தெரபிகள் :
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

“மனிதன் ஆனந்தமயமானவன். ஆரோக்கியம் நிறைந்தவன் ஆரோக்கியமாய் வாழும் கலையை மனிதகுலம் மறந்துவிட்ட ஒரேயொரு காரணத்தால் உடல் ரோகமயமாகவும், மனம் சோகமயமாகவும், உயிர் துக்கமயமாகவும் இருக்கிறது. இவற்றைத்தான் நோய்கள் என குறிப்பிடுகிறார்கள்.
தியானத்தின் மூலமாக உடல், மனம், உயிர் ஆகிய மூன்றையும் ஆரோக்கியமாக மாற்றி நோய்களிலிருந்து விடுதலை பெற முடியும். அதை நிகழ்த்துவதற்காக வடிவமைக்கப்பட்டவை தான் தியான முகாம்களும், தெரபிகளும்.
தியான முகாம்களின் இலக்கு ஆனந்தம், ஞானம். தெரபிகளின் இலக்கு ஆரோக்கியம். தியானம் உணர்விலிருந்து உடல் நோக்கி வேலை செய்ய கூடியது. ஆனந்தத்தை தரும் தியானத்தின் உபவிளைவுகளில் ஒன்று ஆரோக்கியம்.
மருந்துகளால் தொட்டு சரி செய்ய முடியாத பல நோய்களை தியானம் தொட்டு சரிசெய்து விடுகிறது. எனவே தான் ‘தியானம் ஒரு மருந்து’ என அடிக்கடி சொற்பொழிவுகளில் குறிப்பிடுவதுண்டு.
தியான சக்தியை உள்ளுக்குள்ளிலிருந்து பொங்க வைக்க முடியாத அளவிற்கு பலரின் உடலானது பாதிக்கப்பட்டிருப்பதால், உடலை சராசரி நிலைக்கு எடுத்து வர மருந்துகள் சில எடுத்துக் கொள்வது நல்லது.
உடல் தயாரானதும், ஆரோக்கியத்தை தாண்டிய ஞானத்தை தொடுவது எளிதாகிவிடும்.
ஞானம் எனும் சித்திரம் வரைய ஆரோக்கியமான உடல் எனும் சுவர் பேருதவியாக இருக்கும் என்பதால் தான், பல வருட ஆராய்ச்சிகளுக்கு பின் இந்த தெரபிகளை வழங்குகிறோம்.
விஞ்ஞானரீதியாகவும், மெய்ஞான ரீதியாகவும் ஆரோக்கியம் என்பது எல்லோருக்கும் சாத்தியமே! என நிரூபிக்கும் தெரபிகள் ஒவ்வொன்றும் தியானமருத்துவ முகாம்களே!”
– பரமஹம்ஸ நித்யானந்தர்