பயம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
- பயத்தைத் தைரியத்தோடு எதிர்கொள்பவரே ஜீவன்முக்தர்
பயம் என்பது ஓர் சக்தி. தைரியமும் ஓர் சக்தி. பயம் உங்களின் சக்தியை விரயமாக்கும். தைரியம் உங்களின் சக்தியைப் பலப்படுத்தும்,
ஒவ்வொரு மனிதரும், ஏதாவதொரு காரணங்களுக்காக, தினம் தினம் பயப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தத் தொடர் பயங்களுக்குப் பெயர்தான் (Fear strokes) பயத்தாக்குதல். பயத்தாக்குதலிலிருந்து எந்தவொரு மனிதர் தப்பிக்கிறாரோ, அவரின் உடலும் மனமும் உற்சாகத்தால் நிரம்பும். சக்தியால் நிறைந்திருக்கும்.
பயத்திலிருந்து விடுபடுவது தியானம் மட்டுமல்ல;
அதுவொரு ஜீவன் முக்த அனுபவம் .
பயத்தைச் சரியாக எதிர்கொண்டால், மரணம் கூட உங்களுக்கு ஞானத்தைத் தரும் குருவாகும்.
மரணத்தைக் கடந்த ரமண மகரிஷி
Raman maharishi : who overcame death
மரணத்தை எதிர்கொள்ளும் நிகழ்ச்சியை ஒரு தியானமாகவே வகுத்துள்ளார், பகவான் ரமண மகரிஷி.
பதினாறு வயதாக இருந்தபோது, மரணம் அடைந்து ஞானம் பெற்ற மஹா ஞானி ரமண மகரிஷி.
ரமண மகரிஷி பிறந்தது திருச்சுழியில். மதுரையில் அவருடைய உறவினர் வீட்டில் இருக்கும்போது, திடீரென அவரது உள் உணர்வில் மரணம் என்கிற அனுபவம் இயல்பாக விரியத் தொடங்கியது. அந்த அனுபவம் நிகழத்துவங்கியதும், ரமணர் தம் விழிப்புணர்வோடு அதை எதிர்கொண்டார்.
பயத்தால் அதிலிருந்து தப்பியோட நினைக்கவில்லை. மரணம் என்றால் என்ன என்ற அவரின் சந்தேகத்திற்குப் பதில் கிடைக்கத் துவங்கியது. அதை அனுபவமாக உணரத் தொடங்கினார்.
முதலில் கை, கால் செயல் இழந்தது.
பிறகு மார்பு, தலை, இறுதியில் உடல் முழுவதும் செத்துப் போனது. உடலிலிருந்து ஏதோ ஒன்று வெளியில் வந்து விழுந்த மாதிரி ஓர் உணர்வு அவருக்குள் ஏற்பட்டது.
தனக்கு நேர்ந்து கொண்டிருப்பதை, உணர்கிற உணர்வின் மூலமாக, அவர் தம்மைத் தாமே சாட்சியாகப் பார்த்தார்.
தம் உடல் எரிந்து போவதை, எரிந்து சாம்பலாவதை நிதர்ச னமாகக்கண்டார். மரணத்தின் தன்மையை, அதன் அனுபவத்தை, அணுஅணுவாக விழிப்புணர்வோடு அனுபவித்தார்.
உடல் அழிந்தாலும்
'தான்' என்று அழியாத
இந்த உணர்வுதான்
ஆத்மா.
அப்பொழுது, பளிச் என்று ரமணரின் ஆத்ம அனுபூதி பேரொளியாக வீசியது.
"உடல் அழிந்தாலும் தான்! என்ற அழியாத இந்த உணர்வுதான் ஆத்மா. இது என்றும் அழிவதில்லை," என்ற தெளிவு அவருக்குள் பிறந்தது. அந்தத் தெளிவுதான் ரமணரை ஞானியாக மாற்றியது. இதே அனுபவம் நமக்கு ஏற்பட்டிருந்தால்...?
