சம்ஸ்காரங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
உங்களுடைய தினசரி நடவடிக்கைகளில், நீங்கள் செய்கிற செயல்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறீர்களா?
நிறைய டி.வி, சினிமா பார்க்கிறீர்கள். நிறைய பத்திரிக்கைகளையும் படிக்கிறீர்கள். அவற்றில் பெரும்பாலும் விபத்துக்கள் பற்றியச் செய்திகளாகத்தான் வருகிறது, அதையெல்லாம் சுவாரஸ்யமாகதான் பார்க்கிறீர்கள்.
சுவாரஸ்யமாகப் படிக்கிறீர்கள். சுவாரஸ்யமாகக் கேட்கிறீர்கள்.
சங்கரர் மிக அழகாகச் சொல்கிறார், “ஆஹார சுத்தையோ, ஸ்மிருதி சுத்தைஹி,” உள்ளே எடுத்துக் கொள்ளும் ஆகாரம் அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது அதன் பொருள்.
இங்கு ஆகாரம் என்பது உள்ளே எடுத்துக் கொள்ளும் உணவைப் பற்றி மட்டும் சொல்லவில்லை.
ஐந்து புலன்கள் வழியாகச் செல்லும் ஒவ்வொன்றுமே ஆகாரம்தான். பார்ப்பது, கேட்பது, உணர்வது, நுகர்வது, சுவைப்பது என எதன் வழியாகத் தகவல் சென்றாலும் அதுவும் ஆகாரமே.
உண்ணும் உணவு உடலின் பாகமாக மாறுவதுபோல் காலை முதல் மாலை வரை எத்தகைய உணர்வை ஆகாரமாக எடுத்துக் கொள்கிறோமோ அதுதான் நம்முடைய பாகமாகவும் மாறும்.
நீங்கள் தொலைக்காட்சியில் வரும் துக்கமான காட்சிகளை அதிகம் பார்ப்பவராக இருந்தால் இது உங்களுக்கு அனுபவமாகப் புரியும்.
ஒரு அரை மணிநேரம் கணவர் வீட்டுக்கு வரவில்லை என்றாலும், என்ன செய்கிறீர்கள்? வாசலுக்குச் சென்று சாலையை எட்டி எட்டி பார்ப்பீர்கள். வராந்தாவில் முன்னும் பின்னும் நடக்க ஆரம்பித்துவிடுவீர்கள். தெரிந்தவர்களுக்குப் போன் செய்து பீதியில் பிதற்றவும் செய்வீர்கள்.
நிச்சயம் அடுத்த அரை மணிநேரத்திற்கெல்லாம் இரத்த அழுத்தம் எகிறிவிடும். “என்ன ஆச்சோ? ஏது ஆச்சோ? ஆபீசுக்குப் போன் பண்ணினேன். எடுக்கவில்லையே? கிளம்பிட்டாருன்னு சொன்னாங்களே... இந்தச் செல்போன் வேற... இப்பத்தான் வேலை செய்யமாட்டேங்கிறதே,” என்று புலம்ப ஆரம்பித்துவிடுவீர்கள். இல்லையா?
ஒரு அரை மணிநேரம்தான் தாமதம் என்றாலும், மனம் இல்லாத கற்பனைகளையெல்லாம் செய்து, மனக்கண் முன் காட்சிபோல் காண்பித்துவிடும்.
சாத்தியம் இல்லாத காரணங்களையெல்லாம் புதிதுபுதிதாக உருவாக்கும். இதற்கு நாம் அளவுக்கு மீறி உள்வாங்கி வைத்திருக்கும் பய சம்ஸ்காரங்கள்தான் முக்கியமான காரணம்.
சொல்லப்போனால், நல்ல செய்திகளை உள்வாங்குபவர்கள் ஒருபோதும், உணர்ச்சி களால் பாதிக்கப்பட மாட்டார்கள். "அவருக்கு என்ன ஆகியிருக்குமோ?" என்ற சி று எண்ணத்தையே கலக்கமாக, பீதியாக மாற்றி, வயிற்றைப் பிசைய வைக்கும் உங்களுடைய மனத்தின் பகுதியைத்தான், சம்ஸ்காரங்கள் என்கிறோம்.
சம்ஸ்காரங்கள் என்பவை மனத்தில் பதிந்திருக்கும் எண்ணப்பதிவுகள்; எண்ணப்பதிவுகளும், எண்ணங்களும் மிகவும் சக்தி வாய்ந்தவை.
சம்ஸ்காரங்கள் பலவகைப்பட்டவை. சில சம்ஸ்காரங்கள் மனக்குழப்பங்களையும், சில சம்ஸ்காரங்கள் நோய்களையும், இன்னும் சில சம்ஸ்காரங்கள் புகை, மது போன்ற அடிமைத்தனங்களையும் உருவாக்குகின்றன.
புற்றுநோயும், மன அமைப்பும்
Cancer and Mental Setup
சமீபத்தில் ஒரு பெரிய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அது மார்பகப் புற்றுநோய் பற்றிய முக்கியமான ஆராய்ச்சி அறிக்கை.
அந்த அறிக்கையில் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள், "மார்பகப் புற்றுநோய் வந்த அத்தனை பெண்களினுடைய வாழ்க்கை முறை பற்றியும், அவர்களின் எண்ண ஓட்டம் பற்றியும் ஆராய்ச்சி செய்தோம். அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்குச் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே, அந்தப் புற்றுநோய் வந்த அத்தனைபேரின் எண்ண ஓட்டமும், எதிர்மறையான எண்ண ஓட்டமாகவே இருந்திருக்கிறது."
இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டவர்களில்...
100 பேருக்கு மார்பகப்புற்று நோய் வந்தது என்றால், அந்த 100 பேரையும் அவர்கள் ஆராய்ச்சி செய்தபோது, கண்டுபிடித்த உண்மை இது. 98 பேர் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே புற்றுநோயை வரவழைத்துக்கொள்ளும் எதிர்மறை மன அமைப்பை உருவாக்கியிருந்தார்கள். அவர்களின் எண்ண ஓட்டமே, நோயை ஈர்க்கும் எதிர்மறையான எண்ணங்களாக மாறியிருந்தது," என்று சொல்கிறார்கள்.
வாழ்க்கையில் தங்களுக்கென பிடிப்பு இல்லாமல் போனதனாலோ, ஏதோ ஒரு காரணத்தினால் கணவர் இறந்ததினாலோ, வியாபாரத்தில் நஷ்டம் அடைந்ததினாலோ அல்லது தமக்குள்ளே அடுக்கி அடுக்கி வைத்திருந்த துக்க எண்ணங்களினாலோ அல்லதுதான் விரும்பிய சுதந்திரத்தை அடைந்து வாழ முடியாததினாலோ, வாழ்க்கைமுறை மாறியிருக்கிறது. மேலும் இவர்கள் ஏதாவது சில காரணத்தினால், தங்களுக்குள் தாங்களே எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்.
எதிர்மறையாகவே வாழத் துவங்கி விடுகிறார்கள். வாழ்வை எதிர்க்கும் மன அமைப்புடனும், எதிர்மறை எண்ண ஓட்டங்களையும் வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த மொத்தப் பிரச்சினைகளுக்கும் சுலபமான தீர்வு, மனஅமைப்பை மாற்றுவதே.
ஒருவர் அல்ல, இருவர் அல்ல, 10,000த்திற்கும் மேற்பட்ட புற்றுநோயாளிகளைச் சந்தித்து, அவர்களின் மன அமைப்பை ஆராய்ச்சி செய்த பிறகு வெளியிடப்பட்டிருக்கும் முடிவு இது.
விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் செய்தியில், நாம் தெரிந்துகொள்ள வேண்டியது....
10 ஆண்டுகளுக்காவது, உங்களை நீங்களே வருத்திக் கொண்டு, வாழ்க்கையில் துக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, வேதனையிலேயே வாடினால் மட்டும்தான் புற்றுநோய் (Cancer) வருகிறது.
அப்படியென்றால் அந்த அளவிற்கு நீங்கள் உங்கள் உடலை அழித்துக் கொள்கிறீர்கள். அதனால்தான் அந்த மருத்துவ ஆராய்ச்சியில் மிக அழகாகச் சொல்கிறார்கள். “குறைந்த பட்சம் 10,000 முறையாவது, உங்களை நீங்களே துக்கத்தில் ஆழ்த்திக் கொண்டால்தான் உங்களுக்குக் கேன்சர் வரும். அப்பொழுது புற்றுநோய் என்று புதிதாக ஒரு பகுதியையே உருவாக்கும் நச்சுப் பொருட்கள் உங்கள் உடலில் சுரக்கிறது," என்று சொல்கிறார்கள். இந்தக் கருத்துகளை எல்லாம் பார்க்கும்போது தெளிவான ஒரு உண்மை புலப்படுகிறது.
நாம்தான் நம்முடைய உடல் ரீதியான, மன ரீதியான பிரச்சினைகளுக்கும், துக்கங்களுக்கும் மூலகாரணமாக இருக்கிறோம். எதை உணர்வாக உள்வாங்குகிறோம், மனஅமைப்பாக மாற்றுகிறோம் என்பதைப் புரிந்து கொண்டோமானால், புற்று நோயே வராமல் செய்துவிட முடியும். மன அமைப்பை புரிந்து கொண்டால் நோய்களையே தடுத்துவிடலாம்.
சாரைப் பாம்புகளை விட மோசமானவை சம்ஸ்காரங்கள்
Samskaras are more dangerous than poisonoUSU Snakes
ஒரு அருமையான ஆராய்ச்சி. விஸ்கான்சன் யூனிவர்சிட்டியில் இந்த ஆராய்ச்சியைச் செய்தார்கள். நம்முடைய உலக சமுதாயத்தில், ஒருசில பிரிவினர், சாதாரண நடைமுறை மொழியை உபயோகிக்காமல் மிகவும் கலாச்சாரமான மொழியைப் பேசுவார்கள்.
கலாச்சாரமான வார்த்தைகளை உபயோகிக்கிற இந்தப் பிரிவினர்கள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்தார்கள். அவர்களுடைய ஆராய்ச்சியில்... இந்தக் குறிப்பிட்ட பிரிவு மக்கள் மன அழுத்தத்தில் விழும் தன்மை, மிக மிகக் குறைவாக இருக்கிறது என்று கண்டுபிடித்தார்கள்.
