ஆரோக்கியம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
உடலும், வாழ்வும் ஆரோக்யமாக...
For body and mind to become healthy...
ஐம்புலன்களில் ஆரோக்கிய சேமிப்பு
ஐம்புலன் அடக்கம் ஆபத்தில் முடியும் Suppression of the five senses will result in danger
இந்திரியங்களைத்தான் கட்டுபடுத்தவேண்டும். புலன்களையல்ல. It is the indriyas that need to be controlled, not the senses
உங்களுக்கு ஐந்து அல்ல; ஐந்நூறு புலன்கள் இருக்கிறது You have not 5 but 500 senses
புலன்களுக்குச் சுதந்திரமா? புலன்களிலிருந்து சுதந்திரமா? Freedom for senses? or Freedom from senses?
ஐம்புலன்களில் சக்தியைச் சேமிக்கும் உபாயம் Techniques to energise the five senses
ஆரோக்ய தியானம்
'ஆரோக்கிய சாகரா' - உடலைக் குணப்படுத்தும் தியானம் Arogya sagara - Meditation that heals the body
ஆரோக்யம்
உங்களுக்கு உதவ ஒரு கூட்டமே இயங்கிக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு உதவத்தான் உடல்கூட இயங்கிக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் விடுங்கள், பிரபஞ்சம் இயங்குவதே எதற்கு? உங்களுக்காகத்தான்!
உடலும், வாழ்வும் ஆரோக்யமாக...
For body and mind to become healthy...
பிடதி ஆஸ்ரமத்திற்கு வந்திருந்த பக்தரொருவர், மிகவும் பணிவாய் என்னிடம் கேட்டுக்கொண்டார், "நான் மிகவும் மோசமாய் வாழ்ந்தவன். நானெல்லாம் இந்தப் புனிதமான தியான மண்டபத்திற்குள் வரலாமா, தியானம் செய்யலாமா?"
அவர் மிகவும் மோசமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தவர். தம்மைத் திருத்திக் கொள்ளும் நோக்கோடு தியானமுகாமிற்கு வந்திருந்தார். மனத்தில் உண்டான காயங்களைப் போக்குவதுதான் ஆன்மீகம் என்பதை அவர் உணர்ந்திருக்கவில்லை.
அவரிடம், "நோயாளி மருத்துவமனைக்குச்
செல்லலாமா?" என அவரையே திருப்பிக்
கேட்டோம்.

"அவர்களுக்காகத்தானே, மருத்துவமனையே
இருக்கிறது," என பதிலளித்தார். "உங்களிடம்
ஒருவர். 'நான் மிகவும் மோசமான உடலை
வைத்திருப்பவன்.
நானெல்லாம் இவ்வளவு சுத்தமான மருத்துவமனைக்குள் வரலாமா?' என்று கேட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டோம்.
"சிரிப்பேன்," என்றார். நானும் அவரைப் பார்த்துச் சிரிக்க... அவரும் என்னைப் பார்த்துச் சிரித்தார். அவர் என்ன மனபாரத்தோடு அங்கு வந்திருந்தாரோ, அது மொத்தமும் அந்த வினாடியில், அவரை விட்டுக் கரைந்தது என்றார்.
அவர் கேட்டார், “அப்படி நீங்கள் என்ன செய்தீர்கள்? எவ்வளவோ மருந்து சாப்பிட்டும் என்னால் வெளிவர முடியாத மனஉளைச்சலில் இருந்து நொடியில் வந்துவிட்டேன்.
எப்படி இது சாத்தியம்? என்னாலேயே இதை நம்ப முடியவில்லையே.’’
அப்போது அவரிடம் சொன்னோம்,
“இரண்டு விஷயங்கள் நடந்தது. ஒன்று...
உங்களின் மனக்காயம் குணப்படுத்தப்பட்டது.
இரண்டாவது... உங்களுக்குள் இருந்த ஆனந்த
உணர்வை அந்த நிமிடம் பொங்க வைத்தது.
> கிருஷ்ணர் மிக அழகாகச்
> சொல்கிறார். “ஸம்பவாமி
> யுகே! யுகே!’’ எப்போதெல்லாம்
> அதர்மம் தலை தூக்குகிறதோ
> அப்போதெல்லாம் உங்களை
> ஜீவன் முக்தர்களாக்க
> நான் வந்து கொண்டே
> இருப்பேன். மனித குலத்தைக்
> காப்பாற்றிக்கொண்டே
> இருப்பேன்.
ஒரு ஞான சத்குருவால், ஒருவருக்குள் பலநாட்களாக அடைபட்டு இருக்கும் ஆனந்த ச க்தியைப் பொங்க வைக்க முடியும். ஒரு சிறுகதை மூலமாக, ஒரு சத்தியத்தின் மூலமாக, தீக்ஷை மூலமாக, ஒரு தியானத்தின் மூலமாக இதை குருசக்தியால் செய்துவிட முடியும்.
இப்போது உங்களுக்குள் நிகழ்ந்தது அதுதான்.’’
உண்மையாகவே, மொத்தப் பிணியிலிருந்தும் நம்மை விடுவிக்க ஒரு ஞானியால்தான் முடியும்.
அடைபட்டிருந்த ஆனந்தசக்தி பொங்கத் துவங்கினாலே, மன உளைச்சல் மட்டுமல்ல, மூட்டுக் குடைச்சலிலிருந்து, கேன்சர் வரை சரி செய்துகொள்ள முடியும். எங்கும் தங்கு தடை இல்லாமல் இந்த ஆனந்த சக்தி பாய்ந்தோடினால், அவர் ஜீவன் முக்தி நிலையில் வாழ்வதோடல்லாமல், மற்றவர்களுக்குள்ளும் ஜீவன் முக்தி மலர உதவ முடியும்,’’ எனச் சொன்னோம்.
மேலும், அவரிடம் இந்த அருமையான கதையைச் சொன்னோம்.
ஒரு சின்ன கதை.....
