விதியை வெல்லலாம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
விதி மதி சதி எல்லாம் விளையாட்டுதான்.. இது புரிந்துவிட்டால் பரகதி நிச்சயம். ஜீவன் முக்தி நிச்சயம்!
வெல்லலாம் விதியை!

விதியை வெல்லலாம்
என்பது
உங்களுக்குத் தரப்படும்
நம்பிக்கையல்ல;
வாக்குறுதி!
விதியை மீற முடியாது
ஜாதகத்தை மாற்ற முடியாது என்பது
மனிதர்களின் வரம்புக்குட்பட்ட உண்மை.
விதியோடு போராட வேண்டாம்
மதியோடு
அதைக் கடந்து விடலாம்
ஜீவன்முக்தர்கள் சொல்லும் உண்மை.
உங்களின் எதிர்காலம்
எப்படியிருக்கும்
என சொல்ல வந்தவரல்ல குரு
உங்களின் எதிர்காலம்
இப்படி இருக்கும் என்று
உங்கள் விருப்பத்தோடு
மாற்றியமைக்க வந்தவர்தான் குரு!
பூமிக்கு நீங்கள் வந்தது
வேறு எதற்குமல்ல !
விதியை வெல்வதற்குத்தான்.
வெல்லாத வரை
அது விதி!
வென்று விட்டால்
அதுவே மதி!
வெல்லலாம்
நிச்சயம் வெல்லலாம் !
சொல்லலாம்
எல்லோருக்கும் இதைச் சொல்லலாம்!
விதியை வெல்லலாம்
குண்டலினி சக்தியும் உடல் மலர்ச்சியும்... Kundalini Shakti & flowering of the body...
உடல் முதிர்ச்சி அடையும் முன்பு குண்டலினி சக்தி... Kundalini Shakti before Physical Maturity
உடல் முதிர்ச்சி அடைந்த பின்பு குண்டலினி சக்தி... Kundalini Shakti after Physical maturity
ஜீவன் முக்த உடலில் குண்டலினி சக்தி Kundalini Shakti in a Jeevan Mukta's body
அவதார புருஷரின் உடலில் குண்டலினி சக்தி Kundalini Shakti in an incarnation's body
விதியை வெல்லலாம்
-விதியை வெல்லலாம் எனும் உத்வேகமே ஜீவன் முக்தியைப் பொங்க வைக்கும்.
பிறக்கும் பொழுது, குந்தைகளுக்குக் குண்டலினி சக்தி உச்சத்தில் இருக்கும். அதாவது சகஸ்ராரத்தில் இருக்கும்.

குழந்தைகள் உடல் மலர்ச்சி (Physical Maturity) அடையும் சமயத்தில், அந்தக் குழந்தைகளுக்குக் குண்டலினி சக்தியானது மூலாதாரத்திற்கு வந்துவிடும். அதன் பிறகு மீண்டும் அந்தக் குண்டலினி சக்தியை மெல்ல மெல்ல சஹஸ்ராரத்திற்கு எடுத்து செல்வதற்காகத்தான் எல்லாவிதமான தவங்களும் செய்யப்படுகிறது. உடல் மலர்ச்சி அடைவதற்கு முன்பே அந்தக் குண்டலினி சக்தியை உயிர்ப்பித்து மேல்நோக்கி எழுப்பிவிட்டால், மேல்நோக்கி செல்லும் குண்டலினி சக்தி, ஒருபோதும் கீழே இறங்கி வரவே வராது.
உடல் மலர்ச்சி அடைவதற்கு முன்பே,
பதினான்கு வயதிற்கு முன்பே, குண்டலினி சக்தி விழிப்படைந்தவர்களைத்தான் பரமஹம்ஸர்கள், அவதார புருஷர்கள் என்று அழைக்கிறோம். குண்டலினி சக்தி விழிப்படைவதையே (Awakened kundalini Energy) ஞான அனுபவம் (Enlightenment) என்று சொல்கிறோம்.
குண்டலினி சக்தியும்; உடல் மலர்ச்சியும்...
Kundalini Shakti & flowering of the body...
பதினான்கு வயது துவங்கும் பொழுது, அதாவது...
குழந்தைகளுக்கு உடல் மலர்ச்சி நிகழும்போது, குண்டலினி சக்தி, அனாஹத ச க்கரத்திலிருந்து கீழ் இருக்கிற மூன்று சக்கரங்களான மணிப்பூரகம், சுவாதிஷ்டானம், மூலாதாரத்திற்கு இறங்கி விடும்.
