழந்ததினால் இவர்கள் பிரம்மச்சரியம் பெறவில்லை.
எதனாலும் அழிக்கப்படாத உணர்வோடு ஒன்றியதால்தான் இவ்வளவு ஆனந்தமாய் இருக்கிறார்கள்.
குரு சக்தி
மூளையையே மாற்றும் சக்தி Energy which can modify the brain itself
மஹாஅவதார் பாபாஜி தந்த தீக்ஷை Initiation giving by Maha avatar Babaji
சத்குருவின் சாந்நித்யமே சக்தியைப் பொங்க வைக்கும் Energy bubble's master presence
ஆனந்த கந்த தீக்ஷை Ananda Gandha initiation
பிரம்மச்சரிய தீக்ஷை Brahmacharya initiation
வானப்பிரஸ்த தீக்ஷை Vanaprastha Deeksha
கிருகஸ்த தீக்ஷை Grihastha Deeksha
காயத்ரி தீக்ஷை Gayatri Deeksha
குரு சக்தி
உங்களுடன் மிகப் பெரிய உண்மையைப்
பகிர்ந்து கொள்கிறோம். இது உங்களுடைய
வளர்ச்சிக்குப் பேருதவியாக இருக்கும்.
கம்ப்யூட்டருக்குள் ஹார்டுவேர், சாப்ட்வேர் என்று இரண்டு பாகங்கள் உண்டு. அதைப் போல, மனிதருக்குள் இருக்கும் ஹார்டுவேர்தான் மூளை. சாப்ட்வேர்தான் மனம் உடல், மூளையின் இருப்பிடம். மூளை, மனத்தின் இருப்பிடம்

மனம் ஆரோக்கியமாகஆரோக்கியமாக மூளை ஆரோக்கியமாகும். மூளை ஆரோக்கியமாக ஆரோக்கியமாக உடல் ஆரோக்கியமாகும்.
உடலின் ஆரோக்கியம் குறையக் குறைய, மூளை மந்தமாகும். மூளை, மந்தமாக மந்தமாக மனம் சோர்வடைந்துவிடும்.
மனம். மூளை. உயிர் ஆகிய மூன்றும் முக்கோணத்திற்குச் சமம். அவை ஒவ்வொன்றும், ஒன்றையொன்று முழுமையாய்ச் சார்ந்து இயங்குபவை.
மனத்தின் இரண்டு முக்கியமான பகுதிகள்:
- உணர்வுள்ள மனம் (Conscious mind)
- உணர்வற்ற மனம் (Unconscious mind)
ஞானக்கருத்துகளைக் கேட்பதனாலும், ஞான உபதேசங்களைப் புரிந்து கடைபிடிப்பதனாலுமே உணர்வுள்ள மனத்தை மேலே எடுத்துவந்து விடலாம்.
புத்தியை அதிகரிப்பதாலேயே, உணர்வுள்ள மனத்தின் பிரச்சினைகளைச் சரி செய்து விடலாம். ஆனால், உணர்வற்ற மனத்தை மேலெடுத்து வருவது சுலபமான காரியமல்ல. அதற்கு நிறைய சக்தி தேவை. தியானத்தின் மூலமாகச் சக்தியை அதிகரித்தால் மட்டுமே, உணர்வற்ற மனத்தின் பிரச்சினைகளைச் சரி செய்யமுடியும்.
விழிப்பற்ற மனத்தின் ஆழ்மனப் பதிவுகளைச் சரிசெய்யும் அளவிற்கு சக்தியைப் பாய்ச்ச வேண்டும். மிகவும் சிரத்தையோடும், விடா முயற்சியோடும் தியானங்களைச் செய்துவந்தால் மட்டுமே ஒரு தனி மனிதனால் ஆழ்மனப்பதிவுகள் வரை சக்தியைப் பாய்ச்ச முடியும்.
விழிப்பு மனத்தை (conscoius mind) ஞானத்தாலும் விழிப்பற்ற மனத்தை (Unconscoius mind) தியானத்தாலும். சரி செய்து வருவதால் மனம் முழுவதும் சரியாகிவிடும்.
மனம் சரியாக, மூளை சரியாகும்.
மூளை சரியாக, உடல் சரியாகும்.
இது சுற்று வழி.
இன்னொரு எளிய வழி இருக்கிறது. அது நேரடியாக மூளையில் இறங்கி வேலை செய்வது.
