ஆசை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
- உங்களின் ஆசைகளை அறிவது, மற்ற ஆசைகளைக் களைவது ஆசைகளைப் பூர்த்திசெய்தாவது கடந்துவிடுவது ஜீவன் முக்த வாழ்வு.
ஆசைகள் இல்லாமல் வாழ்வது என்பது சாத்தியமே இல்லை
No chance to live without desires
வாழ்வதற்கு ஆசைகள் அடிப்படையான பிராணன் போன்றது.
உயிர் போன்றது.
ஆசைகளே இல்லாதவர்கள் எருமைமாடு போல இருக்கலாம். எருமை மாட்டுக்குதான் ஆசைகள் கிடையாது. காலையில் எழுந்த உடன், சாப்பிட்டுப் போய் படுத்துக் கொள்ளும். மழை பெய்தாலும் சரி, வெயிலடித்தாலும் சரி, அப்படியே இருக்கும்.
மாலையானவுடன் மெதுவாக அங்கிருந்து எழுந்து, அதாவது குறைந்த பட்சம் உடலை அசைத்து வாழ்வது எப்படி என்று எருமை மாட்டிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம். ஆசைகள் இருக்கவேண்டும் என்பதற்காக, ஆசைகளைக் கடன் வாங்கச் சொல்லவில்லை.
> ஆசைகள் இருக்க
> வேண்டும் என்பதற்காக
> ஆசைகளைக் கடன்
> வாங்கச்
> சொல்லவில்லை.
ஏனெனில், நாம் பணத்தை மட்டும் கடன் வாங்குவது இல்லை. அதனோடு பிறர் ஆசைகளையும், வாழ்க்கையை வாழும் முறையையும்கூட, அடுத்தவர்களிடம் இருந்து கடன் வாங்குகிறோம். ஆசைகளைக் கடன் வாங்குவது ஆபத்தில் முடியும்.
பக்கத்து வீட்டுக்காரர் அவர் வீட்டிற்குக் குளிர்சாதன வசதி செய்திருக்கிறார் என்றால், உடனடியாக நம் வீட்டில் அதேபோன்று குளிர்சாதன வசதி இல்லாமல் நம்மால் இருக்க முடியாது. இல்லையென்றால், நம் வீட்டு வெப்பம் திடீரென்று அதிகமாகிவிடும்.
அட! அவரெல்லாம் போட்டுவிட்டாரே என்று நமக்குக் குளிரால் அலர்ஜியாக இருந்தால்கூட, மனைவி "அதற்கென்ன? நம் வீட்டில் வாங்கி, உபயோகிக்காமல் வைத்துக் கொள்ளலாம். ஆனால், நமக்கென்று கண்டிப்பாக ஒரு ஏசி இருக்கட்டும். வாங்கிக்கொண்டு வாருங்கள். நாமும் பத்து இடத்திற்குப் போய் வருகிறோம். மற்றவர்கள் முன் கவுரவமாக இருக்க வேண்டுமல்லவா? அதற்காக நீங்கள் நமக்கென்று வாங்கிக்கொண்டு வாருங்கள்," என்று சொல்வார். பக்கத்து வீட்டில் அவர் வாங்கினார் என்பதற்காக, அது நமக்கு அலர்ஜியாக இருந்தாலும், அதை தேவையேயின்றி வாங்கி வந்து மாட்டி வைத்துக்கொள்கிறோம். பின் 'வாங்கி விட்டோமே' என்பதற்காக, இரண்டுநாள் உபயோகப்படுத்தி, உபயோகப்படுத்தியதால் வரும் அலர்ஜிக்குக் கடன் வாங்கி, மருத்துவரிடம் வைத்தியம் பார்த்து என இதுபோன்ற எத்துணை நடந்தாலும், அடுத்தவரிடம் இருந்து அந்த ஆசைகளை வாங்குதல் என்கிற குணத்தை நாம் விடுவது இல்லை."
