KAILASA Library/ஜீவன் முக்தி/விதியை வெல்லும் வீர்யம்Sign in
ஜீவன் முக்தி

விதியை வெல்லும் வீர்யம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அடையப்படவேண்டியது கிருஷ்ண நிலையே!

The state of Krishna is what needs to be achieved!

தனக்குள் மலர்கிற மலர்ச்சி

Inner transformation

10,000 வருட ஆராய்ச்சியின் சாரம்.

Essence of 10,000 years of Research & Development

யார் யாரைத் திருமணம் செய்துகொள்வது?

Who to Marry Whom?

காய்த்ரி தீக்ஷை : சக்தி-புத்தி விழிப்பு நுட்பம்

Gayatri Deeksha - A Technique to Awaken Energy and intelligence

யார் சம்சாரியாக வேண்டும்? யார் சன்யாசியாக வேண்டும்? வேதஅறிவியல் விளக்கம்.

Who should marry? Who should become a sannyasi? A Vedic-Science based explanation

மனித குலத்திற்கு இழைக்கப்பட்டிருக்கும் மாபெரும் துரோகம்

The Great Conspiracy done against humanity

எதை இழந்திருக்கிறீர்கள் என்பதே தெரியாதது, கொடுமை!

Not being aware of what you have missed is the real misery!

குழந்தைகள் சீரழிவதில்லை! சீரழிக்கப்படுகிறார்கள்!!

Children never degenerate! They are made to degerate!

காமசூத்திரமா? பிரம்ம சூத்திரமா? குருவே முடிவு செய்வார்

Kama Sutra or Brahma Sutra - Guru will decide

வளரும் சூழ்நிலையே நம் வாழ்வை வடிவமைக்கும் Our living environment will design our life

உங்கள் உணர்வு நிலையை மாற்றுவதுதான் தீர்வு Changing the state of your consciousness is the only solution

விதியை வெல்லும் சூட்சுமம் The secret to win over destiny

பறந்துபோய் இலக்கை அடைய முயற்சி செய்பவர்களுக்கு... For those who want to fly and reach the goal...

நடந்துபோய் இலக்கை அடைய விரும்புபவர்களுக்கு... For those who want to walk and reach the goal...

விதியை வெல்லும் வீர்யம்

  • விதியை வெல்லும் வீர்யத்தை அடைவது ‘ஜீவன் முக்தி’

கல்லூரி ஒன்றில் நடத்திய நித்யானந்த ஸ்புரணம் தியான முகாமில் இளைஞர் ஒருவரோடு நிகழ்ந்த இனிமையான உரையாடல்...

"திருமணத்திற்கு முன் பிரம்மச்சரியம் அவசியமா?"

"திருமணத்திற்குப் பின்பும் அவசியம்."

"அதெப்படி திருமணத்திற்குப் பின்பும்..?"

"உங்களின் இந்தக் கேள்வி நியாயம் ஆனதுதான். பிரம்மச்சரியத்தின் அறிவியல் (Science of Bramachariyam) மக்களுக்குத் தெரியாததால்தான், இதைப் போன்ற பல சந்தேகங்கள் எழுகின்றன," எனச் சொன்னபோது, இந்தச் சின்ன கதையைச் சொன்னேன்.

திருமணத்திற்கு
முன் பிரம்மச்சரியம்
அவசியமா?

கிருகஸ்தரொருவர், ஒரு ரிஷியிடம் வில்லங்கமான கேள்வியொன்றைக் கேட்டார்.

கிருகஸ்தர்: "18 பிள்ளைகளைப் பெற்ற என்னுடைய தாத்தாவின் வயது 97, உங்களுடைய ஆஸ்ரமத்திலுள்ள மூத்த சன்யாசியின் வயது 95.

என்னுடைய தாத்தா ஒரு பிரம்மச்சாரியல்ல. ஆனால், உங்களின் மூத்த சன்யாசி வாலிப வயதிலிருந்தே துறவிதான்.

பதினெட்டுப் பிள்ளைகளைப் பெற்ற என் தாத்தா 97 வயதிலும் உங்களின் மூத்த ச ன்யாசியைப் போலவே உற்சாகமாயிருக்கிறார். ஆரோக்கியமாயிருக்கிறார்.

இவர் சம்சாரி. அவர் சன்யாசி. இருவரும் ஒரேமாதிரியாக நன்றாக இருக்கிறார்களே, எப்படி இது சாத்தியம்?" என்று கேட்டு நிறுத்தினார்.

ரிஷி: "காரணம், இருவருமே பிரம்மச்சாரிகள்."

கிருகஸ்தர்: "என்னது! இருவருமே பிரம்மச்சாரிகளா?"