வழிப்போக்கர்: “இன்னும் எவ்வளவு காலம் நீங்கள் வாழ்வீர்கள்?’’
ஜென்ஞானி: “எழுபது வருடங்கள்.’’
வழிப்போக்கர்: “அப்படியானால் எழுபது வருடங்களுக்குப் பிறகு எங்கே செல்வீர்கள்? என்ன செய்வீர்கள்?’’
ஜென்ஞானி: “ஒரு குதிரையாகவோ, மயிலாகவோ பிறப்பேன்.’’
வழிப்போக்கர்: “அதற்குப்பிறகு? எங்கே செல்வீர்கள்?’’
ஜென்ஞானி : “அதற்குப் பிறகா? அநேகமாக பூமிக்கு வராமலே, நரகத்திற்கு சென்று விடுவேன் என நினைக்கிறேன்.’’
வழிப்போக்கர்: "நரகத்திற்கா! நீங்கள் எவ்வளவு பெரிய மகான்! எவ்வளவு நல்லவர்!
நீங்களெல்லாம் போய் ஏன் நரகத்திற்குச் செல்ல வேண்டும்!?"
ஜென்ஞானி: "நரகத்திலிருப்பவர்களுக்கு, தியானம் போதிக்க நான் முன்வரவில்லையென்றால், வேறுயார் முன்வருவார்களாம்.? அவர்களை யார் காப்பாற்றுவதாம்..? சொல்லுங்கள்...;" என்று ஜென்ஞானி பேசி முடிக்கவேயில்லை, வழிப்போக்கர் உருகிப்போய்விட்டார். அவரின் உள்ளம் அப்படியே கரைந்து விட்டது. உண்மையில், நம்மைக் காப்பாற்ற, ஒரு ஞானியை விட்டால் வேறுயாரால் முடியும்?
'மற்றவர்களுக்காகவே வாழும் ஞானிகள், இந்த உலக வாழ்க்கையை மட்டும் தியாகம் செய்ததோடல்லாமல், மறுஉலக வாழ்க்கையையும்கூட தியாகம் செய்கிறார்களே! இப்படி யோசிக்கவே என்ன கருணை பொங்க வேண்டும்! என்ன தாயுள்ளம் வேண்டும்!' என்று உணர்வு பொங்க யோசித்த வழிப்போக்கர், நன்றி பொங்கும் கண்ணீர்ப் பெருக்கோடு

ஞானியை வணங்கினார். வெளியே
'மழை' கொட்டத் துவங்கியது! என
அந்தக் கதை முடிவடைகிறது. ஒரு
ஞானியின் கருணையும், தியாகமும்
கல்லையே கரைத்துவிடும். அவரால் நம்
துக்கத்தைக் கரைக்க முடியாதா?
இந்த ஜென் கதையைக் கேட்டு முடித்தபோது, அந்த வழிப்போக்கருக்குள் மிகப்பெரிய மாற்றம் நடந்தது, தியான அரங்கத்திற்குள் வரும்போது இருந்த தாழ்வு உணர்ச்சியில் இருந்து விடுபட்டு, கைகளைக் கூப்பி வணங்கியபடியே உரிமையோடு நம்முடைய தியான மண்டபத்திற்குள் சென்று உட்கார்ந்தார். அப்போது அவரின் உடலுக்கு மட்டும் புதுத்தெம்பு பாய்ந்திருக்கவில்லை. வாழ்வே புதுத் தெம்பு பெற்றிருந்தது! இவருக்குள் இவ்வளவு பெரிய மாற்றத்தை ஒரு எதிர்பாராத ஞானத்திருப்பம் செய்துவிட்டது.
அதேபோல், இந்தப் புத்தகத்தில் எந்த வரியின் முடிவிலும் அந்த ஞானத்திருப்பம், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் நிகழலாம். ஞானத்திருப்பங்கள் ஆனந்தத்தைப் பொங்க வைப்பதனாலேயே, உங்களுக்குள் ஆரோக்கியத்தையும் பொங்க வைக்கும். எனவேதான் சொல்வதுண்டு,
"மருந்து முதலில் நோயாளிக்குத்தான். தியானம் முதலில் மனக்குறைபாடுகள்
> ஞானத்திருப்பங்கள்
> ஆனந்தத்தைப் பொங்க
> வைப்பதனாலேயே
> உங்களுக்குள்
> ஆரோக்கியத்தையும்
> பொங்க வைக்கும்
உடையவர்களுக்குத்தான்." இன்னும் ஆழ்ந்து வரலாற்றை ஆராய்ந்து பார்க்கையில், ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பல தியானங்களைப் பயன்படுத்தப்போகும் மனிதர்கள், இன்னும் உருவாகவேயில்லை எனத் தெரியவருகிறது.
அதேபோல் இன்றைய கால கட்டத்தில்,இருக்கும்
மனிதர்களுக்குத் தேவையான தியானங்கள் பலவற்றையும் அதே ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்பே எழுதி வைத்திருக்கிறார்கள். அந்தத் தியானங்களைத்தான் இன்றைய மக்களுக்குப் பல இயக்கங்கள் எடுத்துத் தருகின்றன.
அப்படியென்றால், கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்துப்பாருங்கள்.
உங்களுக்காக உதவ ஒரு கூட்டமே எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. அந்தக் கூட்டம் உங்களின் பல முக்கியப் பிரச்சினைகளுக்கு, எப்போதோ சிந்தித்துத் தீர்வcolumnங்களைத் தந்துகொண்டேயிருக்கிறது என்பது நன்றாகப் புரியவரும்.
நல்லவேளை! இந்தப் பிரபஞ்சம் மனிதகுல வாழ்வை, மனிதர்களின் கையில் மட்டுமே விட்டுவைக்கவில்லை. அப்படி மட்டும் விட்டு வைத்திருந்தால், எப்படி டைனோசர்கள், என்றோ இந்த பூமியில் இருந்து மறைந்துவிட்டனவோ, அதேபோல் மனித குலமும் மறைந்து போய்விட வாய்ப்பிருக்கிறது.
