KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும் !/தியான சிகிச்சையாளர்கள் தீக்க்ஷைSign in
கதவைத் திற ... காற்று வரட்டும் !

தியான சிகிச்சையாளர்கள் தீக்க்ஷை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

LBP Level-4

வாழ்க்கை, பிறப்பு, இறப்பு, அதிர்ஷ்டம், துரதிஷ்டம், வெற்றி, தோல்வி ஆகிய அனைத்தையும் தாண்டியது ஞானம். இந்த ஞானத்தையும், ஞானசக்தியையும் உங்களுக்குள் இருந்து பொங்க ஆரம்பிக்க வாய்ப்பளிப்பது என்பது நீங்களே செய்யும் புண்ணியம்.

ஆனந்தகந்த தீக்க்ஷை மற்றும் தியான சிகிச்சை, சிகிச்சையாளருக்கு நேரடியான ஞான வழி.

  • பரமஹம்ஸ நித்யானந்தர்

நம் உடலிலுள்ள 7 சக்கரங்களும் ஒடுங்கும் இடம் ஆனந்தகந்த சக்கரமாகும்.

மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து, மீண்டும் மீண்டும் கர்மங்களை சேர்த்து, மீண்டும் மீண்டும் துக்கப்பட்டு வாழும், வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை சக்கரத்திலிருந்து சுதந்திரம் பெறவேண்டுமானால் நீங்கள் நிச்சயம் முக்தி அடைய வேண்டும்.

நீங்கள் முக்தி அடைவதற்கான தியானத்தை செய்வதற்கான தீக்க்ஷைதான் நித்ய தியான தீக்க்ஷை.

பரமஹம்ஸர் தன் கருணையால் வழங்கும் இத்தீக்க்ஷை ஒருவருக்கு ஞானப்பிரயாணத்திற்கு துவக்கமளிக்கும். பிரபஞ்ச சக்தியோடு தொடர்பு படுத்திக் கொள்வதற்கான தியான தீக்க்ஷை தான் Healer's Initiation.

தொடுதலால் நோய்களை குணப்படுத்தும் இந்த தியான சிகிச்சை தீக்க்ஷை, முதலில் நம்முடைய நோய்களை குணப்படுத்துவது மட்டுமல்லாமல், பிறருடைய நோய்களை தீர்க்கும் மருத்துவராக மாறச் செய்கிறது.

எந்தவொரு வகையிலும் நோயாளிக்கோ சிகிச்சையாளருக்கோ பக்க விளைவுகளை தராமல் சுகத்தை மட்டுமே தரும் இந்த தியான சிகிச்சை குருவின் கருணைப் பரிசு.இத்தியான முகாமில் பங்குபெற ஆனந்த ஸ்பூரண தியானமுகாம் (LBP level-3) முடித்திருக்க வேண்டும்.