KAILASA Library/ஜீவன் முக்தி/வலிSign in
ஜீவன் முக்தி

வலி

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

- வலி என்பது உடலுக்குத்தான், வேதனை என்பது மனத்துக்குத்தான். உங்களின் ஜீவன் இது இரண்டாலும் பாதிக்கப்படாதது.

வலியைக் கூட விழிப்பு உணர்வோடுப் பார்ப்பதும், வலி உடலுக்குத்தான் என்று உணர்ந்து வாழ்வதும், ஜீவன் முக்த வாழ்வாகும். உடலினுடைய எந்தெந்த பாகத்திற்குக் கவனம் செலுத்தாமல் இருக்கிறீர்களோ, உணர்வைச் செலுத்தாமல் இருக்கிறீர்களோ, அந்தந்தப் பாகத்தின் கவன ஈர்ப்புத் தீர்மானம்தான் வலி.

வெவ்வேறு காரணங்களுக்காக, நாம் உடலினுடைய சில பாகங்களுக்குக் கவனம் செலுத்தாமல் விட்டுவிடுகிறோம். சிலருக்கு உடலினுடைய சில இயக்கங்கள் பிடிப்பதில்லை. அவர்கள் அந்தக் குறிப்பிட்ட பகுதியையே வெறுக்கிறார்கள்.

உங்களுக்குப் பிடிக்காத ஒரு இடத்திற்குப் போகச் சொல்லி யாராவது கட்டாயப்படுத்தினால் என்ன ஆகிறது?

தலை வலிக்கிற மாதிரி இருக்கும், வயிற்று வலி வரும், ஜுரம் வருகிற மாதிரி இருக்கும். இல்லையா?

ஒரு செயலை எதிர்க்கும் பொழுது எப்படி எதிர்மறை எண்ணங்கள் உருவாகிறதோ, அதுபோல் உடலின் பாகத்தை மதிக்காதப் பொழுதும் வெறுக்கும் பொழுதும் எதிர்மறைச் சக்தி எழுகிறது.

உங்களுக்குள் ஓடுகிற எண்ண ஓட்டங்களுடைய எதிர்ப்புகள்தான் வலியாக மாறும்.

வலியும் பரவசமாகும் - விழிப்புணர்வால்

Awarness makes pain into bliss

அன்று பெங்களூரில் தியான சத்சங்கம். நாங்கள் சென்ற வாகனம் கோளாறாகிவிட்டால், ஆஸ்ரமத்திற்குத் திரும்பி வர, பக்தர் ஒருவர் தன்னுடைய காண்டஸா காரில் வரும்படி கேட்டுக் கொண்டார்.

எனவே, காண்டஸா காரில் ஏறி உட்கார்ந்தபடி அங்கேயிருந்த பக்தர் களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு இருந்தோம். காரின் பக்கவாட்டில் இருந்து கையை எடுப்பதற்குள் காண்டஸாவின் கதவு சாத்தப்பட்டது. கதவிடுக்கில் சிக்கிய கட்டைவிரல் 'சதக்' என நசுங்க, இரத்தம் வடிய ஆரம்பித்தது. வலியும், எரிச்சலும் அந்த இடத்தில் அதிகரித்துக் கொண்டே போனது. வலி ஏற்பட்ட இடத்தில் விழிப்புணர்வைக் குவித்ததால் கொஞ்ச நேரத்திலேயே அந்த எரிச்சலும், வலியும் மறைந்துபோனது! அடுத்தடுத்த வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டோம்," என்று ஆஸ்ரமத்து பிரம்மச்சாரிகளிடம் பேசிக் கொண்டிருக்கும்போது சொன்னோம். வலியைக் கூட பரவசமாக்கும் சக்தி விழிப்புணர்விற்கு உண்டு.

காண்டஸா காரில் சிக்கிய விரல்

காண்டஸா காரில் சிக்கிய விரல்

வலி தாண்டும் யுக்தி - 1

சக்தி பாய, வலி குறையும்

Energy Flow - reduces pain & illness

பிரம்மச்சாரி ஒருவர் இப்படிக் கேட்டார், "உங்களால் மட்டும் வலியின்போது விழிப்புணர்வைக் கொண்டு வர முடிகிறதே! அதன் ரகசியம் என்ன? சொல்லுங்கள்."

அப்போது அவருக்குப் பதிலளித்தோம், "ரகசியமெல்லாம் எதுவுமில்லை அப்பா... யார் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம்."

"அவ்வளவு எளிய டெக்னிக்கா அது?"

நானும் வலியை
விட்டுவிட்டேன்
வலியும் என்னை
விட்டுவிட்டது.

"வெறும் டெக்னிக் அல்ல அது. தியானம். வலியைக் குறைப்பதற்கு விழிப்புணர்வே சிறந்த மருந்தாகும்.