மனித குலத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான், ஜீவன் முக்தர்கள் மீண்டும், மீண்டும் பூமியில் பூக்கிறார்கள். இதைத்தான் கிருஷ்ணர் மிக அழகாகச் சொல்கிறார், "ஸம்பவாமி யுகே! யுகே!" எப்போதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் உங்களை ஜீவன் முக்தர்களாக்க நான் வந்து கொண்டே இருப்பேன். மனித குலத்தைக் காப்பாற்றிக் கொண்டே இருப்பேன் என்பதுதான் இதன் சாரம். துன்பங்களைத் தீர்க்க அவரிருக்க கவலையேன்?
ஜீவன் முக்தர்கள் பூமியில் பூப்பது உங்களின் நோய்களைக் குணப்படுத்துவதற்கும், நீ ங்கள் கேட்கும் வரங்களைத் தருவதற்கும், குழந்தை பாக்யம் பெற ஆசீர்வதிப்பதற்கும், திருமணத் தடைகளை நீக்குவதற்கும் அல்ல.
உங்களை ஜீவன் முக்தர்களாகப் பூக்க வைப்பதற்கே.
மேற்சொன்னதையெல்லாம் செய்வதற்கு ஜீவன் முக்தர்கள் தேவையில்லை. அவர்களின் சீடர்கள் போதும். இவையெல்லாம் சின்னச் சின்ன சக்தி விளையாட்டுகள். ஆனால், ஜீவன் முக்தியளிப்பது உங்களின் ஜீவிதத்தையே மாற்றுவது.
உங்களையல்ல, வாழ்க்கையையே ஆரோக்யமாக்குவது.
பூமியின் மீது ஓடியாடும் மனிதவாழ்வின் முக்கியமான பகுதிகளெல்லாம் ஏற்கெனவே காப்பாற்றப்பட்டு விட்டன. மீதமுள்ள சில பகுதிகளை வைத்துக் கொண்டுதான் மனிதர்கள், கரடி பொம்மையோடு விளையாடுவது போல, வாழ்க்கையோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பெரிய வேடிக்கைத்தான் இது!
அழகான சொற்றொடர் ஒன்று... "நல்லவேளை, உங்களது முக்கியமான வேலைகளைக் கடவுள் உங்களிடம் ஒப்படைக்கவில்லை. இரத்த ஓட்டம், நரம்பு இயக்கம், சுவாசம்... போன்ற வேலைகளை அவர் எடுத்துக்கொண்டு, யோசிப்பதை மட்டும் உங்களிடம் விட்டு விட்டார்."
வாதம பித்தம் சுபம்
சமநிலை இல்லாமல்
போனால் உடலும்
சமநிலையில்
இருக்காது. மனதும்
சமநிலையில்லாது
இருக்காது
அதனால்தான் சொல்கிறோம். உங்களைக் காப்பாற்றுவதில் உங்களைவிட அவருக்குத்தான் அதிகப்பொறுப்பு. நீங்கள் அதைத் தடுக்காமல் இருந்தாற்போதும்.
"ஒருவேளை எல்லா வேலைகளையும் உங்களிடமே கடவுள் கொடுத்திருந்தால்...?" என்ன நடந்திருக்கும். அடுத்த ஓரிரு நாட்களிலேயே அவரின் வீட்டுக்கதவைத் தட்டியிருப்பீர்கள்.
"என்னப்பா? ஏன் திரும்ப வந்தாய்?" என அவர் கேட்டால், "கடவுளே! மன்னியுங்கள்...... நேற்று ரொம்ப பிஸியா இருந்ததில் இதயத்தைத் தொடர்ந்து அழுத்த மறந்துவிட்டேன். உடல் செத்துவிட்டது," என்பீர்கள்.
இல்லாவிட்டால், "சாரி கடவுளே! நேற்று மூச்சுவிட மறந்துவிட்டேன்," என்பீர்கள்.
நன்றாக ஆராய்ந்து பார்த்தீர்கள் என்றால் புரியும், நம் உடலிலும், வாழ்க்கையிலும் நாமே இயக்க வேண்டிய பகுதி மிகக் குறைவாகவே இருக்கும்.
இது புரியாதவர்களுக்குத்தான்...
'வாழ்க்கை ஒரு பெரிய சாகசம்.
பல பிறவிகளில் ஜீவன்
முக்தியின் வாசலைத்
தொட்டுவிட்டு
வந்தவர்கள் நீங்கள்.
உடல் ஒரு பெரிய சுமை' என்பது போலத் தெரியும். அவர் கொடுப்பதையெல்லாம் கொடுத்துவிட்டார். ஆனந்தக் கூத்தாடுவதை விட வேறு என்ன வேலை!
உங்கள் வாழ்வின் பல பகுதிகளை, இயற்கையே முன்னின்று நடத்துகிறது. மனிதன் எவ்வளவுதான் கெடுத்தாலும், முடிந்த அளவு இனிதாகவே செல்லும் வகையில்தான் உடலும், வாழ்வும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஒருமுறை, "பிரபஞ்சம் எங்கே இருக்கிறது?" என ஒருவர், ஆனந்த ஸ்புரண தியானமுகாமில் கேட்டார்.
அப்போது "நீங்கள் இயங்கும்போது பிரபஞ்சம் உங்களுக்குள்ளே இருக்கிறது. நீ ங்கள் இயங்காதபோது அது இல்லை. அவ்வளவுதான், நிம்மதியாயிருங்கள்," எனச் சொன்னோம். நிஜம்தான்! நீங்கள் தூங்கும்போது உலகமே இயங்கினால்கூட, அது உங்களுக்கு அந்த நிமிடம் நிஜமில்லை. நீங்கள் இயங்காதபோது, வேறு எது இயங்கினாலும், அது உங்களைப் பொறுத்தளவிற்கு, அது நிஜமற்ற ஒன்று.
பிரபஞ்சத்தையே இயக்கிக் கொண்டிருக்கும் மையம், உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.
