உற்சாகம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
- நேரடியாக ஜீவன் முக்தியை ஒவ்வொரு நிமிடமும் வாழ்வதற்கான வாழி உற்சாகம்
இதில் வரும் ஒவ்வொரு வார்த்தையும் தீக்ஷை. நம் வழி நடந்தாலும், அல்லது பிறர் வழி நடந்தாலும், என்ன செய்ய நினைத்தாலும், அந்தச் செயல் முழுமைபெற, உற்சாகம் (Intensity) நமக்குள் அவசியம் இருக்க வேண்டும்.
ஒரு சின்ன கதை:
சிப்பியைப் பார்த்திருக்கிறீர்களா? நீரின் பரப்பளவில் மிதந்து தவமிருந்து மழை நீருக்காகக் காத்துக் கொண்டிருக்கும். மழை நீர் தன்மீது விழுந்தவுடனே, அந்தத் தூய மழை நீரை, நேரடியாகத் தன் வாயைத் திறந்து, கர்ப்பத்தில் ஏந்திக் கொள்ளும். பின் வேக வேகமாகக் கடலுக்கு அடியில் சென்று விடும்.
சிப்பிக்குள் விழுந்த மழைத் தண்ணீரில் நடக்கும் மாற்றம்தான் ஒருநாள் முத்தாக வெளிவருகிறது.
கடல் நீரின் மேல், ஒரு சொட்டு தூய மழை நீருக்காக சிப்பித் தன் வாயை நன்கு திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்கும்.
மழைத் தண்ணீருக்காகவே தவம் இருக்கும்.
அவ்வளவு பெரிய கடல் இருந்தாலும் அந்தச் சிப்பியால் உப்புத் தண்ணீரை உள்ளெடுத்து அதை முத்தாக உருவாக்க முடியாது. அதற்குத் தூய்மையான மழைத் தண்ணீர் தேவைப்படுகிறது.
ஒரே ஒரு துளி மழைத் தண்ணீர்... தன் மீது விழுந்த அந்த விநாடியே, உடனடியாகக் கடலின் மிக ஆழமான பகுதிக்குச் சென்று, நீரை முத்தாக மாற்றத் தேவையான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ளும்.
உடனே வேலையை ஆரம்பிக்கும். மிகப்பொறுமையோடு காத்திருக்கும்; முத்தோடுதான் வெளிவரும்.
அதுபோல தம்மைத் திறந்து வைத்து, தீவிரமாகத் தேடிக்கொண்டிருக்கும் சிப்பியைப் போன்ற மனிதருக்குள் மட்டும்தான், நேரடியாக 'ஞானம்' சென்றடைகிறது.
அதன்பின் அவர் அந்த தீக்ஷையை தன்னுடன் ஏந்திச் சென்று, தன் உள் உலகத்தில் வைத்துக் சிப்பிபோல் தியானித்து அதிலேயே மூழ்கிவிடுவார். ஒருநாள் அவருள் உருமாற்றம் என்ற நிகழ்வு நடந்து, முத்தாக "ஞானம்' வெளிவரும்.
தீவிர தேடுதல் உடையவருக்கு, ஒரு சில வார்த்தைகளே போதும். அந்த ஒரு வார்த்தையிலேயே தம்முடைய இருப்புத்தன்மை விரிவடைந்து, ஜீவன் முக்த தன்மை வெளிப்படுத்துவதையும், மலர்வதையும் பார்ப்பார்.
சீடரின் தீவிரத் தன்மையான உத்சாகம் (Intensity), தன்னையே திறந்து வைக்கும் தன்மையான சிப்பியின் திறந்த தன்மையைப் போன்றது. இங்கே சீடருக்குக் கிடைத்த ச த்குருநாதரின் வார்த்தைகள், சிப்பிக்குக் கிடைத்த மழைத் தண்ணீரைப் போன்றது.
சத்குருநாதருடைய வார்த்தைகள், சத்தியத்திற்காக ஏங்கும் தீவிரத் தன்மையுடைய சீடரின் இருப்புத் தன்மைக்குள் நுழைந்ததுமே, முத்தாக ஞானம் நிகழ்ந்துவிடும். பின் நாம் எதுவாக இருந்தாலும் நாம் எதுவாக மாற வேண்டுமோ, அதுவாகவே மாறிவிடுவோம்.
உள் உலகத்தை நோக்கித் திரும்புங்கள்
Turn Towards Your Inner Space
உத்சாகம் என்றால் என்ன?
ஆழ்ந்து பார்த்தோமானால், பெரும்பாலும் நம் வெளியுலக வாழ்க்கை முறையில் ஒரு நிம்மதியற்று அமைதி இன்மையையே உணர்கிறோம், "நான் இதைச் செய்யவில்லை, நான் அதைச் செய்யவில்லை,'' என்று அமைதியற்று, நிம்மதியற்று இருக்கிறோம்.
அதே அமைதியின்மையை, நிம்மதியின்மையை உள்ளுலகத்தை நோக்கித் திருப்பினோமானால், அதைத்தான் உத்சாகம் (Intensity) என்று சொல்வோம்.
