KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும் !/ஆனந்த ஸ்புரணா தியான முகாமில்...Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும் !

ஆனந்த ஸ்புரணா தியான முகாமில்...

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

> உங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் உயிர்சக்தி அதிகரிக்கும்.

> மன அழுத்தம் மற்றும் உளைச்சல்களிலிருந்து உடனடி விடுதலை

> ஆனந்தமாய் வாழும் திறன்

  • இவற்றை அனுபவமாக உணர

உடல், மனம், உயிர்சக்தி ஆகிய மூன்றும் நம் உடலுக்குள் ஏழிடங்களில் ஒன்றாய் கலந்திருக்கின்றன. இந்த சூட்சுமமான இடங்களைத்தான் சக்கரங்கள் அல்லது சக்தி மையங்கள் என்றறிகிறோம்.

சக்தி மையங்கள் சரிவர இயங்காததே எல்லா நோய்களுக்கும், மனப்பிரச்சனைகளுக்கும் மூலக்காரணம்.

Meditation and Chakras with Thoughts

மேற்கண்ட கேள்விகளில் ஒரே ஒரு கேள்வி உங்களுடையதாக இருந்தாலும் சரி, ஆனந்த ஸ்புரண தியான முகாம் உங்களுக்கானது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. வெகுநாள் ஏக்கங்கள் மறைந்து, ஆனந்தம் மலர உங்களுக்கு நீங்களே உதவுங்கள்.

ஒருமுறை வாய்ப்பளியுங்களேன்! உங்களுக்கு நீங்களே!

இது உங்களுக்காக "நிச்சயம் உங்களுக்காக"

என்ன, தியானமா!... இது எனக்கல்ல... நான் ஆன்மீகவாதியோ, மதவாதியோ அல்ல... என்கிறீர்களா? நல்லது. நீங்கள் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ விரும்புகிறவரா? பதில் ஆம் என்றால்... இது உங்களுக்காக! நிச்சயம் உங்களுக்காக!

உங்கள் சிறப்பான வாழ்விற்காக, திறந்தமனத்தோடு எளிமையாய் வாருங்கள். தியானமுகாம் ஆனந்த அனுபவமாக மாறும்.

கவனத்திற்கு

இந்த தியான முகாமில் கலந்து கொள்வதற்காக உங்களின் வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்பட வேண்டிய அவசியமில்லை. எந்த மார்க்கமும், எந்த மதமும், எந்த இனமும், எந்த கலாச்சாரமும் இந்த தியானப் பயிற்சிகளுக்கு தடையானதோ எதிரானதோ அல்ல.

இதற்கு முன் ஆனந்த ஸ்புரணா நிகழ்ச்சியில் பங்கு கொண்டவர்களின் அனுபவ வார்த்தைகள்

பரமஹம்ஸரை முதன் முதலில் ஆனந்த ஸ்புரணா நிகழ்ச்சியில் பார்த்து, அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தியானத்தை அனுபவித்த பின்புதான், உண்மையான ஆனந்தம் என்ன என்பதை நான் உணர்ந்தேன். இப்பொழுது நான் ஒரு ஆனந்தமயமான நிலையில் உள்ளேன்.

  • திருமதி. பார்வதி, சென்னை.

ஆனந்த ஸ்புரணா நிகழ்ச்சிக்குப் பின், நான் என் வாழ்வில் இழந்த ஆரோக்கியமான உடல் நலம், மகிழ்ச்சி, அமைதியான மனம் எல்லாவற்றையும் கிடைக்கப் பெற்றேன்.

  • திரு. ஏழுமலை- வியாபாரி.

நித்யானந்த ஸ்புரண தியான முகாம் (NSP)

LBP Level-2

NSP தியான முகாமைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கும்போது ஒருமுறை "வாழும்போதே மனிதர்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள். இதில் சாகும்போது வாழ்வதைப்பற்றி ஏன் நினைக்க வேண்டும்?" என்று ஒருவர் கேட்டார்.

அப்போது பரமஹம்ஸர் "ஒரு முக்கியமான விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையில் தெரிந்து கொள்ளவேண்டிய பல இரகசியங்கள் இன்றைய மனிதனுக்கு தெரியாது.

மரணத்தின் இரகசியம், வலியின்றி வாழும் இரகசியம், அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் ஈர்க்கும் இரகசியம், ஆசைகளை அடையும் நுட்பம், சுகங்களையும் தாண்டிய ஆனந்தத்தை தொடும் சூட்சுமம் ஆகியவற்றை ஒவ்வொரு மனிதரும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்வும் இனிக்கும், சாவும் இனிக்கும். இதை மிக அருமையாக கற்றுத்தரும் 4 நாள் தியானமுகாம்தான் NSP.

NSP-யில் கலந்து கொண்ட ஒருவரால் வாழும்போதும் இனிமையாக எப்படி வாழவேண்டும் என்று கற்றுக் கொள்ளமுடியும். சாகும்போது இனிமையாக, வலியில்லாமல் சாக முடியும் (Painless death) என்பதை கற்றுக் கொள்ள முடியும்" என்று சொன்னார்.

மர்மங்களுக்கெல்லாம் மர்மமாக நாம் கருதுவது மரணத்தைத்தான். ஏனெனில் மரணத்தின் முடிச்சுகள்தாம் இன்றும் அவிழ்க்கப்பட முடியாததாக கருதப்பட்டு வருகிறது.

இந்த பயத்தை அடிப்படையாக வைத்து கட்டியமைக்கப்பட்டிருக்கும் வாழ்க்கையால் தான் நாம் உண்மையில் வாழ்க்கையில் வாழத்தெரியாமல் இருக்கின்றோம். NSP தியான முகாமில் மிகத் தெளிவாக மரணத்தின் போது என்ன நிகழ்கிறது என்று தெளிவாக விளக்கப்படுகிறது. ஆசை, பயம், குற்றஉணர்வு, வலி, சுகத்திற்கும் ஏழு சரீரத்திற்கும் இடையில் இருக்கும் உறவை NSP விளக்குகிறது.

ஏழு உடல்களிலிருந்து எழும் இதுபோன்ற எண்ணப்பதிவுகள் உயிர்பிரியும் தருவாயில் எப்படி செயல்படுகிறது? என்பது பற்றி தெளிவாக விளக்கப்படும்.

மனஉளைச்சல் மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு உங்களுக்கு ஓர் அருமையான வாய்ப்பு. வாழும் போதும், வாழ்ந்த பின்பும் ஆனந்தமாக விழிப்புணர்வோடு வாழும் கலையை கற்றுத் தரும் தியான முகாம் (NSP) தியான முகாம்.

| இத்தியான முகாமில் பங்குபெற | | ஆனந்த ஸ்புரண தியானமுகாம் | | (LBP level-1) முடித்திருக்க வேண்டும். |

வாழ்க்கையில் புதிரான மரணத்தை, புரியும் தீர்வாக மாற்றும் தியான முகாம் NSP.