அது இயங்காததால்தான், உங்களின் வாழ்க்கையையே, தான் இயக்குவதாய் மனம் காட்டிக்கொண்டிருக்கிறது. நிஜத்தில் மனக்கண் மூடியிருப்பதால்தான், பிரபஞ்சத்தையே இயக்கும் உங்களின் மையம், உங்களுக்குள்ளிருப்பது உங்களுக்கே தெரியாமல் இருக்கிறது. அதனால்தான் ஞானிகள் இப்படிச் சொல்வதுண்டு... "மனக்கண் திறக்கும்போது பெரிய அதிசயம் நிகழும்."
கண்களை மூடிய பூனை, கண்ணைத் திறந்ததும் முதலில் ஆச்சரியமாய்ப் பார்க்கும். தன்னைச் சுற்றி ஒரு பெரிய உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது என்று பிறகுதான் அதற்குத் தெரியவரும்..
அதேபோல் மனக்கண் திறந்ததும், பிரபஞ்சமே உங்களை மையமாய் வைத்து இயங்குவதைக் காண்பீர்கள். இப்போது எதையெதையெல்லாம் துன்பங்கள், துயரங்கள், நோய்கள் எனக் குறிப்பிடுகிறீர்களோ... அவையெல்லாம் அப்போது இருக்காது.
வாழ்வு தித்திக்க ஆரம்பிக்கும். இதையெல்லாம் உங்களுக்கு அனுபவமாக்கும் வாழ்வியல் கலையைத்தான் தியானம், யோகம் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கி றாம். நிஜத்தில் உங்களுடைய உடல் மட்டும் நோயுற்றிருக்கவில்லை; உங்களின் வாழ்வும் நோயுற்றிருக்கிறது.
You have a diseased body" is an old story. You have a diseased Life. That has to be cured first.
வாழ்க்கை, இறை சக்தியால் பொங்கும் கங்கை போன்றது என்றாலும்; அதற்கு ஒரு குறையும் வராது என்றாலும்; நம் கையில் சிக்கிய வாழ்வு நம் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அதை நாம்தான் சரி செய்ய வேண்டும்.
உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ, ஆரோக்கியமான வாழ்வும் அவ்வளவு முக்கியம். பார்க்கமுடியாத மனம், எப்படி நம் உடலையே இயக்குகிறதோ, அதேபோல்தான், வாழ்வும் நம் உடலை இயக்குகிறது.
மனம், ஒரு பொருள். வாழ்வும் ஒரு பொருள். இரண்டும் இன்று உங்களின் அப்பாவி உடலை தங்களின் இஷ்டத்திற்கு ஆட்டிப்படைக்கின்றன. உடலும் மாட்டிக் கொண்டு விழிக்கிறது. எனவே, குணப்படுத்தப்படவேண்டியது உடல் அல்ல, வாழ்வுதான்.
தற்போது தன்னால் முடிந்த அளவிற்கு இனிமையாக இயங்கும் உடலும், வாழ்வும் முழுமையாக ஆரோக்யமடைய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டுமே.
இன்று உங்களின் கட்டுப்பாட்டுக்குள்ளும், சுதந்திரத்திற்குள்ளும் செயல்பட அனுமதிக்கப்பட்ட மனத்தை மட்டும் சரியாய் கையாளுங்கள். அதற்கு உங்களைத் தயார்படுத்துங்கள். உடலும் வாழ்வும் தித்திக்க ஆரம்பித்துவிடும்... ஆரோக்கியம் அடைய ஆரம்பித்துவிடும். உங்களுக்கு உதவ ஒரு கூட்டம் மட்டுமல்ல; பிரபஞ்சமே அதற்குத்தான் இயங்குகிறது என்பது புரியவரும்.
ஐம்புலன்களில்
ஆரோக்கிய சேமிப்பு
கண்கள், “வேண்டாம்,” என்று சொக்கச் சொக்க இரவு நெடுநேரம் வரை டி.வி பார்ப்பவர்களுக்கும்,
நாவு, “வேண்டாம்,” என்று எரிச்சலில் துடிக்க துடிக்க, காரத்தையும், உரப்பையும் உடலுக்கு அளிப்பவர்களுக்கும்,
உடல், “வேண்டாம் போதும்,” என்பதைப் பலமுறை பலவாறு சொன்னாலும், அதை மீறி அதைச் சுகத்திற்காக அழிப்பவர்களுக்கும் சொல்ல விரும்புவது....
உடல் உன்னதமானது; புலன்கள் புனிதமானவை.
பலர் இப்படி எல்லாம் சொல்வதுண்டு.... “இந்த உடல் நான் சொன்ன பேச்சைக் கேட்பதேயில்லை: இந்த உடல் என்னைப் படாத பாடுபடுத்துகிறது: நான் நினைக்கிற வேகத்துக்கு மட்டும் இந்த உடம்பு ஓடினால் நிறைய சாதித்துவிடலாம்; நான் எவ்வளவுதான் நன்றாகயிருக்க முயற்சி செய்தாலும், உடம்பு ஏதாவது ஒரு ஆசையைத் தூண்டி விட்டுவிடுகிறதே! ஐம்புலன்களும் என்னைப் பாடாய்ப் படுத்துகிறதே!” என்று புலம்புவார்கள்.
நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள், உடல் உங்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் தியாகச் சுடர்.
உடல்
உன்னதமானது
புலன்கள்
புனிதமானவை
இவையெல்லாமே உடல் எனும் உயர்ந்த வஸ்துவின் மீது, அகங்காரம் எனும் தாழ்ந்த வஸ்து கட்டிவிடும் கட்டுக்கதைகள்தான். இவையெல்லாமே அகங்காரம் எனும் தாழ்ந்த வஸ்து உடலுக்கு இழைக்கும் துரோகங்களே. உடல் உங்களுக்குத் தரும் தொந்தரவுகள் அல்ல.
