KAILASA Library/ஜீவன் முக்தி/குற்ற உணர்ச்சிSign in
ஜீவன் முக்தி

குற்ற உணர்ச்சி

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

- குற்ற உணர்ச்சி என்ற ஒன்றைத் தன்னுள்ளும். மற்றவர்களுக்குள்ளும் உருவாக்காமல் வாழ்பவர் ஜீவன் முக்தர்

குற்ற உணர்ச்சியை விட்டாலே குதூகலமாவீர்கள்

Drop the Guilt, Joy will Overflow

சில மாதங்களுக்கு முன்பு 14 வயது பையனை ஒரு அம்மா ஆஸ்ரமத்திற்கு அழைத்து வந்தார்கள். அவர் நடுத்தர வயது பெண்.

அந்தம்மா சொன்னார்கள், “இந்தப் பையன் நான் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறான். நீங்கள் தயவு செய்து அறிவுரை செய்து, நான் சொல்வதைக் கேட்கச் சொல்லுங்கள்,” என்றார்.

நான் உடனே சொன்னேன், “நானே, எங்கம்மா சொன்னதைக் கேட்கவில்லை. நான் எப்படிம்மா சொல்வது?” என்று கேட்டேன். அந்தம்மா விடவில்லை, “இல்லை, நீ ங்கள் சொல்லுங்கள்,” என்று பிடிவாதமாகச் சொன்னார். அப்போது அந்தப் பையனை அழைத்து, “பாரப்பா, உங்கள் அம்மா சொல்லுவதைக் கேட்கக் கூடாதா? நானே கேட்கிறேன் பார். அவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை நானே கேட்கிறேன். நீ கேட்கக் கூடாதா? அவர்கள் சொல்வதைப்போல் இருக்கக் கூடாதா?” என்று கேட்டேன். அதற்கு அந்தப் பையன் ரொம்ப வேகமாகச் சொன்னான், “அவர்களே ஆனந்தமாக இல்லை, அவர்கள் சொல்வதைக் கேட்டால், நானும் அப்படித்தான் உருப்படாமல் போய் விடுவேன்,” என்றான்.

எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. அந்தப் பையனுடைய புத்திசாலித்தனத்தைப் பார்த்து எனக்கு வியப்பாக இருந்தது.

நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். இன்றைய தலைமுறை நாம் சொல்வதைக் கேட்பதற்குத் தயாராக இல்லை. செய்வதைச் செய்வதற்குத்தான் தயாராக இருக்கிறார்கள்.

சமுதாயத்தில் ஒழுக்கமான வாழ்க்கை (Moral Standard) என்பது என்னவாகிவிட்டது? நன்னெறியோடு இருப்பது என்பது, தாம் செய்ய முடியாததை மற்றவர்கள் மேல் ‘திணித்தல்’ என்று புகுத்தும் முறையாகிவிட்டது. குற்ற உணர்ச்சியின் மூலமாக வாழ்க்கையின் தரத்தை உயர்த்திட முடியும் என்று சமுதாயம் வைத்திருக்கிற தவறான நம்பிக்கைதான் மொத்த வாழ்க்கையினுடைய துக்கத்திற்கான காரணம். தலைமுறை இடைவெளி (Generation Gap), குடும்பத்தில் வருகிற பிரச்சினை இவை அனைத்திற்குமே இதுதான்காரணம் .

குற்ற உணர்ச்சி ஏன் ஏற்படுகிறது என்றால், எந்த ஒரு செயலையும் செய்யும்போது யோசிக்காமல் செய்துவிட்டு, செய்த பின்பு யோசித்து துக்கமடைவதால் வருகிறது. இறந்துபோன உடலைப் பிரேதப் பரிசோதனை (Post mortum) செய்வது போன்று குற்ற உணர்ச்சி என்பது நடந்து முடிந்த செயலைப் பற்றி அளிக்கப்படும் விளக்கமான அறிக்கை (Post mortum report).

இன்றைய தலைமுறை
நாம் சொல்வதைக்
கேட்பதற்குத் தயாராக
இல்லை. செய்வதைச்
செய்வதற்குத்தான்
தயாராக இருக்கிறார்கள்.