அந்த ஆராய்ச்சியின் முடிவில், நல்ல கலாச்சாரமான, நல்ல மொழியை, நல்ல வார்த்தைகளை உபயோகிக்கும் மனிதர்கள் மன அழுத்தத்தில் விழுவதில்லை. என்று கண்டுபிடித்தார்கள். ஒருவேளை மன உளைச்சலில் வீழ்ந்தாலும், சில நிமிடங்களிலேயே மிக எளிதாக, வேகமாக அதிலிருந்து வெளியேறி விடுகிறார்கள் என்றும் நிரூபித்திருக்கிறார்கள்.
ஆழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள். மனஉளைச்சல் என்பது வேறு ஒன்றும் இல்லை, நாம் மீண்டும் மீண்டும் நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் வார்த்தைகளே.!
"நம்முடைய எண்ணங்களுக்கு நாம் எந்த அளவிற்குப் பொறுப்பு?" என்று ஒருவர் நம்மிடம் கேட்டபோது, இப்படிப் பதிலளித்தோம்.
"நம்முடைய எண்ணங்கள் தாங்களாகவேதானே நமக்குள் வந்துகொண்டு இருக்கின்றன. இல்லை, வேறு யாராவது இடையில் நுழைக்கிறார்களா? வேறு யாராவது இடையில் நுழைக்கத்தான் முடியுமா?... நிச்சயம் இன்னொருவரால் முடியாதல்லவா? அப்படியென்றால்... நம்முடைய எண்ணங்களுக்கு நாம்தான் முழுப்பொறுப்பு. எந்த ஒரு நிகழ்ச்சி நிகழ்வதற்கு முன்பும் அல்லது ஏதேனும் நபரைச் சந்திக்கச் செல்வதற்கு முன்பும் நாம் எந்த வகையான எண்ண ஓட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு செல்கி றாமோ, அதே வகை பதில்தான் நமக்குக் கிடைக்கும். வரவேற்பும் அதே போன்றுதான் கிடைக்கும்.
உண்மையில் நம்முடைய எண்ண ஓட்டத்திற்கு, மற்றவர்களுடைய மனத்தையும், மன ஓட்டத்தையும் வழி நடத்தும் சக்தியுண்டு. நம்முடைய எண்ண ஓட்டத்தில் பதிந்திருக்கும் நினைவுப் பகுதிகள்தான் நம்மை மன அபத்தத்ததிலும், மன உளைச்சலிலும் ஆழ்த்துகிறது. அந்த எண்ணப் பதிவுகளையே சம்ஸ்காரங்கள் என்று அழைக்கிறோம். சம்ஸ்காரங்கள் என்பவை, நம்முள் இருக்கும் எண்ணப் பதிவுகள் அல்லது உணர்வுப் பதிவுகள். அவை எப்போது வேண்டுமானாலும் நம்மைச் சீண்டும் தன்மை கொண்டவை. சம்ஸ்காரங்கள் சாரைப் பாம்பைவிட மோசமானவை.
சம்ஸ்காரங்கள் - ஆரோக்கியத்தின் ஆக்கிரமிப்பாளர்கள்
Samskaras - Invaders of Health
சம்ஸ்காரங்கள் நம்மை அறியாமல் மனத்திற்குள்ளே பதிந்து, மீண்டும் மீண்டும் ஒரே செயலைச் செய்யத் தூண்டும் அளவிற்கு, சக்தி வாய்ந்த எண்ணப் பதிவுகளாகிறது.
நீங்கள் விரும்பாவிட்டாலும்கூட, அதே செயலை மீண்டும் மீண்டும் உங்களையே செய்ய வைக்கிற சக்தி வாய்ந்த மனப்பதிவுகளைத்தான் சம்ஸ்காரங்கள் என்று சொல்கிறோம்.
மனப்பதிவுகள் இரண்டுவிதம். அது வெறும் நினைவுப் பதிவாகவும் இருக்கலாம். இல்லை சம்ஸ்காரமாகவும் இருக்கலாம். உங்களை மீண்டும் மீண்டும் அதே செயலைச் செய்யத் தூண்டக்கூடிய சக்தி அந்தச் சம்ஸ்காரத்திற்கு இல்லை யென்றால் அது வெறும் நினைவுப்பதிவுதான்.
ஆனால், அந்த நினைவிற்கு அதே செயலை மீண்டும் உங்களைச் செய்யத் தூண்டக்கூடிய சக்தி இருக்குமானால், அதைத்தான் சம்ஸ்காரம் என்று சொல்கிறோம்.
சம்ஸ்காரங்களால்தான் துக்கம் அடைகிறீர்கள்
You become sorrowful beacuse of samskaras
மனத்திலிருக்கும் சம்ஸ்காரங்கள் எப்படி இயங்குகிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு நீங்கள் ஐம்புலன்கள் மூலமாக எப்படிச் செய்திகளை உள்வாங்குகிறீர்கள், அது எப்படி முடிவாக மாறுகிறது என்பதை முதலில் புரிந்து கொள்வோம்.
நாம் ஐம்புலன்களின் வழியாகச் செய்திகளை உள்வாங்குகிறோம். உதாரணத்திற்குக்கண்களை எடுத்துக் கொள்வோம். நீங்கள் கண்களால் பார்க்கிறீர்கள், படிக்கிறீர்கள். இங்கு ஐம்புலன்களுள் கண்ணின் வழியாக உள்வாங்கும் செய்திகளை உதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். கண்ணுக்குப் பதிலாக காது என்று நினைத்துக் கொண்டாலும் பரவாயில்லை. காது வழியாகக் கேட்கிறீர்கள் அல்லது வாய் வழியாக ருசிக்கிறீர்கள். கை அல்லது உடல் வழியாக உணருகிறீர்கள்.