மூளையையே மாற்றும் சக்தி
Energy which can modify the brain itself

ஒரு ஞானகுருவின் அருகாமையில் சீடனாக வாழும் பாக்கியம் கிடைக்கப் பெற்றவர்களுக்கு, இந்த எளிய வழி சாத்தியமாகும். குருவினால் அவருடைய ஞானசக்தியை நேரடியாக சீடனுக்குள் இறக்கிவைக்க முடியும்.
குருவின் மீது அலாதியான அன்புகொண்ட சீடனுக்குள் இந்த ரஸவாதத்தைக் குருவால் நிகழ்த்த முடியும். சீடனின் மூளை அமைப்பையே மாற்றிவிட முடியும்.
உடலினுடைய, கம்ப்யூட்டரின் ஹார்டுவேரான மூளையின் மேடு பள்ளங்களைக் (Brain grooves) கூட மாற்றிவிட முடியும்.
அந்த அருமையான ரஸவாதம் நிகழ்ந்துவிட்டால் அந்தச் சீடனின் செயல்கள் அனைத்தும் ஞான குருவின் உடல்மொழியைப் போலவே இனிமையான, நயமான, ஆனந்தமயமான உடலாக மாறிவிடும்.

ஏகப்பட்டப் புத்தகங்கள் படித்து, பல்வேறு தியானங்களைச் செய்து, அடைய வேண்டிய ஆனந்த நிலையை, இவை எதையுமே செய்யாமல் குருதீக்ஷை பெற்ற அந்தச் சீடனால் அடைந்து விட முடியும்.
நாம், விஞ்ஞான ரீதியாகவே இதை நிரூபிக்கலாம் என முடிவு செய்திருக்கிறோம்.
ஆனால், ஒரு சின்ன பிரச்சினை! Brain grooves இல் ஏற்படும் மாற்றங்களைப் படம் பிடிக்கும் அளவிற்கு Brain Scan இல் நுட்பங்கள் இன்னும் வளர வேண்டும்.
குருவின் சாந்நித்யத்தால் நேரடியாக மூளையில் மாற்றங்களை ஏற்படுத்தி, அந்தத் தனி நபருக்குள் மிகத் துரிதமாக ஆனந்த ரஸவாதத்தை நிகழ்த்தி விட முடியும். சீடனுடைய பக்தியின் ஆழம் அதிகமானால், குருவின் சக்தி, பலநூறு தியானங்கள் செய்யும் மாற்றத்தை, அந்தத் தனி நபருக்குள் ஏற்படுத்திவிடும்.
“குருபக்தி, முக்திக்கான எளிய வழி,” என ராமகிருஷ்ண பரமஹம்ஸர் குறிப்பிடுகிறார். ஆனந்தமயமாகிட, தியானத்தையும், ஞானக் கருத்துகளையும்விட வலிமையான பக்தியை அதிகப்படுத்துங்கள். உங்களுடைய நோக்கம் பூர்த்தியாகும்.
எப்படி யோசித்துப் பார்த்தாலும், குண்டலினி சக்தியை ஒரு தனி மனிதர் எழுப்புவது என்பது அசகாய சாதனைதான்.
ஒரு குருவின் உதவியில்லாமல், அவர் தாமே எழுப்ப முயற்சி செய்யும் பட்சத்தில் எவ்வளவு பெரிய விபத்தை வேண்டுமானாலும் சந்திக்க நேரிடலாம். தலையிலுள்ள இரத்தக் குழாய்களே வெடித்துவிடும் அபாயத்தைக் கூடச் சந்திக்க வாய்ப்பிருக்கிறது.
ஒரு குருவின் துணையோடு குருவின் நேரடி வழி நடத்துதலின்படி, குண்டலினி சக்தி எழுப்பப்படும் பொழுது, நீங்கள் பரமஹம்ஸமாக மலர்வதற்கான வாய்ப்பு முழுமையாக இருக்கிறது.
ஒரு அவதார புருஷரின் சாந்நித்யத்தினாலேயே, என் வாழ்வில் ஏற்பட்ட முக்கியமான திருப்பத்தை இங்கு குறிப்பிடலாம். அதைத் திருப்பம் என்றுகூட சொல்ல முடியாது. தீக்ஷை என்றுதான் சொல்ல வேண்டும்.
