நிஜமான சாதனை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
நிஜமான வளர்ச்சிக்கான சூட்சுமம்... Secret of real growth
நிஜமான சாதனை Real achievement
உடலுடைய உச்சம் என்ன? What is the peak of your body performance?
மனம் உச்சத்தில் இருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? How to know if the mind is in its peak performance?
ஆன்மா உச்சத்தில் இருக்கிறதா என்று எப்படிப் பார்ப்பது? How to know if the soul is in its peak performance?
உயர்ந்த பொக்கிஷங்களைப் பெற... To receive precious gifts
ஆன்ம பல தியானம் Meditation for soul-strength
நிஜமான சாதனை
நிஜமான வளர்ச்சிக்கான சூட்சுமம்...
Secret of real growth
ஜென் ஞானி ஒருவரிடம், “ஒருவரின் முன்னேற்றம், அசுர வளர்ச்சி என்று சொல்வது எதைப் பொறுத்தது?'' என வாலிபர் ஒருவர் கேட்டபோது....
"அது... நீங்கள் குதிரையா? இல்லை எருமையா? இல்லை கழுதையா? என்பதைப் பொறுத்தது,'' என்று பதிலளித்தார்.
“இவையெல்லாம் ஒருவரின் முன்னேற்றத்தை எப்படி நிர்ணயிக்க முடியும்?'' “கழுதையை ஒரு தட்டு தட்டினால் என்ன செய்யும்?'' “பின்னால் எட்டி உதைக்கும்.'' “எருமையை ஒரு தட்டு தட்டினால்...'' “கொஞ்சங்கூட கண்டுகொள்ளாது.''
> வெறுமனே
> வெளியுலகில்
> பெயரளவிலோ
> அல்லது புகழ்
> அளவிலோ
> பணத்தளவிலோ
> சாதிப்பது நிஜமான
> சாதனை அல்ல.
“குதிரையை ஒரு தட்டு தட்டினால்?'' “பிய்த்துக் கொண்டு பறக்கும். அசுர வேகத்தில் ஓட ஆரம்பிக்கும்.''
“அவ்வளவுதான். நீங்களே உங்களின் முதல் கேள்விக்கான பதிலைச் சொல்லி விட்டீர்கள்.''
“என்னது! நானே சொல்லி விட்டேனா?''
“ஆம். குதிரையாகுங்கள்,'' எனச் சொல்லிவிட்டு, அங்கிருந்து ஜென் குரு எழுந்து சென்றுவிட்டார். முதல் கேள்வியைக் கேட்ட வாலிபர், ஜென் குருவின் கடைசி வரியைத் தியானித்ததினாலேயே ஞானமடைந்துவிட்டார் என அந்த ஜென் கதை முடிவடைகிறது.
ஒரு தட்டு தட்டினால் கழுதைப் பின்னால் எட்டி உதைக்கும். எருமை அதே இடத்தில் நிற்கும், ஆனால், குதிரை முன்னால் பாய்ந்து ஓடும்.
அதேபோல், யாராவது ஒருவர் ஒரு திட்டு திட்டினால், சிலர் மீண்டும் திட்டுவார்கள். சிலர் கண்டுகொள்ளாமல் சும்மாயிருந்து விடுவார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டுமே வாங்கிய திட்டிற்கும், கிடைத்த அவமானத்திற்கும், நேர் எதிராகச் செயல்படுவார்கள். குதிரையைப்போல முன்னோக்கிப் பாய்வார்கள்.
பின்னால் எட்டி உதைப்பதும், சரிக்கு சமமாய்ச் சண்டைக்கு நிற்பதும் ஒன்றே. இதனால் முன்னேற்றத்திற்குப் பதில் பின்னேற்றம்தான் மிஞ்சும். சக்தி முன்னோக்கிப் பாயாததால், இப்படிப்பட்டவர்களுக்கு வளர்ச்சி என்பதே சாத்தியமில்லை. வீழ்ச்சி மட்டுமே சாத்தியம்.
