உணர்ச்சிகளின் இரகசியம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
கிரிவலத்தில் கழுதைப் புலிகள்...
அருணாச்சல மலையைச் சுற்றி கிரிவலம் வருவதுண்டு. ஒருமுறை தொடர்ந்து 108 நாட்கள் கிரிவலம் செல்வது என்று உறுதியாக முடிவு செய்தேன்.
‘எடுத்த முடிவிலிருந்து எப்போதும் எதற்காகவும் பின் வாங்கக்கூடாது’ என்கிற சிரத்தை எப்போதும் எனக்குள் இருக்கும்.
அருணாச்சலம் எனக்கு எல்லாமாகவும் இருந்தது என்பதற்கு இது போன்ற பல நிகழ்ச்சி களைச் சொல்லலாம்.
‘அடுத்து என்ன நடக்கப்போகிறது’ என்கிற எந்தக் கவலையும் இல்லாமல், ஒரு தாயின் மடியில் குழந்தை விளையாடுவது போன்று எந்தக் கவலையும் இல்லாமல் இருப்பேன் .
அருணாச்சல மலையின் அரவணைப்பில் ஒரு குழந்தையாக வலம் வருவதுண்டு. ‘108 முறை தொடர்ந்து வலம் வரவேண்டும்’ என்று முடிவெடுத்த நாளிலிருந்து என்னுள் புது உணர்வு நிகழத்துவங்கியது.
எடுத்த முடிவிலிருந்து பின் வாங்கக் கூடாது என்ற சிரத்தை எப்போதும் எனக்குள் இருக்கும்.
முடிவு செய்தபடியே அன்று மிகச் சீக்கிரமாகவே அதிகாலை 4 மணிக்கே நடக்கத் துவங்கிவிட்டேன்.
அந்த நாட்களில் மலையைச் சுற்றி, இப்போது இருப்பது போன்ற முறையான சாலைகளோ, விளக்குகளோ இல்லை.
ஒரு அடர்ந்த காட்டைப்போல்தான் அப்போது இருக்கும்.
ஒரு சிறு ஓடையைச் சுற்றி நடந்து கொண்டிருந்தேன். நடக்கும்போது ரசித்து படித்த பக்திப் பாடல்களைப் பாடியபடி சென்று கொண்டிருந்தேன். அந்தப் பாடலிலேயே மூழ்கியிருந்தேன்.
இப்பப் பாடியபடியே சென்றபோது ஏதோ ஒரு உள்ளுணர்வு தடுக்க பாடுவதை நிறுத்திவிட்டு எதிரிலிருப்பதைக் கூர்மையாகப் பார்த்தால்...
எதிரே ஐந்து, ஆறு கழுதைப்புலிகள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தது.
ஒரு அடிதான் இடைவெளி! எந்த நேரத்திலும் பாயத் தயாராய் அந்தக் கழுதைப் புலிகள் இருந்தது.
கையிலும் தற்காத்துக்கொள்ள எதுவும் இல்லை. ஓடியும் தப்பிக்க முடியாது.
என்ன செய்வது? கூப்பிட்டால் வருவதற்குக்கூட அந்தக் காட்டில் யாருமே அருகில் இல்லை.
எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. ‘அவ்வளவுதான் இன்று நாம் தீர்ந்தோம்’ என்ற பய உணர்வு அடிவயிற்றைப் பிசையத் துவங்கியது.
இந்த மனநிலையில் அப்படியே நின்று கொண்டிருந்தேன்.
ஒரே நேரத்தில் பாய்ந்தால் அவற்றிடம் தனியாளாக நிச்சயம் போராட முடியாது. அந்த விலங்குகளும் எதற்கும் பயப்படாமல் வழியை மறித்துக் கொண்டு நிற்கிறது.
பின்னால் ஒரு அடி எடுத்து வைத்தாலும் ஆபத்து, முன்னால் ஒரு அடி எடுத்து வைத்தாலும் ஆபத்து.
உடனே எங்கிருந்து அந்தச் சக்தி வந்ததோ, தெரியவில்லை. முழுச் சிரத்தையுடனும், நம்பிக்கையுடனும் மிகத் தீவிரத் தன்மையோடு அருணாச்சலேஸ்வரர் மீதிருந்த ஆழ்ந்த பக்தியுணர்வோடு “அருணாச்சலா!!!” என்ற வார்த்தை என் அடி வயிற்றை கிழித்துக் கொண்டு வெளிப்பட்டது.