மஹா அவதார் பாபாஜி தந்த தீக்ஷை
Initiation given by Maha avatar Babaji
ஞானம் அடைவதே என் வாழ்க்கையின் லட்சியம் என்ற உறுதியோடு தினம் தவறாமல் பல தியானங்களைச் சிறு வயது முதலே செய்து வந்தேன்.
அவரது இளமை
பொங்கும்
உடலும் நடையும்
வெளிப்படுத்திய
தெய்வீகத் தன்மை
என்னைக் கவர்ந்தது.
உறுதியாக எடுக்கப்படும் லட்சியமே அடையப்படும். அதனால் ஞானத்தை நோக்கிய பாதையில், நாளுக்கு நாள் தீவிரத் தன்மை கூடிக்கொண்டே போனது. அதன் விளைவாக வீட்டை விட்டுச் செல்வது என்று முடிவு செய்து... இந்தியா முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக பல ஆயிரம் கிலோ மீட்டர் பரிவிராஜகமாக நடந்தே சென்றேன். பல இடங்களுக்குச் சென்றேன். காடுகள், மலைகள், கோவில்கள் புண்ணிய நதிகள் என்று தொடர்ந்து பரிவிராஜகமாய் இந்தியா முழுவதும் சென்றேன்.
இதன் ஒரு பாகமாகத்தான் இமயமலை சென்றேன். அங்குப் பல இடங்களில் பல மாதங்கள் தங்கி தியானங்களைச் செய்து வந்தேன்.
கங்கோத்ரிக்கு அப்பால் உள்ள தபோவனம் அருகில் தவமியற்றிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாள் ஜடாதாரியான கட்டுடலும் நீண்ட தலைமுடியும், தெய்வீகத் தன்மையை பிரதிபலிக்கும் முக அமைப்பும், முகபாவமும் ஒளிபொங்கும் உடலும் கொண்டவராக ஒரு மனிதர் எதிரில் வந்தார். பார்த்த மாத்திரத்திலேயே அவர் ஒரு அவதார புருஷர் என்பதை உணரமுடிந்தது.
அவரது இளமை பொங்கும் உடலும், நடையும் வெளிப்படுத்திய தெய்வீகத் தன்மை என்னைக் கவர்ந்தது.
அந்த ஈர்ப்பு, அவரிடமிருந்து வெளிப்பட்ட தேஜஸ் என்னை அங்கேயே நிற்க வைத்துவிட்டது.
கிட்டதட்ட 45 நிமிடங்கள் ஒருவரை ஒருவர்
பார்த்தபடியே ஒருவருள் ஒருவர் கரைந்து
நின்றிருந்தோம்.
அதுவரை அவரை தொட்டுப் பார்க்கலாம்
என்ற எண்ணமோ, அங்கிருந்து நகரலாம் என்ற
உணர்வோ ஏற்படவே இல்லை.
ஒருவரில் ஒருவர் கரைந்த அந்த உணர்வு மிகவும் ஆழமான ஒரு உயிர் அனுபவம்.
அதன் விளைவாக
வீட்டை விட்டுச் செல்வது
என்று முடிவுசெய்து
இந்தியா முழுவதும்
குறுக்கும் நெடுக்குமாக
பல ஆயிரம் கிலோமீட்டர்
பரிவிராஜகமாக நடந்தே
சென்றோம்.
அந்த 45 நிமிடங்கள் நாற்பத்தைந்து
நிமிடங்களாகத் தெரியவில்லை. மிகவும்
நெருங்கிய, மிகுந்த பிரியத்திற்குரிய,
உயிருக்கு உயிரான ஒருவரின்
அருகாமையில் எப்படிப் பல மணி
நேரங்கள் சில நிமிடங்களாகத் தெரியுமோ
அதைவிட ஆழமான அனுபவமாக அது
இருந்தது.
இந்த ஆழ்ந்த அனுபவத்தில்
இருக்கும்போதே கம்பீரமாய் என்னை
நோக்கி அவர் முன்னேறினார்.
‘அவர் என்னைக்கடந்து செல்ல வருகிறாரோ’
என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது, ‘
பரமஹம்ஸ... நித்யானந்தா...,’’ என்ற
வார்த்தைகளை உதிர்த்தவாறு என்னுள்
கடந்து சென்று கரைந்தார்.
