KAILASA Library/ஜீவன் முக்தி/தூக்கம்Sign in
ஜீவன் முக்தி

தூக்கம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

- தூக்கத்தின் கையில் நீங்கள் இருந்தால் நீங்கள் மனிதர், உங்களின் கையில் தூக்கம் இருந்தால் நீங்கள் ஜீவன் முக்தர்.

தூக்கத்தைக் கையாளும் அறிவியல்

Science of Handling Sleep

நினைவாற்றல் பயிற்சி முகாமில் பரபரப்பான கேள்விகளை மாணவ, மாணவியர் கேட்டுக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஆசிரியர் ஒருவர் கேட்டார்..

மாணவர்களையும், இளைஞர்களையும், குடும்பஸ்தர்களையும் பாதிக்கும் ஒரு விஷயம் தூக்கம். நாங்கள் இந்தத் தூக்கத்திலிருந்து விடுபட எவ்வளவோ முயற்சிக்கிறோம். ஆனால் முடியவில்லை.

ஒருவர் படுத்து உறங்குவது போன்ற காட்சி

முக்கியமாக, எப்போதெல்லாம் இனிமேல் நாம் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும் என முடிவு செய்கிறோமோ, அப்போதெல்லாம்தான், இந்தத் தூக்கம் ரொம்ப சுகமானதாகத் தெரிகிறது. இந்தத் தூக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மட்டும் ஒரு நல்ல வழி சொன்னீர்களென்றால், எவ்வளவு கஷ்டப்பட்டாவது செய்திடுவோம். அது எங்களெல்லோருக்கும் பேருதவியாக இருக்கும்.

“அட! அப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியதில்லை.

கஷ்டமேயில்லாமல் தூக்கத்தைக் கையாள ஒரு அருமையான தியானம் இருக்கிறது.”

“அவ்வளவு எளிமையாக இருந்தால் அந்தக் தியானத்தை இப்போதே சொல்லிக் கொடுங்கள்.”

“அதற்கு முன் தூக்கம் ஏன் நம்மை ஆட்டிப்படைக்கிறது? என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.”

“ஆமாம், அதுகூட மிக முக்கியமாக நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதுதான். சொல்லுங்கள்.”

“நீங்கள் எட்டு, பத்து மணிநேரம் தூங்கினால் கூட, உங்களின் மொத்தத் தூங்கும் முயற்சியும் அவ்வளவு நேர தூக்கத்தில் வரும் இரண்டே இரண்டு மணி நேர ஆழ்ந்த தூக்கத்திற்காகத்தான்.”

எண்ணங்கள், தூக்கத்தை நிர்மாணிக்கும் ஆயுதங்கள்

Nature of thoughts determines the depth of sleep

| எண்ண ஓட்டம் குறைந்தால் தூக்கம் ஆழமாகும் | | :--- |

“இரண்டு மணி நேர ஆழ்ந்தூக்கத்திற்காகவா, இரவு முழுவதும் தூங்குகிறோம்?'' ஆச்சரியமாய் அவர் கேட்டார்.

அதற்குப் பதிலளிக்கையில், “TPS என்று அதைக் குறிப்பிடுவார்கள். சில நேரங்களில், உங்கள் இமைகள் மூடியிருந்தாலும், உங்களுக்குள்ளே கண்ணுக்குள் விழிகள் அசைந்து கொண்டே இருக்கும். அது, தூக்கத்திலும் உங்களுக்குள் வரும் எண்ணங்களைத் தெரியப்படுத்திவிடும்.

இந்த நிலைதான் உங்களின் தூக்கத்தைக் கெடுக்கிறது. இது அதிகமாக ஒருவருக்கு இருக்கும்போதுதான், அவருக்கு எவ்வளவு நேரம் தூங்கினாலும், தூங்கினோம் என்ற திருப்தியைத் தருவதில்லை.”

“அப்படியா!?”

“ஆம். சாதாரணமாகக் கண்களை விழித்துப் பேசிக்கொண்டிருக்கும் நினைவு நிலையில் ஒருவரின் எண்ணங்களைக் கணக்கிட்டால், அது 100 TPS ஆக இருக்கும் (Thoughts per second, அதாவது ஒரு நொடியில் உங்களுக்குள் தோன்றும் எண்ணங்கள்) 100 என்பது உதாரணத்திற்காகச் சொல்லப்படும் எண்ணிக்கை.

அதே மனம் அலைபாயும்பொழுது, இருநூறு, முன்னூறு என அதிகரிக்கும்.

கனவு நிலையில் TPS ஆயிரம் வரை கூட உயரும். அதனால்தான் உங்களின் தூக்கத்தில் ஆழம் இருப்பது இல்லை. எண்ண ஓட்டம் குறைந்தால்தான் தூக்கம் ஆழமாகும்.

ஜீவன் பூக்க....

ஏன் தூக்கம் கெடுகிறது?