பணக்கடனை விட மோசமானது ஆசைக்கடன்
கடன் வாங்குவதுபற்றி ஒருமுறை சொல்லிக்கொண்டு இருந்தபோது, என்னிடம் ஒருவர், “5 லட்சம், 10 லட்சம் கடன் வாங்கினால்தான் நாம் கஷ்டப்பட வேண்டும், கவலைப்பட வேண்டும். 50 லட்சம், 1 கோடி கடன் வாங்கினால், கடன் கொடுத்தவர்தான் கஷ்டப்படுவார். நமக்குக் கவலை இல்லை!
ஐந்து லட்சம், 10 லட்சம்வரை வாங்கினால் திருப்பி கொடுக்க வேண்டுமே என்கிற பயம் நமக்கு இருக்கும். கஷ்டம் இருக்கும்.
உண்மையான ஆன்மீக
வாழ்க்கை உண்மையான
ஆனந்த வாழ்க்கை.
உங்களின் ஆசைகளைப்
புரிந்துகொள்வதனால்தான்
ஏற்படும்.
ஒரு அளவிற்கு மீறி கடன் வாங்கி விட்டபின், அந்தக் கடனை நாம் திரும்ப செலுத்த வேண்டும் என்பதற்காகவே நாம் நன்றாக இருக்கவேண்டும் என்று அவர்கள் வேண்டிக் கொள்வார்கள்.
நமக்கு உடம்பு நன்றாக இருக்க வேண்டும், நம் வாழ்க்கை நன்றாக இருக்கவேண்டும் என்று, நம்மைவிட அவர்கள் தொடர்ந்து வேண்டிக் கொண்டு இருப்பார்கள்.
நாம் நன்றாக இருக்க வேண்டுமென்று அவர்கள் கோயில் கோயிலாகப் போய், பூஜை செய்துகொண்டு இருப்பார்கள்," என்று சொன்னார்.
அதற்காகக் கடன் வாங்குவது நல்லதென்று சொல்ல வரவில்லை. ஆசைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்கினால், பதிலுக்கு நீங்கள் உங்கள் வாழ்க்கையை அடகு வைக்க வேண்டியிருக்கும். வாழ்க்கையா? ஆசையா? என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
ஆசைகளை ஆழ்ந்து பாருங்கள்
Look deep into desires
நாம் வெறுமனே பணத்தை மட்டும் கடன் வாங்காமல், ஆசைப்படும் மனத்தையும் கடன் வாங்கத் துவங்கிவிடுகிறோம்.
ஆழ்ந்து உங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால், இந்த அடிப்படையான உண்மை புரியும். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்... ஆசைகளை அழிப்பதோ, அடக்குவதோ ஆன்மீகத்தின் லட்சியம் அல்ல.
உண்மையான ஆன்மீக வாழ்க்கை, உண்மையான ஆனந்த வாழ்க்கை, உங்களின்
ஆசைகளை
அழிப்பதோ,
அடக்குவதோ
ஆன்மீகத்தின்
லட்சியம் அல்ல.
ஆசைகளைப் புரிந்துகொள்வதனால்தான் ஏற்படும். அடக்குவதனாலோ அல்லது அழிப்பதனாலோ, உங்களுக்குள் நீங்களே பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்வீர்களே தவிர, எந்த விதமான நல்லதையும் நீங்கள் செய்து கொள்ளமாட்டீர்கள். அடக்குகிற ஆசைகள், உங்களுக்குள் எரிமலைபோல் பொங்க ஆரம்பித்து விடும். வேறு ஏதாவது ஒரு ரூபத்திலே வெளிப்பட்டுவிடும்.
ஒரு இரண்டு நாள் சாப்பிடாமல் விரதம் இருந்து பாருங்கள். மூன்றாவது நாள் கனவில் பெரிய விருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பீர்கள். நீங்களே பார்க்கலாம், அனுபவிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தும், யோசிக்காமல் ஆராய்ந்து பார்க்காமல், அதை அடக்குகிறோமோ, அந்த ஆசைகள் வேறு ஏதாவது ரூபத்திலே வந்து, நம்முடைய உடம்பினையும், மனத்தினையும் தாக்கும். அதனால் உண்மையான ஆன்மீகம் என்பது, ஆசைகளை அடக்குவதோ, அழிப்பதோ அல்ல; ஆசைகளை ஆராய்வது.
