KAILASA Library/ஜீவன் முக்தி/சக்கரங்கள்Sign in
ஜீவன் முக்தி

சக்கரங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

உள்ளுலக சக்திக் கேந்திரங்கள்

நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முதல் விஷயம்...

உண்மையிலேயே சக்கரங்கள் இருக்கின்றனவா அல்லது அவை வெறும் நம்பிக்கைதானா?

கிர்லியன் போட்டோகிராபி

5 வருடத்திற்கு முன்னால் இது வெறும் நம்பிக்கையாகத்தான் இருந்தது. ஆனால், இன்று கிர்லியன் போட்டோகிராபி (Kirlean Photography) என்று புதுவிதமான புகைப்படம் எடுக்கும் கருவி வந்துள்ளது, X-Ray மாதிரி அதுவும் ஒரு புகைப்படம் எடுக்கும் கருவி.

எப்படி X-Ray நம் எலும்புகளைப் படம் பிடிக்குமோ, அதுபோல் கிர்லியன் போட்டோகிராபி, நம் உடலிலிருந்து வரும் ஒளியைப் படம்பிடிக்கிறது.

கிர்லியன் போட்டோகிராபியைப் பயன்படுத்தி, நம் உடலிலிருந்து வெளிப்படும் ஒளியைப் படம் பிடித்து, நம் உடலில் சக்தி மையங்கள் இருப்பதை மிகத் தெளிவாக, அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள். கிர்லியன் போட்டோ கிராபியின் பயன் பற்றி முதலில் சொல்கிறோம். ஒருவருக்குக் கேன்சர் இருக்கிற தென்றால் அவருக்கு அந்தக் கேன்சர் வருவதற்கு 6 மாதத்திற்கு முன்பே தனக்கு வரக்கூடிய வியாதிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். எவ்வளவு விரைவில் வரும் என்பதைக் கூட கணித்து விடுவார்கள்.

உதாரணமாக, ஒருவருக்குக் கழுத்தில் கேன்சர் வரப்போகிறது என்றால், குறைந்த பட்சம் 6 மாதத்திற்கு முன்பே அவருடைய கழுத்துப் பகுதியில் இருக்கிற ஒளிமங்க ஆரம்பிக்கும். உடலில் வெளிப்படும் ஒளி உடலில் பிரச்சினையாக இருக்கும் பொழுதே கண்டுபிடித்துச் சரிசெய்துவிட்டோம் என்றால், உடனே அந்தப் பிரச்சினையைச் சரிபடுத்திவிட முடியும்.

இந்தக் கிர்லியன் போட்டோகிராபி, ஒளி உடலில் ஏற்படும் மாற்றங்களைக் குறைபாடுகளை நமக்குப் படம் எடுத்து தந்துவிடுவதால் நமக்கு வரக்கூடிய பல வியாதிகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளமுடியும்.

7 சக்கரங்கள்

நமது மனம், ஆனந்தமாகவும் இனிமையாகவும் இருக்கும்போது, நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்கள் கார் சக்கரத்தின் அளவுபோன்று பெரிதாகயிருக்கும். அதே மனம்,

துக்கமாகவும மந்தமாகவும் இருக்கும்போது அதே சக்கரங்கள் சட்டையின் பட்டன் அளவிற்குச் சுருங்கிப் போய்விடும். இதிலிருந்து, ஆனந்தமான மனநிலையே வியாதிகளைப் போக்கிவிடும் என்ற உண்மை தெளிவாகப் புரிகிறது.

நம் மனத்தின் இருப்புநிலைக்குத் தகுந்தாற்போல், இந்தச் சக்கரங்கள் விரிந்தும் சுருங்கியும் இருப்பதை அறிவியல் பூர்வமாக இந்தக் கிர்லியன் போட்டோ கிராபி மூலமாக நிருபித்திருக்கிறார்கள்.

