KAILASA Library/ஜீவன் முக்தி/கற்பனை, நிஜம்Sign in
ஜீவன் முக்தி

கற்பனை, நிஜம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

  • நிஜத்தை எதிர்கொண்டு வாழ்வது ஜீவன் முக்தி

சென்னையில் தியான வகுப்பு எடுத்துக் கொண்டு இருக்கும் பொழுது, என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார்கள்.

"முன்பு இந்தியாவில் நன்றாக இருந்த ஏகபத்தினி விரத தத்துவம், ஏன் இன்று தோல்வி அடைந்து விட்டது?

ஏகபத்தினி
விரதத்துவம்.
ஏன் இன்று
தோல்வி
அடைந்து
விட்டது?

ராமர், சீதை வாழ்ந்த காலத்தில் நடைமுறையில் இருந்த விஷயம், இப்போது ஒத்துவராமல் போனதன் காரணம் என்ன?" என்று கேட்டார்கள்.

இந்த ஆழமான கேள்விக்கான பதிலை பொறுமையோடு யோசித்துப் பார்த்தால், புரிந்து கொள்வீர்கள். நாம் இப்போது பார்க்கிற அளவுக்கு விளம்பரங்களையோ, திரைப்படங்களையோ ராமரும் சீதையும் பார்க்கவில்லை என்கிற விஷயம் உங்களுடைய ஞாபகத்திற்கு வரும். உண்மையும் அதுதான்.

கற்பனையில் வாழ்கிற மனம், நிஜத்தை மறந்துவிட்டதே மொத்தப் பிரச்சினைகளுக்கும் காரணம்.

கற்பனையின் மன அழுத்தம் அந்தக் காலத்தில் சீதைக்கு இல்லை.

சீதை பார்த்த ஒரே கதாநாயகன் ஜனகர்தான். சீதை வேறு ஒருவரை ஹீரோவாக பார்க்க வாய்ப்பே கிடையாது. சீதைக்கு வேறு யாரைப் பற்றியும் தெரியவும் தெரியாது.

சீதையின் தந்தை ஒரு நாட்டுக்கே அரசர், மிகப்பெரிய மகாராஜா. வில்வித்தை போன்ற பல திறமைகளை உடையவர். அதேபோன்று ராமருக்கும் வில்வித்தை உள்பட நிறைய திறமைகள் இருந்தது.

ஜனகருக்கும், ராமருக்கும் இடையில் எந்த
இடைவெளியும் இல்லை. ஜனகரைப் போலவே
ராமருமிருந்ததால், சீதைக்கு ராமரை உடனே
பிடித்து விட்டது.

சீதையின் மனத்தில் உருவான வாழ்க்கைத்
துணை பற்றிய எதிர்பார்ப்பு, நிஜத்துணையான
ராமரோடு ஒன்றிவிட்டது. கற்பனையின்

நாம் இப்போது
பார்க்கிற அளவுக்கு
விளம்பரங்களையோ
திரைப்படங்களையோ
ராமனும் சீதையும்
பார்க்கிவில்லை என்கிற
விஷயம் ஞாபகத்துக்கு வரும்.
உண்மையும் அதுதான்.

எதிர்பார்ப்புக்கும், நிஜத்திற்கும் வேறுபாடுகள் மிகக் குறைவாக இருந்தது. எனவே, கணவரே ஹீரோவாகத் தெரிந்தார்.

ராமர் பார்த்த கதாநாயகிகள் கைகேயி, கோசலைதான். இரண்டு பேரும் அரசகுமாரிகள். அழகானவர்கள். அன்பானவர்கள். சீதையும் அவர்களைப் போலவே, அழகாகவும் அன்பாகவும் இருந்ததால் ராமருக்கும் உடனே பிடித்து விட்டது.

நிகழ்காலத்தை
அழிப்பதுதான்
துக்கத்திற்கான
நுழைவாயில்.