இங்கு கண்ணை உதாரனமாக எடுத்துக்கொள்வோம். கண் வழியாக ஒரு பொருளைப் பார்க்கிறீர்கள். அந்தப் பொருள் பற்றிய தகவல் (signal) கண்ணின் வழியாக உள்ளுக்குள் செல்கிறது. நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். அந்தப் பொருளே கண்ணுக்குள் செல்வதில்லை. அந்தப் பொருளைப் பற்றிய செய்திதான் தகவலாக உள்ளே செல்கிறது.
உங்களோடு ஒருவர் உங்களுக்குத் தெரிந்த மொழியில் பேசினால் அவர் என்ன பேசி னார் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும் இல்லையா? புரியாவிட்டால் புரிந்து

கொள்ளப்படும் மொழியில் வேறு நபரால் மொழி மாற்றப்பட்டு சொல்லப்படுகிறது இல்லையா? அதுபோல் ஏதேனும் ஒரு செய்தியை கணினிக்கு அனுப்பினால், முதலில் அந்தச் செய்தி, அந்தக் கணினியால் புரிந்து கொள்ளப்படும் தகவலாக மாற்றப்படும். கணினிக்குப் புரியும் மொழியில், Digital Signal-ஆக செய்தி மாற வேண்டும். அவ்வாறு செய்தியை Digital Signal-ஆக கணினிக்குள் மாற்றும் மென்பொருளை Digital Signal Processor (DSP) என்று சொல்வோம். இங்கிருந்துதான் டிஜிட்டல் ஃபைலாக அந்தச் செய்தி கணினிக்கு அனுப்பப்படும்.
உதாரணத்திற்கு, ஒரு கேமராவில் ஏதாவது ஒரு அழகான ரோஜா மலரைப் படம் எடுத்தால், அந்தக் காட்சி கேமராவிற்குள் டிஜிட்டல் சிக்னலாக மாற்றப்பட்டு பதிவு செய்யப்படுகிறது. கேமராவைப் போன்று நம் கண்களும் பார்க்கும் காட்சிகளைச் சக்ஷு (Bio Signal Processor) எனும் சக்தியால் பயோ சிக்னலாக (Bio Signal) மாற்றுகிறது.
இன்னொரு உதாரணம்... இப்போது நீங்கள் என்னைப் பார்க்கிறீர்கள். உடனே அந்தக் காட்சியை சக்ஷு (பார்க்கும் இந்திரிய சக்தி) பயோ சிக்னலாக மாற்றும். அந்தப் பயோ சிக்னல் ஃபைல் (Signal File) நேராக சித்தத்திற்குப் போகும். சித்தம் என்பது, நம்முடைய எல்லா நினைவும் இருக்கிற ஞாபகக் கிடங்கு (Memory Bank). அந்த இடத்திற்கு ஃபைல் சென்றபிறகு, அந்தச் செய்தி எப்படி முடிவாக மாறுகிறது என்பதைப் பார்ப்போம்.
உங்கள் முன் நான் நின்று கொண்டிருக்கிறேன். இந்தக் காட்சியை கண் படம் எடுக்கிறது. அந்தத் தகவலை 'சக்ஷு' பயோ சிக்னலாக மாற்றி, சித்தத்திற்கு அனுப்புகிறது. அந்தத்
தகவல் சித்தத்திற்கு சென்ற உடனே அதைச் சி த்தம் ஆராய்ச்சி செய்ய ஆரம்பிக்கிறது.
புதிதாக வந்திருக்கும் தகவலை, ஏற்கெனவே தான் வைத்திருக்கும் எல்லா தகவலோடும், ஒப்பிட்டுப் பார்க்கும். இது விலங்கு அல்ல. இது மரம் அல்ல, இது மலை அல்ல என்று. இது அல்ல, இது அல்ல என்று நீக்குதல் (Elimination) சித்தத்தில் நடக்க ஆரம்பிக்கும்.
அதற்கு அடுத்து அந்த ஃபைல் மனஸுக்குப் போகும். மனஸுக்குள் போகும்போது அடையாளம் காட்டுதல் (Identification) நடக்க ஆரம்பிக்கிறது.
கலாச்சாரமான வார்த்தைகளை
உபயோகிக்கிற இந்தப்
பிரிவினர்கள் பற்றி
ஆராய்ச்சியாளர்கள்
ஆராய்ச்சி செய்தார்கள்.
அவர்களுடைய ஆராய்ச்சியில்
இந்தக் குறிப்பிட்ட பிரிவு
மக்கள் மன அழுத்தத்தில்
விழும் தன்மை மிக மிகக்
குறைவாக இருக்கிறது என்று
கண்டுபிடித்தார்கள்.
ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள்.
கண்ணிலிருந்து வரும் தகவல் (சக்ஷுவால் பயோ சிக்னலாக மாறுகிற சிக்னல்) எப்போது முடிவாக மாறுகிறது, நாம் எப்படி முடிவை எடுக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்கி றாம். முடிவெடுப்பது எப்படி என்று கற்றுக் கொண்டாலே வாழ்க்கை மேம்பட்டுவிடும்.
