KAILASA Library/ஜீவன் முக்தி/விதியை வெல்லும் சூட்சுமம்Sign in
ஜீவன் முக்தி

விதியை வெல்லும் சூட்சுமம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

The secret to win over destiny

எந்த வாழ்க்கையை நாம் தேர்ந்து எடுக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் முன், நம்முடைய பிராரப்தம், பயோமெமரியின் (Bio Memory) ஆழம் எவ்வளவென்று பார்க்கவேண்டும்.

நம்முடைய உடல் பிராரப்தத்தினால் உருவானது.

உங்களுடைய ஒவ்வொரு தசைகளிலும் பிராரப்தம் பதிவாகி இருக்கிறது. அந்தப் பிராரப்தம்தான், உங்களுடைய தசையினுடைய நினைவு பதிவுப் பதிவுகளாக ஆகி இருக்கிறது.

உங்கள் உடலில் தசைகளுக்குள்ளே, பயோ மெமரியாக இருக்கிற பிராரப்தத்தின் ஆழத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

அதன் பிறகுதான் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

மற்றவர்களுக்காக சன்யாஸமோ, பிரம்மச்சரியமோ எடுத்தால் சரிபட்டு வராது. முடிவெடுக்க விரும்புபவர் தமக்குத் தாமே ஆழ்ந்து உள்வாங்குவது, மிக மிக முக்கியமானதாகும்.

நம் பயோமெமரியை ஆராய்ந்து பார்ப்பதற்கென்றே, நேரம் ஒதுக்க வேண்டும். அதற்காகவே ஒன்பது மாதம் ஒதுக்க வேண்டும்.

உடலுக்கும் மனத்திற்கும் ஒத்துழைத்து, எந்த விதமான இன்பத்திற்குள்ளும் செல்லாமல் இருந்தால், உடலுக்கு ஒத்துழைப்பு தராமல் இருந்தோம் என்றால் அப்பொழுது இயற்கையாக மனம் என்ன செய்ய முயற்சி செய்யும்? கனவில் தன்னைத் திருப்திபடுத்திக்கொள்ள முயற்சி செய்யும்.

இந்த முறையில் ஒருவர் தன்னைப்பற்றி ஆராய்ச்சி செய்யும்போது, மிகத் தெளிவாகப் பிராரப்தத்தின் நிஜமான ஆழம் தெரிந்துவிடும். வாழ்க்கையின் தரம் புரிந்துவிடும்.

> இருபத்தியோரு நாட்கள்
> வரை கனவிலும்,
> உங்களுடைய மனம்
> இன்னொரு உடலைத்
> தேடாமல் இருந்ததென்றால்,
> தெரிந்துகொள்ளுங்கள்.
> உங்களுக்கு பிராரப்தத்தின்
> ஆழம் குறைவு என்பதைக்
> கண்டுகொள்ளலாம்.

இருபத்தியொரு நாட்கள் வரை, கனவிலும் உங்களுடைய மனம் இன்னொரு உடலைத் தேடாமல் இருந்ததென்றால், தெரிந்து கொள்ளுங்கள், உங்களுக்கு பிராரப்தத்தின் ஆழம் குறைவு என்பதைக் கண்டுகொள்ளலாம்.

நீங்கள் சன்யாஸ வாழ்க்கையை இனிமையாக வாழ்ந்திடலாம். அப்போது துக்கம் வராது. உணர்வில் ஒருபோதும் கீழே விழமாட்டீர்கள்.

ஏன் இந்த சன்யாஸ வாழ்க்கை எடுத்தோம் என்ற துக்கம் இருக்காது.

சஞ்சலம் இருக்காது.

சன்யாஸம்தான் சிறந்த வாழ்க்கை என்கிற தெளிவான மன அமைப்பு வந்துவிடும்.

அப்படி இல்லாமல்... மாற்றம் நடக்காமல்... இருபத்தியொரு நாட்கள், கனவில், உங்கள் உணர்வு இன்னொரு உடலை வேண்டாம் என்று ஒதுக்கவில்லை என்றால், பிராரப்தப்படி திருமணம்தான் நல்லது. திருமணம் செய்துகொண்டு வாழ்வதுதான் நல்லது.

சன்யாசியாக வாழும் பொழுதே, உங்கள் உணர்வைச் சூட்சுமமாக மாற்றுவது.

இல்லையென்றால், திருமணம் செய்துகொண்டு இரண்டு பேரும் சேர்ந்து, இனிமையாக உங்கள் உணர்வை, சூட்சுமமாக்கி உயர்ந்த உணர்வு நிலைக்கு எடுத்துச் செல்வது.