ராமருக்குத் தன்னுடைய எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் முழுமையாக பொருந்தக் கூடிய சீதையைத் தாண்டிய எதிர்பார்ப்புகள் இருக்காது. மனைவியே கதாநாயகியாகத் தெரிந்தாள். அந்தக் காலத்தில் கற்பனைக்கும், நிஜத்திற்கும் வாழ்க்கையில் இடைவெளியோ, வேறுபாடோ இல்லை. ஆனால், இப்போதோ நம் கற்பனைக்கும் உண்மைக்கும் இடையே ஏற்பட்டுவிட்ட இடைவெளி எதைக் கொண்டும் நிரப்ப முடியாத அளவுக்கு அதிகமாகிவிட்டது. அதனால்தான், இன்று நம் சமூகத்தில் ஏகபத்தினி விரதத்தைச் சரியாகக் கடைப்பிடிக்க முடிவதில்லை" என்று அந்தக் கேள்விக்குப் பதில் சொன்னோம்.

கற்பனையைப்ப் கடக்கும் யுக்தி - 1

கற்பனைகளைச் சேர்ப்பது ஆரோக்கியமற்ற செயல்

Collecting fantasies is inhealthy act

தாகத்தை உப்புத் தண்ணீரால் போக்க முடியாது.

தாகத்திற்கு உப்புத் தண்ணீர் குடிப்பது போன்றது, கற்பனைகளைப் போக்க மீடியாக்களைத் தேர்வு செய்வது.

உங்கள்
பலவீனத்தைத்
தெரிந்து கொண்டு
உங்களை வீழ்த்தி
விடுகிறார்கள்.

விளம்பரங்கள், விளம்பர நிறுவனங்கள், பத்திரிக்கைகள் மற்றும் ஏனைய மீடியாக்கள் அனைத்துமே உங்களின் மூலாதாரச் சக்கரத்தைத் தூண்டும் விஷயத்திலேயே செய்திகளைக் காண்பிக்கிறார்கள்.

உங்கள் பலவீனத்தைத் தெரிந்து கொண்டு உங்களை வீழ்த்தி விடுகிறார்கள். உங்களுடைய பலமும், பலவீனமான இடமும் எது என்பது அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.

அந்தக் கலையைத் சரியாகத் தெரிந்து கொண்டு இருப்பதால் பலவீனத்தை மையப்படுத்தியே காட்சிகளை அமைக்கிறார்கள். மூலாதாரத்தில் கற்பனைகளையும், ஆசைகளையும் புகுத்தி உங்களைக் கற்பனைகளிலும், கனவுகளிலும் பறக்க வைக்கத்

தேவையான எல்லாச் செயல்களையும் செய்து விடுகிறார்கள். எந்த விளம்பர பலகையை எடுத்துக் கொண்டாலும், அதில் பெண்படம் இல்லாமல் இருக்காது. விளம்பரங்களிலும் ஆண்களை அதிகம் பார்க்க முடியாது. காரணம் என்ன?

விளம்பரம் மூலம், தாங்கள் சொல்லவரும் செய்தியை, மனிதனுக்குள் ஆழமாக விதைத்தால்தான், மனிதர்களைத் தங்கள் நோக்கத்திற்கு இழுக்க முடியும் என்று அவர்களுக்குத் தெரியும்.

அதனால்தான், நவீன மனிதனின் பலவீனமான மூலாதாரத்தின் நோக்கத்திற்கேற்றார் போலவே விளம்பரங்கள் தயாராகின்றன. கார் ஓட்டுகிற பெண்கள் இந்தியாவில் பத்துச் சதவிகிதம்தான். ஆனால், ஆண்களை விட பெண்களைத்தான் அதிகம் கார் ஓட்டுகிறார் போன்று விளம்பரங்களில் காண்பிப்பார்கள்.

> ஆசைகள்
> தீவிரமாகிற போது,
> மனநிறைவுக்குப்
> பதில் குழப்பம்தான்
> ஏற்படுகிறது

எல்லா நாட்டு விளம்பரங்களிலும் இதே நிலைதான். அதனால்தான் அந்தந்த இடத்திற்கு ஏற்றவாறு கற்பனைகளையும், கனவுகளையும் நமக்கு விற்கிறார்கள். நாமும் அது தெரியாமல் சுலபமாக அடிமையாகிவிடுகின்றோம். மனத்தைப் பலவீனப்படுத்தி தங்கள் பொருளை நம் தலையில் ஏற்றிவிடுகிறார்கள். கற்பனையின் பலவீனத்தில் பளுதாங்காமல் கீழே விழுந்து விடுகிறோம் நாம்! அந்த நொடிகளில் விளம்பரத்தின் செய்தி மிக ஆழமாக நுழைந்துவிடும்.