உடல் சொன்ன பேச்சைக் கேட்பதில்லை எனச் சொல்வது முழுப்பொய். ‘மனிதனின் அகங்காரம் இழுத்த இழுப்புக்கெல்லாம் தன்னால் முடிந்த அளவுக்கு ஒத்துழைக்கும் தியாகி உங்களின் உடல்.’
ஏற்கெனவே நீங்கள் நினைக்கிற வேகத்துக்கும், ஆசைப்படும் அளவுக்குத் தன்னைத் தாரை வார்த்து, உங்களின் திருப்திக்காகவே உடலானது ஒத்துழைத்தாலும், அதன் மீதே மீண்டும், மீண்டும் பழியைப் போட்டுவிட்டுத் தப்பித்துக்கொள்ளும் சூழ்ச்சிக்காரன்தான் உங்களின் அகங்காரம்.
‘தூண்டிவிடுவது அகங்காரம்
அதற்கு இரையாவது உடல்’.
இன்றைய மனிதர்கள் உடலைத் தாங்கள் என்று நம்பினால் கூட பரவாயில்லை; நல்லதுதான். ஆனால், மனிதர்கள் அகங்காரத்திலிருந்து வெளிப்படும் தூண்டுதல்கள், உணர்ச்சிகள், ஆசைகள், எண்ணங்களைத்தான் தாங்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றிற்கே உடலை அழிக்கிறார்கள்.
கலியுகத்தில் மனிதர்கள் வாழ்வதில்லை;
அகங்காரங்கள்தான் மனிதர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.’’
‘‘நிற்பதும், சாப்பிடுவதும், பேசுவதும்கூட மனிதன், தன் அகங்காரத்திற்குச் செய்யும் சேவைகள்தான். மனிதன் இன்னும் வாழ ஆரம்பிக்கவில்லை. இந்த விளையாட்டைப் புரிந்துகொண்டால்தான் இதிலிருந்து விடுபடவே முடியும்.அகங்காரத்திற்குச் சேவை செய்வதை நிறுத்துங்கள். உங்களின் இனிமையை நீங்களே உணர்வீர்கள்.
மொத்தக் கட்டுரையையும் சுருங்கச் சொல்ல வேண்டுமானால்... நீங்கள் வாழ, உங்கள் உடலைக் கவனித்துக் கொள்ளுங்கள். அகங்காரத்தின் சுகத்திற்காக உடலைக் கட்டுக்குள் கொண்டு வராதீர்கள்.
ஐம்புலன்களும், உடலும் உங்களை அலைக்கழிப்பதாகச் சொல்லும் மனத்திலிருந்து விடுபடுத்திக்கொள்ளுங்கள். உங்களின் உடலும், புலன்களும் புனிதமானவை. அவற்றை அழிக்கும் செயல்களில் இருந்து விடுபடுத்திக்கொள்ளுங்கள்.
இதைத் தொடர்ந்து செய்தீர்களானால், கோடீஸ்வர நிலையையும் தாண்டிய ஈஸ்வர நிலையை, ஜீவன் முக்தி நிலையை எளிதில் அடைவீர்கள். உடலை அழிக்கும் செயல்களில் இருந்து விடுபட்டுக் கொண்டு வாழ வாழ, ஜீவன் முக்தி வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.
சக்தி சேமிப்பு யுக்தி-1
ஐம்புலன் அடக்கம் ஆபத்தில் முடியும்
Suppression of the five senses will result in danger
பூலோகத்தில் மனித குலத்திற்குக் கற்பிக்கப்பட்ட மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், புலன்களைக் கட்டுப்படுத்த ஆரம்பித்தது, அடக்க ஆரம்பித்ததுதான்.
இந்திரியங்களைக் கட்டுப்படுத்துவதா, புலன்களைக் கட்டுப்படுத்துவதா என்ற குழப்பத்தாலேயே பல தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொள்கிறார்கள் மனிதர்கள்.
புலன்களை
அடக்கினாலோ
அல்லது
வெறுத்தாலோ
ஆபத்தில்தான்
முடியும்.
இந்திரியங்கள் என்பது ஒரு சக்தி.
புலன்களை இயக்குகிற சக்தி, இந்திரியங்கள்.
இந்திரியங்கள் என்பது வேறு ; புலன்கள் என்பது வேறு.
நாம் கட்டுப்படுத்த வேண்டியது, ஒழுங்குபடுத்த வேண்டியது, இந்திரியங்களைத் தானே தவிர புலன்களை அல்ல.
புலன்களை அடக்கினாலோ அல்லது வெறுத்தாலோ ஆபத்தில்தான் முடியும். அது ஆரோக்கியமிகு ஆன்மீகத்தில் போய் முடியாது. நல்லதில் போய் முடியாது.
புலன்கள் என்பவை ஒரு கருவியே.
உதாரணத்திற்கு, ஒரு கத்தியை வைத்துக் கொண்டு அறுவைச் சிகிச்சையும் செய்யலாம்; கொலையும் செய்யலாம்; விபத்தாகவும் மாற்றலாம்!
அது, அந்தக் கத்தியை யார் வைத்திருக்கிறார்களோ, அவர்களுடைய மனப்பக்குவத்தைப் பொறுத்தது. விபத்தைத் தடுக்கக் கத்தியை ஒழித்து விட்டு, இல்லாமல் செய்து விடலாம். தவறில்லை. ஆனால், கத்தியே இல்லாமல் செய்துவிடுவதால், கொலை செய்யாமல் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், குணமளிக்கும் அறுவைச் சிகிச்சையைச் செய்ய முடியாதே! பிரச்சினைக்கு ஒரு தீர்வு பிறக்காதே!
அதுபோன்றுதான், நாம் நம் புலன்களை அழிப்பதும், அழிக்க நினைப்பதும், கத்தியையே அழிப்பதற்குச் சமமாகும். கத்தியை அழிக்கக் கூடாது. கத்தியைத் தவறான வழியில் உபயோகிப்பவர்களைத்தான் நாம் கட்டுப்படுத்த வேண்டும். எப்படி முறையாக உபயோகிக்க வேண்டும் என்ற புரிந்துகொள்ளுதலை அவர்களுக்குத் தரவேண்டும். கத்தியைக் கட்டுப்பாட்டோடு உபயோகிப்பது போன்றுதான் இந்திரியங்களையும், நாம் நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும்; புலன்களை அல்ல.
