KAILASA Library/ஜீவன் முக்தி/அன்புSign in
ஜீவன் முக்தி

அன்பு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

  • அன்பு ஒரு ஆனந்த தேவதை... உங்களை ஜீவன் முக்தராக்கும் தேவை.

நான் உலகத்தையே நேசிக்கிறேன், ஆனால், என்னை யாருமே புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்களே?

ஒரு ஈ, எறும்புக்குக் கூட துரோகம் செய்ததே இல்லையே, எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது?

இரவு, பகலாக எல்லோருக்காகவும் உழைத்தேன். ஆனால், கண்ட பலன், ஒன்றுமே இல்லையே?

இந்தக் கேள்விகளில் ஏதாவது ஒன்று உங்களுக்குள் இருக்கிறதா?

உங்களுக்கான பதில்கள் மட்டுமல்ல; தீர்வே உள்ளுக்குள் காத்திருக்கிறது, தொடருங்கள்.

எதையும் எதிர்பார்த்து இருப்பதல்ல உறவு

Relationship is not expecting something

வாஜஸ்பதி மிஸ்ரா என்பவர் பிரம்மசூத்திரம் என்கிற நூலுக்கு விளக்க உரை எழுதியிருக்கிறார். அவர் எழுதிய உரையைப் போல, வேறு யாரும் உரை எழுத முடியாது என்கிற அளவுக்கு, உலகத்தில் உள்ள எல்லாத் தத்துவங்களையும் உள்ளடக்கி உரையை எழுதியிருக்கிறார்.

அவர் அந்த உரையை எழுதத் துவங்குவதற்கு முன்பு, நிகழ்ந்த ஒரு சம்பவம். வாஜஸ்பதியின் குரு அவரிடம் சொன்னார், "பிரம்ம சூத்திரத்திற்கான உரையை நீதான் எழுத வேண்டும். எனக்கு வயதாகிவிட்டது. என் மகளைத் திருமணம் செய்துகொள். திருமணத்தைப் பார்க்கும் வரைகூட நான் உயிரோடு இருக்க மாட்டேன் போலிருக்கிறது," என்றார்.

"நான் கூடிய சீக்கிரமே இறந்து விடுவேன். நான் உடலில் இல்லை யென்றாலும் மிகச் சிறப்பாக இப்பணிகளைச் செய்துவிடு," என்று சொல்லிவிட்டு, சில நாட்களிலேயே உயிரை விட்டுவிட்டார். குரு சொன்னபடியே திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த உடனே முதல் வேலையாக குரு சொன்ன பிரம்மசூத்திரத்திற்கு உரை எழுத ஆரம்பித்தார். இருவரும் ஒரு குடிசைக்குள் தங்கினார்கள்.

உரை எழுதத் துவங்கியது முதல் அவர் நாள், கிழமை என்பதையெல்லாம் மறந்தார். காலம் பறந்தது. வருடங்கள் உருண்டோடியது.

பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதி முடித்தாகி விட்டது. அந்த நூலுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார் வாஜஸ்பதி மிஸ்ரா.

தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தபோது அவர் அருகில் இருந்த விளக்கிற்கு ஒரு பாட்டி நெய் ஊற்றி விளக்கேற்றிக் கொண்டிருப்பதைக் கவனித்தார்.

கேட்பதை
நிறுத்தி, கொடுக்க
ஆரம்பித்தால்
நீங்கள் அன்பை வீசும்
தென்றல் காற்றாக
மாறுவீர்கள்.

தன்னோடு இன்னொருவர் இருப்பதை உணர்ந்து, “அம்மா, நீ யார்?” என்று கேட்டார் வாஜஸ்பதி.

“நான்தான் உங்கள் மனைவி. என்னைத் திருமணம் செய்து கொண்டதும் நீங்கள் குருவின் ஆணையை ஏற்று உரையை எழுத ஆரம்பித்து விட்டீர்கள்.