‘‘அருணாச்சலா!!!’’ என்று என் உயிரின் அழைப்பாக அடிவயிற்றின் ஆழத்திலிருந்து வெளிப்பட்டது.
‘அருணாச்சலர் என்னைக் கவனித்துக் கொள்வார்’ என்று முழு சரணாகதி உணர்வோடு அழைத்தேன்.
அப்போது வயதான மனிதர் ஒருவர்
வேகவேகமாக ஒரு தடியோடு அங்கிருந்து
வந்து கொண்டிருந்தார். அவர் வந்ததும்,
என்னைச் சுற்றியிருந்த அபாயம் விலகியது.
என்னைச் சாப்பிடுவதற்குத் தயாராக இருந்த
கழுதைப்புலிகள் ஓடிவிட்டது.
அந்த உணர்வுப்பூர்வமான சத்தமிடுதல்
என் சுவாதிஷ்டான சக்கரத்தை முற்றிலும்
குணப்படுத்தியது.
> முழுச் சிரத்தையுடனும்
> நம்பிக்கையுடனும்,
> தீவிரத் தன்மையோடு
> அருணாச்சலேஸ்வரர் மீதிருந்த
> ஆழ்ந்த
> பக்தியுணர்வோடு
> 'அருணாச்சலா' என்ற வார்த்தை
> என் வயிற்றை கிழித்துக்
> கொண்டு வெளிப்பட்டது.
பிறக்கும்போது நம் தொப்புள் கொடி அறுந்ததால் அப்போது ஏற்பட்டு நம்முள் ஆழ்ந்து பதிந்திருக்கும் ஒருவகை ஆழ்உணர்வு வலிக்குக் Primordial pain என்று பெயர்.
இது எல்லோருக்குள்ளும் இருப்பதுதான்.
நம்முடைய எல்லாவிதமான பயங்களுக்கும் இந்த வலிதான் மூலகாரணம். இந்த வலி குணமாகாதவரை ஒருவரால் பயத்தையோ, பீதியையோ தாண்ட முடியாது. அந்த ஆழமான பயம் அந்த நிமிடத்தில் எனக்குள் குணமானதை தெளிவாய்ப் பார்த்தேன்.
பய உணர்ச்சி அன்றே சரியானது. உணர்ச்சி சமச்சீர் அந்த நிமிடத்திலிருந்து என்னைவிட்டுக் கலையாத ஒன்றாக மாறிவிட்டது.
இதேபோன்று மற்றொரு சம்பவமும் கிரிவலம் வரும்போது நடந்தது. எனக்குப் பதிமூன்று வயது இருக்கும்.
ஒரு நாள் நள்ளிரவில் கிரிவலம் வந்தேன். வழியில் ஒரு கல்லறை வரும் . அதைப்பற்றிக் கவலைப்படாமல் தாண்டிச் செல்வேன்.
அன்று இரவு பலத்த மழை பெய்தது.
எங்கும் ஒரே இருள்! கரண்ட் இல்லை. தண்ணீர் கரை புரண்டு ஓடிக்கொண்டு இருந்தது.
தூரத்தில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. திடீரென்று ஒரு நாய் எதையோ தன் வாயில் கடித்துச் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை தூரத்திலிருந்து பார்த்தேன்.
அருகில் செல்லச் செல்ல, அந்த நாய் குரைத்தது.
பயத்தைப் பற்றிக் கவலைப்படாமல், மேலும் அருகில் சென்று பார்த்தேன். உடல் பாதி மண்ணில் புதைந்திருக்க, தலை மட்டும் வெளியே தெரிந்தது.
அது ஒரு மனிதனின் தலை என்று தெரிந்தது! முழுவதுமாகப் புதைக்கப்படாத பிணம் நாயிடம் சிக்கிவிட்டது. அது அந்த மனிதத் தலையை சாப்பிட முயற்சி செய்து கொண்டிருந்தது.
கற்பனை செய்து பாருங்கள். ஒரு பதிமூன்று வயது பையன் தனியாக நடுராத்திரியில் ஒரு தலை இல்லாத பிணத்தைப் பார்த்தால் எப்படி இருக்கும்.?
அந்த நாய் தன் வாயில் பிணத்தின் தலையை வைத்திருந்தது.