மக்களின் பலவீனம் தெரிந்தே சுரண்டுகிறார்கள். நாமும் இந்தக் கனவுகளைக் காசு கொடுத்து வாங்கி, சாப்பிட்டு, பசியைத் தீர்த்துக் கொள்ள முயற்சிக்கிறோம்.

நிஜத்திற்குப் பதிலாகக் கனவுகளை அனுபவிப்பது, தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக உப்பைத் தின்பதற்குச் சமம். உப்பைத் தின்றால் தாகம் தீருமா? தாகம் குறைவதற்குப் பதிலாக அதிகமாகும்!

அதுபோல், வாழ்க்கையில் எந்தத் திருப்தியும் ஏற்படுத்தாத, அசாத்தியமான கற்பனைகளை வாங்கி சாப்பிடுவதால், மனக்குழப்பம்தான் அதிகமாகும், குறையாது.

மீடியாக்கள் உருவாக்கிக் கொடுக்கும் கனவைப் பணம் கொடுத்துப் பார்த்து, வீட்டில் வந்து விழுகிறோம். இப்பொழுதெல்லாம் வீட்டின் வரவேற்பறைக்கே வந்துவிடுகிறது. அதெல்லாம் பார்த்தால் மனம் நிம்மதி ஆகும் என்றுதான் நினைக்கிறோம்! ஆனால், மனநிறைவுக்குப் பதில் குழப்பம்தான் ஏற்படுகிறது. ஆசைகள் இன்னமும் தீவிரமாகிறது.

குறிப்பாக இன்றைய இளைஞர்கள், திரையில் பார்த்த நடிகையின் கண், காது, மூக்கு எல்லாவற்றையும் உள்வாங்கி, மனத்தில் வெட்டி ஒட்டி, தனது வாழ்க்கைத் துணையை உருவாக்குகிறார்கள். வாழ்க்கையில் நிஜமாகச் சந்திக்கப் போகும் மனைவியின் உருவத்தைக் கனவில் தயார் செய்கிறார்கள். தாமாகவே ஒரு உருவத்தை அமைக்கிறார்கள்.

அதே உருவத்தை மனத்தில் கொண்டு, அதையே தேடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்தத் தேடுதலால் மனிதனின் எதிர்பார்ப்புகள் பல மடங்கு தூண்டிவிடப்படுகிறது. அப்பொழுது தன் கற்பனைக்கு ஒத்துவராத நிஜ மனைவியோடு வாழத் தெரியாமல் தடுமாறுகிறார்கள். நிஜத்திற்கும் நிழலுக்கும் இடைவெளியைச் சந்திக்கும் தெளிவின்றி மன அழுத்ததத்தில் விழுகிறார்கள். வாழ்க்கையே ஆரோக்கியம் அற்றதாக மாறுவது மட்டுமல்லாமல், அர்த்தமற்றதாகிறது. அதற்கான நடைமுறைத் தீர்வு இதுதான். கிடைத்தவற்றிற்கு நன்றி சொல்லி சந்தோஷமாக வாழ முடிவெடுத்து விடுங்கள். நிஜத்தை எதிர்கொள்வதும், தேவையற்றக் கற்பனைகளைக் கீழே போடுவதும், தன்னால் நடக்கும்.

> கிடைத்தவற்றிற்கு நன்றி
> சொல்லி சந்தோஷமாக வாழ
> முடிவெடுத்து விடுங்கள்.
> நிஜத்தை எதிர்கொள்வதும்,
> தேவையற்றக் கற்பனைகளைக்
> கீழே போடுவதும், தன்னால்
> நடக்கும்.

கற்பனையைப் கடக்கும் யுக்தி-2

பகல் கனவும், கற்பனைகளும்

வாழ்வைக் கெடுக்கும் விஷங்கள்

Day dream and fantasies are life poisons

இரு நபர்கள் சேர்ந்தால் போதும், இருவரும் ஒருவரை ஒருவர் செதுக்க துவங்கி விடுகிறார்கள். ஒரு சில இடங்களில் அது விபரீதமாகவும், வம்பாகவும் சென்று முடியும்.

ஒருவரை ஒருவர் செதுக்கிக் கொள்வதே இங்கே வாழ்க்கை என்றாகி விட்டது. தந்தை, மகனின் விருப்பத்தை அறியாமல், தாம் கற்பனை செய்து வைத்திருப்பது போலவே தம் மகன் வர வேண்டும் என்று அவனைச் செதுக்குகிறார்.