மூலாதார சக்கரத்திலிருந்து குண்டலினி சக்தியை மீண்டும் சஹஸ்ரார சக்கரத்திற்கு மேல்நோக்கி உயர்த்துவதற்காகச் செய்யப்படும் தனி மனித முயற்சிகள் எல்லாமே... எறும்பு பனிப்பாறையைத் துளையிடும் முயற்சியாகும்.
ஒரு அவதார சக்தியின் உதவியோடு முயற்சி செய்வது என்பது பனிப்பாறையைத் துளையிடும் கருவியின் உதவியோடு செல்வதற்கு ஒப்பாகும். அந்த முயற்சிக்கு ஞானகுரு அளிக்கும் ஞான உத்வேகம்தான் தீக்ஷை.
தீக்ஷையின் பொழுது துல்லியமாகி என்ன நிகழ்கிறது என்பதைச் சொல்கிறோம். எறும்பு தன்னந்தனியே முயற்சி செய்து பனிப்பாறையைத் துளையிட்டுக் கொண்டு இருக்கும்பொழுது, அந்தப் பனிப்பாறையை ஒரு ட்ரில் மிஷினால், கண நேரத்திற்குள் ஓட்டையிட்டு, தண்ணீரைத் தொட்டு விடுவதற்குச் சமம்.
எறும்பு பல ஜென்மம் எடுத்து, இந்த முயற்சியைச் செய்தால் இறுதியில் என்ன பலனை அடையுமோ எந்த நிலையை அடையுமோ, அந்த நிலையை, பலனை குருவின் ச க்தியோடும், வழிகாட்டுதலோடும் ட்ரில் மிஷினில் துளையிட்டு செல்வதைப்போன்று விரைவில் அடைந்துவிடுவது. பாறையின் அடியில் இருக்கும் தண்ணீரைத் தொட்டு விடுவது. அதைத்தான் குண்டலினி சக்தி சஹஸ்ராரத்தை அடைந்து விடுவது என்று சொல்கிறோம்.
குண்டலினி சக்தி மூலாதாரத்திலேயே இருக்கும்வரை முழு ஆரோக்கியம், பூரண ஆனந்தம் என்று எதுவும் எளிதில் சாத்தியமில்லை. உலக வாழ்வில் சாதனை செய்வதற்குக்கூட குண்டலினி சக்தி சரியாய் இயங்க வேண்டும்.
உடல் முதிர்ச்சி அடையும் முன்பு குண்டலினி சக்தி...
Kundalini Shakti before Physical Maturity
உங்களுடைய தாயின் வயிற்றில் நீங்கள் சிசுவாயிருக்கும்போது, தாயின் வயிற்றிலிருந்து ரத்தம் தொப்புள் கொடி வழியாக உங்களுக்குள் வந்தது. அதிலிருந்து நீங்கள் தனி ஜீவனாக, அதாவது சிசுவாக, ஒரு குழந்தையாக மாறும்போது, உயிர் சுவாதிஷ்டானம் வழியாக உங்களுக்குள் வந்தது.
சிசுவாயிருந்த போது தொப்புள் கொடிதான், உங்களின் உயிர்க்கொடி. ஆனால், இப்போது குழந்தையாகப் பிறந்த பின்பு, உங்களின் சுவாதிஷ்டானம்தான் உங்களின் உயிர்க்கொடி. சுவாதிஷ்டானம் உங்களுக்குள் இருக்கும் ஒரு சக்தி மையம்.
சுவாதிஷ்டானம் என்றால்...
சுவ + அதிஸ்டானம், அதாவது உயிர் இருக்கும் இடம்.
உடலின் உள்ளே நுழைந்த ஜீவனின் சக்தி, உச்சத்தை அடைந்து, உடல் முழுவதும் பொங்கிக் கொண்டிருக்கும். அப்போது எல்லாச் சக்கரங்களுமே அற்புதமாய் இயங்கிக் கொண்டிருக்கும்.
குழந்தைப் பருவம்

உடல் மலர்ச்சி (Physical Maturity) அடைவதற்கு முன்பு வரை, உங்களின் குண்டலினி சக்தியானது, சஹஸ்ராரத்திலேயே பொங்கிக் கொண்டிருக்கும்.
உடல் முதிர்ச்சி அடைந்த பின்பு குண்டலினி சக்தி...
Kundalini Shakti after Physical Maturity
இயல்பாக உடல் மலர்ச்சி அடையும்போது, சகஸ்ராரத்திலிருக்கும் குண்டலினி ச க்தியானது, மூலாதாரத்திற்கு வந்துவிடும்.