உண்மையில் முடிவு எப்படி எடுக்கப்பட வேண்டும் என்பதை நாம் அறிந்துகொண்டோமானால் போதும், எளிதில் சம்ஸ்காரங்களைப் பற்றிப் புரிந்து கொண்டு விடுவோம்.
நம்முடைய எண்ண
ஓட்டத்திற்கு
மற்றவர்களுடைய
மனத்தையும் வழி
நடத்தும்
சக்தியுண்டு
கண்கள் பார்க்கிற ஒரு காட்சி தகவலாக எப்படி மாறுகிறது, அந்தத் தகவல் எப்படிச் செயலாக வெளிப்படுகிறது என்பதெல்லாம் நமக்குப் புரியாமல் இருப்பதற்குக் காரணம்...
ஒரு மைக்ரோ வினாடிக்கும் குறைவான நேரத்தில் இது எல்லாமே நடந்து முடிந்து விடுகிறது. அதனால்தான் நம்மால் இது எப்படி நடக்கிற்து என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ச க்ஷுவால், பயோ சிக்னலாக மாறிய ஃபைல், உடனே சித்தத்திற்குச் செல்லும். சித்தத்தில் நீக்குதல் நடக்கும்.
அதற்கு அடுத்து உடனேயே மனஸுக்குச் செல்லும். மனஸுக்குள் (Identification) அடையாளம் காணுதல் நடக்கும். "இது சாமி. காவி உடை அணிந்திருக்கிறார். தியான வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கிறார்," என்று, 'இதுதான்' என்ற அடையாளத்தை மனஸ் முடிவெடுக்கும்.
வரும் தகவலை... 'இதுதான், இதுதான்'... என்பதை மனஸ் முடிவு செய்யும்.
'இது அல்ல, இது அல்ல' என்பது சித்தத்தில் நிகழும்.
'இதுதான், இதுதான்' என்ற அடையாளம் காணுதல் மனஸில் நடக்க ஆரம்பிக்கும்.
நம்முடைய
எண்ணங்களுக்கு
நாம்தான்
முழுப்பொறுப்பு
இதுவரை எல்லோருக்கும் ஒன்றாகத்தான் இருக்கும். ஒரு சாதாரண மனிதனுக்கும், ஞானிக்கும் இது வேறுபாடின்றி நடக்கும்.
ஆனால், இதற்கு அடுத்துதான் பிரச்சினையே துவங்கும். பிரச்சினை என்னவென்றால், மனஸில் அடையாளம் கண்டுபிடித்தற்குப் பிறகு, இந்தச் செய்திக்கும், எனக்கும் என்ன சம்மந்தம் என்று அகங்காரம் எந்த முடிவை எடுக்கிறதோ, அதைப் பொறுத்து இருக்கிறது. அதுதான் மிகவும் முக்கியமானது. ஏற்கெனவே தியானத்தைப் பற்றியும், தியான வகுப்புகளைப் பற்றியும், ஞானிகளைப் பற்றியும் நல்ல அபிப்பிராயம் இருந்தால், தொடர்ந்து கேட்கலாம் என்று அகங்காரம் முடிவெடுக்கும்.
ஆனால், ""இல்லையில்லை. நேற்றே போர் அடித்தது. இன்றைக்கும் ஏன் உட்கார்ந்து கேட்க வேண்டும்?" என்ற எண்ணம் இருந்தால், உடனே அகங்காரம் எழுந்து போகலாம் என்று முடிவெடுக்கும். அதன் பிறகு அந்த முடிவிற்கு ஏற்ப உங்கள் உடல் இயங்கத் துவங்கும்.
இந்த முடிவுகளை எடுப்பதற்குக் காரணமான, ஏற்கெனவே பதிந்திருக்கும் எண்ணங்கள், எண்ணப்பதிவுகளைச் சம்ஸ்காரங்கள் என்று சொல்வோம்.
ஏற்கெனவே தியானத்தைப் பற்றியும், ஆன்மீகவாதிகளைப் பற்றியும், ஒரு நல்ல கருத்து இல்லை என்றால், அகங்காரம், "இங்கிருந்து எழுந்து போகலாம்," என்று முடிவெடுக்கும். இப்படிச் சம்ஸ்காரங்கள் இல்லாமல், வாழ்வின் போக்கை நீங்கள் முடிவு செய்தால், நிஜமான ராஜா நீங்கள்தான்.
நம் வாழ்க்கையில் இருக்கும் மொத்தப் பிரச்சினையும் என்னவென்றால், இந்த எண்ணப்பதிவுகள்தான்.
எண்ணப்பதிவுகள்தான் பிரச்சினையே. நீங்கள் நேரடியாக சுதந்திரமாக முடிவெடுத்து வாழ்வதில்லை; ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட சம்ஸ்காரங்களின்படிதான் வாழ்க்கை செல்கிறது. ""நம் வாழ்வை நாம் வாழ்வதாக நினைக்கிறோம், இல்லை சம்ஸ்காரங்கள்தான் வாழ்கின்றன!"
அதனால்தான் ஒருசில குறிப்பிட்ட உடல் மனப் பழக்கங்களுக்குள் நாம் சிக்கித் தவிக்கிறோம். மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான செயல்களைச் செய்யத் தூண்டும் எண்ணப்பதிவுகளுக்குள் சிக்கித் தவிக்கும் வாழ்க்கை முறைக்கு பெயர்தான் நரகம்.