அடக்குவதனாலோ அல்லது அழிப்பதனாலோ, உங்களுக்குள் நீங்களே பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்வீர்களே தவிர, எந்தவிதமான நல்லதையும் நீங்கள் செய்து கொள்ளமாட்டீர்கள்.
அடக்குகிற ஆசைகள், உங்களுக்குள் எரிமலைபோல் பொங்க ஆரம்பித்து வேறு ஏதாவது ஒரு ரூபத்திலே வெளிப்பட்டு விடும். உண்மையிலேயே மனத்தெளிவோடு நீங்கள் உங்கள் ஆசைகளை ஆராய்வீர்களானால், ஆராய்வதானலேயே, தேவையில்லாமல் உங்களுக்குள் சேர்த்து வைத்திருக்கும் ஆசைத்தன்மைகள் தானாகவே அழிந்துவிடும்.
சொந்த ஆசைகளைப் பூர்த்தி செய்யும் சக்தி பெறுவீர்கள். உங்களுக்குள் ஆசைகளை ஆராய்தல் என்று நீங்கள் ஆரம்பித்தீர்களானால், உங்களின் புறவுலக வாழ்க்கை இனிமையாக அமையும்.
அகவுலக வாழ்க்கையும் ஆனந்தமாக அமையும். புறவுலக வாழ்க்கையை இனிமையாக்கவும், அகவுலக வாழ்க்கையை ஆனந்தமாக்கவும் உங்கள் ஆசைகளை ஆராய்ந்து பாருங்கள். சொந்த ஆசைகளைப் பூர்த்தி செய்யும் சக்தி பெறுவீர்கள். உங்கள் சொந்த ஆசைகள் நிச்சயம் நிறைவேறும்.
உண்மையிலேயே
மனத்தெளிவோடு
நீங்கள் உங்கள் ஆசைகளை
ஆராய்வீர்களானால்
ஆராய்ச்சியினாலேயே
ஆராய்வதானலேயே
தேவையில்லாமல்
உங்களுக்குள்
சேர்ந்து வைத்திருக்கும்
ஆசைத்தன்மைகள்
தானாகவே அழிந்துவிடும்.
உங்கள் ஆசைகளை மட்டும் அடையும் வழி
The way to achieve your own desires only
ஒரு மரத்தை உலுக்கும்பொழுது, மரத்திலே காய்ந்து போய் ஒட்டிக்கொண்டு இருக்கிற இலைகள் தானாகவே விழுந்துவிடும். அந்த மரத்தின் பாகமாக இருக்கும், மரத்தின் சாரமாக இல்லாத, பழுத்த இலைகள் தானாகவே உதிர்ந்து கீழே விழும்.
அதேபோல் நம்முடைய மனத்திலும், இந்த ஆசைகளை ஆராய்ச்சி செய்தல் என்ற தியானத்தின் மூலமாக உலுக்கும் பொழுது, மனத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஆசைகள்
| தியானம் செய்தால் சொந்த ஆசைகளைப் பூர்த்தி செய்யும் சக்தி பெறுவீர்கள். சொந்த ஆசைகள் நிச்சயம் நிறைவேறும். | | :--- |
உதிர்ந்துவிடும். சமுதாயத்தின் மூலமாக நம்மீது திணிக்கப்பட்ட ஆசைகள் நாம் மற்றவரிடம் கடன் வாங்கி வைத்துக்கொண்ட ஆசைகள் என்ற இந்தக் காய்ந்த சருகுகளான ஆசைகள் அனைத்தும் தானாகவே உதிர்ந்து கீழே விழுந்து விடுகிறது. தானாகவே அவை தரையில் விழுந்து விடுகின்றன. அப்படி இல்லாத நம்முடைய சொந்த ஆசைகளாக இருப்பவை மட்டும் விழாமல், உதிராமல் நமக்குள்ளேயே ஸ்திரமாக இருக்கிறது.