அப்போது நினைத்தேன்... ‘நல்லது, யாரோ
பரமஹம்ஸ நித்யானந்தர் என்ற ஒருவரை
இவர் பார்க்கச் சொல்கிறார். அவரைக்
கண்டுபிடிக்க வேண்டும்’ என்றுதான்
நினைத்தேன்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, இரண்டு நாட்கள் கழித்து தாடியோடு ஒரு வயதானவர் வந்தார். அவர் என்னிடம், “நீங்கள் பாபாஜியைச் சந்தித்தீர்களா?” என்று கேட்டார்.
“பாபாஜியா யார் அவர்? அப்படி யாரையும் நான் சந்திக்கவில்லையே,” (என்னைக் கடந்து சென்றது மஹா அவதார் பாபாஜி என்ற விஷயம் எனக்கு அப்போது தெரியவில்லை.)என்றேன்.
அவர் உடனே, “இல்லை! இல்லை! உங்களைப் பார்த்த உடனேயே நீங்கள் பாபாஜியின் தரிசனம் பெற்றவர் என்பதை உணர முடிகிறது. மஹாஅவதார் பாபாஜியின் சக்தியை உணர்கிறேன்,” என்றார்.
நான் பாபாஜியின் சீடன் என்றார். “உங்களுக்கு நடந்தது என்ன? சொல்லுங்கள்,” என்று வெகு ஆர்வத்தோடு அவர் கேட்டார்.
அவரிடம் மஹாஅவதார் பாபாஜியைச் சந்தித்த நிகழ்வை இன்னும் ஆழமாகப் பகிர்ந்து கொண்டேன்.
மஹாஅவதார் பாபாஜியின் சீடர் என்பதால் அவரோடு நேரடியாக அப்போது நடந்ததை என்னால் ஆழமாகப் பகிர முடிந்தது.
பொதுப்படையாக பல ஆழமான
அனுபவங்களை எப்போதும் பகிர்ந்து கொள்ள
முடிவதில்லை.
இன்னும் சில வார்த்தைகளின் மூலமாக அன்று
நிகழ்ந்த அனுபவத்தைச் சொல்ல முயற்சி
செய்கிறேன்.
> ‘அவர் என்னைக் கடந்து
> செல்ல வருகிறாரோ’ என்று
> எண்ணிக் கொண்டிருக்கும்
> போது, “பரமஹம்ஸ...
> நித்யானந்தா...,”
> என்ற வார்த்தைகளை
> உதிர்த்தவாறு என்னுள்
> கடந்து சென்று கரைந்தார்.
தொடர்ந்து 45 நிமிடங்கள், அவரைக் கண்ணிமைக்காமல் மலர்ந்த முகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன். என் கண் முன்னாலேயே இருந்த மஹாஅவதார் பாபாஜி “பரமஹம்ஸ நித்யானந்தர்,” என்ற வார்த்தைகளை உதிர்த்து என்னுள் நுழைந்த அந்தக் கணத்தில் ஒருவருள் ஒருவர் எனும் உணர்வுகூட மறைந்துவிட்டது.
அவர் என்னுள் கரைந்த கணத்தில், ஒருவருள் ஒருவர் எனும் மிக ஆழமான அந்த உணர்வுகூட கரைந்து விட்டது. ‘ஒருவரே’ என்ற மகா அனுபவமாக அது மலர்ந்தது.
அன்றிலிருந்து அந்தச் சக்தி, அந்த தீக்ஷை, அந்த உணர்வுதான் பரமஹம்ஸ நித்யானந்தராக உலகை வலம் வருகிறது.
சத்குருவின் சாந்நித்யமே சக்தியைப் பொங்க வைக்கும்
Energy bubble’s in master presence
ஒரு தனி மனிதராக இருந்து குண்டலினியை எழுப்ப முயற்சி செய்வது, முழு ஆரோக்கியமடைய முயற்சி செய்வது, ஞானமடைய முயற்சி செய்வது என்பதெல்லாமே, எறும்பு தானே இலக்கை அடைவதற்காக ஓட்டையிடும் முயற்சிதான்.
ஒரு குருவின் உதவியோடு குண்டலினி சக்தியை எழுப்புவது, டிரில்லிங் மிஷினைக் கொண்டு, வினாடிக்கும் குறைவான நேரத்தில் ஓட்டையை உருவாக்குவதுபோல், நொடிக்கும் குறைவான நேரத்தில் இலக்கைத் தொட்டுவிட வைத்துவிடும்.