கட்டை விரல் நசுங்கியதும், நசுங்கிய இடத்தைக் கவனிக்க ஆரம்பித்து விட்டேன். என்ன ஆச்சரியம் ! உடலின் மொத்தச் ச க்தியும் வலி பொங்கும் இடம் நோக்கி திரண்டோடியது.

கலவரமிருக்கும் இடம் நோக்கி விரையும் அவசர போலீஸ் போல, உடலின் சக்தி அங்கே சென்றதும் வலி குறைய ஆரம்பித்தது. சக்தி பாயப் பாய வலி குறைந்தது. மீண்டும் வலி அதிகரித்தது. உடனே மீண்டும் சக்தி பாய்ந்தது. வலி குறைந்தது.

இப்படி மீண்டும், மீண்டும் சிலமுறைகள் நடந்தது. அப்புறம் வலி என்னைத் தொந்திரவு செய்யவே இல்லை.

நானும் வலியை விட்டுவிட்டேன்.

வலியும் என்னை விட்டுவிட்டது," என்று சொல்லி முடித்தோம்.

விழிப்புணர்வே குணமளிக்கும் சக்தி

Awarness itself is a Healing Energy

"எங்களின் உடலில் வலி அடி ஏற்படும்போது, அப்படி நிகழ்வதில்லை. வலி இருக்குமிடத்திற்குச் சக்தி பாய்வதில்லை. ஏன்?"

"வலி இருக்கும் இடத்திற்குச் சக்தி பாயும் என்பது இயற்கை. ஆனால், கவனித்தல் எனும் தியானநிலையில் இருக்கும்போது, உங்களின் விழிப்புணர்வு விழித்துக் கொள்கிறது. இந்த விழிப்பு உணர்வுதான், மொத்தச் சக்தியையும் திரட்டி எடுத்துவந்து, சில நிமிடங்களுக்குள் அந்த இடத்தைக் குணப்படுத்துகிறது.வலி வேதனையாக மாறும் நிகழ்வையே, இந்தக் குணமளிக்கும் சக்தி துண்டித்து விடுகிறது. எனவேதான், விழிப்புணர்வை மாபெரும் குணமளிக்கும் சக்தி என்றழைக்கி றாம்," எனச் சொல்லி முடித்தோம். இதேபோல் உங்களுடைய மனவலிகளையும் குணப்படுத்தலாம்.

உடல் வலிக்கு மருந்து
– சக்தி
மன வலிக்கு மருந்து
– புத்தி.

ஒருவேளை விழிப்புணர்வு நடக்காவிட்டால்...?

ஒவ்வொரு மனிதரும் தன்னுடைய உடலைக் குணப்படுத்திக் கொள்ளத் தேவையான ச க்தியையும், மனத்தைக் குணப்படுத்திக் கொள்ளத் தேவையான புத்தியையும், கையோடு எடுத்துக் கொண்டுதான் பூமிக்கு வருகிறார்கள்.

ஆனால், இங்கு வந்த பின்புதான், அவற்றைப் பயன்படுத்த மறந்துவிடுகிறார்கள். அத்தோடு நில்லாமல், தாம் அவற்றை எடுத்து வந்தோம் என்பதைக்கூட அடியோடு மறந்துவிடுகிறார்கள்.

சாலை என்றால், மேடு பள்ளங்கள் இருப்பது சகஜம்.

வாழ்க்கை என்றால், சில ஏமாற்றங்கள், சில கஷ்டங்கள் வரத்தான் செய்யும். தவிர்க்க முடியாதவை அவை. ஆனால் அவற்றை தாண்டிவிட முடியும்.

அதனால் ஏற்படும் தொடர் மனக்கஷ்டங்கள், மனச்சோர்வுகள், மன அழுத்தங்களைச் சரி செய்துவிட முடியும்.

விரல் நசுக்கப்பட்டபோது செய்த அதே 'கவனித்தல்' எனும் தியானச் செயலைச் செய்தால், சக்தி திரண்டு உடல் காயத்தைக் குணப்படுத்தியது போல, புத்தி திரண்டு மனக்காயத்தைக் குணப்படுத்தும். நீங்களும் முயன்று பாருங்கள். சாத்தியமே.

மனவலிக்கு மருந்து - புத்தி

Intelligence is a Medicine for Psychological Pains

மருந்தாகும் மந்திரம் எனும் தலைப்பில் பேசிக் கொண்டிருக்கும்போது, பக்தர் ஒருவர், "எல்லாவற்றிற்கும் உங்களுக்கு உள்ளேயே மருந்து இருக்கிறது எனச் சொன்னீர்களே, அது எது?"