சக்தி சேமிப்பு யுக்தி-2
இந்திரியங்களைத்தான் கட்டுப்படுத்தவேண்டும்;
புலன்களையல்ல
It is the indriyas that need to be contrlled, not the senses
பகவத்கீதையில் கிருஷ்ணர் மிக அழகாக ஐம்புலன் இயக்கம் பற்றிச் சொல்கிறார். ரதத்தில் பூட்டப்பட்டிருக்கும் ஐந்து குதிரைகளும், நம்முடைய ஐந்து புலன்களுக்குச் சமம். இந்த ஐந்து குதிரைகளும் தங்களுக்குப் பிடித்த திசையில் செல்ல விரும்பினால், தேர் எந்தத் திசையில் போகும்? அந்தக் குதிரைகள் விரும்பும் திசைக்கு நம்மை இழுத்துச் செல்லும். நாம் விரும்பும் திசைக்கல்ல.
சக்தி சேமிப்பு யுக்தி-1
உடல் எனும் தேர், நாம் விரும்புவதுபோன்று இயக்கப்பட வேண்டுமானால், குதிரைகள் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
எத்தனை குதிரைகள் இருந்தாலும், அதை எளிதில் கட்டுப்படுத்தும் நுட்பம் தெரிந்திருக்க வேண்டும். அதற்கான எளிய முறைதான், கண்களுக்குக் கடிவாளத்தைக் கட்டிவிட்டு, அந்தக் கயிறை நம் கையில் வைத்துக் கொள்வது. குதிரையும் துன்புறாது. நாமும் துன்புறத் தேவையில்ராது.
கடிவாளம் குதிரையின் கண்களை பாதிக்காது. கண்களால் எவ்வளவு தூரம் பார்க்கப்பட வேண்டுமோ, அதற்கேற்றவாறு கடிவாளம் பூட்டப்பட்டிருக்கும். இங்கு கடிவாளத்தைப் போட்டிருப்பதனால், குதிரையின் கண்கள் நேரடியாக எந்தவிதப் பாதிப்பும் அடைவதில்லை.
கண்பார்வையைக் குறைக்காமல், கண்களால் பார்க்கப்படும் பாதையின் அளவைத்தான் குறைக்கிறோம்.
அதனால்தான் சொல்கிறோம். புலன்களை நாம் நேரடியாகக் கட்டுப்படுத்தவும் கூடாது. நம்முடைய இந்திரியங்களைத்தான் கட்டுப்படுத்த வேண்டும்.
புலன்கள் என்றால் குதிரை; இந்திரியங்கள் என்றால் லகான்கள், அதாவது கடிவாளம்.
இப்போது ஒரு குதிரை சண்டித்தனம் செய்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் அதை அப்படியே விட்டுவிட முடியாது. கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, அந்தக் குதிரையைக் கடிவாளம் போட்டு அடக்குவதா? அல்லது அந்தக் குதிரையின் தலையின்மீது கல்லையே போட்டு அடக்குவதா? அந்தக் குதிரையைக் கடிவாளம் போட்டு ஒழுங்காக்கினால், அதை மீண்டும் உபயோகப்படுத்த முடியும்.
> கடிவாளம் குதிரையின்
> கண்களைப் பாதிக்காது.
> கண்களால் எவ்வளவு தூரம்
> பார்க்கப்பட வேண்டுமோ
> அதற்கேற்றவாறு கடிவாளம்
> பூட்டப்பட்டிருக்கும்
கல்லைப் போட்டு அடக்க நினைத்தால் அது செத்துத்தான் போகும்.
அது மாதிரிதான் நம்முடைய ஐம்புலன்களிலும் இந்திரியங்கள் என்ற கடிவாளத்தைப் போட்டு நம்முடைய இந்திரியங்களைத்தான் கட்டுப்படுத்த வேண்டும். ஒழுங்குபடுத்த வேண்டும். அதை விடுத்து ஐம்புலன்களைக் கட்டுப்படுத்தினால் இறந்து போன நடைப்பிணங்கள் மாதிரியான வாழ்க்கையே வாழ்வோம்!!
இது ஆன்மீக வாழ்க்கை அல்ல!
தியான ஆராய்ச்சி
ஐம்புலன்களை அடக்குகிறீர்களா?
1. அளவுக்கு அதிகமாகச் சாப்பிடத்தூண்டும், சுவை இந்திரியத்தை ஒழுங்குபடுத்துகிறீர்களா? இல்லை, நாவை அதாவது புலனை அடக்குகிறீர்களா?
2. சாப்பாட்டைத் தினம் குறைக்க முயற்சித்துப் தோற்றுப் போகிறீர்களா?
3. இதேபோல் ஐம்புலன்கள் வழியாக நம்மை அலைக்கழிக்கும் இந்திரியங்களை, கட்டுபடுத்தி மனத்தை ஒழுங்குபடுத்துகிறீர்களா? இல்லை புலன்களோடு ஒவ்வொரு முறையும் சண்டையிடுகிறீர்களா? அல்லது அடக்க முயற்சித்துப் தோற்றுப் போகிறீர்களா? ஆராயுங்கள். வாழ்க்கையை ஆரோக்கியமாக்கலாம்.
4. நீங்கள் இப்பொழுது எந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்களே ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள்.
தியான யுக்தி - 3
உங்களுக்கு ஐந்து அல்ல; ஐந்நூறு புலன்கள் இருக்கிறது
You have not 5 but 500 senses
மனத்தைப் பற்றிய ஒரு அடிப்படை உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்.
நமக்குள்ளே இருக்கிற மனத்தால், எல்லாப் புலன்கள் வழியாகவும் ஒரே நேரத்தில் இயங்க முடியாது.
