KAILASA Library/ஜீவன் முக்தி/அகங்காரம்Sign in
ஜீவன் முக்தி

அகங்காரம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

- கடுகடுப்பு அகல அகங்காரம் அகலும் எளிமை சேர ஜீவன் முக்தி பிறக்கும்

ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.

தலைகீழாக நின்று தவம் புரிந்தாலும், மனிதனால் காக்கைப்போல் பறக்க முடியாது.

தவளைப்போல் தண்ணீரிலேயே கிடக்க முடியாது.

எது எப்படி நடக்க வேண்டுமோ அது அப்படியே நடக்கும்

மனிதனால் எல்லாமே நடத்திக் காட்ட முடியும் என்று நினைப்பது மடத்தனம். எது எப்படி நடக்க வேண்டுமோ, அது அப்படியே நடக்கும்.

இதைப்புரிந்து கொண்டுவிட்டீர்கள் என்றால் போதும், இறுக்கம் தளர்ந்து விடும்.

"நான் நினைத்தபடி நடக்கவில்லையே! நான் நினைத்தபடி, எதிர்பார்த்தபடி நல்ல மனிதர்கள் கிடைக்கவில்லையே!" என்ற எரிச்சல் பல நாட்களாக மனத்தில் படிந்தால் என்னாகும்?

பார்ப்பவரை எல்லாம் குறை சொல்லத் தூண்டும். அவர்களின் குறைகளை மட்டுமே பார்த்துப் பார்த்து மனம் இறுகிவிடும். அவர்களின் நிறைகளைப் பார்த்துப் பார்த்து மனம் இளகாமல், குறைகளை மட்டுமே பார்த்து அகங்காரம் வளர்ந்து விடும். அகஇறுக்கும் மன இறுக்கமாகிவிடும்.

மன இறுக்கத்திலிருந்து வெளிவர மிக எளிய வழி - நாம் நினைத்தபடி மற்றவர்களும், சூழ்நிலைகளும் மாற வேண்டும் என்ற மாய நினைவைத் தூக்கி எறிந்துவிட்டு, ஒவ்வொரு நிமிடமும் சந்தோஷமாக இருக்க முயற்சிப்பது ஒன்றுதான்.

வாழ்க்கையின் போக்கில் இயல்போடு கலந்து இயல்பாகச் செயல்படுங்கள். இறுக்கம் கரைய ஆரம்பித்துவிடும்.

அகங்காரம் அதிர்ச்சியடையட்டும்

Let the Ego be shocked

நாம் எப்போதும் பிரதிபலிக்கும் கண்ணாடிகளாகவே செயல்படுகிறோம். உலகமே ஒரு பிரதிபலிக்கும் கண்ணாடிதான் என்ற உண்மை தெரியாமல்.

நாம் மரியாதைக் கொடுத்தால்தான், மீண்டும் மரியாதை கிடைக்கும்.

மற்றவரைச் சீண்டினால் நிச்சயம் நாம் சீண்டப்படுவோம். அன்பு செலுத்தினால், தவறாமல் அன்பு கிடைக்கும்.

நம்முடைய எரிச்சலும் கோபமும் சேர்ந்தால், உலகமே தவறு செய்வதாகவும், ஒவ்வொருவரும் திட்டம் போட்டு எரிச்சல்படுத்துவதாகவும் தோன்ற வைக்கும். நன்கு புரிந்து கொள்ளுங்கள், எரிச்சல் மற்றவர்களை விட உங்களைத்தான் முதலில் தாக்குகிறது. உங்களைத்தான் அதிகம் தாக்குகிறது. இதை விளக்க, ஒரு சிறுகதை...

தெருவிலேயே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று, தவறி அரண்மனைக்குள் நுழைந்து விட்டது. அரசர் ஆயிரம் கண்ணாடிகளைக் கொண்ட ஒரு விருந்து மாளிகையைக் கட்டியிருந்தார். தனது தெருவிற்குள் எந்த ஒரு நாய் வந்தாலும், உர்ர்.... உர்ர்.... லொள்,.... லொள்... என்று எரிச்சலும், கோபமுமாய்ச் செயல்படும் குணம் கொண்ட அந்த நாய், விருந்து மாளிகைக்குள் நுழைந்த அடுத்த நிமிடம், அதன் கோபம் தலைக்கேறியது. நாய்க்கு ஒரு பக்கம் அதிர்ச்சியும் ஒருபக்கம் ஏகப்பட்ட கோபமும் எழுந்தது. ஏனென்றால், மாளிகையில் எங்கு பார்த்தாலும் நாய்கள். கிட்டத்தட்ட ஆயிரம் நாய்கள் அதைச்சுற்றி தெரிந்தது.