தைத்ரியரேஜஸ் :
சகஸ்ராரத்திலிருக்கும் சக்தி மூலாதாரம் நோக்கிப் பாயும் போது, அதை தைத்ரியரேஜஸ் என்கிறோம்.
தற்காலத்தில், குழந்தைகளுக்கு வெகு முன்னதாகவே, சிறு வயதிலேயே உடல் மலர்ச்சி நடந்து கொண்டு இருப்பதற்குக் காரணம், குழந்தைகளின் மூலாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப் பட்டுக் கொண்டிருப்பதுதான். இன்றைய காலங்களில், குழந்தைகளை மீடியாக்களிலிருந்து காப்பாற்ற வேண்டியது மிக அவசியம்.
மீடியாக்களாலும், தவறான வழிகளாலும் சேர்க்கப்படும் தேவைக்கதிகமான,
தேவையில்லாத செய்திகள், கனவுகள்,
கற்பனைகள், காம, குரோத உணர்வுகள்
மூலாதாரத்தில் உணர்ச்சி அடைப்புகளாக
தேங்குகிறது. இது குழந்தைகளின் சக்தியை
உறிஞ்சி விடுகிறது. ஆரோக்கியத்தையும், நம்
நலனையும் சின்னா பின்னமாக்குகின்றன.
அந்தக் காலத்தில், குருகுலத்தில், வளர்ந்ததால் குழந்தைகளின் மூலாதாரம் எந்தச் சுமையும் இல்லாமல் இருந்தது. ஆரோக்கியமாக உடல் மலர்ச்சி நிகழும் வாய்ப்பு இருந்தது
அப்போது குண்டலினி சக்தியானது ச
கஸ்ராரத்திலிருந்து மூலாதாரம் நோக்கி
இயல்பாகவே பாயும்.
ஆனால், இப்பொழுது, இந்தக் காலத்தில், மூலாதாரத்தின் சுமையால் குண்டலினி சக்தியானது சஹஸ்ராரத்திலிருந்து மூலாதாரம் நோக்கி உறிஞ்சப்படுகிறது. வெகுசீக்கிரமே உடல் மலர்ச்சி அடைவது என்பது, முதிர்ச்சி அல்ல, தளர்ச்சி.

ஜீவன் முக்த உடலுக்குள், இதே நிகழ்வுகள் நிகழாது. குண்டலினி சக்தி மூலாதாரம் நோக்கி ஒருபோதும் இறங்காது. அது எப்போதும் உச்சத்திலேயே இருக்கும். ஜீவன் முக்தர்களுக்கு எப்போதும் மேல்நோக்கியே அந்தச் சக்தியானது சென்று கொண்டிருக்கும்.
ஜீவன் முக்த உடலில் குண்டலினி சக்தி
Kundalini Shakti in a Jeevan Mukta's body
பிறக்கும்போது பரமஹம்ஸர்களாய் பிறப்பவர்களுக்கு மட்டுமே குண்டலினி சக்தி கீழே இறங்காது. மற்றவர்களுக்குக் குண்டலினி சக்தி கீழ் நோக்கிப் பாய்வது இயற்கை.
குண்டலினி சக்தியை மேல் நோக்கித் திருப்பும் அளவிற்கு சக்தியையும், புத்தியையும் உருவாக்கினாலே விதியை வெல்லும் வீரியத்தை அடைந்துவிட முடியும்.
சீக்கிரமே உடல்
மலர்ச்சியடைவது
முதிர்ச்சி அல்ல.
தளர்ச்சி.
ஊர்த்துவரேஜஸ்:
குண்டலினி சக்தி, சகஸ்ராரத்தை நோக்கி எழுவதைத்தான்

ஊர்த்துவரேஜஸ் என்று அழைக்கிறோம். குருகுலங்களில் பிரம்மச்சரிய தீக்ஷையின் போது, தைத்ரியரேஜஸ், ஊர்த்துவரேஜஸாக மாறுவதற்கான தீக்ஷையை சத்குருநாதரே அளிப்பார்.
விதியை வெல்லும் இந்தச் சக்தித் திருப்பம் நிகழ்வதற்கு, உங்களின் மூலாதாரம் முதலில் மலர்ந்திருக்க வேண்டும்.
விதியை வெல்லும் மதிக்கான சக்தியையும்,
புத்தியையும் ஆதாரமாகக் கொண்டிருக்கும்
இடத்தைத்தான் மூலாதார சக்கரம் என்கிறோம்.
