KAILASA Library/ஜீவன் முக்தி/நன்றியுணர்வுSign in
ஜீவன் முக்தி

நன்றியுணர்வு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

- நன்றி பொங்க வாழ அதிருப்தி ஓடிவிடும் திருப்திப் பொங்க ஜீவன் முக்தி மலரும்.

பிறக்கும் போதே புத்தர் புத்தராகப் பிறக்கவில்லை.

ஒரு காலத்தில் உங்களைப் போன்றே திண்டாடிக் கொண்டிருந்தவர்தான், கௌதம சித்தார்த்தர்.

சாதாரண சித்தார்த்தனால் புத்தராக முடியும்போது உங்களால் முடியாதா?

| சாதாரண | ஒரு சூஃபி ஞானி காலையில் எழுந்தவுடன் இறைவனுக்கு | | சித்தார்த்தனால் | நன்றி சொல்வதை தம் கடமையாகக் கொண்டிருந்தார். | | புத்தராக முடியும் | காலையில் எழுந்து தினமும் பிரார்த்தனைகூட செய்ய மாட்டார். | | போது உங்களால் | கடவுளுக்கு நன்றி சொல்வார். அவ்வளவுதான். | | முடியாதா? | |

“இறைவா! ஒருநாள் இரவு முழுவதும் என்னைக் கவனத்தில் எடுத்துக் காத்து கொண்டாயே! நன்றி.

இன்று, கண்திறந்தேன். அற்புதமான நாள்! நன்றி.

பொழுது விடிந்துவிட்டது நன்றி!

இன்னும் சுவாசிக்கிறேனே நன்றி!”

இப்படி ஒவ்வொரு சின்ன விஷயத்திற்காகவும் இறைவனிடம் சூஃபி ஞானி நன்றி சொல்லச் சொல்ல, சீடர்களும் நன்றி சொல்வார்கள். வழக்கம் போல அவரின் சீடர்கள், குருவோடு சேர்ந்து யாத்திரையைத் தொடர்ந்தார்கள்.

இஸ்லாமியத்தின் ஒரு பகுதிதான் சூஃபி தத்துவம் என்றாலும், சூஃபி ஞானிகளுக்கு பெரிய அளவில் மரியாதை கிடையாது. உணவு தர மாட்டார்கள், அதே நேரத்தில் துன்புறுத்தும் வார்த்தைகளையும் பேசுவார்கள்.

ஒரு நாள் ஒரு ஊரில் யாத்திரையாகச் சென்றுக் கொண்டிருந்த குருவிற்கும், சீடருக்கும் சாப்பாடு கிடைக்கவேயில்லை. ஆனாலும் யாத்திரையைத் தொடர்ந்தார்கள். மறுநாள், அடுத்த ஊர் சென்றார்கள்.

அந்த ஊரிலும் அவர்களுக்கு உணவு கிடைக்கவில்லை. மூன்றாவது நாளும் அதே நிலை நீடித்தது, உணவு கிடைக்கவில்லை.

ஆனால், தினமும் அந்த ஞானி இறைவனிடம், பகல் முழுவதும் வழி நடத்தியதற்கும், நன்றாக பொழுது விடிந்ததற்கும் நன்றி சொல்லாமல் இருப்பது இல்லை.

நான்காவது நாளும், அவர்களை ஊரின் மூலையில்கூட தங்க விடாமல் விரட்டி அடித்தனர். அன்று வேறு வழியில்லாது, ஒரு சுடுகாட்டில் படுத்துக் கொண்டார்கள். நான்கு நாட்கள் பட்ட அவஸ்தைகளால் சீடர்கள் நொந்து போனார்கள். பசியின் கோரம் அவர்களைத் தூங்கவிடவில்லை.

ஐந்தாம் நாள் காலையும், சூஃபி ஞானி கடவுளுக்கு நன்றி சொல்ல ஆரம்பித்தார்.

> அதிருப்தி பிறந்ததற்கான
> காரணம், நன்றியுணர்வு
> என்னும் பெரிய தியான
> முறையை மனிதன்
> மறந்து போனதுதான்.

ஆனால், சீடர்களோ... நன்றி சொல்ல மறுத்தனர். மறுத்ததோடு நில்லாமல், தங்களுடைய வெறுப்பை உமிழ ஆரம்பித்தார்கள்.

“மூன்று நாளாக உணவு இல்லை. நான்காம் நாள் தங்குவதற்குக் கூட இடம் இல்லை. இன்று என்ன ஆகுமோ தெரியவில்லை. இப்படி இருக்க ஏன் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்?” என்று கேட்டனர்.

