KAILASA Library/ஜீவன் முக்தி/பொறாமைSign in
ஜீவன் முக்தி

பொறாமை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

- பொறாமையை விட ... படைப்பாற்றல் பொங்கும் தனித்தன்மை மலர ஜீவன் முக்தி மலரும்.

ஓடி, ஓடி வாழ்க்கை முழுவதும் நிறைய சம்பாதிக்கிறோம். ஆனால், வாழ்க்கையைத்தான் இழந்துவிடுகிறோம்.

"அப்பாடா சொத்து சேர்த்துவிட்டேன்," என்று சாதித்தபின், பெருமூச்சு விட்டு வாழ்வைத் திரும்பிப் பார்க்கும்போது சிலரின் மூச்சே போய்விடுகிறது. அதை அனுபவித்து வாழும் வயதும் கடந்து விடுகிறது.

ஒப்பிடுங்கள் உங்களுடனேயே! - சக்தி வீரியமாகும்

Self comparison - intensifies energy expression

சைபிரஸ் என்கிற முள்செடியும், ரோஜாச் செடியும் ஒரு நாள் பேசிக் கொண்டது.

சைப்பிரஸ் செடி சொன்னது: "ரோஜா செடியே, உன்னை நினைத்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது.

உன்னைத்தான் எத்தனைப் பேர் அன்பாகப் பார்க்கிறார்கள். உச்சி முகர்ந்து முத்தம் கொடுக்கிறார்கள். என்னைச் சீண்டுவதற்குக் கூட ஆள் இல்லையே!"

முள்செடிக்கு ரோஜாவின் பதில்:

"என்னைப் பார்த்தா, நீ பொறாமைப்படுகிறாய்!

உண்மையில் உன்னைப் பார்த்துத்தான் நான் பொறாமைப்படுகிறேன்.

மனிதர்கள் சதா சர்வகாலமும் என்னைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். உச்சி முகர்ந்து முத்தமிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறையும் அவர்கள் என்னைக் கிள்ளும்போது வலி தாங்காமல் துடித்து அழுகிறேன்.

உன் நிலைமை அப்படியில்லையே, உன்னை யாரும் தொடுவதில்லை. நிம்மதியாக இருக்கிறாய்.

அடுத்த ஜென்மத்திலாவது நான் உன்னைப்போல் பிறக்க வேண்டும்" என்றது ரோஜா.

> பொறாமையைவிடப்
> படைப்பாற்றல்
> பொங்கும்
> தனித்தன்மை மலர
> ஜீவன் முக்தி பலரும்.

நம்முடைய வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கிறது.

உண்மையில், பொறாமை இறைவன் நமக்களித்த பொக்கிஷத்தையே மறக்கச் செய்கிறது.

நாம் பக்கத்து வீட்டுக்காரரைப் போல ஆக
வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்க,
பக்கத்து வீட்டுக்காரர் அவருக்கு அடுத்த
வீட்டுக்காரரைப் போல ஆக வேண்டும் என்று
துடித்துக் கொண்டிருக்கிறார்.

> மற்றவர்களோடு ஒப்பிட்டால்
> பொறாமையால் ‘சக்தி
> விரயமாகும்’ நீங்களே
> உங்களோடு ஒப்பிட்டு
> ஓடினால்
> ‘சக்தி வீரியமாகும்’.

இதுதான் ஒப்பிடுவதால் வரும் பலன் மற்றவர்களோடு ஒப்பிட்டு வாழ்ந்தால், நாம் அவர்கள் எவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறார்களோ, அதையே நம்முடைய லட்சியமாக வைத்திருப்போம். இதனால் நம்முடைய தனித்துவம் மலராது. சக்தியும் பெறுகாது. மற்றவரோடு ஒப்பிடாதீர்கள். உங்களோடு மட்டும் ஒப்பிடுங்கள். உங்களுடைய சக்தி வீரியமாகும்.

புத்தர் சொல்கிறார், “உங்களோடு ஓடுங்கள்”

Buddha says, Run competing with Yourself

“மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்தி விட்டு, உங்களுடன் மட்டும் ஒப்பிட ஆரம்பியுங்கள்.

மற்றவர்களுடன் ஓடுவதை நிறுத்தி விட்டு, உங்களோடு, நீங்களே ஒப்பிட ஆரம்பியுங்கள்.