கண்டுகொள்ளாமல் சும்மாயிருப்பதும், திட்டுவாங்கிய பின் வாயை மூடிக்கொண்டு இருப்பதும் ஒன்றே. இப்படியிருப்பவர்களின் வாழ்க்கையானது வளர்ச்சியற்றதாக, வெறுமை ஆனதாகத் தொடருவதை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது.
முன்னோக்கி ஓடுவதும், திட்டியவரின் மீது வஞ்சம் கொள்ளாமல், அதையும் தம்மைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பாகவோ அல்லது தம்மைப்பற்றிய ஆராய்ச்சிக்கான ஒரு வாய்ப்பாகவோ பயன்படுத்திக் கொள்பவதும் ஒன்றே.இப்படிப்பட்டவர்களின் முன்னேற்றமானது அசுர வளர்ச்சியாக இருக்கும்.
நிஜமான சாதனை
Real achievement
முதலில் "சாதனை' என்ற வார்த்தையை ஆழ்ந்து புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
நம்முடைய உடலை, அதனுடைய உச்சத்தை உணரச் செய்வது. நம்முடைய மனத்தை அதனுடைய உச்சத்தை அனுபவிக்கச் செய்வது, நம்முடைய ஆன்மாவை, அதனுடைய உச்சத்திலே லயிக்கச் செய்வது. இதுதான் நிஜமான சாதனை.
உடல், தன்னுடைய உச்சத்தை அனுபவிப்பது.
மனம், தன்னுடைய உச்சத்தை அனுபவிப்பது.
ஆன்மா, தன்னுடைய உச்சத்தை அனுபவிப்பது.
இவை நாம் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய சத்தியங்கள். வெறுமனே வெளியுலகில் பெயரளவிலோ அல்லது புகழ் அளவிலோ அல்லது பணத்தளவிலோ மட்டும் சாதிப்பவை, சாதனைகள் அல்ல. அவை வெளி உலகத்திலே செய்யப்பட்ட சாதனைகள். ஒவ்வொரு குறிப்பிட்ட துறையிலே செய்யப்பட்ட சாதனைகள்.
சத்தியமான சாதனை என்ன வென்றால்,
நிஜமான சாதனை என்ன வென்றால்,
உங்களுடைய உடலை அதனுடைய
உச்சத்தை உணரச் செய்வது, மனத்தை
அதனுடைய உச்சத்தை அனுபவிக்கச்
செய்வது. ஆன்மாவை அதனுடைய
உச்சத்திலே லயிக்கச் செய்வது. இதுதான்
நிஜமான சாதனை.
> நிஜமான சாதனை
> என்னவென்றால்...
> உங்களுடைய உடலை
> அதனுடைய உச்சத்தை
> உணரச் செய்வது, மனத்தை
> அதனுடைய உச்சத்தை
> அனுபவிக்கச் செய்வது.
> ஆன்மாவை அதனுடைய
> உச்சத்திலே லயிக்கச்
> செய்வது.
உடலுடைய உச்சம் என்ன?
What is the peak of your body performance?
> நீங்கள் உச்சத்தில் இருந்தால்,
> சனியால் உங்களுக்கு எந்தக்
> கவலையும் இருக்காது.
> ஆனால் நீங்கள் நீச்சத்தில்
> இருந்தீர்களானால், சனி எங்கு
> இருந்தாலும்,
> நீங்கள் கவலையோடுதான்
> இருப்பீர்கள்.
மிக உயர்ந்த உற்சாகத்தோடு, எப்பொழுதும் பொங்கி வருகிற ஆனந்தத்தோடு இருப்பது, உடலின் உச்சத் தன்மை.
நீங்கள் உச்சத்தில் இருக்கிறீர்களா அல்லது
நீச்சத்தில் இருக்கிறீர்களா என்பதற்கு எது
அளவுகோல்?
நீங்கள் உங்களுடைய உடலின் உச்ச த்தன்மையையும் பார்த்து இருப்பீர்கள்; நீச்சத்தன்மையையும் பார்த்திருப்பீர்கள். காலையில் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் பொழுதே, 'இன்னொரு நாள் வந்து விட்டதா? இன்னொரு முறை எழுந்தாக வேண்டுமா?' என்று நினைத்தீர்கள் என்றால், உங்களின் உடல் நீச்சத் தன்மையில் இருக்கிறது என்று அர்த்தம்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நம் உடல் உச்சத்தன்மையில் இருக்கிறதா, நீச்சத்தன்மையில் இருக்கிறதா என்பதை இதை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.