ரிஷி: "95 வயதுவரை வாழ்ந்த சன்யாசி, சன்யாசி யாகாமல் திருமணம் செய்து கொண்டிருந்தார் என்றால், அவரது வாழ்க்கை அதோ கதிதான். அதே போல் உன் தாத்தாவிற்கும் மாறி நிகழ்ந்திருந்தால் வம்புதான்."

திருமணத்திற்கு முன்
பிரம்மச்சரியம்
அவசியம்தானா?
திருமணத்திற்குப் பின்பும்
பிரம்மச்சரியம் அவசியம்.

கிருகஸ்தர்: "திருமணமாகி ஒரு பெண்ணோடு, ஒரு குடும்பத்தோடு வாழ்ந்த என் தாத்தாவால், ஒரு தனி சன்யாசியாக வாழ்ந்திருக்க முடியாதா?"

ரிஷி: "ஒரு குடும்பத்தோடு வாழவேண்டும் என்ற ஆசைகளை (பிராரப்தம்) எடுத்துக்கொண்டு உடலெடுத்த ஒருவர், குடும்பத்தோடுதான் வாழவேண்டும். அதுதான் தர்மம். அதனால்தான், என்னிடம் துறவறம் கேட்பவருக்கெல்லாம் நான் துறவறம் தந்துவிடுவதில்லை. இன்னொரு துணை இல்லாமலே வாழுமளவிற்கு சக்தியளவில் உயர்ந்தவர்கள்தான், துறவறம் எடுக்க வேண்டும். அவருக்குதான் துறவறம் இனிக்கும்."

கிருகஸ்தர்: "அப்படியென்றால், சக்தியளவில் உயராதவர்களுக்கு மட்டும்தான் திருமண வாழ்க்கை கிட்டுமா?"

ரிஷி: "சக்தியளவில் ஒருவர் தன்னை உயர்த்திக்கொள்வதுதான் பிரம்மச்சரியம், தனி மனிதனாய் வாடுவதல்ல. தனி மனிதனாய் மலர்வதே, பிரம்மச்சரியம்.

திருமண வாழ்வு தித்தித்தால், நிச்சயம் அவரது வாழ்வு, அவரது பிராரப்தத்தின் படியேதான் இருக்கிறது. அதுபோலவே ஒரு துறவியின் வாழ்வில் துறவறம் தித்திக்க வேண்டும். அது குன்றாத உத்சாகத்தைத் தரவேண்டும்.

அப்படியில்லாமல் திருமணமோ, துறவறமோ முதலில் தித்தித்து, பின் கசக்க ஆரம்பித்தால், அந்த நபர் தமக்கு நேர்மாறான வாழ்வை தேர்ந்தெடுத்து விட்டார் என்று அர்த்தம்.

ஒரு மனிதனின் சக்தி என்பது, அவருடைய உத்சாகத்திற்கான எரிபொருள் போன்றது.

அந்தச் சக்தியானது அளவுக்கு மீறி செலவழிக்கப்படும்போதுதான், மனிதனை இறுக்கம், துக்கம், சோர்வு, கோபம் போன்ற எல்லாமே ஆக்கிரமிக்க ஆரம்பிக்கின்றன. மனிதன் வாட ஆரம்பிக்கிறான்.

பிராரப்த ஆசைகளின்படி வாழும் ஒரு மனிதர் வாடமாட்டார். அப்படி வாடினால், அதிலிருந்து உடனே வெளிவர வேண்டும்."

கிருகஸ்தர்: "ஆமாம்! நான்கூட அடிக்கடி
வாடித்தான் போகிறேன். அதிலிருந்து வெளிவர
என்ன செய்ய வேண்டும்?"

ரிஷி: "தனி மனிதராய் வாழ விரும்பினாலும், குடும்பஸ்தராய் வாழ விரும்பினாலும், இருவரின் வாழ்க்கைக்கும் அடிப்படையானது சக்திதான். அதில் பற்றாக்குறையானவர் எங்கேயிருந்தாலும், வாட ஆரம்பித்துவிடுவார். அந்த சக்தியைப் பெற்றவர் எங்கேயிருந்தாலும், குன்றாத ஆனந்தத்தோடும், உற்சாகத்தோடும் இருப்பார். உன் தாத்தாவும், நம் மூத்த சன்யாசியும் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள், சக்தியில் உயர்ந்தவர்கள்.

வீணான கற்பனைகளிலும், எண்ணங்களிலும் சிக்கிக்கொள்ளாதவர்கள். அந்த அளவிற்கு உள்சுதந்திரம் பெற்றவர்கள் இருவரும். அந்த அளவிற்கு தியானங்களைச் செய்து உயர்ந்தவர்கள்.

உள் சுதந்திரமடைவதற்கான உயர்ந்த முறையே பிரம்மச்சரியம் என்று அழைக்கிறோம். அந்தச் சுதந்திரத்தை நிஜமாய்க்கொண்டாடுபவர்களே பிரம்மச்சாரிகள்.