> குண்டலினி சக்தியை
> எழுப்புவதற்கான நேரடி
> தீக்ஷை... ஒரு ஞானியிடமிருந்து
> ஒருமுறை பெற்றுவிட்டாலே,
> அன்றிலிருந்து தொடர்ந்து
> குண்டலினி சக்தி
> பொங்கிக்கொண்டே இருக்கும்.
குண்டலினி சக்தியை எழுப்புவதற்கான நேரடி தீக்ஷை... ஒரு ஞானியிடமிருந்து ஒருமுறை பெற்றுவிட்டாலே, அன்றிலிருந்து தொடர்ந்து குண்டலினி சக்தி பொங்கிக் கொண்டே இருக்கும். ஜீவன் முக்த அனுபவம் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.
ஆனந்த கந்த தீக்ஷை
Ananda Gandha initiation
ஏழு சக்கரங்களும், ஏழு உடல்களும், 5 கோஷங்களும் உங்களுக்குள் ஒடுங்கும் இடம்தான் ஆனந்த கந்தம். இதை ஆனந்த கந்த சக்கரம் என்றும் சொல்வோம். இந்த ஆனந்த கந்தத்தை மட்டும் ஒருவர் திறந்து விட்டால், அவருக்குள் இருக்கும் குண்டலினி சக்தி அவருக்குள்ளிருந்து பொங்கி, அவர் தொடும் இடமெல்லாம் அந்தச் சக்தி பாய ஆரம்பிக்கும்.
ஆனந்த கந்தம் முழுமையாக மலர்ந்திருக்கும் ஜீவன் முக்தரால், தொடப்படுபவர்களுக்கெல்லாம், அந்தச் சக்தி நேரடியான உதவியை செய்யும். அவருடைய உடலிலும், வாழ்விலும் பெரிய பெரிய அற்புதங்களை நிகழ்த்தும்.
அப்படிச் செய்யப்படுபவதைத்தான் தியான சிகிச்சை, ஞானத்தொடுதல் என்று அழைக்கிறோம்.
[ ஒரு தொடுதலில்
அற்புதங்கள் நிகழ்வது
அவர்களிடமிருந்து
பொங்கிப் பரவும்
குண்டலினி
சக்தியால்தான்.. ]
சீரடி சாய்பாபா, சதாசிவ பிரம்மேந்திராள்
போன்ற ஜீவன் முக்தர்கள் தொட்டதனாலேயே
பலருடைய நோய்கள் குணமானதைக்
கேள்விப்பட்டிருக்கிறோம்.
ரமண மகரிஷி, ராமகிருஷ்ணர், புத்தர், கிருஷ்ணர் என்று பல ஞானிகளின், ஜீவன் முக்தர்களின் வாழ்க்கையைப் பார்க்கும் பொழுது முக்கியமான ஒன்றைப் புரிந்து கொள்ளலாம்.
அது, அவர்களுடைய ஒரே ஒரு தொடுதலால், ஒரே ஒரு ஆசீர்வாதத்தால் பலருடைய வாழ்க்கையில் பல அற்புதங்கள் நிகழ்ந்திருக்கிறது.
ஒரு தொடுதலில் அற்புதங்கள் நிகழ்வது அவர்களிடமிருந்து பொங்கிப் பரவும் குண்டலியின் சக்தியால்தான்.
ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தியிலிருந்து இன்று வரை, ஞானிகள் செய்த தொடர் ஆராய்ச்சி களால்... ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் இந்த ஆனந்த கந்த சக்கரத்தைத் திறந்து வைக்க முடியும். தனிமனிதருக்குள் இருக்கும் குண்டலினி சக்தியை அவரவரே பயன்படுத்திக் கொள்ளவும், குண்டலினி சக்தியை அவரவரே தியான சிகிச்சையாகப் பயன்படுத்திக்கொள்ளவும் ஒரு ஞானகுருநாதரால் தீக்ஷை அளிக்கமுடியும்.
ஞானமடையாமல் எப்படி ஒருவரின் குண்டலினி சக்தியை அவரே எழுப்ப முடியும்?
“ஒரு தனி நபரால் இன்னொருவருக்கு எப்படித் தியான சிகிச்சையளிக்க முடியும்?” என்று நீங்கள் கேட்கலாம்.
அதுதான் தீக்ஷை.
10,000 வருட உள்ஞுலக ஆராய்ச்சியின் சாதனை, ஆனந்த கந்த தீக்ஷை.
