சிரிப்பு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
- சிரிப்பு ஒரு முழுமையான உடல் அனுபவம் ஜீவன் முக்த அனுபவம்.
சிரிப்பு
உங்களுக்கு மருந்து -
மற்றவர்களுக்கு விருந்து.
சிரிப்பில்லா முகத்திற்கும்
செத்துப்போன முகத்திற்கும்
- வித்தியாசங்கள் மிகக் குறைவு
சிரிப்பு
உடல், மனம், உயிர் என்ற மூன்றும்
சீராக இயங்கிக் கொண்டிருக்கின்றன
என்பதற்கான அறிகுறி.
சுகத்திற்குச் சொந்தக்காரராக்கும் சிரிப்பு
Laughter makes you pleasant
சிரிப்பு ஒரு மருந்து
Laughter is a Medicine
உடலுக்கு உள்ளேயே செய்யப்படும் மஸாஜ்க்குப் பெயர் சிரிப்பு எனச் சுருக்கமாய் சிரிப்பை வர்ணிப்பவர், டாக்டர் வில்லியம்.ஃபிரை.
சிரிப்பு பற்றி மிக அதிக அளவில், அதாவது, தொடர்ந்து 30 ஆண்டு காலமாக சிரிப்பை மருத்துவக் கோணத்தில் ஆராய்ந்து முடித்தபின் அவர் சொல்கிறார்....
"சிரிப்பு ஒரு முழுமையான உடல் அனுபவம்"
"ஒரே நேரத்தில் எல்லா நாடி நரம்புகளையும் தூண்டி, தசைநார்களை உற்சாகப்படுத்தி, எலும்பின் மஜ்ஜை வரை சக்தியைப் பாய்ச்சும் சக்தி பெற்றது இந்தச் சிரிப்பு," எனச் சிரிப்புப்பற்றி சிரிப்பு ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
"சோர்வுக்குப் பதில் உத்சாகத்தைத் தரும் ஒரே ஒரு தொழில் சிரித்தல்," என ஜென் புத்த
மதத்தில் சொல்லப்படும் ஒரு ஞான வெளிப்பாடு உண்டு. சிரிப்பு ஓர் தியான ரகசியம். தொடர்ந்து செய்தாலும், சலிப்பு எட்டிப் பார்க்காத களிப்புக்காலம் சிரிப்புக் காலம்.
ஒரு ஜென் சீடன் தன் குருவிடம் கேட்டான், "உங்கள் செயல், சொல் எனக்குப் புதிராயிருக்கிறது."
குரு: "என்ன?"
சீடன்: "நான் கோபப்பட்டால், அது அக நடுக்கத்தின், உள் எரிச்சலின் வெளிப்பாடு எனச் சொல்கிறீர்கள். நீங்கள் கோபப்பட்டால், அது கருணையின் வெளிப்பாடு என்றும், அது நீங்கள் எனக்குச் செய்யும் உதவி என்றும் சொல்கிறீர்கள்.
நான் செய்யும்போது அது தவறு.
நீங்கள் செய்யும்போது மட்டும் அது சரியா?"
சீடனைப் பார்த்துச் சிரித்த குரு சொன்னார், "கூட்டுப்புழுவை தாய் வண்டு கொட்டிக் கொட்டிப் பட்டுப் பூச்சியாக்குவது கருணையா, அகநடுக்கமா சொல்?
தாய் வண்டையோ, தன் பக்கத்திலிருக்கும் சக புழுவையோ, வளரும் புழு கொட்ட முயற்சித்தால், அது கருணையா, இல்லை அகநடுக்கத்தின் வெளிப்பாடா சொல்?" என்ற குருவின் வார்த்தைகள் செய்த வருடல்கள், ஜென் சீடனின் முகத்தில் புன்னகையை வளர்த்தது.
தன் சிறுபிள்ளைத்தனமான கேள்வியை நினைக்க நினைக்க, சீடனுக்குச் சிரிப்பு வந்தது.