இந்தச் சம்ஸ்காரங்கள் நிறைந்திருப்பதால்தான் செய்யக்கூடாது என்று நினைக்கிற விஷயங்களை உங்களை மீறி செய்துவிடுகிறீர்கள்!
ஏற்கனவே தியானத்தைப்
பற்றியும், ஆன்மீகவாதிகளைப்
பற்றியும், ஒரு நல்ல
கருத்து இல்லையென்றால்,
அகங்காரம் இங்கிருந்து
எழுந்து போகலாம் என்று
முடிவெடுக்கும். இந்த
முடிவுகளை எடுப்பதற்குக்
காரணமான. ஏற்கனவே
பதிந்திருக்கும் எண்ணங்கள்.
எண்ணப்பதிவுகளை
என்று சொல்வோம்.
செய்யவேண்டும் என்று நினைக்கிற விஷயங்களைச் செய்யாமல் விடுகிறீர்கள்!
இதனால் ஒரு மனிதனுக்கு அவர்மேல் அவருக்கு இருக்கும் மரியாதை குறைய ஆரம்பித்து விடுகிறது. இந்தச் சம்ஸ்காரங்களைக் கரைத்து விட்டால் வாழ்வு சு தந்திரமாகவும்; ஆனந்தமாகவும் மாறிவிடுகிறது.
எண்ணப்பதிவுகளை மாற்றினால், வாழ்வின் பாதையே மாறிவிடும். மற்ற எல்லாமே பொதுவாகத்தான் நடக்கும்.
அழிக்கப்பட வேண்டியது சம்ஸ்காரங்களே
What needs to be destroyed is the Samskaras
ஞானிகளுக்கும், உங்களுக்கும் இருக்கிற ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், உங்களிடம் இருக்கும் எண்ணப்பதிவுகள். ஞானியும் உங்களைப் போன்று இரண்டு கண்ணால்தான் பார்ப்பார். சக்ஷீதான் வேலை செய்யும், அவருக்குள் நம்மைப்போன்று சித்தமும் வேலை செய்யும். மனலில் அடையாளம் காணுதலும் நடக்கும். இதற்குப்பின் முடிவெடுப்பதில்தான் இருவருக்கிடையே வித்தியாசம் இருக்கிறது.
ஜீவன் முக்தி அடைந்தவர்களுக்கும், உங்களுக்கும் இருக்கிற ஒரே வித்தியாசம், எண்ணப்பதிவுகள்தான், சம்ஸ்காரங்கள்தான்.
ஜீவன் முக்தர் சம்ஸ்காரங்கள் இல்லாமல், நிகழ்காலத்தை அணுகுவார்.
இப்போது நீங்கள் நேர்மறையாக நல்ல முடிவுகளை எடுத்தாலும், எதிர்மறையாக முடிவுகளை எடுத்தாலும், அதாவது இங்கு உட்கார்ந்து இருப்பதைப் பற்றி நேர்மறையாக முடிவெடுத்தாலும், எதிர்மறையாக முடிவு எடுத்தாலும், அந்த முடிவு சம்ஸ்காரத்தின் முடிவாக நிகழும். சம்ஸ்காரம் இருக்கிற வரை உங்களால் முடிவெடுக்க முடியாது. சம்ஸ்காரங்கள்தான் முடிவெடுக்கும். சம்ஸ்காரம் இருக்கும் வரை துக்கம் அழியாது.
சம்ஸ்காரத்தை அழிப்பதுதான் ஆனந்தத்திற்கான நுழைவாயில்.
> நம் வாழ்க்கையில்
> இருக்கும் மொத்தப்
> பிரச்சினையும்
> இந்த எண்ணப்
> பதிவுகள்தான்.
எண்ணப் பதிவுகள் மூலமாக என்ன முடிவுகள் எடுக்கப்பட்டாலும், அது துக்கத்தைத்தான் தரும். அது எவ்வளவு நல்ல முடிவாகவே இருந்தாலும், அதை நல்ல முடிவு என்று சொல்ல முடியாது.
ஏனென்றால், சம்ஸ்காரங்கள் இருக்கும் வரை துக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
சம்ஸ்காரப் பிடியைத் தளர்த்தும் தியானம்
துக்கஹரணம்:-
மிக ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம்.

எந்தத் தியானத்திற்குள் நுழைவதற்கு முன்பும், நாம் முதலில் சுவாசத்தை மாற்றுகிறோம். காரணம் என்னவென்றால், உடலில் சுவாசம் அதிகரிக்கும்போது நம்முடைய பயோமெமரி (Bio Memory) உருக ஆரம்பிக்கும். உடலினுள்ளே இருக்கிற எண்ணப் பதிவுகள் கரையத் துவங்கும்.
பிராணன் ஆழமாக உள்ளெடுக்கப்பட்டால், உங்களுடைய பகுத்தறிவு ஆழ்ந்து வேலை செய்யும். பனி உருகிக் கரைந்துப் போவதைப் போன்று, சம்ஸ்காரப் பதிவு உங்களை விட்டுக் கரையத் துவங்கும்.
அதைத்தான் துக்கஹரணா என்று சொல்கிறோம். இது துக்கத்தை அழிக்கும் நேரடி முறை.