உங்களுக்கு எந்தத் தொல்லையும் தராமல் வேண்டிய உதவிகளைப் பக்கத்திலிருந்து செய்து வருகிறேன்” என்று பவ்யமாகச் சொன்னார் அந்தப் பாட்டி.

வாஜஸ்பதிக்கு ஒரே பரிதவிப்பாக இருந்தது. ஆனாலும், உள்ளுக்குள் பரவசம் அடைந்தார். 'இவ்வளவு அர்ப்பணிப்பு உணர்வோடு ஒரு பெண் இருக்க முடியுமா!' என்று நன்றி உணர்வால் உருகி அப்பெண்ணைப் பார்த்தார்.

மிஸ்ரா கேட்டார் : “ஏனம்மா! என் கவனத்தை ஒரு முறையாவது திருப்பி இருக்கக் கூடாதா? உன்னை யார் என்று காட்டியிருக்கக் கூடாதா? உன் வாழ்க்கையையே நான் வீணடித்து விட்டேனே!” என்று அழுதார்.

அதற்கு அவள் பதில் சொன்னாள் : “உங்களுக்குச் சேவை செய்வது நான் பெற்ற பாக்கியம். அது நிறைவேற நீங்கள்தான் எனக்கு உதவினீர்கள்.

உங்களைத் திருமணம் செய்து கொண்டதால்தான் எனக்கு இந்தப் பாக்கியம் கிடைத்தது. இதற்கு எனது அநேக கோடி நன்றிகள்,” என்று நெகிழ்ந்து சொன்னாள்.

அன்பு செலுத்துபவர்கள் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். என்பதை உணர்த்தாமல் உணர்த்திவிட்டாள்.

தாம் உரை எழுதுவதற்கு உறுதுணையாக இருந்தது மட்டுமல்லாமல் தம்மையே தியாகம் செய்த தம் மனைவியின் பெயரையே அவர் எழுதிய பிரம்மசூத்திர உரைக்குப் பெயராக வைத்தார்.

பிரம்ம சூத்திரத்திற்கு எழுதிய உரைக்கு இன்னமும் 'பாமதி' என்ற பெயர்தான் இருக்கும்

பல ஆண்டு காலம் பாமதியை, எதையும் எதிர்பார்க்காமல் இயங்க வைத்தது எது?... அள்ள அள்ளக் குறையாமல் பெருகும் அன்பு என்னும் சக்திதான்.

இப்படிக் காரண காரியமில்லாமல் அன்பு பொங்க வாழ்வதுதான் ஜீவன் முக்த வாழ்வு.

இதை உணர்ந்தவர்களுக்கு வாழ்க்கை மிகச்சிறந்த பரிசு. வாழ்க்கை எப்படி இருந்தாலும் சரி அதைக் கொண்டாட இது போன்ற அன்பானவர்களால்தான் முடியும். ஜீவன்

முக்தர்களால்தான் முடியும்.

நம்முடைய உறவுகளைப் பார்த்தோம்
என்றால், நமது உறவுகள் அனைத்தும்,
எதையோ எதிர்பார்த்துத்தான் இருக்கிறது.

மகன் எதிர்காலத்தில் தம்மைக் காப்பாற்றுவானா என்று ஒரு தந்தை எதிர்பார்க்கிறார்.

அப்பா தனக்கு நிறைய சொத்து, சு கத்தைச் சேர்த்து வைப்பாரா என்று மகன் எதிர்பார்க்கிறான். இப்படி ஒவ்வொருவரும் ஒரு எதிர்பார்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

> இதை உணர்ந்தவர்களுக்கு
> வாழ்க்கை மிகச் சிறந்த பரிசு
> வாழ்க்கை எப்படியிருந்தாலும் சரி
> அதைக் கொண்டாட இதுபோன்ற
> அன்பானவர்களால்தான் முடியும்
> ஜீவன் முக்தர்களால்தான்
> முடியும்.