சிரிப்பை மலர்த்தும் யுக்தி-1
சிரிக்கும்போது ஞானியாகிறீர்கள்
When you Laugh - You become Enlightened Master
சீடர் ஒருமுறை கேட்டார், "எந்த ஒரு உணர்ச்சியை எடுத்துக்கொண்டாலும், அதில் நம்மிருவருக்கும் இமாலய வேறுபாடு இருக்கப்போகிறது.
ஒரு ஞானியும், ஒரு சாதாரண மனிதனும் ஒரே மாதிரியாக, ஒரே விதத்தில் வெளிப்படுத்தும் ஒரு உணர்ச்சி அல்லது செயல் ஒன்றாவது இருக்கிறதா?"
குரு: "ஒரே ஒரு செயல் இருக்கிறது"
சீடன்: "அது எது?"
குரு: "ஞானியும் மனிதனும் சந்திக்கும் தளம் சிரிப்பு. சிரிக்கும்போது ஞானி மனிதனாகிறார். மனிதன் ஞானியாகிறார் எனச் சொல்லி முடித்தார்.''
புத்தனும் பித்தனும்;
கிருஷ்ணனும் கிறுக்கனும் ;
சிவமும் சவமும்
ஒன்றாகும் நேரம், சிரிப்புக்காலம்
Happy Chemicals என அழகாய்க் குறிப்பிடப்படும் எண்டார்ஃபின்கள்தான், உடலின் மகிழ்ச்சி தரும் இரசாயனங்கள். புன்னகைக்கும்போது பொட்டளவு மட்டுமே உடலுக்குள் தூவப்படும் இந்த இரசாயனங்கள்...
உடல் குலுங்க சிரிக்கும்போது விடாது பெய்யும் அடைமழைபோல் பொழிகிறது.
சிரிப்பை மலர்த்தும் யுக்தி-2
சிரிப்பே சொர்க்கம்
Laughter is Heaven
“வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்கிறார்களே, எப்படி?’’ என ஒருவர் கேட்டார்.
சிரிப்பு பற்றிய மெய்ஞான ரீதியான தியான விளக்கத்தைச் சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்த ஒரு ஆராய்ச்சி அறிக்கையில் படித்தோம். அதில் குறிப்பிட்டிருந்த பயனுள்ள சில குறிப்புகளை மட்டும் உங்களுக்காக இங்குக் குறிப்பிட விரும்புகிறோம்.
1. முழுச் சிரிப்பு, நுரையீரலை காலியாக்கி உள்வரும் மூச்சுக் காற்றை அதிகப்படுத்துகிறது.
2. உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, எந்தப் பக்கவிளைவுமில்லாமல்! 3. உற்சாக சக்தியை உடலில் திடீரென உருவாக்குகிறது. எந்தப் பக்க விளைவுமில்லாமல்.
4. நன்றாகச் சிரிப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.
5துக்கத்தைக் கரைக்கும் மகிழ்ச்சி ஹார்மோன்களைச் சுரக்கச் செய்கிறது. சிரிக்கும்போது என்ன நிகழ்கிறது? அப்போது உங்களின் மனம் நிற்கிறது. உடலும், உயிரும் சந்திக்கிறது. உங்களின் ஆத்ம சக்தி, ஒரு மின்னல் போல் உங்களுள் பளிச்சி டுகிறது.
சிரிப்பு, ஆத்ம சக்தியின் வெளிப்பாடு. அதனால்தான், அந்தக் கணங்களில் மனிதர் ஞானியாகிறார் எனச் சொல்லப்படுகிறது.
எனவே சொல்கிறோம்... "ஒரு ஜோக்கைப் புரிந்துகொள்ளத் தவறினாலும், சிரிக்கத் தவறாதீர்கள். (Even if you miss the joke, don't miss the laughter) பத்து நிமிட சிரிப்பு ஒரு மணிநேர உடற்பயிற்சிக்கும், இரண்டு மணி நேர நடைக்கும், மூன்று மணி நேர தூக்கத்திற்கும் சமமானது."
> வாய்விட்டுச் சிரித்தால்
> நோய்விட்டுப்போகும். இது
> பழமொழி அல்ல. அற்புதமான
> தியான சூத்திரம் தொடர்ந்து
> இருபது நிமிடங்கள் சிரிப்பதே ஒரு
> தியானமுறை.