முதல்படி:
முழுவதுமாக விளக்கி விடுகிறேன். பறவை தன் இறக்கையைப் பக்கவாட்டில் நீ ட்டி வைத்துக் கொள்வது போன்று, உங்கள் கைகளை உடலின் பக்கவாட்டில் நீட்டிக்கொள்ளுங்கள். பறக்கும்போது பறவை எப்படித் தன் கால்களை மடக்கிக் கொள்கிறதோ, அதுபோல் உங்கள் முட்டியை மட்டும் மடக்கிக் கொள்ளுங்கள்.
இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், பறவையைப்போல் கைகளை மேலும் கீழும் அசைத்தவாறே முட்டியை மடக்கி, நாற்காலியில் உட்காரும் உயரத்திற்கு உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்து கொண்டேயிருங்கள். உட்காரும்போது அடிவயிற்றிலிருந்து சுவாசத்தை வேகமாக வெளியேற்றுங்கள்.
இடைவிடாமல் தொடர்ந்து ஏழு நிமிடங்களுக்குச் செய்யுங்கள்.
| சம்ஸ்காரத்தினுடைய | | பதிவுகள் அதிகமாக | | அதிகமாக உடலில் | | இறுக்கங்கள் | | அதிகமாகும். |
அப்போது உடல் முழுவதும் சுவாசிக்கும். இது வெறும் காற்றுத் துவாரங்களை மட்டும் அல்லாமல், உடல் முழுவதையும் சுவாசி க்க வைக்கும். இது முதல் நிலை.
இரண்டாவது நிலை, உடல் முழுவதும் இருக்கிற எல்லாப் பாகங்களையும் தளர்வாக்குதல். இறுக்கங்களை வெளியேற்றுவதே தளர்வாக்கும் வழி, சம்ஸ்காரத்தை வெளியேற்றும் வழி.
நம்முடைய உடலில் பல இடங்கள் இறுக்கமாகவே இருக்கிறது. சம்ஸ்காரத்தினுடைய பதிவுகள் அதிகமாக அதிகமாக, உடலில் இறுக்கங்கள் அதிகமாகும். சொல்லப்போனால், அடிமைப்படுத்துபவரிடம் இருந்து, விடுதலை பெறுவது சுதந்திரமல்ல, சம்ஸ்காரப்பிடியிலிருந்து விடுதலை பெறுவதே நிஜமான சுதந்திரம்.
இரண்டாம் படி: (7 நிமிடங்கள்)

நின்றவாறு (உங்களால் முடியவில்லை என்றால் அமர்ந்தவாறே) உடல் முழுவதையும் அழுத்தமாக்குங்கள்.
கை, கால் உடலினுடைய எல்லாப் பாகங்களையும் அழுத்தமாக்குங்கள். மீண்டும் மீண்டும் அழுத்தமாக்குங்கள். மீண்டும் மீண்டும் அழுத்தமாக்குவதன் மூலமாக இந்த உடம்பிற்குள்ளும், மனத்திற்குள்ளும் இருக்கிற மனஅழுத்தத்தை, சம்ஸ்காரங்களை வெளியேற்றுங்கள்.
மூன்றாவது படி: (7 நிமிடங்கள்)
பத்மாசனத்தில் அமர்ந்து, அடிவயிற்றில் இருந்து இந்த ஓம் காரத்தை எவ்வளவு நீளமாக முடியுமோ அவ்வளவு நீளமாக; எவ்வளவு ஆழமாக. முடியுமோ, அவ்வளவு ஆழமாக; எவ்வளவு சப்தமாக முடியுமோ, அவ்வளவு சப்தமாக உச்சாடனம் செய்யுங்கள். காற்றை வெளியேற்றினீர்கள் என்றால் போதும், பிராண சக்தி உட்செல்வதை உடலே கவனித்துக் கொள்ளும்.
ஆழ்ந்து உச்சாடனம் செய்யுங்கள்.
நான்காவது படி: (10 நிமிடங்கள்)
இருக்கும் இடத்திலேயே அமர்ந்து கொள்ளுங்கள். கண்களைத் திறக்காதீர்கள். சாட்சியாக அமர்ந்திருங்கள். புதிதாக எந்த எண்ணத்தையும் உருவாக்காமல், வரும் எண்ணங்களை அழிக்காமல், எண்ணங்களுடனே செல்லாமல் சாட்சியாக அமர்ந்திருங்கள்.
சம்ஸ்காரங்களை
அழிப்பதற்காக
சிவபெருமான் தந்த
தியானம் இந்த துக்க
ஹரணம்.
துக்கஹரணா தியானத்தின் பலன்கள்: சம்ஸ்காரங்களை அழிப்பதற்காக சிவபெருமான் தந்த தியானம், இந்த துக்க ஹரணம்.
துக்க ஹரணா மிகவும் சக்தி வாய்ந்த தியானம்.
1. உடலில் தங்கும் துர்ச்சக்திகள் அனைத்தையும் தூய்மை செய்துவிடும். உடலையே ஒரு சமநிலைக்குக் கொண்டு வந்துவிடும். உடலையும், மனத்தையும் ஒரு சமநிலைக்குக் கொண்டுவருகிற சக்தி, இந்தத் தியானத்திற்கு உண்டு.
2. வாதம், பித்தம், கபம்தான், உடலையும், மனத்தையும் இணைக்கிற பாலம். 3. வாதம், பித்தம், கபம் சமநிலை இல்லாமல் போனால், உடலும் சமநிலையில் இருக்காது. மனதும் சமநிலையில்லாது இருக்கும். அதனால்தான் சில நேரங்களில் சொல்வோம், பித்தம் தலைக்கு ஏறிடுச்சி என்று. அப்படியானால் பாவனை சக்தி (Visualization) தொந்திரவு அடைந்துவிட்டது என்று பொருள்.