"உடல் வலிக்கு மருந்து - சக்தி ;

மன வலிக்கு மருந்து - புத்தி," எனச் சொன்னோம்.

"கத்தியைத் தீட்டாதே, புத்தியைத் தீட்டு,"

என நம் முன்னோர்கள் சொன்னதின் ரகசியம் இப்போது புரிகிறதா!

"வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்," என முன்னோர்கள் சொன்னது, சக்தியின் மகிமையை விளக்கும் பழமொழி.

மருந்தை உள்ளுக்குள்ளேயே வைத்துக்கொண்டு, கொத்துக்கொத்தாய் மருந்து மாத்திரைகளைச் சாப்பிட்டாலும், எல்லா உடல், மனவலிகளையும் சரிசெய்துவிட முடியாது. வெளியிலிருந்து உள்ளே செல்லும் மருந்துகளின் முக்கியத்துவத்தைவிட, அதிகமான முக்கியத்துவத்தை உள்ளே இருக்கும் மருந்துக்குத் தர ஆரம்பித்தால், எல்லா வலிகளும் பறந்தோடிவிடும்.

வலியின் ரகசியம்

• உடல்வலி என்பது என்ன? அது எதனால் வருகிறது?

உடல்வலி என்பது, உடலின் அந்தப்பகுதி குணமடைந்து கொண்டிருப்பதற்கான ஆதாரம். அல்லது உடலின் தனிப்பட்ட ஞானமானது (Body intelligence) விழித்துக் கொண்டு உடலின் பிரச்சினைக்குரிய பகுதியைக் குணப்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறது. அதுவே மனத்தால் வலி என்று அறியப்படுகிறது. தியானம் செய்தால் உடலின் தனிப்பட்ட ஞானம் (Body intelligence) அதிகரிக்கும். தியான சக்தி உடலெங்கும் பரவும். நோய்கள் வெகு எளிதாக, வெகு சீக்கிரமாக இருக்கும் இடம் தெரியாமல் பறந்துபோகும்.

வலி நிவாரணி - தியானம்

Pain Relief Meditation

வலிகூட பரவசமாகும்
விழிப்புணர்வைச் சேர்த்துவிட்டால்...
பரவசம்கூட வலியாய்த் தெரியும்
விழிப்புணர்வைச் சேர்க்காவிட்டால்...

  • ஜென் தத்துவம்

இந்தத் தியானம் மிக அருமையான தியானம். இந்தத் தியானம் ஒரு வலி நிவாரணி. நேராய் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளுங்கள்.

கண்களை மூடி, உடலின் எந்தப் பகுதியில் வலி இருக்கிறது என கண்டுபிடியுங்கள்.

அந்தப் பகுதியில் உங்களின் மொத்தக் கவனத்தையும் செலுத்துங்கள். கவனத்தைச் செலுத்த, செலுத்த அந்த வலி அதிகரிப்பதையும், ஆழமாவதையும் உணர்வீர்கள். பயப்பட வேண்டாம். தொடர்ந்து செய்யுங்கள்.

வலியின் பரப்பளவு குறைந்து ஒருபுள்ளியாகச் சுருங்க ஆரம்பிக்கும்.

கவனித்தலை நிறுத்தாமல், தொடர்ந்து செய்யுங்கள். ஒரு கட்டத்தில் வலி மறைந்து பளிச்சென உடல் முழுவதும் பரவச உணர்வு பரவக் காண்பீர்கள்.

இந்தத் தியானத்தை வலிக்கு மட்டும் செய்யாமல், இன்னும் பல தருணங்களில் செய்யலாம்.

கவனத்தைச் செலுத்த
செலுத்த அந்த வலி
அதிகரிப்பதையும்
ஆழமாவதையும்
உணர்வீர்கள்.

முகத்தில் ‘ஈ’ உட்காரும்போது ஏற்படும் குறுகுறுப்பைத் தியான காலமாக மாற்றலாம். குறுகுறுப்பை முழுமையாய் அனுமதித்துக் கவனியுங்கள். உங்களால் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு, அந்தக் குறுகுறுப்பு ஏற்படும் புள்ளியிலிருந்துகூட பரவசம் பரவக் காண்பீர்கள்.

தோலில் ஏற்படும் சிறு அரிப்பிற்குக்கூட, இதே தியானத்தைச் செய்துபாருங்கள். அரிப்பு மறைந்து பரவசம் பெருகுவதோடு, அந்தத் தோல் பிரச்சினையே சரியாகிவிடும். இந்தத் தியானம் வலிநிவாரணி மட்டுமல்லாமல், பரவச தாரணி தியானமும்கூட. மேலும், இந்தத் தியானம் உள்ளிருக்கும் மருந்தை உடனடியாய் எடுத்துத் தரும் தியானம்.