அந்த உடல், மழை தண்ணீரால் மண்ணுக்கு வெளியே வந்து சாலையில் கிடந்தது.
அப்போது முதலில் உடல் முழுவதும் பயம் பரவ ஆரம்பித்துவிட்டது. ஆனால் அது என் இருப்பை முழுவதுமாக அடைவதற்கு முன்பே ஒரு எண்ணம் தீக்ஷையாக எழுந்தது. பய உணர்வு என் உடலின் இருப்பாக மாறுவதற்கு முன்பே,'எனக்கு உத்வேகத்தை ஊட்டிய ரமண மகரிஷியின் சீடரான அண்ணாமலை சுவாமிகள், இந்தச் சூழ்நிலையில் இருந்தால் எப்படி நடந்து கொள்வார்? அவர் இதைப்பற்றிக் கவலைப்படாமல் இருப்பார், அப்படியானால் இப்போது நானும் இதைப்பற்றிக் கவலைப்படமாட்டேன்' என்ற தீக்ஷை என்னுள் எழ, பயத்திலிருந்து வெளிவந்து விட்டேன்.
கழுதைப் புலியைப் பார்க்கும்போது என்னுள் பய உணர்ச்சி தாக்குதல் இருந்தது. அதன்பிறகு இப்போது இறந்து போன மனித தலையைப் பார்க்கும்போது என் உணர்வு நிலை உயர்ந்திருந்ததால் உணர்ச்சி சம சீர்நிலையடைந்ததினால், அதே பய உணர்வுதான் சிறியதாய் ஏற்பட்டது. ஆனால் அது பய உணர்ச்சியாகி என்னைப் பாதிக்கவில்லை.
மாறாக தெளிவைத்தரும் நிகழ்ச்சியாக அது பிறந்தது. வாழ்க்கையில் இன்னொரு பரிமாணத்தைக் காண்பிக்கும் நிகழ்ச்சியானது.
அப்போது அடிவயிறு கலங்குவதற்குப் பதிலாக, அளவு கடந்த சக்தி உடல் முழுவதும் பரவுவதை, மனத்திற்குள் முழுமையான தெளிவு பரவியதையும் நன்றாய் உணர்ந்தேன்.
அப்போதுதான் ஒரு உண்மை புரிந்தது. பயம் என்பதுகூட நமக்கு நேரடியாய் உதவக்கூடிய ஒருவித ஆழமான சக்திதான் என்பது புரிந்தது.
உணர்ச்சிச் சமச்சீர் (Emotional Balance) அடைவது மிக மிக முக்கியமானது.
உணர்ச்சிகள் என்பது சரியா, தவறா?
Emotions are right or wrong?
உணர்ச்சிகள் சரியா, தவறா? என்கின்ற கேள்விக்கு இடமே இல்லை.
ஏனென்றால் இந்த உணர்ச்சிகள், நமக்குள்ளே இருக்கின்ற சமநிலையை இழக்கும் போதுதான் அது பிரச்சினையாகிறது.
நமக்குள்ளே உணர்ச்சி மாற்றம் ஏற்படும்போது, நம் உணர்வே அதற்கேற்றாற்போல் உருகிப்போகிறது. நம் நிலையே மாறிப்போகிறது.
சொல்லப்போனால், சிலநேரத்தில் வாழ்க்கையின் போக்கையே ஒரு உணர்ச்சி மாற்றிவிடுகிறது.
ஒருவருடைய வாழ்க்கையையே, மிக உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்வதற்கு, ஒரு சின்ன உணர்வே போதுமானது. இல்லை மிக கீழ்நிலைக்கும் போய், அதாவது தூக்குபோட்டுக் கொள்கிற நிலைக்கும் கூட, இன்னொரு சின்ன உணர்ச்சியால் எடுத்துக் செல்ல முடியும். உணர்ச்சிகளுக்கு, அவ்வளவு பெரிய சக்தியிருக்கிறது.
> ஒருவருடைய
> வாழ்க்கையையே,
> மிக உயர்ந்த
> நிலைக்கு எடுத்துச்
> செல்வதற்கு, ஒரு
> சின்ன உணர்வே
> போதுமானது.
கோபம், காமம், எரிச்சல் போன்ற எந்தவிதமான உணர்ச்சியும் ஒருவருக்குள் புகுந்தாலும் சரி, அது இன்னொரு உயிரைக் கொலை செய்கின்ற அளவிற்கோ அல்லது ஓர் உயிரைத் துன்புறுத்துமளவிற்கோகூட போகமுடியும்.