இன்னொரு விஷயம், இந்தக் காய்ந்த சருகுகள் கீழே விழும்போது, எப்படி அவை மரத்திற்கே உரமாக மாறுகிறதோ, அதேபோல உங்கள் மீது திணிக்கப்பட்ட, அந்த அளவுக்குமீறிய ஆசைகள் உதிர்ந்து கீழே விழும்போது, அதில் விரயமாகிக் கொண்டிருந்த சக்தி உங்களுக்கு உரமாகிவிடும், உங்களுடைய சொந்த ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்கான சக்தியாக மாறிவிடும். கடன் வாங்கிய ஆசைகளை உதிர்த்தாலே, நிஜமான ஆசைகளையும் பூர்த்தி செய்ய சக்தி வந்துவிடும். இப்போது உங்களுக்கு நூறு ஆசைகள் இருக்கிறது எனில், அதில் உபயோகம் செய்வதற்காக 100 சதவிகிதம் சக்தி வைத்திருக்கிறீர்கள்.
இந்த ஆசைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்யும்பொழுது, 80 சதவிகிதம் ஆசைகள் அழிந்துவிடுகிறது. கீழே விழுந்துவிடுகிறது. அப்போது 100 சதவிகித ஆசைகளைப் பூர்த்தி செய்ய வைத்திருந்த மொத்தச் சக்தியுமே இந்த 20 சதவிகித ஆசைகளைப் பூர்த்தி செய்ய உபயோகம் ஆகும். அதாவது 20 சதவீகித ஆசைகளும் உடனடியாகப் பூர்த்தி செய்யப்பட்டுவிடும். இருபது சதவிகித ஆசைகளை உடனடியாக நிறைவேற்றிவிடுவீர்கள். அடைந்துவிடுவீர்கள்.
| ஆசைகள் உதிர்ந்து கீழே விழும்போது அதில் விரயமாகிக் கொண்டிருந்த சக்தி உங்களுக்கு உரமாக மாறி உங்களுடைய சொந்த ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்கான சக்தியாக மாறிவிடுகிறது. | | :--- |
ஆசை ஆராய்ச்சி
Research Desire
"இதற்காகவா இப்படி ஓடினோம்? இதற்காகவா நான் இத்தனைப் பாடு பட்டேன்?" என்று எண்ணியதுண்டா?
வாழ்க்கையைத்
தெளிவாகத் தெரிந்து
கொண்டவர்களுக்குப்
பிரச்சினை என்பதே
இருக்காது.
ஓடுவதற்கு முன்பு ஒரு எரிச்சலையும் நிம்மதின்மையும் தந்து, ஓடி முடிந்த பிறகும் வெறுமையையும், துக்கத்தையும் தருவதுதான், சமூகத்தினால் உங்கள்மீது திணிக்கப்பட்ட ஆசைகளின் பண்பு.
ஓடி முடித்த பிறகும் துக்கத்தை அளிக்கும்; அதுதான் திணிக்கப்பட்ட ஆசைகள்.
ஆனால், ஓடுவதற்கு முன்பும் உந்து சக்தியாக இருந்து, ஓடி முடித்தபின்பும், அனுபவித்தோம் என்கிற ஆனந்தத்தையும், சுகத்தையும், சந்தோஷத்தையும் தருவது உங்கள் சொந்த ஆசைகள். அடையும் முன் துக்கத்தையும், அடைந்ததும் எரிச்சலையும் தருவதுதான் திணிக்கப்பட்ட ஆசைகள். உங்களுடைய ஆசைகளை ஆராய்ச்சி செய்யும்பொழுது, உங்களுக்கு உங்கள் ஆசைகளைப் பற்றி உங்கள் மனமே புரிய வைத்துவிடும். எந்த ஆசைகள் மீது மீண்டும், மீண்டும் மனம் ஓடுகிறதோ, அந்த ஆசைகளுக்குதான் சொந்த ஆசைகள் என்று பெயர். எதன் மீது, மீண்டும் மீண்டும் மனம் வந்து ஒட்டாமல், ஏதோ ஒரு வெறுமையான போக்கினைத் தருகிறதோ, அந்த ஆசைகள் சமூகத்தால் உங்கள் மீது திணிக்கப்பட்டவை.