சிரிப்பின் ரகசியம்
- சிரித்தால் கவலையெல்லாம் போய்விடுமா? எப்படி நம்புவது? சிரிக்காவிட்டால் கவலையெல்லாம் போய்விடுமா? யார் உங்களை நம்பச் சொன்னது! நம்ப வேண்டாம். சோதித்துப் பாருங்கள். நிஜமா, இல்லையா என்பது உறுதியாகும்.
- சிரித்தால் நோய்விட்டுப்போகுமா?
நீங்கள் நோயை விட்டு விட்டுப் போய்விடுவீர்கள்.
- நோயை விட்டுவிடுவோமென்றால்?
நிஜத்தில் நீங்கள்தான் நோயைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். சிரிப்பு உங்களின் மனப்பிடிப்பை விடுவிக்க வல்ல சரவெடி!
சிரியுங்கள், சிரிக்க வையுங்கள் - இது கலை, தியானம்
Laugh and Make other also - An Art, Meditation
"அகங்காரம் மிகுந்தவரால், முழுதாய் சிரிக்க முடியாது. முழுதாய் சிரிப்பவரிடம் அகங்காரம் இருக்க முடியாது," என்ற ஞானமொழியைச் சொல்லும் தாவோ ஞானியிடம், ஒருவர் கேட்டார்.
"சிரித்துக் கும்மாளமடிப்பவரெல்லாம் எப்படி ஆன்மீகவாதியாகமுடியும்?"
அதற்கு ஞானி, "சிரித்துக் மகிழ்வது ஆன்மீகம் அல்ல என்று உனக்குச் சொன்னது யார்?" எனத் திரும்பக் கேட்டார். கேட்டவரால் பதில் சொல்ல முடியவில்லை
ஜடாமுடி வளர்ந்து, தாடி வளர்த்து, நீளமான இறுகிய முகத்தோடு, மிக சீரியஸாக, வார்த்தைகளை அளந்து பேசுவது ஆன்மீகமல்ல. அவர் ஆன்மீகவாதியுமல்ல. மலர்போல் மலர்ந்த முகத்தோடு.... எல்லோர்க்கும் இதமளிக்கும் வகையில், தானும் மகிழ்ந்து, மற்றவரும் மகிழும் வகையில், குழந்தைபோல் குதுகலமாக இருப்பவரே ஆன்மீகவாதி. சிரிப்பு, உங்களை ஞானியாக்குகிறது. எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் ஒருவரால் செய்ய முடிந்த தியானம் சிரிப்பு.
சிரியுங்கள், சிரிக்கவையுங்கள்.
சிரிக்க சிரிக்க, சிரிப்பாய் சிரித்துக்
கிடக்கும் வாழ்வை, சமப்படுத்தி
தூக்கி நிறுத்தும் ஞானசக்தி,
உங்களுக்குள் அதிகமாகும்.
உடல், மனம், உயிர் எல்லாம்
சக்தியூட்டப்படும். ஆரோக்கியம்
பெறுவீர்கள்.
> உங்களைச் சுற்றி இருப்பவர்களைக் > கொஞ்சம் உற்றுப் பாருங்கள். யாருக்கு > அதிகமாகக் கூட்டம் கூடுகிறது? > சிரிக்கச் சிரிக்கப் பேசுகிறவர்களைச் சுற்றி > எப்போதும் ஒரு கூட்டம் வட்டமடித்துக் > கொண்டிருக்கும். சீரியஸாக முகத்தை > வைத்துக் கொண்டு தத்துவமாகப் > பொழிந்து தள்ளுகிறவர்களிடமிருந்து > பலரும் ஒதுங்கிவிடுவார்கள். எல்லோரும் > கவலையை மறந்து சிரிப்பதையே > விரும்புகிறார்கள். எவ்வளவு > முற்போக்கான கருத்தாக இருந்தாலும், > சிரிக்கச் சிரிக்கச் சொல்லுகிற > போதுதான் அது சாதாரண மக்களையும் > சென்றடைகிறது.