அதேபோல் ஒரு நல்ல, உணர்வு பொங்கினால், நல்ல உணர்ச்சிகள் பெருகினால் ஒரு பெரிய நாட்டையே காப்பாற்றும் அளவிற்கோ அல்லது எரிகின்ற வீட்டிற்குள்கூட குதித்து ஒரு குடும்பத்தையே காப்பாற்றுவதற்கான சக்தியாகவோ அது பொங்க முடியும். அதனால் உணர்ச்சி சரியா, தவறா என்பதை நேரடியாக ஆராய முடியாது.
நம் உணர்ச்சியை நாம் சரியாகக் கையாளுகிறோமா, இல்லையா? என்பதுதான் நம்மை நாம் கேட்க வேண்டிய கேள்வி. நம்மை நோக்கி நாம் கேட்டு ஆராயவேண்டிய கேள்வி இது ஒன்றுதான். வேறொன்றுமில்லை.
இரத்த ஓட்டத்திற்கும், உடம்பிற்கும் நடுவில் பாலமாகயிருக்கக் கூடிய ஹார்மோன்கள் நமக்குள்ளே பொங்கும்போது, மனத்தில் ஏற்படக்கூடிய சில மாற்றங்கள், நம் உணர்விலே ஏற்படுகின்ற சில மாற்றங்கள், இவையெல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து பொங்கும்போது, உள்ளுக்குள் ஏற்படுகின்ற காய்ச்சலைத்தான் நாம் உணர்ச்சிகள் என்று சொல்கிறோம். ஒவ்வொருவருக்கும் 43 வகையான ஜுரங்கள் இருக்கின்றன.
கோபம்,எரிச்சல், கவலை, துக்கம்போல 43 வித ஜுரங்கள் இருக்கின்றன. இதில் எந்தக்
காய்ச்சலுமே தவறு கிடையாது. ஆனந்தம்கூட ஒரு ஜுரம்தான் என்று சொல்வார்கள்.
முதல் அனுபவத்தை அடையும்போது ஒரு மனிதனுக்கு ஆனந்த ஜுரம் ஏற்படுகிறது. உடல் முழுவதும் ஆனந்தம் பொங்கி உடல் முழுவதுமாக அது பற்றிக் கொள்ளும். தீப்பிடிக்கும் பொழுது எப்படி எல்லா பொருளும் அதில் எரியுமோ, அதைப் போன்று ஆனந்தத்திலே மொத்த உடலும் திகுதிகுவென்று எரியும்.
> நம் உடம்பென்கிற
> வீணையில்
> ஒலிக்கின்ற
> உருவாக்குகின்ற
> இனிமையான
> இசைதான்
> உணர்ச்சிகள்.
அப்போது நம் உடம்பில் ஒரு இனிமையான, மிக அருமையான ரசவாத மாற்றம் ஏற்படுகிறது.
அதைத்தான் ஆனந்த ஜுரம் என்று சொல்கிறோம்.
உணர்ச்சிகள் என்றால் வேறொன்றுமில்லை. இயற்கை நம் உடம்பில், நம் உடலென்னும் வீணையில் ஒலிக்கின்ற, உருவாக்குகின்ற இனிமையான இசைதான் உணர்ச்சிகள்.
அதைச் சரியாக இசைத்தோமென்றால், நாம் உட்கார்ந்து கேட்குமளவிற்கு இனிமையான இன்னிசையாகயிருக்கும். சரியாக இசைக்கத் தெரியவில்லையென்றால் நமக்குள்ளே ஒரு இனிமைத்துவம் இருக்காது, அதுவே தொந்தரவாக மாறிவிடும்.
எந்த ஒரு உணர்ச்சிப் பொங்கும் போதும், எந்த ஒரு ஜுரம் நமக்குள்ளே வந்தாலும், 43 வகை ஜுரங்களில் எது எழும்பினாலும் நம்முடைய சமநிலை தடுமாறாத அளவிற்கு நம்முடைய உணர்வுகளைச் சமச்சீர்ச் செய்யும் பக்குவம் இருந்தால், எந்த ஒரு உணர்வும் உணர்ச்சி கொந்தளிப்பாக மாறாது.