எண்ணங்களின் எண்ணிக்கை எகிறும்போது, தூக்கம் நிம்மதியற்றதாக மாறிவிடும். தூக்கத்தில் வரும் கனவுகளுக்கேற்ப புரண்டு புரண்டு படுக்க ஆரம்பித்துவிடுவீர்கள். ஆழ்ந்த தூக்கத்திற்குள் நுழையவே முடியாது. இப்படித் தூக்கம் தொந்தரவுக்குள்ளாவதால்தான், காலையில் எழும்போது உடல் அசதி அதிகமாக இருக்கிறது.”

துக்கத்திலிருந்து விடுபட்டால், தூக்கம் கைகூடும்

Deconditioning you from suffering Deepens your Sleep

ஒரு மாணவர் கேட்டார், "கனவுகள் கன்னாபின்னாவென்று வருவதற்கும், எண்ணங்கள் எகிறSecretற்கும் என்ன காரணம்?"

"அன்றைய வாழ்வை ஒழுங்காக வாழாததுதான்," காரணம்.

"வாழாதது என்றால்? புரியவில்லையே! புரியும்படி சொல்லுங்களேன்," என்றார்.

"அன்று கோபப்பட வேண்டிய அளவுக்கு ஏதோ நடந்து விடுகிறது. உங்களால் பாதிக்கப்பட்ட நபரால், அன்று நீங்கள் பயத்துக்குள்ளாகி விட்டீர்கள் என்றால், அன்று இரவுத் தூக்கம் அம்பேல்.

பயமும், கோபமும் கலந்த காட்சிகளாகவே அன்று இரவுத் தூக்கம் இருக்கும். அந்தச் சூழலில் வந்திருக்க வேண்டிய கோபம் அடக்கப்பட்டவுடன், வாழ்ந்திருக்க வேண்டிய கோபம் அடக்கப்பட்டவுடன், இரவு கனவில் தன்னை வெளிப்படுத்திட முயற்சிக்கும், வாழ முயற்சிக்கும். அதேபோல் அன்று உருவான பயமும், இரவில் ஆட்டம்போடும்.

கோபம், பயம், காமம் போன்ற தாக்கங்கள் ஒருவருடைய வாழ்வில் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அவருடைய கனவில் அவை பிரதிபலிக்கும். விளைவு? உணர்ச்சிகளின் பலிகடாவாக தூக்கம் மாறிவிடுகிறது. ஆழ்ந்த தூக்கத்திற்குள் மனிதனால் நுழைவதே அரிதாகிவிடுவதால், எவ்வளவு நேரம் தூங்கினாலும், 'இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம்' என்றே தோன்றுகிறது.

தூக்கத்தின் பிடியிலிருந்து விடுபட, துக்கத்தின் பிடியிலிருந்து விடுபட வேண்டும். அனுபவிக்கப்பட்ட வாழ்வின் பகுதிகள்தான் துக்கம், அதிலிருந்து விடுபட இந்தத் தியானம் பெரிதும் உதவும்," என, அன்று அவருக்குத் தியானமாகச் சொன்னது உங்களுக்கும் பொருந்தும்.

> கோபம், பயம், காமம் போன்ற தாக்கங்கள் ஒருவருடைய வாழ்வில் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அவருடைய கனவில் பிரதிபலிக்கும். விளைவு உணர்ச்சிகளின் பலிகடாவாக தூக்கம் மாறிவிடுகிறது. ஆழ்ந்த தூக்கத்திற்குள் மனிதனால் நுழைவதே அரிதாகிவிடுவதால், எவ்வளவு நேரம் தூங்கினாலும், 'இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம்' என்றே தோன்றுகிறது.

கனவுகளையே களையெடுக்கும் தியானம்

Meditation to filter your dreams

ஆழ் தூக்கத்திற்கான தியானம்-1

Meditation for deep sleep - 1

மனக் கட்டிகளைக் கரைக்கும் தியானத்தைவிட ஆழமானது, இந்தத் தியானம். காரணம், இந்தத் தியானம் தினந்தோறும் செய்யப்படும் தியானம். இந்தத் தியானம், வந்த நோய்களைக் கரைக்கும்; வரப்போகும் நோய்களையும் கரைக்கும்.

தியானத்திற்குள் நுழைவோம்.

நினைவு நிலையிலிருந்து, தூக்கத்திற்குள் கனவு எனும் பாலத்தின் வழியாகத்தான் பிரயாணம் செய்கிறீர்கள். தூக்கத்திற்குள் அழைத்துச் செல்லும் கனவு, சில நிமிடங்களில் ஓய்ந்து விட்டால், ஆழ்ந்த தூக்கம் சாத்தியமாகும்.

பல நேரங்களில் கனவுகள் ஓய்வதேயில்லை. எனவே, தூக்கம் ஆழமாய் நிகழ்வதில்லை. தூக்கம் ஆழமாக, கனவுகள் ஓய வேண்டும். கனவுகள் ஓய, உணர்ச்சிகள் ஓய வேண்டும். உணர்ச்சிகள் ஓயத்தான் இந்தத் தியானம்...

