KAILASA Library/ஜீவன் முக்தி/மனச்சோர்வுSign in
ஜீவன் முக்தி

மனச்சோர்வு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

  • மனச்சோர்வு எப்படியிருந்தாலும் அதைச் சுக்கு நூறாக்குவதே ஜீவன்முக்தி.

மனச்சோர்வை எளிதில் தாண்டலாம் Depression can be Crossed Easily

அங்கோர்வாட் கோயிலுக்குச் சென்றிருந்தபோது, அங்கு பக்தரொருவர் இப்படி என்னிடம் கேட்டார். "மஹாபாரதத்தில் கிருஷ்ண பரமாத்மாவே போர் புரியத் தூண்டுகிறாரே! உலக அமைதியைத் தரவேண்டிய பகவானே சண்டைக்குக் காரணமாயிருப்பது எதனால்? இது சரியா?"

"மஹாபாரதம் வெறும் போர் அல்ல.

அது ஞானமடைதல் எனும் அறிவியலை விளக்கும், ஜனரஞ்ச கமான குணச்சித்திர கதாபாத்திரங்களைக் கொண்ட தியான விளக்கம்.இதைப் புரிந்து கொண்டாலே, உங்களின் எல்லாச் சந்தேகங்களும் தீர்ந்து விடும்."

"தியான விளக்கம் என்றால்?"

"ஆம், மஹாபாரதம் மனிதராய் பிறந்த உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் நிகழ வேண்டிய உன்னதமான தியானம்."

> ஆம், மஹாபாரதம் மனிதராய் பிறந்த உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் நிகழ வேண்டிய உன்னதமான தியானம்.

மனமே, மஹாபாரதப் போர்க்களம்

Mind, the Battle field of Mahabharatha

"மஹாபாரதம், தியானமா?" என்று ஒருவர் கேட்டபொழுது அவருக்கு,

இந்தப் பதிலைத் தந்தோம்.

"ஆம், மஹாபாரதத்தில் வரும் ஒவ்வொரு குணச்சித்திரமும், நீங்கள் உங்களுக்குள் சந்திக்கப்போகும் ஒவ்வொரு மனச்சித்திரங்கள்தான்."

"புது விளக்கமாக இருக்கிறதே! தயவு செய்து மேலும் எடுத்துச் சொல்லுங்கள். நாங்கள் மிக ஆவலோடு இருக்கிறோம்."

"மஹாபாரதத்தில் வரும் அர்ஜுனன்தான் உங்களின் 'தனி மனித விழிப்புணர்வு' (Individual Consciousness), துரியோதனன்தான் உங்களின் 'ஈகோ' (Ego).

உங்களுடைய வாழ்வின் மொத்தப் போராட்டமும், உங்களின் ஈகோவிற்கும், உங்களின் விழிப்புணர்விற்கும் இடையே நிகழும் சண்டைதான்.''

கடைசியில் அகங்காரம் சாக வேண்டும். விழிப்புணர்வுக்கு முழுச் சுதந்திரம் கிடைக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை சுதந்திரம் பெறும். அர்ஜுனனும் (உங்களின் விழிப்புணர்வும்) துரியோதனனும் (உங்களின் ஈகோவும்) ஏதோ ஒரு காரணத்தை மையமாகக் கொண்டு சண்டைக்குத் தயாராவதுதான் மன சஞ்சலம், குழப்பம், இந்தப் போராட்டத்தின் உச்சக்கட்டம்தான், மஹாபாரதப்போர் அல்லது இரஸவாதம்.

"ஆஹா! மிக அருமையான விளக்கம்!''

"மனமே, மஹாபாரத போர்க்களம்.''

மனச்சோர்வை மாற்றும் யுக்தி-1

உங்களோடு சண்டையிடாதீர்கள்

Don't Fight with Yourself

"மஹாபாரதத்தையே புதிய கோணத்திலே சொல்கிறீர்கள்?'' என்று ஆச்சரியப்பட்ட அவர்கள், "மஹாபாரதம் ஒரு தியான களமா?'' என்று கேட்டார்கள்.

"ஆம், அதுதான் உண்மை.''

"துரியோதனன் (ஈகோ) அழியாத வரை, அர்ஜுனனுக்கு (விழிப்புணர்வு) நிம்மதியில்லை. ஆனால் இன்னொரு குழப்பம் என்னவென்றால், உங்களின் தனி விழிப்புணர்வை வைத்து உங்களுக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கும் ஈகோவை அழிப்பது என்பது எளிதில் சாத்தியமானதல்ல. காரணம், இரண்டுமே உங்களுக்குள் அல்லவா இருக்கிறது?''

"இது உங்களோடு நீங்களே சண்டையிடுவதற்குச் சமம்.''

"இதெப்படிச் சாத்தியமாகும்?''

"எனவேதான் இதைச் சாத்தியமாக்கும் ஒரு மஹாசக்தியும், மஹா ஞானமும் தேவைப்படுகிறது.

அந்த மஹாசக்தியும், ஞானமும் கொண்டவர்தான் வாழும் ஞானியான கிருஷ்ணர்.

இவர் இல்லாவிட்டால் அர்ஜுனனால், துரியோதனனை எதிர்த்துப் போராட முடியாது. வாழும் ஞானியின் துணை இல்லாவிட்டால், நீங்கள் எவ்வளவுதான் நல்ல முடிவுகளை எடுத்தாலும், அவற்றை வாழ்வில் செயல்படுத்த முடியாது.

வாழும் ஞானியால்தான் படிப்படியாக அர்ஜுனனை முன்னேற்றிச் செல்ல முடியும். இல்லாவிட்டால் உங்களின் அர்ஜுனன் துவண்டுவிடுவார். உங்களின் விழிப்புணர்வு சோர்ந்து விடும்.”