உண்மையில், உங்களுக்கு என்ன நடக்கிறது என்பதும் தெரிவதில்லை, என்ன செய்ய வேண்டும் என்பதும் தெரிவதில்லை.
ஆனால், உலகத்தில் என்ன இருந்தாலும், அதைப் பற்றிய ஒரு ஆழ்ந்த திருப்தியின்மையே இருக்கிறது. உள்ளுலகத்தில் இருக்கும் திருப்தியற்ற தன்மையைத்தான் Intensity என்கிறோம்.
நீங்கள் ஆச்சரியமாக நினைக்கலாம், ஏன் நான் திருப்தியின்மையைப் பற்றி உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறேன் என்று.
எங்களுக்குத் திருப்தியைப் பற்றித்தானே கற்றுக் கொடுக்க வேண்டும், என்றும் யோசி க்கலாம். இப்பொழுது ஒரு சத்தியத்தைச் சொல்கிறேன். வெளியுலகத்தை நோக்கித் திரும்பி இருக்கும் திருப்தி இன்மையை உள்ளுலகத்தை நோக்கித் திருப்புங்கள்.
அப்பொழுதுதான் அது திருப்தியை நோக்கி உங்களை அழைத்துச் செல்லும்.
முதலில் நடக்க வேண்டியது, திருப்தி அல்ல. உள் முகத்தை நோக்கித் திரும்புதல், அதுதான் நிகழ வேண்டும். அப்பொழுதுதான் மனவியல் ரீதியான புரட்சித் திருப்பம் ஏற்படும்.
உங்களுடைய வெளியுலக அமைதியின்மை, இன்டென்சிடியாக மாற வேண்டும்.
உங்களுடைய உத்சாகம் வெளி உலகத்தை நோக்கிச் செல்லுமானால், உங்கள் விழிப்புணர்வும் தொடர்ந்து வெளியுலகத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கும்.
அதைத்தான், அமைதியின்மை என்கிறோம்.
அந்த அமைதியின்மையை திருப்தியின்மையை உங்கள் உள் உலகத்தை நோக்கி செலுத்துவதைத்தான், இன்டென்சிடி என்கிறோம்.
இன்டென்சிடியின் அர்த்தம் என்னவென்றால், "உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும்!" என்று தொடர்ந்து போராடுகிற ஒரு உணர்வுப் பிரவாகம்.
தன்னைக் கட்டுப்படுத்தி பிடித்துக் கொண்டிருக்கிற எல்லா உள்ளுலகக் கட்டுகளையும் உடைத்து எறிவது, உள் உலகத்தில் விடுதலை பெற்று இருப்பதுதான் இன்டென்சிடி.
உத்சாகம் (Intensity) ஒரு உணர்ச்சி அல்ல.
நீங்கள் முழு உத்சாகத்துடன் இருக்கும் பொழுது, அதன் ஒருபாகமாக வேண்டுமானால் உணர்ச்சி இருக்கும். ஆனால், உணர்ச்சியை, ஒருபோதும் உத்சாகம் என்று சொல்ல முடியாது.
இன்டென்சிடி அக்னியைப் போன்றது.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், 100 டிகிரி செல்சியலில்தான், தண்ணீர் ஆவியாக முடியும். 99 டிகிரி இருந்தால் கூட, வெறுமனே அது தண்ணீராகத்தான் இருக்கும். அதேபோல்தான், நீங்கள் தேடுதலில் ஒருங்கிணையாமல் இருக்கும் வரை, உங்கள் ச க்தியும் ஒருங்கிணைந்து இருக்காது.
ஒரு முழுமையான உருமாற்றம் நிகழாது. உருமாற்றம் எதன் மூலமாகவும் நிகழும். அதற்கு முக்கியமான குணம், எதை வேண்டுமானாலும், முழு உத்சாகத்துடன் (Intensity) எடுத்துத் வாழத் துவங்குங்கள்.
ஆனால், தன்னை மாற்றிக் கொள்வதற்கோ, காலத்திற்கு ஏற்ப தன்னை மேம்படுத்துவதற்கோ எந்த வாய்ப்பும் கொடுக்காமல், திறந்த தன்மையற்ற இலகுவற்ற தன்மையுடன் இருப்பது இன்டென்சிடி அல்ல.
அதேபோல், திறந்த தன்மையுடன் இருப்பது மட்டுமே இன்டென்சிடி அல்ல.
திறந்த தன்மையுடன், தீவிரத் தன்மையுடன் தன்னை மாற்றிக் கொண்டு, கடலைத் தேடிச் செல்லும் நதிபோன்றிருப்பதே இன்டென்சிடி.

இலக்கை அடைய உற்சாகம் எடுத்து வாருங்கள்
To reach the Goal bring Intensity
உற்சாகம் (Intensity), செய்யும் வேலையின் இயல்பைச் சார்ந்திராமல் தனித்து இயங்கச் செய்கிறது.
இன்டென்சிடி, ஒரு வேலையின் இயல்போடு அல்லது செயலோடு சார்ந்தது அல்ல.
அந்தச் செயல் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கம்பெனியை நடத்துவது போன்று, சிக்கலானதாகவும் இருக்கும் அல்லது தரையை துடைப்பது போன்று எளிமையாகவும் இருக்கும். நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது முக்கியமில்லை. ஆனால், நாம் எப்படிச் செய்கிறோம் என்பதுதான் முக்கியம்.
