KAILASA Library/ஜீவன் முக்தி/கவலைSign in
ஜீவன் முக்தி

கவலை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

  • கவலைகளைக் களைந்தால் ஜீவன் முக்தி வெளிப்பட்ட ஆரம்பித்துவிடும்!

சொர்க்கத்தை எட்டிப்பார்க்க வேண்டுமா?

  • சிரி. நரகத்தை எட்டிப்பார்க்க வேண்டுமா?
  • துக்கப்படு.

மனம் உற்சாகமாக இருந்தால், புல் கூட ஆயுதமாகத் தோன்றும், தோல்வி கூட குருவாகத் தோன்றும். சாத்தியம் இல்லாதவற்றில் கூட, சாத்தியம் ஆவதற்கான சிறு சாத்தியக் கூறுகள் மனக்கண்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

மனம் சோர்வுற்றிருந்தால், படையே உடன் இருந்தாலும் பயம் இருக்கும்.

‘இந்த வெற்றி இப்போதைக்குச் சரி ஆனால் அடுத்த தோல்வி எப்போது வருமோ?’ என்று சோர்வுற்ற மனம் தோல்வியையே யோசிக்கும்.

சின்ன சாத்தியமின்மைகள்கூட மனக்கண்களுக்குத் பூதாகரமாகத் தெளிவாகத் தெரியும்.

‘இந்த நூற்றாண்டில் மனிதனை அதிகம் பாதித்த வியாதி எது?’ என்று ஒரு கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது.

அது எய்ட்ஸ், கேன்சர், இரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி, வறுமை போன்றவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்ற நோக்கில்தான் அந்தக் கருத்துக் கணிப்பே எடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் கருத்துக் கணிப்பின், முடிவு அவர்களே சற்றும் எதிர்பாராதது.

அதில் மனிதனை அதிகம் பாதிப்பது துக்கம்தான் என்பது தெரிய வந்தது. அந்தத் துக்கத்துக்குக் காரணம், ‘மனச்சோர்வு’ (Depression). இந்த நூற்றாண்டிலேயே மனிதனுக்கு மிகப்பெரும் பிரச்சினையாக இருப்பது, இந்த மனச் சோர்வுதான்.

மனம்
சோர்வுற்றிருந்தால
படையே உடன்
இருந்தாலும் பயம்
இருக்கும்.

சிறிய
சாந்தியமின்மைகள்
மட்டும்
மனக்கண்களுக்குத்
தெளிவாகத் தெரியும்.

மனச் சோர்வின் மூலகாரணம் கவலை

Root cause for depression is worry

பலருக்கு இந்தக் கதை ஏற்கெனவே தெரிந்திருக்கும். இந்தக் கதையின் கருத்தாழத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, மீண்டும் இந்தக் கதையைச் சொல்கிறேன்.

ஒரு கிராமத்தில், ஒரு பெண்மணி, நகரத்தில் வாழும் தம் மகன்களை நினைத்து எப்போதும் கஷ்டப்பட்டுக் கொண்டே இருந்தார். பக்கத்து ஊருக்கு ஒரு ஞானி வந்திருப்பதாகவும், அவர் மக்களின் கஷ்டங்களைத் தீர்த்து வைப்பதாகவும் பெண்மணியின் காதுக்குச் செய்தி எட்டியது. பெண்மணி ஞானியைத் தரிசிக்கக் கிளம்பினார்.

"என் பையன்களைப் பற்றிய கவலைதான் எனக்கு எப்போதும்! என் பையன்களுக்கு நல்லகாலம் பிறக்க வேண்டும். அதற்கு ஏதாவது வழி சொல்லுங்கள்," என்று ஞானியிடம், பெண்மணி வேண்டினார்.

ஞானி, "அப்படியாம்மா... சரி... ஏன் எப்போதும் உங்கள் மகன்களை நினைத்தே கவலைப்படுகிறீர்கள்?" என்று கேட்டார்.

பெண்மணி, "இப்போது பாருங்கள் இது நல்ல மழைக்காலம். என்னுடைய மூத்த மகன் உப்பு வியாபாரம் செய்கிறான். மழையில் உப்பு எல்லாம் நனைந்துவிடும். வெய்யில் முழுமையாக இல்லாததால் உப்பளம் கட்டமுடியாது.

இன்னும் கொஞ்ச காலம் கழித்து வெய்யில் காலம். என்னுடைய இளைய மகன் கம்பளி, குல்லா வியாபாரம் செய்கிறான். வெயிலினால் குல்லா வியாபாரமே நடக்காது.

இப்படிப் பெரிய மகன், வருடத்தில் பாதி காலமும், சிறிய மகன் பாதி காலமும் சரியாகச் சம்பாதிக்காதபோது நான் எப்படிச் சந்தோஷமாக இருக்க முடியும்?" என்றார்.