நான் ஒரு காவல்துறை அதிகாரி. என் மகனும் காவல்துறை அதிகாரி யாகத்தான் வரவேண்டும் என்று தந்தை நினைக்கிறார். மகனோ, தந்தையின் விருப்பத்துக்கு எதிராக நடந்து கொள்கிறார். தந்தையின் விருப்பத்திற்கு எதிராக நடந்து கொள்வேன் என்ற பிடிவாத எண்ணத்துடன் இவ்வாறு செய்வதில்லை. ஆனாலும், தன் விருப்பத்தை, தந்தை நிறைவேற்ற வேண்டும் என்று தனக்கேற்ற வாறு தந்தையை செதுக்காமல் மகனும் விடுவதில்லை.

இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே மோதல் முற்றுகிறது. "என் மகன் நான் சொல்வதைக் கேட்பதில்லை,'' என்று எல்லா இடங்களிலும் புலம்பத் தொடங்குகிறார்.

இந்த உறவில் எழும் பிரச்சினைக்கான ஆணிவேரை ஆராய்ந்து பார்த்தோமானால், தந்தையிடம் பிரச்சினை இருக்கிறது. பிரச்சி னையை உணராமல் புலம்பி என்ன பிரயோஜனம்?

அவரவருக்கு விருப்பமான துறையில் நுழைந்தால்தான் சாதனை சாத்தியமாகும்.

ஒருவரை ஒருவர்
செதுக்கிக் கொள்வதே
இங்கே வாழ்க்கை
என்றாகி விட்டது.

தந்தைக்குக் காவல்துறை அதிகாரியாக இருப்பது பிடித்திருக்கும். அதனால் அவரால் அந்தத் துறையில், என்ன ஏற்றத்தாழ்வு வந்தாலும் அதில் சாதிக்க முடிகிறது. இதில் விருப்பம் என்பது விதை போன்றது. எந்த நிலத்தில், எந்த விதையை விதைக்க வேண்டும் என்று கருணையாகப் பார்த்துப் பார்த்துச் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, சதுப்பு நிலத்தில் பருத்தி வராது. கரிசல் காட்டில் ச ணல் விளையாது. பிள்ளைகள் அவர்கள் விரும்பாத துறையில் சாதிப்பதற்கான சாத்தியக் கூறுகள், மிக மிகக் குறைவு.

இதைத் தாய், தந்தையர் உணர்ந்து கொள்வதில்லை. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு நிமிடமும் மாறிக்கொண்டிருக்கிற உலகத்தில், தந்தையார் பார்த்த பழைய உலகத்தை வைத்தே மகன் பார்க்கும் புதிய உலகத்தையும் பார்க்கிறார்கள்.

மகனே இல்லாத உலகத்தைக் கற்பனையிலேயே பார்க்கத் துவங்கிவிட்டார் ஒரு நடுத்தர வயது தந்தை. அவர் என்னைப் பார்க்க வந்திருந்தார். அவர் தன் மகனுக்குத் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும், ஆனால் அதில் ஏகப்பட்ட சி க்கல்கள் இருப்பதாகவும் சொன்னார். மகனுக்கு ஏற்ற பெண்ணைத் தேடுகிறேன்.ஆனால் அவனோ, "நான் எதிர்பார்க்கிற பெண்ணின் கண், அந்த நடிகையின் கண்மாதிரி இருக்க வேண்டும். மூக்கு இந்த நடிகையின் மூக்கு மாதிரி இருக்க வேண்டும்," என்று அடுக்கிக் கொண்டே போனான்.

அவன் சொன்னது மாதிரி அலைந்து திரிந்து, ஒரு பெண்ணையும் தேடிக் கொடுத்தேன். தரகர் அந்தப் பெண்ணைப் பார்த்துச் சம்மதம் கேட்டபோது, அந்தப் பெண் "முடியாது," என்று சொல்லிவிட்டாள். "எனக்குக் கணவனாக வருகிறவனின் மூக்கு, அந்த நடிகரின் மூக்கு மாதிரி இருக்க வேண்டும். மீசை அந்த நடிகரின் மீசை மாதிரி இருக்க வேண்டும்," என்று அவளும் பட்டியல் போட்டபோது, இவன் நொந்து போய்விட்டான் என்றார் அவர்.

பலரும் தாங்கள் கற்பனை செய்து வைத்திருக்கிறபடி ஆட்களைத் தேடுகிறார்கள்.