எதைச் செய்வதாக இருந்தாலும், அதை ஒரு முழுமைத்துவத்தோடும், அந்தச் செயலிலே முழுமையாகத் தன்னை இழந்துவிடும் உற்சாகத்தோடும் செய்தீர்களானால், நீங்கள் இன்டென்சிடியின் இழையைப் பிடித்து விடுவீர்கள்.
அந்தச் செயலில் உங்களை இழந்து விடும் அந்த வினாடிகளில், அந்தப் பிரபஞ்ச ச க்தியின் உதடுகளில் புல்லாங்குழலாகவே நீங்கள் மாறிவிடுகிறீர்கள். புல்லாங்குழலிற்குள் செல்லும் காற்றானது, இசையாக வெளியே வருகிறது.

காரணம், பிரபஞ்ச சக்தி உங்கள் வழியாகப்
பாய்வதற்கும், பிரவகிப்பதற்கும் நீங்கள்
ஒரு கால்வாயாக மாறிவிடுவதால்தான்.
அதற்கு முழுமையாகவும், முழு
உற்சாகத்துடனும் இருங்கள்.
இலக்கு எதுவாக இருந்தாலும்,
நம்முடைய 'அம்பு' இலக்கை அடைய
தேவைப்படுவதெல்லாம், இன்டென்சி
ட்டி மட்டும்தான். இலக்கை அடைய
உற்சாகத்தை எடுத்து வாருங்கள்.
உற்சாகம் பொங்க யுக்தி -2
உயிர் ஆழத்தின் அழைப்புதான் உற்சாகம் (Intensity)
Souls Deep Invitation is Intensity
எதிலும் மாறாத ஆர்வம், உற்சாகம் (Intensity).
இன்டென்சிடி என்று அழைப்பதற்கு என்னென்ன தகுதிகள், பண்புகள் இருக்க வேண்டும்?
நம்முடைய ஆர்வத்தைக்கூட இழக்கலாம், ஆனால் ஒரு போதும் உற்சாகத்தை (Intensity) இழக்கக் கூடாது. ஆர்வம் மனத்திலிருந்து வருகிறது.
இன்டென்சிடி இருப்புத் தன்மையில் இருந்து வருகிறது.
உங்களுடைய ஆர்வம், ஒரு சமயத்தில் சிறியதாகவோ அல்லது பெரியாகவோகூட இருக்கலாம். உங்கள் ஆர்வத்தின் மீதே உங்களுக்குப் போதும் என்று சலிப்பு ஏற்படலாம். ஆனால் உற்சாகமோ, உங்கள் இருப்புத் தன்மையின் இயல்பாகவே இருக்கும்.
உற்சாகம் பகுத்தறிவுக்கு உட்பட்ட உங்கள் ஆர்வத்தையும் கடந்து செல்கிறது.
உங்கள் இருப்புத்தன்மையின் ஆழத்திலிருந்து வரும் அழைப்புதான் இன்டென்சிடி.
எவ்வளவு அதிகமாகத் தண்ணீருக்காகக் காத்திருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்களுக்குத் தாகம் எடுக்கும். அதுபோல் எவ்வளவு ஆழமாக உற்சாகத்தோடு காத்திருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக, உங்களுக்குள் அந்த அக்னி தீ, தேடுதல் தீ எழும்.
உதாரணத்திற்கு வெளிச்சத்திற்கும், லேசர் கதிருக்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். இரண்டுமே ஒரே ஒளிக்கதிர்களாலானது. ஒரே ஒரு புள்ளியில் அடர்த்தியாக ஆழமாகக் குவியும் லேசர் ஒளி கூட ஒரே ஒரு பொதுவான ஒளிக்கதிரின் அலைவரிசையிலிருந்துதான் வருகிறது.
ஆனால், அந்த ஒரு லேசர் ஒளிக்கதிர்தான், ஒரு உலோகத்தையே கூட எரித்து ஓட்டை போடும் அளவிற்கு அபரிமிதமான சக்தியைப் பாய்ச்சுகிறது. அந்த ஒரு கட்டுப்படுத்தப்பட்ட ஒளிக்கதிரின் குவியலால் கண்களிலுள்ள கேட்ராக்டைக் (Catract) கூட எடுக்க முடியும். அதைப் போன்று இன்னும் மிக நுண்ணிய செயல்களைச் செய்வதற்குக் கூட, லேசரின் இன்டென்சிடி சக்தியைக் கொடுக்கிறது.
ஒரு பாலைவனத்தில் உங்களுக்குத் தண்ணீருக்கான தாகம் நிஜமாகவே அதிகமாகும் பொழுதுதான், ஒரு டம்ளர் தண்ணீருக்காக உயிரைக் கொடுக்கக் கூட தயாராக இருப்பீர்கள்.
நாம் உண்மையை உணர்வதற்கான தாகம் தீவிரமாக மாறும் பொழுது, சத்தியத்திற்காக, உங்கள் உயிரைக் கூட கொடுப்பதற்குத் தயாராகி விடுகிறீர்கள். அந்தச் சத்தியத்தை
உணர்வதற்காக, உங்கள் உயிர் உங்களுக்குத் தரும் அழைப்புதான் இன்டென்சிடி.