சக்கரங்களை மட்டுமல்ல கை விரல்களிலிருந்தும் பொங்கும் சக்தியைய்கூட படம் பிடிக்க முடியும் என்பதைக் காட்டும் படம்

நம் உடலில் 7 சக்தி மையங்கள் இருக்கின்றன. நமது உடல், மன, உணர்வு ரீதியான மாற்றங்களை இந்தச் சக்கரங்கள்தான் கவனிக்கின்றன என்பதை இன்று விஞ்ஞானப்பூர் வமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

சக்கரங்கள் என்றால், உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் என்று சிலர் நினைப்பது உண்டு. ஆனால், ஹார்மோன்கள் சக்கரங்கள் கிடையாது.

அந்தச் சுரப்பிகளை இயக்கக்கூடிய சக்திதான் சக்கரங்கள்.

சக்கரங்கள், நம் உடலின் நுட்பமான சக்தியின் கூட்டு சக்திக் களஞ்சியங்கள். முக்கியமான 7 சக்கரங்கள்: மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாஹதம், விசுத்தி, ஆக்ஞா, ச ஹஸ்ராரம்

மனித உடலிலிருந்தும், உயிரினங்களிலிருந்தும் வெளிப்படும் சக்தியைத் தாண்டி இலைகளில் கூட வெளிப்படும் சக்தியை காண்பிக்கும் பட

நம்முடைய ஸ்தூல உடலில் இவற்றிற்குத் தனியாக இடங்கள் இல்லையென்றாலும், உடல் நீளத்திற்கும் இந்தச் சக்தி மையங்கள் இருக்கவே செய்கின்றன.

இந்தச் சக்கரங்கள், நமது உடல், மனநலங்களுக்குப் பெரிதும் துணை செய்கின்றன. அதே சமயம் நமது எண்ணங்களும் உணர்வுகளும் இவற்றைப் பாதிக்கவும் செய்கின்றன. பிரபஞ்சத்தின் எல்லையற்ற சக்திக்கு, இவை நேரடி வாய்க்கால்களாகவும் அமைந்துள்ளன.

இயல்பிற்கு மாறான நமது வாழ்க்கை முறையும், இறுக்கமும், எதிர்மறை உணர்வுகளும் சக்கரங்களைப் பூட்டிவிடக் கூடியவை: அவற்றைச் செயலிழக்கவும் செய்துவிடக் கூடியவை. இவற்றைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், முக்கியமான சக்தி வாயில்களை, இவை தொடர்ந்து அடைத்து விடுகின்றன.

சக்தியே உடல்நலம்.

கடல் வாழ் மீன்களிலிருந்தும், வெளிப்படும் சக்தியைக்கூட படம்பிடிக்க முடியு

கடல் வாழ் மீன்களிலிருந்தும், வெளிப்படும் சக்தியைக்கூட படம்பிடிக்க முடியு

அதனால்தான் ஒவ்வொரு சீர்கேட்டிற்கும் உரிய ச க்கரத்தைத் தூய்மைப்படுத்திச் சக்தியூட்டுவதன் மூலம், நமது உடல், மனச் சீர்கேடுகளைக் குணப்படுத்த முடிகிறது. முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியாகவோ குணப்படுத்திவிட முடிகிறது. ஒவ்வொரு சக்கரமும், நமது மனத்தில், ஒரு குறிப்பிட்ட குணத்தோடு தொடர்புடையது. இந்தச் சக்கரங்களில் கவனத்தை செலுத்தினாலே நம் குணங்கள் தெய்வீகமாகிவிடும்.

உதாரணத்திற்கு, இதயச்சக்கரம் என்று சொன்னால், அன்பு எனும் சக்தியோடு தொடர்புடையது.

அதனால்தான் தமிழில் மட்டுமல்ல, எல்லா மொழிகளிலேயும் அன்பு, இதயம் இரண்டுமே ஒரே பொருளைக் குறிக்கும் இரண்டு வார்த்தைகளாகக் குறிக்கப்படுகிறது.

'இதயமே இல்லை' என்றால் என்ன அர்த்தம்? அன்பே இல்லை என்று அர்த்தம். உதாரணமாக ,10 வருடம் கழித்து நீங்கள், உங்கள் நெருங்கிய நண்பரை ரயில்நிலையத்தில் திடீரென சந்தித்தீர்கள் என்றால், திடீரென்று ஒரு அன்பான உணர்வு இதயத்திலிருந்து பொங்கும். இதுவே கடன்காரரைப் பார்த்தீர்கள் என்றால், கவலை அடியிலிருந்து பொங்கும்.