ஒரு மனம் ஐந்து புலன்களுக்கும் ஏற்றவாறு ஆடியாக வேண்டும். கண் ஒரு பக்கம் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு
புலனுடைய
தேவைக்கேற்றவாறு
ஈடு கொடுத்தாக
வேண்டிய நிலையில்
மனம் இருக்கிறது.
உடனே, கண்ணோடு கொஞ்ச நேரம் ஆடியாக வேண்டும். இன்னொரு பக்கம் நாக்கு அழைக்கிறது. அதன் விருப்பத்திற்கேற்றவாறு நீங்கள் ஆடியாக வேண்டும். அதற்குப் பின் உடல் அழைக்கிறது.
உடனே என்ன செய்ய வேண்டியிருக்கிறது? நடனத்தை மாற்றி உடலோடு சென்று ஆடியாக வேண்டும். அடுத்துக் காது அழைக்கிறது. காதோடு போய் ஆடியாக வேண்டும்.
ஒவ்வொரு புலனுடைய தேவைக்கேற்றவாறு ஈடு கொடுத்தாக வேண்டிய நிலையில், மனம் இருக்கிறது. நம்முடைய புலன்களுடைய எண்ணிக்கை (Quantity) அதிகமாக, அதிகமாக அது அவற்றின் இயங்குகிற தன்மை (Quality) குறைந்து கொண்டே வரும். ஐம்புலன்களுக்கும் நடுவில் சுற்றிச் சுற்றி வந்து ஆடினால், மனம் எந்தப் புலன் வழியாகவும், முழுமையாக இருக்க முடியாமல் ஒரு மந்தத் தன்மைக்குள் ஆழ்ந்து விடுகிறது. மந்தத்தன்மைக்குக் காரணம் புலன்களின் ஆர்ப்பரிப்பே.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், எந்தப் புலன் வழியாகவும் முழுமையாக இயங்க முடியவில்லை என்றால், எந்தச் சுகத்தையும் உங்களால் முழுமையாக அடைய முடியாது; அனுபவிக்க முடியாது. ஒவ்வொரு புலனையும் முழுமையாக இயக்கினால், உலகையே அனுபவிக்கலாம். எத்தனை புலன்கள் இருக்கிறது, எங்கு இருக்கிறது என்பது முக்கியமல்ல. ஒவ்வொரு புலனும் எவ்வாறு முழுமையாக இயக்கப்படுகிறது என்ற தெளிவு பிறந்து விட்டால்போதும், மந்தத்தன்மையிலிருந்து வெளி வந்து விடுவீர்கள். உலகை முழுமையாக அனுபவிப்பீர்கள்.
தியான யுக்தி - 4
புலன்களுக்குச் சுதந்திரமா?
புலன்களிலிருந்து சுதந்திரமா?
Freedom for senses? or Freedom from senses?
புலன்களைச் சுதந்திரமாக்கி இருக்கவிடச் சொல்லவில்லை. புலன்களுக்குச் சுதந்திரமளிக்காதீர்கள். புலன்களிலிருந்து சுதந்திரமாகுங்கள்.
புலன்களுக்குச் சுதந்திரம் தருவதுதான், மேலைநாட்டுச் சுதந்திரம். வெளியுலகச் சு தந்திரம். விருப்பப்படியெல்லாம் வாழும் சுதந்திரம். இது வாழும் சுதந்திரமல்ல. வீழும் சுதந்திரம்!
அந்தப் புலன்களிலிருந்தே சுதந்திரம் பெறுவதுதான், இந்நாட்டு ரிஷிகள் கண்டறிந்த உன்னத சுதந்திரம். உள்ளுலகச் சுதந்திரம். இது வாழும் சுதந்திரம் மட்டுமல்லாமல், உங்களின் வீர்யம் பொங்க, உங்களின் வல்லமைகள் பொங்க, உச்சக்கட்ட ஆனந்தம் பொங்க வாழும் தேவ சுதந்திரம்.
புலன்களுக்குச் சுதந்திரம், உடலையே புழுக்க வைத்துவிடும்.
புலன்களிலிருந்து சுதந்திரம், உணர்வைப் பழுக்க வைத்துவிடும். உணர்வே பழுத்து உச்சக்கட்டச் சுகத்தில், புலன்களால் சிறிதும் தொந்தரவில்லாமல் வாழும் நிலைதான் ஜீவன்முக்தி. புலன்களிலிருந்து உங்களை விடுபடுத்திக் கொள்வதே ஜீவன்முக்த வாழ்வு.
ஐம்புலன்களில் சக்தியைச் சேமிக்கும் உபாயம்
Techniques to energise the five senses
தூக்கத்தில் உடலுக்குக் கொடுக்கிற ஓய்வை, ஓய்வு என்று நினைக்காதீர்கள். தூக்கத்தில் உங்கள் கண் (புலன்) வேண்டுமானாலும் ஓய்வெடுக்கலாம். ஆனால், அந்தப் பார்க்கிற சக்தி (இந்திரியம்) ஓய்வெடுப்பதில்லை. அது கனவிலும் எதையாவது பார்த்துக் கொண்டிருக்கும்.
அதனால்தான் இரவிலே தூக்கத்தின் மூலம் பெறும் ஓய்வு, புலன்களுக்கு முழுமையாக ஓய்வை அளிப்பதில்லை.
தியானத்தின்போது மட்டும்தான் புலன்களுக்கு உண்மையான ஓய்வு கொடுக்க முடியும்.
உடம்பில் இருக்கிற ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு அரை மணி நேரமாவது ஓய்வு கொடுக்க வேண்டும்.
அரை மணிநேரம் தியானம் செய்தால் ஐம்புலன்களும் அடங்கும். கருவிகள் அத்தனையும் ஒடுங்கும்.
நாள் ஒன்றிற்கு அரைமணி நேரமாவது இந்த ஐம்புலன்களுக்கும், கருவிகளுக்கும் ஓய்வு கொடுத்தோமானால், அவை முழுமையாக அடங்கி, அடுத்த இருபத்து மூன்றரை மணி நேரமும் முழுமையாகவும், ஆழமாகவும், ஆனந்தமாகவும் இயங்குவதற்கான சக்தியைப் பெறும். உண்மையான ஓய்வு புலன்களுக்கு ஓய்வளிப்பதே.