உற்சாகம் பொங்க யுக்தி -3
குருவின் வாழ்வைப் படிப்பதே - தியானம்
Reading Guru"s Life is Meditation
ஆழமான முதல் ஆன்மீக அனுபவம்
ஒரு ஆன்மீக அனுபவம் நிகழ, இரண்டு நிபந்தனைகள் நிறைவேற வேண்டும். ஒன்று, நீங்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு, உங்களை முழுமையாகத் திறந்து வைக்க வேண்டும். இன்னொன்று, தீவிரமான, உயர்ந்த ஆழமான சக்திக் களத்தில் (Energy Field) இருக்க வேண்டும்.
சிலசமயங்களில், நீங்கள் உங்கள் இருப்புத் தன்மையைத் திறந்து வைத்து இருந்தாலும், உயர்ந்த, ஆழமான சக்திக் களத்தில் இல்லை என்றால், உங்கள் அகங்காரம் தேங்காய்போல் உடையும். ஆனால் முதல் அனுபவம் நிகழாது.
என்னுடைய 12வது வயதில் முதல் ஆன்மீக அனுபவம் நிகழத் தேவையான இரண்டு சூழ்நிலைகளும் எனக்குக் கிடைத்தது.
அந்த அனுபவம் ஆழமானது. சுற்றியிருந்த சூழ்நிலைகளுக்கு என்னைத் திறந்து வைத்தேன். இரண்டாவதாக ஒரு உயர்ந்த சக்திக் களத்தில் அமர்ந்திருந்தேன். அந்தச் ச க்திக் களம்தான், திருவண்ணாமலை.
இதுவரை ஏனோ, ஒருபோதும் அந்த மலையை நான் சாதாரணமாக எடுத்துக் கொண்டதே இல்லை. அதைப்பற்றிதானே, எனக்கு நன்றாகத் தெரியும் என்று ஒருபோதும் நினைத்ததே இல்லை! அந்தத் தருணத்தைச் சாதாரணமாக, எளிமையாக ஏற்றுக்கொள்ளும் நிலையில், திறந்த தன்மையுடன் எளிமையாக இருந்தேன்.
ஆழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் எல்லாச் சூழலுக்கும், எளிமையாகத் தன்னை திறந்து வைத்து, எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் தன்மையோடு இருப்பதைத்தான், திறந்த மனத்தோடு இருத்தல் என்கிறோம்.
என்னுடைய தினசரி வேலைகளைச் செய்வதற்கு முன்பு... காலையில் எழுந்திருக்கும் பொழுது, வேறு யாரையும் பார்க்க மாட்டேன். கண்களைத் திறக்க மாட்டேன். என் அறையை விட்டு மெதுவாக வெளியே நடந்து வருவேன்.
மதில் சுவரைப் பிடித்துக் கொண்டே வீட்டை விட்டு வெளியே வந்து கண்களை முடியபடியே நின்று கொள்வேன். வெளியில் வந்து, எந்த இடத்திலிருந்து பார்த்தால், மலை தெரியும் என்று எனக்குத் தெரியும். அந்த இடத்திற்கு வந்து நின்று கொள்வேன்.
பிறகுதான் கண்களைத் திறப்பேன். ஏன் என்றால், நான் காலையில் எழுந்தவுடன் பார்க்கும் முதல் விஷயம், அந்த மலையாகத்தான் இருக்க வேண்டும் என்று உறுதியுடன் இருந்தேன். அதேபோல் தினமும் காலையில் மலையைத்தான் கண்விழித்தவுடன் பார்த்து வந்தேன். இதுதான் என் தினசரி நடவடிக்கை. ஒருநாள் கூட தவறியதே இல்லை.
சிலசமயங்களில், நீங்கள் உங்கள்
இருப்புத் தன்மையைத் திறந்து
வைத்து இருந்தாலும், உயர்ந்த,
ஆழமான சக்திக் களத்தில் இல்லை
என்றால், உங்கள் அகங்காரம்
தேங்காய்போல் உடையும். ஆனால்
முதல் அனுபவம் நிகழாது.
இந்த உத்சாகம்தான் (Intensity) எனக்குள் ஆன்மிக அனுபவம் நிகழ வைத்தது. இந்தத் தீவிரத் தன்மையை உங்கள் வாழ்வில் எடுத்துவந்தால், எனக்குள் நிகழ்ந்த இந்த அனுபவம், இதைப் படிக்கும் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் நடப்பது சாத்தியமே. சத்தியத்தைச் சாதித்துவிட ஒரே ஆயுதம் உத்சாகம்.
எனக்குள் மலர்ந்த மகத்தான ஆன்மீக அனுபவம்
Great Spiritual experience happened in me
என் வாழ்க்கையில் நடந்த அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்:
தியானம் என்றால் என்ன என்றுகூட தெளிவாகத் தெரியாத பருவத்தில், அதாவது 12 வயதிலேயே எனக்குள் ஆன்மீகத் தேடுதல் தீவிரமானது.