ஆனால், மற்றவர்களைக் கண்டு நாம் பாதிக்கப்படுகிறோம் என்றால், நமக்குள்தான் பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம்.”

உங்களை, உங்களோடு மட்டும் ஒப்பிடுங்கள். இன்றைய நீங்கள்தான், நாளைய நீ ங்களாக மாறப் போகிறீர்கள். தொடர்ந்து உங்களோடு, நீங்களே ஓட ஆரம்பியுங்கள்.

உங்களுக்குள் தனித்தன்மைகளும், படைப்பாற்றலும் கொட்டிக் கிடக்கிறது.

நம்முடைய வளர்ச்சியோடு மட்டும் ஒப்பிடுவோமானால், நாம் பாதிக்கப்படுவதில்லை. ஏனென்றால் நம்மைப் பற்றி நமக்குத் தெளிவாக தெரியும். நம்முடைய வளர்ச்சியைப் பற்றியும் தெரியும்.

மற்றவர்களோடு ஒப்பிட்டால், பொறாமையால் சக்தி விரயமாகும். நீங்களே உங்களோடு ஒப்பிட்டு ஓடினால் சக்தி வீரியமாகும்.

பொறாமையை விட, சக்தி பாயும்

When you drop jealousy, energy flows

மற்றவர்களுடைய சிறப்பான குணங்களைப் பார்த்தவுடன் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் புழுங்குவதால் ஏற்படும் உணர்ச்சிக்குப் பொறாமை என்று பெயர்.

நம்மிடம் இருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் அடுத்தவருடன் ஒப்பிட்டுப் பார்க்கி றோம். அல்லது அடுத்தவருடன் நம்மை ஒவ்வொரு நிமிடமும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.

இப்படியே தொடர்ந்தால், பொறாமையினால் உங்களின் ஆனந்தம் உறிஞ்சப்பட்டுவிடும்.

பக்கத்து வீட்டில் ஏசி ஓடினால், நம் வீட்டின் வெப்பம் அதிகமாகிவிடும். ‘நம் வீட்டில் ஏசி இல்லையே’ என்ற எரிச்சல் பொறாமையாக வரும்போது, நம் வீடு உஷ்ணத்தில் கொதிக்க ஆரம்பித்து விடும்.

நம் பக்கத்து வீட்டுக்காரரிடம் இருக்கும் கார், பெரிதாக தெரியும்போது,

அதுவரை பயன்படுத்திய நம்முடைய
சைக்கிளை நாம் கேவலமாகப் பார்க்க
ஆரம்பித்து விடுகிறோம்.

> பேய் என்று ஒன்று இந்த
> உலகத்தில் இல்லை. ஆனால்
> அதை நினைத்தும் நாம்
> பயப்படுவது போலத்தான்,
> மற்றவர்களோடு நம்மை
> ஒப்பிட்டுப் பார்ப்பதும், பார்த்துப்
> பொறாமைப்படுவதும்.

நாம் சைக்கிள் வைத்திருப்பது கேவலமல்ல. ஆனால், பக்கத்து வீட்டுக்காரரின் காரோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போதுதான், நம் சைக்கிள் நமக்கே கேவலமாகத் தெரிகிறது.

பொறாமை உங்களின் சாதனைக்கு முட்டுக்கட்டை.

பேய் என்று ஒன்று, இந்த உலகத்தில் இல்லை. ஆனால், அதை நினைத்து நாம் பயப்படுவது போலத்தான், மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பதும், பார்த்துப் பொறாமைப்படுவதும். பொறாமைப்படுவது நடைமுறை உலக வாழ்க்கைக்குத் தேவை இல்லாத வழக்கம்.

பொறாமை என்னும் மாய குணத்திலிருந்து மீள, எந்த முயற்சியையும் செய்யாமல், நம்முடைய வாழ்க்கையை வீணடித்துக் கொண்டு இருக்கிறோம்.

பொறாமையின் நான்கு விதம்

Four types of Jealousy

மற்றவர்களோடு ஏன் நம்மை ஒப்பிட்டுக் கொள்கிறோம், அதன் அடிப்படை என்ன எனும் ஆராய்ச்சிக்கு முன், ஒப்பீடு (Comarision) பற்றிச் சுவாரஸ்யமான சுருக்க விளக்கம். 1. பணம் 2. பதவி 3. அழகு 4. அறிவு

இந்த நான்கு விஷயங்களில்தான் நாம் மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுக் கொள்கி றோம்.

மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதினாலேயே, நமக்குப் பணம் கிடைத்துவிடப் போவதில்லை. அதனால் பதவி தேடி வந்து விடாது. அழகு கூடிவிடாது. அறிவு பெருகிவிடாது. ஆனால், நம்மிடம் ஏற்கெனவே இருக்கும் அமைதி நிச்சயம் போய்விடும். ஒப்பிடுவதால் கிடைக்கும் பலன் இதுதான்.

பொறாமையை பொசுக்கும் யுக்தி - 3

உயர்வு மனப்பான்மை, தாழ்வு மனப்பான்மை.

இரண்டிலிருந்தும் விடுதலை

Freedom from Superior feeling and inferior feeling

பொறாமை எனும் இந்தப் பிரச்சினையிலிருந்து எப்படி வெளியே வருவது?

இந்தப் பிரச்சினை எதனால் உருவாகிறது? ஏன் ஏற்படுகிறது? இதைத் தர்க்க ரீதியாக அலசி, ஆராய்ந்தாலே போதும். பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துவிடும்.

ஒப்பிடுவதால், இரண்டு விஷயங்கள் நிகழ்கிறது. ஒன்று நம்மிடம் எதுவுமே இல்லை என்ற முடிவுக்கு வருவோம். இது தாழ்வு மனப்பான்மையில் தள்ளுகிறது. இல்லையென்றால் நம்மிடம் எல்லாம் இருக்கிறது என்கிற முடிவுக்கு வருகிறோம். இதனால் உயர்வு மனப்பான்மை நம்மிடம் ஏற்படுகிறது. அதன்பின் நம்முடைய உயர்வு மனப்பான்மை சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் மற்றவர்களைப் பாதிக்கத் துவங்கும் பொழுது, சமூகம் நம்மை உதைத்து, அதைச் சரி செய்கிறது.

இந்த உயர்வு மனப்பான்மை தோன்றாத பட்சத்தில், நாம் எதற்கும் பிரயோஜனம் இல்லாதவர்கள் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறோம்.

தாழ்வு மனப்பான்மை நம்மைத் தாக்குவதால், மனத்தளவில், அம்மை விழுந்த மாங்காய்போல சூம்பிச் சுருங்கி விடுகிறோம்.

தாழ்வு மனப்பான்மையும் உயர்வு மனப்பான்மையும் மனிதனை மாறி மாறித் தாக்குகிறது.

ஆன்மீக சாதகத்தில்
ஈடுபட்டுக் கொண்டே
இருங்கள்; அனுபூதி
நோக்கி
முன்னேறிக்
கொண்டே
இருப்பீர்கள்!

பொறாமையை விட்டால் உயர்வு மனப்பான்மை, தாழ்வு மனப்பான்மை என்ற இரண்டையுமே தாண்டிவிடுவீர்கள்.

மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டு நொந்து போவதற்கு, இன்றிலிருந்து ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்.

மற்றவர்களின் நிறைகளையும், சாதனைகளையும் உற்சாகப்படுத்தும் காரணிகளாக, ஊக்கப்படுத்தும் விஷயங்களாகப் பார்க்க ஆரம்பியுங்கள்.

முதலில் தலையின் கனத்தை அதிகப்படுத்தும் அறிவின் செறிவைக் குறைத்து, விஷய ஞானத்தை (அறிவை) அனுபவ ஞானமாக்குங்கள்.

உங்கள் சக்தியை உயர்த்தினால்தான் நீங்கள் வாழ்வில் உயர முடியும், முன்னேற முடியும். இதுதான் வெற்றியின் சூட்சுமம், படைப்பாற்றலின் திறவுகோல். இதை நடைமுறைப்படுத்தி வாழத்துவங்கினால் வாழ்வில் ஆனந்தக்காற்று வீசும். முயற்சி செய்துகொண்டே இருங்கள். தொடர்ந்து ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டுக் கொண்டே இருங்கள்; அது உங்களை அனுபூதி நோக்கி முன்னேற்றிக் கொண்டே இருக்கும்.