சிலர் பணத்தை, புகழை, பதவியை எதிர்பார்ப்பார்கள். ஆனால்... நான் அப்படியெல்லாம் எதிர்பார்ப்பவன் அல்ல என்பவர்களின் எதிர்பார்ப்பு, இன்னும் கொஞ்சம் காஸ்ட்லியாக இருக்கும்.

இப்படிப்பட்டவர்கள் கவனம், முக்கியத்துவம், ஈர்ப்பு ஆகியவற்றை அன்பு என்ற பெயரிட்டு, அதை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பார்கள். எதிர்பார்க்கும்வரை வாழ்க்கையைக் கொண்டாட முடியாது.

கேட்பதை நிறுத்திக் கொடுக்க ஆரம்பித்தால், நீங்கள் அன்பை வீசும் தென்றல் காற்றாக மாறுவீர்கள். ஆனந்தத்தை வெளிப்படுத்திக் கொண்டேயிருப்பீர்கள். நீங்கள் ஆனந்தமாய் இருப்பதோடு, மற்றவர்களையும் ஆனந்தமாய் வைத்திருக்கும் ஜீவன் முக்தர்கள் ஆவீர்கள்.

மற்றவர்களின் விருப்பப்படி நடனமாட நாம் பிறக்கவில்லை

You are not here to dance for others tune

நம்மை நாமே திருப்திபடுத்திக் கொள்வதற்கோ, நம்முடைய ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கோ நாம் அக்கறை கொள்வதில்லை. முக்கியத்துவம் தருவது இல்லை. அடுத்தவர்களைத் திருப்திப்படுத்தவே நம்முடைய சக்தியையும், வாழ்க்கையையும் செலவழிக்கிறோம்.

இதனால் ஒவ்வொருவர் வாழ்க்கையும் அடுத்தவர் கையில் இருக்கும் டிவி ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆட்டுவிக்கப்படும் டி.வி.போல் ஆகிவிடுகிறது. மற்றவர்களுக்காக நடனம் ஆடவும், அவர்களின் மகிழ்ச்சிக்காக நம்மை கஷ்டப்படுத்திக் கொள்வதிலும் நம்முடைய நாட்கள் கழிகின்றன.

> முதலில்
> உங்களுக்காக
> வாழ
> ஆரம்பியுங்கள்.

இதனைத் தொடர்ந்து மற்றவர்களின் தேவைக்கேற்ப ஆட்டுவிக்கப்படுகிறோம். மற்றவர்களின் சிறு சிறு மகிழ்ச்சிக்காக, நம் வாழ்வின் பெரும் பகுதியைச் செலவழித்து விடுகிறோம். இதையேதான் எல்லோரும் எல்லோருக்காகவும் செய்கிறார்கள் என்பது விந்தை.

திருப்தியற்ற நிலையிலிருக்கும் ஒருவரால் எவ்வளவு உதவ முடியும். உண்மையில் நீங்கள் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று ஆழமாக விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் திருப்தியுடன் முதலில் வாழ ஆரம்பியுங்கள்.

உங்களுக்கான வாழ்வை நீங்கள் வாழும்போதுதான், வாழ்ந்த திருப்தியை அடைவீர்கள்.

இது சுயநலம் அல்ல. உண்மையாகவே மனித குலம் வாழ ஆரம்பிப்பதற்கான தீர்வு. முதலில் நீங்கள் திருப்தியாய் வாழ வேண்டும். அப்புறம்தான், அதை மற்றவர் களுக்குள்ளும் உருவாக்கும் ஜீவன் முக்தராக முடியும். முதலில் உங்களுக்காக வாழ ஆரம்பியுங்கள்.

நீங்கள் உலகையே நேசிக்கத் தேவையில்லை

You need not to love the whole world

உலகை நேசிக்க விரும்புகிறீர்களா? முதலில் பக்கத்து வீட்டுக்காரர்களை நேசிக்கத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்கள்தான் நம் கண் முன்னே நிதர்சனமாக நிற்கும் தெய்வங்கள். அவர்களுக்கு உடனடியாக ஏதாவது செய்ய முடிந்தாலே போதும்.