ஒருநாள் திருவண்ணாமலையிலுள்ள பவளக்குன்று என்ற இடத்தில், ஒரு சிறிய பாறையின் மீது உட்கார்ந்து தியானம் செய்து கொண்டிருந்தேன். தியானம் செய்தேன் என்றுகூட சொல்ல முடியாது. எனக்கு உள்ளேயே விளையாடிக் கொண்டிருந்தேன். என்றுதான் சொல்ல வேண்டும். அச்சமயத்தில் திடீரென்று மகத்தான ஆன்மீக அனுபவம் எனக்குள் ஏற்பட்டது.
எனக்குள் மலர்ந்த அந்த ஆன்மீக அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
அன்று சூரியன் மறைந்து முழுநிலவு வானத்தில் தோன்றிய மாலை வேளை அது. தனியே பவளக்குன்றில் தளர்வாக அமர்ந்தபடி, எனக்குள் மூழ்கி, தியானத்தில் ஆழ்ந்திருந்தேன். அப்பொழுது சிறிது நேரத்திற்குப்பின் சற்றும் எதிர்பாராத விதத்தில் புது அனுபவம் ஏற்பட்டது.
திடீரென்று கொஞ்சம் கொஞ்சமாக நான் உடல் என்ற உணர்வு மறையத் துவங்கியது.
சட்டென ஏதோ திறந்து கொண்டதைப்
போன்று, ஏதோ உள்ளே நுழைந்தது
போன்ற உணர்வு ஏற்பட்டது. நான் தனி
மனிதன் என்ற உணர்வு முற்றிலுமாக
மறைந்து விட்டது. நானே எல்லாமாகவும்
உணர்ந்தேன்.
என்னைச் சுற்றி இருந்த 8 திசைகளையும்
ஒரே நேரத்தில் மிகத் தெளிவாக என்னால்
பார்க்கவும், உணரவும் முடிந்தது.
எனக்கு முன் இருந்த மலையையும், பின்
இருந்த கோயிலையும், இடது புறத்தில்
இருந்த பாறையையும் மிகத் தெளிவாக
என்னால் உணர முடிந்தது. என்னைச்
சுற்றி இருக்கும் எல்லாவற்றையும்
நானாகவே உணர்ந்தேன்.

முதல் ஞான அனுபவம் நிகழ்ந்த பவளக்குன்று மலையில் பரமஹம்ஸர்...
இந்த அற்புதமான அனுபவம் எனக்குள் அனுபூதி ஆனது.
நான் செய்ததெல்லாம் வேறு ஒன்றுமில்லை. பெரிதாக எதுவும் செய்யக்கூட தேவையில்லை, எல்லாமே வெறும் விளையாட்டாகத்தான் செய்தேன்.
அண்ணாமலை சுவாமிகளும், மாதாஜி குப்பம்மாள் அவர்களும் என்னோடு பகிர்ந்து கொண்ட நுட்பங்களை, அச்சிறு வயதிலேயே உத்சாகத்தோடு செய்தேன். அந்த உத்சாகமே இந்த ஆன்ம அனுபூதியைப் பெற உதவியது. ஜீவன் முக்த தன்மையை வெளிப்படுத்தத் துவங்கியது.
நீங்களும் அதே உத்சாகத்தை வெளிப்படுத்த துவங்கி விட்டால், நீங்களும் வாழும்போதே, வாழும் குருவைப்போல ஜீவன்முக்தர்களாக வாழ்வீர்கள்.
எதையும் செய்து பார்க்கும் துணிவு - உத்சாகம்
Doing anything with courage is intensity
என் வாழ்க்கையில் நடந்த இன்னொரு மறக்கமுடியாத சம்பவம் இது. சிறுவயது முதலே ஆன்மீக சம்பந்தமான விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் தீவிரமாக (Intensity) இருப்பேன். அப்போதிலிருந்தே சொற்பொழிவுகளுக்கும், ஆன்மீக விழாக்களுக்கும் தவறாமல் செல்வேன். திருவண்ணாமலையே ஆன்மீக காற்று வீசும் மலை.
எங்கிருந்தாலும் உங்களை ஆன்மீகம் தேடி வரும். அதிலும் சில மகான்களைக் காண்பதற்காகவே, அவர்கள் இருக்கும் இடத்திற்குத் தேடிச் செல்வோம்.
பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் நேரடி சீடரான அண்ணாமலையார் சுவாமிகளை அடிக்கடி சென்று சந்திப்பேன். அங்கேயே தியானம் செய்வேன்.
அப்படி ஒருமுறை சென்றிருந்தபோது அண்ணாமலை சுவாமிகள் பக்தர்களுக்கு வேதாந்த உரையாற்றிக் கொண்டிருந்தார்.
அந்த உரையில், 'நான் சரீரமல்ல, ஆன்மா' என்பதைப் பற்றிப் பக்தர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்.
மேலும் 'வலி என்பது சரீரத்திற்குத்தான், ஆன்மாவிற்கு அல்ல' என்று உபதேசம் செய்து கொண்டிருந்தார். இதைக் கேட்டதில் இருந்து அந்த வார்த்தைகள் என்னுள் திரும்பத் திரும்ப ஒலிக்கத் துவங்கியது.