இவ்வுலகில் மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் பூர்ணமான உள் சுதந்திரம் பெற வேண்டும்,” என முடித்தார்.

எப்படி ஆங்கில மருத்துவராவதற்கு
ஐந்து வருட எம்.பி.பி.எஸ். முக்கியமோ,
அதேபோல் தியானமும் வயதானவரைவிட,
வாலிபர்களுக்குத்தான் சிறப்பான
பலன்களைத் தருகிறது.

ஐம்பது வருட குடும்பஸ்தராவதற்கு முன்,
சில வருடங்களாவது, சக்தியைச் சேமித்து
வைக்கப் பழகியிருக்க வேண்டும்.

> உள் சுதந்திரமடைவதற்கான
> உயர்ந்த முறையை
> பிரம்மச்சரியம்
> என்றழைக்கிறோம். அந்தச்
> சுதந்திரத்தை நிஜமாய்க்
> கொண்டாடுபவர்களே
> பிரம்மச்சாரிகள். மனிதராய்ப்
> பிறந்த ஒவ்வொருவரும்
> பூர்ணமான உள் சுதந்திரம்
> பெற வேண்டும்.

அடையப்படவேண்டியது கிருஷ்ண நிலையே!

The state of Krishna is what needs to be achieved!

சின்ன கதை ...

கிருஷ்ணர், கோபிகைகளோடு ஆனந்தக் கூத்தாடியபடி வந்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கே பாய்ந்து சென்று கொண்டிருந்த யமுனை நதியைக் கடக்க வேண்டியிருந்தது. நதியிலோ தண்ணீர் கரைபுரண்டோடியது. கடக்க முடியாது.

அப்போது கிருஷ்ணர், “யமுனையே நான் பிரம்மச்சாரி என்பது உண்மையானால்... எனக்கு வழிவிடு,” என்று சொன்னார்.

அவர் சொன்ன உடனே, யமுனை கிழித்துக் கொண்டு, கிருஷ்ணர் நடந்து செல்ல பாதையை உருவாக்கிக் கொடுத்தது. கிருஷ்ணர் பிரம்மச்சாரி என்பதை இயற்கையே உறுதிசெய்திருக்கிறது.

இப்படியொரு சம்பவம் நிகழ்ந்ததா, இல்லையா? இது நிஜமா, பொய்யா? என்றெல்லாம், நாம் ஆராய்ச்சி செய்வதால் பலன் ஏதும் இல்லை. இச்சம்பவத்தில் பதிந்திருக்கும் சத்யம் மிக ஆழமானது.

அது...

'கிருஷ்ணர், ஒரு பிரம்மச்சாரி'

அவ்வளவு கோபியரோடு இருந்தும் கிருஷ்ணர் ஒரு பிரம்மச்சாரியாக, எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருந்திருக்கிறார்.

நீரிலேயே இருந்தாலும், அதனோடு கொஞ்சமும் நட்புகொள்ளாத தாமரையைப் போல, உணர்வளவில் யாரோடும் ஒட்டிக்கொள்ளாத, சிக்கிக்கொள்ளாத சுதந்திரத்தைப் பெற்றிருந்தால் மட்டுமே, கிருஷ்ணரைப் போல் வாழ்வைக் கொண்டாடலாம்.

தமக்குள் ஆனந்தமாய்
தமக்குள் சுதந்திரமாய்
யாருடைய தொந்தரவுமில்லாமல்
இருக்கும் நிம்மதியான
நிலையே சன்யாசம்.

  • யார் சன்யாசி?

தனக்குள் ஆனந்தமாய், தனக்குள் சுதந்திரமாய், யாருடைய தொந்தரவு மில்லாமல் இருக்கும் நிம்மதியான நிலையே சன்யாசம்.

  • இன்னும் விளக்கமாய்ச் சொல்லுங்கள்

பெண்களின் நினைவுகளாலும், பெண்களின் அருகாமையாலும், தொந்தரவு செய்யப்படாத நிலையில் இருப்பவர் சம்சாரியாக (இல்லறவாசி) இருந்தாலும் சன்யாசிதான். அதுவே கிருஷ்ண நிலை.

பெண்களே இல்லாத காட்டுக்குள் மரத்தினடியில் அமர்ந்திருக்கும் தனிமனிதரின் மனத்திற்குள் ரம்பையாகவும், மேனகையாகவும் மாறி மாறிப் பல பெண்களின் நினைவுகள் வந்து வாட்டினால்...?

அவர் தம்மை சன்யாசி என்று அழைத்துக்கொண்டாலும், சம்சாரியே.