தம்பதிகளாக இருவரும் இணைந்து உணர்வை உயர்த்திக் கொள்கிற தியான முறைகளை, காமத்தைத் தியானமாக்குகிற தியானங்களை ஈஸ்வரன் சிவ சூத்திரத்தில் அளிக்கிறார்.

> சுய ஆராய்ச்சி
> செய்து வாழ்விற்குள்
> நுழைவதே விதியை
> வெல்லும் ஒரு
> சூட்சுமம்தான்.

வாழ்வில் சன்யாசமா, சம்சாரமா என்று ஒருவர் எடுக்கும் முடிவு, அவரின் பிராரப்தப்படி எடுக்கப்பட்ட முடிவாக இருந்தால் வாழ்வு இனிக்கும்.

சன்யாசியாக வேண்டியவர், சம்சாரி ஆனாலோ; சம்சாரி ஆகவேண்டியவர் சன்யாசி ஆனாலோ, விதியை வெல்வதற்குப் பதில் சதிக்குள் சி க்கிக்கொள்வார்.

வாழ்க்கையைப் பற்றிய முடிவை எடுக்கும் முன்பு பூர்ணாபிஷேகம், தந்த்ராபிஷேகம் போன்ற 9 மாத சுய ஆராய்ச்சிக்குள் நுழையாமல் வாழ்வை ஆரம்பிப்பது, பெரிய ஆபத்தாகும். தவறான தேர்வைச் செய்தவர் யாராக இருந்தாலும், அவர் மாட்டிக்கொண்டுதான் விழிக்க வேண்டியிருக்கும்.

சுய ஆராய்ச்சி செய்து வாழ்விற்குள் நுழைவதே, விதியை வெல்லும் ஒரு சூட்சுமம்தான்.

பறந்துபோய் இலக்கை அடைய முயற்சி செய்பவர்களுக்கு...

For those who want to fly and reach the goal...

சன்யாஸம் என்று முடிவு எடுத்தவர்களுக்கும், அவர்கள் தங்கள் உணர்வை சூட்சுமமாக்க ஒன்பது மாதங்கள் செய்ய வேண்டிய தியானங்களையும், ஈஸ்வரன் அளிக்கிறார்.

ஸ்தூலத்தை விட்டு சூட்சுமத்தையும், சூட்சுமத்தை விட்டு விட்டு பரத்தையும், இவ்வாறு ஒன்றை விட்டு விட்டு ஒன்றைத் தியானிக்க... இறுதியில் சிவநிலை அடையப்படும்.

முதலில் ஸ்தூல ரீதியாக, 'உடலால் அனுபவிப்பதை விடுதல்'.

> 'தான் ஆண்',
> 'தான் பெண்' என்ற
> கருத்தையே மறந்து
> விடுவது. இப்படி நடக்கும்
> போதுதான், நிஜமாகவே ஒரு
> ஆண் முழு ஆணாகிறான்.
> ஒரு பெண் முழுப்
> பெண்ணாகிறாள்.

இரண்டாவதாக, கனவில்கூட
இன்னொரு துணை தேவைப்படக்கூடாது.
தேவைப்படுகிறாற்போன்று எண்ணம் வந்தால்
கூட, அதில் விழிப்புணர்வை எடுத்துவந்து
விழித்துக்கொள்வது'.

மூன்றாவது சூட்சுமத்தில், தன்னைத்
தூய்மைப்படுத்திக் கொள்வது. பரநிலையில்
தூய்மை ஆக்கிக்கொள்வது; ரொம்ப
ஆழமான ஒரு சத்தியம். 'தான் ஆண்', 'தான்
பெண்' என்ற கருத்தையே மறந்து விடுவது.

இப்படி நடக்கும் போதுதான், நிஜமாகவே ஒரு ஆண் முழு ஆணாகிறான். ஒரு பெண் முழுப் பெண்ணாகிறாள்.

நடந்துபோய் இலக்கை அடைய விரும்புபவர்களுக்கு...

For those who want to walk and reach the goal...

அருமையான நுட்பம் ஒன்றின் உதவியோடு தொடங்கலாம்...

முதல்படி :

ஒரு ருசியான இனிப்பை நாக்கில் எடுத்து வைத்து, ஆழ்ந்து கண்களை மூடி, அந்தச் சமயத்தில், நாக்கில் ஏற்படுகிற ஆனந்தத்தைத் தியானியுங்கள். ருசியைத் தியானியுங்கள். சுவையைப் புரிந்துகொண்ட பிறகு... அந்தப் பொருள் இல்லாமலேயே, அந்தச் சுகத்தை மட்டும் தியானித்தால் என்னவாகும்?.