அதன் மூலமாக, மிகப் பக்குவமாக எந்த ஒரு நபரும் தன்னுடைய குண்டலினி சக்தியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். எந்தப் பக்கவிளைவுகளும் இல்லாமல் இந்த சக்தியைத் தன்னுடைய ஆரோக்கியத்திற்காகவும், மற்றவருடைய ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
> ஆனந்த கந்த
> தீக்ஷையை யார்
> வேண்டுமானாலும்
> பயன்படுத்திக் கொள்ள
> முடியும். இதன் மூலம் ஜீவன்
> முக்தியை நேரடியாக
> வாழ முடியும்.
தியான சிகிச்சையாளர்கள் எல்லோரிடமும் சொல்வதுண்டு, "ஆனந்த கந்த தீக்ஷையைப் பெற்று நோய்களை மட்டுமே நீங்கள் குணப்படுத்துவது... வைரக் கத்தியை வைத்து வெங்காயம் அறுப்பதற்குச் சமம்."
10,000 வருட உள்ஞுலக ஆராய்ச்சியின் நோக்கம் அதுவல்ல.
அது வைரக்கத்தி,
அது வைரத்தை அறுப்பதற்காகத் தரப்படுவது.
அது உங்களுக்குள் இருக்கும் குண்டலினி சக்தியை நேரடியாக அறுவடை செய்து, நேரடியாக அனுபவித்து, நீங்கள் ஜீவன் முக்தர்களாக மலருவதற்குத் தரப்படும் நேரடி தீக்ஷைதான் ஆனந்த கந்த தீக்ஷை.
குண்டலினியை எழுப்ப உதவும் மிக ஆழமான தீக்ஷைகளான பிரம்மச்சரிய தீக்ஷையையோ அல்லது வானப்பிரஸ்த தீக்ஷையையோ எடுத்துக் கொள்வது எல்லோருக்கும் சாத்தியப்படுவதில்லை. ஆனந்த கந்த தீக்ஷையை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம் ஜீவன் முக்தியை நேரடியாக வாழ முடியும்.
தியானத்தையும் யோகத்தையும் புத்தகங்களின் வழியாகவோ, விசிடிக்களின் வழியாகவோ எல்லோரும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தந்துவிட முடியும். தீக்ஷையை அப்படித் தரமுடியாது ஆனால், தீக்ஷைகளை குருநாதரிடமிருந்து நேரடியாகத்தான் பெற முடியும். ஆனந்த கந்த தீக்ஷையைத் திருமணமானவர், திருமணம் ஆகாதவர், படித்தவர், படிக்காதவர் என்ற பாகுபாடில்லாமல் யார் வேண்டுமானாலும் பெற முடியும்.
இந்த ஒரு சத்தியத்தைத் தெரிந்து கொள்ளுவதும், இந்த தீக்ஷையைப் பற்றிப் புரிந்து கொள்ளுதலுமே இன்றோ இல்லை நாளையோ, நேரடியாக ஒவ்வொருவருக்கும் உதவும். தீக்ஷைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுதலே ஞானம்தான்.
பிரம்மச்சரிய தீக்ஷை
Brahmacharya initiation
நாம் எல்லாம் நினைக்கிறோம் ‘வயதானவர்களுக்குத்தான் சன்யாசம், பிரம்மச்சரியம்’ என்று, நிஜம் அப்படியில்லை!
‘ஞானமடைவதே என் வாழ்வின் இலட்சியம்’ என்றிருக்கும் தீர இளைஞர்களுக்கும், தியாக மனப்பான்மையும் சேவை மனப்பான்மையும் கொண்ட தனி மனிதருக்கும் தம்மைத்தாமே மலர்த்துவதற்குத் தரப்படும் தீக்ஷை பிரம்மச்சரிய தீக்ஷை.
பிரம்மச்சரியம் ஒரு ராஜவழி, வாழ்க்கையை விட்டு ஓடுபவர்கள் எடுப்பதல்ல பிரம்மச்சரியம்! வாழ்க்கையை வாழத் துடிப்பவர்கள் எடுப்பது. வீட்டிற்கு ஒரு பிள்ளையை இந்த ராஜவழியில் வாழும் பாக்யத்தைத் தந்து, அவர்களை மகான்களாக்கிப் பார்த்து மகிழ்ந்த கலாச்சாரம் நம் பாரத கலாச்சாரம். ‘தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்!’ என்று சொல்லி இதயம் குளிரும் பூமி இது.