எப்போதும்போல் நாய் கோபமும் எரிச்சலுமாய் உர்ர்... உர்ர்.... என்றது. ஆயிரம் நாய்களும், வெவ்வேறு கோணத்தில் உர்ர்....உர்ர்.... என்றன.

நாய் கொஞ்சம் பயந்துவிட்டது.. இருந்தும், கோபம் தாளாமல் லொள்... லொள்.... என்று குரைக்க ஆரம்பித்தது. எல்லா நாய்களும் குரைக்க ஆரம்பித்தன. நாய் குரைப்பதை நிறுத்தினால், எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்தின. மறுபடியும் இந்த நாய் குரைத்தால், எல்லா நாய்களும் குரைத்தன. இரவு முழுக்க இப்படித் தொடர்ந்து குரைத்துக்கொண்டே இருந்த நாய், தனது ச க்தியெல்லாம் இழந்து கடைசியில் மயக்கம் போட்டு விழுந்து, இறந்து போனது.

நாய்க்குத்தான் மட்டும்தான் உண்மை, கண்ணாடிகளில் தெரியும் மற்ற எல்லா நாய்களும் தன்னுடைய பிம்பம்தான் என்ற விஷயம் தெரியாது. அது புரிந்து கொள்வதும் கொஞ்சம் கடினம்தான். நாய், தான் குரைப்பதை நிறுத்திய

> பூமி எப்போதுமே
> சொர்க்கமாகத்தான்
> இருக்கிறது. எல்லா
> மனிதர்களும் அடிப்படையில்
> அருமையானவர்களாகத்தான்
> இருக்கிறார்கள்.

விநாடி, எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்தியதைக் கொஞ்சம் கவனித்திருந்தால் உண்மை புரிந்திருக்கும்; மாயம் என்றால் என்ன என்பது தெரிந்திருக்கும்.

நாம் ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளா விட்டாலும் எல்லா மனிதர்களும் அடிப்படையில் அருமையானவர்களாகத்தான் இருக்கிறார்கள். நீங்கள் கோபப்படும் பொழுதுதான், உலகமே தவறு செய்வதுபோல் உணருகிறீர்கள். இன்னும் எப்போதுமே எரிச்சலும் சலிப்புமாக இருந்தால், உலகமே சுவாரஸ்யமற்றதுபோல் உணருகிறீர்கள்.

அதேசமயம், நீங்கள் வெற்றி அடையும்போது, சந்தோஷமாக, திருப்தியாக இருக்கும்போது ஆஹா... என்ன அருமையான உலகம்! என்ன அருமையான உறவுகள்! மனிதர்கள்! என்று ஆனந்தப்படுகிறீர்கள்.

உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். மனம் என்பது, நாயைப் போன்றது. எப்போதும் குரைத்துக் கொண்டேதான் இருக்கும். கண்ணை மூடினாலும், கண்ணைத் திறந்தாலும், உங்கள் கோபம், வெறுப்பு, சலிப்பு, பொறாமை... போன்ற குணங்கள் அப்படியேதான் இருக்கும். எந்த மாற்றமும் நடக்காது. இவையெல்லாம் உங்களுடைய பிரச்சினைகளே!

ஒரு ஆழமான, சூட்சுமமான உண்மையை இப்பொழுது உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் நீங்கள் கண்டுபிடிக்கும் தவறுகள், உங்கள் தவறுகளே. (அந்த நாய் பல கண்ணாடிகளிலும் பல விதமாகப் பார்த்தது அதன் வடிவத்தைத்தான்).

என்ன மனிதர்கள்... கொஞ்சம் கூடப் புரிந்து கொள்ளும் தன்மையே இல்லா மல் இருக்கிறார்கள்... மடையர்கள்... அறிவு கெட்டவர்கள் என்று நீங்கள் பாடும் வசைகள் எல்லாம், உங்கள் மனத்தின் குரல்கள்.

உங்களின் உண்மையான குரல் அல்ல.

மற்றவர்களை ஆஹா எவ்வளவு நல்லவர்கள்! எவ்வளவு பாசமாக இருக்கிறார்கள்! இப்படி அல்லவா இருக்க வேண்டும்! என்று நீங்கள் நினைப்பதும், உங்கள் மனத்தின்செயலே.