இறந்து போனவரின் உடலை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்? அதிக பட்சம் பார்த்துப் பார்த்துத் துக்கப்பட முடியும். இப்படி ஆகிவிட்டதே என்று கதறி அழ முடியும்.

இதனால் தீர்வு கிடைக்கப் போகிறதா?

இல்லை மீட்டெடுக்கத்தான் முடியுமா?

அவருடைய பிரேதப் பரிசோதனை அறிக்கையை வைத்துக் கெண்டு என்ன செய்ய முடியும்? எப்படி இறந்தார் என்று வேண்டுமானால் கண்டுபிடிக்கலாம். அவ்வளவுதான். வேறு ஒன்றும் செய்ய முடியாது.

குற்ற உணர்ச்சியும் அது போன்றதே!

குற்ற உணர்ச்சி என்பது Updated Intelligence-ஐ வைத்து, கடந்த கால நிகழ்ச்சிகளைத் திரும்பிப் பார்க்கும் செயல். அப்போது நமக்குள் ஏற்படுகிற விஷயம்தான் குற்ற உணர்ச்சி.

ஒரு சின்ன உதாரணம் சொல்ல வேண்டும் என்றால்...

சின்ன வயதில் குழந்தைகள் விளையாடும்போது, தங்களுக்கு மிகவும் பிடித்த பொம்மை வைத்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். அப்போது அம்மா குழந்தையிடம் வந்து, அப்பா! சாப்பிட வாப்பா என்று அழைத்தார்கள் என்றால், வேண்டாம் என்று சொல்லும்.

ஆனால், அதையும் மீறி குழந்தையைக் கட்டாயப்படுத்தி, கையிலிருக்கும் பொம்மையை இழுத்தால் போதும், எனக்குப் பொம்மைதான் வேண்டும். நீ செத்து ஒழி என்று உதைக்கக்கூட தயங்காது. ஏனென்றால், அந்த நேரத்தில் அந்தக் குழந்தைகளுக்கு, அம்மாவைவிட பொம்மைதான் முக்கியமாகத் தெரிந்தது. ஆனால், வளர்ந்த பிறகு யாரும் அம்மாவைப்பற்றிச் சொல்லத் தேவையில்லை. அவனுக்கே புரியும், பொம்மையை விட, அம்மா நிறைய விதத்தில் உதவி செய்வார்கள் என்று.

அந்தக் குழந்தை சிறிது விபரம் தெரிந்த பிறகு, "ஐயோ, எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்திருக்கிறோம். நான் எவ்வளவு மோசமானவன், பெற்ற தாயைப் பார்த்து இப்படிப் பேசினேனா!'' என்று வருந்தத் துவங்கினால் என்ன ஆகும்?

குற்ற உணர்ச்சியில் விழும். ஆனால், அப்போது என்ன செய்ய வேண்டும் என்றால் குற்ற உணர்ச்சியை உருவாக்குவதனால் பிரயோஜனமில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அப்போது இல்லாத ஒரு புத்திசாலித்தனம் இப்போது வளர்ந்திருக்கிறதே என்று ஆனந்தப்பட வேண்டுமே தவிர, அப்போது செய்த நிகழ்ச்சிகளுக்காக வருத்தப்பட வேண்டிய அவசியம் தேவை இல்லை.

உண்மையில், குற்ற உணர்ச்சி இல்லாத உள்ளமே தெய்வம் தங்கும் கோயில்.

குற்ற உணர்ச்சி என்பது வளர்ந்து விட்ட புத்திசாலித்தனத்தை வைத்து, கடந்துபோன வாழ்க்கையை நினைத்து நொந்துகொண்டு இருப்பது.

ஆழமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு சத்தியம், குற்ற உணர்ச்சியினால் மட்டும் நல்லவனாக மாறிவிடலாம் என்று தயவு செய்து நினைக்கவே நினைக்காதீர்கள். ஒருவர் என்னிடம் வந்தார், “நான் சிகரெட் பிடிக்கிறேன் என்ற குற்ற உணர்ச்சி என்னிடம் ஆழமாக இருக்கிறது. ஆனாலும், சிகரெட் பிடிப்பதை நிறுத்தவே முடியவில்லை,” என்று சொன்னார்.

நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்...

குற்ற உணர்ச்சி ஆழமாக, ஆழமாக... அந்தச் செயலை, உங்களால் நிறுத்தவே முடியாது. அந்தச் செயலுக்கு அடிமையாவீர்கள்.

காரணம் என்னவென்றால், அந்தக் குற்ற உணர்ச்சியே அந்தச் செயலை மீண்டும்

பாவத்தின் ரகசியம்

• எது பாவம்? இச்சொல்லைப் பிரயோகிப்பது.

• ஏன்? பாவம் என்ற சொல் ஒருவருக்குள் எறியப்படும்போது மனத்துக்குள் பெரிய காயம் ஏற்படுகிறது. இந்த மனக்காயமே குற்ற உணர்ச்சி. குற்ற உணர்ச்சி மனித வளர்ச்சிக்கு எதிரானது.

• யார் பாவி? அடுத்தவரை பாவிகள் என சொல்பவர்களே பாவிகள் என ஜென் தத்துவம் சொல்கிறது.

• பின், மனிதர்களைத் திருத்துவது எப்படியாம்? மற்றவர்களைத் திருத்த நீங்கள் யார்? நீங்கள் முழுமையாகத் திருந்திவிட்டீர்களா? இந்த இரண்டுக்கும் பதில் சொல்ல முடிந்தால் ... நீங்கள் கேட்ட கேள்வி அவசியமானதா, இல்லையா எனப் புரிந்துவிடும்.

• யார் முதலில் திருந்த வேண்டும்? திருத்த நினைப்பவர்கள். மீண்டும் ஞாபகப்படுத்தும். சிகரெட் பிடிக்கிறோம் என்ற குற்ற உணர்ச்சியே, அந்தக் குற்ற உணர்ச்சி மேல் வரும்போதெல்லாம் சிகரெட் பிடித்துவிட வேண்டும் என்ற உத்வேகத்தை அதிகப்படுத்தி விடும்.

குற்ற உணர்ச்சி உங்களைப் பிடிப்பதில்லை. நாம்தான் குற்ற உணர்ச்சிஉருவாக்குகிறோ ம். குற்ற உணர்ச்சி உங்கள் புத்திசாலித்தனத்தை மழுங்கடிக்கச் செய்துவிடும்; தீர்வையும் அளிக்காது. பந்தத்தில் ஆழ்த்தும். நீங்கள் குற்ற உணர்ச்சிக்குள் விழாமல் இருந்தால்தான், மற்றவர்களை நிம்மதியாக வைத்திருக்கவே முடியும். உங்களையும், மற்றவர்களையும் குற்ற உணர்ச்சிக்குள் ஆழ்த்தும் செயலை விட்டுவிட்டீர்களென்றால், குதூகலமாவீர்கள்.

வாழ்வின் தரத்தை உயர்த்த...

To increase the standard of Life...

ஒழுக்கம் என்பது என்னவென்றால், தம்முடைய அனுபவங்களை வைத்து, தம்முடைய வாழ்க்கையைத் தெளிவாக நடத்துவது. அதைத்தான் நீதி நெறி என்று சொல்கிறோ ம்.

நீதிநெறிகள் மற்றவருக்கல்ல. நம்மைத் திருத்துவதற்கு! தனக்கு ஆனந்தம் தருவதும், சுற்றி உள்ளவர்களுக்கு ஆனந்தம் தருவதும் எதுவோ, அதைத் தெளிவாகப் புரிந்து கொண்டு, அதை வாழ்வதுதான் நீதிநெறியோடு வாழ்வது..

> உங்கள் வாழ்க்கையில்
> தெளிவைக்
> கொடுப்பவர்கள்
> மட்டும்தான் அவர்கள்
> வாழ்க்கையிலும்
> தெளிவை
> வைத்திருப்பார்கள்.