அது உணர்வு தடுமாற்றமாக மாறாது. அந்த உணர்வு அப்படியே அனுபவமாகக் கரைந்துவிடும்.
அது உடம்பிற்குள்ளே குதூகலமாகவும், ஒரு இனிமையான அனுபவமாகவும் மாறி கரைந்துவிடும்.
இப்போது பயத்தையே எடுத்துக் கொண்டால், பயம் என்பது நாம் பொதுவாக மனிதர்களுடைய வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், அது ஒரு தேவையில்லாத உணர்வு, தவறான உணர்வு என்றுதான் சொல்வார்கள்.
> 43 வகை ஜுரங்களில் எது
> எழும்பினாலும் நம்முடைய
> சமநிலை தடுமாறாத
> அளவிற்கு நம்முடைய
> உணர்வுகளைச் சமச்சீர்ச்
> செய்யும் பக்குவம் இருந்தால்,
> எந்த ஒரு உணர்வும் உணர்ச்சி
> கொந்தளிப்பாக மாறாது.
ஆனால் பயம் என்பதே ஞானம்தான், தெளிவுதான்.
ஒருமுறை நெருப்பில் கைவைத்த பிறகு,
இன்னொருமுறை அந்த நெருப்பு பக்கம்
போகும்போது “ஐயோ! நெருப்பு சுடும்,”
என்கின்ற அனுபவம் நமக்கு ஏற்படுகிறது.
இது போன்று உணர்வும், அதனால் ஏற்படுகின்ற தெளிவும் ஞானம்தான்.
உண்மையில், நீங்கள் நெருப்புப்
பக்கம் போனபோது நிகழ்ந்த அந்த
அனுபவத்தைத்தான் உங்களுடைய
Updated intelligence என்று சொல்வது.
நம்முள் நிகழும் இந்த நிகழ்விற்குச்
சரியான பேர் கொடுக்கத் தெரியவில்லை.
நெருப்பின் அருகே செல்லும்போது
நமக்குள் நிகழ்ந்தது என்ன என்று
> ஒருமுறை நெருப்பில்
> கைவைத்த பிறகு,
> இன்னொருமுறை அந்த நெருப்பு
> பக்கம் போகும்போது "ஐயோ!
> நெருப்பு சுடும்," என்கின்ற
> அனுபவம் நமக்கு ஏற்படுகிறது.
> இது போன்று உணர்வும்,
> அதனால் ஏற்படுகின்ற தெளிவும்
> ஞானம்தான்.
தெரியாததனாலேயே அதை பயம் என்று சொல்லி விடுகிறோம். நம் மொத்த உடலையும் சடன் பிரேக் போட்டு நிறுத்தக் கூடியது அது.
அந்த நிறுத்துகின்ற செயலை, அந்த அதிர்ச்சியை, அந்த உடனடியான செயலைப் பற்றி என்ன சொல்வதென்று நமக்குத் தெரியவில்லை. என்னவென்று சொல்லத் தெரியாததனால்தான் அதை பயம் என்று சொல்கிறோமே தவிர, அந்த உணர்ச்சிக்குப் பெயர் பயம் அல்ல. அது கெடுதல் விளைவிக்கக் கூடிய உணர்வு கிடையாது.
நீங்கள் நடந்து போய்க்கொண்டே இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள் வோம். நீங்கள் நடந்து சென்ற இடத்தில் ஒரு முள் காலில் லேசாகக் குத்திய உடனே பளீரென்று உங்கள் கால்களை எடுத்துக் கொள்கிறீர்கள். இது உடம்பிற்கே உள்ள புத்திசாலித்தனம்தான், Updated intelligence.
இதேபோல உடம்பிலுள்ள ஒவ்வொரு உணர்ச்சியுமே, நமக்குள்ளேயும் வெளியேயும் நடக்கும் மாற்றத்தை நாம் அனுபவிப்பதற்காக, நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, கொண்டாடுவதற்காக, நமக்குள்ளே பொங்குகின்ற இனிமையான இயற்கையின் சக்திகள்.
இந்த இயற்கையின் சக்திகளைச் சரியாகக் கையாளத் தெரிந்தால், அது தியானம்.
அதைச் சரியாகக் கையாளும் பொழுது உணர்வு சமச்சீரான நிலை உருவாகிறது. அதைச் சரியாகக் கையாளத் தெரிய வில்லை எனும்போதுதான், நமக்குள்ளே உணர்வுச் சமச்சீரற்ற நிலை Imbalance உருவாகிறது.
