பிரம்மச்சரியத்தின் ரகசியம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
• பிரம்மச்சரியம் என்றால்?
ஆண் பெண்ணை பார்த்து விலகி ஓடுவதும், பெண் ஆணைப்பார்த்து விலகி ஓடுவதும் அல்ல. இதையெல்லாம் கடந்தது.
• கடந்தது என்றால்?
உடலளவில் சலனப்படுவதைக் கடந்து இருப்பது பிரம்மச்சரியம் அல்ல. மனதளவில் சலனப்படுவதைக் கடந்து இருப்பதே பிரம்மச்சரியம்.
• சலனம்?
யாராலும், எந்த உணர்ச்சியாலும் அசைக்கப்பட முடியாமல் இருக்கும் நிலையே, கிருஷ்ணரின் பிரம்மச்சரிய நிலை. இதைத் தொட்டவர் திருமணம் ஆன பின்கூட சலனப்படாமல் இனிமையாக ஆழ்ந்து வாழ்ந்து கடந்து வருவார்.
இந்த நிலையைத் தொடாதவர் கட்டப்பிரம்மச்சாரியாக வாழ்ந்தாலும்கூடகூட சலனப்படுவார். இதுதான் கடக்கப்பட வேண்டும். இது எல்லோருக்கும் பொருந்தும்.
தமக்குள்ளே மலர்கிற தெளிவால், தம்
விதியையே வெல்லும் நிலையைத்தான்
பிரம்மச்சரியம் என்று ஈஸ்வரன் இந்தச்
சூத்திரத்திலே 5000 வருடங்களுக்கு முன்பே
வெளிப்படுத்தியிருக்கிறார்.
தமக்குள்ளே மலர்கிற தெளிவால், தம் விதியையே வெல்லும் நிலைதான் பிரம்மச்சரியம் என்று ஈஸ்வரன் இந்தச் சூத்திரத்தில் சொல்கிறார்.
இந்தப்பிறவியிநீங்கள்
உள்வாங்கும்
சத்தியங்கள்
இந்தப்பிறவிக்கு
மட்டுமல்லாமல்,
இதற்குமேல் நீங்கள்
எடுக்கப்போகும்
பிறவிகளில் கூட,
வந்து உதவும்.
ஆழ்ந்த சூட்சுமமான நிலைக்குள் செல்லச் செல்ல, இந்த உணர்வுக்குள்ளே மூழ்க மூழ்க, நமக்குள்ளே, பிரபஞ்சத்தைப் போலவே வாழுகிற ஒரு உணர்வு நிலை மலர்ந்துவிடும். அதைத்தான் நம்முடைய ரிஷிகள், பிரம்மச்சரியம் என்ற வார்த்தையினாலே விளக்குகிறார்கள்.
அதாவது, பிறந்த ஒரு ஜீவன், இனிமையாக வாழ்க்கையை வாழத்துவங்கி, படிப்படியாகத் தம்முடைய சூட்சும நிலைக்குள், எதிலிருந்து நாம் வெளிப்பட்டோமோ, அந்த நிலையை நோக்கிச் சென்று, அதற்குள்ளே வாழத் துவங்கும் பொழுது அதற்குள்ளே ஆழ்ந்து செல்லத் துவங்கும் பொழுது, ஏற்படுகிற மாற்றத்தைத்தான் பிரம்மச்சரியம் என்று சொல்கிறோம்.
10,000 வருட ஆராய்ச்சியின் சாரம்
Essence of 10,000 years of Research & Development
ஒவ்வொரு தனிநபரும் சுயமாகத் தங்களைப் பற்றியும், தங்களின் வாழ்க்கையைப் பற்றியும் முடிவெடுக்கும் சுதந்திரத்தையும், தெளிவையும் தந்து, வாழ்வை மேம்படச் செய்யும் பாரம்பரியமே வேதப் பாரம்பரியம்.
வாழ்க்கையின் இலட்சியம் என்ன?
எந்த வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தால், வாழ்வின் இலட்சியத்தை அடைய முடியுமோ அதற்கு முக்கியத்துவம் அளித்து, ஆராய்ச்சி செய்த பாரம்பரியமே வேதப் பாரம்பரியம்.