"நான் ஆன்மா. வலி சரீரத்திற்குத்தான் என்றால் எனக்கு வலிக்கக் கூடாது அல்லவா?" என்று எனக்கு நானே கேள்வி கேட்டுக் கொண்டேன். கேள்வியைக் கேள்வியோடு நிறுத்திக் கொள்ளாமல், அதைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்ற சிரத்தை எழுந்தது, எதையும் சோதித்து உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தீவிரத் தன்மை (Intensity) ஆழமானது.
விளைவு... சற்றும் யோசிக்காமல் கண்ணில் பட்ட கத்தியை எடுத்து, "ஆவது ஆகட்டும்," என்ற தீவிரத் தன்மையோடு (Intensity) சுண்டு விரல் நீளத்திற்கு வலது தொடையில் கிழித்துக் கொண்டேன்.
இரத்தம் கொட்டுகிறது. வலியால் எரிச்சல் எடுத்து விட்டது. இருந்தும் சத்தமோ, கூச்சலோ போடவில்லை. மாறாக அதே தீவிரத்தோடு (Intensity) மனத்தில் திரும்பத் திரும்ப, "நான் சரீரமல்ல, ஆன்மா என்றால் ஏன் எனக்கு வலிக்க வேண்டும்?" என்று கேட்டுக் கொண்டே இருந்தேன்.
தொடையிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டேயிருந்தது.
வலி உச்சத்திற்கு சென்று கொண்டிருந்தது.
'எங்குத் தப்பு நடந்தது?' என்று நினைக்க நினைக்கத் தேடுதல் அதிகமானது. பத்து
பதினோறு வயதுப் பையனாக இருந்தாலும் வலிக்கிறது என்று சத்தமிடவில்லை.
மாறாக எனக்கு ஏன் வலிக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
எப்படி எனக்கு வலிக்கலாம் என்ற கேள்வி என்னைத் துளைத்தெடுத்தது. ரத்தம் குபுகுபுவென ஆழமான காயத்திலிருந்து வந்ததைப் பார்த்துவிட்ட பெற்றோர் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.
மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டவுடன் வீட்டில் ஓய்வெடுக்காமல் நேராக அண்ணாமலை சுவாமிகளைப் பார்க்கக் கிளம்பி விட்டேன்.
சுவாமிகளிடம், "நான் ஆன்மா என்றால் எனக்கு ஏன் வலிக்கிறது?" கிழிந்தது சரீரம் தானே!" என்று கேட்டேன்.
சுவாமிகள், 'சரீரம், ஆன்மா' பற்றி மீண்டும் தெளிவாக விளக்கிவிட்டு, தியானம் ஒன்றை சொல்லிக் கொடுத்தார். "இந்தத் தியானத்தை முழுமையாகச் செய் உன்னுடைய கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்," என்றார்.
அந்தத் தியானத்தை முழு தீவிரத் தன்மையுடன் (Intensity) செய்து வந்தேன்.
பதில், அனுபவமாகக் கிடைத்தது. சந்தேகம் தெளிந்தது. அந்த அனுபவத்தைத்தான் out of body experience என்று பின்னாளில் உணர்ந்து கொண்டேன்.
சில நாட்கள் கழித்து, அந்த அனுபவத்தை மீண்டும் பெற வேண்டும் என்று தீவிரமானேன். அந்த தீவிரத் தன்மைதான் என் ஆன்மீகத் தேடலைப் பல மடங்கு அதிகரித்தது.
அதுதான் பரமஹம்ஸ நிலையை உதிக்கச் செய்தது.
இந்த உத்சாகத்தால், என்னால் பரமஹம்ஸமாக
மாற முடிவது சாத்தியம் என்றால்,
எல்லோரையும் அந்த உத்சாகம் மாற்றியே
தீரும்.
எதையும் செய்து பார்க்கும் துணிவான
உத்சாகத்தை எடுத்து வந்தால்,
உங்களைக்கூட அது பரமஹம்ஸமாகப்
பறக்க வைத்துவிடும்.

இன்டென்சிடியை எப்படி அடைவது?
How to achieve intensity?
உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் செயல்களின் பின்னால் எவ்வளவு தீவிரமாகவும், ஆவலாகவும் ஓடுகிறீர்கள் என்பதை நினைவுக்கு எடுத்து வாருங்கள்.
இப்போது யாரெல்லாம் ஆழமாகப் பிரார்த்தனை செய்கிறீர்களோ, அவர்களுக்கு எல்லாம் 10 மில்லியன் டாலர் பரிசு கொடுக்கப்படும் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் உடனே, 'வாழ்வா? சாவா? ஒருகை பார்த்து விடலாம்' என்பது போன்று உங்கள் தீவிரத் தன்மையைக் காட்டுவீர்கள் இல்லையா?
இது, ஏதோ ஒரு பொருள் உங்களை நிறைவுபடுத்தும் என்று வெறுமனே நினைப்பதின் விளைவால் நிகழ்வது என்பது உங்களுக்குத் தெரியும்.