பொதுவாக சக்திக் குறைபாடோ அல்லது புத்திக் குறைபாடோ, உடல் மலர்ச்சி அடைந்த மனிதருக்கு இருந்தே தீரும்.
இந்தச் சக்திக் குறைபாட்டையும், புத்திக் குறைபாட்டையும் சரிசெய்து, ஆரோக்கியமிக்க, ஞானம் மிக்க, ஆனந்தமயமான நல்ல மனிதர்களை உருவாக்குவதற்காகவே குருகுலத்தில் தங்களின் குழந்தைகளை அர்ப்பணிப்பார்கள். அங்கு குருநாதர், விதியை வெல்லும் வீரியத்தை ஒவ்வொருவரும் தொடுவதற்கு உதவி செய்யும் ஜீவன் முக்த தீக்ஷையை அளிப்பார்,

இன்று சமூகம் மாறிவிட்டது.
உடனடியாக அதற்கெல்லாம்
வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை.
அந்த வாய்ப்புகள் உருவாக்கப்பட
சில காலமாகும்.
அதனால், குருகுல வாழ்வு
கிடைக்காவிட்டால்கூட, ஜீவன்
முக்த வாழ்வு வாழ்வதற்கான
தீக்ஷையைப் பெற்றுக் கொண்டாலே,
ஜீவன் முக்தியை வாழ்வதாலேயே,
தைத்ரியரேஜஸை, ஊர்த்துவரேஜஸாக
மாற்ற முடியும்.
மூலாதாரத்தில் வீணாகும் சக்தியை, விதியை வெல்லும் வீரியமாக மாற்ற உங்களாலும் முடியும்.
அவதார புருஷரின் உடலில் குண்டலினி சக்தி
Kundalini Shakti in an incarnation’s body

பரமஹம்ஸர்கள், பூமியைத் தொடாமலேயே பறக்கும் பரமஹம்ஸ பறவைகள் என்று சொல்லப்படும் அவதார சக்திகளைப் புரிந்து கொள்வதினாலேயே, பல புரியாதப் புதிர்கள் புரியும்.
கீழேயிருக்கும் மூன்று சக்கரங்கள், அதாவது
மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம்
இம்மூன்றும் உலகத்தின் ஆசாபாசத்திற்குச்
சொந்தமானவை.
ஜீவன் முக்தியை வாழும் ஒருவரின் குண்டலினி ச க்தி, இந்த மூன்று சக்கரங்களையும் தாண்டி மேல் நோக்கி உயரும்.
ஆண், பெண்!
மனிதன், கடவுள் !
சொர்க்கம், நரகம் !
என்ற உணர்வு ரீதியான வேறுபாடும், ஆசாபாசங்களும், உங்களின் உலகக் கட்டுப்பாடே! வெளியில் இயங்கும் உலகம் வேறு. அது உணர்வுப்பிடியிலிருந்து இயங்குவது. ஆனால், ஜீவன் முக்தரின் ஜீவன் முக்த வாழ்க்கை, உணர்வு பிடியிலிருந்து விடுபட்ட வாழ்க்கை உலகம்!
இதிலிருந்து... இந்த உணர்வுப் பிடியிலிருந்து விடுபட்டு வாழ்ந்த ஒருவரால்தான், அந்த நிலையிலிருந்து தம் உடலை விட்ட ஒருவரால்தான், மீண்டும் பிறக்கும் போது அவதாரமாகப் பிறக்க முடியும். உடலை விடும் பொழுதே, ஆண், பெண்; சொர்க்கம், நரகம் கடந்த உயர்ந்த உணர்வு நிலையில் உடலை விட்டதால், மீண்டும் உலகில் பிறக்கும் பொழுது இவர்கள் உலகக் கட்டுப்பாட்டில் சிக்கவே மாட்டார்கள்.
சாதாரணமான மனிதர்கள் சிக்கிக் கொள்ளும், உலகம் மற்றும் உலகக் கட்டுப்பாடுகள் எனச் சொல்லப்படும் கடைசி மூன்று சக்கரங்களை நோக்கி, அவதார புருஷர்களின் குண்டலினி சக்தி இறங்கவே இறங்காது. ஏனென்றால், உடல் முதிர்ச்சி அடையும் முன்பே, சகஸ்ராரம் நோக்கி இவர்களின் குண்டலினி சக்தி திரும்பி விடுகிறது.
ஜீவன் முக்தர்களின் குண்டலினி சக்தி கடைசி மூன்று சக்கரங்களைத் தொடுவதே இல்லை. கொஞ்சமும் சேதாரமாகாமல், குண்டலினி சக்தி உச்சத்திலேயே இவர்களுக்கு இருக்கும்.