பிறருக்குப் பயனுள்ளதாக நாம் ஏதாவது செய்யாத வரை, "நான் அன்பு நிறைந்தவன், பாசம் மிகுந்தவன்," என்று சொல்வதெல்லாம் வெறும் வாய் வார்த்தைகளே!

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் தன்னிறைவு அடையாத ஒருவரால் மற்றவர்களுக்கு உதவ முடியாது. உங்கள் சக்தி முழுவதையும் உங்களுக்குள்ளே பாய்ச்சுங்கள்.

> உங்கள் கவனத்தை
> யார் மீதும் திருப்ப
> வேண்டாம். யாருடைய
> கவனத்தையும் நீங்கள்
> ஈர்க்க வேண்டும்.

உங்களது கவனத்தை யார் மீதும் திருப்ப வேண்டாம். யாருடைய கவனத்தையும் நீங்கள் ஈர்க்க வேண்டாம். உங்களின் திருப்திக்காக வாழுங்கள். உங்கள் செயல்களில், அதன் அனுபவங்களில் தன்னிறைவு காணும் வரை முழுமையாக வாழுங்கள். இவ்வாறு வாழும் பொழுது உங்களை அறியாமல் மற்றவரை முழுமையாக நேசிக்கத் துவங்கிவிடுவீர்கள். அப்போது உண்மையில் உங்களை நீங்களே நேசித்துக் கொண்டிருப்பீர்கள்.

உலகத்தையே நேசிக்கப் புறப்படும் முன், உங்களை அன்போடு அணுகி உங்களுடனேயே வசிக்கும் ஜீவன்களை முழு அன்போடு அணுகும் ஜீவனாகுங்கள்.

நேசத்தின் ரகசியம்

எல்லோரையும் நேசியுங்கள் என்கிறீர்களே, எதிராளியை நேசிப்பது எப்படி? சொல்லுங்கள்...

எதிராளியை நேசிக்கத்தான் அன்பு வேண்டும். நண்பனை நேசிக்க அன்பு தேவையில்லை.

தடவிக் கொடுத்தால் நாய்கூட அன்பாய் வாலாட்டும்.

ஏற்கெனவே நம்மோடு சுமுகமாய் இருப்பவரை நேசிப்பது மட்டும் நேசமல்ல.

எதிராளியைக்கூட நேசிப்பதுதான் நேசம்.

கவன ஈர்ப்பு ஒரு வகை போதை

Attention need is a kind of kick

நமது
அன்பு,
காதல்,
பாசம்

எல்லாமே திருவோடு ஏந்திய கதைதான்.

ஒவ்வொருவரும், ஒவ்வொருவர் முன்பு நின்று இவற்றை பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

"எனக்கு அன்பு செலுத்துகிறாயே! என்னைக் கவனித்துக்கொள். பாசமோடு பேசமாட்டாயா?" என்று மற்றவர்களிடம் கேட்கும் அளவிற்கு நீங்கள் குறைந்து விடவில்லை; உங்களிடமே அவை இல்லாமலும் இல்லை. அதனால் இந்த எதிர்ப்பார்ப்பே தேவை இல்லாதது.

ஒவ்வொருவரும் மகாராஜாக்கள், மகாராணிகள் போன்று வாழ பிறந்தவர்கள் என்ற உண்மை தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சில உறவுகளில் வேடிக்கையான விஷயங்களும் நடைபெறு வதுண்டு. மாமியாரும் மருமகளும்; மனைவியும் கணவனும்; காதலனும் காதலியும் வாழ்க்கை முழுவதும் ஓயாது சண்டை போடுவார்கள். அவ்வளவு சண்டை போட்டாலும் அவர்கள் பிரிந்து விடுவதில்லை.

ஜீவன் முக்தி
அன்பெனும்
தேவதையாய்ப்
பொங்கட்டும்.