ஒருபுறம் 11 கோடி வீரர்கள். இன்னொருபுறம் 7 கோடி வீரர்கள். இவை உங்களின் எண்ணங்களுடைய உருவங்கள்.

உங்களின் விழிப்புணர்வு
எழுந்து நின்று போராடி
வெற்றி பெறுவதற்கான
ஞானக்கருத்துகளை
(சத்சங்கங்களை) நீங்கள்
பெறுவதே கீதை
உபதேசம்.

எதிரணியில் இருக்கும் 11 கோடி வீரர்கள்தான் உங்களின் எதிர்மறை எண்ணங்கள் (Self contradicting thoughts).

உங்களுக்கு ஆதரவாயிருக்கும் நேர்மறை எண்ணங்களின் (self healing thoughts) எண்ணிக்கை 7 கோடி மட்டும்தான்.

உங்களுக்குக் கெடுதல்களை மட்டுமே செய்யும் எதிர்மறை எண்ணங்கள் ஏராளம். 11 கோடி! இவற்றை எதிர்த்து வெற்றி கொள்ள வேண்டிய நேர்மறை எண்ணங்கள் 7 கோடி மட்டுமே.

11 கோடியை அழித்து துரியோதனை அழிப்பது எப்படி என்ற கலக்கம் உங்களுக்குள் உருவாகும் போதுதான், உங்களின் விழிப்புணர்வு (அர்ஜுனன்) சோர்ந்து உட்கார்ந்து விடுகிறது. இதைத்தான் மனச்சோர்வு (depression) எனக் குறிப்பிடுகிறார்கள். இதிலிருந்து உங்களை மீண்டும் மீண்டும் வெளியேற்றி, உங்களின் தனி விழிப்புணர்வுக்கு உற்சாகத்தைத் தந்து, "போராடு. பாவம், புண்ணியம் பற்றி நீ கவலைப்படாதே,” என்று உற்சாகத்தைத் தந்து துரியோதனன் எனும் ஈகோயின் 11 கோடி எதிர்மறை எண்ணங்களையும் கொல்வதற்கான சக்தியைத் தருவதற்குத்தான் கிருஷ்ணர் தேவை. அவரில்லாமல் அவர்களைக் கொல்ல அர்ஜுனனுக்கு எங்கிருந்து தைரியம் வரும் உங்களின் விழிப்புணர்வு எழுந்து நின்று போராடி வெற்றி பெறுவதற்கான ஞானக்கருத்துகளை (சத்சங்கங்களை) நீங்கள் பெறுவதே கீதா உபதேசம்.

யாராலாவது போர்க்களத்தில் போய் வேதாந்தம் பேச முடியுமா? ஒரு ஞானியால்தான் அது முடியும். ஞானக்கருத்துகளால்தான் விழிப்புணர்வு எனும் அர்ஜுனனை வெற்றி பெறவைத்து, அவரை ஆனந்தம் எனும் மகுடம் சூடுவதற்குத் தயார் படுத்தமுடியும்.

ஏன் போர் புரிய வேண்டியிருந்தது என்பதும், 'போர் புரி,' எனக் கிருஷ்ண பகவான் தூண்ட வேண்டியதின் அவசியமும் இப்போது புரிகிறதா?’’ எனக் கேட்டு முடித்தபோது, கேள்வி கேட்டவர், ஆச்சரிய விழிகளோடு, "புரிகிறது!’’ என்றார்.

உங்களின் அர்ஜுன விஷாத

யோகத்தைத் தாண்டுங்கள்

Cross your Arjuna Visatha Yoga

பகவத் கீதையின் துவக்கத்தில் அர்ஜுனனுக்கு ஏற்படும் depression-ஐதான் 'அர்ஜுனன் விஷாத யோகம்' எனச் சொல்கிறோம்.

இது சரியா, தவறா?... இது நியாயமா, அநியாயமா?... இது தர்மமா, அதர்மமா?... என்று அர்ஜுனனுக்குத் தோன்றிய குழப்பம் என்னையும் தொற்றிக்கொண்டது. அதற்கு என்ன தீர்வு சொல்லுங்கள்?

சரி! கேளுங்கள், இதிலிருந்து வெளிவர ஒரேவழி, ஆத்மசக்தியைப் பொங்க வைப்பதுதான். ஆத்ம சக்தியைப் பொங்க வைக்கும் ஞானக்கருத்துகளைத் தினமும் அரைமணி நேரமாவது கேளுங்கள், இல்லை, படியுங்கள்.

உங்களின் மனச்சோர்விலிருந்து உங்களை வெளியே எடுப்பதற்கான நல்ல தியானம் அது.

அருமையான தியான வரி ஒன்று... “நீங்கள் கட்டுக்கடங்காத உற்சாக சக்தி படைத்தவர், எதனாலும் மறைக்கப்பட முடியாத அளவிற்கு, தொடர்ந்து சுடர்விடும் சூரியனைப் போன்றது உங்களின் விழிப்புணர்வு.” விழிப்புணர்வு எனும் சூரியன் வராதவரைதான், குழப்பங்கள் எனும் இருள் இருக்கும்.

பூனைக் கண்ணை மூடும்போது பூனைக்கு மட்டும்தான் உலகம் இருண்டு இருக்கும். அதேபோல் மனக் கண்ணை மூடியதால்தான், வாழ்க்கை இருண்டு விட்டது என நம்பி, மனம் சோர்வடைகிறது.

“நீங்கள் கட்டுக்கடங்காத சக்தி படைத்தவர்,” எனும் தியான வரியை மனத்தைத் திறந்து உள்வாங்குங்கள்.