வாழ்வின் இலட்சியம்தான் உங்களின்
அடிப்படை ஆதாரமும்கூட. அதற்கான
அறிவியல்தான், பிரம்மச்சரியம். வாழ
விரும்பும் ஒவ்வொருவருக்கும் பொக்கிஷம்.
பிரம்மச்சரியம் என்பது மருத்துவர்,
இன்ஜினியர் என்பதுபோல, ஒரு உயர்ந்த
பட்டப்படிப்பு. விஞ்ஞான ரீதியான
வாழ்வியல் கலை.

வானபிரஸ்த தீக்ஷை
Vanaprastha Deeksha
வெளியுலக வாழ்க்கையை வாழ்ந்தாலும், மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் பூரணமான உள் சுதந்திரம் பெற வேண்டும்.
வெளியுலகத்தில் வாழ்ந்து, தம் பொறுப்புக்களை முடித்த ஒவ்வொருவரும், தங்கள் உள்ளுலகத்தில் முழுமையாய் வாழ அளிக்கப்படுவது வானப்பிரஸ்த தீக்ஷை.
நம்முடைய வேத பாரம்பரியப்படி, இது ஒரு உன்னதமான வாழ்க்கை முறையாக வடிவமைத்து வழங்கப்படுகிறது. வாழ்க்கையில் தனி நபராய் வாழ்பவர் களும், கணவனை இழந்தவர்களும், மனைவியை இழந்தவர்களும், விவாகரத்து பெற்ற ஆண்களும், பெண்களும் தங்களுக்கு தாங்களே இழைத்துக்கொள்ளும் தீங்கு, அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்குப் பிறகு அடைய வேண்டியது எதுவும் இல்லை என்ற முடிவுக்கு வருவதுதான்! ஆத்மார்த்தமாக வாழ்வதைப்பற்றி சிந்திப்பது இல்லை.
இவர்களுக்கு ஆத்மார்த்தமாக வாழ்வதைப் பற்றிச் சிந்திப்பதற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், புது வாழ்வையே துவங்குவதற்கான தீக்ஷைதான் வானப்பிரஸ்த தீக்ஷை.
கிருகஸ்த தீக்ஷை
Grihastha Deeksha
தியாக மனப்பான்மையும், சேவை மனப்பான்மையும் கொண்ட, தம் வாழ்வில் ஜீவன் முக்தியை அடைவதை இலட்சியமாகக் கொண்டு, அதை மற்றவர்களுக்கும் சென்று சேர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் கொண்ட தம்பதியருக்கான தீக்ஷை கிருகஸ்த தீக்ஷை.
தர்ம க்ஷேத்திரமாக இருக்கவேண்டிய நம் இல்லங்கள், குருக்ஷேத்திரமாக இருப்பதற்குக் காரணம் என்ன தெரியுமா? மன ரீதியான பொருத்தமின்மைகூட இரண்டாம் பட்சம்தான். சக்தி ரீதியான பொருத்தமின்மைதான் முதற்காரணம்.
சக்தி ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் உயர்ந்திருக்கும் இருவர் ஒன்றாக சேரும்போதுதான், அங்கே இல்லறம் நடக்கும். அப்போதுதான் அவர்களால் வீட்டுக்கும், நாட்டிற்கும் ஏதாவது செய்ய முடியும்.
திருக்கல்யாண தீக்ஷை
Thirukalyan Dheeksha
வேதகாலத்தில் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர், நமது ரிஷிகள் மனித மனத்தின் அடி ஆழம் வரை சென்று ஆராய்ந்து, மனிதன் பூரணத்துவத்தை அடைவதற்கான பல வழிமுறைகளைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். அதில் இந்தத் திருமணம் என்ற உறவும் (பந்தம்) ஒன்று.
98 சதவீதம் மக்கள் திருமணம் என்ற உறவின் மூலமே பூரணத்துவத்தை அடைந்துள்ளனர்.
திருமணத்தின் சிறப்பம்சமே ஆண் சோர்வடையும்போது, பெண் ஆணை தன் மடியிலும், பெண் சோர்வடையும் பொழுது, ஆண், பெண்ணைத் தன் தோளிலும் வைத்துச் சோர்வினைப் போக்க உறுதுணையாக இருப்பதாகும்.