அதனால்தான் "அவதார புருஷர்களின் ஒரு வார்த்தையே தீக்ஷை. அது பல்லாயிரம் பக்தர்களை ஒரே நேரத்தில் ஜீவன் முக்தர்களாக்கும் சக்தி படைத்தது' என்போம்.
அவதார புருஷரின் வார்த்தையே தீக்ஷைதான். இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் வார்த்தையினாலேயே குண்டலினி சக்தி எழுப்பப்பட்டவர்கள், வரலாற்றில் பலபேர் இருக்கிறார்கள். இதைத்தான் தீக்ஷைகள் என்கிறோம்.
தீக்ஷைகள் பலவகைப்படும்
நயன தீக்ஷை,
ஸ்பரிச தீக்ஷை,
ஞான தீக்ஷை,
ஆன்ம தீக்ஷை,
தந்திர தீக்ஷை,
என்று பலவகைப்படும்.
இதில் உள்ள பல தீக்ஷைகளைப் பெறுவதற்கு முதலில் உங்களின் உடலும் மனமும் தயாராக இருக்க வேண்டும். ஆனால், அவதார புருஷர்களின் சாந்நித்தியத்தில் இருப்பதினாலேயே, தீக்ஷைகள் மனிதருக்குள் தாமாகவே நிகழத் துவங்கும். அவர்களின் இருப்பினாலேயே மனத்தை உருக்கும் சக்தி வெளிப்பாட்டைத்தான், குரு சாந்நித்யம் என்கிறோம்.
இந்தத் தீக்ஷைகளின் விளக்கங்கள் அவதாரப் புருஷர்களின் பெருமையைச் சொல்வதற்காக வடிவமைக்கப்பட்டவை அல்ல.
உங்களின் விதியையே வெல்லும் வீரியத்தின் சாத்தியத்தை எந்த ஒரு வகையிலாவது உங்களுக்குள் உருவாக்கி விட வேண்டும் என்ற கருணை நோக்கில் வடிவமைக்கப்பட்டவைதான் இந்த விளக்கங்கள்.
உண்மையில் சொல்ல வேண்டுமானால் விதியை வெல்வதுதான் நிஜமான சாதனை. இதைத் தாண்டிய மற்ற எல்லாச் சாதனைகளும் விதியின் வீரியத்தை அதிகமாக்கும் சாதனைகளே.
விதியின் வீரியத்தை அதிகமாக்கக் கூடாது. விதியை வெல்லும் வீரியத்தைத்தான் அதிகமாக்க வேண்டும்.
மூலாதாரத்திலேயே சக்தியை வைத்திருப்பதும், கீழிருக்கும் மூன்று சக்கரங்களிலேயே சிக்கியிருப்பதும் விதியின் வீரியத்தை அதிகப்படுத்தும்.
குண்டலினியை சஹஸ்ராரம் நோக்கி எழுப்புவது மட்டும்தான், விதியை வெல்லும் வீரியத்தைத் அதிகப்படுத்தும்.
தைத்திரியரேஜஸை, ஊர்த்துவ ரேஜஸாக மாற்றுவதே விதியை வெல்லும் வீரியம். இதுதான் ஜீவன் முக்த வீரியம்.
விதியின் ரகசியம்
• விதியை வெல்ல முடியுமா?
முடியும்.
• முடியும் என்பதற்கு என்ன ஆதாரமிருக்கிறது?
முடியாது என்பதற்கு என்ன ஆதாரமிருக்கிறது.
• 'பின் விதி வலிது' என்பது?
'அது வலிது' என நீங்கள் நம்பும் வரை, அது உண்மை.
• விதியின் பிடியிலிருந்து விடுபட என்ன வழி?
விதியின் கூட்டாளிகளைக் கூண்டோடு ஒழிக்க வேண்டும்.
• யார் அந்தக் கூட்டாளிகள்?
வெறி, தயக்கம், சோம்பேறித்தனம்.
• கூண்டோடு ஒழிப்பதென்றால் ...?
விதி வலிதென நம்பும்வரை, அதன் கூட்டாளிகளும் கும்மாளமிடும். அவை செய்யும் சதிகளே வாழ்வைச் சுருக்கும். அவைத் தலைகாட்டும் போதே, அவற்றைத் தைரியமாய்க் கிள்ளி எறியத் துணிந்துவிட்டால் ... விதியையே திருத்தி எழுதிவிடலாம்.