ஞானி சிரித்துக் கொண்டே சொன்னார்: “அப்பா! மூன்று நாள் இறைவன் உணவளிக்காததற்காக இவ்வளவு கவலைப்படுகிறீர்களே! நமக்கு முப்பது வருடங்களாகத் தொடர்ந்து உணவு வழங்கியுள்ளாரே! அதை யோசித்துப் பார்த்தீர்களா?

ஒரே ஒரு நாள் தங்க இடம் தரவில்லை. ஆனால், முப்பது வருடம் இந்த உலகத்தில் தங்கியிருக்கிறோம்.

முப்பது வருடம் நம்மைக் காத்தவருக்கு இந்த மூன்று நாட்கள் எப்படிக் காப்பாற்ற வேண்டும் என்று தெரியாதா என்ன!

ஒருநாள் இறைவன் உதவி செய்யவில்லை என நீங்கள் நம்புவதால், அதுநாள்வரை பெற்ற உதவிகள் எல்லாம் மறந்துவிடுவதா?

முப்பது வருடம் காத்ததற்காக, இன்றிலிருந்து நன்றி சொல்ல ஆரம்பித்தாலே, நம் நன்றிக் கடன் தீர முப்பது வருடமாகும். நடுவில் எங்கிருந்து வந்தது இவ்வளவு வெறுப்பும், கோபமும்?” எனக் கேட்டார்.

வாழ்க்கையில், இயற்கை நமக்கு எல்லா விஷயமும் கொடுத்து இருந்தாலும், அதிருப்தியே நம்மில் பலரிடம் இருக்கிறது.

அதிருப்தி பிறந்ததற்கான காரணம், நன்றியுணர்வு என்னும் பெரிய தியான முறையை மனிதன் மறந்து போனதுதான்.

நம் வாழ்வில் குதர்க்கம் இல்லாமல், நேராக சரியாக யோசனை செய்து பார்த்தால் புரியும். இந்த வாழ்க்கையே கடவுள் கொடுத்த பரிசுதான் என்பது.

ரமண மகரிஷி அற்புதமாக ஒரு சுலோகம் சொல்வார்.

“கிடைக்கும் முன் கடுகேயானாலும்
மலையாக்கிக் காண்பித்து,
கிடைத்த பின் மலையேயானாலும்
கடுகாக்கிக் காண்பிக்கும் - மடமனம்!”

சாதாரண நன்றியுணர்வு இல்லாத மனமே சாதாரண மட மனம். அது மலையையும் கடுகாய் குறைத்துக் காண்பிக்கும். நன்றியுணர்வு நிறைந்த மனம் ஜீவன் முக்தர் மனம் கடுகையும் மலைபோல் காண்பிக்கும் நிறைவாய்.

நன்றி மலர்த்தும் யுக்தி-1

எப்போதும் திருப்தியைத் தேர்வு செய்வது ஞானம்

Choosing to be contented always, is wisdom

நம்முடைய மனத்தின் இயல்பே, எவ்வளவு கிடைத்தாலும், அதை அனுபவிக்காமல் அடுத்து, அடுத்து என்று பெரிய விஷயங்களை நோக்கியே ஆசையைத் திசை திருப்பி விடும்.

எதிர்பார்த்தபடியே கிடைத்தாலும், கிடைத்த உடன், அதை மிகச் சாதாரண ஒன்றாக மனம் காட்டும். அதைப் புரிந்து கொள்ளாமல், நாம் அதிருப்தியில் மீண்டும், மீண்டும் விழுவோம். அதனால், நமக்கு எது கிடைத்தாலும் அதனைத் திருப்தியாக ஏற்றுக் கொள்ளும் முன்னரே, அடுத்து என்ன கிடைக்கும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்துவிடுகி றோம்.

இந்தப் பிரபஞ்சமே நமக்குச் சொந்தமாக இருக்கிறது. அது கோடி ரூபாய் கொடுத்தாலும் வாங்க முடியாத, உயிர் தந்து, இரத்தம் எனும் சுய எரிபொருளால் இயங்கும் உடலை நமக்குத் தந்திருக்கிறது.

நீங்கள் அதிருப்தியோடு வாழ்ந்தால், அதற்காகவே நூறு சின்ன சங்கடங்கள் உங்களுக்காகக் காத்து இருக்கிறது.

திருப்தியோடு வாழ ஆரம்பித்தால் அதற்காகவே உங்களைச்சுற்றி ஒரு நூறு அல்ல, ஓராயிரம் காரணங்கள் இருக்கிறது.

> எப்போதும் எதிலும்
> திருப்திபடுவதற்கான
> காரணங்களைக்
> கண்டுபிடித்து வாழ வாழ
> ஜீவன் முக்தியை
> வாழ்வீர்கள்.

நாம் முடிவு செய்யவேண்டியதெல்லாம், இந்த இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுப்பது மட்டும்தான்.