ஆண்களைப் பொறுத்தவரை கற்பனையில்
எதிர்பார்க்கும் மனைவியின் அழகுக்கும்
அன்பிற்கும், நிஜத்தில் இருக்கப் போகும்
மனைவியின் அழகுக்கும் அன்பிற்கும்
பெரும்பாலும் சம்பந்தமே இருப்பது இல்லை.

இன்றிலிருந்து நிஜத்தில்
வாழ்ந்து மற்றவர்களுக்கு
மேலும். மேலும் சந்தோஷத்தை
அளிப்போம். சந்தோஷத்தை
அழிக்கும் கற்பனைகளை
அழிப்போம்... என்ற புரிந்து
கொள்ளுதலுக்குள்ளும்
சங்கல்பத்திற்குள்ளும் நுழைவது
நிஜ வாழ்வை வாழ வழிசெய்யும்.

அதேபோல், பெண்ணைப் பொறுத்தவரை, தனது கற்பனையில் இருக்கும் எதிர்கால கணவனின் பண்பிற்கும் பாசத்திற்கும், நிஜத்தில் வந்திருக்கும் கணவனின் பண்பிற்கும், பாசத்திற்கும் பெரும்பாலும் சம்பந்தமே இருப்பது இல்லை.

காரணம், இருவருக்கும் இருக்கும் இயல்புக்கு மீறிய அதீத கற்பனைதான். தன்னைப்போன்ற எல்லா விதமான உடல், மனத்தடுமாற்றங்கள் நிறைந்த ஒரு பெண்தான், தனக்கு வரப் போகும் மனைவியாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்ற நிஜம், அந்தக் கற்பனை என்ற கரிப்புகையால் மறைக்கப்படுகிறது. வாழ்வில் கரிப்பூசப்பட்டது போன்று துவண்டு விடுகிறார்கள்.

கற்பனையில் மகாராணியை எதிர்பார்ப்பவர்கள், இயல்பாகவே தங்களை மகாராஜாக்களாக கற்பனை செய்து கொள்வதும், அவர்களின் மனத்தின் அடி ஆழத்தில் கர்வத்தை உருவாக்கிக்கொள்வதும் இயல்பு. அந்தக் கர்வத்திற்கு அடிவிழும் பொழுது, தங்கள் வாழ்க்கையிலேயே இடி விழுந்தது போன்று துடித்துப் போகிறார்கள். அந்தக் கோபத்தை வாழ்க்கையின் மீதே திருப்பத் துவங்குகிறார்கள்.

'இத்தனைக்கும் நீதான் காரணம், நீ வந்ததுதான் காரணம்' என்று மனைவியோடு மனங்கசந்துவிடுகிறார்கள்.

நடைமுறை வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் பிரச்சினைக்கு ஆணிவேர் எங்கிருக்கிறது என்று மட்டும் பாருங்கள்.

கற்பனைக்கும் நிஜத்திற்கும் இருக்கும் இடைவெளியை எதனாலும் இட்டு நிரப்பமுடியாது.

நிஜத்தை ஏற்றுக் கொண்டு வாழ ஆரம்பியுங்கள். ஆனந்த வாழ்வின் உச்சம் தொடுவீர்கள்"

இந்தக் கட்டுரையைப் படித்த யார் வேண்டுமானாலும், நிஜ வாழ்க்கையை இன்றிலிருந்து வாழத் துவங்கலாம்.

உறவுகளைப் பற்றிய கற்பனை வடிவங்களுக்கும், உங்களுக்கும் இடையில் நடக்கும் மனச்சச்சரவுக்கும், மன சஞ்சலத்திற்கும், வெளியில் இருக்கும் நிஜ உறவுகளைக் குற்றம் சாட்டி, கஷ்டத்துக்கு உள்ளாக்குகிறீர்கள். இந்த மந்தத்தனத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்போம்.

இன்றிலிருந்து நிஜத்தில் வாழ்ந்து, மற்றவர்களுக்கு மேலும், மேலும் சந்தோஷத்தை அளிப்போம். சந்தோஷத்தை அழிக்கும் கற்பனைகளை அழிப்போம்... என்ற புரிந்து கொள்ளுதலுக்குள்ளும், சங்கல்பத்திற்குள்ளும் நுழைவது நிஜவாழ்வை வாழ வழிசெய்யும்.