நாம் அமைதியாக இருந்து, நமக்குள் என்ன நடக்கிறது என்பதைக் கவனித்துப் பார்த்திருப்போமா?
உயிர் போகப் போகிறது என்கிற பயத்தில் கத்திக் களேபரம் செய்திருப்போம்.
ஆனால், உண்மையில் மரணம் நேர வேண்டாம். மரணத்தை பற்றிய எண்ணமே போதுமானது. நம்மை பயமுறுத்த மரணம் கொடுக்கும் அனுபவத்தைக் கண்டு ரசிக்க, நாம் இன்னும் நிறையப் பக்குவம் அடைய வேண்டியிருக்கிறது.
ஆனால், அந்த அனுபவத்தை அடையாமலேயே மரணத்தின் மீது நமக்கு இருக்கும் பயத்தைப் போக்கிக் கொள்வதற்காகவே, ஒரு தியானத்தைச் சொல்லித்தரு கிறோம். அது கடோ உபநிடத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
இந்தத் தியானம் ‘நிர்பயா தியானம்’ எனப்படும். மற்றத் தியானங்களைப்போல், ஒரு ஆச்சாரியாரின் உதவி இல்லாமல், குரு சாந்நித்யத்தின் உதவி இல்லாமல் செய்ய இயலாது.
இந்தத் தியானம் நித்யானந்த ஸ்புரணம் தியான முகாமில் கற்றுத் தரப்படும். இந்தத் தியானத்தில் கலந்து கொள்பவர்கள் மரணம் கடந்த அனுபவத்தை உணர்கிறார்கள்.
மரணபயம் கூட இன்னொரு சிறு எண்ணமே என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். நம்மை உலுக்கிக் கொண்டிருக்கும் துக்கத்தைக் கூட, அடுத்து வரும் சிறு எண்ணமானது மாற்றிவிடும் எனும் உண்மையைப் புரிந்து கொண்டால், பெரிய தெளிவு பிறந்துவிடும்.
பயத்திற்கு நீங்கள்தான் சக்தி தருகிறீர்கள். நிஜமாக அதற்குச் சுயமாகச் சக்தியில்லை.
உங்களின் பயமும் அதே போலத்தான். பயத்திற்கு நீங்கள்தான் முக்கியத்துவம் தருகிறீர்கள். இல்லாவிட்டால், அதிலிருந்து எப்போதோ வெளி வந்திருப்பீர்கள். பயப்படும்போதெல்லாம் பயப்படுவதை, தொடராமல் வேறு ஏதாவது வேலையைச் செய்ய ஆரம்பியுங்கள். பயம் ஓடிப்போகும்.
இது சாதாரண வாக்கியமல்ல,
தியான சூத்திரம்.
எந்தப் பயம் வந்தாலும், அதை இனி கையாளும் கலையை இப்பொழுதுக் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அதை வாழ்வில் பிரயோகித்துப் பாருங்கள். உங்கள் பலம் புரியும்.
பயத்தை தைரியமாக்கும் யுக்தி-2
மரண பயத்தையும் தாண்டடிய பயம்
A Fear worser than of death fear
ஆச்சாரியர் ஒருவரோடு நிகழ்ந்த இனிமையான உரையாடல் இது.
ஆச்சாரியரிடம் "மிகப் பெரிய பயம் எதுவாக இருக்க முடியும்?" என்று கேட்டதற்கு அவர் "மரணத்தைப் பற்றிய பயம் தானே!" என்றார்.
> பயத்தை
> தாண்டுபவர் பலம்
> வாய்ந்தவராகி
> விடுவார்
"இல்லை, மரணத்தைத் தாண்டிய பயம் ஒரு இருக்கிறது."
"மரணத்தைத் தாண்டிய ஒரு பயம் இருக்கிறதா?"
ம்...... இருக்கிறது. மரணம் பற்றிய பயமாவது எதிர்காலம் பற்றியதுதான். அது உங்களை வலுவாக பாதிக்கப் போவதும் எதிர்காலத்தில்தான்.
ஆனால், தினம் தினம் மனிதனைச் சாகடிக்கும் பயம் இருக்கிறது.