இதைத்தான் தடுமாற்றம், துக்கம் என்று சொல்கிறோம். அதனால் நமக்குள்ளே ஏற்படுவதெல்லாம் நாம் சொல்லும் எதிர்மறை கருத்துகள்தானே தவிர, அவை எதிர்மறை உணர்ச்சிகளல்ல.
ஆனால் நிஜமாக ஆராய்ந்து பார்த்தோமென்றால், எந்த உணர்ச்சியையும் கையாள்கின்ற அளவிற்கு, அது நம்முடைய உடலையும், மனத்தையும் தாக்காத அளவிற்கு வலுவான ஹார்ட்வேரும், சாப்ட்வேரும் நமக்கு இருந்ததென்றால், அது உணர்ச்சிக் கொந்தளிப்பாக மாறவே முடியாது.
எந்த உணர்ச்சியும் தடுமாறாது. ஒரு ஞானிக்கும், ஒரு மனிதனுக்குரிய இந்த ஜுரங்கள் இருக்கும்.
‘பிறகு மனிதனுக்கும் ஞானிக்கும் என்னதான் வித்தியாசம்?’ என்று உடனே கேட்கத் தோன்றும்.
ஒரு ஜீவன்முக்தருக்கும், ஒரு மனிதனுக்கும் என்ன வித்தியாச மிருக்கிறது?
ஒரு மனிதனுக்கு இந்த 43 ஜுரத்தில், எந்த ஜுரம் வந்தாலும் அவர் அரண்டுபோய் விடுவார். அப்படியே அந்த ஜுரத்தில் மாட்டிக் கொள்வார். குரோதம் என்கிற ஜுரமோ, காமம் என்கின்ற ஜுரமோ, எரிச்சல் என்கின்ற ஜுரமோ வந்ததென்றால் அதிலே அவர் தம்மை இழந்துவிடுவார்.
அந்த உணர்ச்சிக்கே அடிமையாகி விடுவார். அந்த உணர்ச்சியின் பிடியில் அவரின் நரம்பு மண்டலமும் மனதும் சிக்கிக் கொள்ளும்.
ஆனால் ஒரு ஜீவன்முக்தர் தமக்குள் எந்த உணர்ச்சி பொங்கினாலும் அவரால் அதைத் தனித்திருந்து பார்க்கமுடியும். இரண்டாவது அந்தப் பொங்குகின்ற உணர்வுகளை அவரால் ஒரு சிறு சலனமும் இல்லாமல் கையாளமுடியும்.
அந்த உணர்வுகள், அவர் சுதந்திரத்தைப் பறிக்காத பொங்கும் உணர்ச்சிகளாய் இருக்கும். தேவைப்பட்டால் அந்த உணர்ச்சியினுள் அவரால் மிக ஆழமாக ஆழமாகச் செல்லவும் முடியும். எந்த நிமிடம் விடவேண்டுமோ அதை விட்டுவிட்டு, அடுத்த நொடி அதன் பாதிப்போ, சலனமோ சிறிதும் இல்லாமல் வேறு வேலையைப் பார்ப்பார்.
அந்த உணர்ச்சியினால் பாதிப்போ, அந்த உணர்ச்சியின் சுவடோ, அந்த உணர்ச்சியின் வாசமோ அவரின் உள்ளே இருக்காது.
வந்த உணர்ச்சி, உள்ளே எந்த வேலையைச் செய்ய வேண்டுமோ, அந்த வேலையைச் செய்து விட்டு, உடனே வெளியே போய்விடும்.
இப்போது 4 பேரை சமாளித்தாக வேண்டும் என்றால், ஒரு புதுப்பிரச்சினையை கையாளவேண்டும் என்றால், அந்த இடத்தில் கோபம் என்கின்ற உணர்ச்சி பொங்க வேண்டியிருக்கிறது. நாம் அந்த இடத்தில் இதைக் கோபம் என்று சொல்ல முடியாது.
இங்குக் கோபம் என்பது தேவையான ஒரு கருவி. இங்கு இந்த இடத்திலே இதைத் தப்பு என்று சொல்லமுடியாது.
கோபப்பட வேண்டிய இடத்தில் கோபப்பட்டுத்தான் தீர வேண்டும் என்ற அத்யாவசிய சூழலில் அதை அருமையாய்ப் பயன்படுத்தும் சமநிலை இருக்க வேண்டும்.