இல்லையென்றால், பலநேரத்தில் பார்த்தீர்கள் என்றால், நீதிநெறி என்ற பெயரில் நம் வாழ்க்கையையே துக்கத்திற்குள் ஆளாக்கிக் கொள்கிறோம். பெரும்பாலான நேரங்களில், உங்கள் வாழ்க்கையில் ஒழுக்கத்தைத் திணிப்பவர்களைப் பார்த்தீர்களென்றால், முதலில் அவர்கள் வாழ்க்கைதான் இரட்டைத்தனமாக இருக்கும்; அவர்கள் வாழ்க்கைதான் தெளிவற்றதாக இருக்கும்.

உங்கள் வாழ்க்கையில் தெளிவைக் கொடுப்பவர்கள் மட்டும்தான், அவர்கள் வாழ்க்கையிலும் தெளிவை வைத்திருப்பார்கள்.

விவேகானந்தர், "மனித மனத்தை ஆழ்ந்த கருணையோடு அணுக வேண்டும்," என்று மிக அழகாகச் சொல்கிறார். "சரியாக இரு, நன்றாக இரு, ஒழுங்காக இரு," என்று சொல்வது ரொம்ப எளிது. இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், சொல்பவர்களெல்லாம் அதைச் செய்கிறார்களா என்று பார்த்தால், மிகப் பெரிய கேள்விக் குறியில்தான் முடிகிறது. உண்மையில்தான் சொல்வதைச் செய்யத் தயாராக இருப்பவர்கள்தான் மற்றவர்களுக்கு அதைச் சொல்ல வேண்டும். ஏனென்றால், அவர்களால்தான் தம்மைப் போன்று மற்றவரையும் கருணையோடு அணுக முடியும். கட்டளையிட்டால் கண்ணீர் வரும்; கற்றுக் கொடுத்தால் களிப்பு மிகும்.

‘எப்படி இருப்பது’ என்று கற்றுக் கொடுப்பவர்கள் மட்டும்தான், தியான ஆச்சாரியார்கள்.

கட்டளையிட்டால்
கண்ணீர் வரும்.
கற்றுக் கொடுத்தால்
களிப்பு மிகும்.

வெறுமனே ஒழுக்கத்தை மட்டும் போதிப்பவர்கள் ஆச்சாரியார்கள் கிடையாது. அந்த ஒழுக்க நிலையை அடைவது எப்படி என்கிற நுட்பத்தை, தியான நுட்பத்தை அளிப்பவர்கள்தான் ஆச்சாரியார்கள்.

மூளை ரீதியான தெளிவை (Intellectual Understading) யார் வேண்டுமானாலும் கொடுத்து விடலாம். உணர்வு ரீதியான அனுபவத்தைத் தருவது ஒரு ஞானியினுடைய வேலை.

சத்தியங்கள் உணர்வுப்பூர்வமான அனுபவமாக மாறினால் மட்டும்தான் உங்களுக்குள் நிலைபெறும். இல்லையென்றால், இது நாம் நம்முடைய சொந்த வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள, மற்றவர்கள் மேல் திணிக்கிற நீதிநெறி முறையாக ஆகிவிடும். எப்போது வாழ்க்கையைத் திணிக்கத் துவங்கினோமோ அப்போதே இடைவெளி உருவாகி விட்டது.

அதனால்தான் இந்தத் தலைமுறை இடைவெளி (Generation Gap) உருவாகிறது. உண்மையில் தலைமுறை இடைவெளி என்பது பெரிய பிரச்சினையே கிடையாது.

தன்னைவிட இவர் வயதில் சிறியவர் என்றால் போதும். பெரியவர்கள் அவர்கள் வாழ்க்கை மீதே முழு உரிமை பெற்றவர்கள் போன்று நடந்து கொள்ளத் துவங்குகிறார்கள். உண்மையில் இதுதான் இடைவெளி உருவாகத் துவங்கும் இடம்.

இன்னொரு விஷயத்தை முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தக் காலத்து இளைஞர்கள், இந்தக் காலத்து மாணவர்கள், இந்தக் காலத்துக் குழந்தைகள் எல்லாம் ரொம்ப புத்திசாலிகள். நீங்கள் என்னதான் சொன்னாலும், நீங்கள் சொல்வதை அவர்கள் செய்யவே மாட்டார்கள். நீங்கள் செய்வதைத்தான் செய்வார்கள். (Verbal language-ஆல்) நீங்கள் வாய் மொழியால், வார்த்தைகளால் கற்றுத்தருவதை, அவர்கள் செய்வதே இல்லை. உடல் மொழியால் செயல் ரீதியாகக் (Body language) கற்றுக் கொடுப்பதைத்தான் அவர்கள் கேட்கத் தயாராக இருக்கிறார்கள்; நம்புகிறார்கள்.