இந்த இரண்டு, மூன்று விஷயங்களைத் தெளிவாகத் தெரிந்து கொண்டவர்களுக்கு, வாழ்க்கையில் பிரச்சினை என்பதே இருக்காது.
ஆசைகளைத் தெளிவாக்கும் தியானம்
A meditation that clarifies your desires
மூன்று நிலைகளிலே ஆசைகளைப் பற்றி விளக்கினோம். இப்பொழுது ஆராய்ச்சி க்குள் இறங்குவோம்.
திணிக்கப்பட்ட ஆசைகள்
Inserted Desire
முதல் நிலை ஆராய்ச்சி: எது உங்களுடைய சுயமான இச்சைகள் மற்றும் சமுதாயத்தால் உங்கள் மீது திணிக்கப்பட்ட இச்சைகள் என்ற இந்தத் தெளிவு உங்களுக்கு வந்தாலே, உங்களுக்குள் இருந்துகொண்டே, உங்களின் 80% சக்தியை உறிஞ்சுகிற அனாவசியமான ஆசைகள் விழுந்து விடும்.
முரண்பட்ட ஆசைகள்
Contradictory Desires
இரண்டாம் நிலை ஆராய்ச்சி:எது உங்களுடைய ஆசைகளிலேயே, தன்னைத்தானே எதிர்த்துக்கொள்கிறது என்பதை ஆராயுங்கள். இந்த இரண்டு முரண்பட்ட ஆசைகளைத் தேடிப் பொறுக்குங்கள். எதையாவது ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். மற்றொன்று தானாகவே அழிந்து விடும். இதைச் செய்தீர்களானால், மீதமுள்ள 20% - 15% அழிந்து விடும்.
உங்களுடைய ஆசைகள்
Your Desires
தன்னைத்தானே
எதிர்த்துக்கொள்ளும்
எண்ண ஓட்டங்களை
சரியாக்குங்கள்
மூன்றாம் நிலை ஆராய்ச்சி: உங்களுடைய ஆசைகள் என்று நீங்கள் தேர்ந்தெடுத்தவற்றிலேயே முரண்பட்டிருக்கும் பாகத்தைக் கண்டுபிடியுங்கள்.
உங்களுடையது என்று நீங்கள் தேர்ந்தெடுத்தப் பாகத்தில், தன்னைத் தானே எதிர்த்துக் கொள்ளும் எண்ண ஓட்டங்களை, வார்த்தை ஓட்டங்களைச் சரி செய்யுங்கள்.
தன்னைத்தானே எதிர்த்துக் கொள்ளும் எண்ண ஓட்டங்களைச் சரியாக்குங்கள்.எந்தெந்த இடத்திலெல்லாம் இது போன்ற தீய மனப்பதிவுகள், எதிர்மறையான எண்ணப்பதிவுகள் உங்களுக்குள் உருவாகின்றன, உங்களுக்குள் மீண்டும் மீண்டும் உருவாக்கப்படுகின்றன என்று ஆராய்ந்து, அவற்றையும் தெளிவாக்குங்கள். இந்த மூன்றையும் செய்தாலே, உங்கள் வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டிருக்கும் ஆசைகள் முழுமையாக அற்று விடும்.
உங்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான ஆசைகள் மட்டும் இனிமையாகவும், ஆனந்தமாகவும் உங்களுக்குள் மலரத் துவங்கும்.
ஆசையின் ரகசியம்
- ஆசை? ஓசையில்லாமல் வாழும் ஒரு உயிர்
- என்ன அது ஒரு உயிரா? ஆம்! மனிதன் செத்தப் பின்னும் வாழ்வது ஆசை!
- செத்த பின்... என்றால்? ஒரு மரணத்திற்கும், அடுத்த ஜனனத்திற்கும் இடையில்... ஆசைகளின் தொகுப்பாய் மிதந்து கொண்டிருப்பீர்கள்.