சன்யாசம் உடையில் இல்லை. சன்யாசம் உணர்விலிருக்கிறது. இதுவரை சொன்னது ஆண்களுக்கு மட்டுமல்ல. பெண்களுக்கும் பொருந்தும்.

ஆண்களின் நினைவுகளினால் அலைக்கழிக்கப்படாத ராதை நிலையை அடைந்துவிட்டால், அவர்களும் கிருஷ்ண நிலையை அடைந்தவர்கள்தான்.

தனக்குள் மலர்கிற மலர்ச்சி

Inner transformation

விதியை வெல்லும் இன்னொரு அருமையான சத்தியம்...

‘விதியை வெல்லும் வீரியம் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது’.

‘பிரஹ்மஹ’ என்றால் பிரபஞ்சத்தைப் போன்று; இறைவனைப் போன்று, பிரபஞ்ச இருப்பைப் போன்று! என்று பொருள்.

‘சர்யம்’ என்றால் வாழுதல்.

> எதைப் பற்றியும்
> கவலைப்பட
> வேண்டியதில்லை.
> உங்களாலும்
> விதியை வெல்ல
> முடியும்.

பிரபஞ்சத்தின் இருப்பைப் போன்றே இயங்குதல். பிரபஞ்ச இருப்பைப் போன்று வாழ்தல், இதைத்தான் பிரம்மச்சரியம் என்கிறோம். அதைத்தான் விதியை வெல்லும் வீரியம் எனச் சொல்கிறோம்.

‘உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? இல்லையா?’ என்பதைப்பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை.

ஏனென்றால், உங்களாலும் விதியை வெல்ல முடியும்.

இப்போது நீங்கள் உள்வாங்கும் சத்தியங்கள் இந்தப்பிறவிக்கு மட்டுமல்லாமல், இதற்குமேல் நீங்கள் எடுக்கப்போகும் பிறவிகளில் கூட, வந்து உதவும்.

நீங்கள் யாராக இருந்தாலும், பிரம்மச்சரியம் எனும் ஆனந்தமயமான அறிவியலைப் பற்றிய செய்திகளே உங்களுக்குள் மலர்ச்சியை ஏற்படுத்தும்.

விதியை வெல்லும் வீரியம் பிரம்மச்சரியம்

பிரபஞ்சம் எப்படி இயங்குகிறதோ, அதைப் போலவே இயங்குதல்.

இந்தச் சத்தியத்தைப்பற்றி, நிறைய பேசுவதில்லை. காரணம், இது ரொம்ப சூட்சுமமான சத்தியம். இந்தச் சத்தியத்தை உள்வாங்குவதற்கே, ஓரளவிற்கு உணர்வு மேன்மை அடைந்து, சூட்சுமத்தன்மையை அடைந்திருக்க வேண்டும்.

தமக்குள்ளே மலர்கிற தெளிவைத்தான் பிரம்மச்சரியம் என்கிறோம்.

சிவசூத்திரத்தில் ஈஸ்வரன்...
க்ரமத்வாதஷகம் ஸம்யக்
த்வாதஷாக்ஷர பேதிதம்
ஸ்தூல ஸூக்ஷ்ம பரஸ்தித்யா
புக்த்வா முக்த்வாந்த: சிவ:

"பன்னிரு உணர்வாக பகுத்திருக்கும், பன்னிரு மையங்களும் முறைப்படி ஸ்தூல, சூக்ஷ்ம மற்றும் அதைத்தாண்டிய பரநிலை, ஒவ்வொன்றையும் விட்டு விட்டுத் தியானிக்க... இறுதியில் சிவநிலை வெளிப்படும். சிவசொரூபமாக மாறுவோம்.

ரொம்ப ஆழமான நுட்பம் இது. மனிதக் குலத்தின் மிகப்பெரிய வாழ்க்கை முறையை, மிக உயர்ந்த வாழ்க்கை முறையை ஈஸ்வரன், இந்தச் சூத்திரத்திலே வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஆனந்த சன்யாசத்திற்கான நேர்முகத் தேர்வில், புதிதாய் வந்திருந்த இளைஞர், “பிரம்மச்சரியம் என்றால், வாழ்வின் சுகங்களை விட்டு வெறுமையாய் வாழ்வதா?” என கேட்டார்.

“பிரம்மச்சரியம் என்பது, வெறுமையாய் வாழ்வதல்ல, வாழ்வின் வெறுமையைப் போக்கும் வாழ்வியல் பயிற்சி அது!

வாழ்வில் எல்லாமிருந்தும் ஏதோ ஒரு வெறுமை இருக்கும்.

வாழும் வாழ்வில் எதுவுமில்லா விட்டால் கூட, ஆனந்தமாய் இருக்கும் வாழ்வு முறையைக் கற்றுக்கொண்டு வாழ்வதே பிரம்மச்சரியம்,” என்று சொன்னோம்.