சண்டையின் உச்சத்தைப் பார்த்தால் ஏதோ மிகப் பெரிய விபரீதம் ஏற்பட்டு விட்டது போல தோன்றும். அவர்களுக்குள் இருக்கும் உறவே உடைந்து விட்டாற் போன்று இருக்கும். ஆனாலும், ஒருவரை விட்டு ஒருவர் பிரியவே மாட்டார்கள். காரணம் இது மாதிரியான சண்டைகள் அவர்களுடைய எதிர்பார்ப்பை நிறை வேற்றுகிறது. கவனத் தேவையைப் பூர்த்தி செய்கிறது. அவர்களுடைய இருப்பின் முக்கியத்துவத்தை மற்றவர்களுக்கு உணரச் செய்யவே பெரும்பாலான சண்டைகள் நடைபெறுகிறது. அவர்களிடையே இருக்கும் சலிப்பு, உச்சத்திற்குச் சென்றுவிடாமல் இதுபோன்ற ச ண்டைகள் காத்துக் கொண்டு வருகிறது. சண்டையின் மூலம் மேலும் மேலும் கவனத்தேவை பூர்த்தியடைவதையே விரும்புகிறார்கள்..

இப்படிக் கவனத்தை எதிர்பார்ப்பது கூட, ஒருவகையான போதைதான். இந்தப் போதை, சிலருக்குச் செயற்கையான சக்தியைக் கொடுக்கலாம். ஒருவர் தம் மொத்த வாழ்க்கையையும் பிறருடைய மையத்தில் வைத்திருப்பதால்தான், தம்மிடம் ஏதும் இல்லாதவர்களாக, வெறுமையாக உணர்கிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழ்வதே இல்லை.

நீங்கள் உங்களுடைய உணர்வில் மையம் கொள்ளும்போது, நாம் வெளியில் எதையும் தேடத் தேவையில்லை என்பதைப் புரிந்துகொள்வீர்கள். சுபாவத்தாலேயே எதையும் கேட்டுப் பெறுவதற்குத் தேவையே இல்லாதவர்கள் நீங்கள்.

கொட்டிக் கொட்டிக் கொடுக்கப் பிறந்த கோடீஸ்வரர்கள் நீங்கள். அவ்வளவு சக்தி, அன்பெனும் தேவதையாக உங்களுக்குள் உறங்கிக் கொண்டிருக்கிறது. கோடி 'ஈஸ்வரர்' களில் ஒருவர். இப்படி இருப்பார்கள்.குறைவில்லாது கொடுக்கும் அந்த ஒருவர் வேறு யாருமல்ல

நிச்சயமாக, நீங்கள்தான்!

உங்களிடம் இல்லாதவற்றைப் பற்றி கவலைப்படாதீர்கள். இருக்கும் அன்பையும், பாச த்தையும் தரத் துவங்குங்கள். கொடுப்பவராக மாறுங்கள். ஜீவன் முக்தராக வாழுங்கள். அன்பெனும் தேவதை அருவியாய்ப் பொங்கட்டும்.

குழப்பத்தின் ரகசியம்

  • குழப்பம்?

'தெளிவடைய ஆரம்பித்திருக்கிறீர்கள்' என்பதின் அறிகுறி.

  • அப்படியா...?

மந்தமாயிருக்கும் போதும், மதியுகமாய் செயல்படும் போதும் குழப்பம் வராது.மந்தத்திலிருந்து மதியுகம் நோக்கி உங்களின் குணம் நகர்கையில், நீங்கள் சந்திப்பதுதான் 'குழப்பம்' என்னும் படிக்கட்டு!

  • குழப்பத்திற்குத் தீர்வு?

குழப்புவதைக் குழப்புங்கள்.

  • அப்படியென்றால்...

குழப்பம் உருவாகக் காரணமாக இருப்பதை மனத்துக்குள் குறுக்கு விசாரணை செய்யுங்கள். குழப்புவது குழம்பிப்போகும்!