எப்படி ஒரு காரை ரிப்பேர் செய்யும்போது, வேலை முடிந்தவுடன் ஸ்பேனரை அப்படியே கீழே வைத்து விடுகிறோமோ, அதைப் போலவே கோபம் என்கின்ற உணர்ச்சி பொங்கிய உடன், அதைக் கழற்றி வைத்துவிட்டு நம்மால் போக முடியும். இதுதான் ஒரு ஜீவன் முக்தரிடம் இருக்கும் அளவில்லாச் சுதந்திரம். உணர்ச்சிகள்கூட அவர்களைப் பந்தப்படுத்துவதில்லை.
உணர்ச்சியால் அவர் ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை. அவர் ஒருபோதும் தாக்கப்படுவதில்லை. உணர்ச்சியால் அவருடைய வாழ்க்கையானது தடுமாற்றம் அடைவதேயில்லை. உணர்ச்சி என்பது அவருடைய ஒரு சிறுபாகமாக, ஒரு சின்ன கருவியாய் இருக்கிறது.
ஒரு ஜீவன்முக்தன் அந்த உணர்ச்சியென்கின்ற 43 கருவிகளை, 43 ஜுரங்களை, எப்போதெல்லாம், என்னென்ன சூழ்நிலைகளில் எல்லாம் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் பயன்படுத்தி விட்டு அவசியமில்லாதபோது உடனே கீழே வைத்துவிடுவார்.
அது அவரை துளியும் பாதிக்காது. ஆனால் ஒரு சாதாரண மனிதரை துளி உணர்ச்சிகூட நிச்சயமாகப் பாதிக்கும். பஞ்சில் பட்ட நெருப்புபோல சிறு உணர்ச்சிகூட அவருக்குள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்குப் கொழுந்துவிட்டு எரிய வாய்ப்பிருக்கிறது.
ஜீவன்முக்த வாழ்க்கையை வாழ, நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான். 43 ஜுரங்களில் எந்தவொரு ஜுரத்திலும் மாட்டிக் கொள்ளாதீர்கள். அனுபவிக்கும்போது அனுபவியுங்கள். அதற்குமேல் இது தேவையில்லை என்று தெரிந்த உடனே விட்டுவிடுங்கள். அப்படி எளிதில் விடுபடுகிற அளவிற்கு உங்களின் விழிப்புணர்வை அதிகப்படுத்துங்கள். அதுவே போதுமானது.
உணர்வுத் தெளிவு உங்களுக்குள்ளே பொங்க ஆரம்பித்தால் போதும். நம்முள் உணர்வுத் தெளிவு பொங்குவதற்கு நேரடியாக உதவும் தியானம் அல்லது தியான நுட்பம் என்றுகூட இதைச் சொல்லலாம்.
இன்னும் மொத்தமாக எளிமையாகச் சொல்லி முடிக்கவேண்டுமென்றால், எந்த உணர்ச்சியாய் இருந்தாலும் அதை வாழும் பொழுது, அதை முழுமையாக வாழுங்கள். அந்த உணர்ச்சியை வாழ்ந்து முடித்த வினாடி, அது அவசியப்படாத வினாடி அதிலிருந்து உங்களை அன்கிளட்ச் செய்துவிடுங்கள். விடுவித்துக் கொள்ளுங்கள். மேலுள்ளதை ஒருவர் கடைபிடிக்க ஆரம்பித்தாலே தியானம், ஆனந்தம், அனுபவம், இவை எல்லாமே அவருடைய வாழ்க்கையின் பாகமாக மாறிவிடும்.
தொடர்ந்து விழிப்புணர்வோடு உங்களின் உணர்ச்சிகளைக் கையாளக் கையாள தியானமும் செய்வீர்கள். அனுபவமும் நடக்கும். ஆனந்தமும் அனுபூதியாகும். உணர்ச்சிகளில் சிக்கிக் கொள்ளமாட்டீர்கள்.
உணர்ச்சிகளை அனுபவிப்பது தவறில்லை, ஆனால், அந்த உணர்ச்சியிலேயே சி க்கிக் கொள்வதுதான் தவறு. உணர்ச்சிகளிலிருந்து Unclutch செய்யுங்கள். ஆனந்தமாக இருப்பீர்கள்.