மக்களையும், உலகத்தையும் அதிகப் படியாகத் தவறாக நினைப்பது ஒரு மாயத் தோற்றம். அவ்வளவுதான்.

உண்மையில் எல்லோரும் இயல்பானவர்கள், அருமையானவர்கள். நீங்கள் உலகத்தை அணுகும் விதத்தைப் பொறுத்து, உலகம் மாறுபடும்.

உலகம் அருமையானது.. அதை முதலில் உணர ஆரம்பியுங்கள். உண்மை புரியும்!

side note

அகங்காரம் அழியத்துவங்கும்

Ego will start disappearing

சீடன் : நீங்கள் கடவுளா?
ஞானி : நீங்கள் மனிதரா!
அழகான உரையாடல் ஒன்றைப் படித்தோம்...

ஒருவர் தம் நண்பரிடம், "ஒரு வேலை செய்வதற்கு எத்தனை விதமான முறைகள் உள்ளன?" எனக் கேட்டார். அதற்கு அந்த நண்பர், "மொத்தம் மூன்று வழிகள் இருக்கிறது," என்றார்.

உடனே அவர், "அந்த மூன்று வழிகளைச் சொல்லுங்களேன்?" என வினவினார்.

அதற்கு நண்பர் சொன்னார். "ஒன்று நீங்களே அந்த வேலையை செய்துவிடுவது. அப்படிச் செய்தால், அந்த வேலை நடந்துவிடும்.

அப்படியில்லையென்றாலும் யாராவது ஒரு ஆள் வைத்துச் செய்வது. அப்படியென்றாலும், அந்த வேலை நடந்துவிடும். மூன்றாவது, "இதைச் செய்யாதே!" என்று உங்கள் பையனிடம் சொல்லுங்கள். தானாகவே அந்த வேலை நடந்து விடும்!" என்று பதில் சொன்னார்.

நாம் சொல்வதற்கு நேர்மாறாகச் செய்வதில், பிள்ளைகளுக்கு ஒரு பெரிய சுகம் இருக்கத்தான் செய்கிறது.

எதனால் இப்படி ஒரு வினோதமான சுகத்தை சிறுவயதிலிருந்தே மனிதர்கள் அனுபவிக்கத் துவங்குகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டாலே, உங்களின் வாழ்க்கையில் உள்ள பல தடைகள் நீ ங்குவதற்கான வழி பிறந்து விடும்.

குழந்தை எதிர்க்காது.
சிறுவன் எதிர்ப்பான்.
வாலிபர் அத்து மீறி நடப்பார்.

> தர்க்கம்
> தர்க்கமாயிருக்கும் வரை
> பிரச்சினைகள் வராது.
> அது குதர்க்கமாகும்
> போதுதான் பிரச்சினையே
> ஆரம்பிக்கிறது.

காரணம் குழந்தையின் மனம் எளியது. குழந்தை வளர வளர, அதன் தர்க்கம் Intellect வளர ஆரம்பிக்கிறது. எதையும் பிரித்துப் பார்ப்பது, எதையும், அலசிப்பார்ப்பது என்று அவர்களுடைய தர்க்கம் வளர ஆரம்பிக்கிறது. தர்க்கம், தர்க்கமாயிருக்கும் வரை பிரச்சினைகள் வராது. அது குதர்க்கமாகும் போதுதான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது. உதாரணத்திற்கு, அதிருப்தியோடு வாழ ஆரம்பித்தால், அதற்காகவே உங்களைச் சுற்றி ஒரு நூறு அல்ல ஓராயிரம் காரணங்கள் இருப்பதைக் கண்டுபிடிப்பீர்கள்.

பிள்ளை நம்மை எதிர்த்துப் பேச ஆரம்பித்ததுமே.

‘‘பிள்ளை வளர்ந்துட்டான்பா...

என்னம்மா கேள்வி கேட்கிறான் தெரியுமா?

அட! எவ்வளவு தைரியமா பேச ஆரம்பிச்சிட்டான்!’’ என நாம் பெருமைபடுவதுண்டு. இது தர்க்க வளர்ச்சி. இது இயற்கை. வரவேற்கத்தக்கது. ஆனால், அது குதர்க்கமாகும் போதுதான், ‘‘பிள்ளையா இது... குட்டிச்சாத்தான், இதைப் பெத்ததுக்கு ஒரு உரலையோ, உலக்கையையோ பெத்திருக்கலாம்!’’ என நோக ஆரம்பிக்கிறார்கள் மனிதர்கள்.