வாழ்க்கையில் நன்னெறியை எடுத்து வருவதாக நினைத்துக் கொண்டு, நீங்கள் என்ன

சத்தியங்கள்
உணர்வுப்பூர்வமான
அனுபவமாக
மாறினால் மட்டும்தான்
உங்களுக்குள்
நிலைபெறும்.

செய்கிறீர்கள்? உங்களுடைய மகனோ, மகளோ அல்லது உங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் இருப்பவர்களோ தவறு செய்தால், அவர்களுக்குள்ளே குற்ற உணர்ச்சி யை ஏற்படுத்த முயற்சி செய்கிறீர்கள்.

குற்ற உணர்ச்சியை உள்ளே திணிக்க முயற்சி செய்கிறீர்கள். ஆனால், குற்ற உணர்ச்சியை

ஏற்படுத்துவதனால், எந்தவிதமான பலனையும் எதிர்பார்க்க முடியாது.

தெளிவைக் கொடுத்தால் மட்டும்தான் வாழ்க்கையின் தரத்தை உயர்த்த முடியுமே தவிர, குற்ற உணர்ச்சியைக் கொடுப்பதினால் எதையுமே செய்ய முடியாது.

இன்று நன்னெறி, ஒழுக்கம் என்பது... யார் தன்னுடைய வாழ்க்கையைத் தற்காத்துக் கொள்கிறார்களோ, அவர்கள் தங்கள் தனிமையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மற்றவர்கள் மீது திணிக்கிற ஒரு விஷயமாக மாறிவிட்டது. அதனால் ஏற்படுகிற உணர்ச்சிதான் குற்ற உணர்ச்சி, எரிச்சல், தலைமுறை இடைவெளி எல்லாம்.

உண்மையான ஒழுக்கம், உண்மையான தர்மம் எப்போது வரும் என்றால், தெளிவு பிறந்தால்தான் வரும்.

குற்ற உணர்ச்சியினால் நிச்சயம் ஒழுக்கம் வரவே முடியாது. தெளிவு நிகழ்வது மூலமாக நம்முடைய வாழ்க்கையின் தத்துவங்கள் நமக்குப் புரிந்தால் மட்டும்தான், புரிய வைக்கப்பட்டால் மட்டும்தான் முடியும். அப்போதுதான் வாழ்க்கையின் தரத்தை உயர்த்த முடியும். ஒழுக்கம் வர முடியும்.

குற்றம் கரைக்கும் யுக்தி-1

நோயையே உருவாக்கும் குற்றஉணர்ச்சியை எரித்துவிடுங்கள்

Burn the Guilt which can create diseases

வெறுமனே சட்ட திட்டங்களினாலோ, அடக்குமுறையினாலோ அல்லது ஆணவத்தினாலோ, வாழ்க்கையின் தரத்தை உயர்த்தவே முடியாது. இவற்றால் நிச்சயமாகக் குற்ற உணர்ச்சியை வேண்டுமானால் அதிகம் ஆக்கலாம்.

நீங்கள் இதை நிச்சயம் பார்த்திருப்பீர்கள். தங்களுக்குள் இனிமையான நண்பர்களாக இருக்கிற தாய், தந்தையர்கள் குழந்தைகளை இனிமையாக வளர்ப்பார்கள். நண்பர்களாக இருக்கிற பெற்றோர்களிடம் இருக்கும் குழந்தைகளும் ஆனந்தமாக இருக்கிறார்கள்.

ஆனால், ஒருவரை மற்றவர் அடக்கி வாழ்ந்துகொண்டிருக்கிற பெற்றோர்களின் குழந்தைகளைப் பார்த்தீர்கள் என்றால், மேம்போக்கான போலியான ஒரு மனிதர்களாகத்தான் உருவாகிறார்கள். ஸ்திரத் தன்மையை உடைய ஒரு Intense-ஆன நபராக உருவாகுவதே இல்லை.