திருப்தியோடு வாழலாமா?

(அல்லது)

அதிருப்தியோடு வாழலாமா? அப்பொழுது, எப்படி வாழ வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதற்கான காரணங்களைக் கண்டுபிடித்து வாழ்வீர்கள்.

திருப்தியையே தேர்வு செய்வீர்கள் என்றால், இப்போதும், எப்போதும், எதிலும் திருப்திபடுவதற்கான காரணங்களைக் கண்டுபிடித்துவாழ்வீர்கள்.

திருப்தியோடு வாழ வாழ, ஜீவன் முக்தியை வாழ்வீர்கள்.

இந்தப் பிரபஞ்சமே
நமக்குச் சொந்தமாக
இருக்கிறது.

நன்றி மலர்த்தும் யுக்தி-2

இறைவனின் விளையாட்டில் தோல்வியும்

வெற்றிதான்

In the game of God, even failure is Success

வாழ்வே நாடகம்தான் .

சாதாரண நாடகம் அல்ல அது; இறைவனின் விளையாட்டில் ஒரு பாகம்!

ஒரு சின்ன கதை...

நிட்டி ராஜூருக்கு டிசம்பர் - 31 - 2000 அன்று காலை ஒரு சந்தோஷமான செய்தி காத்துக் கொண்டிருந்தது.

"வாழ்த்துக்கள் நிட்டி ! உனக்கு அஸிஸ்டண்ட் மேனேஜர் புரோமோஷன் கிடைத்திருக்கிறது. இந்தா," என்று அவருடைய புரோமோஷன் கடிதத்தைக் கொடுத்தார் மேல் அதிகாரி.

வாழ்வே நாடகம்தான்
இறைவனின்
விளையாட்டின் ஒரு
பாகம் அது.

மேல் அதிகாரியின் அறையை விட்டு வெளியே வந்ததும், எல்லோரும் நிட்டியைப் புகழ்ந்தார்கள்.

"நிட்டி, நல்ல விஷயம்...என்னை மாதிரி சாதாரண ஆளுக்கு இவ்வளவு பெரிய பதவி கிடைத்தது ரொம்ப பெரிய விஷயம். எல்லாம் இறைவன் விளையாட்டு," என்று சந்தோஷத்தோடு சொல்லிவிட்டுச் சென்றார்கள்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அடுத்த செய்தி வந்தது.

மேல் அதிகாரி, "சாரி நிட்டி! தவறுதலாக பெயர் மாற்றி அடிக்கப்பட்டு விட்டது.

பதவி உயர்வு கிடைத்தது Mr. மோகன் ராமுக்கு, உங்களுக்கல்ல...

சாரி, கஷ்டப்படாதீர்கள் நிட்டி!" என்றார்.

நிட்டி, “நல்ல விஷயம் எல்லாம் இறைவன் விளையாட்டு. இதில் நீங்கள் ஏதும் தவறு செய்யவில்லையே. நீங்கள் ஏன் சாரி சொல்கிறீர்கள், வருத்தப்படாதீர்கள்,” என்று, ஆறுதல் சொல்லிச் சென்ற நிட்டியை ஆச்சரியத்தோடு பார்த்தார் மேல் அதிகாரி.

ஜனவரி 1-2001. மேனேஜர் அறையில்..., “சாரி நிட்டி, ரொம்ப கஷ்டமாயிருக்கு எனக்கு...,” என்றார்.

நிட்டி, “கஷ்டப்பட வேண்டாமென்று நேற்றே சொன்னேனல்லவா...,” என்று சமாதானம் சொன்னார்.

மேல் அதிகாரி, “நேற்றைய அதிர்ச்சியை விட இன்று இன்னும் மோசமான செய்தி வந்திருக்கிறது. உங்களை நம் சூப்பர்வைசர் கோபாலுக்கு அஸிஸ்டன்டாக பதவி குறைப்பு செய்திருக்கிறார்கள். சாரி, எனக்குக் கஷ்டமாயிருக்கிறது,” என்றார்.

நிட்டி, “ஆஹா, அப்படியா! இது மாதிரியான பதவி குறைப்பு ஆயிரத்தில் ஒருவருக்கு நடப்பதே பெரிய விஷயம் தானே.”

ஜனவரி 2 - 2001 காலை 11 மணி மீண்டும் நிட்டியிடம், “ஸாரி, நிட்டி எனக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. கம்ப்யூட்டரில் நடந்த குளறுபடியால் உங்களுக்குப் பதவி குறைப்பு என்று சொல்லி விட்டேன். பதவி குறைப்பு கே. நிட்டிராஜனுக்கு, சாரி,” என்று சொன்னார்.