இரவு தூங்கச் செல்லும் முன் உங்களின் படுக்கையறையின் கதவைச் சாத்திவிட்டு, பத்து நிமிடங்களாவது உங்களுக்காகச் செலவு செய்யுங்கள்.

அன்றைய தினத்தில் உங்களைத் தாக்கிய கோப, மோக, பய, வெறுப்பு உணர்ச்சி களை வெளியே கொட்ட ஆரம்பியுங்கள். திட்டுவது, உளறுவது, மெத்தையைக் குத்திக் கோபத்தைக் கொட்டுவது என எல்லா வழிகளிலும் அன்றையக் குப்பைகளை அகற்றிவிடுங்கள். பின்னணியில் பக்திப் பாடல்களை ஒலிக்க விடுவது மிகுந்த பலனைத் தரும்.

கோபதாபங்களை வெளிக்கொட்ட ஒரு ஆள் தேவைப்பட்டாலோ, வெறுப்பைத் தீர்க்க ஒருவர் தேவைப்பட்டாலோ, அதற்கு அந்தத் தலையணையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அடிப்பது, உதைப்பது, பிடிப்பது என்று எல்லா வகைகளிலும் அவற்றை வெளிக் கொட்டிவிட்டால், மனம் சுத்தமாகிவிடும். இரவில் கனவாக வரவேண்டிய அவை, அப்போதே தீர்ந்து போய்விடும்.

தூக்கத்தின் ரகசியம்

  • உறக்கம், மரணம் இரண்டிலும் ஒற்றுமைகள் பல உள்ளதே? உறக்கம் குறுகிய மரணம், மரணம் நீண்ட உறக்கம். வித்தியாசம் காலத்திற்குட்பட்டது.
  • அப்படியானால் உறக்கமும் மரணமும் ஒன்றா? ஆம்! உறக்கம், ஒரு நாளுக்கும், இன்னொரு நாளுக்கும் இடைப்பட்டமரணம். மரணம், ஒரு பிறவிக்கும், இன்னொரு பிறவிக்கும் இடைப்பட்டஉறக்கம்.
  • இரவு கண்விழித்துக் காலையில் லேட்டாகவே எழுந்திரிப்பது சரியான வாழ்க்கை முறையா? லேட்டாக படுத்து சீக்கிரமாக எழுந்து கொள்வது மட்டுமே சரியான வாழ்க்கை முறை. அதை மீறிய எதுவாக இருந்தாலும் சக்தி ரீதியான ஓட்டையே.
  • தூக்கத்தைத் தியானமாக்க முடியுமா? முடியாது.
  • ஏன்? ஏனென்றால் நீங்கள் பிறந்ததிலிருந்து இன்றுவரை தூங்கிக்கொண்டுதான் இருக்கிறீர்கள். புதிதாய் தூங்கவெல்லாம் முடியாது. -ஜென்வாக்கியம்
  • அப்படியென்றால் என்ன செய்ய? விழித்துக்கொள்ளுங்கள்.
  • அதற்கு என்ன செய்ய? தியானம் செய்யுங்கள்.

இருள் தியானம்

Darkness Meditation

ஆழ் தூக்கத்திற்கான தியானம்-2

Meditation for deep sleep - 2

இரவுப் படுக்கைக்குச் செல்லும்போது வெளியே கொட்டுமளவிற்கு உள்ளுக்குள் எதுவும் இல்லை என்றால், இந்தத் தியானத்திற்குள் நுழையலாம்.

நன்றாய், ஓய்வாய் படுத்துக் கொள்ளுங்கள். மீண்டும், மீண்டும் கரிய இருளை மட்டும் தியானம் செய்யுங்கள். ஒரு கீற்று வெளிச்சம்கூட புகாத ஆழ்ந்த இருளை, மீண்டும் மீண்டும் கற்பனை மனத்திரைக்குள் எடுத்து வாருங்கள். இருளையே பாருங்கள். இருளையே சுவாசியுங்கள். கொஞ்சம், கொஞ்சமாக அந்த இருளிலேயே, நீங்கள் கரைவதை உணருங்கள். தண்ணீரில் கரையும் சர்க்கரை கட்டியைப்போல, மெல்ல மெல்ல, அந்த இருளில் கரையுங்கள். ஆழ்ந்த நிம்மதி உங்களுக்குள் மலர ஆரம்பிக்கும். எப்போது தூங்கினோம் என்று தெரியாமலேயே தூங்கிப்போயிருப்பீர்கள்.

இப்படித் தூக்கத்திற்குள் நுழைந்தால், அடுத்தநாள் காலையில் எழும்போது, உத்சாகத்தை உணர்வீர்கள். புது சக்தியோட்டத்தை அனுபவிப்பீர்கள்.