ஆரோக்கிய தியானம்
Meditation for Health
"உடலும், ஐம்புலன்களும் உங்களின் ஆசைகளுக்காகத் தங்களைத் தியாகம் செய்யும் தியாகிகள்.''
"தியாகிகளா?" என நீங்கள் கேட்கலாம்.
"ஆம். நீங்கள் யோகிகளாகாதவரை, மனம் எனும் போகி செய்யும் போக்கிரித்தனங்கள் வெளியே தெரியாது. போகியின் கையில் உடலை விட்டுவைத்தால், உடலை அது ரோகியாக மாற்றி விட்டுத்தான் மறுவேலை பார்க்கும். யோகியாகுங்கள். உடலை உங்களின் அரவணைப்பிற்குள் எடுத்து வாருங்கள். போகி தன் அரசாட்சியை ஐம்புலன்களிலிருந்து எடுத்துக் கொள்ள ஆரம்பிக்கும்.
அப்புறம்தான் உடல் எவ்வளவு பெரிய தியாகி என்பது தெரிய ஆரம்பிக்கும். புரிய ஆரம்பிக்கும்,” எனச் சொல்லி முடித்தேன்.
‘ஆரோக்கிய சாகரா’
உடலைக் குணப்படுத்தும் தியானம்
Arogya sagara - Meditation that heals the body
உடலுக்குள் தானியங்கி புத்திசாலித்தனம் இருக்கிறது. அதை நீங்கள் கேட்டுக் கொண்டாலே போதும். அது உங்களுக்குத் தேவையான உற்சாகத்தையும், ஆரோக்கியத்தையும் தந்துவிடும்.
ஐம்புலன்களை இஷ்டத்திற்குத் தூண்டுவதே ஆரோக்கியத்தைக் குறைக்கிறது. மனத்தின் போகமே, உடலுக்கு ரோகத்தைத் தருகிறது. இதிலிருந்து விடுபட நீங்கள் யோகி ஆவதுதான் ஒரே வழி.
நீங்கள் யோகியாவதற்கான ஒரு இனிய தியானம்...
சோம்பேறித்தனமோ, ஆரோக்கியக் குறைபாடோ ஏற்படும்போது இந்தத் தியானம் மாபெரும் மருந்தாக இருக்கும்.
உடலை உங்களுடைய கட்டிலின்மீது உட்கார வையுங்கள். பூஜைக்காகத் தெய்வச் சிலையை எப்படி உங்களின் முன் உட்கார வைப்பீர்களோ, அப்படி உட்கார வையுங்கள். உங்கள் உடலை நீங்களே பார்ப்பதாகப் பாவனை (Visualize) செய்யுங்கள். உங்களின் வார்த்தைகளை உடல் முழுமையாகக் கேட்கும்.

உடலிடம், “உடலே எனக்கு எவ்வளவோ நல்லது
செய்திருக்கிறாய். அதற்கெல்லாம் என்னுடைய
உளமார்ந்த நன்றிகள்.
உடலே, உன்னை நீயே குணப்படுத்திக் கொள். உன் மூலமாக நான் இன்று செய்ய இருக்கும் காரியங்களை எல்லாம் வெற்றிகரமாகச் செய்து முடிக்க உதவி செய்...', என்று தினமும் காலையில் உடலை ஐந்து நிமிடமாவது ஆராதித்து விட்டு, உடலோடு பேசிவிட்டு, அந்த நாளுக்குள் நுழையுங்கள்.
உடல் இன்னும் அதிகமாக உங்களுக்கு உதவி செய்யும். ஐம்புலன்களும் அற்புதமாய் இயங்கும். தினசரி வாழ்வில் படுத்துக் கொள்ளுமளவுக்கு உடலில் சோர்வோ அல்லது வேறு தொந்திரவுகளோ அல்லது வலிகளோ ஏற்படும்போது இந்தத் தியானத்தைச் செய்யலாம்.
சிறு உற்சாகக் குறைவு ஏற்படும் போதுகூட, இந்தத் தியானத்தைச் செய்யலாம்.
இந்தத் தியானத்தைச் செய்தவுடனேயே, உங்களின் கோரிக்கையைக் கேட்டு, உடல் தன்னைக் குணப்படுத்திக் கொள்ள ஆரம்பித்து விடும்.
சில நேரங்களில் உடனடி வேர்வையாகவோ, தும்மலாகவோ, கொட்டாவியாகவோ தனக்குள் உருவாகியிருக்கும் ஆரோக்கியக் குறைபாட்டைத் தரும் சக்திகளை வெளியேற்றி, உங்களைத் தயார்படுத்தும். உங்களை உற்சாகமாக்கிவிடும். புதுத் தெம்பு உங்களுக்குள் பாய ஆரம்பிக்கும். புதுத் தெம்பு உங்களுக்குள் பாய ஆரம்பித்தாலே, மனம் ஓய ஆரம்பிக்கும். ஐம்புலன்கள் அற்புதமாய் இயங்க ஆரம்பித்தால், உடல் எப்போதும் உற்சாகமாகவே இருக்கும்.
> உடலுக்குள் தானியங்கி
> புத்திசாலித்தனம் இருக்கிறது.
> அதை நீங்கள் கேட்டுக்
> கொண்டாலே போதும். அது
> உங்களுக்குத் தேவையான
> உற்சாகத்தையும்,
> ஆரோக்கியத்தையும் தந்துவிடும்.
சக்கரங்கள்
❖Qº¼¯ß ÷£õm÷hõQµõ¤ Kirlian Photography
❖Aߦ Love
❖கவலை Worry
❖£¯® Fear
❖ö£õÓõø© Jealousy
❖கற்பனை, நிஜம் Imagination, Reality
❖அகங்காரம் Ego
❖நன்றியுணர்வு Gratitude