‘‘முடியாது!’’, ‘‘அப்படித்தான் செய்வேன்’’, ‘‘நான் ஏன் இதையெல்லாம் செய்யவேண்டும்?’’ என்பன போன்ற எண்ணங்களும், பேச்சுக்களும்தான் குதர்க் கத்தின் விதைகள்.

மனோதத்துவத்தை ஆராய்ந்து பார்க்கும்போது ‘‘முடியாது, முடியாது,’’ என ஒரு மனிதன் சொல்லும் ஒவ்வொரு முறையும். அவனுக்குள் ஒருவித சுவையை அது உருவாக்குகிறது என்கிறார்கள்.

அந்தச் சுவையை அனுபவிப்பதும் அதனால் வளர்வதும் நீங்களல்ல, உங்களுக்குள் இருக்கும் அகங்காரம்.

இது தேளைத் தோளில் விளையாட விடுவதற்குச் சமம்.

எதிர்ப்பது (செயல்), ஒருவரை வீரனாக வெளியுலகில் காட்டுகிறது. எதிர்ப்பவர் (செயல்புரிபவர்) தன்னை ஒரு வீரனாக உள்ளுலகில் உணர்கிறார். எனவே, அது ஒரு போதையைத் தர ஆரம்பித்து விடுகிறது. இங்குதான் குதர்க்கத் தன்மை உருவாகிறது.

எப்பொழுதெல்லாம் நம்மால் பலபேருக்கு, ‘‘இல்லை!, சாரி!’’ என சொல்ல முடிகிறதோ, அப்போதெல்லாம் நாம் ஒரு பெரிய மனிதனாக மாறிவிட்டதாக உணர்வோம்.

உதாரணத்திற்கு, உங்களின் இளம் பருவத்தையே எடுத்துக் கொள்வோமே. ‘‘நான் ஆண்மகனாகவும், ஒரு சுதந்திரமான மனிதனாகவும் மாறிவிட்டேன்,’’ என்பதை உலகிற்குக் காட்டுவதற்காகவே குறிப்பாக தந்தையிடமும், வீட்டிலிருப்பவர்களிடமும் காண்பிப்பதற்காகவே காரணமில்லாமலே பலவற்றிற்கும் சர் சர் என மறுப்பு தெரிவித்திருப்போம்.

இங்குதான் ஒரு உண்மையை ஆழ்ந்து புரிந்துகொள்ள வேண்டும். மறுக்கும் தர்க்கம் சில இடங்களில் உபயோகப்படலாம். அப்போது தர்க்க ரீதியாக நீங்கள் ஆழ்ந்து முடிவெடுத்துச் சொல்வது வேறு.

ஆனால், தர்க்க ரீதியாக பிடிபடாமலேயே, மற்றவர்களின் உணர்வு தெரியாமலேயே எடுத்த எடுப்பிலேயே மறுப்பு தெரிவிப்பதுதான் தவறு.

குதர்க்கம் முற்ற ஆரம்பிக்கும் போதுதான், கேள்வியில் கூட குதர்க்கம் கொப்பளிக்க

> தர்க்க ரீதியாக பிடிபடாமலேயே
> மற்றவர்களின் உணர்வு
> தெரியாமலேயே எடுத்த
> எடுப்பிலேயே மறுப்பு
> தெரிவிப்பதுதான் தவறு.

ஆரம்பிக்கிறது. இப்படிப்பட்டவர்களின் உரையாடல்கூட குதர்க்கமாகி விடுகிறது. குதர்க்கங்கள்தான், மனிதர்களையும் வாழ்க்கையையும் குதறிவைத்து விடுகின்றன.

குதர்க்கவாதிகளால் யதார்த்தமான வாழ்க்கையை வாழவே முடியாது. மனைவி, தன்னுடைய உறவினர்களின் வீட்டிற்குச் செல்ல அனுமதி கேட்கும்போது கண்மூடித்தனமாக மறுப்பதிலிருந்து, ஏதாவது புதிய கருத்தையோ, தியானத்தையோ, ஆனந்தமயமான வாழ்க்கை முறையையோ பற்றி நாம் பேச ஆரம்பிக்கும்போது, அதை எடுத்த எடுப்பிலேயே குதர்க்கமாய்க் கிண்டலடித்துப் பேசுவதுவரை, குதர்க்கமாய் கேள்வி கேட்டு வைப்பதுவரை நிகழ்பவையெல்லாமே, குதர்க்கம் முற்றியதால் வந்த புற்றுநோய்கள்தான்.