4. உடலில் பித்தம் தலைக்கு ஏறினால், மனம்
சமநிலை இல்லாமல் இருக்கும். காரணம்
மனமும், உடலும் தனித்தனியான ஒன்று
கிடையாது. இரண்டும் ஒன்றுதான் என்ற தெளிவு
உங்களுக்குப் பிறக்கும்.
5. மன அழுத்தத்தால் ஏற்படும் சோர்வைப் போக்கும்.
6. உடலின் முதுமைத்தன்மையைத் தள்ளிப்போடும்.
7. நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.

தியான யுக்தி - 8
அடிமைப் பழக்கத்தின் ஆணிவேர் - சம்ஸ்காரம்
The root of all habit is the Samsakaras (Engraved Memories)
நீங்கள் ஏதேனும் ஒரு பழக்கத்திற்கு அடிமையாக இருந்தால், அந்தப் பழக்கம் எவ்வாறு உங்கள் மீது செயல்படுகிறது என்பதைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
அனுபவிக்கும்போது சுகம் தராமல் இருக்கும், அனுபவிக்காமல் விட்டுவிட்டால் துக்கம் தருகிற பழக்கத்தைத்தான் 'அடிமைத்தனம்' என்று சொல்வோம்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். சிகரெட் பிடிப்பதால் ஒன்றும் பெரிதாக சுகம் கிடைத்துவிடாது. ஆனால் பிடிக்கவில்லை யென்றால், ஒரு ஆழமான துக்கம், பெரிதாக எதையோ இழந்துவிட்டாற்போன்று இருக்கும். அவை புகைப் பிடிப்பதற்கு மட்டும் என்றில்லை.
சில நேரங்களில் செய்தித்தாளைப் படிப்பதற்குக்கூட அப்படித்தான் இருக்கும். காலையில் செய்தித்தாளைப் படித்தால் பெரிதாக ஒன்றும் சுகமிருக்காது. ஆனால் படிக்கவில்லையென்றால், பெரிதாக எதையோ இழந்த மாதிரி இருக்கும்.
செய்வதால் சுகம் தராததும், செய்யாது இருப்பதால் ஆழ்ந்து துக்கம் தருவதும்தான் அடிமைத்தனம்.
அடிமைத்தனம் என்பது இதுதான். இதை நீங்கள் எதனோடு வேண்டுமானாலும் ஒப்பிட்டுப் பாருங்கள். இதுவே யுக்திதான்.
சுவாசத்தை ஆழமாக்குவதன் பலன்கள்...
நம்மை அறியாமல், நம் உடலில் உள்ள பல சம்ஸ்காரங்கள், சுவாச ஓட்டத்தை ஆழமாக்குவதாலேயே நம் உடலை விட்டு வெளியேறிவிடும்.
உங்களுக்கே தெரியாமல் உங்களுக்குள் பதிந்து இருக்கிற கோபம், வேகம், துக்கம், குற்ற உணர்ச்சி எல்லாம் கரைய ஆரம்பிக்கும். பல நினைவுப்பதிவுகள் உங்களை விட்டு வெளியே போகும்.
அடிமைத்தனத்தின் ரகசியம்
•தவறென்று தெரிகிறது. அந்த நேரம் வரும்போது நம்மையும் மீறி தப்பு நடந்துவிடுகிறதே. அதைத் தவிர்க்க முடிவதில்லையே ஏன்?
தப்பு என்பது ஆழ்மனத்தைப் பொறுத்தளவிற்குச் சுவையான ஒரு பதார்த்தம். சாதாரண ஒரு செயலை, இது தப்பு என்று சொல்லிவிட்டால் நம் ஆழ்மனம் அதையே சுற்றிச் சுற்றி வட்டமடிக்க ஆரம்பிக்கும். ஆழ்மனம்தான் 90 சதவீதம் செயல்படுகிறது. மேல்மனம் வெறும் 10 சதவிகிதம்தான் செயல்படுகிறது.
அதனால்தான் பலம் அதிகம் பெற்ற ஆழ்மனமே எப்போதும் ஜெயிக்கிறது. ஆழ்மனத்திலிருந்து ஜெயிக்கிறது. ஆழ்மனத்திலிருந்து ஜெயிக்க ஒரே ஒரு வழி, தப்பை, தப்பில்லை என்று புரியவைப்பதே.
இது மிகக் கடினமானது. NSP போன்ற உயர்நிலை தியான வகுப்புகளில்தான் ஆழ்மனத்திலிருந்து உங்களைக் காப்பாற்றும் இரஸவாதத்தை நிகழ்த்த முடியும். இப்போதைக்குத் தப்பைப் பற்றிச் சரியான தெளிவே போதுமானதாயிருக்கும்.
•யார் ராஜா? யார் அடிமை?
ஐம்புலன்களுக்கு அடிமையாய் உள்ள வரை... அவர் ராஜாவாக வெளியுலகில் வாழ்ந்தாலும் நிஜத்தில் அடிமையே!
ஐம்புலன்களுக்கு அதிபதியான மறு கணத்திலிருந்து... யாராயிருந்தாலும் அவர் ராஜாதி ராஜா!