வாழ்விற்கு முக்கியத்துவம் அளிக்காமல், வாழ்விலிருந்து ஓய்வு பெறும் வயதில், "நான் வக்கீலாக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், என் துரதிர்ஷ்டம், இப்படிக் குமாஸ்தாவாகவே இருக்கிறேன்,” என்று சிலர் புலம்புவார்கள்.
நம் முன்னோர்கள் வாழ்வின் இலட்சியத்தை உணர்ந்ததால்தான், வாழ்க்கையை உள்வாங்குவதற்கும், புரிந்துகொள்வதற்கும் முக்கியத்துவம் அளித்தார்கள்.
நம் வாழ்க்கையைப் பற்றி ஆழமாக ஆராய்ச்சி செய்து, அந்த ஆராய்ச்சியின் பலனை வாழ்க்கை முறையாக வடிவமைத்து, மேம்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
அதற்கேற்றாற்போல் 10,000 வருட ஆராய்ச்சியின் சாரத்தையும், நம்முடைய வாழ்க்கையின் பாகமாகவே செய்திருக்கிறார்கள்.
யார் யாரைத் திருமணம் செய்துகொள்வது?
Who to Marry Whom?
வாழ்க்கையின் முதல்பாகம், வாழ்க்கையைப் பற்றி நமது முன்னோர்கள் செய்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை முழுமையாகப் புரிந்துகொள்வதற்காகவும், உள்வாங்கிக் கொள்வதற்காகவும் தங்களின் வாழ்வை செலவு செய்வதாகும்.
யார் யாரைத் திருமணம் செய்து கொண்டு வாழ்வதுஎன்பது இந்த முதல் பாகத்திலேயே தெளிவாக முடிவு தெரிந்து விடும்.
யாரெல்லாம் திருமணம் செய்யலாம், யாரெல்லாம் இல்லறத்திற்குள் நுழையலாம். என்பதை முதல் பாகத்திலேயே சுயமாக முடிவு செய்து விடுவார்கள். தங்கள் வாழ்க்கையைப் பற்றி தாங்களே முடிவு செய்து விடுவார்கள்.
ஒரு குழந்தை பிறந்தவுடனேயே, அந்தக் குழந்தையைப் பெற்றோர்கள், குருகுலத்திலே ஒப்படைப்பார்கள்.
அந்தக் குருகுலத்தில் முதல் ஏழு ஆண்டுகள் வரை, அந்தக் குழந்தை விளையாடி, செயல்முறை மூலமாக வாழ்க்கையைக் கற்றுக் கொள்ளும்.
ஏழு ஆண்டு வரை குழந்தைகளுக்கு அக்ஷரம் அளிக்கப்படுவதில்லை. எழுத்தும், வார்த்தைகளும் அளிக்கப்படுவதில்லை.
அக்ஷரம் என்றால் 7 வயதிற்கு முன் குழந்தைக்கு எழுத்தை அளிப்பது. அதன் பக்க விளைவாக அது அவர்களுடைய பாவனைச் சக்தியை (visualisation) அழிக்கும்.
அது கண்ணை விற்று, ஓவியம் வாங்குவது போலாகும். கால்களை விற்று நடனமாடக் கற்றுக் கொள்வதைப் போல; கைகளை விற்று ஓவியம் வரைவது போல ஒரு கொடுமையான விஷயம். ஏழு ஆண்டுகள் வரை நமது குருகுலத்தில், குருகுல பாரம்பரியத்தில் அக்ஷரம் அளிக்கப்படுவதில்லை. இது போன்று ஒவ்வொரு கட்டத்திலும், பிறப்பிலிருந்து இறப்பு வரை, வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட பாரம்பரியம் வேத பாரம்பரியம். 10,000 வருடங்கள் நம் ஞானிகளும், ரிஷிமார்களும் செய்த ஆராய்ச்சியின் சாரத்தினால்தான் இன்னும் பயனடைந்து கொண்டிருக்கிறோம்.
திருமண வாழ்வின் ரகசியம்
•கல்யாணம் செய்து கொண்டால் நிம்மதியாக வாழவே முடியாதா?