நாம் எல்லோரும், சனி உச்சத்தில் இருக்கிறாரா, நீச்சத்தில் இருக்கிறாரா என்றுதான் கவலைப்பட்டுக் கொண்டிருப்போம்.
ஆனால் நாம் உச்சத்தில் இருக்கிறோமா, நீச்சத்தில் இருக்கிறோமா என்று கவலைப்படுவதே இல்லை.
நீங்கள் உச்சத்தில் இருந்தால், சனியால் உங்களுக்கு எந்தக் கவலையும் இருக்காது. ஆனால், நீங்கள் நீச்சத்தில் இருந்தீர் களானால், சனி எங்கு இருந்தாலும், அதில் நீங்கள் கவலையோடுதான் இருப்பீர்கள்.
பூமியில் 90% பேர் ஜோதிடத்தை நம்புகிறார்கள். எந்த மதமாக இருந்தாலும், அதில் ஏதாவது ஒரு வடிவத்திலே, ஜோதிடம் உயிரோடு இருக்கவே செய்கிறது.
நாம் அனைவரும், 'சனி உச்சத்தில் இருக்கிறாரா, நீச்சத்தில் இருக்கிறாரா' என்று கவலைப்படுவதை விட்டுவிட்டு, 'நாம் உச்சத்தில் இருக்கிறோமா, நீச்சத்தில் இருக்கிறோமா' என்று உணரத் துவங்கினோமானால், நம்முடைய வாழ்க்கையையே மாற்றிவிடலாம். நம்முடைய உணர்வையும் உண்மையிலேயே மாற்றிக் கொள்ள முடியும். உங்கள் உடல் உச்சத்தில் இருக்குமானால், ஆரோக்கியமான வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். ஆரோக்கியமான வாழ்க்கைதான், உடல் உச்சத்தில் இருப்பதற்கான அளவுகோல் வாழ்க்கைதான்.
மனம் உச்சத்தில் இருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?
How to know if the mind is in its peak performance?
உச்சத்தில் இருக்கிற மனம் எப்படி இருக்கிறதென்றால், அதன் உச்சத்தில் இருக்கும் பொழுது, அதனுடைய குணங்களும், குணமாற்றங்களும், உங்களைத் தாக்காத அளவிற்கு, இனிமைத் தன்மையோடு தன்னை வெளிப்படுத்தும்.
உச்சத்தில் இருக்கும் மனமானது, எந்த விதமான வேறுபாடு களிலும், மாறுபாடுகளிலும் சிக்காமல், உங்களுடைய உணர்வை இனிமையாக வைத்திருக்கும்.
மனம் உச்சத்தில் இருந்தால், மனநிலை எப்படி இருக்கும்?
'சீதோஷ்ண சுக துக்கேஷு'
சீதம் என்றால் குளிர்ச்சி.
உஷ்ணம் என்றால் வெப்பம்.
உடலுக்குள் சுகம் பரவும் பொழுது, ஒருவிதமான வெப்பம் பரவும்.
துக்கம் பரவும்பொழுது ஒருவிதமான குளிர்ச்சி பரவும். இந்த இரண்டினாலும் வருத்தப்பட முடியாத, வருத்த இயலாத, வருத்தமில்லாத, ஒரு சுதந்திரமான உணர்வோடு வாழ்வதுதான், மனம் அதன் உச்சத்தில் இருப்பதற்கான அர்த்தம்.
மாறுபடுகிற மனநிலை இருக்குமானால், நீங்கள் உச்சநிலையான மனநிலையை இன்னும் உணரவில்லை என்று அர்த்தம்.
உங்கள் மனம் உச்சத்தில் இருக்குமானால், சீத உஷ்ண, சுக துக்கம் இவற்றால் மாறுபடாத மனநிலையை அனுபவிப்பீர்கள்.
ஆன்மா உச்சத்தில் இருக்கிறதா என்று எப்படிப் பார்ப்பது?