ஏனென்றால் வயிறு, கவலையோடு, மணிபூரகச் சக்கரத்தோடு தொடர்புடையது. ஒவ்வொரு உணர்வும், ஒவ்வொரு சக்கரத்தோடு தொடர்புடையது. முக்கியமாக, ஏதாவது தாங்கமுடியாத செய்தியைக் கேட்டவுடனேயே, முதல் அடி வயிற்றுக்குத்தான் விழும், வயிறு கலங்கும். வாந்தி வரும். அதனால்தான் சொல்கிறோம்,

"என்னால் இதை ஜீரணிக்க முடியாது," என்று.

வயிறு, கவலையோடு நெருக்கமான
தொடர்புடையது. கவலை, மணிபூரகச்
சக்கரத்தோடு தொடர்புடையது. மூலாதாரச்
சக்கரம், காமத்தோடு தொடர்புடையது.
இதுபோன்றுஒவ்வொருசக்கரமும்,ஒவ்வொரு
உணர்வோடு தொடர்புடையது. அந்த
உணர்வைத் தெளிவாக இயக்கத் தெரிந்தால்,
இனிமையாக வைத்திருப்போமானால்,
அந்தச் சக்கரம் ஒழுங்காக இயங்கத்

ஏழு சக்ரா வரைபடம் (நம்முள் உள்ள ஏழு சக்தி மையங்கள்)

ஏழு சக்ரா வரைபடம்

சஹஸ்ராரம் ஆக்ஞா விசுத்தி அனாஹதம் ஆனந்த கந்தத்திற்கான வழி மணிப்பூரகம் சுவாதிஷ்டானம் மூலாதாரம்

சக்கரம்சக்கரம் அமைந்திருக்கும் இடம்சக்கரம் அடைபடுவதால் ஏற்படும் நோய்கள்சக்கரங்களுக்குரிய தியானங்கள்
மூலாதாரம்
மூலாதாரம்

| முதுகுத் தண்டுவடத்தின் கீழ் நுனிப்பகுதியில் அமைந்துள்ளது. | கேன்சர், போதைப் பழக்கங்கள் சிஸ்ட்(கட்டிகள்), மாதவிடாய்ப் பிரச்சினைகள், மூளைக்கட்டிகள், கீழ்முதுகுத் தண்டுப் பிரச்சனைகள், இரத்த சோகை, மயக்கம். | துக்கஹரணா தியானம் | | சுவாதிஸ்டானம்

சுவாதிஸ்டானம்

| தொப்புளுக்கு இரண்டு அங்குலம் கீழே அமைந்துள்ளது. | அட்ரினல் சுரப்பி பிரச்சனைகள், அடிவயிறு தசைப்பிடிப்புகள் அபெண்டிசைட்ஸ்(குடல் வால் அழற்ச்சி), இரத்த வயிற்றுப் போக்கு. | நிர்பயத் தியானம் (இருள் தியானம்) | | மணிப்பூரகம்

மணிப்பூரகம்

| தொப்புளுக்கு ஒரு அங்குலம் மேலே அமைந்துள்ளது. | அஜீரணம், மலச்சிக்கக்கல், இரைப்பை பிரச்சினைகள், அல்சர், வாய்துர்நாற்றம், ஈரல் பிரச்சினைகள், தோல் சம்மந்தமான வியாதிகள், சர்க்கரை வியாதி, இரத்த சம்மந்தமான நோய்கள். | மணிப்பூரக சுத்திக் கிரியா | | அனாஹதம்

அனாஹதம்

| மார்புக்கு மத்தியில் அமைந்துள்ளது. | இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, மாரடைப்பு, வேனல் கட்டிகள், மார்பகப் பிரச்சினைகள், சைனஸ், குடல் இறக்க நோய். | மஹா மந்திரம் | | விசுத்தி