குற்ற உணர்ச்சி என்பது, போலித்தனமான மனிதர்களைத்தான் உருவாக்கும். உடம்பில் சீழ்பிடித்த கட்டி, புற்றுநோய். உணர்வில் சீழ்பிடித்த கட்டி, குற்ற உணர்ச்சி. உடலில் இருக்கும் சீழ்பிடித்த புற்றுநோய் போன்று, உணர்வில் சீழ்பிடித்த கட்டியாக இருக்கும் புற்றுநோய், குற்ற உணர்ச்சி. குற்ற உணர்ச்சி, உள்ளுக்குள்ளே சத்தியத்தை உணர விடாது. நிச்சயமாக அது அழிக்கப்பட வேண்டிய ஒன்று. குற்ற உணர்ச்சி நிழல் போன்றது. உங்களுக்குள் தெளிவு எனும் ஒளி பிறந்துவிட்டால், குற்ற உணர்ச்சி என்ற ஒன்று இருக்க முடியாது.

குற்ற உணர்ச்சியைப் பற்றிப் புரிந்து
கொள்ளுங்கள். கொண்டாட்டத்திற்குள்
புகுவீர்கள்.

> தங்களுக்குள் இனிமையான
> நண்பர்களாக இருக்கிற தாய்,
> தந்தையர்கள் குழந்தைகளை
> இனிமையாக வளர்ப்பார்கள்.
> நண்பர்களாக இருக்கிற
> பெற்றோர்களிடம் இருக்கும்
> குழந்தைகளும் ஆனந்தமாக
> இருக்கிறார்கள்.

குற்றம் கரைக்கும் யுக்தி-2

ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்யாதீர்கள்

Don't repeat the same mistake

குற்ற உணர்ச்சி இருந்தால், எந்த ஒரு மனிதனாலும் வாழ்வின் தரத்தை (Moral Standard) உயர்த்தவே முடியாது. உங்களுடைய வாழ்வின் தரத்தைக் குற்ற உணர்ச்சி உயர்த்தும் என்ற எண்ணம் இருந்தது என்றால், தயவு செய்து அந்த எண்ணத்தைக் கைவிட்டு விடுங்கள்.

குற்ற உணர்ச்சி என்பது ஒரு ஆழமான சம்ஸ்காரம். நமக்குள்ளே பதிந்துபோய் இருக்கிற ஆழமான சம்ஸ்காரம். சின்ன வயதில் இருந்து, அறிந்தோ அறியாமலோ, செய்த நிகழ்வுகளை, தவறுகளைக் கோர்த்துக் கோர்த்துப் பார்த்து, அதேபோல் தனது வாழ்க்கையை, மீண்டும் மீண்டும் அமைத்துக்கொள்ளுதல் எனும் மனப்பழக்கம்தான் குற்ற உணர்ச்சி.

கடந்த காலம், இப்படி இருந்திருக்க வேண்டும் என்று நினைப்பது குற்ற உணர்ச்சி.

குற்ற உணர்ச்சியை உடைத்து வெளியில் வர முடியாமல் இருப்பதும், எதிர்காலம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பதும் ஆசை.

உங்கள் சக்தி எதிர்காலத்தை நோக்கி ஓடி, எதிர்காலம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றிருந்தால், அது ஆசை. கடந்த காலத்தை நோக்கி ஓடி, கடந்த காலம் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தால், அது குற்ற உணர்ச்சி. தவறே செய்யாமல் இருக்கமுடியாது. "செய்த தவறையே திரும்பத் திரும்பச் செய்யாதீர்கள்," என்று பிரம்மச்சாரிகளிடம் சொல்வதுண்டு. "புதிதுப் புதிதாய் தவறு செய்யுங்கள். தவறே செய்யாமல் எப்படி இருப்பது, என்பதை ஒருநாள் கண்டுகொள்வீர்கள். இதைப் புரிந்துகொண்டுவிட்டால், பூத்துவிடுவீர்கள்."