அந்த ஒன்று, ஏதோ ஒன்றை உங்கள் வாழ்க்கையில் சேர்க்கிறது என்று அறிந்துள்ளீர்கள். அதேபோன்றுதான், 'ஞானம் அடைதல்'கூட ஏதோ ஒன்றை, உங்கள் வாழ்க்கையில் சேர்க்கிறது.
ஞானமடைதல் என்ற லயத்திலேயே இன்டென்சிடியோடு, தீவிரத் தன்மையோடு இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் எந்த விஷயத்தை நோக்கி உங்கள் ஆசையைத் திருப்புகிறீர்களோ, அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை நோக்கித்தான் இன்டென்சிடி திரும்பும். தீவிரத் தன்மையை, இன்டென்சிடியைப் பெற, அதை உருவாக்கும் ஏக்கத்தை அதிகரியுங்கள்.
உதாரணமாக, நீங்கள் ஆரோக்கியம் அல்லது செல்வத்திற்காக ஆசைப்பட்டாலும், அதைப் பற்றித் தீவிரமாக இருங்கள்.
அப்போது இந்த ஏக்கம் உறுதியாகும். பிறகு அது தீவிரத் தன்மையை நோக்கித் திரும்பும். இன்டென்சிட்டி ஞானமடைவதற்காக மட்டுமல்லாமல், இன்டென்சிட்டியினால் உங்களுடைய நிறைவேறாத ஆசைகளையும் அப்படியே எரித்து விடலாம். எதையெல்லாம் நீங்கள் நிறைவுத் தன்மையோடு அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதற்கான ஆழமான, தீவிரமான ஏக்கம் போதும். அதுவே உங்களைக் கரைத்து விடும். தீவிரத் தன்மை, இன்டென்சிடியை அளித்துவிடும்.
குருவைப் போல வாழ ஆசைப்படுங்கள்,
குருவாகவே மாறிவிடுவீர்கள்
Have liking to Live Like Guru, You will become Guru
இந்தத் தியான நுட்பத்தை முயற்சித்துப் பாருங்கள். எந்த எண்ணம் உங்கள் மனத்திற்குள் வந்தாலும், "குருநாதர் இப்பொழுது எப்படி நடந்து கொள்வார்?" என்று உங்களிடமே கேளுங்கள். உடனே அதைப் போலவே செய்யுங்கள். பளிச்சென்று ஒரு பதில் கிடைக்கும்.
இன்னொரு விஷயம், தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். நான் நடந்து கொள்வதைப் போன்று, நீங்கள் நடந்து கொண்டீர்களானால், என்னிடம் என்ன உள்ளதோ, அதை நீ ங்கள் அடைவீர்கள்.
இது பிரபஞ்சம் தரும் சத்தியம். பிரபஞ்சத்திடமிருந்து வரும் உறுதிமொழி.
இந்த ஒரே ஒரு செய்தியைப் புரிந்து எடுத்துச் சென்றீர்களானால்,
அதாவது 'குருவைப் போன்று வாழ்வது'.
நீங்கள் எதற்கெல்லாம் தகுதி உடையவர்களாக இருக்கிறீர்களோ அவை எல்லாமே, உங்களுடன் எப்போதும் இருக்கும்.
அதை வாழ்வதற்குப் போதுமான தைரியம் இருக்கும் ஒரு மனிதர் "குருநாதர் எப்படி வாழ்வாரோ அது போலவே நானும் வாழ்வேன். நானும் அப்படியே வாழ்வேன்," என்று சொல்வார்.
"சத்குருநாதர் எப்படி நடந்து கொள்வார் என்று யாருக்குத் தெரியும்?" என்று ஒரு கேள்வியை உங்கள் மனம் கேட்டால்...
உங்கள் மனத்திடம் நீங்கள் கேளுங்கள், "இந்தக் கேள்விக்குச் சத்குருநாதர் எப்படிப் பதிலுக்குச் செயல்படுவார்?"
அவர் வெறுமனே மனத்தை மௌனமாக்கி விடுவார்.
பிறகென்ன? அதையே நீங்களும் செய்யுங்கள். அவ்வளவுதான்.
இதுதான் உங்களுடன் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டியது. உங்களுக்குள் இந்த ஒரு உண்மையை எடுத்துச் சென்றீர்களானால், நீங்கள் என்னை எடுத்துச் செல்கிறீர்கள். பரமஹம்ஸத்தை எடுத்துச் செல்கிறீர்கள்! உங்களுக்கு நீங்களே புதுப் பிறவி எடுத்துக் கொள்வீர்கள்.
எந்த விதமான கஷ்டங்களைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். அப்படி என்ன பெரிய கஷ்டம் வந்துவிடும்? அதிக பட்சம் மரணம்தானே வரும். மரணம்கூட வராது. மரணபயம்தான் வரும்.
மரணபயம் வந்தால் உடனே இதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ‘சத்குரு நாதர் எப்படி இருப்பார்?’
அவர் இந்தப் பயத்தை மிகவும் அழகாக விட்டுவிடுவார்.
நீங்களும் அந்தப் பயத்தை விட்டு விடுங்கள்.