பலர் தங்களின் வாழ்வையே, இந்தப் பயத்திற்காக குழிதோண்டி புதைத் திருக்கிறார்கள்."
"அப்படியென்ன பயம்? அதை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லையே"
"உங்களின் அந்தஸ்து பற்றிய பயம்தான் அது.
தங்களின் பெயர் கெட்டுப் போய் விடக் கூடாது என்பதற்காகவும், மற்றவர்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகவும், மக்கள் படும்பாடு இருக்கிறதே, நடுங்கும் நடுக்கம் இருக்கிறதே அது சொல்லி மாளாது.தம் அந்தஸ்தையும், தம் பெயரையும் கட்டிக் காக்கத் துடிப்பவர்களுக்கு, இந்த உண்மைகள் தெரிவதே இல்லை."
“எந்த உண்மை?”
“இப்போது மட்டும் உங்களை மற்றவர்கள் நல்லவர்களாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்களா என்ன?”
“உங்களை நல்லவர்களாக நினைப்பவர்கள், நீங்கள் அவருக்கு முன் நல்லவர்தான் என நிரூபிக்கா விட்டால் கூட, உங்களை நல்லவராக மட்டும்தான் அவர்களால் பார்க்க முடியும்.”
> உங்களைத்
> தைரியத்தோடு
> எதிர்க்கொண்டால்
> பயத்தையே தாண்டி
> விடுவீர்கள்.
“அதேபோல், உங்களை நல்லவர்கள் என நம்பாதவர்களிடம், உங்களைப் பற்றி எவ்வளவுதான் நல்லவிதமாக எடுத்துச் சொன்னாலும், அது நடக்காது.”
“அட! இந்த உண்மையைக் கேட்ட பிறகு அந்தஸ்தைக் காப்பாற்ற மனிதர்கள் செய்வதெல்லாமே வேலையில்லாத வேலையைப் போலல்லவா தெரிகிறது.”
“ஆமாம்.”
“அந்தஸ்து, பெயர், புகழ் என்பதெல்லாம், அவை உங்களிடம் இருக்கும்வரை இருக்கும். உங்களிடமிருந்து அவை போகும்போது அவற்றை யாராலும் தடுக்க முடியாது. இந்த வாழ்வியல் அறிவியல் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளாமல் இருக்கும் மனிதர்கள்தான், தங்கள் அந்தஸ்தைக் காப்பாற்றுவதற்காக, தங்கள் ஆயுளையே அடகு வைக்கவும் தயாராயிருப்பார்கள்.
மற்றவர்களின் பேச்சும், ஏச்சும் தங்களின் பெயரைப் பாதித்து விடக் கூடாதே! என்ற ஒரு பயத்தைக் கையில் வைத்து கொண்டு, ஒரு நாளின் ஒவ்வொரு படியையும் பயந்து பயந்துதான் அணுகுகிறார்கள். பேசுவதையும் சிரிப்பதையும் கூட அளந்து, அளந்தேதான் செய்கிறார்கள்.
இந்தப் பயத்தை ஒருவர் தாண்டி விட்டாரென்றால், மரண பயம் என்பதெல்லாம் அவரின் கால் தூசிக்குச் சமமாகாது.
பயத்தைத்தாண்டும் பலம் வாய்ந்தவர் ஆகிவிடுவார்,” என்று ஆச்சாரியாரிடம் சொல்லி முடித்தோம்.
பயத்திற்கே, நீங்கள் பயப்படும் வரைதான், உங்களைப் பயப்படுத்தும் சக்தியிருக்கிறது. தைரியத்தோடு எதிர் கொண்டால், பயத்தையே தாண்டிவிடுவீர்கள்
> மரணம்
> ஒரு உச்சபட்ச
> கொண்டாட்டமே
‘மரணம் ஒரு முடிவல்ல; தொடக்கமே’ எனப் புரிந்து கொள்வீர்கள்.”
“மரணம் கூட ஒரு உச்சபட்சக் கொண்டாட்டமே!”