உங்களைவிட உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்குத் தெளிவாய்த் தெரியும், உங்களின் குதர்க்கங்களைக் கண்டுபிடிப்பதும், அழிப்பதும் லேசுபட்ட காரியமல்ல.

தியானத்தால் மட்டுமே இவற்றை எளிதாய் அழிக்க முடியும்.

குதர்க்கங்களைத் தாண்டி விட்டால், வாழ்வே வசந்தமாகிவிடும்.

விளையாட்டின் ரகசியம்

விளையாட்டுகள் விளையாட்டுகளாகவே இருக்க வேண்டும். அவை என்றும் போட்டிகளாக மாறக்கூடாது.

விளையாட்டு போட்டியாக மாறுவது, அருமையான பால் திரிந்து போவதற்குச் சமம்.

வெற்றி, தோல்வி என்னும் வெறி உணர்வுகள் இல்லாமல் விளையாடத் தெரிந்தால், அது வெறும் விளையாட்டாக இருக்காது. மகிழ்ச்சி தரும் தியானமாக மாறிவிடும்.

வெறியுணர்வு இல்லாமல் விளையாடி பாருங்கள். விளையாட்டின் மகத்துவம் புரிய வரும்.

மன இறுக்கக் கலைப்புத் தியானம்

Meditation to dissolve the seriousness

உங்களையே ஒரு சர்வே எடுத்துப்பாருங்கள். ஒரு நாளில் எத்தனை முறை மற்றவர்களின் சொல்லை, “மாட்டேன்,” என்று மறுக்கிறீர்கள் என்று பாருங்கள்.

> இந்த நிமிடத்திலிருந்து
> 'No' சொல்லும்
> குணத்திற்கும் 'No'
> சொல்லிவிடுங்கள்.

Yes... Yes... என சொல்வதைவிட No... No... சொல்வது அதிகமாய் இருக்கும் வரை, நம்மையும் அறியாமல் கொப்பளிக்கும் குதர்க்கங்கள் ஓயாது.

ஒவ்வொருமுறை மறுக்கும்போதும், உங்களுக்குள் இருக்கும் ஜீவசக்தி குறைந்து கொண்டேயிருக்கும்.

அதைத் தாண்டி, முடிந்த அளவிற்கு எல்லாவற்றிற்கும் “ஆம்,” சொல்லக் கற்றுக் கொண்டு, முடிந்த அளவிற்கு உங்களிடம் வரும் எல்லாக் கோரிக்கைகளுக்கும் ஒத்துழைப்புக் கொடுத்துப் பாருங்கள்.

நீங்களே ஆச்சரியப்படுமளவிற்கு, ஜீவசக்தி உங்களுக்குள் பொங்க ஆரம்பிக்கும்.

இந்த நிமிடத்திலிருந்து Yes சொல்லும் குணத்திற்கும், Yes சொல்லிவிடுங்கள். தவிர்க்கவே முடியாத காரணங்களைத் தாண்டி, எதையும் மறுக்காமல், நீங்களே முன்வந்து மற்றவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆரம்பியுங்கள்.

அது நிகழ, இந்த அதிசயம் நிகழக் காண்பீர்கள்.

அது... நீங்கள் தவிர்த்தாலும்,
உங்களுக்குள்ளிருந்து ஆனந்தமயமான
உணர்வான ஜீவசக்தியானது பொங்கிக்
கொண்டேயிருக்கும். ஜீவசக்தி பொங்க
ஆரம்பித்தாலே, மனஇறுக்கம் கலைந்து
விடும். ஜீவன் முக்த வாழ்வு என்பதே ஜீவ
சக்தி பொங்கப் பொங்க வாழ்வதுதான்!

> நீங்கள் தவிர்த்தாலும்
> உங்களுக்குள்ளிருந்து
> ஆனந்தமயமான உணர்வான
> ஜீவசக்தியானது. பொங்கிக்
> கொண்டேயிருக்கும். ஜீவ சக்தி
> பொங்க ஆரம்பித்தாலே மன
> இறுக்கம் கலைந்துவிடும். ஜீவன்
> முக்த வாழ்வு என்பதே ஜீவ சக்தி
> பொங்கப் பொங்க வாழ்வதுதான்!