வாழ முடியாது... என்று சொல்ல முடியாது. காரணம் கல்யாணம் என்பது தரகர்களாலும், யாரோ ஒரு ஜோதிடர் எழுதிய மஞ்சள் படிந்த ஜாதகத்தாலும் நிர்ணயிக்கப்படுகிறது.
கல்யாணம் என்பது Share Market அல்ல. முன்பின் தெரியாத இருவர் அடுத்த 40 வருடம் ஒன்றாகச் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் நிம்மதி என்பது கேள்விகுறியாகத்தான் இருக்கும்.
திருமணத்திற்கு முன், ஜாதகப் பொருத்தம் பார்ப்பதற்கு முன், மனப்பொருத்தம் பார்க்க வேண்டும். வெறும் வயது வரம்பை மட்டும் பார்ப்பதைத் தாண்டி அவர்களின் சக்தி, புத்தி எந்த அளவிற்குப் பொருந்துகிறது என்பதைப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்துச் செய்யப்படும் திருமணமானது நிச்சயமாக ஆனந்தத்தில் துவங்கி ஆனந்தத்தில்தான் முடியும்’.
காயத்ரி தீக்ஷை : சக்தி-புத்தி விழிப்பு நுட்பம்
Gayatri Deeksha - A Technique to Awaken Energy and Intelligence
ஏழு வயதில் குழந்தைகளுக்கு காயத்ரி தீக்ஷை அளிக்கப்படும்.
காயத்ரி தீக்ஷை என்பது எந்தத் தெய்வத்தையும் வழிபடுவதற்கான முறை அல்ல. நம்முடைய உணர்வை விழிப்பாக்குவதற்கான தீக்ஷை, நம்முடைய உணர்வை மலரச் செய்வதற்கான தியானமுறை இந்த காயத்ரி தீக்ஷை.
நம்முடைய உணர்வை சூட்சும நிலைக்குக் கொண்டு செல்வதற்கான தியான முறைதான், காயத்ரி தீக்ஷை. காயத்ரி மந்திரத்தினுடைய பொருளே, அதுதான்.
மந்திரம் :
"ஓம் பூர் புவஸ் ஸவ:
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோயோந: ப்ரசோதயாத்’
காயத்ரி தீக்ஷை எந்த
தெய்வத்தையும்
வழிபடுவதற்கான
முறை அல்ல.
நம்முடைய உணர்வை
விழிப்பாக்குவதற்கான
தீக்ஷை.
பொருள் :
"எந்த நுண்சக்தி, எனக்குள் நுண்ணறிவை மலரச் செய்யுமோ, அந்தச் சக்தியைத் தியானிக்கி றேன். இந்தச் சக்தியைத் தியானிப்பதற்கு, அந்தச் சக்தியே எனக்கு உதவட்டும். அந்தச் சக்தியின் அருளால் நான் அந்தச் சக்தியை அடைவேனாக, அனுபவிப்பேனாக!"
இதில் பார்த்தீர்கள் என்றால், எந்த ஒரு
தனித் தேவதையையும் வழிபடவில்லை.
உங்கள் உணர்வை மேம்படுத்தி கொள்கிற,
அருமையான தியான நுட்பமாக நமக்கு
வழங்கியிருக்கிறார்கள்.
> குழந்தைகளுக்கு
> வழங்கப்படும் முதல்
> பாடமே, தன்னுடைய
> உணர்வில் உயர்வதுதானே
> தவிர, வார்த்தைகளைக்
> கற்றுக்கொள்வது அல்ல.
> நம்முடைய பாரம்பரியத்தின்
> முதல்பாடமே, உணர்வை
> மலரச் செய்கிற பாடம்தான்.
ஏழு வயதில், உங்கள் உணர்வை சூட்சுமமாக்கிக் கொள்ளும் தியான நுட்பம் வழங்கப்படும். ஏழில் இருந்து பதினான்கு வயது வரை, அந்தக் குழந்தை ஆழ்ந்து, இந்தத் தியானங்களுக்குள் மூழ்கும்.
"குழந்தைகளுக்கு வழங்கப்படும் முதல் பாடமே, தன்னுடைய உணர்வில் உயர்வது தானே தவிர, வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது அல்ல. நம்முடைய பாரம்பரியத்தின் முதல் பாடமே, உணர்வை மலரச் செய்கிற பாடம்தான்.