“இறைவனின் எல்லா விளையாட்டும் நன்றாகத்தான் இருக்கிறது,” என்று சொல்லிவிட்டுச் சிரித்தபடியே சென்றார். நாம் இறை சக்தியை நம்பினாலும், நம்பாவிட்டாலும், அது இருப்பது உண்மை. அது எங்கும், எதிலும் புகுந்து விளையாடிக் கொண்டிருப்பதும் உண்மை. இந்த ரகசியத்தை ஆழமாகப் புரிந்து கொண்டால், நாமும் விளையாட்டை ரசி க்கலாம். ஏன், இறைவனோடு சேர்ந்து நாமும் விளையாடலாம். இறைவன் விளையாட்டில் வெற்றியும் வெற்றிதான்; தோல்வியும் வெற்றிதான். இதை எப்போதும் உணர்ந்து வாழ்வது ஜீவன் முக்த வாழ்வு. இப்படி வாழ்பவர் ஜீவன் முக்தர்.

A person with long hair standing by a waterfront looking towards the city

கடுகடுப்பை கழற்றும் யுக்தி-3

துக்கத்திற்காகச் சந்தோஷப்படுங்கள்

Be happy for Sorrows

சூஃபி ஞானியிடம் வியாபாரி ஒருவர், "அடிக்கடி துக்கத்தில் விழுகிறேனே, துக்கம் வரும்போதெல்லாம் ஸ்தம்பித்துப் போகிறேனே, இனி என்னைத் தாக்கும் துக்கம் வரும்போது என்ன செய்ய? அதிலிருந்து தப்பிக்க ஒரு வழி சொல்லுங்கள்," என்று வெகு கலக்கத்தோடு கேட்டார்.

கலங்கிக் கேட்டவர் கால் நிமிடத்திற்குள் கலகலப்பாகிவிட்டார், சூஃபி ஞானியிடமிருந்து வந்த ஆச்சர்யமிகு பதிலால்!

வியாபாரியிடம் சூஃபி ஞானி சொன்னார், "இனி துக்கம் வரும்போதெல்லாம் சந்தோஷப்படுங்கள். நன்றி சொல்லுங்கள்." ஆனந்தம் உங்களுக்குள் மலர ஆரம்பித்துவிட்டது என்பதற்கான ஆதாரம்தான் துக்கம்.

முட்டாளாலும், ஞானியாலும் துக்கப்படவே முடியாது.

வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொள்வதற்கான புத்திசாலித்தனத்தோடு அணுகும் ஒருவரால்தான், ஒரு செயலைப் பலகோணத்திலிருந்தும் பார்க்க முடியும். ஆராய முடியும். அப்படி ஆராயும்போது தட்டப்பட்டத் தூசியால் ஏற்படும் தும்மல்தான் கவலை.

கவலைப்படுமளவிற்கு புத்தியைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டாலே தெரிந்துகொள்ளுங்கள், மனவலையிலிருந்து நீங்கள் வெளிவர ஆரம்பித்துவிட்டீர்கள்.

துக்கப்படுமளவிற்கு உணர்வு உருக ஆரம்பித்துவிட்டாலே உணர்ந்து கொள்ளுங்கள், தோல்விகளை ஈர்க்கும் மந்தத்தன்மையில் இருந்து, நீங்கள் முற்றிலும் வெளிவர ஆரம்பித்துவிட்டீர்கள். உணர்வுகள் இறுகிப் போனவர்களால், துக்கப்படக்கூட முடியாது.

எனவேதான், சொல்கிறேன். இன்றிலிருந்து துக்கம் வந்ததும், "அச்சச்சோ வந்துவிட்டதா?" என்று கலங்காமல், ஆஹா! வந்துவிட்டதா?" என சுறுசு றுப்பாகுங்கள். போராட்டம், உயிரோட்டம் அளிக்கும். துக்கம் தியானமாகும். கவலைகள் கலைந்து போகும்.

ஆரம்பியுங்கள். வாழ்வைப் புதுக் கோணத்தில் அணுகக் கற்றுக்கொள்வீர்கள். ஆம்! கொண்டாட்டமாக, குதூகலமாக!

> இன்றிலிருந்து துக்கம்
> வந்ததும் "அச்சச்சோ
> வந்துவிட்டதா?" என்று
> கலங்காமல் ஆஹா!
> வந்துவிட்டதா? என
> சுறுசுறுப்பாகுங்கள்.

பிறப்பின் இரகசியம் Secret of Birth

இறப்பின் இரகசியம் Secret of Death

சோம்பல்தனம், மந்தத்தன்மை Laziness

வலி Pain

ஆசை Desire

குற்ற உணர்ச்சி Guilt

மனச்சோர்வு Depression

தூக்கம் Sleep

சிரிப்பு Laughter

உற்சாகம் Intensity