உண்மையிலே, இந்த உணர்வுதான் ‘செய்திட வேண்டும்’ என்ற தீவிரத் தன்மையை உணர்த்தியது என்னை உயிருள்ளவனாக, தீவிரமானவனாக, ஆழமானவனாக்கி ச க்தியுடையவனாக உயர்த்தியது.
‘‘குருநாதர் எப்படி நடந்து கொள்வார்?’’
எந்தவிதமான பிரச்சினையாக இருந்தாலும், இந்த ஒரே ஒரு நுட்பத்தைச் செய்தால் பிரச்சி னை தீர்ந்து விடும். உங்களுடைய உள்ளுலகத்தில் எது பிரச்சினையாக இருந்தாலும், அது தீர்ந்து விடும்.
நீங்கள் எதையெல்லாம் பிரச்சினை என்று பார்க்கிறீர்களோ, அதையெல்லாம் ஏற்கெனவே பார்த்தவர்கள் பரமஹம்ஸர்கள். பரமஹம்ஸர்கள் உலகத்தில் நடந்தது, நடந்து கொண்டு இருப்பது, நடக்கப்போவது என எல்லா அனுபவங்களையும் விழிப்புணர்வால் பார்த்தவர்கள்.
அப்படிப்பட்ட ஒரு
மனிதரைத்தான் ‘பரமஹம்ஸர்’
என்கிறோம். அவருக்குள்
ஒரு அனுபவம் நிகழவில்லை
என்றால், அவர் பரமஹம்ஸர்
ஆவதற்கு பிரபஞ்சமே அவரை
அந்த அனுபவத்திற்குள் நுழைய
வைத்துவிடும்.

அதனால்தான், அவ்வளவு உறுதியாகச் சொல்கிறோம், நீங்கள் எதற்குள் சென்றாலும் அல்லது செல்வதாக இருந்தாலும் சரி, அதனுள் ஏற்கெனவே நான் சென்று இருக்கி றேன்.
பரமஹம்ஸர்கள் போகவில்லை என்று சொல்லுவதற்கு எந்த ஒரு வெற்றிடமும் இல்லை, எந்த ஒரு அனுபவமும் விடுபடவில்லை.
அதையெல்லாம் ஏற்கெனவே அறிந்த ஒருவரைப்போன்று வாழ நினைக்கும் பொழுது, நீங்களும் அவராக மாறுவீர்கள். குருவைப்போன்று வாழ்வது ஒரு மிகப்பெரிய கொடுப்பினே. அது அவரின் நிலைக்கு (state) அழைத்துச் செல்லும் அந்தஸ்த்திற்கு (Status) அல்ல.
குருவைப் போன்று வாழ்வது என்று முடிவு செய்து வாழ்ந்தோம் என்றால், அவராகவே மாறிவிடுவோம்.
குருவைப்போலவே ஆனந்தமயமானவர் என்பதை உணரத் தொடங்குவோம்.ஜீவன் முக்தராவோம்.
உற்சாகத்தின் ரகசியம்
• டென்ஷன் ஏன் வருகிறது?
தன் எடையைவிட 30 மடங்கு அதிகமுள்ள உணவு துணுக்குகள் வரை சர்வ சாதாரணமாக தூக்கிச் செல்லும் எறும்புகள் உற்சாகமாகவேயிருக்கின்றன. எப்போதும் தன் உடலை மட்டும் தூக்கிக் கொண்டு செல்லும் மனிதனுக்குத்தான் டென்ஷன் வருகிறது! உற்சாகம் குறையும் போதுதான் ஒரு மனிதனுக்கு டென்ஷன் வருகிறது. உங்களுக்கு டென்ஷன் வந்த நிமிடங்களை யோசித்துப் பாருங்கள். அந்த நேரத்தில் உற்சாகமிழந்திருப்பீர்கள். உற்சாகமாக, சந்தோஷமாக இருக்கும்போது - முயற்சி செய்தால் கூட உங்களால் டென்ஷனாக முடியாது. உற்சாகக் குறைவே வாழ்வின் சாதாரண சூழ்நிலைகளில்கூட ஒருவரை டென்ஷனின் உச்சிக்குக் கொண்டு செல்கிறது. உற்சாகத்தை வாழ்வில் அதிகரியுங்கள். டென்ஷன் குறையும்.
உற்சாகம் அதிகரிக்க அல்லது உற்சாகம் குறையாமல் இருக்க சில டிப்ஸ்... • தினம் ஒரு தியானம் செய்யுங்கள். • சந்தோஷம் தந்த சம்பவங்கள் மட்டும் நினைவில் நிற்க அனுமதியுங்கள். • இதயப்பூர்வமாக வாழுங்கள். • சிரிக்கக் கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் முழுமையாகச் சிரியுங்கள். • டென்ஷன் வரும்போது முழு விழிப்புணர்வோடு இருங்கள்.
நீங்கள் டென்ஷனாகுகிறீர்கள் என்பதைத் தெரிந்தே டென்ஷனாகுங்கள். உடலில், மனத்தில் நிகழும் மாற்றங்களை முழுமையாக உணருங்கள். ஆசிரியரைப் பார்த்ததும் அடங்கும் வகுப்பறைச் சப்தம் போல டென்ஷன் உங்களை விட்டு ஓடுவதைப் பார்ப்பீர்கள்.