ஆண், பெண்ணின் உடலுக்கும் உணர்ச்சிக்கும் பூரண பாதுகாப்பளிப்பேன் என்றும், பெண் ஆண внутрен பெண் ஆணுக்குத் தாரமாகவும் தாயாகவும் இருந்து அவனுடைய பூரணத்துவத்திற்கு, ஜீவன்முக்த வாழ்வுக்கு உறுதுணையாக இருப்பேன் என்றும் உறுதியளிப்பதே திருமண நிகழ்ச்சி.
‘திருமணம்’ என்பது ஏன், எதற்கு, எப்படிச் செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படை அறிவியலைப் பற்றிய புரிதலும், சப்தபதி சங்கல்பத்தைப் பற்றிய புரிதலும் கொடுத்து, வாழ்க்கையில் அவற்றை கடைப்பிடிக்கத் தரப்படும் தீக்ஷை திருக்கல்யாண தீக்ஷை.
நாமகரண தீக்க்ஷை
Namakarana Deeksha
ஒரு அறையில் 10 பேர் படுத்து தூங்கிக் கொண்டிருக்கும் போது, “ராஜா,” என்று கூப்பிட்டால் ராஜா மட்டுமே எழுவார். மற்றவர்கள் ஆழ்ந்த தூக்கிக் கொண்டிருப்பார்கள். காரணம் உங்களின் பெயர் உங்களின் ஆழ்மனம்வரை பாய்ந்து வேலை செய்யும்.
அவ்வளவு பெரிய சக்தி உங்களின் பெயருக்கு உண்டு. உங்களின் நாமத்திற்கு உண்டு. இந்த பெயரைச் சரியாகத் தேர்வு செய்து, இந்தக் குழந்தையின் மன அமைப்பிற்கு ஏற்ற பெயரைக் கொடுத்தால் அந்தக் குழந்தையின் வளர்ச்சி உள்ளுலகிலும் வெளியுலகிலும் அருமையானதாக இருக்கும். அவரால் ஜீவன் முக்தியை சீக்கிரமாக அடைய முடியும். இதைச் சக்திரீதியாக ஆராய்ந்தபின் தரப்படுவதுதான், நாமரண தீக்ஷை.
எப்ப வேண்டுமானாலும், தன் குருவிடமிருந்து தனக்குத் தேவையான, தனக்கு ஜீவன் முக்தப் பாதையை நேரடியாகக் காட்டக்கூடிய பெயரை ஒருவர் தீக்ஷையாகப் பெற முடியும.
காயத்ரி தீக்ஷை
Gayatri Deeksha
படிக்க ஆரம்பிக்கும் குழந்தைகளின் அறிவாற்றலையும் புத்திசாலித்தனத்தையும் ஞாபக சக்தியையும்அதிகரிப்பதற்காக, பெற்றோர்கள் தங்களின் குருநாதரிடம் குழந்தைகளை அழைத்துச் சென்று பெறும் தீக்ஷை காயத்ரி தீக்ஷை.
காயத்ரி தீக்ஷையில், குழந்தைகளின் உடல் ச
க்தியையும் மனோ சக்தியையும் அதிகரித்து,
அவர்கள் ஆன்ம சக்தியைப் பெற உதவும்
காயத்ரி மந்திர தியானத்தைக் கற்றுக்
கொள்வார்கள். இப்படித் தியானத்தின்
மூலம் ஒவ்வொருவரும் ஞாபக ச
க்தியையும் புத்திசாலித்தனத்தையும்
வளர்த்துக்கொண்டால், வளர்ந்து
மனிதராகும் போது அவர்கள் நல்ல
மனிதர்களாக வளர்வார்கள்.
> காயத்ரி தீக்ஷையில்,
> குழந்தைகளின் உடல்
> சக்தியையும் மனோ
> சக்தியையும் அதிகரித்து,
> அவர்கள் ஆன்ம சக்தியைப்
> பெற உதவும் காயத்ரி மந்திர
> தியானத்தைக் கற்றுக்
> கொள்வார்கள்.
இந்த எல்லா தீக்ஷைகளுமே விதியை வெல்வதற்கான வழியைக் காட்டும் அருமையான நுட்பங்கள்.
விதியை வெல்லும் வீரியத்தை அடைவது, அடைந்தே தீருவது எனும் முடிவை எடுத்து வாழ்வைத் தொடங்கினால், இந்த நிமிஷத்திலேயே முழு விழிப்படைந்துவிடுவீர்கள். அப்போது விதியை வெல்லும் வீரியம் சாத்தியமாகும்.