How to know if the soul is in its peak performance?
உங்களுடைய ஆன்மா, உச்சத்தில் இருக்குமானால்,
எந்தவிதமான பந்தமும் இல்லாமல், உச்சத்திலேயே இருக்கும் ஜீவன் முக்தனாக, நித்யமும் ஆனந்தத்திலேயே வாழ்வீர்கள்.
நிஜமான சாதனையின் சாரம்...
ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விஷயம் சாதனையாக இருக்கலாம். சிலருக்கு ஒரு வீடுகட்டி, ஒரு கல்யாணம் செய்து, ஒரு கார் வாங்கினால் போதும் என்றிருக்கும்.
எந்த விதமான
பந்தமும் இல்லாமல்
உச்சத்திலேயே
இருக்கும் ஜீவன்
முக்தனாக நித்யமும்
ஆனந்தத்திலேயே
வாழ்வீர்கள்.
வீடு, கார், வீட்டுக்காரர் என இவை அமைந்துவிட்டால் போதும், அவர்கள் வாழ்க்கையே முடிந்து விட்டது போல இருப்பார்கள். அதைப் பெரிய சாதனையாக நினைப்பார்கள். சிலருக்குப் படித்துப் பட்டம் வாங்கினால் போதும், அதைப் பெரிய சாதனையாக நினைப்பார்கள். இன்னும் சிலர் சமூகத்தில் ஒரு பதவிக்கு வந்து விட்டாலே சாதனையாக நினைப்பார்கள்.
நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். இதெல்லாம் ஒவ்வொரு துறையிலே சாதிக்கப்படுகிற சாதனைகள்.
நிஜமான சாதனை என்னவென்றால்... எதற்காக நீங்கள் இந்த உடலையும் மனத்தையும் உருவாக்கினீர்களோ, அதற்கான சாரத்தை அனுபவிப்பது, அந்தச் சாரத்தை உணர்வது.
உடலை உச்சத்தில் வைத்திருந்து, மனத்தை உச்சத்தில் வைத்திருந்து, ஆன்மாவின் உச்ச த்தை உணர்தல்; அதுதான் நிஜமான சாதனை. இந்த மூன்றிலும் உச்சத்தில் இருப்பதுதான் நிஜமான சாதனை.
உயர்ந்த பொக்கிஷங்களைப் பெற ...
To receive precious gifts...
இனிய சத்யம் ஒன்றோடு துவங்குகிறோம் .
உயர்ந்த, உச்சக்கட்ட, குதூகல உணர்வில் எப்போதும் வாழுங்கள்.
உடல், தன்னிடமுள்ள உயர்ந்த பொக்கிஷங்களை, உங்களுக்குப் பரிசாகத் தந்து கொண்டேயிருக்கும் .
Live in continuous excitement. Mind and body will deliver its best to you.
வாலிபர் ஒருவர், "ஏன் தியானம் செய்ய வேண்டும்? நிஜமாகவே தியானம் மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றுதானா?
வாழ்க்கையை நன்றாய் வாழ்வதற்கு நாங்கள் சம்பாதிக்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கும்போது தியானத்திற்காக நேரம் செலவிடுவது கண்டிப்பாக அவசியம்தானா? தயவு செய்து சொல்லுங்கள்," என்று கேட்டார். “அவசியம்தான்,” என்று நான் சொல்வதைவிட, அவசியம்தானா? என்று நீங்கள் முடிவெடுப்பதையே விரும்புகிறேன்’.
அவர், “அந்த முடிவைத்தான் எடுக்க முடியாமல் தடுமாறுகி றேன்,” என்றார்.
“சரி, நீங்கள் நினைத்ததை நினைத்தபடி செய்து முடிக்க, எது அவசியம்? சொல்லுங்கள்,” என்று கேட்டேன்
“நிச்சயமாய் மிகுந்த புத்திசாலித்தனமும், நல்ல உடல் ஆரோக்கியமும் வேண்டும்.”
“அப்படியென்றால், நல்ல உடல் பலமும், மனோ பலமும் நினைத்ததையெல்லாம் சாதிக்கத் தேவையென்கின்றீர்கள். சரியா?”