ஞானி, "ஏம்மா,தேவையே இல்லாமல் உங்களை வருத்திக் கொள்கிறீர்கள்? வெயில் காலத்தில் பெரிய மகன் நன்றாக உப்பு வியாபாரம் செய்வதை நினைத்துச் சந்தோஷப்படுங்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

"மழைக்காலத்திலும், குளிர்காலத்திலும் இளைய மகனின் கம்பளி, குல்லா வியாபாரம் நன்றாக நடப்பதை நினைத்துச் சந்தோஷப்படுங்கள். அப்புறம் பாருங்கள் துக்கம் எங்கே போகிறது!" என்று சொன்னார். பலர் இப்படித்தான் எதையாவது நினைத்துக் கொண்டு துக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

தொடர்ந்து கவலைப்படும்போது அது துக்கமாக மாறுகிறது. துக்கம் தொடர்ந்திருந்தால் அதுவே மன அழுத்தமாக, மனச்சோர்வாக மாறுகிறது. துக்கத்திற்குக் காரணம் தேடுவதை நிறுத்துங்கள். கவலையைத் தாண்டி நிம்மதியான உணர்வினால் வசப்படுவீர்கள்.

சுயபட்சாதாபம் தேவையில்லை

There is no need for self pity

“யாருக்காகக் கவலைப்படுகிறேன்? எல்லாம் என் குடும்பத்துக்காகவும், உலகத்துக்காகவும் தானே கவலைப்படுகிறேன்.

“மற்றவர்கள் மீது இருக்கிற கருணையால்தான் கவலைப்படுறேன். மற்றபடி எனக்கு ஒரு கவலையுமில்லை,” என்று சுயபட்சாதாபம் (Self Pity) தேடும் சிலர் இப்படிச் சொல்வதுண்டு. நன்கு புரிந்து கொள்ளுங்கள். மற்றவர்களுக்காகக் கவலைப்படுகிறேன் என்பது சுய பட்சாதாபம் தேடிக் கொள்வதே.

மற்றவர்களுடைய கவலைகளுக்கும், முன்னேற்றத்திற்கும் நாம் கவலைப்படுவதால் அவர்களுக்கும் எதுவும் நிகழாது, நமக்கும் எதுவும் நிகழாது. நம்முடைய கவலைதான் இன்னும் கொஞ்சம் அதிகமாகும்.

அவர்களுக்கு நோய் இருக்கிறது.

அவர்களுக்காக நான் மருந்து சாப்பிடுகிறேன் என்று சொன்னால் எப்படி இருக்கும்?

அது தேவையற்ற செயல்தானே? தம்முடைய உடல் பிரச்சினைக்கு எப்படி ஒருவர் மருந்து எடுத்துக் கொள்கிறாரோ, அதுபோல் நம் கவலைகளை ஒழிக்க, நம் எண்ண ஓட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் துன்புறுத்தும் வார்த்தைகளை நாம்தான் கண்டுபிடித்துச் சரி செய்ய வேண்டும்.

“நான் பிரயோஜனம் இல்லாதவன், நான் முட்டாள், நான் துரதிர்ஷ்டசாலி...,” என்று நம் எண்ண ஓட்டத்தில் ஓடிக் கொண்டேயிருக்கும் சில தவறான வார்த்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு, களையப்பட வேண்டும்.

கவலைகளைப்பற்றி கவலைப்படாமல், தம்முடைய கவலைகளை ஆராயாமல், மற்றவர்களுடைய கவலையைப் பெரிபடுத்துவது, சுயபட்சாதாபம் தேடிக் கொள்கிற செயல். அது உங்களின் ஜீவ சக்தியை மங்கச் செய்யும். கவலைகளைக் களைந்து விட்டால், வெளிப்படாமல் இருக்கும் ஜீவ சக்தி, தன்னால் வெளிப்பட ஆரம்பித்துவிடும்.

சுயமரியாதை

Self esteem

நமக்குள் ஓடும் வார்த்தைகளில் அதிகக் கவனம் செலுத்துவதில்லை.

மற்றவர்களுடன் பேசும்போது மரியாதை தந்து பேசுகிறோம். ஆனால், நம்மோடு நாம் மனத்திற்குள் பேசிக் கொள்ளும் போதுமட்டும், கொஞ்சம்கூட மரியாதை இல்லாமல், இங்கிதமில்லாமல் நடந்து கொள்கிறோம், நம்மை நாமே குறைவாக மதிப்பிடுவது ஏன்? கவனமின்றி தரக்குறைவாக பேசுவதேன்?

காரணம், உள்ளே கேள்வி கேட்க ஆளே இல்லை. அதனால்தான் என்ன வேண்டுமானாலும் யோசிக்கிறோம், எப்படி வேண்டுமானாலும் யோசிக்கிறோம்.

மற்றவர்களிடம் பேசும் வாய் பேச்சுக்கு நாம் வரையறை வைத்திருப்பதுபோல், மனத்தின் எண்ணங்களுக்கு வரையறை வைத்திருப்பதே இல்லை.