விசுத்தி

| தொண்டைக் குழியிலே அமைந்துள்ளது. | ஆஸ்த்துமா, மூச்சுத் திணறல், தைராய்ட், சுளுக்கு. தொண்டைப் புண், சுவாசம் சம்மந்தப்பட்ட வியாதிகள், சளி, இருமல், நிமோனியா. | சக்தி சாகர தியானம் | | ஆக்ஞா

ஆக்ஞா

| இரண்டு புருவங்களுக்கு இடையே அமைந்துள்ளது. | கண் சம்பந்தமான பிரச்சனைகள், முட்டிசம்பந்தமான பிரச்சினைகள், நரம்பு மண்டல பிரச்சினைகள், காச நோய். | திவ்ய நேத்ரா தியானம், ஹாஸ்ய தியானம். | | சகஸ்ராரம்

சகஸ்ராரம்

| உச்சந்தலையிலே அமைந்துள்ளது. | மூளை கோளாறு, மன அழுத்தம் சலிப்புத் தன்மை, ஒற்றைத் தலைவலி தூக்கமின்மை, உடல் அயர்ச்சி, சுறுசுறுப்பற்ற தன்மை. | நித்ய தியானம். |

தொடங்கும். அப்படி இல்லை என்றால் அந்தச் சக்கரம் மந்தத்தன்மையில் இருக்கும். இந்த உணர்வைப் பற்றிய ஆழமான உண்மைகளைத் தெரிந்து கொண்டாலே பிரச்சி னைகள் எல்லாம் தீர்ந்துவிடும்.

நித்யானந்த ஸ்புரணம் தியான அனுபவ முகாம் (NSP) மற்றும் ஆனந்த ஸ்புரணம் தியான முகாம்களில் கற்றுத் தரப்படும் மேற்கண்ட தியானங்களில், எதை எதை எல்லாம் புத்தகத்தின் மூலமாகவே தந்துவிட முடியுமோ, அதை எல்லாம் இந்தப் புத்தகத்தில் தந்துவிட்டோம்.

நிர்பயத் தியானம் போன்ற ஒரு சில தியானங்களை ஆச்சார்யாரின் உதவியோடு, குரு சாந்நியத்தில் மட்டுமே கற்றுக் கொள்ள இயலும்.

> நித்ய தியானம்
> செய்பவரின்
> ஆரோக்கியமும்
> ஆனந்தமும்
> அதிகரிக்கும்

இதற்கு வெறும் நான்கு நாட்கள் உங்களின் உடலையும், மனத்தையும் தயார் செய்தாலே போதுமானது. பல வருடத் தவங்களின் விளைவாக ஒருவருக்கு அடையக்கூடிய ஆன்மீக அனுபவங்கள், தரிசனங்கள் மற்றும் ஞானமுதிர்ச்சியை இந்த இரண்டு நாட்களிலேயே மக்கள் அனுபவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கிர்லியன் போட்டோ கிராபியைவிட அதி நவீனமாக வந்திருக்கும் PIP என்னும் சக்திப் படப்பிடிப்பு கருவி மூலமாகச் செய்யப்பட்ட சக்தி ரீதியான ஆராய்ச்சி இது.

சக்திரீதியான ஆராய்ச்சி

நித்யானந்த ஸ்புரண தியான முகாமில் கலந்து கொண்டு தொடர்ந்து நித்ய தியானம் செய்பவரின் ஆரோக்கியமும், ஆனந்தமும் எவ்வளவு அதிகரிக்கிறது என்பதை சக்திரீதியாக விளக்கும் படம் இது.

அடுத்து நாம் பார்க்க போகின்ற 7 உணர்வுகள் பற்றிய ஞானகருத்துக்கள் நம்முடைய ஏழு சக்கரங்களையும் சக்தியூட்டும் அன்பு, கவலை, பயம், கற்பனை, பொறாமை, அகங்காரம், நன்றி என்ற ஏழு அத்தியாயங்களும் சக்கரங்களைச் சீர்படுத்தும் சத்யங்களைக் கொண்டவை.

தியானத்திற்கு முன் மற்றும் பின்

தியானத்திற்கு முன் தியானத்திற்கு பின்