“ஆம்.”
“நல்லது உங்களிடம் அடுத்த கேள்வி...
சமுதாயத்தில் நீங்கள் விரும்பியதை எல்லாம் சாதிக்க எது அவசியம்? சொல்லுங்கள்.”
“பணமும், பதவியுமில்லாமல் எதைச் சாதிக்க முடியும் இந்தச் சமுதாயத்தில்?”என்று கேட்டார்.
“ஆனால், ஆன்ம பலமில்லாமல் வேறெந்த பலம் இருந்தாலும், எதையும் சாதிக்க முடியாது எனும் உண்மை உங்களுக்குத் தெரியுமா? ஆன்ம பலமில்லாமல் உடல் பலத்தை மட்டும் அதிகரித்தால், அவர் முரடராகி விடுவார். (Violence)
அதேபோல் ஆன்ம பலமில்லாமல் மனபலம் மட்டும் அதிகரித்தால்... அவரிடம் கள்ளத்தனமும், குறுக்கு புத்தியும்தான் மேலிடும்.
ஆன்ம பலம் ஓரளவிற்காவது பொங்கினால்தான், உடல் பலம்கூட ஒருவரை முரடராக்காமல் பலசாலியாக்கும்.
மனபலம் கூட, ஒருவரைக் கெட்டவராக்காமல் நல்லவராக்கும்.
சுருங்கச் சொன்னால், ஒருவர் உயர்வதற்கான
அடிப்படை மூலதனமே, ஆன்ம பலம்தான்,”
என்றேன்.
“நீங்கள் சொன்ன பிறகுதான், ஒரு புதிய
கோணமே எனக்கு இப்போது புரிய
வருகிறது,” என்றார்.
“ஹிட்லர் கூட, மிக அதிக மனபலம்
பெற்றவர்தான். என்ன செய்வது?
ஆன்மபலம் இல்லாமல் அதிகரிக்கும்
மனபலம் மிகவும் மோசமான
சைக்கோத்தனமாக (Psycho)
மாறிவிடுகிறதே.
பண பலமும் பதவிபலமும்
மக்கள் பலமும் தம்மைச் சுற்றி
அதிகரிப்பதற்காக உழைக்கும்
ஒருவர், அவற்றிற்கிணையாக
தமக்குள் ஆன்மபலம்
அதிகரிக்கிறதா? என்று
ஒவ்வொரு படியிலும்
பார்த்தாக வேண்டும்.
பணபலமும் பதவிபலமும் மக்கள்பலமும் தம்மைச்சுற்றி அதிகரிப்பதற்காக உழைக்கும் ஒருவர், அவற்றிற்கு இணையாக தமக்குள் ஆன்மபலம் அதிகரிக்கிறதா? என்று ஒவ்வொரு படியிலும் பார்த்தாக வேண்டும். ஆன்ம பலம் பெருகாமல், மற்ற பலன்களை அதிகரித்தால், புலி வாலைப் பிடித்த கதையாக வாழ்க்கை மாறிவிடும்.
ஆன்ம பலம் என்றால் ...
காரணமில்லாமல் பொங்கும் ஆனந்த சக்தி. இந்த ஆனந்த சக்தி ஒருவருக்குள் பொங்க ஆரம்பித்து விட்டால், பலவீனம்கூட பலமாகிவிடும்.
வீரனுக்குப் புல்லும் ஆயுதம்.
தீரனுக்குச் சொல்லும் ஆயுதம்.
இந்த உயர்ந்த நிலையெல்லாம் ஆனந்த சக்தி பொங்க வாழும் ஒருவருக்குதான் சொந்தமாகும். அவரால்தான், எதைக் கொண்டும் ஜெயிக்க முடியும்.
ஒருவருக்குள் நேரடியாக ஆனந்த சக்தியைப் பொங்க வைக்க உதவுவதுதான் தியானம். இந்தத் தியானத்திற்காக நேரம் செலவு செய்யலாமா, இல்லையா என்பதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்,'' எனச்சொல்லி முடித்த போது, வாலிபரின் கண்களில் பளிச்சிட்ட தெளிவைக் கண்டு ஆனந்தம் அடைந்தோம்.