அந்தப் பொருள் இல்லாமலேயே, நாக்கிலே ருசி உணரப்படும்.

இரண்டாவது படி :

அதற்குப் பிறகு அந்தப் பொருளைப் பற்றி நினைவைக்கூட எடுத்து வராமல், சுகத்தை மட்டும் கொண்டு வருதல்.

மூன்றாவது படி :

அதற்குப்பிறகு இந்த இனிப்பை மனத்தால்கூட நினைக்காமல், நாவில் ருசித்தல் தன்மையை மட்டும் ஏற்படுத்துவது.

அப்போது என்ன ஆகும்? இனிப்பு இல்லாமலேயே, ருசிக்கிற தன்மை, நாவிற்குள் மலர்ந்துவிடும். அதைத்தான் அமிர்தம் என்று சொல்வது. இனிப்பு இல்லாமல், ருசிக்கிற தன்மை வந்தால், அமிர்த நிலைக்குப் போய்விடும்.

இப்படி ஒவ்வொரு இந்திரியத்தோடும். அந்தந்த இந்திரிய சுகத்தைச் சூட்சுமமாக வைத்துத் தியானம் செய்தல்.

நன்றாக ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்.

முதலில் இனிப்பை நாவில் வைத்து, ருசியைத் தியானிப்பது.

உடம்பை
நடந்து போவதற்காக
உருவாக்கினோமா?
அல்லது பறந்து
போவதற்காக
உருவாக்கினோமா?
என்று முதலில்
கண்டுபிடித்துவிட
வேண்டும்.

ஆழமான விழிப்புணர்வோடும், உணர்வுப்பூர்வமாகவும் இருந்து நாவில், இனிப்பை வைக்காமல், இனிப்பை வைப்பது போன்று பாவனை மட்டும் செய்து, அதே ருசியை, சுவையை ஏற்படுத்துவது. அதற்குப்பிறகு இந்த இனிப்பை மனத்தால்கூட நினைக்காமல், நாவில் ருசித்தல் தன்மையை மட்டும் ஏற்படுத்துவது.

இதுதான் உதாரணம். இதற்கு யோகத்தில் 'பிரத்யாகாரம்' என்று பெயர். உணர்வை உள்வாங்குதல்.

உங்களுடைய
உணர்வை உயர்ந்த
நிலைக்கு கொண்டு
வர முடியும்.

இதுபோல், ஒவ்வொரு இந்திரியத்தோடும், செய்து பார்த்து உங்களால், உங்களுடைய உணர்வை, உயர்ந்த நிலைக்குக் கொண்டு வர முடியும் என்று ஈஸ்வரன் சொல்கிறார்.

முதலில் ஒரு நுட்பத்தைக் கொடுத்தோம். அது உடல் ரீதியாக, ஸ்தூல ரீதியாக எந்த விதமாகவும், இன்னொரு உடலைத் தேடும் செயலிலும் இறங்காமல் இருப்பது. அது சூட்சும நிலையில், கனவில்கூட இறங்காமல் இருப்பது. பரநிலையில், 'தான் ஆண்', 'தான் பெண்', என்பதையே மறந்துவிடுவது

இந்த விளக்கம், இந்தச் சத்தியம் சன்யாளிகள் கடைப்பிடிக்க வேண்டியது.

அடுத்ததாக விளக்கினேன் அல்லவா...

முதலில், இனிப்பை வைத்துப்பார்த்துச் சுவையை நாவில் உணர்வது.

இரண்டாவது,இனிப்பை வைக்காமல், வைத்தது போன்று பாவனை செய்து, அந்தச் சு வையை உணர்வது.

மூன்றாவது, இனிப்பையே நினைக்காமல், நேரடியாகச் சுவை உணர்வை உருவாக்குவது. இந்தத் தியானமுறை கிரஹஸ்தர்கள் செய்ய வேண்டியது.

படிப்படியாக அவர்கள் தங்களைச் சூட்சும நிலைக்குள் எடுத்து வருவது.

நேரடியாக உணர்வையே மாற்றுவது.

ஒரே நுட்பத்தை இருவருக்கும், இரு வேறுவிதமாக ஈசன் வகுத்து அளித்து இருக்கிறார்.

முதல் முறையில் முயற்சி செய்து பார்ப்பதற்குப் பூர்ணாபிஷேகம், பிரம்மச்சரியம் என்று பெயர். இரண்டாவது முறையில் முயற்சி செய்து பார்ப்பதற்கு கிரஹஸ்தம் என்று பெயர். இறுதியில் இவர்கள் இருவருமே ஒரே உச்ச நிலையைத்தான் அடைகிறார்கள்.