மற்றவர்களுக்கு முழுமையான மரியாதை கொடுத்து பேசுவது எதற்கு? நீங்கள் மரியாதை தந்து பேசினால்தான், அவர்களும் உங்களுக்கு மரியாதை தந்து பேசுவார்கள் என்பதற்காகத்தான் அவர்களும் மரியாதை தர வேண்டும் என்று எதிர்பார்த்துதான் மற்றவர்களுடன் பழகுகிறீர்கள்.

சுயமரியாதை என்பது மற்றவர்களிடம் நீங்கள் எதிர்பார்த்து நிற்பதல்ல; உங்களுக்கு நீ ங்களே தருவது. மரியாதை தரும் சொற்களைப் பேசும் பொழுது இனிமையாக நடந்து கொள்ள முடிவதுபோல், மரியாதைக் குறைவான வார்த்தைகளைப் பேசும்பொழுதும் இருக்க முடிவதில்லையே ஏன்? காரணம் உங்கள் உள்ளுக்குள் நிம்மதிதரும் வார்த்தைகளின் எண்ணிக்கைக் குறைவாக இருப்பதுதான்.

கட்டுப்பாடே இல்லாத காட்டுக் குதிரையைப் போல, இத்தனை வருடங்களாக வளர்க்கப்பட்டதால்தான், நம் மனம் சில அவமானங்கள், சில தோல்விகளுக்கே வெகுண்டு எழுகிறது. நம் மனத்தால் வெளியில் நிகழும் எதிர்பாராத நிகழ்வுகளை ஜீரணிக்க முடிவதில்லை. நிம்மதி இழக்கிறது.

தன்னை நிரூபிக்கவே முழு சக்தியையும் திருப்புகிறது. இத்துனைக் கொந்தளிப்புக்கும் காரணம் யாரோ ஒருவர் உங்கள் மீது வீசிய வார்த்தைகள். இந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஜீரணிக்க முடியாமல் இருக்கும் தன்மையே கவலை.

கவலை என்பது வெளியிலிருந்து வருவதில்லை. உள்ளே இருக்கும் நிம்மதியைக் குலைக்கும் வார்த்தைகளால் எண்ணங்களால் வரும் அசுத்தமான வார்த்தை ஓட்டங்களே கவலை.

நம் மனத்தால்
வெளியில் நிகழும்
எதிர்பாராத
நிகழ்வுகளை ஜீரணிக்க
முடிவதில்லை.

உள்ளே நிம்மதியைக் கண்டு கொண்டால், வெளியே சுதந்திரத்தைக் கண்டு கொள்வீர்கள்.

உள்ளிருக்கும் வார்த்தை ஓட்டங்களைச் சரிசெய்தாலே பாரங்கள் நீங்கும். நீங்களும் சுதந்திரம் பெறுவீர்கள், ஆனந்தமாய்ச் சிரிக்க ஆரம்பிப்பீர்கள். அத்தகைய கஷ்டங்கள் இல்லாத நிலையை உங்களுக்குத் தரும் யுக்திகள்தான், தியானங்கள்.

கவலையைத் தூண்டும் யுக்தி-3

நிம்மதியான வாழ்க்கைக்குள் காலடி எடுத்து வைப்பீர்கள்

Let you enter into a peaceful life

எந்த ஒரு செயலிலும் முழுமையாக ஈடுபட முடியாமல் போவது... கட்டுப்பாடற்ற கட்டுக்கடங்காத ஆசைகளால்தான்.

ஆசை என்ற பந்தை, எவ்வளவு வேகமாக வீசுகிறீர்களோ, அதைப் பொறுத்துத்தான், அந்த ஆசை கவலை என்ற பந்தாக, பலருடைய வாழ்க்கைச் சுவரில் பட்டு உங்களிடமே திரும்பும்.

உங்கள் கவலையின் அளவு, உங்கள் ஆசையின் அளவே. தேவையற்ற ஆசைகள் குறைந்தாலே, கவலைகளும் குறைந்து விடும்.

உங்கள் கவலைகளை, உங்கள் ஆசைகள் மூலம் நீ ங்கள்தான் தேர்வு செய்கிறீர்கள்.

தேர்வு செய்யும்போது முழு விழிப்புணர்வுடன் இருங்கள். கவலைகளைத் தரும் ஆசைகளைத் தேர்வு செய்ய மாட்டீர்கள்.

இந்த உண்மையை முழுமையாகப் புரிந்து கொண்டாலே போதும், நிம்மதியான வாழ்க்கைக்குள் காலடி எடுத்து வைத்துவிடலாம்.

> எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு
> கவலைகள்? என்று தெரிந்து
> கொள்ள விரும்புபவர்கள் தெரிந்து
> கொள்ளுங்கள். உங்களின்
> கவலைகளுக்குக் காரணம்
> உங்கள் ஆசைகளே!

illustration