மேற்குறிப்பிட்ட சம்பாஷணை மூலமாக ஆன்மபலத்தை அதிகரிப்பதின் முக்கியத்துவத்தை, ஒவ்வொருவருக்கும் புரிய வைக்க முயற்சிக்கிறோம்.
ஆனந்த சக்தி
ஒருவருக்குள்
பொங்க
ஆரம்பித்துவிட்டால்
பலவீனம் கூட
பலமாகிவிடும்.
உங்களுக்குள் ஆன்மபலத்தை அதிகரிக்க முதலில் உழையுங்கள். எந்த நிலையில் நீங்கள் இருந்தாலும், உங்களை அது வீரராகவும், உயர்ந்த மனிதராகவும் மாற்றும்.
தியான ஆராய்ச்சி
உங்களை முன்னேற விடாமல் தடுக்கும் எதிரி யார்?
மந்தத்தன்மைதான் உங்களுடன் இருந்துகொண்டு, உங்களை முன்னேற விடாமல் தடுத்துக்கொண்டேயிருக்கும் எதிரி.
இந்த மந்தத்தன்மை எப்போது வருமென்றால், நீங்கள் உங்களைத் தனித் தீவாக உணரும் போதுதான்.
உடல் பலத்தை அதிகரிப்பதிலிருந்து பணபலத்தை அதிகரிப்பதுவரை, மனிதர்களின் முயற்சிகளெல்லாம்... ஏதோ ஒரு வகையில் தம்மைத் தனித்தீவாக்கிக்கொள்ளும் முயற்சிதான்.
தனித்தீவிலிருந்து உங்களை விடுவித்துக்கொண்டாலே, நிஜமான ஆன்மபலம் விழித்துக்கொள்ளும்.
நீங்கள் வரையரைக்குட்பட்டவரல்ல என்ற நிஜத்தை உணர்ந்துவிட்டாலே, வரையரைக்கு அப்பாற்பட்ட ஆனந்த சக்தி பொங்க ஆரம்பித்துவிடும். இதற்கு இந்தத் தியானம் நேரடியாக உதவும்.
சாதனையின் ரகசியம்
- சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு சுதந்திரம் இல்லையே?
சும்மா விரும்பினால் சுதந்திரம் வராது. விருப்பத்தைச் செயலாக மாற்றினால் சுதந்திரம் பெருகும். பில்கேட்ஸ்-க்கும், பில்கேட்ஸ்-ஐ போன்று மாற விரும்புபவர்களுக்கும் இருப்பது 24 மணி நேரம் தான். செயல்படுத்துபவர் சாதிக்கிறார். சுதந்திரத்தைப்பெருக்கிக்கொள்கிறார். விரும்புபவர் கனவு காண்கிறார். சுதந்திரம் தரவில்லையென குறை சொல்கிறார்.
- சுதந்திரம்?
அதை யாரும் தர மாட்டார்கள். நீங்கள்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆன்ம பல தியானம்
Meditation for soul-strength

கண்களை மூடி நிமிர்ந்து தளர்வாக அமருங்கள். ஒரு பலூன் விரிவடைவது போல, நீங்கள் எல்லாப் பரிமாணங்களிலும் விரிவடைந்து கொண்டே செல்வதை உணருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக வீட்டளவுக்கு விரிவடைவதை முதலில் உணருங்கள். அடுத்து பூமியளவிற்கு விரிவடைவதை உணருங்கள். அப்படியே வானம் வரை விரிவடைவதையும், அதையும் தாண்டி நிலவும் நட்சத்திரங்களும், பால்வெளித்திரள்களும் உங்களுக்குள்ளே வருமளவிற்கு விரிவடைந்து கொண்டே செல்லுங்கள்.
இந்தத் தியானத்தை, அடிக்கடி செய்து வர வர, ஆன்ம சக்தி பொங்க ஆரம்பித்துக் கொண்டேயிருக்கும். பலங்களையெல்லாம் தாண்டிய பலம், பொங்க ஆரம்பிக்கும். இந்தத் தியானத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.