பூர்ணாபிஷேகம் வழியாக போகிறவர்கள், ஒன்பது மாதத்தில் சீக்கிரமாக அடைந்து முடித்து விடுகிறார்கள். நேரத்தை வீணடிப்பதில்லை.

கிரஹஸ்தர்கள் அனுபவித்து, அனுபவித்து சூட்சுமமாக மாற்றிக் கொள்கிறார்கள். இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்துச் சுற்றி வருகிறார்கள். ஆனால் அவர்களும் அனுபூதிக்காகத்தான் வந்து சேருகிறார்கள். சிலபேர் நடந்து போகிறார்கள். சிலபேர் பறந்து போகிறார்கள்.

கிருகஸ்தரோ, சன்யாசியோ யாராயிருந்தாலும் செல்லுகிற பாதைச் சரியாகயிருந்தால் அதுவே ஆனந்தத்தைத் தரும்.

ஆனால், பறந்து போகத் தெரியாதவர்கள், பறந்து போக முயற்சி செய்யக்கூடாது.

அது இருப்பதை விட்டு விட்டுப் பறப்பதைப் பிடிப்பதற்குச் சமம். கீழேதான் விழுவார்கள்.

நாம் நடந்து போகப் பிறந்தவர்களா?

இல்லை பறந்து போகப் பிறந்தவர்களா? என்பது ஒன்பது மாத சுய ஆராய்ச்சி மூலமாக யார் வேண்டு மானாலும் கண்டு பிடித்துவிட முடியும்.

இந்த உடம்பை நடந்து போவதற்காக உருவாக்கினோமா அல்லது பறந்து போவதற்காக உருவாக்கினோமா என்று முதலில் கண்டுபிடித்துவிட வேண்டும்.

கண்டுபிடித்துவிட்டு, நடந்து போக உருவாக்கியவர்கள் என்றால், நடந்து போக வேண்டும்; பறந்து போக உருவாக்கியவர்கள் என்றால், பறந்து போகவேண்டும்.

முதலில் குறிக்கோளைத் தெளிவாக்க வேண்டும்.

குறிக்கோளைத் தெளிவாக்கினாலே, எதற்காக இந்த உடலை எடுத்தோம் என்பது புரிந்து விடும். நாம் இந்த உடலை எதற்கு உருவாக்கினோம் என்று கண்டுபிடித்து விட்டு, அதன்படி செய்வதுதான், வாழ்க்கையில் முழுமை அடைவதற்கான ஒரே வழி. பறக்க வேண்டியவர்கள் நடக்கவும் கூடாது; நடக்க வேண்டியவர் பறக்கவும் கூடாது.

பறக்க வேண்டியவர்களுக்கான முறை இங்குத் தெளிவாக விளக்கப்பட்டு விட்டது. நடக்க வேண்டியவர்களுக்கான முறையும் தெளிவாக விளக்கப்பட்டு விட்டது.

யாருக்கு கிரஹஸ்தம், யாருக்குச் சன்யாஸம் என்று இது வரைக்கும், இந்த அளவிற்குத் தெளிவாக, பிரபஞ்சத்திலே, ஆன்ம உலகிலே விளக்கப்படவே இல்லை. இது விளக்கப்படாததனால்தான் இவ்வளவு குழப்பங்கள்.

முதல் முறையாக மிகத்தெளிவாக ஈசனால் விளக்கப்பட்டு இருக்கிறது.

இந்த விளக்கத்தை உள்வாங்கி, யாருக்கு எந்த வாழ்க்கையோ, அவர்கள் பிராரப்தத்தைக் கடந்து, சத்தியத்திற்குள், இங்கு விளக்குகிற சிவத் தன்மைக்குள் நுழைவீர்களாக என்றும், உங்களின் விதியை வெல்லும் வீரியம் விழிப்படைவதாக என்றும் ஆசிர்வதிக்கும் ஈச னின் ஆசிர்வாதம் எல்லோருக்குள்ளும் மலரட்டும்.

விதியை வெல்லும் ஜீவன் முக்த வாழ்விற்குள்,

சுய பரிசோதனைக்குள் நுழையுங்கள்.

நாம் இந்த
உடலை எதற்கு
உருவாக்கினோம் என்று
கண்டுபிடித்துவிட்டு,
அதன்படி செய்வதுதான்,
வாழ்க்கையில் முழுமை
அடைவதற்கான
ஒரே வழி.